Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லெப்டினன்ட் சங்கர்

Lieutenant-Sangar-Suresh.jpg

ஒரு வேங்கையின் மரணம்: முதல் மாவீரர் லெப்டினன்ட் சங்கர் / சுரேஸ்.

சங்கர்,
சுரேஸ்,
ஆயுதப்படைகள் வலைவிரித்துத் தேடும் செ.சத்தியநாதன்.

இருபது வயதிலேயே தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்ட கொரில்லா வீரன், தமிழீழ விடுதலைப்புலிகளின் தாக்குதற் பிரிவுத் தலைவன்.

கண் திறக்காத பூனைக்குட்டியாக நெஞ்சில் கனலும் புரட்சிகர உணர்வோடு சின்ன வயதிலேயே இயக்கத்திற்குத் தன்னைத் தானே அர்பணிக்கக் காத்திருந்த வீரமறவன். அரசபடையின் திடீர் முற்றுகையிலிருந்து தப்பிச் செல்லுகையில் சுற்றி நின்று கமாண்டோக்கள் சரமாரியாக வெடிகளைத் தீர்த்த போது காயமுற்று, எங்கள் இயக்கத்தின் முதலாவது களப்பலியாகும் பெருமையை அணைத்துக் கொள்கிறான்.

சங்கர் அச்சம் என்றால் என்னவென்று அறியாத அடலேறு. ஒரு சின்னப்பிசகு என்றாலும் கையோடு வெடித்து ஆளையே முடித்து விடக்கூடிய வெடிகுண்டுகளின் தயாரிப்புக்களிலும் அச்சமில்லாது ஈடுபடுவான். அரச படைகளின் தீவிரக்கண்காணிப்புக்கு அவன் இலக்காகியிருந்தாலும் அச்சம் எதுவுமின்றி அவன் கிராமங்களில், வீதிகளில் சாதாரணமாக உலவி வருவான். அதே நேரத்தில் சுழன்று கொண்டிருக்கும் விழிகள் சுற்றப்புறச் சூழ்நிலைகளை நுணுக்கமாக அவதானித்தபடியே இருக்கும். தான் அறியாது செய்யும் சின்னத் தவறும் கூட ஒரு கொரில்லா வீரன் எள்ற முறையில் தனக்கும் இயக்கத்திற்கும் ஆபத்து ஏற்படுத்தும் என்பதில் சங்கர் எப்போதும் விழிப்பாயிருப்பான். அரச படைகளின் கையில் சிக்க நேருமானால் எதிரிகளில் ஒருவனையாவது வீழ்த்தி விட்டு தானும் சாவது என்பதில் அவன் அசைந்தது கிடையாது. விடுதலைப் போராளிகள் எனப்படுபவர்கள் ஆயுதங்களோடு பிடிபடும் செய்திகளைப் பத்திரிகையில் வாசிக்கையில் குமுறுவான். அமைதியான தன்மையும், அதிகம் பேசாத சுபாவமும் கொண்ட சங்கரின் இந்தக் குமுறலுக்கு ஆழ்ந்த அர்த்தமுண்டு. ஆயுதங்களையும் வைத்துக்கொண்டு, அரச படைகளின் கையில் எதிர்ப்பு எதுவுமில்லாமல் ஒரு விடுதலைப் போராளி சரணடைவது என்பது கோழைத்தனமானது என்பது சங்கரின் உறுதியான முடிவாக இருந்தது. குறிப்பாகஇ தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப கட்டங்களில்;; விடுதலைப் போராளிகளை ஆயுதங்களோடு அரசபடைகள் கைது செய்வதை அனுமதிக்கும் போக்கானதுஇ அரசபடைகளுக்கு விடுதலைப் போராட்டத்தை முறியடித்து விடுவதில் நம்பிக்கையை ஊட்டிஇ அவர்களின் துணிச்சலைக் கூட்டிவிடும் என்று சங்கர் கருதினான்.

படுகாயமுற்ற நிலையிலும் கூட மதில் தாண்டிப் பாய்ந்து, தங்கள் கொரில்லாப்பிரிவின் மற்றொரு மறைவிடத்தை நோக்கித் தப்பிச் சென்றவன்இ பாதுகாப்பான இடம் வந்து சேர்ந்து விட்டோம் எனத் தெரிந்த பின்தான் இடுப்பிலிருந்து ரிவால் வரை எடுத்துக் கீழே வைக்கிறான். உயிரோடும் ஆயுதத்தோடும் எதிரியின் கைகளில் பிடிபடாத ஒரு வீரனின் சாவு அவனுடையது.

இருபத்தொரு வயதில் அவன் சாதித்தவை தமிழீழப் போராட்ட வரலாற்றுக்குச் சொந்தமானவை. இனிமேல் சாரணர்களை அனுப்பி வடக்கில் புலிப்படையை அடக்கி விட முடியுமென்று பாசிஸ சர்வாதிகாரி ஜே.ஆர். ஜயவர்த்தனா சிறீலங்காத் தலைநகரில் பிரகடனம் செய்த போது, நெல்லியடியில் அரச படைகள் மீது சங்கர் நடத்திய கொரில்லாத் தாக்குதல் தமிழீழம் காணும் வரை தமிழீழப் போராட்டம் ஓயாது, ஒழியாது என்பதை அரசுக்கு எடுத்துக் காட்டியது. ஜீப் சாரதியின் மீது வெற்றிகரமான முதல் தாக்குதலை நடத்தி, ஜீப் வண்டியை நிறுத்த வைத்து, கதவைத் திறந்து சாரதியை ஒரு கையில் வெளியே எடுத்து எறிந்தவாறு, மறு எதிரியை நோக்கிக் குண்டுகளைத் தீர்க்கும் வாலகம் சங்கருக்கே உரியது. இடுப்பிலிருந்து ரிவால்வரை எடுத்த மாத்திரத்தில் குறி வைக்கும் அவனது சாதுரியம் அசலானது. நெல்லியடியில் அரசபடையினர் பீதியுற்ற நிலையில் சங்கர் கால்களை அகல விரித்து, பக்கவாட்டில் நின்று அரசபடையினர் மீது குண்டுமாரி பொழிந்த காட்சி இப்போதும் நம் கண்களில் நிழலாடுகிறது.

சாவகச்சேரி போலீஸ் நிலையத்தின் மீது சீலனின் தலைமையில் நடைபெற்ற கொரில்லாத் தாக்குதலின் வெற்றிக்குச் சங்கரின் பங்கும் கணிசமானதாகும். அரசாங்கத்தால் போலிஸ் நிலையங்கள் உசார்படுத்தப்பட்டிருந்த நிலையில், மாடிக் கட்டிடத்தோடு பிரதான வீதியிலிருந்து சற்றுத் தள்ளி உள்ளே அமைந்திருந்த சாவகச்சேரி போலிஸ் நிலையத்தின் மீது முன்பக்க வாயிலுக்கூடாகத் தாக்குதல் நடத்துவது எனபது விஷப் பரீட்சை தான். ஆனால் உயிரைக் கடந்த காலத்திற்கு எழுதி வைத்துவிட்டு, புரட்சி வேள்வியில் குதித்திருக்கும் சங்கர், சீலன் ஆகிய போராளிகளின் முன்னே அபாயங்களும் தடைகளும் என்ன செய்து விட முடியும்? ஜி 3 துப்பாக்கி சகிதம் படுத்துக் கிடந்து சங்கர் சாவகச்சேரி போலிஸ் நிலையத்தின் ஒரு பகுதிக்கு பொறுப்பாக இருந்து நடத்திய தாக்குதல் அப்பகுதி அரசபடைகளை ஸ்தம்பிக்கச் செய்தது.

பொன்னாலைக் குண்டு வெடிப்பு நடவடிக்கையிலும் சங்கர் கடுமையாக உழைத்தவன். ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் தம்பாப்பிள்ளை மீதான இயக்க நடவடிக்கைக்குச் சங்கரே பொறுப்பு வகிக்கிறான்.

எந்த விதமான வாகனத்தையும் நேர்த்தியாகச் செலுத்தும் ஆற்றலும் சங்கரின் பன்முனைப்பட்ட ஆற்றலுக்குச் சான்றாகும். ஒரு கொரில்லாத் தாக்குதலையடுத்து ஏற்படுகிற பரபரப்பு. எதிரிப்படைகள் ஸ்தலத்திற்கு வருமுன்னர் வெளியேற வேண்டிய பதைப்பு என்பவற்றிற்கும் மத்தியில் மிகுந்த வேகத்துடனும் அதிக நிதானத்துடனும் வாகனத்தை செலுத்துவதில் சங்கர் வல்லவன்.

சக போராளிகளுக்கு ஆயுதங்களைப் பயிற்றுவிக்கும் போது மிகுந்த கவனம் செலுத்துவான். தெளிவாக விளக்குவான். தனக்குத் தெரியாத வி~யங்களை மற்றவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டவன். அன்போடும் பண்போடும் பழகுவதால் சகபோராளிகள் மத்தியில் தனி மதிப்பு சகித்து வந்தான்.

தமிழீழ விடுதலையை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல், இராணுவத் தலைமையிலேயே வென்றெடுக்க முடியும் என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த சங்கர் இயக்கத்தில் தன்னையே கரைத்துக் கொண்டவன். விடுதலைப் போராட்டமே சங்கரின் முழு மூச்சாக இருந்தது. விடுதலைப் போராட்டத்திற்கென்றே ஆயுதமேந்திக் களத்திலே குதித்தவன் இந்த வீரன். சமூக விரோத நடவடிக்கைகளையும் சந்தர்ப்பவாதிகளையும் அவன் அறவே வெறுத்தான். அவன் மனசு மிகவும் சுத்தமானது. இத்தகைய இதய சுத்தி நிறைந்த போராளிகளே ஒரு விடுதலை இயக்கத்தின் தூய்மைக்குச் சாட்சியாக நின்கிறார்கள்.

தலைவர் பிரபாகரனின் அரசியல் வழிகாட்டலிலும், இராணுவக் கட்டுக் கோப்பிலும் சங்கர் ஊறி வளர்ந்தவன். பிரபாகரனின் அரசியல் தூய்மையில் அவன் எல்லையற்ற மதிப்பு வைத்திருந்தான். மலரப்போகும் தமிழீழம் தன்னலமற்ற – தூய்மைமிக்க விடுதலைப் போராளிகளினால் தலைமையேற்று நடத்தப்பட வேண்டும் என்று அவன் எப்போதுமே சொல்லி வந்திருக்கிறான். பதவிப் பித்தர்களும் துரோகிகளும் எங்கள் புனித இயக்கத்தின் மீது களங்கம் கற்பிக்க முனைந்த போதெல்லாம் அமைதியான இந்தப் போர் மறவன் சினங்கொண்டு எழுந்திருக்கிறான்.

சாகும் தறுவாயிற் கூட அவன் தன் உற்றார், பெற்றோரை நினைக்கவில்லை. ‘தம்பி தம்பி’ என்றதான் அந்த வீரனின் உதடுகள் வார்த்தைகளை உதிர்த்தன. தம்பியும், மற்ற இயக்கப் போராளிகளும் கண் கலங்கி நிற்க அந்த வீரமகன் சாவிலே வீழ்ந்து போனான்.

“ஒரு உண்மை மனிதனின் கதை” என்ற ரஷ்ய நாவலைக் கடைசியாக வாசித்துக் கொண்டிருந்த சங்கர் அந்த நாவலை முழுதும் வாசித்து முடிக்கவில்லை. சங்கர் என்ற உண்மை மனிதனின் கதையே ஒரு வீர காவியம் தான்.

எங்கள் மாவீரர்கள்
சாவைச் சந்தித்த
கடைசி மணித்துளி
ஒருநொடிப் பொழுதா?
இல்லை…
அது தான்
எங்கள் நீண்ட வரலாறு!

நன்றிகள்: சூரியப் புதல்வர்கள் சஞ்சிகை (2004), விடுதலைப்புலிகள் இதழ் (பங்குனி, 1983).

https://thesakkatru.com/first-maaveerar-lieutenant-sankar-suresh/

ஈழத்தின் முதல் வித்து லெப்டினன்ட் சங்கர்

Eelams-first-Maaveerar-Lieutenant-Sankar

ஈழத்தின் முதல் வித்து லெப்டினன்ட் சங்கர்.

லெப். சங்கர் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் வித்தாக வீழ்ந்த மாவீரன். இன்று தமிழீழ விடுதலைப் போராட்டம் உலகளாவிய ரீதியில் கூர்ந்து கவனிக்கப்படுவதற்கு முதலாவது அத்திவாரக் கல்லாய் அமைந்த உறுதி மிக்க போராளி லெப். சங்கர்.

சத்தியநாதன் என்னும் இயற்பெயரைக் கொண்ட லெ. சங்கர் 1961இல் பிறந்தவர். 1977ஆம் ஆண்டு… வீட்டில் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு அவர் பண்ணை ஒன்றில் இயங்கிய விடுதலைப் புலிகளின் பாசறையை அடைந்தார். விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் பண்டிதருடன் வந்த அவரை கூர்ந்து நோக்கினார். இளைஞன்… தோற்றத்தில் சின்னவன். தலைமறைவுப் போராட்டம் என்பது மிகவும் கடினமானது. குறிவைத்த எதிரியை வீழ்த்துவதற்காக எதிரியின் கண்களில் மண்ணைத் தூவி பல நாட்கள் அலைந்து திரிய வேண்டும். நிரந்தரமாக ஓரிடத்தில் தங்க முடியாது. நேரத்திற்கு உணவு கிடையாது. அல்லது பல நாட்கள் உணவின்றியே இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் தாங்கும் மனோபலம் சிறுவனுக்கு இருக்குமா…?

தலைவர் பிரபாகரன் கூற்றுப்படி படிப்பைத் தொடர்வதற்காக வீடு திரும்புகிறான் சத்தியநாதன்.

‘ஏதோ அறியாதவன். சில நாட்;கள் சுற்றிவிட்டு வீடு வந்து விட்டான். இனி ஒழுங்காகப் படிப்பைத் தொடர்வான்” என இவரது பெற்றோர் எண்ணினர். ஆனால், சத்தியநாதனின் உள்ளத்து உறுதி கலையவில்லை. தானும் ஒரு போராளியாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்கிறான். இடைப்பட்ட காலத்தில் போராட்டத்திற்கு உறுதுணையாக சாரதிப்பயிற்சி பெறத்தீர்மானித்து அதில் வெற்றியும் பெற்றுவிடுகிறான்.

1978ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு நாள் இரவு மீண்டும் தம்முன் வந்து நின்ற சத்தியநாதனை ஏறிட்டனர் ஏனைய போராளிகள். அவர்கள் முகங்களில் புன்னகை. அதில் சத்தியநாதனின் உறுதி புலப்படுகிறது. சத்தியநாதனுக்கு தலைமறைவு வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் புனைப்பெயர் சூட்டப்படுகிறது. சத்தியநாதன்…. சங்கராக விடுதலைப் புலியாக மாறினான்.

சங்கரின் உள்ளத்தைப் போலவே உடலும் உறுதிபெற்றது. ஓயாது உழைத்தான். எதிலும் ஆர்வம் எப்போதும் சுறுசுறுப்பு. தோழர்கள் ஒன்றுகூடி கருத்தரங்குகள் வைப்பதும், திட்டங்கள் தீட்டுவதும், விவாதிப்பதுமாக… சங்கரின் அரசியல் அறிவு விரிந்தது. வளர்ச்சி பெற்றது.

இயக்கத்தில் ஆரம்பகாலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சிலருக்கு மட்டுமே ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டது. ஓய்வு நேரங்களில் ரிவோல்வரில் குறி பார்ப்பதிலும் ஆங்கில சினிமாப் படங்கள் மூலம் தன் ஆயுத அறிவை வளர்ப்பதிலும் ஆர்வம் காட்டினான் சங்கர். 1979இல் சிறிய ஆயுதங்களில் குறிபார்த்துச் சுடும் பயிற்சி சங்கருக்கு வழங்கப்பட்டது.

சங்கருக்கு குறி பார்த்துச் சுடும் பயிற்சியிலிருந்த திறமையால் தலைவரிடமிருந்து வெகுமதியாக 0-45 ரிவோல்வர் ஒன்று கிடைத்தது. அது சங்கருக்கு கிடைத்த பின் அதை வைத்து மேலும் தனது திறமையை வளர்த்துக் கொண்டான். இரு கரங்களாலும் குறி பார்த்துச் சுடுவதில் தன்னிகரற்றவனாயினான். சிறந்த ஆயுதப் பராமரிப்பு, தினசரி துப்பரவாக்கப்பட்டு பளபளத்தது ரிவோல்வர்.

1979 வைகாசியிலே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்வதாக அறிவித்திருந்த அரசு, விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்குடன் தேடுதல் வேட்டைகளை விஸ்தரித்தது. சங்கரின் பெயரும் எதிரிக்குத் தெரிந்துவிட்டது. அவனும் தேடப்பட்டான்.

1981ஆம் ஆண்டு நவீன ரக ஆயுதங்களை இயக்கும் பயிற்சி சங்கருக்கு வழங்கப்பட்டது. சங்கர் தாக்குதல் படைப்பிரிவில் ஒருவனானான்.

1982ஆடி 2ஆம் நாள் முதல்முதலாக எதிரியுடன் ஆயுதம் தாங்கிய மோதலில் சங்கர் ஈடுபடப்போகும் நாள், திட்டமிட்டபடி போராளிகள் ஏழுவர் நெல்லியடியில் ரோந்து வந்த பொலிஸ் ஜீப் மீது தாக்குதல் தொடுத்தனர். சங்கரிடம் ஒரு ரிவோல்வர் வேறொரு போராளியிடம் ஒரு இயந்திரத் துப்பாக்கி இதைத்தவிர வேறு ஆயுதங்கள் இல்லை புலிகளிடம்.

முதலில்… எதிரி வாகனச் சாரதி சுட்டு வீழ்த்தப்பட்டான். சங்கரின் நீண்ட காலக் கனவு நனவாகத் தொடங்கியது. வெற்றிகரமானத் தாக்குதலில் எதிரிகளில் நால்வர் கொல்லப்பட்டனர். அவர்களின் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. விடுதலைப் புலிகள் எந்தவித இழப்புகளுமின்றி வெற்றியுடன் மீண்டனர்.

1982இல் தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பிற்காக முதன் முதலாக இரு மெய்ப்பாதுகாவலர்கள் தெரிவுசெய்யப்படுகின்றனர். அவர்களில் ஒருவனாக சங்கரும் தெரிவுசெய்யப்பட்டிருந்தான். இக் காலகட்டத்தில் நவீனரக ஆயுதவரிசையில் இரண்டு ஜீ-3க்கள் மட்டுமே இயக்கத்திடமிருந்தன. இவற்றில் ஒன்று சங்கருக்கு வழங்கப்படுகின்றது.

இராணுவத் தாக்குதல்களில் மட்டுமல்ல மக்களை அரசியல் மயப்படுத்தும் நடவடிக்கைகளிலும் சங்கர் ஈடுபட்டான். புலிகளை வலை வீசித் தேடும் நடவடிக்கைகளுக்கு ஊடாகவே இவற்றையெல்லாம் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

கூலிப்படைகளின் தேடுதல் வேட்டை மும்முரமாகின்றது. புலிகள் இயக்க ஆதரவாக இருந்த விரிவுரையாளர் ஒருவரின் வீட்டில் சங்கர்… இதை மோப்பம் பிடித்துவிடுகிறது கூலிப்படை…. வீடு முற்றுகையிடப்படுகிறது….. முற்றுகை முற்று முழுதான முற்றுகை. சங்கரின் கை இடுப்பிலிருந்த ரிவோல்வரின் பிடியை இறுகப் பிடிக்கின்றது. தப்பியோடத் தீர்மானிக்கின்றான் சங்கர். கூவிப் பாய்ந்த ரவைகளில் ஒன்று சங்கரின் வயிற்றைப் பதம் பார்த்துவிடுகிறது. தரையை நனைக்கின்றது குருதி. உடல் சோர்ந்தாலும் உள்ளம் சோரவில்லை. எதிரியின் கையில் தனது ரிவோல்வர் கிடைத்துவிடக்கூடாது. எப்படியும் தன் தோழர் கையில் அதனை ஒப்படைத்து விட வேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தை உறுதியாக்க கிட்டத்தட்ட இரண்டு மைல் ஓடியிருப்பான். தெரிந்த ஒருவரின் உதவியுடன் நண்பர்கள் இரகசியமாகக் கூடும் இடத்தை அடைந்தான். ரிவோல்வரை தோழர்களிடம் கையளித்துவிட்டு உணர்விழந்தான் சங்கர். தோழர்கள் அவனைத் தாங்கிக்கொள்கிறார்கள்.

முற்றுகையில் அகப்பட்ட புலி கைநழுவிட்டது என்ற ஆத்திரம் அரச படையினருக்கு. ஆதரவாளர் கைது செய்யப்பட்டார். தேடுதல் முடுக்கிவிடப்பட்டது. தெருவெங்கும் இராணுவம். காயமுற்றவனை வெளியில் கொண்டு செல்லமுடியாத நிலை. இரத்த வாந்தி எடுத்த சங்கர் துவண்டு போனான். ஐந்து நாட்கள் கடந்தன.

சங்கரை பாரதம் கொண்டு செல்வதற்காக மோட்டார் படகு தயார் செய்யப்பட்டது. பலத்த சிரமத்தின் மத்தியில் சங்கர் ஒருவாறு கரைசேர்க்கப்பட்டான். அங்கும் போதிய வைத்தியம் செய்ய முடியாதநிலை.

உடல்நிலை நாளுக்கு நாள் நலிவடைந்தது.

27.11.1982 அன்று … விடுதலைப் புலிகளால் மறக்கவே முடியாத நாள். தமிழீழ மக்கள் மனதில் உத்வேகத்தை ஊட்டிய நாள். ஆயிரமாயிரம் போராளிகளை தன்னகத்தே கொண்டு விடுதலைப் போர் வீறுநடை போட வித்திட்ட நாள் அன்றுதான்.

தலைவர் பிரபாகரனின் மடியில் அவர் கைகளை இறுகப்பற்றி ‘தம்பி” என்றவாறே சங்கர் உயிர் துறந்தான்.

தலைவரின் விழிகளை நிறைத்த கண்ணீர் விழுந்து தெறித்து அவ் வீரனுக்கு அஞ்சலி செலுத்தியது.

தாயக மீட்புக்கான உரிமைப் போரில் வீரச்சாவடைந்த முதற்புலி லெப். சங்கரின் உடல் தமிழீழத்திற்கு வெளியே பாரதத்தில் தகனம் செய்யப்பட்டது. இவனது வீரச்சாவுகூட மக்களுக்கும் புலிகளுக்கும் இடையே இருந்த இணைப்பு இறுகிய பின்னரே வெளியே தெரியப்படுத்தப்பட்டது.

இம் மாவீரனின் வழித்தடத்தில் நடந்த ஆயிரக்கணக்கான போராளிகளில் 16000ற்கு மேற்பட்ட போராளிகள் விடுதலைப் போருக்கு தம்மை வித்தாக்கியுள்ளனர். இம் மாவீரர்களையெல்லாம் நினைவுகூரும் நாளாக லெப். சங்கர் வீரச்சாவடைந்த தினம் மாவீரர் நாளாக தமிழீழ மக்களால் அனுட்டிக்கப்பட்டு வருவதுடன் அவர்களின் இலட்சியப் பயணம் பல வெற்றிகளைப் பெற்று உறுதியுடன் தொடர்கின்றது.

நன்றி: எரிமலை இதழ் (கார்த்திகை, 2000).

https://thesakkatru.com/eelams-first-maaveerar-lieutenant-sankar/

  • 3 years later...
  • கருத்துக்கள உறவுகள்+

ஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்…., உன் வீரச்சாவும் அதன் பின்பான தமிழர் வரலாறும்!

Post navigation

praba heros day 2

ஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர். அப்போது ஓரிரு வாரங்களுக்கு முன்னர்தான் சீலன் புலேந்திரனின் காயங்களுக்கு மருந்து (பெத்தடீன், சொசியின்) வாங்க பணத்துக்காக எத்தனையோ வீடுகள் ஏறி, இறங்கி ஏமாறி ஏமாற்றப்பட்டு ஒரு வழியாக 3200ரூபா பிடித்து சீலன், புலேந்திரனுக்கு சிகிச்சை கொடுத்து வண்டியேற்றி, அண்ணையிட்டை தமிழ்நாட்டுக்கு அனுப்பி காலை மாலை இரவு வெள்ளாப்புறம் என்று பேதமின்றி விழித்தபடி திரிந்து கொஞ்சம் ஓய்வாக உணரும்பொழுதில் சங்கருக்கு காயம்…

ஆனால் சீலன், புலேந்திரனின் காயங்கள் போலில்லாமல் இது கொஞ்சம் வித்தியாசம். சீலன், புலேந்திரனுக்கு ரிபீட்டர் வெடி.பல சிறிய சன்னங்கள் புகுந்த காயம். சங்கருக்கு தானியங்கி துப்பாக்கி காயம்.

படுக்கையில் இரத்தம் இழந்து சோர்ந்து கிடந்தாலும் அரைகுறை நினைவுகளில் கதைத்தபடி இருந்த சங்கர் அந்த நேரத்திலும் இயக்கத்தின் ஆயுதம் பற்றியும் இனி செய்ய வேண்டியதுகள் பற்றியும் ஏதேதோ கதைத்தபடி.

சீலன் காயப்பட்ட பிறகு அமைப்பின் தாக்குதற்பிரிவு பொறுப்பாளனாக சங்கரை தலைவர் தெரிவு செய்திருந்ததால் சங்கரின் பொறுப்புகள் அதிகம்.அந்த நேரத்தில் தாக்குதற்பிரிவு பொறுப்பு என்பது தலைவருக்கு அடுத்தபடியாக அமைப்பின் தளபதி போன்ற ஒரு பொறுப்பு.

தலைவர் சில போராளிகள் பற்றி அதிகம் யோசிக்காமல் நித்திரை கொள்ள கூடியதாக இருந்தது என்றால் அது சங்கர், சீலன், புலேந்திரன், பண்டிதர் போன்றவர்களையே சொல்லலாம்.

எந்த சூழ்நிலையிலும் இவர்கள் சுயமாக முடிவெடுத்து எந்த நிலைமையையும் சமாளிக்ககூடியவர்கள் என்று தலைவர் நம்பிக்கை கொண்டிருந்தது இவர்கள்மீது.

காயத்துடன் அணுங்கியபடி இருந்த சங்கரை பார்த்தபோது ஈரச் சாக்கு ஒன்றால் இதயத்தை அழுத்தி மூடியதுபோல ஒரு இனம்புரியாத கவலை மனசை நோகச்செய்தது.

அடுத்த ஓட்டத்துக்கு தயரானோம். சீலன், புலேந்திரன் காயமடைந்தபோது சங்கர் ஓடித்திரிந்தது போல இம்முறை லாலா ரஞ்சன் அந்த இடத்துக்கு வந்தான். சீலன், புலேந்திரனுக்கு சிகிச்சை அளித்த மருத்துவரை இம்முறையும் அழைப்பது சாத்தியம் இல்லை.

ஆனாலும் முதலுதவியும் வலியில் இருந்து நிவாரணம் பெறும் சிகிச்சையும் மிக அவசரமாக சங்கருக்கு தேவைப்பட்டது. அதே பெத்தடீன்,சொசியின் ஊசிகள்,காயம் தொற்று ஏற்படாமல் மருந்துகள்.

இம்முறையும் பணத்துக்கு தெரிந்தவர்கள் ஒவ்வொருவராக கையை காலை பிடித்து ஏற்பாடாச்சு. அடுத்து சங்கரை மதுரைக்கு கொண்டு போகவேணும். தலைவர் அங்கு ஒரு வழக்கின் பிணையில் நின்றிருந்த நேரம்.

மதுரைகாவல் நிலையத்தில் கையெழுத்து, மாலை 6 மணிக்கு பிறகு குறித்த முகவரியில் நின்றாக வேண்டும் என்ற நிபந்தனைகளுடன். இருபத்திஏழு நாட்களுக்கு முன்னர் (நவம்பர் 27 1982) சீலன் புலேந்திரன் காயமடைந்தபோது,

சரஸ்வதி பூசையில் மூன்று பேருக்கு காயம் என்று மதுரைக்கு தந்தி ஒன்றை தபால்நிலையத்தில் இருந்து அனுப்ப வந்த சங்கரின் காயம்பற்றி இம்முறை அனுப்ப வேண்டிய நிலை.

மதுரையில் பொன்னம்மான்,கிட்டு போன்றவர்கள் தலைவருக்கு அருகிலேயே இருக்கிறார்கள்.

சங்கரை அனுப்பினால் எப்படியும் நல்ல சிகிச்சை கிடைத்துவிடும் என்பதில் நம்பிக்கை இருந்தது.சங்கரின் காயம் ஒன்றும் உயிர் உறுப்புகளை சேதமடைய வைத்திருக்கவில்லை என்பது ஒரு ஆறதலாக இருந்தது.

எப்படி கடல்தாண்டி அனுப்புவது. பின்பொருநாள் பெரும்கடல்படையை,பெரும் பெரும் ஆற்றலான கடல்சார் வீரர்களை கொண்டு வளர்ந்த எங்கள் அமைப்பிடம் அப்போது கடல் தாண்ட எதுவுமே இல்லை.

வெளி இணைப்பு இயந்திரம், படகு, படகு செலுத்துபவர் என்று ஏராளம்.இவை எல்லாம் ஏற்பாடு செய்தாலும்கூட படகு கடல் தாண்டி கோடிக்கரைக்கு போக பெற்றோல் வேண்டும்.பணத்துக்கு எங்கே போவது…

பண்டிதர் தான் படகு எரிபொருளுக்கு பணத்துக்கு அலைந்து பிடிப்பேன் என்றான். ஒரு படகுசெலுத்துபவரை ஏற்பாடு செய்யும்படி லாலாவுக்கும் எனக்கும் சொன்னான்.

நிறைய இடங்களில் ஏமாற்றம்.ஏதாவது சாக்கு போக்குகள்தான்.ஒரு படகுசெலுத்துபரை இறுதியாக அணுகி கெஞ்சி மண்டாடி நிலைமை சொல்லி சம்மதிக்க வைத்தோம்.

அவரை யாழ் சென்ரல் கல்லூரி மைதானத்தடிக்கு மாலை 3மணிக்கு வரச்சொல்லி லாலா நானும் காத்திருந்தோம்.சந்திக்க நேரமும் இடமும் சொல்லி காத்திருப்பது அந்த நேரத்தில் மிகமிக ஆபத்தான வேலை.

அப்போது சிங்களபடையில் பிரிகேடியர் (பின்னர் மேஜர் ஜெனரல்)பொறுப்பில் இருந்த சரத்முனசிங்க தலைமையில் ஒரு பெரும் புலனாய்வு பிரிவு தாயகம் எங்கும் தன் வலையை அகல விரித்திருந்த நேரமது.

படகோட்டி வரும்வழியில் பிடிபட்டால் எப்படியும் கூட்டிக்கொண்டுவருவார் என்ற ஆயத்தத்துடனேயே காத்திருக்க பழகி விட்டிருந்தோம்.மைதானத்தின் ஒரு முனையில் கண்ணுக்கு தெரியும் தூரத்தில் லாலா மறுமுனையில் நான்.

மாலை 6மணிவரை படகோட்டி வரவில்லை.எல்லாம் ஏற்பாடாகியும் படகை செலுத்த ஒருவர் தேவை என்று அலைந்து இன்னுமொருவரை ஏற்பாடு செய்து நவம்பர் 24 சங்கரை அனுப்பும்போது அவனின் காயமும் அவனின் அணுங்கலும் நோவும் அதிகமாகி விட்டிருந்தன.

சங்கருடன் சென்ற போராளி சங்கரை கோடிக்கரையில் இறக்கி அங்கு ஒரு வீட்டில் படுக்கவைத்துவிட்டு பேரூந்துபிடித்து மதுரைக்கு போய் விடயத்தை சொல்லி அழைத்து வரும்போது நவம்பர் 25 மாலை ஆகிவிட்டிருந்தது.

மதுரைக்கு சங்கரை கொண்டுபோகும்போதே ஓரளவுக்கு நிலைமை கடினமாக இருந்தது.காயத்தை மூடி தைத்தபோது அதற்குள் ஏற்பட்ட தொற்று அவனின் உடல்முழுதும் பரவிவிட்டிருந்தது.

மதுரையின் ஒரு சின்னஞ்சிறிய தனியார் மருத்துவஅறைக்குள் சங்கரின் இறுதி கணங்கள் ஆரம்பமாகின. மிக கடினமான இறுக்கமான கணங்கள் அவையாக இருந்தது என்று பின்பொருநாள் நாடுதிரும்பிய கிட்டு சொல்லியிருந்தான்.

காப்பாற்ற ஏதேனும் வழி தேடி தலைவர் ஏங்கிய பொழுதுகள் அவை.நோவும் அணுங்கலும் உடல் முழுதும் தொற்றிவிட்ட காயதொற்றும் சங்கரை வாட்டிய போதும் அவன் தாயகவிடுதலை, அமைப்பின் அடுத்த கட்டம்,தலைவரின் பங்கு, தலைவர்மீதான விசுவாசம் மரியாதை என்று ஏதேதோ கதைத்தபடியே இருந்தானாம்.

அவனுடன் இறுதிகாலங்களில் வெடிகுண்டு, வெடிமருந்துகலவை என்று எப்போதும் ஒரு விஞ்ஞான சோதனை நடாத்தி கொண்டிருந்த அப்பையா அண்ணையும் அவனருகில். அவன் நேசித்த பெருந்தலைவன்,

அவன் கூடப்பழகி உயிராக இருந்த தோழர்கள் என்று எல்லோரும் சுற்றி இருக்க அவனின் இறுதிமூச்சுகள் வெளிவரத்தொடங்கின. நிலைமையினை உணர்ந்த தலைவர் கிட்டுவை அழைத்து சங்கரை கிட்டுவின் மடியில் தலைவைக்க விட்டு அந்த அறையில் சங்கரையே உற்றுப்பார்த்தபடி.

ஒருபொழுதில் 17வயது இளைஞனாக கப்டன் பண்டிதரால்(பண்டிதர்,சங்கர்,பழனி(குமரப்பாவுடன் வீரச்சாவடைந்தவர்) ஐடியா வாசு எல்லோரும் ஒரு வகுப்பு சிதம்பராவில்) தன்னிடம் அழைத்துவரப்பட்ட போராளி இப்போது தன் 21வயதில் இறுதிமூச்சை விட்டுக்கொண்டு தாயககனவுடன் சாவுக்குள் நுழைகின்றானே என்ற துயர் அவருக்கு.

இரவும் பகலும் பிரியாவிடை சொல்லிடும் ஒரு பொழுதில் நவம்பர் 27ல் சங்கர்,சுரேஸ் என்ற பெயர்களால் அமைப்புக்குள் அழைக்கப்பட்ட எங்கள் உயிர்த்தோழன் வீரச்சாவை தழுவி கொள்கின்றான்.

ஓங்கி அழவும் முடியாது.பாடைகட்டி ஊர்வலமாக கொண்டு எரியூட்டவும் முடியாது.

மதுரை அடங்கிய ஒரு பின்னிரவு பொழுதில் இரவு 11மணிக்கு பின்னர் ஒரு பத்துக்கும் உட்பட்டவர்கள் (இயக்கஉறுப்பினர்கள், இயக்க ஆதரவாளர்கள்) சங்கரை கொண்டுசென்று மயானம் ஒன்றில் கிடத்தி சங்கருக்கு அவனின் பிரியமான தோழமை அப்பையா கையால் தீயிட நெருப்புக்குள் மறைந்துபோனான்.

சங்கரின் வீரச்சாவுச்சேதி தாயகத்தின் போராளிகளுக்கு மறுநாளே அறிவிக்கப்பட்டது. ஆனால் எவரும் இதனை பற்றி மூச்சுவிடக்கூடாது என்றும் அறிவிக்கும் சாதக நிலைமை ஒன்று ஏற்படும்போது தலைமை அறிக்கும் என்பதும் அந்த செய்தியுடனே இணைந்து.

அடுத்த கட்டமாக சங்கரின் புகைப்படம் எதுவுமே அமைப்பிடம் இல்லை. அவன் மரணப்படுக்கையில் கிடந்த நேரத்தில் எடுத்த படம் ஒன்றுதான் அமைப்பிடம் இருந்தது.

சங்கரின் மைத்தனரான தாடி என்பரிடம் கம்பர்மலையில் சங்கரின் சில பாஸ்போர்ட் அளவு படங்கள் இருக்கின்றன என்பதை முன்னமே சங்கர் சொல்லி இருந்தான்.

சங்கரின் மைத்துனனான தாடி என்பவரிடம் கம்பர்மலைக்கு சென்று நானும் பண்டிதரும் இன்னுமொரு ஆதரவாளரும் சென்று சங்கரை பயிற்சிக்காக லெபனான் அனுப்புவதற்கு அவனுக்கு பாஸ்போர்ட் எடுக்கவேணும் அவனின் பாஸ்போர்ட் புகைப்படம் அவனின் வீட்டில் இருக்கு அதனை எடுத்து தரும்படி கேட்டோம்.

ஏன் சங்கரையே கூட்டிக்கொண்டு போய் புகைப்பட ஸ்ரூடியோவில் புகைப்படம் எடுக்கலாம்தானே என்று சங்கரின் மைத்துனன் தாடி திரும்ப எங்களை கேட்டபோது எதுவுமே சொல்ல வரவில்லை.

ஆனாலும் சுதாகரித்து பதில் சொல்லி அவனிடம் சங்கரின் புகைப்பபடங்களை வாங்கி கொண்டுவந்து அவன் தலைமறைந்ததும் சைக்கிளை ஒரு ஓரத்தில் நிறுத்தி விட்டு சங்கரின் புகைப்படத்தை பார்த்து பண்டிதர் கேவிகேவி அழுததது வாழ்வின் இறுதி கணம்வரைக்கும் மறைந்துபோகாது.

எப்டியானவன் சங்கர்,எல்லா வேலைகளையும் மிக இலகுவாக,மிகமிக வேகமாக பழகி செய்ய கூடியவன்.

பண்ணையில் புளியங்குளத்தில் நெல்லு சூடு அடிப்பது என்றாலும் அதனையும அழகாக ஆறதலாக நிதானமாக சிதறாமல் செய்வான் சங்கர்.ஒரு உடுப்பு போடுவது என்றாலும் அவனின் கவனம் அதில் இருக்கும்.

எல்லாவற்றிலும் மேலாக எந்தவொரு பாதுகாப்பு கருவிகளும் இல்லாத அந்த பொழுதுகளில் குண்டுகள், செய்வதும் அதனை பொருத்துவதும் சங்கருக்கு கைவந்த கலை.

சங்கரும் அப்பையா அண்ணையும் இணைந்து செய்த பார்சல் வெடிகுண்டுகள் இருபது அந்தநேரம் சிங்களதேசத்தை அலறி அடித்து நித்திரை குலைய வைத்தது.(அது புங்கங்குளத்தில் புகையிரத தபால்பெட்டிக்குள் வெடித்தாலும்கூட)

சங்கர் எப்போதும் அமைப்பை மக்கள்மத்தியில் பரவலாக கொண்டு போகவேணும் என்ற பெரும் முயற்சியில் திரிந்தபடியே இருப்பான். இதற்காகவே நிறைய படிப்பான்.

உண்மை மனிதனின் கதை,அதிகாலையின் அமைதியில் போன்ற போர்க்கால இலக்கியங்களை மட்டும் இல்லாமல் எல்லாவற்றையும் ஒரு வரலாற்று பின்ணணியுடன் பார்க்கும் ஒரு பார்வையை தரும் அரசியல் புத்தகங்களையும் அவன் விரும்பி படிப்பான். எல்லாவற்றிலும் பார்க்க அவன் ஓய்வற்ற ஒரு உழைப்பாளன்.

ஓய்வு என்பதே அவன் களைத்து தூங்கும்பொழுது மட்டுமே. விடிந்தால் அவனின் நாள் எத்தனை சந்திப்புகள், முன்னெடுப்புகள், முயற்சிகள்,
வேலைகள் என்று ஓடும். அவனது சைக்கிளும் அவனுக்கு ஈடுகொடுத்து உழைக்கும்.

அவன் வீரச்சாவடைவதற்கு சரியாக ஒருமாதம் முன்பு அக்டோபர் 27ம்திகதி சாகவச்சேரி சிறீலங்கா சாவல்நிலைய தகர்ப்பு தாக்குதலில் ஒரு பகுதிக்கு சங்கரையே சீலன் தாக்குதற்பொறுப்பாக நியமித்திருந்தான்.

அப்போது அமைப்பிடம் இருந்த ஆயுதங்களில் ஆகக்கூடிய வலுவுள்ளதான கெக்ளர் அன்ட் கொச் ஜி3 சங்கரிடமே அந்த தாக்குதலில். சிங்களபேரினவாதம் தமிழர் தாயகத்தை அடிமைப்படுத்தி ஆளுவதன் ஒரு அடையாளமாக விளங்குவது சிங்களதலைநகருக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான பெருந்தெரு ஏ9 ஆகும்.

அந்த பெருவீதியில் ஒரு தமிழ் இளைஞன் தானியங்கி துப்பாக்கியுடன் நின்றிருந்த முதல் பொழுதின் பெருமை சங்கருக்கு உரியது. அது சிங்களதேசத்து இனிவரப்போகும் காலத்தில் இவனைப்போல ஆயிரம் ஆயிரம் தமிழ் மனிதர்கள் ஆயுதங்களுடன் எழுந்துவருவர் என்ற செய்தியை அப்போது சொல்லாமல் சொல்லிற்று.

சங்கர் என்ற அந்த வீரனின் சாவு உடனடியாக இயக்கத்தை ஒரு உலுப்பு உலுப்பி விட்டிருந்தாலும்கூட தலைவரும், ஏனைய போராளிகளும் சங்கரின் மரணத்தின் மூலம் முன்னர் இருந்ததைவிட பல்மடங்கு அதிகமான உறுதியும் வேகமும் கொண்டனர்.

காயம் ஆறி தாயகம் திரும்பி சீலன், புலேந்திரனிலும் இதனை காணக்கூடியதாக இருந்தது. அதனை போலவே சங்கரை அவனின் இறுதி கணத்தில் தன் மடிமீது வைத்திருந்த கிட்டுவுக்குள் சங்கர் வீரச்சாவு மலையளவு உறுதியையும், பொறுப்பையும் கொடுத்திருந்ததை பின்பொருநாள் அவன் பொலிகை கடற்கரையில் 1983ஆரம்பத்தில் வந்து இறங்கியபோது உணரமுடிந்தது.

சங்கரின் போராட்ட வாழ்வு தமிழீழ விடுதலை வரலாற்றை பல படிகள் பல பரிமாணங்கள் உயர்த்தி செல்ல வைத்தது போலவே அவனின் முதற்சாவு இனி எந்த கணத்திலும் தளரோம்.

எந்த நிலையிலும் தாயகஇலட்சியத்தை கைவிடோம் என்ற ஓர்மத்தை போராளிகளுள் இறக்கிவிட்டு சென்றது.

அவன் மரணித்து ஒரு வருடத்துக்கு பின்னர் தாயகசுவர்கள் எங்கும் சங்கரின் வீரமரண செய்தியை எழுதி சங்கரின் வீட்டுக்கு சென்று அவன் எரிந்து எஞ்சிய சாம்பல் அடங்கிய செம்பையும்,

அவனின் மரணப்படுக்கை புகைப்படத்தையும் கொடுத்து திரும்பும்போது அவனுடன் உலாவிய அந்த தெருக்கள், சைக்கிளில் அவனுடன் திரிந்த ஒழுங்கைகள் எல்லாம் அவனது முகமாக தெரிந்தது.தாயகம் முழுதும்.

அவன் இறுதியாக படித்துக்கொண்டிருந்த ” ஒரு உண்மை மனிதனின் கதை ” என்ற ருஸ்ய போர்க்கால பெரும் இலக்கியமொன்றின் நாயகன் அலக்ஸெய் போல கால்களை இழந்து காடுகளுள் ஊர்ந்து மனோதைரியத்துடன்,

சாப்பாடு இன்றி பனியை கரைத்து குடித்து முகாம்திரும்பி தன் கால்களை இழந்தபின்பும் செயற்கைகால் பொருத்தி போர்விமானம் ஏறியது போலவே காயத்துடன்,

நினைவு மங்க மங்க இரத்தம் வழிய ஓடிவந்து அமைப்பின் ஆயுதத்தை ஒப்படைத்து வீழ்ந்த சங்கர் இனிவரும் எந்த காலத்திலும் தமிழர் நினைவெங்கும் நிறைந்திருப்பான்.

அவனையும் அவனுடைய பாதையில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களும் தமிழர்களின் இனிவரும் எந்தவொரு சமூக அரசியல் மாற்றத்தினதும் மூல இயங்குசக்திகளாக வழிகாட்டுவர்.

ச.ச.முத்து

https://eelamaravar.wordpress.com/2015/11/27/heros-day-8/

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்+
On 14/5/2024 at 20:24, நன்னிச் சோழன் said:

இதை எழுதிய ச.ச. முத்து என்பவர், 1979ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் இரண்டு கிழமைகள் மட்டுமே இணைந்திருந்ததாகவும் பின்னர் வீட்டிற்கு அனுப்பப்பட்ட போது சிங்களக் காவல்துறையிடம் சரணடைந்தார் என்று ஐயர் (கணேசன்) அவர்களின் ‘ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் – பிரபாகரனோடு புலிகள் அமைப்பை ஆரம்பித்த நாட்கள்' என்ற நூலில் எழுதப்பட்டிருக்கிறதாம்.

ஆனால், இவரோ தான் 1982ம் ஆண்டு லெப். சீலன் எ சுரேஸ் அவர்களின் படத்தைப் பெறச் சென்றேன் என்றும் "பொன்னம்மானின் பொற்காலம் என்று நான் கருதுவது பொன்னம்மான் அண்ணையுடன் தமிழகத்தில் நின்றிருந்த 81,82 ஆண்டுக்காலம்தான்." என்றெல்லாம் எழுதி வருகிறார். 

எனினும் புலிகளின் எந்தவொரு வரலாற்று ஆவணங்களிலும் இவ்வாறு ஒரு உருப்படி தம் இயக்கத்தில் இணைந்து தொடர்ந்து செயலாற்றினார் என்றோ இல்லை குறிப்பிடத்தக்கவராக இருந்தார் என்றோ குறிப்பிடவில்லை. 

எனவே இவர் தன்னை வரலாற்று மாந்தனாக உட்புகுத்த முயல்கிறாரா என்ற ஐயம் வாசகர் நடுவணில் வலுவாக எழுகிறது. ஆகையால் இவர் தன்னைப் பற்றிய உண்மையை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளார்.

இந்தத் தகவலை கட்டுரை தொடர்பான வாசகரின் மெய்ப்பார்ப்பிற்கு இங்கே இட்டுச் செல்கிறேன்.

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.