Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குடும்பிமலை நோக்கி முன்னேற முயன்ற படையினர் மீது புலிகள் கடும் எதிர் தாக்குதல்.

Featured Replies

குடும்பிமலை நோக்கி முன்னேற முயன்ற படையினர் மீது புலிகள் கடும் எதிர் தாக்குதல்.

இன்று காலை 5-30 மணியளவில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான குடும்பிமலை நோக்கி முன்னேற முயன்ற படையினர் மீது புலிகள் கடும் எதிர் தாக்குதல் நடத்தியதில் 16 படையினர் படுகாயமடைந்துள்ளதாக இராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளது.

Stiff resistance to SLA assault in Batticaloa, 16 troopers wounded

Sri Lankan forces launched a three pronged offensive attempting to move towards Liberation Tigers of Tamileelam (LTTE) territory in Kudumpimalai jungles in Batticaloa district since 5:30 a.m. Friday. The SL forces encountered stiff resistance from Tiger forces at the Forward Defence Line in Eera'lakku'lam, Palaamadu and Puluddumanoadai, Sri Lankan military sources in Batticaloa said. 11 Sri Lankan troopers were airlifted to Polonnaruwa hospital, 2 more were being sent from Battcaloa and another two admitted at Maha Oya hospital, medical sources said.

When contacted by TamilNet, Liberation Tigers Military Spokesman Irasiah Ilanthirayan said heavy fighting ensued with the Sri Lankan forces along the Forward Defence localities in the villages Eera'lakku'lam, Palaamadu and Puluddumanoadai.

-Tamilnet-

  • தொடங்கியவர்

தொப்பிக்கல முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் பதிலடி.

மட்டக்களப்பு படுவான்கரை தொப்பிக்கலப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினர் இன்று வெள்ளிக்கிழமை மேற்கொண்ட பாரிய முன்நகர்வு முயற்சிக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிர பதில் தாக்குதல் மேற்கொண்டு வருகின்றனர்.

பெருமெடுப்பில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் மேற்கொண்ட நகர்வுகள் விடுதலைப் புலிகளின் தாக்குதலால் கடும் சேதங்களையும் பின்னடைவுகளையும் சந்தித்துள்ளன.

மட்டக்களப்பின் படுவான்கரையின் தொப்பிக்கலப் பகுதியில் புலுட்டுமான்ஓடை-மாவடிஓடைப்பகுதியில் 4 இடங்களில் சிறிலங்கா இராணுவத்தினர் செறிவான எறிகணை வீச்சுக்களுடன் முன்நகர்வு நடவடிக்கைளை மேற்கொண்டனர்.

இதனையடுத்து இன்று காலை முதல் சிறிலங்கா இராணுவத்தினருக்கு எதிராகத் தீவிர தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதல் இன்று மாலை கடந்தும் நீடிக்கின்றது. இன்று மாலை வரை மூன்று இடங்களில் இராணுவத்தினரின் நகர்வுகள் தடுத்து நிறுத்தப்பட்டு பின்தள்ளப்பட்டுள்ளனர்.

ஒரு இடத்தில் இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதல்கள் தீவிரமாக நடக்கின்றன.

இன்றைய தாக்குதல்களில் சிறிலங்கா இராணுவத்தினர் கடுமையான சேதங்களைச் சந்தித்துள்ளனர். இராணுவத்தினரில் கொல்லப்பட்டும், காயமடைந்துமுள்ளோர் ஊர்திகளில பொலநறுவைக்கும் அம்பாறைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

-Puthinam-

மகிந்தாவின் கிழக்கு மீட்புக்கும் ஆப்பு.

300 புலிகள்தான் தொப்பிக்கலவில் இருப்பதாகவும் அவற்றில் 200 பேர் கட்டாயமாகச் சேர்க்கப்பட்ட மாணவர்கள் என்று பறைசாற்றியவர்கள் பாடம் படிக்கட்டும்.

குடும்பிமலையில் படையினருக்கு பலத்த இழப்பு: தொடருகிறது எறிகணைத் தாக்குதல்கள்

குடும்பிமலை நோக்கிய சிறீலங்காப் படையினரின் மும்முனைப் படை நகர்வுகள் விடுதலைப் புலிகளினால் பல மணி நேர உக்கிர மோதல்களின் பின்னர் முடிவுக்கு கொண்டுவருப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற மோதலில் சிறீலங்காப் படையினர் பலர் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த படைவீரர்கள் மற்றும் கொல்லப்பட்ட படையினரையும் காவிக்கொண்டு படையினர் பின்வாங்கிச் சென்றுள்ளனர். நேற்றைய மோதலில் சிறீலங்காப் படையினர் தரப்பில் 10 மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் 16க்கு மேற்பட்ட படையினரும் காயமடைந்துள்ளதாகத் தெரியவருகின்றது.

சினைப்பர் தாக்குதலில் மட்டும் 4 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இதேநேரம் காவலரண்களின் முன்னுள்ள சூனியப் பகுதியில் படையினர் சடலங்களைப் சக படையினர் இழுத்துக்கொண்டும் ஓடியுள்ளனர்.

படையினருக்கு ஏற்பட்ட இழப்புகளைப் படையினர் இருட்டடிப்புச் செய்துள்ளனர். மோதலின்போது படையினருக்கு ஏற்பட்ட இழப்புகள் காரணமாக தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்களைப் படையினர் அப்பகுதி முழுவதும் மேற்கொண்டு வருகின்றனர்.

-pathivu-

குடுப்பிமலையில் வான்வெளித் தாக்குதல்கள்: துப்பாக்கி மோதல்கள்

சிறீலங்கா விமானப் படையினரின் இரு கிபிர் விமானங்கள் குடும்பிமலைப் பகுதியில் வான்வெளித் தாக்குதலை மேற்கொண்டுள்ளன. இன்று முற்பகல் 10 மணியளவில் குடும்பிமலை வான்பரப்பினுள் நுழைந்த கிபிர் விமானங்கள் நான்கு தடவைகள் வெவ்வேறு இடங்களில் தாக்குதலை நடத்தியுள்ளன. வான்வெளித் தாக்குதலில் எதுவித சேதாரங்களும் ஏற்படவில்லை.

இதேநேரம் குடும்பிமலைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் விடுதலைப் புலிகளின் முன்னரங்க நிலைகள் மீது இன்று அதிகாலை துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் இருதரப்பினர் இடையே ஒரிரு நிமிடங்கள் மோதல்கள் இடம்பெற்றள்ளன.

பதிவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.