Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் முழு ஊரடங்கு: எது எதற்கு அனுமதி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் முழு ஊரடங்கு: எது எதற்கு அனுமதி?


spacer.png

தமிழகத்தில் வரும் 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கை அமல்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதனால், உத்தரப் பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. அது போன்று, வரும் மே 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்திய நிலையில் இன்று இந்த அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில், தமிழ்நாட்டில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தத் தவிர்க்க முடியாத காரணங்களினால் மே 10ஆம் தேதி காலை 4 மணி முதல் மே 24ஆம் தேதி காலை 4 மணி வரை இருவாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிரச் சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும்.

வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களிலிருந்து விமானம் மற்றும் ரயில் போக்குவரத்து மூலம் வரும் பயணிகளைத் தொடர்ந்து கண்காணிக்க இ- பதிவு முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

3000 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க ஏப்ரல் 26ஆம் தேதி முதல் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை தவிரத் தனியாகச் செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள் காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. இவற்றில் ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். மேற்கூறிய மளிகை பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மீன் கடைகள் தவிர இதர கடைகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது.

அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்படும்.

தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி இல்லை. எனினும் வணிக காரணங்களுக்காகத் தங்கும் வாடிக்கையாளர்களுக்கும் ,மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு மட்டும் தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதிக்கப்படும்.

 

உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் அழகு நிலையங்கள் முடிதிருத்தம் கடைகள் இயங்க தடை விதிக்கப்படுகிறது

அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள், கேளிக்கை கூடங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், பொருட்காட்சி அரங்குகள், பொழுதுபோக்கு கேளிக்கை பூங்காக்கள், கூட்ட அரங்குகள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அனுமதி இல்லை.

கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லறை வியாபார காய்கறி அங்காடிகள் செயல்படத் தடை தொடர்கிறது. அதேபோன்று மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லறை வியாபார கடைகளுக்குத் தடையும் தொடர்கிறது.

அத்தியாவசிய துறைகளான தலைமைச் செயலகம், மருத்துவத்துறை வருவாய்த்துறை பேரிடர் மேலாண்மை, காவல்துறை, ஊர்காவல் படை, தீயணைப்புத் துறை மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைத்துறை, மாவட்ட நிர்வாகம், மாவட்ட தொழில் மையங்கள், மின்சாரம், குடிநீர், உள்ளாட்சி துறைகள், வனத்துறை அலுவலகங்கள், கருவூலங்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அலுவலகங்கள் தவிர மாநில அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது. அந்தந்த துறைத் தலைவர்கள் பணியாளர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதி செய்து தரவேண்டும். இந்த கட்டுப்பாடுகள் மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும்.

 

அனைத்து தனியார் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்படுகிறது. விதிவிலக்கு அளிக்கப்பட்ட தொழிற்சாலைகள் தவிரப் பிற தொழிற்சாலைகள் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை.

நீலகிரி மாவட்டம் கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கும் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது.

அனைத்து கடற்கரை பகுதிகளிலும் அனுமதி இல்லை.

பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள். அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், கோடைக்கால முகாம்கள் ஆகியவை இயங்க அனுமதி இல்லை.

நீச்சல் குளங்கள், விளையாட்டு பயிற்சி சங்கம் /குழுமங்கள் செயல்பட அனுமதி இல்லை.

மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான தனியார், அரசு பேருந்து போக்குவரத்து மற்றும் வாடகை டாக்சி ஆட்டோக்கள் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது.

அத்தியாவசிய பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத்தேர்வு வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கும், மருத்துவமனை செல்வதற்கும் உரிய ஆவணங்களுடன் பயணிப்பவர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

அத்தியாவசிய பணிகளான பால் வினியோகம், தினசரி பத்திரிக்கை வினியோகம் ,தனியார் விரைவு தபால் சேவை, மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள் ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத் துறை சார்ந்த பணிகள், அனைத்து சரக்கு வாகனங்கள் போக்குவரத்து, விவசாயிகளின் விளை பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள். ஆக்சிஜன் எடுத்து செல்லும் வாகனங்கள், எரிபொருளை எடுத்துச் செல்லும் வாகனங்கள் ஆகியவை முழுவதும் அனுமதிக்கப்படும்.

வேளாண் உற்பத்திக்குத் தேவையான பூச்சிக்கொல்லி, உரம், விதை விற்பனை செய்யும் கடைகள் மாட்டுத்தீவனம் விற்பனை செய்யும் கடைகள், காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.

முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில் உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படுகிறது. ஸ்விக்கி சொமாட்டோ போன்ற உணவு விநியோகம் செய்யும் நிறுவனங்கள் மேற்கண்ட நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது. சாலையோர உணவகங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்படும்.

காய்கறி மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும்.

நியாய விலை கடைகள் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்படும்.

 

தன்னார்வலர்கள், வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள், நோயுற்றவர்களுக்குச் சேவை வழங்குபவர்கள் தொடர்புடைய நிறுவனங்கள் வழங்கும் அடையாள அட்டை/ ஆவணங்களுடன் சென்று வர அனுமதிக்கப்படுகிறது.

நடைபெற்றுவரும் கட்டடப் பணிகள் அனுமதிக்கப்படும்

அரசாணை எண் 348, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 20.4. 2021ல் பட்டியலிடப்பட்டுள்ள தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஆகியவை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டையுடன் இங்கு பணியாற்றும் ஊழியர்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.

திருமணம் மற்றும் அதைச் சார்ந்த நிகழ்வுகள் 50 நபர்களுக்கு மிகாமலும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளுக்கு 20 நபர்களுக்கு மிகாமலும் கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை.

தொலைத்தொடர்பு மற்றும் அதனைச் சார்ந்த செயல்பாடுகள் அனுமதிக்கப்படும்.

கிடங்குகளில் சரக்குகளை ஏற்றுவது இறக்குவது மற்றும் சரக்குகளைச் சேமித்து வைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

முழு ஊரடங்கின் போது செயல்பட அனுமதிக்கப்படாத தொழில் நிறுவனங்களில் தீ, இயந்திரம் மற்றும் தொழிலாளர்கள் பாதுகாப்பிற்காக மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

முழு ஊரடங்கின் போது, இரயில் நிலையங்களிலும், துறைமுகங்களிலும், விமான நிலையங்களிலும், சரக்கு போக்குவரத்திற்கும், தொழிலாளர்கள் சென்று வரவும் அனுமதிக்கப்படும்.

பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி.

வங்கிகள், தானியங்கி பணம் வழங்கும் மையங்கள், வங்கி சார்ந்த போக்குவரத்து, காப்பீடு நிறுவனங்கள் அதிகபட்சம் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

மே 10ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால் பொதுமக்களும் நிறுவனங்களும் தங்களுக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்து கொள்வதற்காக இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களிலும் அனைத்து கடைகளும் நிறுவனங்களும் வழக்கம் போல் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


https://minnambalam.com/politics/2021/05/08/31/full-lack-down-in-tamilnadu-cm-stalin-order

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.