Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மே-18, இன எழுச்சி நாள்! அரசியற்துறை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியீட்டுள்ள அறிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மே-18, இன எழுச்சி நாள்! அரசியற்துறை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியீட்டுள்ள அறிக்கை!

  • May 18, 2021

673A0FF9-D1D6-4CA6-ABC3-F19C94A75925.jpe

எமது அன்பின் பெரு மதிப்பிற்குமுரிய தமிழ் மக்களே !

 

இன்றைய இந்த நாள் எமது தமிழ்த் தேசிய இனம் சிங்கள தேசத்தின் பயங்கர வாத இன அழிப்பு வன்மையாளர்களால் வயது வேறுபாடின்றி முதியோர்கள், கற்பிணித் தாய்மார்கள், எதுவுமே அறியா பச்சிளம் பாலகர்கள், இளையோர்கள் என எமது இனத்தின் மீது வன்மம் கொண்டு நன்கு கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையினைக் கட்டவிழ்த்து, அதனை அரங்கேற்றி, பல இலட்சம் எம்மின மக்களை கொலை வெறி கொண்டு கொலைத்தாண்டவமாடி கொன்றொழித்து, சிங்கள ஆட்சியாளர்களும், சிங்கள தேசமும் வெற்றிக்களிப்பாடிய – எங்கள் தேசத்தின், எங்கள் இனத்தின், வரலாறு மறந்து, மறைந்து போகாத கரி நாளாகும்.

பல ஆண்டு காலமாக எமது தாயக பூமியில் இடைக்கால தன்னாட்சி அரசை நிறுவி ஆட்சி செய்த தமிழ் இனம் பன்னாட்டு சமுகத்தின் ஆதரவோடும் அனுசரணையோடும் தமிழினத்துக்கு நீதியானதும் நிலையானதுமான அரசியல் தீர்வைச் சமாதான பேச்சு வார்த்தையின் மூலம் காண வெளிப்படை விருப்பத்தைக் காட்டியது. ஆனால் உலகம் பாரா முகம் கொண்டிருந்த இந்த சந்தர்ப்பத்தைச் சாதகமாக்கிக் கொண்ட இனவாத இலங்கை அரசு அதன் இராணுவ படைகளைப் பலப்படுத்தி தமிழ் மக்களின் இன விடுதலை போராட்டத்தை அழிக்க முற்பட்டது. இறுதியில் உலகமே பார்த்திருக்க மிகப்பெரிய இன அழிப்புப் படுகொலையினை அரங்கேற்றி வெற்றிக்களிப்பாடிய நாளே மே 18. இதையே எம்மினத்தின், தேசத்தின் மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பை நினைவுகொள்ளும் நாளாக அறிமுகப்படுத்தி “தமிழர் இனவழிப்பு நினைவுநாள்“ என்று உலகத்தமிழர்கள் நினைவுகூர்ந்து வருகிறார்கள்.

 

இந்நாள், ஐக்கிய நாடுகள் சபையில் “மனிதநேயம்” பேசுகின்ற உலக வல்லரசுகளின் இதயச் சாட்சியினை கேள்விக்குட்படுத்தி அவர்களின் போலியான முகத்திரையினைக் கிழித்து சிங்கள அரசின் நயவஞ்சகப் போக்கையும் தமிழின அழிப்பை நெறிப்படுத்துவதற்குத் துணையாக இருந்தவர்களின் கூட்டுச்சதியையும் இந்த உலகத்தின் முற்றத்தில் வெளிச்சமிட்டுக் காட்டிய துயர நாளாகும்.
பலந்தான் நீதியை நிர்ணயிக்கும் என்பது உலக நியதியாகிவிட்டால் மானுடம் தனது மாண்பை இழந்து காட்டுமிராண்டிக்கால ஒழுங்குக்கே செல்ல நேரிடும். பூகோளப் போட்டிகளும் பொருளாதார நலன்களும் பலம் மிகுந்தவர்களின் சார்பு நிலைப்பாடுகளும் எமது ஈழத்தமிழரின் நீதிக்கான பயணத்தில் எம்மைப் பகடைக்காய்களாகவே வைத்திருக்கின்றன. இருந்த போதும் எமது ஆயுதப் போராட்டத்தினை மெளனித்த பின்னர் நிர்கதியான நிலையில் இருக்கும் எமது இனம் சர்வதேச சமுகத்திடமிருந்து நிரந்தரமான தீர்வை எதிர்பார்த்து ஜனநாயக வழிப்பாதையில் எமக்கான நீதியையும் உரிமையையும் கேட்டு வருகின்றனர். ஆனால் இன அழிப்பிற்கான சர்வதேச விசாரணையோ, இனப்பிரட்சனைக்கான தீர்வோ இதுவரை எட்டப்படவுமில்லை, கிடைக்கவுமில்லை என்பதை சர்வதேச சமுகத்திடம் எமது இனம், எமது மக்கள் சார்பான இந்த துயரம் கொண்ட நாளில் வெளிப்படுத்துகின்றோம் .

ஈழத்தமிழராகிய நாங்கள் எல்லா வகையான உள்ளடக்கங்களையும் தன்னகத்தே கொண்டுள்ள ஒரு தேசிய இனம். அந்த வகையில் எமது ஆயுத விடுதலைப் போராட்டமாக இருந்தாலும் சரி, எமது மக்களால் ஜனநாயக வழியில் மேற்கொள்ளப்படுகின்ற அரசியல் நடவடிக்கைகளாக இருந்தாலும் சரி எமது இனத்தின் தேசிய சுய நிர்ணய உரிமை எனும் மூலக்கோட்பாட்டின் அடிப்படையிலே நாம் எங்கள் அரசியல் நகர்வுகளை மேற்கள்கின்றோம். ஈழத் தமிழ் மக்களுக்கு தங்கள் அரசியல் தலைவிதியைத் தாங்களே தீர்மானிக்கும் தார்மீக உரிமை ஒரு தேசிய இனம் எனும் அடிப்படையில் உண்டு. சர்வதேச சட்ட மரபுகளும், விதிமுறைகளும் ஐ. நா சாசனமும் இந்த உரிமைகளை வலியுறுத்தி நிற்கின்றன. இந்த தேசிய சுய நிர்ணய உரிமைகளின் அடிப்படையிலே எமது அரசியல் ரீதியான நகர்வுகளும் ஜனநாயக வழியிலான போராட்டங்களும் நெறிப்படுத்தப்பட்டு முன் நகர்ந்து கொண்டிருக்கின்றன.


எமது இனத்தின் சுதந்திர விடுதலைப் போராட்டமானது அரை நூற்றாண்டுகளையும் தாண்டி நகர்ந்து கொண்டிருக்கின்றது. சிறி லங்காவின் சிங்கள, பெளத்த பேரினவாத அரசுகளின் திட்டமிட்ட ஒடுக்கு முறைகளும், இனவழிப்புகளும், நன்கு கட்டமைக்கப்பட்டு கட்டவிழ்த்து விடப்பட்ட தமிழர் நில ஆக்கிரமிப்புக்களும், தமிழர்களின் பூர்வீக தாய்நிலத்தில் என்றுமில்லாதவாறு மேலோங்கி பூதாகாரம் எடுத்து நிற்கின்றது. எனவே இவைகளுக்கு எதிராக தற்காத்து கொள்ள வேண்டிய கட்டாய சூழ்நிலைகளில் இருந்தும், எம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும் எமது இருப்பு நிலைகளைத் தக்க வைத்துக் கொள்ளவும் ஈழத்தமிழர்களாகிய நாங்கள் தொடர்ந்து போராடி வருகின்றோம். அவ்வகையில் இன்றுவரை எமது மக்கள் தங்களது அரசியல் ஜனநாயகப் போராட்டங்களைக் கைவிட்டுவிடவில்லை. எத்தகைய ஒடுக்கு முறைகள் வந்தாலும் அதனை எதிர்த்து தொடர்ந்தும் தீர்க்கமாக விடுதலையினை வேண்டி இன்றுவரை போராடிக்கொண்டே இருக்கின்றனர்.


அந்த வகையில் தாயகத்திலும், புலத்திலுமாக நடாத்தப்படுகின்ற அனைத்து அரசியல் போராட்டங்களிலும், நிகழ்வுகளிலும் சாத்தியமான முறையில் ஒன்று திரட்டப்பட்ட எமது இனத்தின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மேற் கொள்வதன் அவசியத்தை தற்கால உலக ஒழுங்குகள் எமக்கு உணர்த்தி நிற்கின்றன.

 

அத்துடன் அரசியல் கட்சிகள் தங்களது அரசியல் சுய போக்குகளுக்கு அப்பாற்பட்டு தாயகத்தின் அறப்போராட்டங்களில் ஈடுபடும் எமது இன மக்களுடன் தாங்களும் கைகோர்த்துப் போராடுமாறு கேட்டுக் கொள்கின்றோம். அதே வேளை முற்றிலும் போலி மனநிலைப்பாட்டினைக் கொண்டதும், மனித உயிர்களுக்குச் சொந்தமான குறைந்தபட்ச உரிமைகளைக்கூட பகிர்தளிக்க நினைக்காத மன நிலையினைக் கொண்ட சிங்களபேரினவாத அரசுகளோடு இணைந்து அவற்றிற்குச் சேவகம் செய்கின்ற அரசியல் போக்கில் இருந்து விடுபட்டு தன்மானத் தமிழர்களாய் ஒன்றிணைந்து”சுய”நிர்ணய உரிமைக் கோட்பாட்டின் அடிப்படையில் எமது இனத்தின் இறயாண்மையை வலியுறுத்தும் தீர்வுத் திட்டம் ஒன்றிற்கான பரிந்துரைகளை உலக நாடுகளுக்கும் இலங்கை அரசிற்கும் முன் வைப்போம்.
இதற்காக உலகத் தமிழர்கள், தமிழ் அரசியல் தலைவர்கள் அனைவரையும் இன அழிப்பு நாளான இன்றைய மே 18 இல் எம்மோடு ஒன்றிணைந்து பயணிக்க முன்வாருங்கள் என அன்பாக அழைக்கின்றோம்.

எங்கள் மக்களால் முன்னெடுக்கப்பட்ட இன விடுதலை ஆயுதப் போராட்டம் 2009 மே 18 அன்று மெளனிக்கப்பட்ட அன்றுடன் சிறிலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான இனவழிப்புப் போர் நின்று விடவில்லை என்பதனை சரவதேசம் அறிந்து கொள்ள வேண்டுமென விரும்புகின்றோம். சிறிலங்கா அரசின் திட்டமிட்ட இனவழிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. எமது மக்களின் பூர்வீக நிலங்கள்- குறிப்பாக பூர்வீக நிலத் தொடர்புள்ள பிரதேசங்கள் கூறுபோட்டுத் துண்டாடப்பட்டு இனவிகிதாசாரத்தை மாற்றும் நோக்கோடு சிங்கள இன மக்கள் குடியேற்றப்படுகின்றனர். விவசாயத்திற்கென்றும், மகாவலி அபிவிருத்தியென்றும், தொல்பொருள் ஆராய்ச்சியென்றும் தாயக பூமியைக் கூறுபோட்டு தமிழர் தாயக பாரம்பரிய நிலங்களை, தாயக மண்ணை சூரையாடுகின்றனர்.

மேலும் எமது இனத்தின் கலை – பண்பாட்டு விழுமியங்கள் நன்கு திட்டமிடப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. தமிழர்களின் வணக்கத்தலங்கள் பெளத்த விகாரைகளாக்கப்படுகின்றன. அதனூடாக தமிழர்களின் வரலாற்றுக் கல்வெட்டுக்கள் அழிக்கப்படுகின்றன. மேலும் தமிழ்த் தேசிய கருத்துரைப்போர், தமிழர்களின் அடிப்படைஉரிமை பற்றி பேசுபவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர். ஏதேனும் ஒருவகையில் நிலப்பரப்பைச் சுருக்கி தமிழரின் இனப்பரம்பலைக் குறைக்கும் திட்டமிட்ட இனவழிப்பு இன்றுவரை தொடர்ந்து கொண்டே செல்கின்றது என்பதனை சர்வதேச சமுகத்திற்கு தமிழின இனவழிப்பு நினைவு நாளான இன்றைய நாளில் குறிப்பிட்டு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

 

தாய்த் தமிழக உறவுகளே,
கட்சி, இயக்க பேதமற்று 2009 க்கு முன்னர் எப்படி எமக்கான ஆதரவினை தந்தீர்களோ அதேபோன்று இனி வருங்காலங்களில் சிறி லங்கா அரச பயங்கரவாதத்தால் கொத்துக் கொத்தாக கொலை செய்யப்பட்டு கொன்றொழிக்கப்பட்ட உங்கள் தொப்புட்கொடி உறவுகளின் நீதிக்காகவும், நிம்மதிக்காகவும், வாழ்வுக்காகவும் தொடர்ந்து கரம் கோர்த்து நில்லுங்கள் என்பதனை தோழமையோடும், பற்றோடும் வேண்டி நிற்கின்றோம்.

கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக, மூன்று கட்டங்களாக அகிம்சை, ஆயுத, ஜனநாயக போராட்டங்களில் இன விடுதலையினை வேண்டிப் போராடி வருகின்றோம். இதுவரை தமிழர்களின் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வு ஏதேனும் ஒருவகையிலாவது கிடைக்கப் பெறவில்லை. ஆயுதப் போராட்டத்தை கைவிட்டால் இன பிரச்சினைக்கான தீர்வை ஏற்படுத்தித் தருவோம் எனக் கூறிய சர்வதேச நாடுகளும், அதன் சமூகங்களும் இப்போது மெளனம் காத்து கொண்டிருக்கின்றன. சிறி லங்காவின் அரச பயங்கரவாதத்தினால் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்றுவரை போராடி வருகின்றனர். அவர்களுக்கான நீதி கூட இன்றுவரை கிடைக்கவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இறந்து கொண்டே இருக்கின்றனர். அதன் சாட்சியங்கள் மெதுமெதுவாக இல்லாமல் போகின்றனர். புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் தமிழகத்தின் தி.மு.க அரசும் ஏனைய கூட்டணிக் கட்சிளும் தங்களின் தேர்தல் அறிக்கையில் கூறியவை மட்டுமன்றி ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கும், இனவழிப்பிற்கான நீதி கிடைப்பதற்குரிய அரசியல் அழுத்தங்களை உளப்பூர்வமாகச் செய்வீர்கள் என அன்புரிமையுடன் எதிர்பார்த்து நிற்கின்றோம்.


தாயக விடுதலையைக் குறிக்கோளாகக் கொண்டு போராட்டத்தைத் தலைமை தாங்கிய எமது விடுதலை இயக்கம் ஆயுதங்களை மெளனித்து பதினொரு ஆண்டுகள் நிறைவடைகிறன்றன. எமது மக்களின் மேல் கொடிய யுத்தத்தைத் திணித்து பல்லாயிரம் உயிர்களைப் பலியெடுத்து வென்ற மமதையில் சிங்கள தேசம் இந்நாளை வெற்றிவிழாவாகக் கொண்டாடுகிறது. அத்தோடு எமது மக்கள் தமது உடன்பிறப்புக்களை நினைவுகூர முடியாதவண்ணம் தடைகளைப் போடுகின்றது. முள்ளிவாய்க்காலின் நினைவுக்கல்லைத் தகர்த்து தமிழ்மக்களின் ஆன்மா மீது ஆழமான வடுவைப் பதித்துள்ளது.

இந்நேரத்தில், நாம் சர்வதேசத்திற்கு ஒரு வேண்டுகோளை முன்வைக்கிறோம். அரச பயங்கரவாதத்துக்கும், தமிழின அழிப்புக்கும் துணைபோன உங்களின் மனசாட்சியைத் தொட்டு இறுதிநேர யுத்தத்தில் நிகழ்த்தப்பட்ட பாரிய இனஅழிப்பை முன்னிறுத்தி சிறிலங்கா அரசை யுத்தக் குற்றவாளியாக வெளிப்படுத்துவதுடன், நீதியான விசாரணைகளை நடத்துவதற்கும் தற்போதைய தமிழ்மக்களின் ஜனநாயக அரசியல் கட்டமைப்புக்களை அங்கீகரித்து தமிழர்களின் உரிமைகளை ஜனநாயகரீதியில் வென்றெடுக்க துணைநிற்க வேண்டுமென கேட்டுக்கொள்கின்றோம்.


யுத்த காலப்பகுதியில் கொத்துக் கொத்தாகவும், குடும்பம் குடும்பமாகவும் மக்கள் கொன்றொழிக்கப்பட்டபோது தமது உறவுகளை இழந்த குடும்பத்தினரின் வேதனையிலும் போரின் வடுக்களைச் சுமந்து நிற்பவர்களின் துயரிலும் நாம் பங்கெடுத்துக் கொள்கிறோம். இதுவரை காலமும் எமது விடுதலைப் போரில் தம்முயிர்களை ஈகம் செய்த மாவீரர்களையும் போராட்ட காலத்தில் கொல்லப்பட்ட மக்களையும் நினைவுகூரும் இவ்வேளையில், நாம் அனைவரும் எமது தாயகத்தின் விடிவுக்காக ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் போராட இந்நாளில் உறுதியெடுத்துக் கொள்வோமாக.
நன்றி
அரசியல்துறை
தமிழீழ விடுதலைப் புலிகள்.


 

https://www.meenagam.com/மே-18-இன-எழுச்சி-நாள்-அரசியற/

 

 

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே,

இது உண்மையான அறிக்கையா? இங்கே நிழல்படமாக இருக்கும் மனிதர் யார்? இவரை நான் முன்னர் அறிந்ததில்லையே?

தமிழ் தேசியத்தின் ஒற்றை தலைமையாக அண்ணன் இருக்கும் போது இப்படியானவர்களுக்கு தேவைதான் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

இதிலிருக்கும் நபர் சுவிஸிலிருக்கும் தயாமோகனா. இவர் இப்போது கருணாவின் கட்டளையில் விடுதலைப் புலிகள் மீதான ஐக்கிய இராட்சிய தடையை மீளக்கொண்டுவரும் நோக்கமாக விட்ட அறிக்கை என்று கதைக்கிறார்கள் உண்மையா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.