இதென்ன புதுக்கதை? மைத்திரியை அரியணை ஏற்றியது நாமேதான். அப்போ, சந்திரிகா உடன்படிக்கை எழுத சொல்ல, நாம்தானே எழுதவெல்லாம் வேண்டாம், நமக்கு உங்கள்மேல் நம்பிக்கை இருக்கிறது என்று நல்லெண்ண சமிக்ஞை கொடுத்தோம். பிறகெதற்கு அவகாசம்? கோத்தாவை நாங்கள் தேர்ந்தெடுக்கவுமில்லை, விரட்டவுமில்லை. அவரின் பதவியேற்பில் நாங்கள் பங்காளிகளுமில்லை, தப்பியோட்டத்தில் பங்குதாரருமில்லை. அவர் சரியாக உடுத்தவே அவகாசம் கொடுக்கப்படவில்லை அவருக்கு? ரணில் ஓடிவந்து குந்தியவர், அவருக்கு கிடைத்த காலமே கொஞ்சம். அவர் ஒன்றும் தேர்தெடுக்கப்பட்டவரல்லர். கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆட்சியேறியவர். அனுராவுக்கு அவகாசம் கொடுக்க நாம் யார்? அவர் அதிகப்பெரும்பான்மையோடு ஜனாதிபதியாகியவர். அவர் தனது காலம் மட்டும் இருக்கலாம், மீண்டும் ஜனாதிபதியாகலாம் மக்கள் விரும்பினால், இல்லை அவரே சட்டத்தை திரித்து மாற்றி ஜனாதிபதியாக தொடரலாம். எமக்கு காத்திருப்பதை விட வேறு வழியில்லை. இருந்தவர்கள் எதையும் தரவில்லை மாறி மாறி ஆட்சிக்கு வந்தபோதும், இனிமேலும் சாத்தியமில்லை. இவர் ஒருவர் முதன் முதலாக ஆட்சிக்கு வந்துள்ளார், எமக்கு பிரச்சினை உள்ளதென ஏற்றுக்கொள்கிறார், அவராலேதான் முடிவு வரவேண்டும். அதை செய்வாரா என தெரிந்து கொள்வதற்கு ஐந்து வருடங்கள் ஆகவேண்டும், நாம் ஒரு முடிவுக்கு வருவதற்கு. அதை நீங்கள், நாங்கள் அனுராவுக்கு கொடுக்கும் அவகாசம் என்கிறீர்கள். அதில் எனக்கு உடன்பாடில்லை. அது அவரில் உள்ள நம்பிக்கையல்ல, முன்னொருபோதும் ஆட்சிசெய்யாத ஒருவரிடம் எப்படி நம்பிக்கை வரும்? அவர் மேல் நானோ, என்போன்றோரோ கொண்டிருப்பது எதிர்பார்ப்பு. ஆனாலும் நாட்டில் முக்கிய பிரச்சினை பொருளாதாரப்பிரச்சனை, அதற்கே முன்னுரிமை அளிக்கப்போவதாகவும் அதன் பின் மற்றைய பிரச்சனைகளை ஆராய்ந்து உரிய தீர்வினை வழங்குவேன் என்று சொல்கிறார். வேறு என்ன உங்களால், என்னால் செய்ய முடியும்? சொல்லுங்கள். நீங்கள் என்னை வசை பாடலாம், நான் உங்களுக்கு எரிச்சல் மூட்டலாம் என்பதை தவிர.
உண்மையில் பற்றாக்குறை உள்ளமையாலேயே இந்த பதுக்கல் ஏற்படுகிறது அது பற்றாக்குறையினை இரட்டிப்பாக்குகிறது, இந்த அத்தியாவசிய பொருள்களை வாங்கும் அளவு விலை மாற்றத்தினால் பெருமளவில் மாற்றம் ஏற்படுவதில்லை, இதனை ஒன்றிற்கு குறைவான விலை நெகிழ்ச்சி தன்மையுடைய பொருள்களிற்குள் அடக்குவார்கள்.
அதாவது எனது இரவு நேர உனவிற்கு அரை இறாத்தல் பாணை உண்கிறேன், பாணின் விலை திடீரென 2 ரூபாக அதிகரித்துவிட்டது என்பதற்காக அதனை உண்ணாமல் விட முடியாது ( பாண் விலை குறைந்த அடிப்படை உணவுப்பொருள்).
நுகர்வோராக விலை அதிகரிப்பினால் பாதிப்பு ஏற்படுவது போல பாண் உற்பத்தியாளருக்கு அதன் விலை வீழ்ச்சி நட்டத்தினை ஏற்படுத்தும்.
இந்த விலை மாற்றம் கேள்வி மற்றும் வழங்கலுக்கிடையேயான ஒரு சமரச நிலை மூலம் உருவாகும், வழங்கல் குறைவாக இருக்கும் போது (அரை இறாத்தல் பாணிற்கு 10 பேர் போட்டியிட்டால்) விலை அதிகரிக்கும்.
இந்த தட்டுப்பாடுகளே ஏக போக சந்தைகளை உருவாக்குகிறது (Monopoly).
இதற்கு குற்றம் சாட்டப்பட வேண்டியவர்கள் அரசே, வேறு யாருமல்ல, காரணம் அவர்கள் அடிப்படை பிரச்சினைகளை கவனித்து சரியான திட்டமிடலை செய்யாமையே காரணம்.
நிதி முகாமைத்துவம், நாட்டின் நாளாந்த நிர்வாக நடைமுறைகளில் இந்த புதிய அரசு மெத்தனமாக இருக்கிறதா அல்லது அனுபவமின்மையால் இப்படி எல்லாம் நிகழ்கிறதா என தெரியவில்லை.
போட்டியின் ஆரம்பிப்பதற்கு முன்னரே அவுஸ் வெல்லும் என கூறினாலும் போட்டி ஆரம்பித்து முதலாவது இனிங்க்ஸ் பின்னர் நீங்கள் அவுஸ் வெல்லும் என கூறிவிட்டீர்கள், அந்த நேரம் எனக்கு உங்களவிற்கு நம்பிக்கை இருக்கவில்லை, முதல் நாள் மேக மூட்டமாகவும் இரண்டாம் நாள் அதிக வெய்யில் 3 ஆம் நாள் மழை என எதிர்வு கூறியிருந்தமையால் ஆடுகளத்தின் தன்மை மாற்றத்தில் ஒரு சந்தேகம் நிலவியிருந்தது, அவுஸின் இலகு வெற்றிக்கு இந்திய அணியின் பங்கும் இருந்தது.
இந்த போட்டியில் இரு அணிகளுக்கிடையேயும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது, சிராஜின் சின்ன பிள்ளைத்தனமான கொண்டாட்டத்தில் ஆரம்பித்துள்ளது, மிக சிக்கலான ஆடுகளத்தில் 140 ஓட்டங்களை எடுத்த ட்ராவிஸ் கெட்டிற்கு குடுக்க வேண்டிய குறைந்த பட்ச அங்கீகாரத்தினை கொடுக்காமல் மிக கேவலமாக நடந்து கொண்டுள்ளது இந்திய அணி, அதனை இந்திய இரசிகர்களே இரசித்திருக்கமாட்டார்கள்.
ஆனால் அவுஸ் பார்வையாளர்கள் கூட மோசமாக நடந்து கொண்டார்கள்.
"முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
Recommended Posts