Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யோக சித்தி. ஆக்கம்: சுவாமி சுத்தானந்த பாரதி

Featured Replies

84 இல் எனது 12 ஆம் வயதில் நான் ஓடத் தொடங்கியது இப்போது சில வருடங்களாகத்தான் ஓய்திருக்கிறேன்.எனது ஒவ்வொரு காலப்பகுதியிலும் ஒவ்வொரு விடயங்களில் தீவிரமாக இருந்திருக்கிறேன்.எனது 92 தொடக்கம் 93 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் கொழும்பில் தங்க வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டது. கொழும்பு எனக்கு ஏற்கனவே பழக்கமான இடந்தான் (90 இல் இந்துக் கல்லூரியில் சில மாதம் படித்திருந்தேன்) என்றாலும் எதாவது செய்ய வேண்டுமே என்ன செய்யலாம் என்று யோசித்த போது பழம்தமிழ் புத்தகங்களை சேகரிக்கும் எண்ணம் தோண்றியது. மிக நல்ல புத்தகங்களைச் சேர்த்தேன்.நான் நோர்வேக்கு இடம்பெயரும் போது அனைத்து புத்தகங்களையும் இங்கு அனுப்புவதற்கு ஏற்பாடு செய்திருந்தென். ஆனால் பல பொதிகள் வழியில் தொலைந்து போயின.

எனது உள்ளங் கை அளவேயான இந்தப்புத்தகம் இப்போதும் நான் வைத்திருக்கும் புத்தகங்களில் நான் விரும்புவது. இங்கு சில மத வெறியர்களுடன் வாதிடுவதிலும் பார்க்க இங்கு இந்த புத்தகத்தை பதிவிடுகிறேன்.

எனக்கு நேரம் இருக்கும் போது மட்டும்தான் இங்கு பதிவு வரும். வேறு எவருடமும் சம்பளத்துக்கு வேலை செய்யும் போது நான் எதையும் பதிவு செய்ய மாட்டன். ஆனால் இங்கை????

Edited by வாசகன்

  • தொடங்கியவர்

புத்தகம் பற்றி:

Yoga Siddhi

(perfect life in tune with the divine spirit)

பதிப்பு: 1942

Published by:

THE ANBU NILAYAM

Ramachandrapuram::Trichy Dt.

Shakti press Ltd,. Karaikudi

  • தொடங்கியவர்

பொருளடக்கம்

பதிப்புரை

அணிந்துரைகள்

திருவிண்ணப்பம்

இயலடக்கம்

கடவுளியல்

உலகியல்

அறவியல்

அறிவியல்

அன்பியல்

நடையியல்

இல்லறவியல்

குலவியல்

தொழிலியல்

அருளரசியல்

யோகவியல்

சித்தியியல்

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

பதிப்புரையை அன்புநிலையத்தாரும் அணிந்துரையை டாக்டர் உ.வே. சாமிநாதையர் வி.கல்யாண சுந்தரனார் கவிஞர் திரு.தேசிக வினாயகம் பிள்ளை ஆகியோரும் எழுதியுள்ளனர். முன்னுரையும் தவிர்த்து நூலுக்குள் நுழைகின்றேன்.

  • தொடங்கியவர்

கடவுளியல்

1. கடவுள்

ஓங்கார மாகி

யொளியா யுயிர்க்குயிராய்

நீங்காதான் இன்ப நிறைவு.

உள்ளத்தான், ஓங்கு

மூலகத்தான், பேரின்ப

வெள்ளத்தான் விண்ணின் விளக்கு.

எண்குணத்தான், ஏகனே,

எல்லா மடங்கவுளான்

புண்ணியனாம் போதப் பொருள்.

காற்றைக் கனலைக்

கதிரைக் கடலுலகைத்

தோற்றினா னன்பர் துணை.

எல்லா மவனுடைமை்்;

எல்லா மவனாணை;

எல்லா மவன்; பொதுவென் றெண்.

  • தொடங்கியவர்

2. உள்ள பொருள்

பெயர்வடி வாதியதோர்

பேதங் கடந்த

வுயர்பொருளொன் றுண்டென் றுணர்.

பலர்பற் பலவாகப்

பாரிற் பகர்வர்;

உளனெருவ னென்றே யுனர்.

ஐங்கோட்டைக் குள்ளே

யரசாளு மன்னவனை

ஐந்தடங்கி யன்பா லறி.

அருளாலே யுள்ளத்

தறிவா யிலங்கும்

பொருளாலே யின்பம் பொலிவு.

விழிமி னெழுமினுள்ளே

விண்ணரசைக் கண்டு

செழிமின்சத் சித்தா னந்தம்.

  • 1 month later...

நான் இந்த புத்தகத்தை சுமார் பதின்னான்கு வருடங்களின் முன் படித்துள்ளேன். சூப்பரான, மணியான ஒரு புத்தகம்... யோகசித்தி என்ற சுத்தானந்த பாரதியால் எழுதப்பட்ட அற்புதமான இந்த நூலை அனைவரும் ஒருமுறை வாசித்து மகிழ வேண்டும். இங்கு சுத்தானந்த பாரதியின் அழகான, அற்புதமான கவித்துவத்தை, திறமைகளை காணலாம். இதை எழுதிய இவர் எவ்வளவு பெரிய மகானாக இருக்கவேண்டும் என்பது புத்தகத்தை முழுதாக வாசித்தவர்களிற்கு விளங்கும்.. மேலே வாசகன் குறிப்பிட்டவற்றில் எனக்கு அப்போது பிடித்தமான வரிகள் இப்போது நினைவில் திரும்பவும் வருகின்றது...

காற்றைக் கனலைக்

கதிரைக் கடலுலகைத்

தோற்றினா னன்பர் துணை. :lol:

ஐங்கோட்டைக் குள்ளே

யரசாளு மன்னவனை

ஐந்தடங்கி யன்பா லறி. :o

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பயனுள்ள செயல். தொடரட்டும் வாழ்த்துக்கள்.

ஆம் அங்கிங்கெனைதபடி எங்குமுள்ள இறையை அதன் சக்தியைத்தான் நாம் தேடுகிறோம். வணங்குகிறோம்.

'அவன் தேவனுமல்லன், அசுரனுமல்லன், மனிதனுமல்,லன் பசுபஷியுமல்லன், பெண்ணுமல்லன், ஆணுமல்லன், அலியுமல்லன், பிறப்பிறப்புடையவனுமல்லன், குணத்திற்கும் கர்மத்திற்குமப்பால், உளதிற்கும் இலதிற்குமப்பால், மீதியுள்ள எலிலாம் நீங்கிய பின்னும் நீக்கமற நிறைகின்றவன் அவன்". ஸ்ரீமத் பாகவதம். 8.3.24.

திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகரும் அதைத்தான் வணங்கி அதில் ஐக்கியமானைர்.

உயர்திரு வள்ளளாரும் 'அருட்பெருஞ் ஜோதி , தனிப்பெருங் கருணை" யென அதையே கூறினைர்.

திரு வண்ணைமலை ஜோதியும் அதையே உணர்த்துகின்றது.

இவற்றுக்கு முன்னால் உருவ வழிபாடுகள் இதைத் தேடவும், அடையவும் அலையும் மனசை இழுத்து ஒரு முகப் படுத்தவே உதவுகின்றன.

மஹரிஷி சுத்தானந்த பாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

1984 தமிழக அரசும், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் நிறுவிய முதல் ராஜராஜன் விருதைப் பெற்ற பெருமை கவியோகி மஹரிஷி சுத்தானந்த பாரதி அவர்களையே சேரும். அவர் எழுதிய ஆயிரமாயிரம் நூல்களில், மாபெரும் காவியமான "பாரத சக்தி மஹாகாவியம்" அவர், சுதந்திரம் கிடைக்கும் வரை பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் மவுன விரதம் காத்தபோது மனதில் தோன்றிய ஒப்பற்ற படைப்பு! அதை படிப்பவர்க்கு கவிதை வீச்சும், தேசப்பெருங்கனலும், தெய்வீகமும் தமிழ் மேல் ஆராக் காதலும் ஏற்பட்டுவிடும் என்றால் அது மிகையில்லை! இலக்கியத்திற்கான நோபல் பரிசுக்கே அக்காவியம் மிகப்பொருந்தும். ஆனால் அவர் செய்தது ஒரு தமிழனாய் அதுவும் நிஜத் துறவியாய் இருந்ததே! இதே, மற்ற நாட்டினராய் இருந்திருந்தால், இம்மாபெரும் தேசீய கவி, வானளாவும் புகழ் உச்சியில் சென்றிருப்பார். ஆனால், தமிழ் கூறும் நல்லுலகம் அவரது புத்தகங்களை நாடிச்செல்ல, அவர் நிறுவிய தொண்டு நிறுவனமான யோக சமாஜம், சோழபுரம், சிவகங்கை மாவட்டத்திலிருந்து செயல் பட்டு வருகிறது!

shuddha.jpg

படத்தில் இருக்கையில் இருப்பவர் சுத்தானந்தபாரதி

மூலம்: http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%...%AE%A4%E0%AE%BF

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.