Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா தொற்றின் பின்புலத்தில் இலங்கையின் நெடுங்கால ஜனநாயக குறைபாடு பற்றிய ஒரு நோக்கு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


 

கொரோனா தொற்றின் பின்புலத்தில் இலங்கையின் நெடுங்கால ஜனநாயக குறைபாடு பற்றிய ஒரு நோக்கு

- அம்பிகா சற்குணநாதன்

கொவிட் - 19 தொற்றுநோய் ஒரு 'சமத்துவவாதி' என்று ஒரு மாயை நிலவுகிறது. கொவிட்டையும் இலங்கையின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் மீதான அதன் தாக்கத்தையும் பற்றி ஆராய்வதற்கு முன்னதாக இந்த ஆபத்தான மாயையை கலையவேண்டியிருக்கிறது.

சமூக - பொருளாதார அந்தஸ்து, இனம், மதம் என்று எதையும் பொருட்படுத்தாமல் வைரஸ் சகலரையும் தாக்குகிறது என்கின்ற அதேவேளைரூபவ் சகலரையும் ஒரே விதமாக அது பாதிக்கவில்லை. ஒருவரின் வாழ்வு மற்றும் வாழ்வாதாரம், வைரஸ் தொற்றுக்குள்ளாவதில் ஒருவருக்கு இருக்கும் வாய்ப்பு, தொற்றிலிருந்து குணமடைதல் மற்றும் உயிர்பிழைத்தல் எல்லாமே அவரின் சமூக - பொருளாதார நிலையிலும் வசதிவாய்ப்புகளிலும் கணிசமானளவுக்கு தங்கியிருக்கின்றன.

உதாரணமாக, பௌதீக இடைவெளியைப் பேணுவதும் கைகளை அடிக்கடி கழுவுவதுமே வைரஸின் தொற்றில் இருந்து எம்மைப் பாதுகாத்துக்கொள்வதற்கு எளிமையானதும் மிகவும் பயனுறுதியுடையதுமான இரு வழிமுறைகளாக கூறப்பட்டுள்ளன. அவற்றை சகலரினாலும் பின்பற்றக்கூடியதாக இல்லை.கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையில் 15 பேர்ச்சஸ் இடப்பரப்பில் நெருக்கமாக வாழ்கின்ற 220 குடும்பங்கைளைப் போன்ற எமது சனத்தொகையில் சில பிரிவினருக்கு பௌதீக இடைவெளியைப் பேணுவது என்பது ஒரு ஆடம்பரமாகும்.

ambica.jpg

அதே விதமாகவே சிறைக்கைதிகள் அல்லது தணணீரைப் பெறுவதற்காக பல மைல்கள் நடந்துசெல்கின்ற கிராமவாசிகளைப் போன்ற கிரமமாக தண்ணீரை தாராளமாகப் பெறமுடியாமல் இருக்கும் மக்களுக்கு கைகழுவுவதும் ஆடம்பரமேயாகும். அசமத்துவத்தை கையாளுதல் உலகளாவிய ரீதியில் நோக்குகையில்ரூபவ் கொவிட்டுக்கு முன்னரான உலகின் ஒழுங்கு முறை மற்றும் கட்டமைப்புப் பலவீனங்களை தொற்றுநோய் அம்பலப்படுத்தியிருக்கிறது. 

இலங்கையில் கடந்த வாரங்களில், பெருந்தோட்டத்தொழிலாளர்கள் மற்றும் தினக்கூலி உழைப்பாளிகள் போன்ற மக்கள் குழுக்கின் இடர்மிகு பொருளாதார நிலையும் அவர்களின் இரவோடிரவாக இழக்கப்பட்ட வாழ்வாதாரங்கள் மீதான கொவிட்டின் மோசமான தாக்கமும் ஒப்புரவான வேதனங்களையும் நியாயமான வேலை நிபந்தனைகளையும் உறுதிப்படுத்துவதிலும் தொழில் உரிமைகளை பாதுகாப்பதிலும் உள்ள தோல்விகளை பிரகாசமாக வெளிக்காட்டியிருக்கின்றன. 

அதனால், வறுமைநிலையை தீவிரமடையச்செய்த காரணிகளான பாகுபாடும் ஓரங்கட்டுதலும் வறுமை வட்டத்தை உடைப்பதற்கு விளிம்புநிலைச் சமூகங்களுக்குள்ள ஆற்றலை மட்டுப்படுத்துகின்றன. தொற்றுநோய் பரவல் போன்ற இடர்மிகு சூழ்நிலைகளில் வறுமை வட்டம் அவர்களை மிகவும் கூடுதலாக பாதிக்கிறது.

இலங்கையில் வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக டயலொக் அக்சியாட்டா நிறுவனம் 20 கோடி ரூபாவை தருவதாக உறுதியளித்திருக்கிறது. வைத்தியசாலைகளுக்கு கட்டில்கள் மற்றும் சுவாசக் கருவிகளை கொள்வனவு செய்தல் உட்பட அவசர சுகாதாரப்பராமரிப்பு வசதிகளுக்காக 7 கோடி ரூபாவை வழங்குவதாக கோடீஸ்வரர் தம்மிக்க பெரேரா உறுதியளித்திருக்கிறார். இரு நன்கொடைகளுக்காகவும் அரசாங்கம் நன்றி தெரிவித்திருக்கிறது. பொதுமக்களும் கூட சுகாதாரத்துறையிலும் கல்வித்துறையிலும் அரசாங்கம் முதலீடு செய்கின்ற நிதியின் போதாமை குறித்து கேள்வியெழுப்பாமல், மாறாக பாராட்டு மழையை பொழிந்துள்ளார்கள். 

இந்த கோடீஸ்வரரினாலும் கோர்ப்பரேட் நிறுவனத்தினாலும் கடந்த தசாப்தத்தில் வரிகள் முறையாக செலுத்தப்பட்டிருக்கின்றனவா, கோடீஸ்வரர் பகிரங்கமாக அறிவித்த தமது சொத்துக்களின் பெறுமதியில் மற்றும் அந்த கோர்ப்பரேட் நிறுவனத்தின் வியாபார நடவடிக்கைகளில் கைமாறிய மொத்த பணத்தொகையில் எத்தனை சதவீதம் வரிகளாக செலுத்தப்பட்டிருக்கின்றது என்று கேள்வி எழுப்ப மக்கள் தவறிவிட்டனர்.

ஆதரவிலும் அனுசரணையிலும் ஒரு சமூகம் இயங்குகிறதென்றால், நிலப்பிரபுத்துவப் போக்குகளும் இனம், மதம் அல்லது சாதியை அடிப்படையாகக்கொண்ட படிநிலை அமைப்புமுறையும் ஆழமாக வலிதாக இருக்குமென்றால் செல்வவள உருவாக்கம் ஏறுமாறான விளைவுகளுக்கு மாத்திரமே வழிவகுக்கும். ஆதரவும் அனுசரணையும் ஒழுங்கு முறைகளையும் சட்டத்தின் ஆட்சியை அடிப்படையாகக் கொண்ட செயன்முறைகளையும் பிடுங்கியெறிகிறது. அவற்றின் விளைவான உறுதிப்பாட்டையும் இல்லாமல் செய்கிறது. பிரச்சினைகளுக்கான பரிகாரங்கள் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டதும் வெளிப்படைத்தன்மையற்றதுமான முறைமையொன்றில் தங்கியில்லாமல்ரூபவ் தனிநபரில் தங்கியிருக்கும் நிலைமையை உருவாக்குகிறது.

தொற்றுநோய் போன்ற நெருக்கடிக் காலகட்டத்தின்போது அனுசரணை வலையமைப்பு தொடர்ந்து செயற்படுவது மாத்திரமல்ல, தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருக்கக்கூடிய ஏனைய கட்டமைப்புக்களும் செயன்முறைகளும் இல்லாதநிலையில் பரிகாரங்களுக்காக நாடப்படும் பிரதான வழிமுறையாகவும் மாறிவிடலாம். இதற்கு உதாரணமாக அளுத்கமவில் கிராமவாசிகளுக்கு நிவாரணப்பொருட்களை தான் வழங்குவதற்கு உதவியாக தலையிடுமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தேவாரப்பெரும முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்சவிடம் விடுத்த வேண்டுகோளை எடுத்துக்கொள்ளலாம். தேவாரப்பெரும ஏன் இன்னொரு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரிடம் தலையீடு செய்யுமாறு கேட்டார் என்பதும் உத்தியோகபூர்வ அதிகாரம் எதுவம் இல்லாத அந்த முன்னாள் உறுப்பினர் எவ்வாறு தலையீடு செய்து உடனடியாக பிரச்சினைக்கு தீர்வு காணக்கூடியதாக இருக்கும் என்பதும் முக்கியமான கேள்விகள்.

இனத்துவ தேசியவாதமும் அடையாள அரசியலும்

இனத்துவ தேசியவாத அரசியலின் ஒரு தொடர்ச்சியாக வரலாற்றுரீதியாக இலங்கையில் உள்ள சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்திருக்கின்றன. தற்போது முஸ்லிம் சமூகம் இலக்குவைக்கப்படுகின்றது. முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வுப் பிரசாரங்களை தடுத்து நிறுத்துவதற்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அத்துடன் சிறுபான்மைச் சமூகங்களுக்கு சமத்துவமான உரிமைகளும் பாதுகாப்பும் உத்தரவாதப்படுத்தப்படாத நிலையில்ரூபவ் 2020 ஏப்ரல் 24ம் திகதி பௌத்த மகாசங்கத்தினருடனான சந்திப்பின்போது ஜனாதிபதி தெரிவித்திருந்த கருத்து வருத்தமளிப்பதாக உள்ளது.

சிங்களப் பெரும்பான்மையினத்தவர்வர்களின் வாக்குகளின் காரணமாகவே ஜனாதிபதி தேர்தலில் தன்னால் வெற்றிபெற முடிந்தது என்பது இரகசியமானதல்ல என்ற போதிலும், சகலருக்கும் சேவைசெய்வதற்கு உறுதிபூண்டிருப்பதாகவும் அவ்வாறு செய்யக் கடமைப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி கூறியிருந்தார்.

அதேவேளைரூபவ் தான் அவ்வாறு உறுதிபூண்டிருக்கின்ற போதிலும் தன்னை தோல்வியடையச் செய்வதற்கு சதிமுயற்சிகள் இடம்பெறுவதாகவும் தன்னை நீதிமன்றத்துக்கு இழுப்பதன் மூலமாக அரசியலமைப்பு நெருக்கடியொன்றை தோற்றுவிக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மகாசங்கத்தினரிடம் தெரிவித்தார். இந்த கருத்துக்கள் சிறுபான்மைச் சமூகங்கள் மீது பழியைப்போடுகின்றதும் பெரும்பான்மையின பலத்தைக் காட்டி பயமுறுத்துவதுமான தொனியில் அமைந்திருக்கின்றன.

மேலும், பாராளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு அழைப்பு விடுப்பதன் மூலமாக அரசியலமைப்பு நெருக்கடியொன்றை தோற்றுவிக்க முயற்சிப்பதாக பிரதானமாக சிறுபான்மையின அரசியல்வாதிகளை குற்றஞ்சாட்டுகின்ற அதேவேளைரூபவ் அரசியலமைப்பு விவகாரங்களை மகாசங்கத்தினருடன் ஆராய்ந்து ஆட்சிமுறைவிவகாரங்களில் அவர்களிடம் ஆலோசனை கேட்பது பெரும்பான்மைவாத -- இனத்துவ தேசியவாத-- அனுசரணையையும் ஆதரவையும் அடிப்படையாகக்கொண்ட ஆட்சிமுறையை ஜனாதிபதி முன்னெடுப்பதையே பிரதிபலிக்கின்றது. சட்டத்தின் ஆட்சிக்கும் சமூகப் பல்வகைமைக்கும் மதிப்பளிப்பதன் அடிப்படையிலான மதசார்பற்ற மற்றும் பின்விளைவுகளுக்கு அஞ்சாமல் ஆட்சியாளர்களை பொறுப்புக்கூற வைப்பதற்கு மக்கள் குரல்கொடுக்கவும் அனுமதிக்கும் ஆட்சிமுறையை அவர் மதிப்பதில்லை என்பதை வெளிக்காட்டுகிறது.

விரிவடையும் எதேச்சதிகாரமும் வலிதாகும் இராணுவ மயமும்.

உலகளாவிய ரிதீயில் கொவிட் 19 வைரஸ் தொற்று நோய் நிறைவேற்று அதிகாரத்தின் வீச்செல்லையை விஸ்தரிப்பதற்கும் பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை தகர்ப்பதற்கும் சிவில் உரிமைகளை படிப்படையாக அழிக்கக்கூடிய எதேச்சதிகார நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றது. இலங்கையும் இதற்கு விதிவிலக்கில்லை.

பாராளுமன்றம் செயற்படாதிருக்கும் நிலையில் அமைச்சர்களினாலும் அரசாங்க அதிகாரிகளினாலும் செய்யப்படவேண்டிய பணிகளை செய்வதற்கு பல்வேறு செயலணிகள் நியமிக்கப்படுகின்றமை நிறைவேற்று அதிகாரத்தின் விரிவாக்கத்துக்கு ஒரு உதாரணமாகும். மிகவும் அண்மையில் பொருளாதார மீட்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான செயலணியொன்று 2020 ஏப்ரல் 22 ஆம் திகதி அமைக்கப்பட்டது. அத்தியாவசிய சேவைகள் வழங்கலை கண்காணிப்பதற்கான முதலாவது செயலணியைப் போன்றே இரண்டாவது செயலணியும் ஸ்ரீ லங்கா பொதுஜன முனனணியின் ஸ்தாபகரும் ஜனாதிபதியினதும் பிரதமரினதும் சகோதரருமான பெஷில் ராஜபக்ச தலைமையில் அமைந்திருக்கிறது. அவர் எந்தவொரு அசராங்கப்பதவியை வகிக்கவும் இல்லை அவரொரு அரச அதிகாரியும் இல்லை. தனியார் துறையும் உள்ளடக்கிய செயலணியின் உறுப்பினர்களாக வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார மீட்சி தொடர்பில் தீர்மானங்களை எடுப்பதில் எந்த வகிபாகத்தையும் கொண்டிருக்கக் கூடாத அதிகாரிகளான இராணுவத் தளபதி, பதில் பொலிஸ் மாஅதிபர் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் ஏன் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதில் தெளிவில்லை.

செயலணிக்கு வழங்கப்பட்டுள்ள விரிவான அதிகாரங்களும் பரந்தளவு ஆணையும் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படத்தன்மை பற்றிய பிரச்சினைகளை தோற்றுவிக்கிறது. ஒரு இடைக்கால அமைப்பாக இருந்தாலும் இச்செயலணி அமைச்சுக்கள் போன்ற அரச நிறுவனங்களின் நோக்கு எல்லைக்குள் வரவேண்டிய பல விவகாரங்களில் வழிகாட்டு முதன்மைப் பொறுப்பை கொண்டிருக்கின்றது. மேலும் இந்நிறுவனங்களுக்கு ஆணைகளை வழங்கக்கூடிய பரந்தளவிலான அதிகாரங்களையும் கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்னரான காலகட்டமொன்றின்போது அரசியல் ரீதியில் நியமிக்கப்பட்ட ஒருவர் அதற்கு தலைமை தாங்குகின்றமை பிரச்சினைக்குரிய விடயமாகும்.

கொவிட் 19 பரவுக்கு எதிரான நடவடிக்கைகளில் துரித இராணுவ மயமாக்கம் ஜனநாயக ஆட்சி முறைக்கு முரணான ஒரு விடயமாகும். கொவிட் 19 பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு நிலையத்தின் தலைவராக இராணுவத் தளபதி இருப்பதுடன் தொற்றுத் தடுப்புக் காவல் முகாம்களை இராணுவமே நிர்வகிக்கிறது. இந்த போக்கு சிவில் நிர்வாகத்தின் ஏனைய பகுதிகளுக்குள்ளும் ஊடுருவதை காணக்கூடியதாக இருக்கிறது. தொற்று நோய் போன்ற மனிதாபிமான நெருக்கடியை கையாள்வதற்கு இராணுவத்துக்கு முக்கியமான பாத்திரம் இருக்கின்ற அதேவேளைரூபவ் ஒரு ஜனநாயக சமுதயத்தில் இராணுத்தினரின் பாத்திரம் சிவிலியன் அதிகாரிகளுக்கு கீழ்ப்பட்டதாக இருக்க வேண்டும்.

அவர்கள் சிவிலியன் அதிகாரிகளிடமிருந்தே பணிப்புரைகளை பெறவேண்டும். பணிப்பாளர் நாயகமாக ஓய்வுபெற்ற சிரேஷ்ட இராணுவ அதிகாரியொருவை கொண்டிருக்கும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் பாதுகாப்பு அமைச்சின் நோக்க எல்லைக்குள் வருகிறது. நிவாரணங்களை விநியோகிப்பதற்கு சகல மாவட்டங்களிலும் பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள அரசாங்க அதிபர்கள், உதவி அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவதற்கு அந்த நிலையம் தனியான பொறிமுறையொன்றை கொண்டிருக்கிறது என்று பாதுகாப்புச் செயலாளர் கூறுகிறார். இது அனர்த்த முகாமைத்துவமும் நிவாரணங்கள் வழங்கலும் இராணுவ மயமாவதை வெளிக்காட்டுகிறது. 

கொவிட் 19 பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கான சிவில் தலைமைத்துவத்தை பொறுத்தவரை செய்தியாளர் மாநாடு நடத்துதல் போன்ற பொதுமக்களுக்கு தகவல்களை தெரிவிக்கும் பணிகளுக்கான பொறுப்பு சிவிலியன்கள் அதிகாரிகள், பொது சுகாதார அதிகாரிகளிடம் இருக்க வேண்டியது அவசிமாகிறது. இலங்கையில் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் நேர்காணல்களை வழங்குவதுடன் பொதுச் சுகாதார அதிகாரிகள் அல்லது ஏனைய சிவிலியன் அதிகாரிகளைத் தவிர்த்து பொது மக்களுக்கு தகவல்களை வழங்குகிறார்கள். மேலும்ரூபவ் கொவிட் 19 நெருக்கடியை கையாளுவதற்கென்று நியமிக்கப்பட்ட பொருளாதார மீட்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி போன்ற பொறிமுறைகளில் இராணுவம் அங்கம் வகிப்பது முற்றிலும் சிவிலியன் நோக்கு எல்லைக்குள் வரவேண்டிய தீர்மானம் மேற்கொள்ளும் செயல்முறைகளில் இராணுவம் சம்பந்தப்படுவதற்கு வழிவகுக்கிறது.

சிவிலியன் விவகாரங்களில் இராணுவத்தின் ஈடுபாடு அதிகரித்திருக்கின்ற நிலையில், கொவிட் 19 நெருக்கடியை கையாளுவதற்கான முயற்சிகளுடன் போர் நடவடிக்கைகளை ஒப்பிடும் தொனியிலான சொற்பிரயோகங்கள் பெருமளவில் வழக்கத்துக்கு வந்துவிட்டன. “ இது முற்றிலும் வேறுப்பட்ட ஒரு யுத்தமாகும். 

பெரும் அவலங்களை ஏற்படுத்துகின்ற கொரோனா வைரஸ் தொற்று நோயை எதிர்த்து போராடுவதற்கு இராணுவம் இறங்கியிருக்கின்றது. உகந்த முறையில் சண்டையை முன்னெடுக்காவிட்டால், முழு நாட்டையுமே நிர்மூலம் செய்யக்கூடிய எதிரிக்கே இராணுவம் முகங்கொடுக்க வேண்டியிருக்கிறது” என்று பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன நேர்காணலொன்றில் கூறினார்.

போர் நடவடிக்கை தொனியிலான சொற்பிரயோகங்கள், மக்கள் மத்தியில் ஒரு எதிரி குறித்த அச்சத்தை உருவாக்கவே பயன்படுத்தப்படுகின்றன. கொவிட் 19 நெருக்கடியை பொறுத்தவரை அத்தகைய சொற்பிரயோகம் அந்த எதிரியிடம் இருந்து நாட்டு மக்களை அரசாங்கம் பாதுகாக்கும் என்று உறுதியளித்து, அவர்களை அமைதிப்படுத்தும் நோக்கிலானதாகும். இதற்கு கைமாறாக பொது மக்கள் அரசாங்கத்தின் தீர்மானங்களில் மறு கேள்விக்கு இடமில்லாத நம்பிக்கை வைக்குமாறு எதிர்பார்கப்படுகிறார்கள். இவ்வாறான சூழ்நிலையில், அரசாங்கத்தின் செயற்பாடுகளை அல்லது செயலின்மைகளை கேள்விக்குள்ளாக்கும் அல்லது விமர்சிக்கும் எந்த ஒருவரும் விசுவாசமற்றவர் என்று கருதப்படுவர்; தேச விரோதி நாட்டுப்பற்றட்டவர் அல்லது துரோகி என்று கூட அவர் நாமகரணம் சூட்டப்படக்கூடிய சாத்தியமும் இருக்கிறது.

மேலும், தொற்று நோய் கட்டுப்பாட்டுக்கு வந்தபிறகும் இராணுவத்தின் ஊடுருவல் வழமையானதாக்கப்பட்டு நீண்டகாலத்துக்கு தொடரக்கூடிய ஆபத்தும் இருக்கிறது. சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் ஊழியர் ஒருவர் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு இலக்கானமை கண்டுப்பிடிக்கப்பட்டதற்கு பின்னர், சட்டமா அதிபர் திணைக்களம் தமது பணிகளை மீண்டும் ஆரம்பிக்க முடியுமா என்று சுகாதார அதிகாரிகளிடமல்லாது, அரச புலனாய்வுச் சேவைகளிடமே, சட்ட மாஅதிபரின் அறிவுறுத்தலின் பேரில் மேலதிக மன்றாடியார் நாயகம் (நிர்வாகம்) விசாரித்தமை இராணுவ மயமாதல் இயல்பாக்கப்படுகின்றமைக்கான ஒரு எடுத்துக்காட்டாகும்.

அதிகரிக்கும் இராணுவ மயமாதலுடன் சமாந்திரமாக கொவிட் 19 நெருக்கடியை கையாள்வதற்கு அரச புலனாய்வு சேவைகளும் அதிகரித்த வகையில் பயன்படுத்தப்படுகின்றன. உலகளாவிய ரீதியில் பல நாடுகளில் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களை தேடிக் கண்டுபிடித்து கண்காணிக்க பல நாடுகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்த ஆரம்பித்திருக்கின்றன. உதாரணமாக, சீனா முக அடையாளம், கையடக்கத் தொலைப்பேசி கண்காணிப்பு, இருப்பிடத்தை கண்டுபிடிக்கும் நுட்பம் ஆகியன பயன்படுத்துகிறன. “ இலங்கையிலும் கூட எங்களிடம் வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களை சுலபமாக கண்டுப்பிடிப்பதற்கு புலனாய்வு சேவைகளிடம் மென்பொருள் இருக்கிறது.

தொற்றுக்குள்ளானவரை கண்டுப்பிடிப்பதில் புலனாய்வு சேவைகள் ஈடுபடுத்தப்படுகின்றன ” என்று பாதுகாப்புச் செயலாளர் கூறியிருக்கிறார்.

கொவிட் 19 நெருக்கடியை கையாள்வதற்கு உதவக்கூடிய ஒரு சஞ்சீவியாக மாத்திரமே தொழில்நுட்பத்தை நோக்கினால், அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை புறக்கணிப்பதாக அமையும். அரசாங்கம் அதன் பிரஜைகளின் உரிமைகளை ஒருபோதும் மீறாத மற்றும் எதிர்காலத்திலும் மீறாமலிருக்கும் ஒரு அமைப்பு என்ற நம்பிக்கையே அந்த நிலைப்பாட்டுக்கான அடிப்படையாகும். வரலாற்று ரீதியான சான்றுகள் மறுதலையாக இருப்பதையும் பொருட்படுத்தமால்ரூபவ் அரசு எப்போதுமே அதன் பிரஜைகளின் சிறந்த நலன்களை மனதில் கொண்டதாகவே இருக்குமென்று கண்மூடித்தனமாக நம்பிக்கை வைப்பது என்பதே இதன் அர்த்தமாகும். சிவில் சமூகம் மற்றும் செயற்பாட்டாளர்கள் அதிகரித்த வகையில் கண்காணிப்புக்கு உட்படுத்தப்படும் சாத்தியத்தையும் ஒடுக்குமுறையின் ஒரு கருவியாக தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் சாத்தியத்தையும் நிராகரிக்க முடியாது.

எனவே, திரட்டப்படுகின்ற தரவுகள் மாற்றுக்கருத்துக்களையும் எதிர்ப்பு இயக்கத்தையும் நசுக்குவதற்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தப்படுத்தகூடிய சாத்தியம் இருக்கிறதா என்பது குறித்து அக்கறை கொள்ளவேண்டியது அவசியமானதாகும். அத்துடன், ஒவ்வொரு பிரஜையின் தனியுரிமையை பாதுகாப்பதற்காக தற்போதுள்ள சட்டங்களும் பொறிமுறைகளும் போதுமானவையா என்பதை உறுதிப்படுத்துவது அவசியமானதாகும்.

பெருந்தொற்றுப் பரவலின் இறுதியில்?

உரிமை மீறல்கள் பலவற்றின் மையக்கருவாக இருக்கின்ற அசமத்துவத்தை கையாளுவதில் தன்முனைப்பானதும் முற்போக்கானதுமான பாத்திரமொன்றை அரசு வகிப்பதற்குரூபவ் தொற்று நோய் சந்தர்ப்பமொன்ற வழங்கியிருக்கிறது. அரச தலையீட்டுடன் சமூக பாதுகாப்பு பொறிமுறைகளை ஸ்தாபிப்பதற்கு மற்றும் மீள் பகிர்ந்தளிப்பு நீதிக்கு (அரசின் நேரடிக் கட்டளையின் மூலமாக சொத்துக்களையும் அவற்றின் உரிமைகளையும் சமத்துவமாக்குதல்) திரும்ப வேண்டிய தேவைக்கான சமிக்ஞையை இந்தச் சூழ்நிலை காட்டுகிறது. குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளினதும் சமூக பொருளாதார உரிமைகளினதும் பிரிக்கமுடியாத தன்மையையும் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் அசமத்துவத்தை கையாள்வதற்கும் இடையிலான தொடர்பையும் இந்த பெருந்தொற்றுப் பரவல் வெளிக்காட்டுகிறது. பல்வேறு பாகுபாடுகளினால் பாதிக்கப்படுகின்றவர்கள் அனுபவிக்கின்ற மறைமுகமான அசமத்துவங்களை அடையாளங்கண்டு அவர்களுக்கு சமூக நீதியை பெற்றுக்கொடுப்பதற்காக பல்வேறு பிரிவுகளுக்கும் இடையில் ஒத்துழைப்பு அணுகுமுறை அவசியம் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. அத்தோடு சுற்றாடல் நீதி மற்றும் பொருளாதார நீதி போன்றவற்றுக்கு இடையில் தொடர்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். 

இத்தகைய பின்புலத்தில், அரசுக்கும் சமூகங்களுக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்வதற்கும் சமூக நீதியை மேம்படுத்தி அசமத்துவத்தை கையாள்வதற்கும் ஒரு செயற்துடிப்பான சிவில் சமுகவெளி முக்கியமானதாகும். அத்தகையதொரு சமுகவெளி குறிப்பாக விளிம்பு நிலையில் உள்ள மக்கள் வெவ்வேறு சமூகப் பிரிவுகளுடன் ஒருமைப்பாட்டை கட்டியெழுப்புவதற்கும், சந்தை கட்டமைப்புகளில் கூடுதல் பொருளாதார சக்தியை பெற்றுக்கொள்வதற்கும் அரசாங்கத்துக்கு முக்கியமான சமூக பிரச்சினைகளை கையாள்வதற்கு அழுத்தம் கொடுப்பதற்கும் இன்றியமையாததாகும்.

(அம்பிகா சற்குணநாதன் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஒரு ஆணையாளராக 2015 ஒக்டோபர் தொடக்கம் 2020 மார்ச் வரை பணியாற்றினார். அதற்கு முன்னதாக கொழும்பிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் அலுவலகத்தில் 8 ஆண்டுகள் சட்ட ஆலோசகாராக செயற்பட்டார்)

https://www.virakesari.lk/article/82164

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.