Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போர்க்குற்றம் புரிந்தவர்களை கனடாவுக்குள் நுழைய தடைவிதிக்குமாறு பரிந்துரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போர்க்குற்றம் புரிந்தவர்களை கனடாவுக்குள் நுழைய தடைவிதிக்குமாறு பரிந்துரை

Shavendra-Silva-2.jpg
 35 Views

போர்க்குற்றம் புரிந்தவர்களும், மானிடத்திற்கு எதிராக இனப்படுகொலை புரிந்தவர்களும் கனடாவுக்குள் நுழைய தடை விதித்தலும் மற்றும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரைத்தலும்

WhatsApp-Image-2020-12-07-at-10.28.43-PM

”ஐநா சபையினால்  அங்கீகரிக்கப்பட்ட அமைப்பான  The Alliance Creative Community Project (ACCP),  கனடா  மோசமான மனிதவுரிமை மீறல்களை புரிந்த ஆட்சியாளர்கள் மீது தடைகளை விதிப்பதை வரவேற்கிறது.  இந்த புதிய சட்ட அதிகாரம் மனித உரிமை மீறல்களை தவிர்க்க பெரிதும் உதவுவதுடன் மாபெரும் மனிதவுரிமை மீறல்களை புரிந்தவர்கள் சுதந்திரமாக உலவுவதை தடுக்கவும் சட்டவிரோதமாக சேர்த்த நிதி வளங்களின்  பதுக்கலை தடுக்கவும் உதவும்.

WhatsApp-Image-2020-12-07-at-10.29.18-PM

சிறீலங்காவில் மக்கள் தொகைக்கு எதிராக பெரும் அட்டூழியங்களை 2009 போர் முடிவின் முன்னும் அதன் பின்னும் புரிந்த பின்வரும் நபர்களுக்கும் இதே நடைமுறைக்கு உட்டுத்தப்பட வேண்டியவர்கள் என நம்புகிறோம். கீழுள்ள இந்தப்பட்டியலில் உள்ளவர்கள் ஐநா மனிதவுரிமைகள் சபை ஆணையாளரின் சிறிலங்கா மீதான  அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர்களாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.  மனிதவுரிமைகள் சபையின் உயர் தூதுவர் ஸெயிட் (Zaid)அவர்களின் பரிந்துரையின் படி பிரித்தானியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் டேவிட் கமரோன் அவர்களது சர்வதேச சுதந்திர விசாரணைக்கான  முன்முயற்சியை பின் தொடர்ந்து இன்றைய கனேடிய அரசு  தடைகளை இவர்கள் மேல் முதற்கட்டமாக  நடைமுறைப்படுத்துவது உகந்தது.

இவர்கள்:

  1. Lieutenant General Shavendra Silva
  2. Major General Sathyapriya Liyanage
  3. Major General Kamal Gunaratne
  4. Major General Mahinda Hathurusinghe
  5. Major General Nanda Mallawarchcha
  6. Colonel G.V. Ravipriya
  7. Brigadier Prasanna Silva
  8. Major General Jagath Dias
  9. Gotabaya Rajapaksa
  10. Mahinda Rajapaksa
  11. Admiral Wasantha Kumar Jayadewa Karannagoda
  12. Admiral Thisara S. G. Samarasinghe
  13. Admiral Dissanayake Wijesinghe Arachchilage Somatilake Dissanayake
  14. Major General Jagath Jayasuriya
  15. Brigadier Nandana Udawatta
  16. Brigadier Chagie Gallage
  17. C.N.Wakishta
  18. General Sarath Fonseka

மேலுள்ள பட்டியலில் லெப். ஜெனரல். சரவேந்திர சில்வா மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது 2009 இறுதிக்கட்ட யுத்தத்தின் போது 70,000 மேற்பட்ட தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட காரணமாக இருந்த மனிதவுரிமை மீறல் குற்றத்தின் அடிப்படையில் 02/14/2020  அன்று அமெரிக்க அரசு தடைகளை ஏற்கனவே விதித்துள்ளது.

மேலுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள பெரும்பாலானவர்கள் இன்றைய சிறிலங்காவின் அரச அதிபரும் அன்றைய போரின் போது  பாதுகாப்புச்செயலருமாக இருந்த கோத்தபாய ராஜபக்சவின் கட்டளைகளின் கீழ் பணிபுரிந்தவர்கள். அன்றைய அதிபரான மகிந்த ராஜபக்ச இன்று தலைமை அமைச்சராக இருக்கிறார். மேல் குறிப்பிட்ட நபர்களில் பெரும்பாலானவர்கள் இன்றைய அரசில் உயர் அதிகார பதவிகளில் உள்ளனர். பின்னோக்கி பார்க்கும் பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ள உண்மைகளின் படி இன்றைய சிறிலங்கா அரசில் பதவி வகிக்கும் அனைவரும் தமிழரின் குருதியில் தோய்ந்த கைகளின் சொந்தக்காரர்கள் என்பது தெளிவாக புலப்படுகிறது.  சிறிலங்கா அனைத்துலகுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் இருந்து பின் வாங்கியது மட்டுமல்லாது ஐநா மனிதவுரிமை மன்றின் 30/1 தீர்மானத்தின் கடப்பாடுகளையும் புறம் தள்ளியுள்ளது.  இந்த அனைத்துலக ஒப்பந்தங்களையும் மனிதவுரிமைகளையும் மதிக்காத போக்கின் காரணமாக கனடா சிறிலங்கா அரசின் மீது தடைகளை மேற்கொள்ளும் என்பது எதிர்பார்ப்பு ஆகும்.

இந்த மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது முழுமையான பயணத்தடை, சொத்து முடக்கம், நிதி மற்றும் வணிக தடை போன்றவற்றை  விதிப்பது தொடர்பாக நாம் கனேடிய அரசுடன் இணைந்து பணியாற்ற அணியமாக உள்ளோம்.

2017இல் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு ஊழல் அதிகாரிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் சட்ட விதிகளின் அடிப்படையில் கனடாவில் இவர்கள் மீது இந்த தடைகளை விதிக்க முடியும்.  இந்த சட்டவாக்கத்தின் படி   “…. வெளிநாடுகளில் அனைத்துலக விதிமுறைகளின் படி  மனிதவுரிமைகளை மீறிய பொறுப்புக்கூறும் தகமையுடைய அதிகாரிகள் மேல்  அவர்களின் நாடுகள் தகுந்த கட்டுப்பாடுகளற்ற  நீதியான விசாரணை நடாத்த முடியாத போதும் நடாத்த முயலாத போதும் இந்த தடை பொருத்தமானது” என்று கூறுகின்றது.

மனிதத்திற்கு எதிரான குற்ற மற்றும் போர் குற்ற சட்டத்தின் படி கனடாவினது குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்பு சட்டவாக்கத்தின் பிரிவு 35(1)(a) அல்லது (b) மூலம் இவர்கள் கனடாவுக்குள் நுழைவது மட்டுப்படுத்தப்படுகிறது. இந்த சட்டவாக்கப்பிரிவு ” ஓர் அரச சேவைகளின் உயர் அதிகாரி சட்ட துணைப்பிரிவு 6(3)-(5) இன் படி  பயங்கரவாதத்தில் அல்லது திட்டமிடப்பட்ட  பெரும் மனிதவுரிமை மீறல்களிலோ இனப்படுகொலையில்  ஈடுபட்டவராகவோ  அல்லது  ஈடுபடுபவராகவோ அமைச்சர் கருதும் பொருட்டு” இவர்கள் கனடாவுக்குள் நுழைவதை கட்டுப்படுத்தப்படுத்தும் அதிகாரத்தை வழங்குகிறது.

WhatsApp-Image-2020-12-07-at-10.29.33-PM

மேலும் சிறிலங்காவினது போர் குற்றவாளிகளை ரோமை சட்டத்தின் அடிப்படையில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.  கனேடிய அரசு தலையிட்டு கடந்த பதினொரு ஆண்டுகளாக தமது உறவுகளை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்கும் என்று நம்புகிறோம். கனடா மனிதவுரிமைகளை மதிக்கும், உலக அமைதிக்காக குரல் கொடுக்கும் நாடு. தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவும் சிறிலங்காவின் போர்குற்றவாளிகளை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரைக்கும் படியும் கனேடிய குடிமக்களாக கனேடிய அரசை கேட்டுக்கொள்கிறோம். கனேடிய அரசு தலையிட்டு மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் மீறல்களை நிறுத்தி உலகத்திற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருப்பது மிகவும் பாராட்டப்படும் ஒன்றாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.”

 

https://www.ilakku.org/போர்க்குற்றம்-புரிந்தவர/

Edited by உடையார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.