Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிட்னி கோசிப் 23

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுது அநேகமாக எங்களின்ட இளசுகள் அதாவது இங்கு பிறந்து வளர்ந்த் பிள்ளைகளுக்கு திருமணம் நடகிற காலகட்டம்.80 தொடக்கத்தில் இங்கு வந்து குடியேறிய தமிழ் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு இப்போது திருமணம் நடைபெறுகிறது,சிலர் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் சிலருக்கு பெற்றோர்கள் பார்த்து செய்து வைகிறார்கள்.

இந்த பெற்றோர்களின் மனநிலையும் அவர்களின் சில கோசிப்புகளையும் எழுதலாம் என்று நினைக்கிறேன்,சும்மா ஒருக்கா வாசித்து போட்டு கருத்து எழுதுங்கோ.

ஒரு பெற்றோர் சொன்னார் யாரையாவது கட்டட்டும் ஆனால் எதிர்பாலை கட்டட்டும் இந்த சில வெள்ளைகள் செய்யிற மாதிரி ஒரே பாலில் கட்டாம இருந்தா சரி-ஊரில் முந்தி சில பேர் சொன்னவையள் சிங்களவர்களையும் கல்யாணம் கட்டினாலும் பரவாயில்லை வேற சாதியை மாறி கட்டி போட்டு மானத்தை வாங்காமல் இருந்தா சரி என்று-எங்களுக்கு போனாலும் ஒரு மான பிரச்சின இருக்க தான் செய்கிறது.

எனக்கு தெறிந்த நண்பனின் பிள்ளையும் கல்யாண வயதில் தான் இருக்கா மச்சான் நீ எப்படியான மாப்பிள்ளை தேடுகிறாய் என்று வினாவினேன் அவர் சிலர் படியல் சொன்னார் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.மெடிசன் செய்த போயை தான் நாங்கள் பார்கிறோம் உங்களுக்கு யாரையும் தெறியுமோ என்று கேட்டார் எனக்கு என்னுடைய பமிலி டக்டரை தான் தெறியும் அவருக்கு கல்யாணம் ஆகி இரண்டு பிள்ளைகளும் இருக்கு எனுஊ லொள்ளு பண்ணிவிட்டு சொன்னேன் என்னுடைய பிரண்டின் மகன் பொறியளாராக இருகிறான் பார்த்து பேசுவோமோ என்று கேட்டேன் அதற்கு அவர் வேண்டாம் இப்ப எல்லோரும் பொறியாளர்கல் தானே வெளிநாட்டில் பொறியாளர் டிகிரி எடுப்பது ஈசி தானே எடுத்து போட்டு ஒரு கம்பனியில் பொறியியளாராக இருப்பது பெரிய விசயமோ??மெடிசன் தான் நாங்கள் பார்கிறோம் என்றவர் உமக்கு தெறியுமோ எங்களுடன் படித்த ஏ/ல் 4பாடமும் பெயில் 77 யில் லண்டனுக்கு போயிட்டார் நான் பேராதனைக்கு போய் பொறியியல் முடித்து போட்டு அப்படி 82 யில் இங்கு வந்து செட்டில் ஆகிட்டேன்,சதாசிவமும் இப்ப பொறியாளன் என்று தான் சொல்லுறான் அது என்ன சிறீலாங்காவில் ஏ/ல் பெயில் லண்டனில் பொறியளாராக வந்தவன் வெளிநாட்டில் பொறியாளனாக வருவது மிகவும் இலகு,கஷ்டமானது டாக்டராகவும்,வக்கீலாகவும் வாரது தான் என்று கூறினார் (ஊரில பொறியாளரும் டாக்டரும் ஒரே தட்டில் இருந்தவர் வெளிநாட்டில் பொறியாளர் ஒருபடி கீழே)

போயின் பெற்றோர் டிகிரி படித்து இருந்தால் நல்லது பெடியன் உயரமாகவும் வெள்லையாகவும் இருக்க வேண்டும் முக்கியமான ஒன்றை சொல்ல மறந்திட்டேன் மாப்பிள்ளையும் பமிலியும் சாய்டிவோர்டியாக இருக்க வேண்டும்.

நாங்கள் வீடு கொடுபோம் அதில ஒரு கடனும் இல்லை அவள் நல்ல லேட்டஸ் காரும் வைத்திருக்கா,நல்ல வேலையிலும் இருக்கா ஆனா அவா கொஞ்சம் டார்க் ஆனா நல்ல சிலீம்,

இவ்வளவு சொன்னவர்கள் பெடியன் நல்ல பெடியனாக இருக்க வேண்டும் என்று மருந்துக்கு கூட சொல்லவில்லை,ஊரில பெண் கரை சேர்ந்தா காணும் என்று இருப்பவர்கள் இப்ப வெளிநாடு வந்தவுடன் பெண்களுக்கு ஆண்களை டிமான்ட் பண்ணுற அளவுக்கு வந்திட்டீனம்.நல்ல முன்னேற்றம்

மாம்ஸ் நான் ஒரு நல்ல பெடியன் இருகிறேன் எனக்கு யாரையும் பார்போம் என்று இல்லை அவரின்ட நண்பரின்ட மகளுக்கு பார்கிறார் கொஞ்ச கூட சரியில்லை சொல்லி போட்டேன்

:P :lol: :P

Edited by Jamuna

மாம்ஸ் நான் ஒரு நல்ல பெடியன் இருகிறேன் எனக்கு யாரையும் பார்போம் என்று இல்லை அவரின்ட நண்பரின்ட மகளுக்கு பார்கிறார் கொஞ்ச கூட சரியில்லை சொல்லி போட்டேன்

இவாவுக்கு ஒரு போய் பிரண்ட் இருக்கே அது சொன்னவரோ அவரின்ட தகப்பன் பெயர் கூட கரிஸ் என்று தொடங்கும் என்ன புத்து

:P :lol: :P

பொறியியல் இவைக்கு கேவலமோ என்ன செய்வது தன் மகள் கொஞ்சம் டாக் ஆனால் டாக்குத்தர் வேணுமோ நல்ல நக்கல் அதுசரி ஜமுனா மாமனாரும் மருமகனூக்கும் அந்த நபர் என்ன செய்தவர் ஏன் இப்படி கொலை வெறியோட தாக்குறீங்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பட்டப்படிப்பு படித்தவர்கள் அனைவரும் வாழ்க்கையிம் வெற்றி அடைவதில்லை... பட்டப்படிப்பு படிக்காதவர்கள் எல்லோரும் வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்கள் இல்லை...

பிரித்தானியாவில், வைத்தியர்களை பொறுத்தவரை அவர்களது ஆண்டு வருமானம் GBP20,741 - GBP48,000. அதுவும் ஒரு துறையில் சிறப்புத்தேர்ச்சி பெற்றால் தான் 48,000 வரும். படித்து முடித்து வேலை ஆரம்பிக்கும் போது GBP20,741 ல் ஆரம்பித்து இரண்டு வருடங்கள் செல்லGBP25,882 வரை கிடைக்கும்.

வைத்தியர்கள் ஜி பி (general medical practitioners) ஆக இருக்கும் பட்சத்தில் GBP50,000 - GBP76,000 வரை அனுபவத்தை பொறுத்து சம்பளமாக பெறுவார்கள். இந்த ஜி பி கள் தனியாக செயற்படும் பட்சத்தில் GBP80,000 - GBP120,000 வரை சம்பாதிப்பார்கள்.

ஆக மொத்தத்தில் பிரித்தானியாவில் ஒரு வைத்தியரை திருமணம் செய்து வைத்தால் அந்த மாப்பிள்ளையால் சம்பாதிக்க கூடிய அதிக சம்பளம் GBP120,000 ஒரு வருடத்திற்கு.

பிரித்தானியாவில் பொறியியல் வேலைகளைப்பொறுத்தவரை, படித்து முடித்தவுடன் வேலை தேடும் போது, எந்த பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்வி பயின்றுள்ளார்கள் என்பதை பெரிய நிறுவனங்கள் முக்கியமாக பார்க்கின்றன. . ( இந்த நிலையில் இலங்கையில் 4 எப் எடுத்து பிரித்தானியாவில் வந்து பொறியியலாளர் ஆனவர்கள் எல்லோரும் தவிர்க்கப்பட்டு விடுவார்கள்) ஒரு நல்ல பல்கலையில் கல்வி கற்று பொறியியலாளர் ஆக ஒரு தரமான நிறுவனத்தில் வேலை கிடைக்கும் பட்சத்தில் GBP18000- GBP22000 வரை சம்பளம்... இந்த GBP22,000 என்பது எண்ணை மற்றும் வாயுக்கள் (Oil & Gas) நிறுவனங்களில் கிடைக்கும்.

அனுபவங்கள் கிடைக்க, ஒரு நாளிற்கு GBP2000 வரை சம்பளமாக பெறும் பொறியியலாளர்களும் இருக்கின்றார்கள்.. உதாரணமாக நண்பர் ஒருவரது வேலை பற்றிய விபரம் தருகின்றேன்...இந்தியர், 34 வயது, ஒரு நாளிற்கு GBP1200 சம்பளம்... 20 நாள் வேலை மாதத்தில், தங்குமிடம் இலவசம், நிறுவன கார்,..... ஆக இவரது சம்பளம் வருடத்திற்கு GBP2,88,000.

இதே நண்பருடன் அதே பாடத்தில் அதே பொறியியல் பட்டம் பெற்ற இன்னும் ஒரு நண்பர் பெறும் சம்பளம் GBP38,000 ஆண்டுக்கு.

பட்டப்படிப்பு என்பது வாழ்க்கையின் ஆரம்பத்தை இலகுவாக்கி ஒரு தரத்தை கொடுக்குமே தவிர, வேறு எதையும் அது தரப்போவதில்லை. பட்டப்படிபின் மூலம் ஒரு தரத்தை பெற்று அவரவர் திறமையினை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையில் வெற்றி அடைபவர்களுக்கு மட்டுமே அவர்கள் பெற்ற பட்டம் இறுதி வரை இருக்கும். இலத்திரனியல் என்றால் என்ன என்று தெரியாத பல இலத்திரனியல் பொறியியலாளர்கள் இன்று இருக்கின்றார்கள். எதாவது கேட்டால் மறந்து விட்டேன் என்பார்கள்... அப்படி சொல்பவர்கள் அந்த பட்டத்தை திருப்பி பல்கலைக்கழகத்திற்கு கொடுத்து விடுவது சிறந்தது.

பல வைத்தியர்கள் இங்கு கம்பி எண்ணுவது பலரும் அறிந்திருப்பீர்கள்....

எனி மேலாவது பட்டங்களை பார்ப்பதோடு அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை பாருங்கள்... ஒருத்தர் ஒரு வைத்தியர் என்றால் அல்லது பொறியியளர் என்றால் அவர்கள் பெரியவர்கள் என்ற ஒரு மாயை தமிழ் சமூகத்தில் இருந்து வருகின்றது.இது மாறி பொறியியலாள்ரோ , மருத்துவரோ அவரது துறையுல் சிறத்து விளங்கும் போது மட்டுமே அவருக்குரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும்.

Edited by chumma....

பல வைத்தியர்கள் இங்கு கம்பி எண்ணுவது பலரும் அறிந்திருப்பீர்கள்....

எனி மேலாவது பட்டங்களை பார்ப்பதோடு அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை பாருங்கள்... ஒருத்தர் ஒரு வைத்தியர் என்றால் அல்லது பொறியியளர் என்றால் அவர்கள் பெரியவர்கள் என்ற ஒரு மாயை தமிழ் சமூகத்தில் இருந்து வருகின்றது.இது மாறி பொறியியலாள்ரோ , மருத்துவரோ அவரது துறையுல் சிறத்து விளங்கும் போது மட்டுமே அவருக்குரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும்.

ஆம் எங்கள் சமூகத்தில் இபடியான ஒரு பிரச்சினை இருகிறது அத்தோட மருத்துவத்திலும் கூட ரஷ்யாவில் படித்து விட்டு வந்த மாப்பிள்ளைமாரை நம்மவர்கள் விரும்பமாட்டார்கள் இது அவர்களின் அறியாமையை காட்டுகிறது......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனி மேலாவது பட்டங்களை பார்ப்பதோடு அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை பாருங்கள்... ஒருத்தர் ஒரு வைத்தியர் என்றால் அல்லது பொறியியளர் என்றால் அவர்கள் பெரியவர்கள் என்ற ஒரு மாயை தமிழ் சமூகத்தில் இருந்து வருகின்றது.இது மாறி பொறியியலாள்ரோ , மருத்துவரோ அவரது துறையுல் சிறத்து விளங்கும் போது மட்டுமே அவருக்குரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும்.

நீங்கள் கூறிய கருத்து சரி தான் :)

ஆம் எங்கள் சமூகத்தில் இபடியான ஒரு பிரச்சினை இருகிறது அத்தோட மருத்துவத்திலும் கூட ரஷ்யாவில் படித்து விட்டு வந்த மாப்பிள்ளைமாரை நம்மவர்கள் விரும்பமாட்டார்கள் இது அவர்களின் அறியாமையை காட்டுகிறது......

ஊரில் இப்படி தான் 2 டாக்குட்டர் மார் இருந்தவை ஒருவரிட்ட அதிக சனம் போகும் அப்ப என்ன காரணம் என்று கேட்ட போது மற்றவர் சொன்னார் சனம் கூட போற மனுசன் மெடிக்கல் கோலேஜில 10 வருசமா படித்தவர் மற்றவர் 5 வருசம் தான் படித்தவர்............. :P :blink:

Edited by putthan

ஊரில் இப்படி தான் 2 டாக்குட்டர் மார் இருந்தவை ஒருவரிட்ட அதிக சனம் போகும் அப்ப என்ன காரணம் என்று கேட்ட போது மற்றவர் சொன்னார் சனம் கூட போற மனுசன் மெடிக்கல் கோலேஜில 10 வருசமா படித்தவர் மற்றவர் 5 வருசம் தான் படித்தவர்............. :P :(

அட அட இப்படி தான் இருக்க வேண்டும்

:(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.