Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் சிறுபான்மை இனங்களும், மதங்களும் சிறுமைப்படுத்தப்படுகின்றன: ரொய்ட்டர்ஸ்

Featured Replies

வியாழக்கிழமை, 31 மே 2007, 18:57 ஈழம்] [அ.அருணாசலம்]

இலங்கையில் பல காலமாக இடம்பெற்று வரும் போர், அங்குள்ள சமூகங்களுக்கு இடையிலான வேற்றுமைகளை அதிகரித்துள்ளது. இருதரப்பும் குற்றம் சுமத்தப்படுகின்றனர். எனினும் சிங்கள மக்களை கொண்டுள்ள அரசானது சிங்கள மொழியையும், பௌத்த மதத்தையும் முதன்மைப்படுத்தி ஏனைய இனங்களையும், மதங்களையும் சிறுமைப்படுத்தி வருகின்றது என ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் செய்தி ஆய்வில் ஜோன் றுவிச் தெரிவித்துள்ளார்.

அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:

தேங்காயை எரியும் பித்தளை எண்ணெய் விளக்கிற்கு அருகில் வைப்பதன் மூலம் சாதாரண மேசையை ஒரு இந்து சமய முறையுள்ள மேசையாக மாற்றியிருந்தனர். அங்கிருந்த பெண் எம்முடன் பேசும் போது தனது எதிர்காலம் தொடர்பாக நம்பிக்கையாகவும் அச்சத்துடனும் உரையாடினார்.

நாம் திருமணம் செய்ய உத்தேசித்துள்ளோம் என 29 வயது நிரம்பிய அந்த பெண் புன்னகையுடன் தெரிவித்தார். கோப்பி மண்ணிற தோலையுடைய அவரின் நெற்றியில் பொட்டு காணப்பட்டது. அவரது வருங்கால கணவர் அருகில் இருந்தார். எனினும் நாம் இருவரும் முதலில் பிறிதொரு நாட்டுக்கு செல்ல தீர்மானித்துள்ளோம், உங்களால் உதவ முடியுமா என அவர் என்னிடம் கேட்டார்.

சிறுபான்மை தமிழர்களான இவர்கள் இருவரும் தமது பெயரை பயன்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டனர். இலங்கையில் உள்ள 20 மில்லியன் மக்கள் தொகையில் தமிழ் மக்கள் 12 வீதம். அவர்களில் பலர் துன்பமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

அடையாள அட்டை இன்றி நாம் வெளியில் செல்ல முடியாது. அப்படி நாம் சென்றால் நாம் நிறுத்தப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்படலாம் என அவரது வருங்கால கணவர் தெரிவித்தார். நகரத்தில் உள்ள பல டசின் சோதனைச் சாவடிகளில் என்ன நடைபெறுகின்றது என்பதையும் அவர் விளக்கிக் கூறினார்.

எங்கு நீங்கள் தங்கியுள்ளீர்கள், உங்களது முகவரி என்ன? விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறீர்களா போன்ற கேள்விகள் எம்மிடம் கேட்கப்படும் என அந்த பெண்மணி தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் 20 வருடங்களுக்கு மேலாக அரசுடன் போர் புரிந்து வருகின்றனர். அரசு பல வருடங்களாக சிங்கள பெரும்பான்மை இனத்தவரின் கையில் தான் இருந்து வருகின்றது. அவர்கள் அங்கு உள்ள குடித்தொகையில் 75 வீதமானவர்கள்.

2001 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு மோதல்கள் காரணமாக தமிழ் மக்களின் பிரேதசங்களில் மேற்கொள்ளப்படவில்லை. எனவே இங்குள்ள தரவுகள் அண்ணளவானவை. மேலும் வெளிநாடுகளுக்கு சென்ற சில நூறாயிரம் தமிழ் மக்களும் இந்த எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

பல காலமாக இடம்பெற்று வரும் போர் அங்குள்ள சமூகங்களுக்கு இடையிலான வேற்றுமைகளை அதிகரித்துள்ளது. இருதரப்பும் குற்றம் சுமத்தப்படுகின்றனர். எனினும் சிங்கள மக்களை கொண்டுள்ள அரசானது சிங்கள மொழியையும், பௌத்த மதத்தையும் முதன்மைப்படுத்தி ஏனைய இனங்களையும், மதங்களையும் சிறுமைப்படுத்தி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஆளும் அரசின், அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அதிகாரப் பகிர்வு தொடர்பான தனது தீர்வுத் திட்டத்தை மே மாதம் சமர்ப்பித்திருந்தார். அதிலும் பௌத்த மதம் முதன்மைப்படுத்தப்பட்டு இருந்தது. முஸ்லிம், கிறிஸ்தவ சமயங்களும் அங்கு புறக்கணிக்கப்பட்டுள்ளன.

வீதியோர காவலரண்களில் நடத்தப்படும் விசாரணைகளில் தாம் பாரபட்சமாக நடத்தப்படுவதாகவும், நீண்ட நேரம் தடுத்து வைக்கப்படுவதாகவும், சுயமாகவே விடுதலைப் புலிகளின் அனுதாபிகள் என சந்தேகிக்கப்படுவதாகவும் தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் குண்டுவெடிப்புக்களை தொடர்ந்து கொழும்பு நகருக்கு அருகில் வாழும் தமிழ் மக்கள் சுற்றிவளைக்கப்பட்டு படையினரால் கைது செய்யப்படுகின்றனர். தாம் பெருமளவில் கைது செய்யப்படுவதாக தமிழ் மக்கள் முறைப்பாடுகள் செய்துள்ளனர். தமிழ் இனம் என்பதனால் தாம் இலகுவாக கைது செய்யப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நிலைமை 1980 மற்றும் 1990 ஆண்டுகளுக்கு மீண்டும் செல்வது போல உள்ளது. காலாச்சார பாகுபாடுகள் ஒரே மாதிரியானவை என கொழும்பில் உள்ள மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தைச் சேர்ந்த தமிழரான பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்று வரும் கடத்தல்கள், காணாமல் போதல், படுகொலைகள் போன்றவற்றில் தமிழ் மக்கள் தான் பிரதான இலக்கு. இது தொடர்பாக இருதரப்பின் மீதும் குற்றங்கள் சுமத்தப்படுகின்றன.

இலங்கையில் இடம்பெற்று வரும் மோசமான மனித உரிமை மீறல்களை அடுத்து அதற்கான மில்லியன் டொலர் உதவிகளை இந்த மாதம் பிரித்தானியா இடைநிறுத்தியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் துணை இராணுவக் குழுக்கள் படையினருக்கு உதவி வருவதாக ஆய்வாளர்களால் தெரிவித்துள்ளனர். எனினும் அவற்றை கட்டுப்படுத்துமாறு அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் அரசை கேட்டுள்ளனர்.

தமது செல்வாக்குகளை அதிகரிப்பதற்கு விடுதலைப் புலிகள் போர்நிறுத்தத்தை பயன்படுத்தி உள்ளதாக தனது பெயரை குறிப்பிட விரும்பாத தமிழ் அரசியல்வாதி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மகிந்த, கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார், விடுதலைப் புலிகளின் படைபலத்தை அழிப்பதாக கூறிக்கொண்டு அவரது அரசு பெருமளவு பணத்தை பாதுகாப்புச் செலவீனங்களுக்கு ஒதுக்கி வருகின்றது. இது அனைத்துலக சமூகத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இனப்போர் மிகவும் மோசமடைந்து வருகின்றது. அரசு, இராணுவ வழிகளில் அதனை தீர்க்க முற்பட்டுள்ளது. அது நிலமையை மேலும் மோசமாக்கி உள்ளது என மனித உரிமை செயற்பாட்டாளரும் வழக்கறிஞருமான நீலகண்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

படையில் உள்ளவர்கள் அனைவரும் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்கள். பல சந்தர்ப்பங்களில் வடக்கு - கிழக்கில் உள்ள தமிழ் மக்களுடன் அவர்கள் தொடர்பாடல்களை மேற்கொள்ள முடியாது உள்ளது. இது பிரிவினையையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிச்சயிக்கப்பட்ட தம்பதியினரைப்போல பல தமிழ் மக்கள் கொழும்பில் வெளியில் செல்வதை இரவில் தவிர்க்கின்றனர். ஊரடங்குச் சட்டம் அமுலில் அற்ற போதும் அவர்கள் செல்வதில்லை. கொழும்பில் உள்ள இந்து ஆலயத்தின் மதகுரு நாட்டின் நிலை தொடர்பாக வெளியாட்களுடன் பேசுவதற்கு அஞ்சுகிறார்.

பல தமிழ் மக்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர், எனவே விடுதலைப் புலிகளுக்கான நிதியின் பெரும்பகுதி வெளிநாடுகளில் இருந்து கிடைப்பது தற்செயலானது அல்ல.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை சிங்கள அரசும், சிங்கள மக்களும் புரிந்து கொள்ளாதது பெரும் அவலமானது என்று சிவத்தம்பி தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் பிரச்சனையின் வெளிப்பாடே தவிர அதற்கான காரணமல்ல. அவர்களை வெளியேற்றுவதன் மூலம் காரணத்தை அகற்ற முடியாது என அவர் மேலும் தெரிவித்தார்.

தமது எதிர்காலத்தை நோக்கியுள்ள இந்த தமிழ் தம்பதிகள் முதலில் அங்கு இருந்து வெளியேற முயற்சிக்கின்றனர். நான் இங்கு இருக்க விரும்பவில்லை, நான் இந்த இடத்தை வெறுக்கிறேன், இந்த அரசாங்கத்தை வெறுக்கிறேன் என்று அவர்கள் தெரிவித்துள்தாக ரொய்ட்டர்சின் செய்தி ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=31983

http://www.reuters.com

Edited by priyan_eelam

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.