Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகாத்மாவையே ஆதரிக்காத தமிழ்நாட்டுப் பிராமணர்கள் பிரபாகரனை வெறுப்பது விந்தையல்ல.

Featured Replies

மகாத்மா காந்தி 1919 இல் தமிழ்நாட்டுக்கு வந்த போது அவரையே ஆதரிக்க மறுத்த தமிழ்நாட்டுப் பிராமணர்களும், இந்து பத்திரிகையும் பிரபாகரனையும், ஈழவிடுதலைப் போராட்டத்தையும் வெறுப்பது ஒன்றும் வியப்புக்குரியதல்ல.

தமிழ்பேசும் தமிழ்நாட்டுப் பிராமணர்கள் எதற்காக பிரபாகரனையும், ஈழவிடுதலைப் போராட்டத்தையும் எதிர்க்கிறார்களென்ற கேள்விக்குப் பல தமிழர்கள் விடைகாண முயல்வதைக் காணலாம். நானும் கூட பல்வேறுபட்ட காரணங்களைக் கூறி அவற்றை நியாயப்படுத்தவும் முயன்றிருக்கிறேன்.

மகாத்மா காந்தி 1915 இல் தென்னாபிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார் அவர் அகமதாபாத்தில் சத்தியாக்கிரக ஆசிரமத்தை ஆரம்பித்த பின்பு 1919 இல் தமிழ்நாட்டுக்கு வந்தார்.

ஆனால் ஆரம்ப காலத்திலிருந்தே மகாத்மாவையும் அவரது சுதந்திரப் போராட்டத்தையும் ஆதரித்தவர்கள் தமிழர்கள் என்பதை இங்கு நினைவு கூர்வது தகும். தனது சுயசரிதையில் தமிழர்களைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் மகாத்மா காந்தி:

"சத்யாக்கிரக ஆசிரமம் 1915 ஆம் ஆண்டு மே 25 இல் நிறுவப்பட்டது. அப்போது அதில் பதின்மூன்று தமிழர்கள் இருந்தனர். அதில் ஐந்து தமிழ் இளைஞர்கள் தென் ஆபிரிக்காவிலிருந்து என்னுடன் இந்தியா வந்தவர்களாவர். மீதிப்பேர் இந்தியாவில் உள்ள வேறு பகுதிகளில் இருந்து வந்தனர். மொத்தமாக 25 ஆண்களும் பெண்களுமாக சத்யாக்கிரக ஆசிரமத்தை அமைத்திருந்தோம். நாம் அனைவரும் ஒரே அடுப்பில் சமைத்து, ஒன்றாக உண்டு, ஒரே குடும்பமாக வாழ்ந்தோம்..." என்கிறார் அண்ணல் காந்தியடிகள்.

அதை விட ஈழத்தமிழர்களும் அவர்களின் தலைவர்களும், வெள்ளையர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாது, மகாத்மா காந்தியை யாழ்ப்பாணம் வரவழைத்துப் பெரு வரவேற்பளித்து, யாழ்ப்பாணத்தின் பிரதான வீதிக்கு அவரது பெயரையுமிட்டு வெள்ளையர்களின் அரசைச் சீண்டிப் பார்த்ததால் தான் சோல்பரிப் பிரபு ஈழத்தமிழர்களின் நலன்களுக்கெதிரான, சிங்கள சார்பான அரசியலமைப்பை உருவாக்கினார் எனவும் கூறுவர்.

இந்தியாவை வெள்ளையர்களிடமிருந்து மீட்க வேண்டுமென்ற சுதந்திர வேட்கையுடன் பிரச்சாரம் செய்யச் சென்னைக்கு வந்த மகாத்மாவைப் பார்த்து, அப்போதைய சென்னை மாநிலத்தில் பத்திரிகைகளையும், சட்டத்துறையையும், காவல் துறை, நீதிமன்றம் போன்றவற்றைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த பிராமண "Brown Sahibs" முகத்தைத் திருப்பிக் கொண்டார்களாம்.

அதற்குக் காரணம் மகாத்மா காந்திக்கு ஆதரவு தெரிவித்தால் வெள்ளையர்களுக்குப் பந்தம் பிடித்து வாழும் தமது சுகமான வாழ்க்கை பறிபோய் விடுமோ என்ற பயம் தானாம்.

அவர்கள் மகாத்மாவைப் பார்த்து முகத்தைத் கோணிக் கொண்டதற்கு முதல் காரணம், மாகாத்மா காந்தி பிராமணரல்ல, பிராமணர்களால் குறைந்த சாதி எனக் கருதப்படும் சாதியில் பிறந்தவர், அக் காலத்து தமிழ்நாட்டுப் பிராமணர்களுக்கு பிராமணரல்லாத தலைவரை நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை அது மட்டுமல்ல காந்தியின் வன்முறையற்ற வழியிலான போராட்டமும் மட்ராஸ் பார்ப்பனப் பத்திரிகைகளின் நகைப்புக்குள்ளாகியது.

1919 இல் தனது சட்ட மறுப்புப் போராட்டத்துக்கும், இந்திய சுதந்திரப் போராட்டத்துக்கு ஆதரவு தேடிச் சென்னை மாநிலத்துக்கு வருகை தந்த மகாத்மா காந்திக்கு நூற்றியிருபது பேர் மட்டுமே நிதியுதவியும், உணர்ச்சி பூர்வமான ஆதரவுமளித்தனர். அன்றைக்கு மகாத்மா காந்தியைப் பார்த்து மூக்கைச் சுழித்து, முகத்தைத் திருப்பிக் கொண்ட அதே பார்ப்பன நிறுவனமாகிய இந்து பத்திரிகை தான் இன்றைக்கு பிரபாகரனையும் வெறுக்கிறது, ஈழத்தமிழர்கள் சம்பந்தமான செய்திகளைத் திரித்து, சிங்கள இனவாத அரசுக்கு ஆதரவாகவும், ஈழத்தமிழர்களுக்கெதிராகவும் பொய்ப்பிரச்சாரம் செய்கிறது.

மார்ச் 17, 1919 இல் றோவ்லட் சட்டத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதற்காக மகாத்மா காந்தி சென்னைப் பட்டணத்துக்கு வந்தார்.அங்கிருந்து தனது சட்டமறுப்பு இயக்கத்துக்கு ஆதரவு தேடி, தஞ்சாவூர், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, நாகப்பட்டணம் போன்ற இடங்களுக்கும் சென்றார்.அவர் சென்னையை விட்டு மார்ச் 28ம் திகதி போகும் போது 120 பேர் மட்டும் அவருடைய சத்தியாக்கிரகப் போராட்டத்துக்கு ஆதரவளித்துக் கையெழுத்திட்டிருந்தார்கள். அப்போதைய தமிழ்நாட்டின் சனத்தொகை 20 மில்லியனில் 120 பேர் மட்டுமே காந்திக்கு ஆதரவளித்தனர்.

இன்று தமிழ்நாட்டில் பிரபாகரனுக்குள்ள ஆதரவுடன் ஒப்பிடும்போது, மகாத்மா காந்தியின் அன்றைய நிலைமையை விட பிரபாகரனின் நிலைமை பரவாயில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

டேவிட் ஆர்ணோல்ட் 1977 இல் எழுதிய தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்ற புத்தகத்தில் " சென்னையில் இருக்கும் போது தடை செய்யப்பட்ட புத்தகங்கள் அச்சிடப்பட்டு, சத்தியாக்கிரகிகள் அனைவருக்கும் சட்டமறுப்பின் அடையாளமாகக் கொடுக்கப்பட வேண்டுமென மகாத்மா காந்தி கருத்துத் தெரிவித்தார்.

அதற்கு இந்து பத்திரிகையின் உரிமையாளர்களான ஐயங்கார் பிராமணர்களை புத்தகங்களை அச்சிடுமாறு கேட்ட போது, தாம் ஒன்று அல்லது இரண்டு லட்சங்களை இந்து பத்திரிகையில் முதலீடு செய்திருப்பதாகவும் அது பறிமுதல் செய்யப்பட்டால், அவர்களின் வியாபாரம் அழிந்து விடும் என்றார்களாம்.

இப்படி மகாத்மா காந்திக்கு, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒத்துழைக்க மறுத்து தமது வியாபாரத்தைக் காக்கும் சுயநலத்துடன் இயங்கியவர்களெல்லாம், எத்தனையோ தமிழர்கள் தமது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்ததும், அந்த வெற்றியிலும், பதவிகளிலும் பங்கு போட முந்திக் கொண்டார்கள், அது மட்டுமல்ல பாரத ரத்னாவுமாகிக் கொண்டார்கள்.

பத்திரிகைகளைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால் எப்படியும் கதை விட்டுக் கொள்ளலாம் என்பதற்கு பார்ப்பனப் பத்திரிகைகள் நல்ல எடுத்துக்காட்டாகும்.

டேவிட் ஆர்ணோல்ட் தனது புத்தகத்தில் பார்ப்பனப் பத்திரிகைகள் மகாத்மாவுக்கு எப்படி முதுகில் குத்தினார்கள் என்பதைத் தொடர்கிறார்.

"தமிழ்நாட்டில் காந்தீயவாதிகளுக்கு பத்திரிகைகளின் ஆதரவு மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது, 1920-1921 இல் அங்கிருந்த நான்குபத்திரிகைகளில்- Mail, Justice and New India ஆகிய மூன்று பத்திரிகைகளும் சட்டமறுப்பு, ஒத்துழையாமை இயக்கங்களுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தன.

அதில் நாலாவது, இந்து பத்திரிகை, அன்றைய வெள்ளையர்களின் அரசை எதிர்த்தால் வெள்ளையர் அரசாங்கத்தின் எதிர்ப்பைச் சம்பாதிக்க வேண்டி வரும், தமது தொழில் பறிமுதல் செய்யப்படலாமென்பதால் மகாத்மாவுக்கு ஒத்துழைக்க விரும்பவில்லை.

பார்த்தீர்களா, ஐயங்கார் பிராமணர்களின் பத்திரிகையான இந்து பத்திரிகை, சுயலாபத்துக்காக, இன்றைக்கு ஈழத்தமிழர்களுக்கெதிராக சிங்கள இனவாத அரசாங்கத்த்தின் அடிவருடிகளாக இயங்குவதைப் பற்றி யாராவது தமிழர்கள் மனம் நொந்தால், அதை விடுங்கள்.

கப்பலோட்டிய தமிழன் போன்ற பல தமிழர்களும் பல கோடி அடிமட்டத்திலுள்ள ஏழை இந்தியர்களும், இந்தியாவின் சுதந்திரத்துக்காக தமது தொழிலையிழந்து சிறையில் வாடியபோது , சுயநலத்துக்காக, தமது வியாபாரத்தைக் காப்பதற்காக, வெள்ளையர்களின் அரசுக்கு பந்தம் பிடித்து மகாத்மா காந்தியின் முதுகில் குத்திய நிறுவனம் தான் இந்து பத்திரிகையின் உரிமையாளர்களாகிய ஐயங்கார் பிராமணர்கள்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது சுயநலத்தையும், இலாபத்தையும் கருதியவர்களிடம் எப்படி தமிழீழப் போராட்டத்துக்கு ஆதரவை எதிர்பார்க்க முடியும்.

1920 இல் நாக்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின் பின்னாலாவது, "மிகவும் செல்வாக்குள்ள, சென்னை மாநிலத்தில் படித்தவர்களாலும், மேல் மட்டத்தவர்களாலும் படிக்கப்படும், தமிழ்நாட்டுப் பிராமணர்களை உரிமையாளர்களாகக் கொண்ட இந்து பத்திரிகை சட்டமறுப்பு இயக்கத்துக்கு ஆதரவளிக்குமென நம்பினார் மகாத்மா காந்தி" ஆனால் அவர்கள் அரை மனதுடன் தான் ஆதரவு தருவதாக நொந்து கொண்டாராம் மகாத்மா.

தமிழ்நாட்டுப் பிராமணர்களும், அவர்களின் பத்திரிகையாகிய "இந்து"வும் மகாத்மாவின் வன்முறையற்ற போராட்டத்துக்கே, தமது சுயநலம் கருதி ஆதரவு கொடுக்காது முதுகில் குத்தினார்கள் என்றால் ஈழத்தமிழர்களின் போராட்டத்துக்கு எப்படி ஆதரவளிப்பார்கள்.

சோ இராமசாமிக்கும், இந்து ராமுக்கும் சிங்கள அரசுக்கு ஆதரவளித்துப் பொய்ப்பிரச்சாரம் செய்வது தான் வருமானத்தைக் கொடுக்கும். இந்து பத்திரிகை பிரபாகரனை எதிர்க்கிறது ஏனென்றால் பிரபாகரன் ஆயுதமேந்தி வன்முறையில் போராடுகிறார் என்பது தான் காரணமென வைத்துக் கொள்வோம், அப்படியென்றால் அவர்கள் எதற்காக வன்முறையற்ற வழியில் போராடிய மகாத்மாவுக்கு ஆரம்ப காலத்தில் ஆதரவளிக்க மறுத்தார்கள்?

பிரபாகரனுக்கும், மகாத்மா காந்திக்குமிடையிலுள்ள ஒற்றுமை என்னவென்றால் இருவரும் பிராமணர்களல்ல, பார்ப்பனர்களை விடக் குறைவாகக் கருதப்படும் சாதிக்காரர்கள், அக்காலத்தில் மட்டுமல்ல, இக்காலத்திலும் பிராமணர்களல்லாதவர்களைத் தலைவராக, திறமையுள்ளவராக ஏற்றுக் கொள்வதற்குப் பார்ப்பனர்களால் முடியாது போலிருக்கிறது.

-- அறிவானந்தா சுவாமிகள்

http://www.tamilnadutalk.com/portal/index.php?showtopic=6673

நல்ல அருமையான கட்டுரை

இந்த பார்ப்பன ஜென்மங்கள் ஒருக்காலும் திருந்தாதுகள்.அது நமக்கு தேவையுமில்லை.இவையள நம்பி

எங்கட போராட்டமும் இல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.