Jump to content

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பற்றி இலங்கைத் தமிழர்களின் எதிர்பார்ப்பு என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, கிருபன் said:

ஆமாம். ஆமாம். ஆமாம்.

தலைவர் போராட்டத்திற்கு ஆயுதக்கொள்வனவு செய்து தந்த கேபியை இறுதிவரை நம்பினார் என்று Daily Mirror ஆங்கில இணையத்தளத்தில் சிங்கள அறிவுஜீவி Umberto Eco எழுதியிருந்தார்!  அவர் காஸ்ரோவின் வீண்பேச்சைக் கேட்டு கேபியை 2000 ஆண்டளவில் ஒதுக்கத் தொடங்கியிருந்தார். தகடு வைப்பவர்களின் பேச்சைக் கேட்டு 2003 இல் கேபியை ஆயுதக் கொள்வனவு பொறுப்பில் இருந்து மாற்றியிருந்தார். ஆனால் தனது நண்பனை ஒருபோதும் சந்தேகிக்கவில்லை என்று சிங்கள அறிவுஜீவி Umberto Eco இன்னும் விளக்கமாக எழுதியிருந்தார்!

நாதம்ஸ், நீங்கள் யாழில் தமிழில் வரும் பெரும் கட்டுரைகள், பேட்டிகளைக் படிப்பதில்லை என்று தெரியும். குறைந்தபட்சம் சூடான திரிகளில் என்னவெல்லாம் அலசியிருப்பார்கள் என்றாவது பார்த்தால் மேலே மேற்கோள் காட்டியதை எழுதியிருக்கம்மாட்டீர்கள்😬

 

இல்லை! உங்களால் முடியாது.!!

உங்களது விசுவாசம் தலைவர் பிரபாகரன் மீது இல்லை என்பதை யாழ் களத்தில் நீங்கள் இதுவரை காலமும் வைத்த கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால் புரியும்.

அட பாவமே.... அநியாயத்துக்கு அப்பாவியா இருக்கிறீர்களே....

உங்களுக்கு விளக்கம் தர, இன்னும் மூன்று பக்கம், மூசி, மூசி எழுதணும்.

விடுங்கய்யா.... நீங்கள் நினைப்பது போலவே இருந்திட்டு போகட்டும்.

மின்பலத்தில், வாய்ப்பு கிடைத்தால் எழுதுறேன்.... அப்ப நம்புவீர்கள்... 🤦‍♂️ 😁

***

ஒரு சிறு விபரம் மட்டும் தருகிறேன்....

அமேரிக்காவில், போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் 7 வருடம் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த ஒருவர் , இடையில் FBI யினால் வெளியே எடுக்கப்பட்டு, புலிகள் குறித்த உளவு வேலைகளுக்கு அமர்த்தப்பட்டார். இவர் குறித்து வாசித்திருப்பீர்கள். உள் விபரங்கள்  அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவரே, இங்கிலாந்து, கனடாகாரர்கள்  பலரை ஆயுதம் வாங்கும் விவகாரத்தில் உள்ளே அனுப்பினார். அவரே கேபி உடன் தொடர்பு கொண்டார். அவரே போலிப் பாதிரியார் ஜகத் காஸ்பெர் நியூயார்க் விமான நிலையத்தில் கைதாகி, கொண்டு செல்லப்படும் போது, தடுத்து, வேறு வேலைகள் செய்யும் நிபந்தனைகளுடன் தப்ப வைத்தார். இல்லாவிடில் பாதிரி, இந்த ஆயுதம் வாங்கப்போன கோஸ்ட்டிகளுடன் கம்பி எண்ணிக் கொண்டு இருந்திருப்பார்.  பாதிரி, அமெரிக்கா போகும் போது, கொண்டு போனது, இளையராசாவின், திருக்குறள் சிம்பொனி சிடிக்கள் 212. அதாவது அந்த வெளியீட்டுக்கு போவதாகவே போனார், சிக்கினார். 

அவரே புலிகளுக்கு பெரும் தொகை கொடுத்த ராஜ் ராஜரத்தினம் 11 வருடம் சிறைக்கு போக காரணமாக இருந்தார்.

அவர் இன்று, கொழும்பில், சிங்கள பெண் பத்திரிகையாளர் ஒருவரை மூன்றாவதாக கலியாணம் செய்து இருக்கிறார். 

இவர் எனது அண்ணரின் யாழ் இந்து வகுப்பு தோழர். கந்தர்மடத்துக் காரர். இந்த வகையில் தெரிந்த விபரங்களை கொண்டே கேபி செய்த துரோகம் குறித்து தெரிந்து சொன்னேன். அநேகமாக தமிழ் சிறியருக்கு இவரை தெரிந்திருக்கும், கமுக்கமாக இருப்பார். 😜 (நில்மினிக்கும் தெரிந்திருக்கலாம்.)

சிங்களம் விசுவாசத்துடன் பாதுகாத்தாலும், இன்னும் அமெரிக்காவுக்காக வேலை செய்வதாக சொல்கிறார். கேபி என்ன நடந்தது, எப்படி மடங்கினார் இப்ப என்ன செய்கிறார், (உங்களுக்கு: கேபி அனாதை ஆசிரமம் நடாத்துகின்றார் 🤐) அம்மான் விவகாரம் எல்லாம், அண்ணர் மூலம் அறிந்து கொண்டேன். கண்டால், அண்ணை என்று கூப்பிடும் அளவுக்கு பழக்கம். 

நான் கற்பனை, ஆலோபால எழுத்துக்களை நம்புவதில்லை. வாசிக்கும் பொறுமையும் இல்லை. ஆகவே, நீங்கள் குறிக்கும் எதுவுமே வாசிப்பதில்லை. நன்றி.

இந்த சிங்கள பெண் பத்திரிகையாளர், கேட்டு.... சொல்வதை காது, மூக்கு வைத்து எழுதுவதே நீங்கள் சொன்ன ஆட்கள்: Umberto Eco, Rohan Gunaratna, C Nathanial, DBS Jeyaraj, Bandula..... list is big..... but...all are rubbish...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.