Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுவிஸ் தூதரக ஊழியரின் தொலைபேசி, சிம் அட்டைகளை கையளிக்குமாறு உத்தரவு!

Featured Replies

கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பெண் ஊழியர் கானிய பனிஸ்டரதும் அவரது கணவரதும் தொலைபேசி மற்றும் சிம் அட்டைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கையளிக்குமாறு கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து நாட்டுத் தூதரகத்துக்கு கொழும்பு தலைமை நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/71428

சுவிஸ் தூதரக ஊழியர் விவகாரத்தில் தேசிய, சர்வதேச சட்டங்கள் உறுதியாகப் பின்பற்றப்படுகின்றன : தினேஷ் 

கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்தின் இலங்கை ஊழியரொருவர் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தைக் கையாள்வதில் இலங்கை அரசாங்கமும், நீதித்துறையும் தேசிய சட்டங்களையும் சர்வதேச சட்டத்தையும் உறுதியான முறையில் கடைப்பிடிப்பதாக வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன சுவிஸ் அரசாங்கத்திற்குக் கூறியிருக்கிறார்.

சுவிஸ் தூதரக ஊழியர் கானியர் பெனிஸ்டர் பிரான்சிஸின் நிலை தொடர்பாக சுவிட்ஸர்லாந்து வெளியுறவு அமைச்சர் இக்னாஸியோ காசிஸ் தினேஷ் குணவர்தனவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாகப் நேற்று வெளியுறவு அமைச்சு விடுத்த அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இலங்கைத் தண்டனைச் சட்டக்கோவையின் 120 மற்றும் 190 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றங்களை இழைத்திருக்கிறார் என்ற நியாயபூர்வ சந்தேகத்தின்பேரில் ஊழியர் இப்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார்.

கடத்தல் விவகாரம் தொடர்பில் தவறான தகவல்களை வெளியிட்டதாகவும் அரசாங்கத்தின் மீது அதிருப்தியைத் தோற்றுவிக்கும் நோக்கில் நடந்துகொண்டதாகவும் கிரிமினல் குற்றச்சாட்டுக்களை அவர்மீது சுமத்தக்கூடிய ஏற்பாடுகளை அந்த இரு பிரிவுகளும் கொண்டிருக்கின்றன.

விசாரணை செயன்முறைகளைத் துரிதப்படுத்துவதற்குச் சாத்தியமான சகல ஒத்துழைப்புக்களும் தரப்பட வேண்டும் என்று இருநாடுகளுக்கும் இடையிலான நல்லுறவின் அடிப்படையில் சுவிஸ் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

கடத்தப்பட்டதாகக் கூறப்படுபவர் ஒரு இலங்கைப் பிரஜை. அந்த விவகாரம் இப்போது நீதிமன்றத்தின் முன்னாள் இருக்கிறது என்று சுவிஸ் அமைச்சருக்குக் கூறிய அமைச்சர் குணவர்தன, இலங்கையின் சட்டங்களுக்கு இணங்கச் செய்யக்கூடிய அனைத்தையும் இலங்கை அரசாங்கம் செய்யுமென உறுதியளித்தார். திருமதி பிரான்சிஸுக்கு சாத்தியமான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அவரது உரிமைகள் பாதுகாக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குணவர்தன குறிப்பிட்டார்.

கடந்த செவ்வாய்கிழமை (டிசம்பர் 17 ஆம் திகதி) சுவிஸ் வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையைப் பற்றிக் குறிப்பிட்ட குணவர்தன, இலங்கை தேசிய சட்டங்களையும், சர்வதேச நீதி நியமங்களையும் முழுமையாகக் கடைப்பிடித்திருக்கிறது என்றும், இதற்கு மாறாகக் கூறப்படும் எந்தவொரு கருத்தும் உண்மைக்குப் புறம்பானது எனவும் அவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/71425

  • தொடங்கியவர்

சுவிஸ் தூதரக ஊழியரிடம் சிறையில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

(எம்.எப்.எம்.பஸீர்)

கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் உள்ளூர் உழியரான கானியா பனிஸ்ட பிரான்சிஸிசிடம் சிறையில் வைத்து மேலதிக வாக்கு மூலம் பதிவு செய்ய கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன இன்று சி.ஐ.டி.க்கு அனுமதி வழ்னக்கினார். 

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று மாலை கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் வைத்த கோரிக்கைக்கு அமைவாக இதற்கான அனுமதியளிக்கப்பட்டது.

இதன்போது சுவிஸ் தூதரக அதிகாரி விடயத்தில் சி.ஐ.டி.யினரால் சேகரிக்கப்பட்டுள்ள சி.சி.ரி.வி. காணொளிகளை அரச இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்த இரசாயன பகுப்பயவு திணைக்களத்துக்கு அனுப்பி வைக்கவும் இதன்போது நீதிவனால் சி.ஐ.டி.க்கு அனுமதியளிக்கப்பட்டது.

இதனிடையே சுவிஸ் தூதரக அதிகாரி  கானியா பெனிஸ்ட பிரான்சிஸ்  தற்போது  விளக்கமறியலில் உள்ள நிலையில், இன்று காலை 9.00 மணிக்கு அங்கொட  தேசிய உளவியல் நிறுவனத்தின்  உள சார் சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில்  சிறைச்சாலை அதிகாரிகளால் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.  

இதன்போது  மன நலம் தொடர்பில் பரிசோதனைச் செய்ய  கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி அஜித் தென்னகோனால் நியமிக்கப்பட்ட   உளவள வைத்திய நிபுணர்களால் விஷேட பரிசோதனை நடத்தப்பட்டது.

இதனைவிட சுவிஸ் தூதரக  அதிகாரி கானியா தடுத்து வைக்கப்பட்டுள்ள,  விளக்கமறியல் சிறையில் பெண்கள் பகுதியின் வை பகுதியில்  விஷேட தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. 

கானியவிடம் தொலைபேசி உள்ளதாக சிறைச்சாலை உளவுத் துறைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த தேடுதல் நடாத்தப்பட்டுள்ள நிலையில், அதன்போது, ஒரு தொலைபேசியும் 5 சிம் அட்டைகளும் குறித்த பெண்கள் விளக்கமறியலில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. 

அவற்றை சி.ஐ.டி.யினரிடம் மேலதிக விசாரணைக்கு கையளிக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/71440

  • தொடங்கியவர்

Swiss sends top diplomat team to SL

While expressing the regret at the decision by the examining magistrate to place the Swiss local employee concerned in pre-trial detention, Switzerland said that it has sent former ambassador Jörg Frieden to Sri Lanka to find out the security incident at the Swiss embassy in Colombo. 

“Under the lead of this experienced diplomat, possibilities for clarifying the security incident at the Swiss embassy in Colombo are to be explored,” Switzerland Foreign minister (Federal Councillor) Ignazio Cassis said.

”Mr Gunawardena met with Mr Mock and Mr Frieden today (19) in order to maintain dialogue with a view to finding a solution.” the statement said.

Issuing a statement after a telephone conversation between Minister Cassis and foreign minister Dinesh Gunawardena, Mr Cassis also expressed his regret at the decision by the examining magistrate to place the local employee concerned in pre-trial detention, where the conditions do not take into account her state of health in any way. 

He, therefore, asked Mr Gunawardena to transfer her to a more appropriate location, such as a hospital, on humanitarian grounds. Switzerland considers the Sri Lankan authorities to be responsible for the health and safety of all its embassy staff.

http://www.dailymirror.lk/top_story/Swiss-sends-top-diplomat-team-to-SL/155-179912

  • தொடங்கியவர்

சுவிஸ் தூதரக அதிகாரி கடத்தல் விவகாரம் – முன்னாள் தூதுவர் இலங்கைக்கு வருகை 

சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி தொடர்பாக ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஆராய்வதற்காக அந்நாட்டு வௌிவிவகார திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் இலங்கை வரவுள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான முன்னாள் சுவிஸ் தூதுவரான ஜோர்ஜ் ப்ரீடனே இவ்வாறு இலங்கை வரவுள்ளதாக சுவிஸ் வௌிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

இவ்வாறு அனுபவமிக்க இராஜதந்திரியின் தலைமையின் கீழ் கொழும்பு சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பாதுகாப்பு சம்பவம் தொடர்பாக தௌிவுபடுத்தும் சந்தர்ப்பத்தை ஆராய முடியும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரியான கானியா பெனிஸ்டர் ஃப்ரான்ஸிஸிடம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதற்கமைய கடந்த திங்கட்கிழமை நான்காவது தடவையாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான அவர், அதன்பின்னர் கொழும்பு சட்டவைத்திய அதிகாரியின் காரியாலயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதுடன், விசேட மருத்துவ நிபுணரிடம் முன்னிலைப்படுத்துவதற்காக அங்கிருந்த சில அதிகாரிகளினால் அவர் தேசிய மனநல நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சுமார் 5 மணிநேரத்தின் பின்னர், அங்கிருந்து மீண்டும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அவர், அரசாங்கத்திற்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் செயற்பட்டமை மற்றும் உண்மைக்கு புறம்பான சாட்சியங்களை முன்வைத்தமை முதலான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டார்.

அதன் பின்னர் கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை, எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/71458

  • தொடங்கியவர்

தினேஸ் குணவர்தனவை சந்தித்த ஜோக் ப்ரீடன்..

சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் உள்நாட்டு அதிகாரி கைது செய்யப்பட்மை தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள சுவிட்ஸர்லாந்து நாட்டின் பிரதிநிதி ஜோக் ப்ரீடன் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவை சந்தித்துள்ளார்.

இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்தின் முன்னாள் தூதுவரான அவர் இலங்கை வெளிவிகார அமைச்சருடன நடந்த்திய சந்திப்பு இராஜதந்திர மட்டத்தில் இரண்டு நாடுகளுக்கு இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதாக்கும் என சுவிட்ஸர்லாந்து வெளிவிவகார திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த சந்திப்பiபு இடம்பெற்றதை வெளிவிவகார அமைச்சு செய்தி சேவையிடம் உறுதிப்படுத்தியது.

எனினும் அதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை.

இதேவேளை, சுவிட்ஸர்லாந்து வெளிவிவகார அமைச்சர் இக்னசியோ கெசீஷ்கும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவிற்கும் இடையில் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த உரையாடலின் போது சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் தூதுவர் ஒருவரை இலங்கைக்கு அனுப்புவதற்கு எதிர்பார்த்துள்ளதாக சுவிட்ஸர்லாந்து வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சுவிட்ஸ்லாந்து தூதரக அதிகாரியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குறித்த தொலைபேசி உரையாடலின் போது கோரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.hirunews.lk/tamil/230624/தினேஸ்-குணவர்தனவை-சந்தித்த-ஜோக்-ப்ரீடன்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த லட்ஷணத்தில போர்க்குற்ற விசாரணை செய்ய தங்களுக்கு தகுதி இருக்கு என்று தம்பட்டம். அதுக்கு நல்ல சான்றிதழ் சுவிஸ் குடுக்கோணும். எனது  தாழ்மையான வேண்டுகோள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.