Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கே தொடங்கினோம்? எங்கே நிற்கின்றோம்? – சில குறிப்புக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

எங்கே தொடங்கினோம்? எங்கே நிற்கின்றோம்? – சில குறிப்புக்கள்

August 9, 2020
  • பிரான்சிலிருந்து கரிகாலன்

புலத்திலிருந்து பார்க்கும் போது இலங்கைத்தீவின் தமிழர் அரசியல் வரலாறு விசித்திரமானதொரு யதார்தங்களுடன் சுழல்வது போன்று தெரிகின்றது. யாழ்ப்பாணத்தில் அங்கயன் ‘அமோக வெற்றி’, மட்டக்களப்பில் பிள்ளையான் ‘வெற்றி’ என்கின்ற விசித்திரமான செய்திகள் தமிழ்தேசியம் பேசும் அரசியல் அதன் தாய்நிலங்களில் மூச்சிழந்துவிட்டது போன்றதொரு தோற்றத்தினைத் தருகின்றது. மறுபுறம், தமிழ்தேசியம் பேசிப் பேசியே அதனை சாகடிக்கின்றனர் என குற்றஞ்சாட்டப்பட்ட சம்பந்தரும், சுமந்திரனும் தேர்தலில் வெற்றி பெற்றவர்களாகிவிட்டனர். புலிகளின் வீழ்ச்சியின் பின்னான பத்தாண்டுகளும் தமிழ்தேசிய அரசியல் மட்டுமே பேசிய குமார்பொன்னம்பலம் தரப்பும், அந்தப் பாதையின் அண்மைய இணைவான விக்கினேஸ்வரன் தரப்பும் இந்த விசித்திரமான புயலில் சிக்குண்டு ஒன்று அல்லது இரண்டு ஆசனங்களுடன் தப்பிப் பிழைத்துள்ளன. டக்ளஸ் மற்றும் தமிழ்தேசிய அரசியலை நிராகரித்த முஸ்லீம் தலைமைகள் அங்கும் இங்குமாக வெற்றிபெற்றுள்ளன. இந்த முடிவுகள் சுட்டிக்காட்டும் சமூக அரசியல் யதார்த்தம் என்ன?

tamil_potical-leders-1024x684.jpgவடக்குக்கிழக்கினை தாய்நிலமாகக் கொண்டு தேசிய சுயநிர்ணய உரிமை என்கின்ற சர்வதேச நியதிகளுக்குட்பட்டு தன்னைத்தானே ஆட்சிசெய்யும் சனநாயக உரிமைகேட்டு போராடியதொரு மக்கள் திரள் சிங்கள தேசியவாத அரசியல்கட்சிகளுக்கும், அதன் பாதுகாப்பு அமைப்புக்களுக்கும் முகவர்களாக செயற்படுவோர்களை வெற்றிபெற வைத்தமை எவ்வகையான அரசியல் யாதர்த்தம்?. சுமார் மூன்று தசாப்தகால தமிழர் வரலாற்றின் அடையாளமாகவும், முகமாகவும் நின்ற விடுதலை இயக்கத்தினை பொதுத்தளத்தில் சிறுமைப்படுத்தியவாறு போலியாக தமிழ் தேசியம் பேசிய சம்பந்தரும், சுமந்திரனும் வென்றமையின் யாதர்த்தம் என்ன?. பத்தாண்டுகாலமாக புலிகள் முன்னிறுத்திய தேசிய சுயநிர்ணய உரிமை கோட்பாட்டின் நீட்சியாக வடக்குக் கிழக்கினை தமிழர் தேசமாகவும், அது இலங்கைத்தீவின் இறைமையை சிங்கள தேசத்துடன் இணைந்து பதிர்ந்து வாழும் தீர்வு வேண்டும் என்று பேசி வந்தவர்காளால் மக்கள் எண்ணங்களிலோ, மக்களின் கனவுகளிலோ தாக்கம் செய்ய முடியாமை என்ன வகையான யதார்த்தம்?.

 

தமிழர் விடுதலைப்போர் அடிப்படையில் ஒரு சனநாயகத்திற்கான அறைகூவல். காலனித்துவத்திற்கு முற்பட்ட காலம் தொட்டு தொடர்நிலப்பரப்பில், பொது மொழி மற்றும் பண்பாட்டு வாழ்வுடன் வாழ்ந்துவந்த ஒருமக்கள் திரள் ஒரு தேசிய இனமாகவும் அதன் தொடர்ச்சியாகத் தம்மை தனித்துவமான தேசமாகவும், தங்களைத்தாங்கள் ஆளும் உரிமை கொண்ட இறைமை உள்ளவர்களாகவும் கருதுவது இன்றைய சனநாயக மற்றும் சர்வதேச சட்டங்களுக்குட்பட்ட விவகாரமாகும். ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் ஐம்பதிற்கு ஐம்பது தந்தை செல்வாவின் தனியரசு கோரிக்கையாகி, 77 தேர்தலின் மூலம் சனநாயகவழியில் மக்கள் ஏற்றுக்கொண்ட அரசியல் நிலைப்பாடாகியது. அதுவே தலைவர் பிரபாகரன் தீர்க்கமுடன் முன்னெடுத்த ஆயுதம் தரித்த விடுதலைப் போராக விரிந்தது. அந்த விடுதலைப் போர் பல யதார்த்தங்களைப் பிரசவித்தது. வலுச்சமநிலையை தமிழ் – சிங்கள தேசங்களுக்கு இடையே உருவாக்கி வந்தது. நடைமுறை அரசினை நிறுவியது. புலத்தில் அல்லது சர்வதேச பரப்பில் அந்த வலுச்சமநிலையையும், நடைமுறை அரசினையும் ஏற்றுநிற்கும் உலகளாவிய தமிழ்சமூகத்தினை ஒன்றுதிரட்டியது. தனித்து ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல பல்வேறு நாடுகளினை சேர்ந்த தமிழர்களும் பிரபாகரனின் முகத்தினை தமது முகமாகவே கருதி நேசித்து ஒன்றுதிரண்டனர்.

 

ஆயினும் புவிசார் அரசியலில் கோரமுகமும், சமகால உலகின் பாதுகாப்புசார் கோட்பாடுகளின் விரிவாக்கமும் இணைந்து நடத்திய போரில் தமிழர் தேசத்தின் வலுச்சமநிலை தகர்ந்து, நடைமுறை அரசு உடைந்து, ஆயுதப்போராட்டம் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. தர்க்கரீதியாக இந்த ஆயுதங்கள் மௌனித்தது, ஆனால் தேசியம் மீதான பிடிப்பும், அதற்கு இனம் கொடுத்த விலையும் நீடித்தவொரு அரணை தமிழர் தேசத்திற்கு ஏற்படுத்தித் தந்திருத்தல் வேண்டும்.

 

அந்தக்கனவிலிருந்து பார்க்கும் போது அங்கயன்களின் வெற்றியும், பிள்ளையான்களின் வெற்றியும் முரணான செய்திகளாகும். சிங்கள தேசியவாத அரசுவின் முகவரான அங்கயனால் வெற்றிபெற முடிகிறது. முன்பு டக்ளஸ் தனித்தவொரு ஆயுதம் தரித்த கட்சியினை ஈழத்தின் பெயரில் வைத்து முன்னெடுத்த அரசியலை எதுவித குழப்பமும் இல்லாமல் அங்கயன் வெளிப்படையாக முன்வைத்து வாக்குக்களை பெற்றிருகின்றார் என்பதை எவ்வாறு அரசியல் மொழியில் சொல்வது? தமிழ் மக்கள் துரோகமிழைத்துவிட்டார்கள் என்பது சனநாயக விரோதமான புரிதலாகும். மக்கள்தான் தேசத்தின் ஆன்மா என்பதே தேசம் என்பதன் செழுமையான புரிதலாகும். எனவே மக்களை துரோகிகளாக்குவதும், மக்களில் பிழைகாண்பதும் சரியான அணுகுமுறையல்ல.

 

மறுபுறம், புலிகளுக்குப் பின்னான தசாப்தம் முழுவதும் பலரும் தமிழ்தேசியம் பேசியும் கூட ஏன் மக்களை அணிதிரட்ட முடியவில்லை அல்லது பிரபாகரன் அணிதிரட்டிய மக்கள் திரளை ஏன் வழிநடத்த முடியவில்லை?

இந்த கேள்வியிலிருந்து தான் தேடலை ஆரம்பிக்க முடியும்.

தமிழ் மக்கள் முன்னெடுத்த கோரிக்கையின் நியாயத்தினை எந்தவொரு சர்வதேச சக்திகளும் பிழையான அடிப்டையிலானது என்று முரண்படவில்லை. அதாவது, தமிழ் மக்களின் தாயகம் மற்றும் தன்னாட்சி கோரிக்கைகள் நியாயமற்றது என்கின்ற வாதங்கள் சர்வதேசரீதியாக எழவில்லை. மாறாக, அதன் புவிசார் அரசியலில் இடம்பெற்றுவரும் மோதல்களில் தமிழர்களின் நிலைப்பாடு பலவிதமாக மொழிபெயர்க்கப்பட்டது. இந்தியா தனித்த தமிழீழம் என்பதை இலங்கை தீவினை தான் கையாள்வதற்கான கருவியொன்று இழக்கப்படும் அபாயமாகவே பார்க்கின்றது. மேற்கும் சீனாவும் தத்தமது கோணத்தில் தமிழர் கோரிக்கையை பார்த்து வந்தன. இந்தப் புரிதலுடன் புலிகளுக்குப் பின்னான காலத்து தமிழர் தலைமை தமிழர் அரசியலை அணுகவில்லை. ஏனெனில் சம்பந்தர் தலைமையில் தமிழர் அரசியல் பரப்பினை கைவசப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தமிழர் விடுதலைப் போரின் நீட்சியாக தமது அரசியல் இருக்க வேண்டும் என்ற தீர்க்கதரிசனமோ, உறுதிப்பாடோ இருக்கவில்லை. சம்பந்தர் வெறும் எதிர் வினையாற்றும் வாய்ச்சவாடல் தலைவராகவே இருந்தார். மாவை சேனாதிராஜாவோ அல்லது பிற தமிழரசுக் கட்சித் தலைவர்களோ சம்பந்தரை மீறிச் செயற்பட முயலவில்லை. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூட்டமைப்பினை விட்டு வெளியேறி சுமந்திரன் போன்றதொரு போராட்டப் பாரம்பரியத்தினை சாராதவர்களுக்கான வாய்ப்புக்களை வழங்கிவிட்டு, தமிழ் தேசிய அரசியலை கூட்டமைப்புக்கு எதிரான கட்சி அரசியலாக்கிவிட்டார்.

 

கூட்டமைப்பு அல்லது மக்களின் முன் எடுபடக்கூடிய பெரியதொரு சக்தி புலிகளின் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்ட அரசியலுக்கு எதிரான முகாமில் நிறுத்தப்பட்டது. சம்பந்தரும், அவரை தாங்கி நிற்கும் பிராந்திய சக்திகளுக்கும் இதுவொரு மிகச்சிறப்பான வாய்ப்பாகும். மெல்ல மெல்ல தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் அடிப்படையான கோரிக்கைளை கஜேந்திரகுமாரின் கோரிக்கைளாக்கிவிட்டு மலிவான, பலவீனமான நாளாந்தம் எதிர்வினையாற்றும் சொல்லாடல்களுக்குள் தன்னை தொலைத்தது.

கஜேந்திரகுமார் தலைமையிலான அணியோ தமக்குத் தாமே சூடிக்கொண்ட தமிழ்தேசியத்தின் காவலர்கள் என்ற சொல்லாடலை நிஐத்தில், மண்ணில் நிலைநிறுத்த முடியாது தத்தளித்தனர். அவர்கள் முன்னெடுத்த தமிழ் தேசிய போராட்ட அரசியலை கட்டியெழுப்பவில்லை. மனிதாபிமான இடைவெளிகளுக்குள் சென்று செயற்பட்டது. சர்வதேச விசாரணைகளுக்காக ஜெனிவாவிற்கு வந்துசெல்லும் இவர்களால், தமிழ் மக்களின் மனங்களில் கொடுங்குற்றங்கள் பற்றிய பிரஞ்ஞையை ஏற்படுத்த முடியவில்லை. அவர்கள் வெறுமனே மறுமுனையில் நின்று எதிர் வினையாற்றும் வாய்ச்சவாடல்காரார்களாக தங்களை நிலைநிறுத்தினர். அவர்கள் நம்பியிருந்த புலம்பெயர்ந்த தமிழர்களின் அரசியல் எழுச்சியென்பது அவர்களது புலம்பெயர் நாட்டு அரசியல் சகாக்களின் கைகளில் சிக்குண்டு சின்னபின்னப்படுத்தப்பட்ட போது அவர்கள் தமது அரசியலை மீள்பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்க வேண்டும். இந்த இரு வகையான தமிழ்தேசிய அரசியல் வாய்ப் பேச்சுக்களிடையே சிங்கள அரசும், கட்சிகளும், பிராந்தி சக்தியும் காய்களை ‘சிறப்பாக’ நகர்த்தியது. நேற்றைய போரில் காட்டிக்கொடுப்பவர்கள், கொலையாளிகள், துரோகிகளாக பேசப்பட்டவர்களை இன்றைய அரசியலில் மக்களின் நாளாந்த பிரச்சனைகளுக்கான தீர்வு வழங்குபவர்களாக்கியது. இயற்கை தலைமுறைகளை உருவாக்குகின்றது. அவற்றிற்கு கல்வி, வேலைவாய்ப்பு, வசதிகள் தேவைப்படும் என்ற இயங்கியலை எதிர்த்தரப்பு சரியாகக் கையாண்டது. அதன் விளைவாக மெல்லமெல்ல மாற்று வழிகளும் ஏற்றுக்கொள்ளத் தக்க வழியாகிவிட்டது. அதன் விளைவே இன்று அங்கயன்களின் எழுச்சியாகும்.

இந்த வீழ்ச்சியினை தமிழ்தேசிய அரசியலை பேசிய சக்திகளால் தடுத்திருக்க முடியுமா?. பிரபாகரனின் வழிநின்று சிந்திக்கும் வீரியம் இருந்திருப்பின் தடுத்திருக்க முடியும். ஆயுதம் தரித்தல்ல. வலுவான முடிவுகளையும், எதிர்தரப்பின் வியூகங்களைப் புரிந்தும், புறச்சூழல்களின் வீரியத்தினை புரிந்தும் செயற்பட்டிருந்தால் இதற்கான வாய்ப்புக்கள் வலுவாகவே இருந்தன. பிரபாகரனின் அரசியல் எப்போதும் முன்னெடுக்கும் அரசியலாகவே இருந்தமையால்தான் அதனால் பலதடைகளை மீறி நீண்டகாலம் பயணிக்க முடிந்தது என பல ஆய்வாளர்கள் கூறுவர். அவர் எதிர்வினையாற்றும் அரசியலை முன்னெடுப்பதில்லை. ஏனெனில் எதிர்வினையாற்றும் போது ஆட்ட விதிகளை எதிர்தரப்புத்தான் தீர்தமானிக்கும் என்கின்ற வியூகவழி சிந்தனையே அது.

தமிழ்தேசியம் பேசிய சக்திகள் பிளவுண்டமை முதலாவது பெரும் தவறு. கஜேந்திரகுமாரின் வெளியேற்றம் தமிழ்தேசிய அரசியலை வெறும் கூட்டமைப்பு, தமிழ்காங்கிரஸ் மோதலாக்கிவிட்டது. கூட்டமைப்புக்குள் இருந்துதான் கஜேந்திரகுமாரும் பிற சக்திகளும் அரசியலை கையாண்டிருக்க வேண்டும். ஒப்பீட்டளவில் பலவீனமான கஜேந்திரகுமார் தரப்பு தேசம் எனும் வலுவான அரசியலை கையில் எடுத்து அதனை சரியாக மக்களிடம் சேர்க்கத் தவறிவிட்டனர். அதனை எவ்வாறு மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கலாம்? வெறும் எதிர்தரப்பு அனுமதித்த இடைவெளிகளுக்குள் நின்றவாறு மனிதாபிமான விவகாரங்களையும், மனித நேய விவகாரங்களையும் பேசுவதன் மூலம் தேசம் எனும் கருத்துருவாக்கம் மக்களை பற்றிப் பிடிக்குமா?. சம்பந்தர் தலைமையில் முன்வைக்கப்படும் அரசியலை எதிர்ப்பது மட்டுமே எமது வேலை என்கின்ற பிம்பத்தினை தெரிந்தோ தெரியாமலோ கஜேந்திரகுமார் தரப்பு கட்டியெழுப்பிவிட்டது. பத்தாண்டு காலம் தன்னை தேர்தல் அரசியலுக்கு வெளியே வைத்திருந்தவாறு கூட ஒரு அரசியல் இயக்கத்தினை தேசம் என்ற சிந்தனையின் அடிப்டையில் கஜேந்திரகுமார் தரப்பு கட்டியெழுப்ப முயன்றிருக்கலாம். தாயகத்தில் தான் பற்றவைத்த அரசியல் அறிவு தீயை புலத்தில் பிரகாசித்திருக்க வைத்திருக்கலாம். மாறக, புலத்தில் பிரகாசமாக அரசியல் அறிவுச்சுடர் எரிவதாகக் கற்பனை செய்தவாறு கோத்தபாயவினை போர்க்குற்ற விசாரணைக்குட்படுத்துவதே முதன்மை பணியாக தமிழ்தேசிய அரசியல் கருதிக்கொண்டது. அது எதிர்தரப்பின் வலைக்குள் வலுவாக தமிழர் அரசியலை வீழ்த்திவிட்டது.

நாளாந்த பிரச்சனைகளையும் தீர்க்காமல், நாளைய வழியையும் பேசாமல் நேற்றைய வலியை மட்டும் பேசி தேர்தலை வென்று தமிழ்தேசிய அரசியலைக் காப்பாற்றலாம் என்ற புரிதல் மிகவும் பாமரத்தனமாகிவிட்டது. முள்ளிவாய்க்காலில் புலிகளையும், ஆயுதம் தரித்த விடுதலைப் போரினையும் தோற்கடித்த சக்திகள் அதற்குப் பின்னான வேலைத்திட்டத்தினையும் அக்காலகட்டத்திலேயே தீர்மானித்து விட்டனர். தாயகத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பினை அதன் தார்மீகப் பொறுப்பான தமிழ்தேச அரசியல் தீயை காவிச்செல்ல வேண்டிய கட்டாயத்திலிருந்து விடுவித்த பின்னர் சுமந்திரன் அதன் தலைவராகிவிடுவார் என்ற நிலைவரை பலவீனப்படுத்திவிட்டது. தமிழ்தேச அரசியலை பேசப்புறப்பட்டவர்களை ஐநா மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர்களுக்கு அறிக்கை அனுப்புவர்களாக மாற்றி ஒரு அரச சார்பற்ற நிறுவனத்தின் நிலைக்கு அவர்களை தள்ளிவிட்டனர். ஐநா சபையும் அதன் உப அமைப்புக்களும் முப்பது வருடங்கள் நீடித் தமிழர் போரிற்கு வழங்கிய நீதியினை பார்த்தவாது அரசுகள் நடத்தும் பேரநாடகங்களுக்குள் அகப்படாது காய்நகர்த்தும் வலுவான தலைமை தமிழர்களுக்கு வாய்க்கப்பெறவில்லை.

இந்த கூட்டுத்தோல்வியின் விளைவே இன்றைய தேர்தல் முடிவுகளாகும். இனிவரும் காலங்களில் இந்த தோல்வியினை கற்று தமிழ் அரசியல் தலைமைகள் தங்கள் தகைமைகளை வளர்த்திடல் வேண்டும்.

 

http://thinakkural.lk/article/61263

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் சிறிது காலத்தில் அனைத்தும் இழந்து இலங்கைத்தீவில் வாழும் ஒரு கலப்பினமாக தமிழினம் மாறிவிடும். அக்காலத்தில் தமிழகத்தில் பிரபல்யமாகும் ஒரு சுப்பர்ஸ்ரார் லெவலில் உள்ள நடிகர் இலங்கையில் கடத்தல், சண்டித்தனத்தில் ஈடுபடும்  தாதா கோஸ்டியினால் காணாமல்போன தனது மனைவியைத் தேடுகிறமாதிரி ஒரு படம் எடுப்பார்.

புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்த எழுபது எண்பது தொண்ணூறுகளில் வாழ்ந்த கிழடு கட்டைகள் எல்லாம் லங்கசிறி மரண அறிவித்தலில் இடம்பெற்றுக் காலக்கிரமத்தில் காணாமல்போய்விடுவார்கள். அவர்களில் வழித்தோன்றல்களில் யாராவது சம்மர் வக்கேசனுக்கு சிறீ லங்காவின் கடற்கரைப்பகுதிக்கு உல்லாசப்பயணம் செய்வார்கள் அவர்களது முண்ணோர்கள் வாழ்ந்த இடம் நோர்த் சைட்டில இருக்கு ஆனால் அங்க நான் போகவில்லை காரணம் அங்க ஒரே வயலன்ஸ் என் ஐரோப்பிய மொழியில் கூறுவார். இப்ப இருக்கும் புங்குடுதீவு முழுமையாகத் தென்னிலங்கையால் அபகரிக்கபட்டு  அமெரிக்காவின் நியூயோர்க்கில் இருக்கும் மன் கட்டன் சிற்றி மாதிரி மாறியிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, Elugnajiru said:

இன்னும் சிறிது காலத்தில் அனைத்தும் இழந்து இலங்கைத்தீவில் வாழும் ஒரு கலப்பினமாக தமிழினம் மாறிவிடும். அக்காலத்தில் தமிழகத்தில் பிரபல்யமாகும் ஒரு சுப்பர்ஸ்ரார் லெவலில் உள்ள நடிகர் இலங்கையில் கடத்தல், சண்டித்தனத்தில் ஈடுபடும்  தாதா கோஸ்டியினால் காணாமல்போன தனது மனைவியைத் தேடுகிறமாதிரி ஒரு படம் எடுப்பார்.

புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்த எழுபது எண்பது தொண்ணூறுகளில் வாழ்ந்த கிழடு கட்டைகள் எல்லாம் லங்கசிறி மரண அறிவித்தலில் இடம்பெற்றுக் காலக்கிரமத்தில் காணாமல்போய்விடுவார்கள். அவர்களில் வழித்தோன்றல்களில் யாராவது சம்மர் வக்கேசனுக்கு சிறீ லங்காவின் கடற்கரைப்பகுதிக்கு உல்லாசப்பயணம் செய்வார்கள் அவர்களது முண்ணோர்கள் வாழ்ந்த இடம் நோர்த் சைட்டில இருக்கு ஆனால் அங்க நான் போகவில்லை காரணம் அங்க ஒரே வயலன்ஸ் என் ஐரோப்பிய மொழியில் கூறுவார். இப்ப இருக்கும் புங்குடுதீவு முழுமையாகத் தென்னிலங்கையால் அபகரிக்கபட்டு  அமெரிக்காவின் நியூயோர்க்கில் இருக்கும் மன் கட்டன் சிற்றி மாதிரி மாறியிருக்கும்.

நடக்காது வரலாற்றை,  திரும்பி பாருங்கள் எத்தனை படையெடுப்புகளாலும் தமிழ் இனத்தை அழிக்க முடியவில்லை👍, தமிழனாக விழித்தெழுவார்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Elugnajiru said:

இன்னும் சிறிது காலத்தில் அனைத்தும் இழந்து இலங்கைத்தீவில் வாழும் ஒரு கலப்பினமாக தமிழினம் மாறிவிடும். அக்காலத்தில் தமிழகத்தில் பிரபல்யமாகும் ஒரு சுப்பர்ஸ்ரார் லெவலில் உள்ள நடிகர் இலங்கையில் கடத்தல், சண்டித்தனத்தில் ஈடுபடும்  தாதா கோஸ்டியினால் காணாமல்போன தனது மனைவியைத் தேடுகிறமாதிரி ஒரு படம் எடுப்பார்.

புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்த எழுபது எண்பது தொண்ணூறுகளில் வாழ்ந்த கிழடு கட்டைகள் எல்லாம் லங்கசிறி மரண அறிவித்தலில் இடம்பெற்றுக் காலக்கிரமத்தில் காணாமல்போய்விடுவார்கள். அவர்களில் வழித்தோன்றல்களில் யாராவது சம்மர் வக்கேசனுக்கு சிறீ லங்காவின் கடற்கரைப்பகுதிக்கு உல்லாசப்பயணம் செய்வார்கள் அவர்களது முண்ணோர்கள் வாழ்ந்த இடம் நோர்த் சைட்டில இருக்கு ஆனால் அங்க நான் போகவில்லை காரணம் அங்க ஒரே வயலன்ஸ் என் ஐரோப்பிய மொழியில் கூறுவார். இப்ப இருக்கும் புங்குடுதீவு முழுமையாகத் தென்னிலங்கையால் அபகரிக்கபட்டு  அமெரிக்காவின் நியூயோர்க்கில் இருக்கும் மன் கட்டன் சிற்றி மாதிரி மாறியிருக்கும்.

கட்டுரை சொல்லும் அரசியல் யதார்த்தம் உறைத்துள்ளதாக உங்களின் எதிர்வினை சொல்கின்றது.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, உடையார் said:

நடக்காது வரலாற்றை,  திரும்பி பாருங்கள் எத்தனை படையெடுப்புகளாலும் தமிழ் இனத்தை அழிக்க முடியவில்லை👍, தமிழனாக விழித்தெழுவார்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு🙏

உடையார் கனவு காண்பதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கு. 

தமிழ்நாட்டில் தமிழ் அழிந்து எப்பவோ ஆகிவிட்டது. இலங்கைத்தீவிலும் கூடியவிரைல் அது நடக்கும் ஆங்கிலப்பாடசாலைகள் இப்பவே தோன்றத்தொடங்கிவிட்டன. அவை எப்படியிருக்கின்றன என்றால் எண்பதுகளின் இறுதிப்பகுதியில் நான் தமிழ் நாட்டில் கண்டதுபோல் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில ஆங்கிலப்பாடசாலைகள் இருந்தன 2003 ல் நான் போகும்போது அவைகள் மிகப்பெரிய கல்விநிறுவனங்கள் 

இந்தமுறை நடைபெற்ற தேர்தலில் உடுப்பிட்டித் தொகுதியில் சிங்களக்கட்சிக்கு அதிக வாக்குகள் வீழ்ந்திருந்தது அத்தொகுதி தேசியத்தலைவரது 

(இனிமேல் பிரபாகரன் என ஒருமையில் கூறினாலும் யாரும் கோவிக்கமாட்டார்கள் என்றாலும் மனம் வருகுதில்லை காரணம் போராட்டத்தில் எந்தவிதப் பங்களிப்பும் இல்லாமல் போராட்டத்தைச் சாக்காகவைத்து அசைலம் அடிச்சு அதுக்குத் தகுதி இல்லை என மனிதாபிமான ரீதியில் இருந்துவிட்டுப்போ என வெளிநாட்டில் செற்றிலாகை வேலை வெட்டி இல்லாது விட்டாலும் இரண்டுவேளை சாம்ம்பிடக்கூடியவாறு சோசல்காசில வாழலாம் மிஞ்சுகிறகாசில சீட்டும் பிடிக்கலாம் அதுகெல்லாம் அந்தப்புண்ணியவாந்தானே காரணம்)

கிராமமும் உள்ளடக்கம். காரணம் வடக்கில் நடக்கும் அனைத்துக் குற்றச்சம்பவங்களுக்கும் தலைமையிடம் உடுப்பிட்டித்தொகுதிதான்.

யாழ் குடாநாட்டில் ஒரு காலத்தில் பொருளாதார ரீதியில் பின் தங்கிய சிறுபான்மையினர் மேல்சாதியினரால் பாதிக்கப்பட்டிருந்ததற்கு இப்போது ஒரு வித பழிவாங்கள் நடவடிக்கையாகவும் இப்படியான அரசியல் ரீதியான வெளிப்பாடுகளாகும். இதை நாங்கள் மேலோட்டமாகப் பார்த்தால் புரிந்துகொள்வது கடினம் புலம்பெயர் தேசங்களிலும் இந்தப்பிரச்சனை புரையோடிக்கிடக்கின்றது. இதனை தென்னிலங்கை அரசியல்வாதிகளது தமிழர் பகுதி ஏஜண்டுகள் துல்லியமாக நாடிபிடித்து அதைத் தங்களுக்குச் சாதகமாக்குகிறார்கள்.

இதச் சொல்வதில் யாழில் பலர் என்னைக் குறை விளங்கலாம் "துப்பினால் துடைச்சுக்குவேன்" 

இங்க நாங்கள் யாழ் களத்தில் நண்பேன்டா பாணியில் குத்தி முறிகிறோம் ஆனால் நியத்தில் "இதுக்குத்தான் நாங்கள் எங்கட ஆக்களோட பழகிறதில்லை " எனும் வசனத்துக்குச் சொந்தக்காரர்கள் நாங்கள்.

எல்லாத்தையும் கூட்டிக்கழித்துப்பாருங்கள் கணக்குச் சரியாக வரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.