Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பத்தாவது உலகத் தமிழ் மாநாடு

Featured Replies

பத்தாவது உலகத் தமிழ் மாநாடு 20-22 யூலை 2007 மலாயாப் பல்கலைக்கழகம், கோலாலம்பூர், மலேசியா

உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் பத்தாவது உலகத் தமிழ் மாநாட்டை மலேசியாவின் கோலாலம்பூரில் யூலை 20,21,22 - 2007இல் நடைபெற உள்ளது.

உலகளாவிய தமிழினத்தை மொழியாலும் பண்பாட்டினாலும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற பெருநோக்குடன் அரசியல் சார்பற்று இனமத பேதங்களை கடந்து தாய்த்தமிழகத்திலம் சேய்த்தமிழீழத்திலும் வாழும் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்று குறிக்கோளுடனும், தமிழினம் ஒரே குடையின் கீழ் செயற்பட வேண்டும் என்ற கொள்கையுடனும், இவ்வியக்கம் 1974ஆம் ஆண்டு தமிழீழத்தின் கலாச்சாரத் தலைநகர் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் அமைக்கப்பட்டது. இந்த உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் தோன்றக் காரணம் இருந்துவர் குரும்பசிட்டி கனகரத்தினம் அவர்கள்.

இவருடன் அமரர் பேராசிரியர் வித்தியானந்தன் (ஈழம்), அமரர் பேராசிரியர் சாலை இளந்திரையன் (தமிழகம்), அமரர் பேராசிரியர் சாளினி இளந்திரையன்(தமிழகம்), அமரர் பேராசிரியர் நா. வீராப்பனார் (மலேசியா), அமரர் சோதிநாதன் (தென்னாபிரிக்கா), திருமதி சோதிநாதன் (தென்னாபிரிக்கா), அமரர் வணபிதா தனிநாயகம் அடிகளார் (ஈழம்) மற்றும் உலகப் பேராளர்களை உட்படுத்தி 08.01.74 அன்று பேரவை உருவாக்கப்பட்டது.

32 கிளைகளை கொண்ட உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் யுனஸ்கோவில் பதிவுசெய்யப்பட்ட ஒரே ஒரு தமிழ் அமைப்பு என்ற பெருமையையும் பெறுகிறது. உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் இதுவரை 9 உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி உள்ளது.

முதலாவது மாநாடு 1977 (தமிழ்நாடு சென்னை), இரண்டாவது மாநாடு 1980 (மொரிசியஸ்) மூன்றாவது மாநாடு 1985(தமிழ்நாடு சேலம்), நான்காவது மாநாடு 1987 (மலேசியா) ஐந்தாவது தமிழ்நாடு 1992 (அவுசுரேலியா-சிட்னி), ஆறாவது மாநாடு 1996 (கனடா), ஏழாவது மாநாடும் இயக்கத்தின் வெள்ளவிழாவும் 1999 (தமிழ்நாடு சென்னை), எட்டாது மாநாடு 2001 (தென்னாபிரிக்கா), ஒன்பதாவது மாநாடு 2004 (புதுச்சேரி) என்று நடைபெற்று பத்தாவது மாநாடு மலேசியா கோலாலம்பூரில் நடைபெற உள்ளது.

பத்தாவது உலகத் தமிழ் மாநாட்டை மலேசியா கோலாலம்பூரில் நடத்த 03-07-2005 அன்று கூடிய இயக்கத்தலைமைப் பேரவை முடிவு செய்தது. இயக்கத்தின் அகிலத்தலைவர் திரு ப. கு. சண்முகம் தலைமையில் நடந்த பேரவைக் கூட்டத்தில் இயக்கத்தின் துணைத் தலைவர்கள் பெருங்கவிக்கோ வா. மு. சேதுராமன், அறநெறிக்காவலர் வேல். வேலுப்பிள்ளை, செயலாளர் நாயகம் துரை. கணேசலிங்கம் அனைத்துலகக் கல்விப் பொறுப்பாளர் புலவர் நா. சி. கமலநாதன், காப்பாளர் பேராசிரியர் இ. பாலசுந்தரம், அனைத்துலக மகளிர் பொறுப்பாளர் திருமதி பொன்னி கணேசன், நடவடிக்கைக்குழு உறுப்பினர் பொ. சா. வெங்கடேசன், தலைமையக உதவித் தலைவர் கவிக்கோ பரம விசுவலிங்கம், சேர்மன் கிளைச் செயலாளர் நயினை விசயன், மற்றும் கிளைகளின் செயற்குழுவினர் கலந்துகொண்டனர்.

பத்தாவது உலகத் தமிழ் மாநாட்டை உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கமும் மலாயா பல்கலைக்கழக இந்திய ஆய்வியல்துறையும் இணைந்து மலாயா பல்கலைக்கழகத்தில் நடத்த உள்ளன.

இம் மாநாட்டில் "உலகத் தமிழர்கள் : புலம்பெயர்ந்த தமிழர்களின் வாழ்வியல் - அன்றும் இன்றும்" என்னும் கருப்பொருளின் அடிப்படையில் புலம்பெயர் தமிழர்களின் அயல்புலச் சூழல், தாய்மொழி அறிவு, தமிழர் பண்பாடு நாகரீகம் போற்றுதலோது அவைகளை அடுத்த தலைமுறைக்கும் எடுத்து செல்லல், அரசியல் பொருளாதார சமூகத் துறைகளில் மேம்பாடு ஆகியவற்றில் உள்ள அறைகூவல்களை எதிர்கொண்டு முனைப்புடன் செயற்படுதல் நோக்கமாக எடுத்துக் கொள்ளப்படும்.

இந்த நோக்கத்துடன் தமிழ்வழி இறைவழிபாடு, தமிழாண்டு, தமிழ்கல்வி ஊக்குவிப்பு, தமிழ் மரபுகளை நிலைப்படுத்துதல், தனித்தமிழ் ஊக்குவிப்பு, தமிழர் இறையாண்மை, தமிழ்கலை மீட்பு, தமிழ் பாதுகாப்பு, தமிழர் பண்பாடு, தமிழர் நிறுவனங்கள் ஒருங்கிணைப்பு, மறைந்த மறைக்கப்பட்ட தமிழர் வரலாற்று தேடல்கள், எதிர்காலத் தமிழினம் எதிர்நோக்கும் சவால்கள், தமிழ் ஊடகங்கள் போன்ற விடயங்களும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.

மாநாட்டு ஆய்வுகளும் தமிழறிஞர்களின் துறைசார் புத்தாய்வுகளும் கொண்ட மாநாட்டு மலர் வெளியிடப்படும். அத்துடன் தமிழ், தமிழின ஆவண கண்கண்காட்சியும் இடம்பெறும். தமிழ் வரலாறு தொடர்பான நூல்கள், ஒலிப்பேழைகள், ஒலி நாடாக்கள், நிழற்படங்கள் போன்றவற்றை வைத்திருப்பவர்கள் அவற்றை எமக்கு அனுப்பியோ அல்லது நேரில் கொண்டுவந்து தந்தோ அவைகளை ஆவணக் கண்காட்சியில் இடம்பெறச் செய்ய முடியும். தமது ஆவணங்களை இடம்பெற வைக்க விரும்புபவர்கள் மற்றும் கலந்து கொள்ள விரும்புபவர்கள் அது குறித்து யூன் 30இற்குள் அறியத் தரும்படி மாநாட்டுக் குழு கேட்டுக் கொள்கிறது.

தொடர்புகளுக்கு:

பா. கு. சண்முகம்

பத்தாவது உலகத் தமிழ் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுத் தலைவர்

MALAYSIAN MOVEMENT FOR TAMIL CULTURE

No. 28, Lintang Selar, Kawasan 7, Sungel Berfek

41100 Klang, Selangor D.E. Malaysia

Tel.: 0060 3337 22 999

துரை. கணேசலிங்கம்

செயலாளர் நாயகம் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம்

Salz Bergener Str. 142

48431 Rheine

Germany

Tel.: 0049 5971 14258

Edited by இலக்கியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.