Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பில் மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் நினைவு தினம் அனுஸ்டிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் அவர்களின் நினைவு தினம் அனுஸ்டிப்பு

  • December 25, 20205:02 pm

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 15வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் வைத்து இயேசு பாலகன் பிறந்த நத்தார் தினமன்று மட்டக்களப்பில் இடம்பெற்ற நத்தார் திருப்பலி ஆராதானையின் போது 2005 ஆம் ஆண்டு இனந்தெரியாத நபர்களினால் இவர் சுட்டுக் கொலைச் செய்யப்பட்டார்.

தமிழத் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னின்று உழைத்த தலைவர்களில் மிகவும் முக்கியமானவராக கருதப்பட்ட இவர், 1934 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி பிறந்தார்.

அறுபதுகளில் தமிழரசுக் கட்சி மூலம் அரசியலுக்கு நுழைந்த இவர், தான் பத்திரிகையாளராக பணியாற்றிய காலத்தில் தனது மனைவியின் பெயரில் (சுகுணம் ஜோசப்) கட்டுரைகளை எழுதிவந்ததுடன், இவர் எழுதிய பல கட்டுரைகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்நது.

படுகொலைசெய்யப்பட்ட மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கத்தின் 15வது ஆண்டு நினைவு தினம் இன்று மட்டக்களப்பு அமெரிக்க மிசன் மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலி முன்னணியின் ஏற்பாட்டில் அதன் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் லோ.தீபாகரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஆன்மீக அதிதிகளா சிவயோகச்செல்வன் சாம்பசிவ குருக்கள்,அருட்தந்தை ஜோசப்மேரி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் சிரேஸ்ட உபதலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பொன்.செல்வராஜா,மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன்,கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட கட்சி உறுப்பினர்கள்,தவிசாளர்கள்,மாநகர,பிரதேசசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு பதினைந்து வருட நினைவினை குறிக்கும் வகையில் 15ஈகச்சுடர்கள் ஏற்பட்டன.

அதனை தொடர்ந்து மலரஞ்சலி செய்யப்பட்டதை தொடர்ந்து ஆத்மசாந்திக்காக மௌன பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்து நினைவுப்பேருரை நடைபெற்றது.

இதன்போது புதிய அரசியல் யாப்பும் சிறுபான்மை சமூகமும் என்னும் தலைப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனால் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.
93C97058-123C-4628-BD5C-A3BF2C1E4329-102

1C441348-645E-4B1A-8D70-D5CDAFF55160-102

EE83E6C9-975E-4E27-BC2C-90DDA2B478B7-102

E7EB2D2F-6ED2-476D-8151-66BCEE59149C-102

01581F14-D257-43D4-B890-3B5C106C469D-102

17290598-77CA-4CD2-98F2-22421E901968-102

D3EF1011-6579-4204-9971-69B24A6E5A19-102

C22FCC46-6D44-4604-8761-D9CDF6A50108-102

3DFD7D58-41B9-44A5-BA89-9287A2E42403-102

FEFE43DA-00B9-434F-A5A0-E51799AFFD23-102

039B0948-D356-4A75-B924-0A8A9733FDFE-102

CE4AE5B4-6DDB-40E8-A2BC-212164B610C9-102

5A996A44-7201-4873-80F8-E7FE52295ABB-102

349579BF-C614-4B07-AB58-F0473F657F5E-102


 

 

https://www.meenagam.com/மட்டக்களப்பில்-மாமனிதர்/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.