Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்து சுந்தரேசனின் Twentieth Wife மற்றும் The Feast of Roses எனும் இரு நாவல்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1-EB96-BE6-A63-B-467-D-97-F7-CACBDBB095-

இந்து சுந்தரேசனின் Twentieth Wife மற்றும் The Feast of Roses எனும் இரு நாவல்கள்.

இந்தியாவில் பிறந்து வளர்ந்த இந்து சுந்தரேசன் தற்போது Seattle, அமெரிக்காவில் வசிக்கிறார்.  Twentieth Wife, The Feast of Roses மற்றும் Shadow Princess என முகலாய சாம்ராஜ்யத்துடன் சம்பந்தப்பட்ட 3 நாவலகளின் தொகுப்பில், அவரது தாயார் மதுரம் சுந்தரேசனால் தமிழில் “ இருபதாவது இல்லத்தரசி” மற்றும் “ இதய ரோஜா” என்ற தலைப்புகளில் இரு நாவல்களை மொழிபெயர்த்துள்ளார். 

எப்பொழுதும் சரித்திர நாவல்களை வாசிப்பதில் ஆர்வம் உள்ளதால், புதிய நாவலாசிரியரின் இந்த இரு நாவல்களையும் சமீபத்தில் வாசித்தேன். ஆங்கிலத்தில் இருந்து நேரடி தமிழாக்கம் செய்யப்பட்டது போன்று வசனங்கள் தோன்றினாலும் பொழுது போக்கிற்காகவும், சரித்திர நாவல்களில் விருப்பம் உள்ளவர்கள் வாசிக்கலாம். 
முகாலய சாம்ராச்சியத்தின் அரசியல், அரியானை படுகொலைகள் மற்றும் கொடூரங்கள், வணிகம், கலாச்சாரம், உணவு வகைகளை, பழக்கவழக்கங்கள், குடும்ப உறவுமுறைகளை சான்றுகளையும் கற்பனைகளையும் கலந்து எழுதப்பட்ட நாவல்கள். 

நாவலாசிரியர் ஒவ்வொரு அத்தியாயம் தொடங்கும் போது வரலாற்று ஆசிரியர்களின் குறிப்புகளை, அக்பர், சலீம்( ஜஹாங்கீர்), மெஹ்ருன்னிஸா(நூர்ஜஹான்), சலீம்( ஷாஜஹான்) பற்றியும், வரலாற்று நிகழ்ச்சிகளை பற்றி சிறு குறிப்புகளை தருவதால் நாவல்களை வாசிக்கும் போது இலகுவாக இருந்தது. 

“இருபதாவது இல்லத்தரசியானது” பர்ஷியாவிலிருந்து இந்தியாவிற்கு அடைக்கலம் தேடி வந்த சாதாரன பெண்ணான மெஹ்ருன்னிஸா  முகலாய சாம்ராச்சியத்தில் செல்வாக்கும் ஆளுமையும் பெற்று  நூர்ஜஹான்( உலகத்தின் ஒளி) என எப்படி புகழ்பெற்றாள், இந்த நிலையை அடைய யார் காரணமாக இருந்தார்கள், யாருடைய அன்பு அவளை கடும் போக்குடைய முகலாயர்களை வெற்றி கொள்ளவைத்தது என்பதுதான் இந்த இருபதாவது இல்லத்தரசி.

இவ்வளவு செல்வாக்கையும் அதிகாரத்தையும் தனது சிறுவயதில் அன்பையும் பருவ வயதில் காதலையும் வைத்திருந்த இளவரசர் சலீமின் மூலமே அடைகிறாள்.
அவள் தனது 34வது வயதில் இருபதாவது இல்லத்தரசியாக இளவரசர் சலீமை திருமணம் செய்த பின்பே அடைகிறாள். மெருஹ்ன்னிஸாவை இருபதாவது இல்லத்தரசியாக மணந்தபின்பு அவர் பின்பு யாரையும் திருமணம் செய்யவில்லை என இந்த நாவலாசிரியர் கூறுகிறார். 

மெஹ்ருன்னிஸா தனது எட்டாவது வயதில் இளவரசன் சலீம் மான்பாய் திருமணத்தைப்பார்த்து, அரச குடும்ப வசதிகள், பிரமாண்டங்களைப்பார்த்து கவரப்படுகிறாள்.. அவளது 16 வயதில் இளவரசன் சலீமின் கண்களில் பட்டு, அவரை கவருகிறாள். அக்பரிடம் அவளை தான் திருமணம் செய்ய ஆசைப்படுவதாக சலீம் கூறிய நேரத்தில் விதி வசத்தால் அலிகுலி எனும் படைவீரனின் மனைவியாக நிச்சயக்கிப்படுகிறாள். 

அலிகுலியுடன் திருமணமாகி, ஒரு பெண் குழந்தைக்கு தாயாகினாலும் சலீமின் மீது கொண்ட காதலை மறக்கமுடியவில்லை.. அக்பரின் மறைவிற்கு பிறகு அரியானை ஏறிய சலீம் எனும் ஜஹாங்கீரிற்கும் கூட மெஹ்ருன்னிஸாவை மறக்க முடியவில்லை.
இந்த சமயத்தில் ஜஹாங்கீருக்கு எதிராக அவரது ஒரு மகனான குஸ்ருவின் சதியில் அலிகுலியும் உடந்தையாகி உயிரை இழக்கிறான். பழைய காதல் மீண்டும் துளிர்க்கிறது, மெஹ்ருன்னிஸா ஜஹாங்கீரை திருமணம் செய்கிறாள்.

நூர்ஜஹானைப்பற்றிய குறிப்புகள் மாறுப்பட்டாலும், ஜஹாங்கீரின் அதி நம்பிக்கைக்குரியவளாகவும், அவரது மாறாத அன்பைப்பெற்றவளாகவும் இருந்திருக்கிறாள்.

இருபதாவது இல்லத்தரசிக்காக ஜஹாங்கீர் உருவாக்கிய சாம்ராச்சியமே இந்த “ இதய ரோஜா- நூர்ஜஹானின் சாம்ராஜ்யம்”. 

மெஹ்ருன்னிஸா, ஜஹாங்கீரை திருமணம் செய்து கொண்ட நாளிலிருந்து, ஜஹாங்கீர் மரணமடையும் வரை, மிகுந்த அதிகாரம் உடையவளாகவும் இருந்திருக்கிறாள். தனது தந்தை கியாஸ்பெக், சகோதரன் அபுல் ஹாசன் மற்றும் ஜஹாங்கீரின் மூன்றாவது மகனும் பின்னாளில் ஷாஜஹானான இளவரசன் குர்ரம் ஆகியோரை தனது ஆலோசகர்களாக கொண்டு 16 ஆண்டுகள் முகலாய சாம்ராச்சியத்தில் வலிமைமிக்க சக்ரவர்த்தினியாக இருந்திருக்கிறாள். 

வழமை போல, அதிகாரமும் செல்வாக்கும் அதிகரிக்கும் போது அதை தக்கவைத்துக்கொள்ளவே எல்லோரும் ஆசைப்படுவார்கள், அதற்கான வழிகளை தேடுவார்கள். அதற்கு நூர்ஜஹானும் விதிவிலக்கு அல்ல. அதனாலேயே அவளது வீழ்ச்சியும் வந்தது.

முகத்திரைக்கு பின்னால் ஒளிந்திருந்த அந்த முகம், எத்தனை வரலாற்று நிகழ்ச்சிகளை செய்து முடித்திருந்தது. முகலாய மரபைமீறி, அவளது பெயரில் நாணயங்களை வெளியிட்டாள், அரசாங்க முத்திரையிட்ட அறிக்கைகளை அனுப்பினாள், வெளிநாட்டவருடன் வணிகம் செய்தாள், அவளுக்கு சொந்தமான கப்பல்கள் வணிகத்தில் ஈடுபட்டிருந்தன. இப்படி பல..இந்த இதய ரோஜா அவளது ஆட்சியைப்பற்றி வரலாறும் கற்பனையும் கலந்து கூறுகிறது. 
நூர்ஜஹானின் எண்ணப்டியே அவளது சகோதரனின் மகளான அர்ஜூமன்ட பானு பேகத்தை( பின்னாளில் மும்தாஜ்) இளவரசன் குர்ரம்(ஷாஜஹான்) திருமணம் செய்கிறான். 
ஆனாலும் அதிகாரமும் ஆசையும் இளவரசன் குர்ரமை மாற்ற, பொறாமை அர்ஜூமன்டின் கண்களை மறைக்க, நூர்ஜஹானின் சாம்ராஜ்யம் தடுமாற தொடங்குகிறது என்பதைதான் இந்த “ இதய ரோஜா” கற்பனை கலந்து கூறுகிறது..

அதிகாரத்தை தனது கைக்குள் வைத்திருப்பதற்காக தனக்கும் அலிகுலிக்கும் பிறந்த மகளான லாட்லியை இளவரசன் குர்ரமிற்கு திருமணம் செய்து வைக்க முயல்கிறாள், ஆனால் அர்ஜூமன்ட அதை கடுமையாக எதிர்த்தமையால் கடைசியில் ஜாஹாங்கீரின் இன்னொரு மகனான ஷஹர்யாரிற்கு  லாட்லியை திருமணம் செய்து வைக்கிறாள். அரியானைப்போட்டியில் அவனும் கொல்லப்படுகிறான்.ஆனால் அதைப்பற்றி வரலாற்று குறிப்புகள் சரியான ஆதாரத்தை கூறவில்லை என நாலாசிரியர் கூறுகிறார்.

இன்று உலகமே வியக்கும் ஏழாவது அதிசயமான தாஜ்மஹாலிற்கு கூட நூர்ஜஹான் தனது தந்தை கியாஸ் பெக்கிற்காக கட்டிய “ இதிமததுல்லா” கல்லறையே முன் உதாரணம் என இந்த புத்தகம் கூறுகிறது.  சலவைகல்லில் விலை மதிப்புள்ள கற்களைப் பதித்து செய்யப்படும் “ பியட்ரா துரா (Pietra Dura)” எனப்படும் வேலைப்பாடு இந்த இரு கல்லறைகளிலும் அதிகளவில் காணப்படுவதால் நூர்ஜஹான் தனது தந்தைக்காக வடிவமைத்திருந்ததைப்பார்த்தே ஷாஜஹான் தாஜ்மஹாலை வடிவமதைத்திருந்தான் என இந்தப்புத்தகம் கூறுகிறது..

“உலகத்தின் ஒளி” என அழைக்கப்பட்ட நூர்ஜஹானின் இறுதிக்காலம் அவளது அந்தரங்க சேவகன் ஹோஷியார் கான் என அழைக்கப்பட்ட திருநங்கை, அவளது மகளான லாட்லி மற்றும் லாட்லியின் மகளான அர்ஜனியுடன் மாளிகைசிறைவாசமாகவே இருந்திருக்கிறது. நூர்ஜஹான் யாரையும் பார்க்கவோ, பேசவோ ஷாஜஹான் அனுமதி கொடுக்கவில்லை. 

ஜஹாங்கீர் நூர்ஜஹானிற்காக எந்தவித சின்னங்களையும் அமைக்கவில்லை, ஆனால் இந்த இரு நாவல்களையும் வாசித்த பொழுது நான் உணர்ந்து கொண்டது ஷாஜஹான் - மும்தாஜை காதலைவிட அழகானதும் அழமானது இந்த ஜஹாங்கீரின் இருபதாவதும் இறுதி தேடலுமான “நூர்ஜஹான்” என அழைக்கப்பட்ட மெஹ்ருன்னிஸாவின் காதலே.. 

B2-CCA4-FE-0762-40-A2-BA62-FA01-C39-D3-A

இந்து சுந்தரேசன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.