Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் தீர்வுத் திட்டத்தில் ஆயத்தமின்றி பேசுவதற்கு தயாரென கூறினால் போதுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் தீர்வுத் திட்டத்தில் ஆயத்தமின்றி பேசுவதற்கு தயாரென கூறினால் போதுமா?

[05 - June - 2007]

* கம்போடியா, பாகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் சுட்டிக் காட்டியிருக்கும் விடயம்

இது மனிதனால் மனிதனுக்கு இழைத்தாகிய ஈனம். இன்று எம்முன் உள்ளது. ஒரு அழிந்து போன நாடு.நாம் மறக்க முடியாத சில பாரதூரமான படிப்பினைகள் மற்றும் மிக முக்கியமானதொரு கேள்வி;

சிங்களவர்களும் தமிழர்களும் பிரிந்து செல்லும் கட்டத்தினை அடைந்து விட்டார்களா? இது (1958 இனக்கலவரத்தில் தமிழர் ஆளாக்கப்பட்ட அட்டூழியங்கள் முதலியவற்றினை சித்திரித்து அன்றைய முன்னணி பத்திரிகையாளரும் சண்டே ஒப்சேவர், பத்திரிகை ஆசிரியருமாகிய ராசி. வித்தாச்சி எமெஜன்சி 58 என மகுடமிட்டு எழுதிய நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது). எவ்வாறாயினும் 18 வருடங்கள் கழிந்த பின் 1976 இல் தான் தமிழர் தரப்பில் தனிநாட்டுக் கோரிக்கை உதயமாகியது.

பின்பு "1983 கறுப்பு ஜூலை, கலவரத்தின் பின் 04.08.1983 ஆம் திகதி வாஷிங்டன் போஸ்ட் இதழில் வடிக்கப்பட்டிருந்த ஆசிரியர் தலையங்கத்தில் கூறியிருந்ததைப் பார்ப்போம். எப்போதும் போலவே அது அதிகாரம் சம்பந்தமான பிரச்சினையாகும். இலங்கையில் அதிகாரமானது சிங்கள பெரும்பான்மையினர் கையில் உள்ளது. தமிழரை ஒற்றையாட்சியின் கீழ் வாழ வேண்டுமென்பதை நியாயப்படுத்தும் விதத்தில் தமிழ் சிறுபான்மையினரை அரவணைத்து நடத்தக்கூடிய ஞானம் சிங்களவர்களிடம் உண்டா எனும் வினா எழுப்பப்பட்டிருந்தது. அது தான் போர் மூண்டதற்கான ஆரம்பகால கட்டம்.

கால் நூற்றாண்டின் பின்பு இன்று கூட அடிப்படைப் பிரச்சினையாகிய தேசிய இனப்பிரச்சினைக்கு நீதியானதொரு அரசியல் தீர்வை நோக்கி நகர்வதை விடுத்து இராணுவத் தீர்விலேயே அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது. அதே நேரத்தில் பேச்சுவார்த்தைக்குத் தயார் எனவும் பறை சாற்றுகிறது.

இதில் நம்பகத்தன்மை காணப்படவில்லை.

பேச்சுவார்த்தைக்கு பிரபாகரன் தயாரென்றால், நான் தயார் என பதவியேற்ற வேளையிலேயே கூறியதைத்தான் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சென்ற வாரம் அல்ஜசீரா செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், நான் விடுதலைப்புலிகளின் பயங்கரவாதத்திற்கு அடிபணிந்து செல் லத் தயாராயில்லை நான் தாக்கப்பட்டால் திருப்பித் தாக்குவேன். இதைத்தான் நாம் தற்போது செய்து வருகிறோம். விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்தி அரசியல் தீர்வு ஒன்றினை பலர் எதிர்பார்ப்பதைக் காட்டிலும் கூடிய விரைவில் கொண்டு வர முடியும்.

நாம் கிழக்கை மீட்டுவிட்டோம். பேச்சுவார்த்தை நடாத்துவதைத் தவிர வேறு வழியில்லை என பிரபாகரன் உணர்ந்து கொள்வார். விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கையளிக்க வேண்டுமென நாம் கூறவில்லை. ஆனால், அவர்கள் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டிருக்கக்கூடாது என ஜனாதிபதி கூறியுள்ளார்.

இராணுவத் தீர்வில் குறியாக இல்லை என்கிறார் ஜனாதிபதி

விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தாவிட்டால் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வரமாட்டார்கள் என நாம் கூறும்போது நாம் இராணுவத் தீர்வில் குறியாக இருப்பதாக அர்த்தம் கற்பிக்க தேவையில்லை. அரசியல் தீர்வை நோக்கி நகர்வதற்காகவே இராணுவ நடவடிக்கை வலியுறுத்தப்படுகிறது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில், இங்கே இருக்கின்றது இனத்துவ அல்லது மதரீதியான பிரச்சினை அல்ல. அரசாங்கத்தின் மீது சர்வதேச சமூகம் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குற்றம் சுமத்தி வருவது தவறானதாகும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளதாக அறியக்கிடக்கின்றது.

இராணுவத் தளபதியின் பார்வையில்

மறுபுறத்தில் 28.05.2007 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா வெளிநாட்டு ஊடகவியலாளர் மாநாடொன்றில் கூறியதைப் பார்ப்போம். இன்னும் ஐ ந்து அல்லது ஆறு மாதங்களில் கிழக்கில் இருந்து விடுதலைப் புலிகளை துடைத்தெறிந்து விடுவோம். வடக்கை கைப்பற்றுவது எமது நோக்கமல்ல. இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும்.அல்லாவிட்டால் யுத்தம் அடுத்த இரண்டு தசாப்தங்களுக்கு தொடரும் நிலை ஏற்படும். தமிழர்கள் ஆனந்த சங்கரி மற்றும் டக்ளஸ் தேவானந்த ஆகியோரைப் பின்பற்றி சமாதானம் வேண்டுமென்கிறார்களா அல்லது பிரபாகரனை ஆதரித்து யுத்தம் தொடர்வதை விரும்புகிறார்களா என்பதை அவர்களே தீர்மானிக்க வேண்டும். தற்போது தொப்பிகலைக் காட்டில் 300 போராளிகள் மட்டுமேயுள்ளனர். கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் ஏறத்தாழ 4000 புலிகள் இருப்பதாகக் கருதப்பட்டாலும், அவர்களெல்லாம் சிறந்த ஆற்றல் உள்ளவர்கள் அல்ல. ஆக அவர்களில் 2000 பேரை இழந்து விட்டால் புலிகள் பின்பு தலையெடுக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும். கடந்த 4 மாதங்களில் 565 விடுதலைப்புலிகளும் 45 படையினரும் கொல்லப்பட்டுள்ளனர்.இவ்வாறு இராணுவத் தளபதி கூறிவைத்தார். அரசியல் தீர்வு தொடர்பாக இராணுவத் தளபதி ஜனாதிபதியின் அதே வாசகத்தினையே நினைவு படுத்தியுள்ளதைக் காணலாம்.

அரச தரப்பில் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிபரங்களின் படி இதுவரை கொல்லப்பட்டதாகக் கூறப்படும் விடுதலைப்புலிகளின் ஒட்டு மொத்தமான எண்ணிக்கையைப் பார்த்தால் விடுதலைப்புலிகள் இயக்கம் இன்று முற்றாக அழிக்கப்பட்டிருக்கும் என அமெரிக்காவில் வெளியிடப்படும் ஜேன்ஸ் டிஃபென்ஸ் வீக்லி (Janes Defence Weekly) எனும் சஞ்சிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. " அல்ஜீரியாவில் நாம் பெருமளவு இராணுவ பலத்தோடு ஆரம்பித்தோம். ஆனால், சுதத்திரப் போராளிகளோ சிறிய எண்ணிக்கையிலே இருந்தனர். எனினும், அவர்கள் வெற்றியடைந்துவிட்டனர்."இவ்வாறு முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி ஜாக்ஸ் சிராக் அல்ஜீரியா விடுதலைப் போராட்டம் தொடர்பாக 2003 செப்டம்பரில் வழங்கிய செவ்வியொன்றில் கூறியுள்ளார். எனவே, இராணுவ ரீதியாக யாரும் எவரையும் குறைத்து மதிப்பிடாமல் அர்த்தமுள்ள அரசியல் தீர்வொன்றினை ஏற்படுத்துவதன் மூலமே நாட்டை காப்பாற்ற முடியும்.

நிற்க, "என்னைத் தாக்கினால் திருப்பித் தாக்குவேன் " என ஜனாதிபதி கூறியுள்ள அதே வேளை, வருமுன் தாக்குதல் (Pre-emptive attacks) தான் தமது செயற்திட்டமென இராணுவத்தளபதி முன்னர் அறிவித்திருந்தது வாசகர்களுக்கு ஞாபகம் இருக்கும். விடுதலைப்புலிகளை முற்றாக அழிப்பதற்கு இன்னும் 2 அல்லது 3 வருடங்கள் பிடிக்குமென பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ முன்னர் தெரிவித்திருந்தாரல்லவா? தற்போது இந்த இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்படாவிட்டால் யுத்தம் இன்னும் 2 தசாப்தங்களுக்கு தொடருமென முரண்பாடான கருத்தினையே இராணுவத் தளபதி முன்வைத்துள்ளதைக் காணலாம். ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது தீர்வுயோசனைகளை சமர்ப்பித்ததன் மூலம் அரசியல் தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துவிட்டாரெனவும் இராணுவத் தளபதி கூறியுள்ளார். இராணுவ நடவடிக்கையைப் பொறுத்தவரை ஜனாதிபதியும் இராணுவத் தளபதியும் வெவ்வேறு தந்திரோபாயங்களில் உள்ளனர் போல் தோன்றினாலும் ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா ஆகியோரைத்தானும் திருப்திப்படுத்தக்கூடிய தீர்வுத்திட்டம் மேசையில் வைக்கப்படாத நிலையில், இராணுவத் தீர்வே அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் உள்ளது என்பது மிகத்தெளிவு.

`ஜாதிக ஹெல உறுமய' (ஜே.எச்.யூ) வின் பரிதாப நிலை

`ஜாதிக ஹெல உறுமய' கட்சியினர் முன்வைத்துள்ள தீர்வுத்திட்டத்தினை ஒரு பொருட்டாக எண்ணி அதனை நாம் ஆராய வேண்டியதில்லை. முதலாவதாகச் சொன்னால், அக்கட்சியினர் குறிப்பாக பௌத்தத் துறவிகள். அரசியலில் ஈடுபட்டுக்கொண்டிக்கும் இவ் வேளையில் கௌதம புத்தர் வாழ்ந்திருந்தால் கண்ணீர் சொரிந்திருப்பார் என அண்மையில் அமைச்சர் அநுராபண்டாரநாயக்க கூறியிருந்தாரல்லவா? அவர்கள் கண்ணிருந்தும் குருடர்களாகவும் கடந்தகால வரலாற்றையோ சமகால யதார்த்தங்களையோ அவர்களால் புரிந்து கொள்ளமுடியாதிருப்பது பரிதாபமானதாகும். இந்த நாடு பிரித்தானிய ஆட்சியிலிருந்து விடுதலையடைந்துபின் முதன் முதலாக பௌத்த துறவிகள் தரப்பிலிருந்தே அரசியல் கொலைக் கலாசாரம் ஆரம்பமானது. அநுரவின் தந்தையும் அன்றைய பிரதமருமாகிய எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்காவை ரல்டுவ சோமராம தேரர் சுட்டுக்கொலை செய்ததையே நாம் இங்கு குறிப்பிடுகிறோம். அதன் பின்னணியில் பண்டாரநாயக்க அரசாங்கத்தை ஆட்டிப்படைத்தவராகிய புத்தரகித்த தேரர் இருந்ததை மறந்து விடமுடியாது.

ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் ஜனநாயகத்தை தூக்கியெறிந்து விட்டு சர்வாதிகாரி ஒருவரிடம் ஆட்சியை ஒப்படைத்தார். தனது 5 வருட ஆட்சிக் காலத்தில் ஜனநாயகத்தை மீட்டு விடுவார் என அண்மையில் கூறியதாக அறியக் கிடக்கிறது. இதுதான் வடிகட்டின முட்டாள்தனமாகும் என்பதே சற்று நாகரிகமாக வெளிநாட்டுப் பிரமுகர்கள் சுட்டிக்காட்டியிருப்பதை காண்கின்றோம். அதாவது மேதானந்த தேரரின் கருத்துத் தொடர்பாக கம்போடியா, பாகிஸ்தானைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்களாகிய கலாநிதி லாவோஸ் மொவுண்கே மற்றும் பசீர்நாத், தேரருக்கு அனுப்பிய அறிக்கையொன்றில் தமது அதிருப்தியையும் துக்கத்தையும் தெரிவித்துள்ளனர். தமது இரு நாடுகளிலும் ஜனநாயகத்தை மீட்கப்போவதாக பறைசாற்றி ஆட்சியைக் கைப்பற்றியவர்கள் கட்டவிழ்த்துவிட்ட படுகேவலமான சர்வாதிகார ஆட்சியில் அகப்பட்டிருக்கும் மக்களின் தலைவிதி இலங்கை மக்களுக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பது தமது இதய சுத்தியான விருப்பம் எனவும் அவ்விருவரும் தெரிவித்துள்ளனர்.

வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர்கள்கூட சுய சர்வாதிகாரிகளாக மாறிவருவதால் ஜனநாயகம் சீர்குலைவதுடன் நீதித்துறை மற்றும் காவல்துறை சுதந்திரத்தை இழந்து உருமாறி விடுகின்றன. இது தான் நமது பல நாடுகளில் நடந்தேறியுள்ளன. எமது நாடுகளில் நிலவும் பாரிய சாபக்கேடுகள் காரணமாக நாம் எமது மனப்பக்குவத்தை பாழாக்கிவிடாமல் வெறுப்புணர்வுகளை ஒதுக்கிவிட்டு சுத்தமாக இருத்தல் வேண்டும். இவ்வாறாகவும் அவ்விருவரும் மேதானந்த தேரருக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இத்தகைய கருத்துகளை ஆட்சியாளர் மனங்கொள்வார்களா? நாட்டின் எதிர்காலத்தில் இனிமேலாவது சற்று அக்கறை கொள்வார்களா?

தினக்குரல்

எந்தவொரு சிங்கள அரசியல்வாதியோ, இராணுவ அதிகாரியோ, பௌத்த மத்குருவோ புலிகளுக்கெதிரான கருத்துக்களை முன்வைப்பது மோட்டுச் சிங்களவனைத் திருப்திப் படுத்துவதற்காகவே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.