Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுயபொருளாதார நீக்கமும் கையேந்தும் அரசியலும்…

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுயபொருளாதார நீக்கமும் கையேந்தும் அரசியலும்…

பாரிஸிலிருந்து சுதன்ராஜ்

கொரோனாவுக்கு முன்னால் எல்லா வல்லரசுகளும் அம்மணமாகி ஓடி ஒளிந்து தமது குடிமக்களுக்கு முன்னால் நிர்வாணமாக நிற்கின்ற காலம் இது.

ஏப்ரலின் முதல் இரண்டு வாரங்கள் அமெரி;காவுக்கு வாழ்வா-சாவா என்ற போராட்டம், 1 இலட்சத்தில் இருந்து 2 இலட்ம் பேர் வரை மடியலாம் என எந்த வெட்கமும் இன்றி அமெரிக்க அதிபர் ரம்ப் கூறுகின்றார். இதுபோலவே பிரான்சின் பிரதமரும் ஏப்ரல் முதல் இரண்டு வாரங்கள் பிரான்சுக்கு கடினமான காலம் என்கின்றார். பிரித்தானியாவிலும் இவ்வாறே எதிரொலிக்கின்றது.

980-5-1024x576.jpgஇவ்வாறு உலக வல்லரசுகளின் தலைவர்கள் பலரும் தமது குடிமக்களை பரபரப்புக்கும் அச்சத்துக்குள்ளும் தள்ளிவிட்டு, தம்மை தாப்பாளிட்டு தனிமைப்படுத்திக் கொண்டுவிட்டனர்.

பாவப்பட்ட மக்கள் கூட்டம், தொலைக்காட்சிகளில் துடுப்பாட்ட போட்டிகளின் ஸ்கோர்களை எண்ணுவதுபோல், நாளாந்தம் உயிரிழப்புக்களை ஸ்கோர் கணக்காக எண்ணிக்கொண்டுள்ளனர். இரவும் பகலும் ஊடகங்கள் பலவும் “கொரோனா, கொரோனா” என்று மக்களை ஒருவித பதட்டத்துக்குள் வைத்திருக்க, புலம்பெயர் தமிழர்கள்பலரும் உளவியல்ரீதியாக தம்மை பலிகொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இங்கே பிரான்சில் 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சைபெற்று வருவதோடு, பலரும் உயிரிழந்துள்ளனர். பலரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பின், அது கொரோனாவுக்கு உரியதா என்ற சோதனை செய்யுமாறு அரசாங்கம் அறிவுறுத்தியபோதும், தமிழர்கள் பலரும் “தமக்குத் தெரிந்த” கைவைத்தியத்துடன் நாட்களைகடத்தி, கடைசியில் நோய் உச்சம் பெற மருத்துமனைக்கு போய் உயிர்மடிந்த கதைகளும் காணப்படுகின்றது.

பலர் தமக்கு கொரோனா வந்திட்டுது என்ற சொல்வதனை அல்லது அதற்கு சிகிச்சைபெறுவதனை “ஒரு அவமானமாக அல்லது கௌரவக்குறைச்சலாக” நினைத்து மருத்துமனைகளுக்கு செல்லாமல் இருந்த நிலையும் கவலைதருகின்றது.

வீடுகளில் முடக்கப்பட்டிருக்கும் பொதுமக்கள், தொலைக்காட்சிகளின் முன்னால் பொழுதினைக்கழிக்க வேண்டிய கட்டத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். தொலைக்காட்சி சேவைகளும் பரபரப்பாக கொரோனா செய்திகளை வழங்குவதும், நாளாந்த மருத்துமனை உயிரிழப்புக்களும் திரும்பத்திரும்ப சொல்லப்பட, பலரும் மருத்துமனைக்கு சென்றால் உயிர்திரும்பாது என்ற ஓர் அச்ச நிலையும் காணப்படுகின்றது.

அரசாங்கங்களும் இதனைத்தான் விரும்புகின்றது போல் உள்ளது.

பிரான்சில் கொரோனாவுக்கு முன்னராக அரசாங்கத்துக்கு எதிரான பிரான்ஸ் மக்கள் தமது பொருளாதார வாழ்வியல் இறைமைக்காக மஞ்சள் அங்கிப் போராட்டத்தினை தீவிரமாக முன்னெடுத்து வந்திருந்தனர். இதுபோலவே பிரான்சின் ஓய்வூதிய மறுசீரமைப்புக்காக தொடர் ஆர்பாட்டங்களும், வேலைநிறுத்தப் போராட்டங்களும் நடந்து கொண்டிருந்தன. ஆனால் அரசாங்கத்துக்கு எதிராக இருந்த அழுத்தங்கள் எல்லாம் “கொரோனாவால்” அடிபட்டுப் போக, மக்களை கொரோனா தொடர்பான மிகைப்படுத்தப்பட்ட அச்சத்தை அரசாங்கம் ஏற்படுத்துகின்றது என்ற குற்றச்சாட்டும் காணப்படுகின்றது.

இந்த வைரஸ் பாம்பில் இருந்து வெளவாலில் இருந்து உருவான கதையெல்லாம் கடந்து, தற்போது மனிதத்தவறு என்ற நிலையில், இதற்கான பொறுப்பு யார்?

சீனாவும் அமெரிக்காவும் இடையில் இது தொடர்பில் நிகழுகின்ற கருத்து மோதல்களுக்கு பின்னால் மறைக்கப்படும் உண்மை என்ன ?

போன்ற கேள்விகள் விவாதங்களாக மாறாமல், கொரோனா தொடர்பான விழிப்பும், தடுப்பு மருந்து தொடர்பான விடயங்களுமே பெரிதாக பேசப்படுகின்றன. அல்லது பேசிவிக்கப்படுகின்றன.

கொரோனாவில் இருந்து தன்னை பெரும்பாலும் விடுவித்துக் கொண்ட சீனா, கொரோனாவில் இருந்து உலகைக் காப்பாற்ற வறிய நாடுகளுக்கு மருத்துவவர்களையும், மருத்துவ உபகரணங்களையும் இலவசமாக அனுப்பிக் கொண்டுள்ளது. கடன்களையும் வாரி வழங்குகின்றது.

 

 

வளர்ந்த நாடுகள் தமது வெட்கத்தைவிட்ட சீனாவிடம் இருந்து பல ஆயிரம் கோடி, சுவாசக்கவசங்களையும், செயற்கைசுவாச வழங்கிகளையும் சீனாவிடம் இருந்து வாங்குகின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

சீனா பொருளதாரரீதியான தன்னை வளப்படுத்துவதற்கு அப்பால் தன்னை நம்பியிருக்க வேண்டிய கட்டத்துக்கு உலகத்தை தள்ளிவிட்டுள்ளது. அதாவது சீனா கொரோனா நெருக்கடியினை “அரசியல் முதலீடாக்கி” தன்னை உலகில் தவிக்கமுடியாத சக்தி என்ற நிலையினை உலகமக்களுக்கு உணர்த்தியுள்ளது.

மக்களின் உயிர்களை காப்பாற்றுவதற்கு பிற நாடுகளிடம் கையேந்தும் நிலைக்கா பிரான்ஸ் தள்ளப்பட்டுள்ளது என்ற கேள்வி எழுந்த வேளையில், அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களை பின்னர் வையுங்கள், தற்போதும் நாம் அனைவரும் ஒன்றுபட்டு உயிர்களை காப்போம் என பிரான்ஸ் அதிபர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடும் தொனியில் கருத்தொன்றினை பதிவு செய்திருந்தார்.

இதனை அவர் பதிவு செய்ய இடம், பிரான்சில் இருக்கின்ற ஒரேயொரு சுவாசக்கவசங்கள் உற்பத்தி செய்கின்ற தொழிற்சாலை.

பிரான்சின் உற்பத்திகளை வரும் வாரங்களில் பல மடங்கு உயர்த்துவதாக அறிவித்த அதிபர், “மேட் இன் பிரான்ஸ்” என்ற பிரான்சின் உற்பத்திகளை சுகாதாரத்துறையில் பெருக்க மிகப்பெரும் திட்டமொன்றினை அறிவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

உலகமயமாகிய வர்த்தகம், பொருளதாரத்த சந்தையில் பிரான்சில இருந்து பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு உற்பத்தி செலவு குறைந்த நாடுகளுக்கு மாற்றப்பட்டதன் ஒரு தொகுதி விளைவிளை தற்போது கொரோனாவை எதிர்கொள்ள முடியாமல் பிரான்ஸ் அனுபவத்திக் கொண்டுள்ளது.

மருத்துமனைகளில் கட்டில்கள் வீணாக இருக்குதென்று கடந்த 14 ஆண்டுகளில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்டில்களை மருத்துமனைகளில் நீக்கம் செய்தததான் விளைவினை தற்போது பிரான்ஸ் அனுபவித்துக் கொண்டுள்ளது.

இப்படி சுதேசிய பொருளாதார கொள்கையினை கைவிட்டு, உலகமயம் என்ற மாயைக்குள் சென்றதன் விளைவே “சீனாவை” கையேந்தும் உலகின் பல நாடுகளை தள்ளியிருப்பது போலவே, கையேந்தும் நிலையில் உள்ள ஒரு தொகுதி தமிழர் தாயக தமிழர்களின் நிலையினை அவதானிக்க கூடியதாகவுள்ளது.

“எங்களுக்கு எந்த உதவியும் வந்து சேரேல. அரசாங்கத்தின் உதவிகளும் இல்லை. வருமானம் இல்லை. லோன்காசு கட்டவேணும். பட்டினிதான் இருக்க வேணும்.”

இதுபோல் பலரும் தமிழர் தாயகத்தில் உதவிகளுக்காக தாங்கள் காத்திருப்பதான மன்றாட்ட காணொளிகளை சமூகவலைத்தளங்களில் காணக்கிடைக்கின்றது.

கொனோரா ஊரடங்குசட்டம் காரணமாக “கையேந்தும் நிலையில்” தாயக உறவுகளின் நிலைகண்டு எழுகின்ற கோபமும், கவலையும் எழுகின்றது.

போர்க்காலத்தில் சிறிலங்கா அரசாங்கம் விதித்திருந்த பல்வேறு பொருளாதார நெருக்கடிகள், தடைகளுக்கு மத்தியிலும் தாயக மக்கள் வாழ்வாதாரத்தை கையாண்டார்கள். அதாவது யாழ்பாணத்தை பட்டினி போடமுடியாது என்ற கருத்து சிங்கள அரசிடம் அன்று இருந்தது.

காரணம், தன்னிறைவான வளங்களை உருவாக்கவும், அதன் வழியே தன்னிறைவான பொருளாதார குடும்ப கட்டமைப்புக்கும் போர், போராட்டம் அவர்களை தள்ளியிருந்தது.

ஆனால் , இன்று போருக்கு பிந்திய இந்த 10 ஆண்டு காலத்தில் தாயகசமூகம் தன்னிறைவான பொருளதாரத்தை நோக்கி செயற்படாமல், கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனரோ என்ற கேள்வி எழுகின்றது.

சுயவளங்களை உருவாக்க போர் அவர்களை அன்று தள்ளியது…ஆனால் இன்றைய போரற்ற நிலை கையேந்தும் நிலைக்கு தள்ளியுள்ளது.

தாயக மக்களுக்கான பெருவாரியாக வழங்கப்படுகின்ற வாழ்வார உதவிகள் என்பது அன்றாடம் தேவைகளை பூர்த்தி செய்கின்றனவையாக இருந்தன் விளைவே, இன்று கொரோனா தாக்கதில் மட்டுமல்ல, வெள்ளப்பெருக்கு காலத்திலும் பலரை கையேந்தும் நிலைக்கு தள்ளியுள்ளது.

தேசமாக சிந்தித்து தாயகமக்களின் தேவைகளை மட்டுமல்ல, தாயகத்தின் தேவைகளை கடந்த பத்து ஆண்டுகளில் செய்யாததன் விளைவே இது. கையேந்துகின்ற நிலைக்கு அவர்களை பழக்கப்படுத்தி விட்டது.

தாயக அரசியல் தலைமைகள், வாக்குவங்கி அரசியலை மையப்படுத்தி செயற்பட்டனவே அன்றி, அரசிலையும் அவர்கள் தேசமாக சிந்தித்து செய்யவில்லை…. மக்களுக்கான வாழ்வாதார கட்டுமானத்துக்கும் தேசமாக சிந்திக்கவில்லை.

சுனாமிக்கு பின்னராக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், மக்களை மீளகட்டியெழுப்ப பொதுக்கட்டமைப்பொன்றினை உருவாக்கி சர்வதேச சமூகத்திடம் முன்வைத்திருந்து.

சுனாமியை விட மிக மோசமான பேரிழிவாக அமைந்த முள்ளிவாய்காலுக்கு பின்னராக , தாயக அரசியல் தலைமைகள் உடனடியாக செய்திருக்க வேண்டியிருக்க வேண்டியது ‘ தாயக மக்களுக்கான ஓர் வாழ்வாதார கட்டமைப்பு’

அதனை செய்யாது, சிறிலங்காவின் பாராளுமன்ற நிதிஒதுக்கீட்டினை வைத்துக் கொண்டு தங்களுடைய வங்குரோத்து அரசியலை செய்ததன் விளைவுதான் தமிழர்களை கையேந்துகின்ற நிலைக்கு அரசியலை மட்டுமல்ல, வாழ்வாதாரத்தையும் தள்ளியுள்ளது.

முதலில் சிறிலங்காவின் பாராளுமன்றத்தை விட்டு வெளியே வந்து தேசமாக இனியாவது சிந்தித்து தாயகத்தின் அரசியலை மட்டுமல்ல, மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் கட்டமைக்க வேண்டிய பொறுப்பு தாயக அரசியல் தலைமைகளுக்கு உண்டு. அதற்கு புலம்பெயர் தமிழர்களின் பங்கும் உண்டு.

தற்போது கொரோனா மட்டுமல்ல இனிஎக்காலத்தில் எந்த சவால்கள் வந்தாலும், அதனை எதிர்கொள்வதற்கான முதற்படியாக இது இருக்கட்டும்.

இல்லையெனில், தேசமாக சிந்திக்காமல், தமது சுதேசிய கொள்கைகளை கைவிட்டதன் விளைவாக சீனாவிடம் கையேந்தும் நிலைக்கு உலகம் தள்ளப்பட்டதோடு, அதுபோலவே நாமும் தமிழர்களை கையேந்த வைத்துக் கொண்டிருப்போம்.

 

http://thinakkural.lk/article/38068

 

 

 

 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.