Jump to content

தமிழ் ஏன் உலகச் செம்மொழிகளில் ஒன்று? அதன் சிறப்பும் தொன்மையும் என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
  • அ.தா.பாலசுப்ரமணியன்
  • பிபிசி தமிழ்

தமிழ் ஒரு செம்மொழி என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை 2004ம் ஆண்டு இந்திய அரசு வெளியிட்டபோது தமிழ் அறிஞர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் ஒரு நூற்றாண்டு காலக் கனவு நிறைவேறியது.

இந்தியாவில் சம்ஸ்கிருதம் செம்மொழியாக கருதப்பட்டு அரசின் பல சலுகைகளை அனுபவித்து வந்தாலும், இந்தியாவில் அதிகாரபூர்வமாக செம்மொழி என அறிவிக்கப்பட்ட முதல் மொழி தமிழ்தான்.

தமிழை செம்மொழியாக அறிவிக்கும் முடிவை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் அமைச்சரவை 2004 செப்டம்பர் 17ம் தேதி எடுத்தது. அந்த முடிவை மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி அறிவித்தார். இந்தக் கோரிக்கையை பலகாலம் வலியுறுத்தி வென்ற அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி, பல காலமாக இதற்காக வாதாடிய பரிதிமாற்கலைஞர் போன்ற அறிஞர்களுக்கு இந்த வெற்றியை அர்ப்பணிப்பதாக அறிவித்தார்.

அதாவது இந்தக் கோரிக்கை நூற்றாண்டு பழையது என்பதை அவர் சூசகமாக தெரியப்படுத்தினார்.

மு.கருணாநிதி

பட மூலாதாரம், Getty Images

 
படக்குறிப்பு,

மு.கருணாநிதி

ஆனால், தமிழை செம்மொழி என்று அறிவித்த மத்திய அரசு, அத்தோடு நிற்கவில்லை. செம்மொழி எவை என்பதற்கான ஒரு இலக்கணத்தையும் வகுத்து, அதன்கீழ் தகுதி பெறும் மொழிகள் செம்மொழிப்பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் அறிவித்தது.

தமிழை செம்மொழி ஆக்கவேண்டும் என்பது திமுக இடம் பெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்டத்திலேயே இருந்தது. அந்த அரசின் முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே ஜூன் 6-ம் தேதி தமிழ் செம்மொழிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த நாள் செம்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது.

அதன் அடிப்படையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் சம்ஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா ஆகிய மொழிகளும் செம்மொழிப் பட்டியலில் சேர்க்கப்பட்டன. மராத்தியை செம்மொழி என அறிவிப்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.

இந்தியாவில் சம்ஸ்கிருதம் தவிர, மூலச் சிறப்புள்ள ஒரே மொழி மரபு, தமிழுடையதுதான் என்ற அடிப்படையில் செம்மொழித் தகுதியை கோரி வந்த அறிஞர்களுக்கு இப்படி செம்மொழிப் பட்டியல் பெருத்துவருவது ஏமாற்றத்தைத் தந்தது.

இந்திய அரசின் பட்டியல் எப்படி இருந்தாலும், லத்தீன், கீரேக்கம், ஹீப்ரூ, சம்ஸ்கிருதம், சீனம் ஆகிய உலகச் செம்மொழிகளின் வரிசையில் தமிழ் உள்ளது என்று அறிஞர்கள் பலர் வாதிட்டு வருகிறார்கள். உலகின் செம்மொழிகள் எவை என்பதற்கு இலக்கணம் என்ன? தமிழ் எப்படி அந்த வரிசையில் உள்ளது?

உலகச் செம்மொழிகளில் ஒன்று

உலகப் புகழ் பெற்ற மொழியியல் அறிஞரும், லத்தீன், கீரேக்கம், தமிழ், சம்ஸ்கிருதம், ரஷ்யன் உள்ளிட்ட பல உலக மொழிகளில் ஆழ்ந்த புலமை மிக்கவருமான ஜார்ஜ் எல். ஹார்ட் 2000-ம் ஆண்டு தமிழின் செம்மொழித் தகுதி பற்றி ஓர் அறிக்கை வெளியிட்டார். தமிழ் செம்மொழிக் கோரிக்கைக்கான உந்து விசையாக இருந்தது இந்த அறிக்கை.

தமிழ் உலகச் செம்மொழிகளின் வரிசையில் இருக்கும் ஒரு மொழி என அந்த அறிக்கையில் வாதிட்டார் ஹார்ட். இன்னொன்றையும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் தமிழுக்கு செம்மொழித் தகுதியை தர மறுப்பதற்கு அரசியல் காரணம் மட்டுமே இருக்க முடியும். தமிழுக்கு இந்த தகுதியை அளித்தால் பிற மொழிகளும் அதே கோரிக்கையை முன்வைக்கலாம் என்பதே அந்தக் காரணம் என்று அவர் தீர்க்க தரிசனத்தோடு குறிப்பிட்டிருந்தார். தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல இந்திய மொழிகள் பற்றி ஆழ்ந்த அறிவு மிக்கவரான ஹார்ட், இத்தகைய இந்திய மொழிகள் நிச்சயமாக வளம் மிக்க இலக்கியத்தைக் கொண்டிருப்பவை என்றாலும் அவற்றை செம்மொழி என்று கூற இயலாது என்று சொல்லியிருந்தார்.

உலகச் செம்மொழிகள் எவை?

"உலக அளவில் எவை எவை செம்மொழி என்பதற்கான அதிகாரபூர்வ பட்டியல் ஏதும் இல்லை. ஐ.நா. கல்வி, அறிவியல் பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ சில மொழிகளை செம்மொழிகளாக அங்கீகரித்திருப்பதாக அவ்வப்போது தவறாக குறிப்பிடப்படுகிறது. மறைந்த கல்வியாளர் வா.செ.குழந்தைசாமி தி ஹிந்துவில் 2010ல் எழுதிய கட்டுரை ஒன்றில் அப்படி ஒரு பட்டியல் இல்லை என யுனெஸ்கோ தமக்கு எழுதிய கடிதத்தில் உறுதி செய்திருப்பதாக குறிப்பிட்டிருந்தார்.

செவ்வியல் இலக்கியங்களைக் கொண்டிருக்கிற மொழிகளே செம்மொழிகளாக அடையாளம் காணப்பட்டன என்று வா.செ.குழந்தைசாமி தம் கட்டுரையில் வாதிட்டார்.

உலகச் செம்மொழிகள் எவை என்பதற்கு அப்படி ஓர் அதிகாரபூர்வ பட்டியல் இல்லை என்பதை மொழியியல் அறிஞர் மறைமலை இலக்குவனார் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்துகிறார்.

'இது எழுதப்படாத சட்டம்' போன்றது என்கிறார் பேராசிரியர் மறைமலை.

ஐரோப்பியர்கள்தான் செம்மொழிகள் என சிலவற்றை அடையாளப்படுத்தினார்கள். லத்தீனும், கிரேக்கமுமே அவர்களுக்கு செம்மொழிகள். காரணம் லத்தீன் இல்லாமல் அவர்களால் தங்கள் பழைய சமய இலக்கியங்களைப் படிக்க முடியாது. நவீன அறிவியலில் நிறைய கிரேக்கச் சொற்கள் உண்டு. இதனால், ஐரோப்பியர்கள் முன்பெல்லாம் தங்கள் தாய்மொழி தவிர இந்த இரண்டு செம்மொழிகளைப் படிப்பார்கள்.

பிறகுதான் ஹீப்ருவும், சம்ஸ்கிருதமும், சீனமும் பலராலும் செம்மொழியாகப் பார்க்கப்பட்டன. இது அறிஞர்கள் எப்படிப் பார்க்கிறார்கள் என்பதைப் பொறுத்ததுதான். ஜார்ஜ் எல்.ஹார்ட் போன்ற அறிஞர்கள் தமிழை இந்த வரிசையில் வைத்துப் பார்க்கிறார்கள். அதற்குக் காரணம், தமிழின் தொன்மையும், தனித்துவமான மரபும், இலக்கிய வளமும்தான் என்கிறார் மறைமலை.

தமிழ் ஏன் உலகச் செம்மொழி? ஜார்ஜ் எல்.ஹார்ட் என்ன சொல்கிறார்?

11.4.2000 அன்று ஹார்ட் தாம் எழுதிய அந்த அறிக்கையில் தமிழ் ஏன் செம்மொழி என்பதற்கான காரணங்களை இப்படி அடுக்குகிறார்:

"முதலாவதாக, தமிழ் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க பழமை உடையது. நவீன இந்திய மொழிகளின் இலக்கியங்களைவிட தமிழ் (இலக்கியம்) ஆயிரம் ஆண்டுகள் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. பழைய தமிழ் கல்வெட்டுகளைக் கொண்டு ஆராயும்போது, தமிழின் பழமையான நூலான தொல்காப்பியத்தின் பகுதிகள் கி.மு. 200-ம் ஆண்டினைச் சேர்ந்தவை என்பது தெரியவரும். தமிழின் மிகச் சிறந்த படைப்புகளான சங்கப் பாடல் தொகுப்புகள், பத்துப்பாட்டு போன்றவை கி.பி. முதல், இரண்டாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை. இவைதான் இந்தியாவில் எழுதப்பட்ட மிகத் தொன்மையான மதச்சார்பற்ற கவிதைகள். காளிதாசரின் படைப்புகளைவிட இவை 200 ஆண்டுகள் மூத்தவை".

"இரண்டாவதாக, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, ஆனால் சம்ஸ்கிருத்ததில் இருந்து தருவிக்கப்படாத ஒரே இலக்கிய மரபு தமிழினுடையதுதான். சம்ஸ்கிருதத்தின் செல்வாக்கு தெற்கில் வலிமையாக மாறும் முன்பே தமிழிலக்கியங்கள் எழுந்துவிட்டன. எனவே சம்ஸ்கிருதம் உள்ளிட்ட பிற இந்திய மொழிகளின் உள்ளடக்கத்தில் இருந்து பண்பில் வேறுபட்ட இலக்கியங்கள் இவை. இந்த தமிழ் இலக்கியங்களுக்கு சொந்தமாக கவிதைக் (செய்யுள்) கோட்பாடுகள், சொந்தமாக இலக்கண மரபு, சொந்தமாக அழகியல், எல்லாவற்றுக்கும் மேலாக மிகவும் தனித்துவமான மிகப்பெரிய இலக்கியத் தொகுப்பு உண்டு. சம்ஸ்கிருதம் மற்றும் பிற இந்திய மொழிகளில் இருப்பவற்றில் இருந்து முற்றிலும் வேறுபட்ட இந்திய உணர்வியலைக் காட்டுகிறவையாக இவை இருக்கின்றன. தமக்கென சொந்தமாக மிக வளமையான, பரந்த அறிவு மரபை இவை கொண்டிருக்கின்றன".

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை.

பட மூலாதாரம், Getty Images

 
படக்குறிப்பு,

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை.

"மூன்றாவதாக, சம்ஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன், சீனம், பாரசீகம், அரபி மொழிகளின் மாபெரும் இலக்கியங்களின் வரிசையில் வைக்கத்தக்கவை தமிழின் செவ்வியல் இலக்கியங்கள். இந்த இலக்கியங்களின் நுட்பமும், ஆழமும், விதவிதமான செயற்பரப்பும், உலகு தழுவிய தன்மையும், உலகின் மாபெரும் செவ்வியல் மரபுகள், இலக்கியங்களில் ஒன்றாக தமிழை ஆக்குகின்றன. (நவீனத்துக்கு முந்திய இந்திய இலக்கியங்களில் விளிம்பு நிலையை விரிவாக கையாள்கிற ஒரே இலக்கியம் தமிழிலக்கியமே).

உலகின் மிகச்சிறந்த அறநெறி இலக்கியங்களில் ஒன்று திருக்குறள் என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால், பலதரப்பட்ட, பெரும் தமிழ் செவ்வியல் இலக்கியங்களில் திருக்குறளும் ஒன்று, அவ்வளவுதான். இந்த மாபெரும் இலக்கியத்தால் கண்டெடுக்கப்படாத, ஒளி பாய்ச்சப்படாத மனித இருத்தலின் பக்கம் எதுவுமே இல்லை".

"கடைசியாக, நவீன இந்தியப் பண்பாடு, மரபு குறித்த முதன்மையான, தன்னிச்சையான தரவு மூலங்களில் தமிழும் ஒன்று. சம்ஸ்கிருத கவிதை மரபின் மீது தெற்கத்திய மரபின் செல்வாக்கு குறித்து நான் விரிவாக எழுதியிருக்கிறேன்.

சங்கப்பாடல்களில் தொடங்கி புனித தமிழ் இந்துவிய இலக்கியங்கள் நவீன இந்துவியத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்தன என்பதும் முக்கியமானது.

அவற்றின் கருத்துகள் பாகவத புராணத்திலும், தெலுங்கு, கன்னடம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளின் பிற பிரதிகளிலும் எடுத்துக்கொள்ளப்பட்டன.

வேதங்களைப் போலவே புனிதமாக கருதப்படும், திருப்பதி போன்ற தென்னிந்திய வைணவக் கோயில்களில் வேதங்களோடு சேர்த்து ஓதப்படும் தமிழ்ப் பாடல்கள் உள்ளன. நவீன இந்தோ ஆரிய மொழிகளுக்கு சம்ஸ்கிருதம் மூலமாக இருப்பதைப் போலவே நவீன தமிழுக்கும், மலையாளத்துக்கும் செவ்வியல் தமிழே மூல மொழி" என்று குறிப்பிடுகிறார் ஹார்ட்.

தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டு.

பட மூலாதாரம், Getty Images

 
படக்குறிப்பு,

தஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டு.

அத்துடன் செவ்வியல் மொழிகளுக்கான இலக்கணம் ஒன்றை வரையறுத்து அதனுடன் தமிழைப் பொருத்திப் பார்க்கிறார் ஹார்ட்.

"செவ்வியல் மொழி என்று அழைக்கப்பட வேண்டுமானால் ஒரு மொழி பல கூறுகளைக் கொண்டிருக்கவேண்டும். அது பழமையானதாக இருக்கவேண்டும். ஒரு தனித்துவமான மரபைக் கொண்டிருக்கவேண்டும். அது தானே எழுந்த மரபாக இருக்கவேண்டும், வேறு மரபில் இருந்து கிளைத்திருக்கக்கூடாது. பெரிய, வளமான பண்டைய இலக்கியத் திரட்சியைக் கொண்டிருக்கவேண்டும். இந்தியாவின் பிற நவீன மொழிகளைப் போல இல்லாமல் தமிழ் இந்த எல்லா கூறுகளையும் கொண்டுள்ளது. தமிழ் மிகப் பழமையானது. (லத்தீன் அளவுக்கு இது பழமையானது. அரபியைவிட பழமையானது. முழுவதும் தன்னிச்சையான மரபாக எழுந்தது. சம்ஸ்கிருதத்தில் இருந்தோ, பிற மொழிகளில் இருந்தோ கிட்டத்தட்ட எந்த செல்வாக்கும் இல்லாமலே இது உருவானது. தமிழின் பண்டைய இலக்கியங்கள் விவரிக்க முடியாத அளவுக்கு பரந்தவை, வளமானவை.

தமிழ் செம்மொழி என்று கூறுவதற்கு நான் இது போன்ற கட்டுரையை எழுத வேண்டியிருப்பதே விந்தையானது" என்று குறிப்பிடும் ஹார்ட் உலகின் தலைசிறந்த செவ்வியல் மொழிகளில் ஒன்று தமிழ் என்பது, இந்த துறையைத் தெரிந்தவர்களுக்கு மிக வெளிப்படையாகத் தெரியும் என்றும் கூறுகிறார்.

பேராசிரியர் மறைமலை கேட்டுக்கொண்டதற்கு இணங்கவே இந்தக் கட்டுரையை எழுதியதாக தமது கட்டுரையை தொடங்கியிருப்பார் ஹார்ட்.

இதன் பின்னணியை மறைமலையிடமே கேட்டோம்.

ஹார்ட் ஏன் இந்தக் கட்டுரையை எழுதினார்?

"பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் திமுக இடம் பெற்றிருந்தபோதே தமிழை செம்மொழியாக அறிவிக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. ஆனால், வழக்கொழிந்த மொழிகளைத்தான் செம்மொழி என்பார்கள், எனவே தமிழ் செம்மொழி அல்ல என்று கூறி இந்தக் கோரிக்கையை மத்திய அமைச்சர் முரளி மனோஹர் ஜோஷி நிராகரித்தார்" என்று குறிப்பிட்டார் மறைமலை.

அப்போது தமிழ்நாடு அரசின், தமிழ் வளர்ச்சித் துறையின் செயலாளராக இருந்த அவ்வை நடராசனும், செத்த மொழியைத்தான் செம்மொழி என்பார்கள் என்று குறிப்பிட்டு இந்த கோப்பை மூடினார் என்று தமிழறிஞர்கள் பலர் குறிப்பிடுகிறார்கள்.

மறைமலை இலக்குவனார்.

பட மூலாதாரம், மறைமலை இலக்குவனார்/FB

 
படக்குறிப்பு,

மறைமலை இலக்குவனார்.

தமிழறிஞர் அவ்வை துரைசாமிப்பிள்ளை மகனான நடராசன் இப்படிச் செய்தது பலருக்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது என்று குறிப்புகள் உள்ளன.

இதைக் குறிப்பிட்டு கேட்டபோது, "முதல்வர் கருணாநிதியிடம் இந்த பிரச்சனையை கொண்டு சென்றபோது அவர் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் ம.ராசேந்திரனை அழைத்து இதற்கொரு வழிகாணும்படி கேட்டுக்கொண்டார். ம.ராசேந்திரன் என்னிடம் விவாதித்தார். வெளிநாட்டு மொழியியல் அறிஞர்கள் யாராவது இதைப் பற்றி எழுதினால் மட்டுமே இந்த வாதத்தை உடைக்க முடியும் என்று நான் வலியுறுத்தினேன்" என்கிறார் மறைமலை.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியரான ஹார்ட் விடுப்பில் சென்றிருந்தபோது 1997-98 காலகட்டத்தில் ஓராண்டு தமிழியல் துறையில் சிறப்பு வருகைதரு பேராசிரியராகப் பணி புரிந்தேன். ஹார்ட் உலகின் மிகப்பெரிய பன்மொழி அறிஞர். லத்தீன், கிரேக்கம், சம்ஸ்கிருதம் போன்ற பல செம்மொழிகளில் புலமை மிக்கவர். சம்ஸ்கிருத அறிஞராகத் தொடங்கி பிறகு தமிழறிஞர் ஆனவர். எனவே அவர் இது குறித்துப் பேசினால் நடுநிலையாக இருக்கும் என்று கருதி அவரிடம் தமிழின் செம்மொழித் தகுதி பற்றி கட்டுரை எழுதும்படி கேட்டுக்கொண்டேன்" என்று ஹார்ட் கடிதத்தின் பின்னணியை விளக்கினார் மறைமலை.

தமிழின் தொன்மை

தமிழ்நாட்டில், 12ம் வகுப்பு ஆங்கிலப் பாடநூலில் ஹார்ட்டின் கடிதம் ஒரு பாடமாக இடம் பெற்றிருந்தது. ஆனால், அந்தக் கடிதத்தோடு சேர்த்து அப்பாடத்தில் இடம் பெற்றிருந்த ஒரு குறிப்பில் தமிழின் தொன்மை கிமு 300 என்றும், சஸ்கிருதத்தின் தொன்மை கிமு 2000 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது தமிழ்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்தப் பாடம் மொத்தமும் நீக்கப்பட்டது. இது பற்றிக் குறிப்பிட்ட மறைமலை, ஹார்ட் தமது கடிதத்தில் தமிழ் மொழியின் தொன்மைக்கு காலம் எதையும் நிர்ணயிக்கவில்லை. அவர் குறிப்பிட்டதெல்லாம் இலக்கியத் தொன்மை பற்றிதான் என்றார்.

பறையும் நடனமும்

பட மூலாதாரம், Getty Images

 

தமிழ் மொழியின் தொன்மை பற்றி அவரிடம் கேட்டபோது, தமிழ் நிச்சயமாக சமஸ்கிருதத்தை விட தொன்மையானது. சமரசத்துக்கு வருவதென்றால்கூட அது நிச்சயம் சம்ஸ்கிருதம் அளவுக்கு தொன்மையானது என்று குறிப்பிட்ட மறைமலை, ரிக்வேதத்தில் தமிழ்ச் சொற்கள் இருப்பதை சுனிதி குமார் சாட்டர்ஜி, டி. பர்ரோ & எம்.பி.எமனோ போன்ற பல அறிஞர்கள் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள் என்கிறார் அவர்.

தமிழின் தனித்தன்மை

உலகின் எந்த தொன்மையான மொழியிலும் இல்லாதபடி தமிழின் பண்டைய செவ்வியல் இலக்கியங்கள் மதம் சாராதவை, கடவுளைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாதவை, வாழ்க்கையைப் பேசுகிறவை என்கிறார் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் தொல்லியல் துறைத் தலைவராக இருந்த ஆய்வாளர் மே.து.ராசுக்குமார்.

மே.து.ரா.

பட மூலாதாரம், Rajukumar Mettur Duraisamy/FB

 
படக்குறிப்பு,

மே.து.ராசுக்குமார்

தொன்மையான தமிழ் இலக்கியங்கள் முதல் மத்தியகால இலக்கியங்கள் வரை எங்கும் இறைவன் உலகைப் படைத்ததாக கூறுவது தமிழில் இல்லை. உலகம் எப்போதும் இருப்பதாக கூறுவதுதான் தமிழின் தனித்துவ மரபு என்கிறார் ராசுக்குமார். "மண்ணில் நல்லவண்ணம் வாழலாம்" என்பதே தமிழ் இலக்கியங்கள் கூறும் சிந்தனைப் போக்கு. பண்டைய தமிழ் இலக்கியங்கள் மறு பிறவி குறித்தெல்லாம் பேசவில்லை என்கிறார் இவர்.

தொன்மையைப் பொருத்தவரை, கீழடி தமிழின் தொன்மையை பின்னோக்கி கொண்டு செல்கிறது என்று கூறும் ராசுக்குமார், பழனி அருகே உள்ள பொருந்தல் அகழ்வாய்வில் தமிழ் எழுத்துகள் பொறிக்கப்பட்ட மட்பாண்டத்தில், விளைவிக்கப்பட்ட நெல்லும் கண்டெடுக்கப்பட்டதை முக்கியமானதாக கருதுகிறார். இந்த மட்பாண்டத்தின், நெல்லின் காலம் 2,450 ஆண்டுகள் முந்தியது என்று தற்போது வரையறுக்கப்பட்டுள்ளது.

நன்செய் சாகுபடியின் காலமே இதுவென்றால், புன்செய் பயிர்கள் தோன்றி வளர்ந்த பிறகே நன்செய் தோன்றியிருக்கும். எனவே, இந்த வேளாண்மையோடு சேர்த்து தமிழின் காலத்தை பின்னோக்கி நகர்த்தினால் தமிழின் காலம் மேலும் ஒரு ஆயிரம் ஆண்டுகள் பின்னோக்கிச் செல்லும் என்கிறார் ராசுக்குமார். அதாவது, குறைந்தது 3,500 ஆண்டுகள் என்பது இவர் கருத்து.

தமிழில் உலகை அறிய முயலும் தத்துவங்கள் இல்லை. அடிமைப்படுத்தல் இருந்த இடங்களில்தான் இந்த சமூக ஏற்பாட்டை விதியாக கட்டமைக்க தத்துவங்கள் தேவைப்பட்டன. ஆனால், தமிழ்ச் சமூகத்தில் இப்படிப்பட்ட அடிமைப்படுத்தல் இல்லாததால் தத்துவங்களும் தேவைப்படாமல் போயிருக்கலாம் என்கிறார் ராசுக்குமார்.

தமிழகத்தில் அடிமை முறை இருந்ததைப் பற்றிய குறிப்புகளை பலர் எடுத்துக்காட்டியுள்ளார்களே என்று கேட்டபோது, ஒருவருக்கு ஒருவர் தனிப்பட்ட முறையில் அடிமைகளாக ஏதோ ஒரு காரணத்தால் இருந்திருக்கலாம். ஆனால், மேற்கத்திய நாடுகளில் இருந்ததைப் போல அடிமை உற்பத்தி முறை இங்கே இருந்ததில்லை என்கிறார் அவர்.

அறிவைப் பெறுதல் பற்றியும், அறநெறிகளைப் பற்றியும் திருக்குறள் விரிவாகப் பேசுகிறதே இதெல்லாம் தத்துவத்தின் கூறு இல்லையா என்று கேட்டபோது, "வேட்டையாடி, காய் கனி திரட்டி வாழ்ந்த சமூகம், வேளாண் சமூகமாக நிலைபெறும்போது பழைய நெறிகளுக்கும், புதிய நெறிகளுக்கும் இடையில் முரண்பாடு தோன்றியிருக்கும். அந்தப் புதிய நெறிகளை கோட்பாடு ஆக்கியதே திருக்குறள் போன்ற அற நூல்களின் பணியாக இருந்தது" என்கிறார் ராசுக்குமார். ஆனால், இவை எதிலும் உலகம் படைக்கப்பட்டதாக ஒரு குறிப்பும் இல்லை. இவ்வுலக வாழ்வை மேம்படுத்துவதே நோக்கமாக இருந்தது என்பது தமிழின் தனித்துவமான மரபு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறார் ராசுக்குமார்.

வள்ளுவர் குறிப்பிடுகிற வரைவின் மகளிர் என்ற தொடரை பலரும் பரத்தையர் என்று புரிந்துகொள்வது தவறானது. வேட்டையாடி, காய்கனி திரட்டி வாழ்ந்த சமூகத்தில் திருமணம் என்ற நிறுவனமயப்பட்ட ஏற்பாடு இல்லை. வேளாண்மை உருவான நிலையில் திருமணம் என்ற நிறுவன ஏற்பாடு உருவாகிறது. இந்நிலையில், புதிதாக உருவான திருமணம் என்ற நிறுவப்பட்ட வரைமுறைக்குள் வராமல், கூடி வாழும் பழைய முறையிலேயே இருந்த பெண்களைத்தான் வள்ளுவர் அப்படிக் குறிப்பிடுகிறார். அவர்கள் பரத்தையர் இல்லை என்று கூறும் ராசுக்குமார், சிலப்பதிகாரம் வரையில் தமிழில் நால்வருண முறையும் இல்லை என்றும் குறிப்பிடுகிறார்.

மொத்தத்தில், அடிமை உற்பத்தி முறை இல்லாத, நால்வருணப் பிரிவினை இல்லாத, பரத்தையர் முறை இல்லாத, உலகைப் படைத்த கடவுள் குறித்த கருத்துகள் இல்லாத சமூகமாக பண்டைய தமிழ்ச் சமூகம் இருந்தது. இதுவே தமிழின் இலக்கியங்களிலும் பிரதிபலித்தது. இது பண்டைய உலக மொழிகளில் காணமுடியாத தனித்துவமான போக்கு. தனித்துவமான இத்தகைய மரபை பிரதிபலிப்பதால் தமிழ் உலகின் தனித்துவமான செம்மொழி என்பது ராசுக்குமாரின் கருத்து.https://www.bbc.com/tamil/india-53771932

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தீலிபன் அருந்ததி  தம்பதியருக்கு இனிய திருமண நல்வாழ்த்துகள்   வாழ்க ❤️ வளத்துடன்
    • திரு.திருமதி திலீபன் இருவருக்கும் இனிய திருமண நல் வாழத்துக்கள்.
    • இந்த அமைப்பு இன்னும் தற்பொழுது உள்ள (கரண்ட் ரென்ட்) நிலைமைகளை அறிந்து கொள்ள வில்லை என நினைக்கிறேன் '''' எங்கன்ட ஆட்களும் எலன் மாஸ்க் உடன் தொடர்பில் இருக்கினம் ...யூ ரியூப்பில் தான் நாங்கள் பிரச்சாரம் செய்கின்றோம் நாலு மைக் இருந்தால் போதும் அத்துடன் சந்தையில் நாலு சனத்திட்ட பேட்டி கண்டு அதை போட்டா காணும் என்ற நிலையில் இருக்கிறோம்...  அந்த காலத்திலயே வேலியில் நின்று விடுப்பு கேட்டு வாக்கு போடுற சன‌ம் .....இப்ப குசினிக்குள்ள விடுப்பு வருகிறது சும்மாவா இருப்பினம் .... இனி வரும் காலங்களில் வாக்குசாவடிக்கு போகாமல் அடிச்ச ஆட்டிறைச்சி கறி சமைச்சு கொண்டு வீட்டிலிருந்து வொட்டு போடும் நிலை வந்தாலும் வரும் 
    • தமிழ்த் தேசியம் உயிர்ப்புடன் இருக்க, முதலில்,  தமிழனின் குடிப்பரம்பல்  வடக்கு கிழக்கில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அது உந்தப் புலி வால்களுக்குப் புரிவதில்லை.  ☹️
    • தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்திவைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம். இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்துபோய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப்படுகின்றோம்.   என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி வேப்பையடி 15 ஆம் கிராமம் பகுதியில் விக்னேஸ்வரன் ஆதரவணி தலைமையில் நாவிதன்வெளி கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பு நாவிதன்வெளி பிரதேச ஆலயங்களின் நிர்வாகிகள் விளையாட்டு கழகங்கள் கட்சியின் பிரதேச மற்றும் கிராமிய குழுக்களின் ஒருமித்த ஒழுங்குபடுத்தலில் ஆசிரியர் மு.விக்னேஸ்வரனை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, ஜேவிபி அரசுடன் இணைந்து அமைச்சரவையில் அங்கம் வைப்பது பற்றி சுமந்திரன் சாணக்கியனும் இன்று சொல்கிறார்கள்.இவ்வாறான தடம் புரள்வு இவர்களுக்கு எவ்வாறு வந்தது. இந்த மக்களை அழித்த ஒரு கட்சி அது. இவ்வாறு இருந்த அக்கட்சி எம்மைப் பார்த்து முன்னாள் ஆயுதக் குழுக்கள் என அவர்கள் கூறுகின்றார்கள். அமைச்சரவையில் ஆயுதக் குழுவை சேர்க்க மாட்டார்களாம் சேர்க்கவும் விடமாட்டார்களாம்.நான் முன்பே கூறியிருக்கின்றேன் அரசியலில் நிரந்தரம் ஒன்றுமில்லை அதாவது நண்பனும் இல்லை எதிரியும் இல்லை.அதே போன்று இவர்களுக்கு சொல்ல வேண்டிய விடயம் ஒன்று இருக்கிறது. நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்தி வைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம்.இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்து போய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப் படுகின்றோம். ஆகவே எமது அன்பு மக்களே இவர்கள் காலத்துக்கு காலம் தேவைக் கேற்றால் போல் பல்வேறு புரளிகளை எழுப்புவார்கள். இது தவிர பிள்ளையானுக்கும் ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கும் சம்பந்தமாம். சாணக்கியன் சொல்கின்றார். ஒரு இஸ்லாமிய மகன் சொல்லியிருந்தால் பரவாயில்லை. உங்களுக்கு தெரியும்.தெமட்டகொட என்ற இடத்தில் உள்ள ஒரு தொழிலதிபர் ஒருவர் ஒரு ஹோட்டலில் இறந்த இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சம்பந்தப்பட்டிருக்கின்றார். அவர் கடந்த கால பாராளுமன்ற தேர்தலில் ஜேவிபி கட்சி சார்பாக தேசிய பட்டியலில் இருந்திருக்கின்றார்.பெயரை மறந்துவிட்டேன்.அவர் ஒரு பெரிய வியாபாரி.அவரது இரு மகன்களும் அச்சம்பவத்தில் இறந்து விடுகின்றார்கள். இவ்வாறு இறந்தவர்களில் ஒருவரான இன்ஷாப் என்பவரின் தெமடகொட வீட்டுக்கு காவல் அதிகாரிகள் வருகின்ற போது அந்த வீட்டில் இருந்த பெண்மணி இரண்டு குழந்தைகளோடு தனது வயிற்றில் உள்ள மற்றுமொரு குழந்தையுடன் வெடித்து சிதறுகிறார். எவ்வாறு இந்த சம்பவம் நடக்கின்றது. நன்றாக படித்த ஒரு பொறியியலாளரின் மனைவி . பணத்தில் உயர்வான குடும்பம். இவ்வாறு இறந்த போகின்றது என்றால் இந்த குடும்பத்தினரை பிள்ளையான் மூளைச்சலவை செய்வாரா. விடுதலைப் புலிகளுக்கு கரும்புலியாகி வெடிப்பதற்கு 30 ஆண்டுகள் சென்றிருக்கின்றது.இந்த முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் போர்க் என்பவர் மாங்குளத்தில் முதலாவது கரும்புலி தாக்குதல் மேற்கொண்டார்கள். இவ்விடத்தில் இந்த விடயத்தை ஏன் சொல்கின்றேன் . இவ்வாறான வரலாறுகள் தெரியாத சாணக்கியன் போன்றவர்கள் பசப்பு வார்த்தைகளை தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள். அதற்கு ஊதுகுழலாக எம்மோடு இருந்த நாங்கள் நம்பி இருந்த மருதமுனை பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஒரு அமைப்பின் தலைவர் பத்மநாபாவுடன் இந்தியாவில் மரணித்த ஒருவரின் மகன் ஆசாத் மௌலானா இருந்தார். அவரை நம்பிக்கையானவர் என்று நான் நன்றாக பார்த்தேன். இந்த உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் பின்னர் அவர் உயிர் வாழ்வதற்காக இலங்கையில் சில பெண்களோடு பிரச்சனை என்று வெளிநாட்டிற்கு சென்றார். அவர் அங்கு சென்று அரசியல் தஞ்சம் பெறுவதற்கு எடுத்த ஆயுதம் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பிள்ளையானுக்கு தொடர்பு உள்ளது என ஒரு பொய்யை உருவாக்கினார். அதனை சர்வதேச ரீதியாக இயங்கும் சனல் 4 என்ற ஒரு ஊடகமும் என்னை அரசியல் ரீதியாக அழிக்க துடிக்கின்ற சில சக்திகளும் விடயத்தை தூக்கிப் பிடித்தார்கள். இதனால் சனல் 4 என்ற ஊடகம் இதனால் பிரபல்யம் அடைந்தது.மிக அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கன்வன்வில என்பவர் சொல்லியிருக்கின்றார். ஜனாதிபதி ஆணைகுழு அறிக்கை சொல்லி இருக்கின்றது. எல்லாம் பச்சப்பொய். இதனை விசாரிக்க முடியாது . அதே போன்று குறித்து சம்பவத்தை வெளியிட்ட சனல் 4 என்ற ஊடகம் அந்த செய்தியினை முற்றாக நீக்கி இருக்கின்றது. இவ்வாறான விடயத்தை யாருமே வெளியில் சொல்வது கிடையாது.ஏனென்றால் அரசியலுக்காக சகல பிரச்சினைகளை எல்லாம் இழுத்து விடுவார்கள். கோடீஸ்வரன் என்பார்கள் துவக்கு வைத்திருந்தவர் என்பார்கள்.   பிள்ளையானை சிறைச்சாலையில் அடைக்கப்படுவார் என்பார்கள். மட்டக்களப்பில் சில அம்மாமார் கூறியிருக்கிறார்கள். பிள்ளையான் உங்களை சிறையில் அடைத்திருக்கின்ற போது தான் வாக்குகள் நாங்கள் இட்டு வெளியே எடுத்து இருக்கின்றோம். இனியாவது அடைக்கப் போகிறார்கள்? ஏனெனில் உளவியல் ரீதியாக எம்மை யாழ்ப்பாண சக்திகளும் சவால் விடுகின்றோம் என்பதற்காககிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காத சில அரசியல்வாதிகளும் எம்மை அழிக்க நினைக்கின்றார்கள். அந்த சக்திகள் எல்லாம் எமது மக்களுக்கு எதிரானவர்கள். நாம் இந்த மக்களுக்கு உண்மையாக நேர்மையாக 16 வயதில் இருந்து இன்று 50 வயது வரைக்கும் எமது பணிகளை சிறப்பாக செய்து வந்திருக்கின்றோம் அதில் நாங்கள் எங்கும் பிழை விட்டது கிடையாது. யாருக்கும் அநியாயம் செய்தது கிடையாது எவரையும் ஏமாற்றியது கிடையாது ஆனாலும் இந்த அரசியல் சூழலில் எதிர்பார்ப்புடன் இருக்கின்ற மக்களுக்கு ஆங்காங்கே இருக்கின்ற சிறு சிறு பிழைகளை வைத்துக்கொண்டு பெரிதாக உருவாக்குகின்றார்கள். ஆனால் இக்காலத்தில் பொறுப்பு மிக்க அரசியல் கட்சி ஒன்றை தலைவராக எமது பணி கிழக்கு மாகாணம் பூராகவும் விஸ்தரிக்கப்படும். அதில் ஒரு அங்கமாக இந்த தேர்தலை நான் பார்க்கின்றேன். இந்த தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வெற்றி என்பது கிழக்கு தமிழர்களின் வெற்றியாகும். ஆதித்தமிழன் உறுதியாக வாழ வேண்டும் என்றால் நாங்கள் எல்லோரும் ஒன்று பட்டு கிழக்கு மாகாணத்திற்கான தனித்துவமான அரசியலை முன்னெடுக்கின்ற தமிழ் மக்கள் விடுதலை புலிக் கட்சியை பாதுகாத்து தூக்கிப் பிடித்து அதனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் அந்த ஆணையிலிருந்து அதிகாரத்துடன் நாங்கள் பேரம் பேச வேண்டும். அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை அம்பாறை வாழ் மக்கள் எமக்கு அளியுங்கள் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.   https://akkinikkunchu.com/?p=298338   முதலாவது கரும்புலி கப்டன் மில்லர் என்று தெரியாத அளவுக்கு பிள்ளையான் இருக்கின்றார்!
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.