Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இணைத் தலைமை நாடுகள் ஒஸ்லோவில் கூடுகின்றன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Mon Jun 25 6:59:07 EEST 2007

இணைத் தலைமை நாடுகள் ஒஸ்லோவில் இன்று கூடுகின்றன

இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளின் மாநாடு இன்றும் நாளையும் நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெறவிருக்கின்றது.

நோர்வேயின் சர்வதேச விவகாரங்களுக்கான அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தலைமையில் இந்த மாநாடு நடைபெறும்.

இலங்கையில் மோசமடைந்துவரும் மனித உரிமை மீறல்கள், சட்டம் ஒழுங்கு நிலைமை ஆகியன தொடர் பாக இன்றைய மாநாட்டில் விரிவாகவும் முன்னுரிமை கொடுத்தும் ஆராயப்படவுள்ளது.

சமாதான முயற்சிகள் தொடர்பாக நாளைய மாநாட் டில் ஆராயப்படவுள்ளது. மாநாட்டின் முடிவில் அங்கு எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்து அறிக்கை வெளி யிடும் சாத்தியம் இல்லை என்றும் தீர்மானங்கள் இரு தரப்புகளுக்கும் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டது.

உதயன்

Edited by கறுப்பி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைத்தலைமை நாடுகளின் மாநாட்டையொட்டி இன்று கவனயீர்ப்பு ஒன்றுகூடல்

சிறிலங்காவிற்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளின் மாநாடு ஓஸ்லோவில் நடைபெற உள்ளதையொட்டி நோர்வே தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் சார்பில் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் இன்று திங்கட்கிழமை நடைபெற உள்ளது.

தமிழ் மக்கள் மீது கொடும் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு வரும் சிறிலங்கா அரசு தொடர்பாக இணைத்தலைமை நாடுகள் கடைப்பிடிக்கும் மென்போக்கு அணுகுமுறை மீதான தமிழ் மக்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் முகமாக இந்த கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

நோர்வே வெளியுறவு அமைச்சகத்தின் முன்பாக ஐரோப்பிய நேரம் முற்பகல் 10 மணி முதல் 11 மணி வரை இந்த கவனயீர்ப்பு ஒன்று கூடல் நடைபெற உள்ளது.

-PUTHINAM

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஒஸ்லோவில் ஆரம்பமாகும் கூட்டத்திற்கு பின்னர் இலங்கையை இணைத் தலைமை நாடுகள் தனித்தனியாக கண்டிக்கும்?

[25 - June - 2007]

இலங்கையில் முழுமையான யுத்தமும் மிக மோசமான மனித உரிமை மீறல்களும் தொடரும் நிலையில் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகும் இணைத்தலைமை நாடுகளின் மாநாடு முடிவடைந்ததும் அவை இலங்கை அரசாங்கத்தை தனிப்பட்ட ரீதியில் கண்டிக்கவுள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த காலங்களை போலல்லாது, இம்முறை சந்திப்பின் இறுதியில் இணைத்தலைமை நாடுகள் அறிக்கையொன்றை வெளியிடப்போவதில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை அரசாங்கத்தின் உணர்வுகளை வெளிப்படையாக காயப்படுத்துவதை தவிர்ப்பதற்காகவே அறிக்கை வெளியிடப்படாதெனவும் தெரிவிக்கப்படுகிறது.

இணைத்தலைமை நாடுகள் இலங்கை நிலைவரம் குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளன. இராணுவ மோதல்களும் இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகளும் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படுவதற்கும் பாரிய துயரத்திற்கும் வழிவகுத்துள்ளன.

விடுதலைப் புலிகளும் இந்த நிலைக்கு பெருமளவு காரணமென இணைத்தலைமை நாடுகள் கருதினாலும் கூட, யதார்த்தத்தை உணராதது, தூர நோக்கின்மை மற்றும் மனித உரிமைகளை கட்டுப்படுத்தத் தவறியது போன்றவற்றால் இலங்கை அரசாங்கம் தனக்குத்தானே தீங்கு விளைவிப்பதாகவும் அவை கருதுகின்றன.

நோர்வே மாநாடு நாளை செவ்வாய்க்கிழமை முடிவடைந்த பின்னர் இலங்கை அரசாங்கத்திடம் இது குறித்து இணைத்தலைமை நாடுகள் தெரிவிக்கவுள்ளன.

கொழும்பின் அரசியல் வட்டாரங்கள் மேற்குலகின் விமர்சனங்கள் குறித்து அதிருப்தி வெளியிட்டு வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ஒஸ்லோ மாநாட்டின் பின்னர் இணைத்தலைமை நாடுகள் பகிரங்க அறிக்கையை வெளியிடாத பட்சத்தில் அவர்கள் இந்தியாவின் முன்னுதாரணத்தை பின்பற்றக்கூடும்.

இலங்கை அரசாங்கத்தை அதன் சிறிய, பாரிய தவறுகளுக்காக பகிரங்கமாக எப்போதுமே கண்டிக்காத இந்தியா, கொழும்பின் உயர் மட்டங்களுக்கு தனது கவலையை தொடர்ந்தும் தெரிவித்து வருகின்றது.

2006 நவம்பரில் வாஷிங்டனில் நடைபெற்ற மாநாட்டிற்குப் பின்னர் முதல் தடவையாக இணைத்தலைமைகள் சந்திக்கவுள்ளன.

எனினும், அந்த நாடுகளின் முக்கிய தலைவர்கள் பலர் இலங்கைக்கு சமீபத்தில் விஜயம் மேற்கொண்டிருந்தனர். ஜெனீவாவில் இம்மாதம் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் சுமுகமான சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.

இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தைகளுக்கான சாத்தியங்களை ஆராய்வது குறித்து சொல்ஹெய்ம் கேட்டபோது; விடுதலைப் புலிகள் இதய சுத்தியுடனான நேர்மையை வெளிப்படுத்தினால் தனக்கு அதில் ஆட்சேபனையில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தில் அப்பாவித் தமிழர்கள் சிக்குண்டுள்ளதும் சர்வதேச சமூகத்தை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

கொழும்பின் விடுதிகளிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டமை விடுதலைப் புலிகளுக்கு சாதகமான சூழலை உருவாக்கும் செயலாக கருதப்படுகின்றது.

தகவல்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொள்வதற்கும் இணைத்தலைமை நாடுகள் ஒவ்வொன்றும் தனித்தனியாக எவ்வாறு பங்களிப்பு செய்யலாம் என ஆராயவுமே ஒஸ்லோ சந்திப்பு இடம்பெறுவதாக நோர்வே அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா சார்பில் உதவி வெளிவிவகார அமைச்சர் ரிச்சட் பௌச்சர் கலந்து கொள்ளவுள்ளார்.

பேச்சுவார்த்தைகள் குறித்து இந்தியாவிற்கு தெளிவுபடுத்தப்படவுள்ளது.

எனினும், இந்தச் சந்திப்பின் மூலம் பாரிய திருப்புமுனைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லையென நோர்வே இராஜதந்திரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தினக்குரல்

இணைத் தலைமை நாடுகள் புலிகளின்மேல் குற்றம் கண்டுபிடித்திருந்தால், அறிக்கை விட்டு, இரு தரப்பினரையும் கண்டித்து, ஆழ்ந்த கவலையையும் தெரிவித்திருக்கலாம்.

சிங்கள அரசாங்கத்தை மட்டும் கண்டிக்க இவர்களுக்கு எப்படி மனம்வரும்.

ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான அறிக்கையினை இணைத்தலைமைகள் கூட்டாக வெளியிடுவதற்கு ஜப்பான் முட்டுக்கட்டை.

ஓஸ்லோவில் இடம்பெறவுள்ள இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தின் முடிவில் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை கண்டிக்கும் தீர்மானங்கள் எவையும் வெளியிடப்படமாட்டாது என தெரியவந்துள்ளது.

ஸ்ரீலங்காவில் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்த நிலைமை குறித்து ஆராய்வதற்கு இன்று இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத்தலைமைகள் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் சந்திப்பொன்றை நடத்தவுள்ளன

இந்த சந்திப்பின் முடிவில் வழமை போல் இணைத் தலைமைகள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிடுவதற்கு சந்தர்பங்கள் குறைவாகவே காணப்படுவதாக இராஜதந்திர தரப்புகள் தெரிவித்துள்ளன

மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்த தாக்குதல் முயற்ச்சிகள் குறித்து ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான எச்சரிக்கைகளை வெளியிட வேண்டும் என நோர்வே தரப்பு விரும்புகின்ற போதிலும் ஜப்பான அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தெரியவந்துள்ளது

இந்த நிலையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான அறிக்கையினை இணைத்தலைமைகள் கூட்டாக வெளியிடுவதற்கு ஜப்பான் முட்டுக்கட்டை போட்டுள்ளதாகவும் எனவே இணைத்தலைமைகள் பொதுவான அறிக்கை ஒன்றை கூட்டாக வெளியிடக் கூடும் என்றும் அதில் கடுமையான வார்த்தை பிரயோகங்களோ எச்சரிக்கைகளோ இடம்பெறாது என்றும் தெரியவந்துள்ளது.

-Puthinam-

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Tue Jun 26 7:12:53 EEST 2007

முன்னாள் ஐ.நா. செயலர்கள் அடங்கிய குழ தனியாக ஒஸ்லோவில் இன்று இலங்கை நிலையை விவாதிக்கும்

நோர்வேத் தலைநகர் ஒஸ்லோவில் இலங்கை சமாதான முயற்சிகளுக்கான இணைத்தலைமை நாடுகள் இன்று செவ் வாய்க்கிழமை கூட்டம் ஒன்றை நடத்தும் அதேவேளை, சர்வதேச ரீதியில் சமாதான ஆர்வலர்களாகச் செயற்பட்டுவரும் ஐக் கிய நாடுகள் சபையின் முன்னாள் செய லாளர் நாயகம் பதவி வகித்த இருவர் உட்பட முக்கிய பிரமுகர்கள் சிலர் தனியே புறம்பாக ஒன்றுகூடி இலங்கை நிலைமையை விவாதிக்கவுள்ளனர்.

விடயமறிந்த இராஜதந்திர வட்டாரங்கள் இத்தகவலை வெளியிட்டிருக்கின்றன.

ஒஸ்லோவில் நடைபெறவிருக்கும் இந்த சமாதான ஆர்வலர்களின் கூட்டத் தில் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் பதவியை வகித்தவர் களான கொபி அனான், பூட்ரெஸ் பூட் ரெஸ் காலி ஆகியோரும் கலந்துகொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்களது ஈடுபாட்டுக்குரிய உலகளாவிய சமாதான விடயங்களில் ஒன்றாக இலங்கை நிலைமையையும் இவர்கள் தங் களுக்குள் விவாதிப்பர்கள் என்று இராஜ தந்திர வட்டாரங்கள் தெரிவித்தன.

வட அயர்லாந்து சமாதான முயற்சிகளில் சம்பந்தப்பட்டிருந்த சில பிரமுகர்களும் சமாதான ஆர்வலர்களின் இன்றைய கூட் டத்தில் பங்குகொள்வர் என்று தெரிகிறது.

இவர்கள் தாம் ஈடுபாடுகொண்ட சர்வதேச ரீதியிலான சமாதான முன்னெடுப்பு கள், அவற்றின் பெறுபேறுகள் ஆகியவை தொடர்பான கருத்துப் பரிவர்த்தனை களையும் மேற்கொள்வர்.

""இன்றைய கூட்டத்தில் இலங்கையின் சமாதான முன்னெடுப்புகள் தொடர்பான விவகாரமே முக்கிய இடம்பெறும்'' என உயர்மட்ட இராஜதந்திர வட்டாரங் கள் நேற்றுத் திங்கட்கிழமை தெரிவித் தன.

அமெரிக்க செனட்டர் ஜோர்ஜ் மிச்செல், ஜப்பானிய சமாதானத்தூதுவர் யசூசி அகாஷி மற்றும் பல சமாதான ஆர்வலர் கள் ஆகியோரும் இன்று சமூகமளிப்ப வர்களில் அடங்குவர் என வட அயர்லாந்து சமாதான முன்னெடுப்புகளுக்கான அனு சரணையாளர் குறிப்பிட்டார்.

உதயன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதன் 27-06-2007 17:45 மணி தமிழீழம் [மயூரன்]

யுத்த முனைப்புகளை கைவிட்டு சமாதான பாதைக்குத் திரும்புக - இணைத் தலைமை நாடுகள்

யுத்த முனைப்புக்களை கைவிட்டுவிட்டு மீண்டும் சமாதான நடவடிக்கைகளுக்கு திரும்புமாறு இணைத் தலைமை நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன.

கடந்த இரு நாட்களாக நோர்வே ஒஸ்லோவில் நடைபெற்ற இணைத் தலைநாடுகளின் மாநாடு தொடர்பாக நோர்வேயின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கருத்துரைக்கையில்...

அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் அதிகரித்து வரும் மோதல்கள் இணைத் தலைமை நாடுகளை கவலை கொள்ள வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இரு தரப்பினரும மீளவும் சமாதான நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பிக்க இணைத் தலைமை நாடுகள் மேற்கொள்ளும் எனவும் நோர்வே வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பதிவு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Posted on : Fri Jun 29 6:15:24 EEST 2007 நோர்வேப் பிரதிநிதிகளின் பயண வசதி: இணைத் தலைமைக் கூட்டத்தில் ஆராய்வு இலங்கை நெருக்கடி தொடர்பாக ஒஸ் லோவில் கூடி விவாதித்திருக்கும் இணைத் தலைமை நாடுகள், அரசு புலிகள் இடையே அனுசரணைப் பணியில் ஈடுபட்டுவரும் நோர்வேயின் பிரதிநிதிகள் எதுவித தடை, தாமதங்கள், அச்சுறுத்தல்கள் இல்லாது புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக் குச் சென்று வருவதற்கு வசதி செய்யப்படவேண்டியதன் அவசியம் குறித்தும் ஆராய்ந் திருக்கின்றன எனத் தகவல் வெளியாகி இருக்கிறது.நோர்வேப் பிரதிநிதிகள் கிளிநொச்சிக் குச் சென்று வருவதற்கான பயண வசதி களை வழங்கவேண்டும் என்று இலங்கை அரசிடம் கோருவதற்கு அந்நாடுகள் தீர் மானித்துள்ளன என்றும் அறியவந்துள்ளது.இலங்கையின் சமாதான செயற்பாடு களுக்கு மீண்டும் புத்துயிர் வழங்கும் பொருட்டு நாட்டுக்கு வருகைதரும் நோர்வே சமாதா னத் தூதுவர்கள் கிளிநொச்சிக்குச் சென்று விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்துவ தற்குத் தேவையான பிரயாண வசதிகளை வழங்குவதற்கு உடனடி நடவடிக்கை மேற் கொள்ளுமாறு இலங்கை அரசுக்கு அறி விப்பது என ஒஸ்லோ நகரில் கூடிய இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் இணைத் தலைமை தீர்மானித்துள்ளது.இலங்கையின

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.