Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்ப்பாணமும் ஒட்டுக்குழுக்களும்

Featured Replies

யாழ்ப்பாணமும் ஒட்டுக்குழுக்களும்

யாழ்குடாநாட்டில் ஏற்கனவே இருந்த ஒட்டுக்குழுவினரைவிட மேலதிகமாக ஈ.என்.டி.எல்.எப் ஒட்டுக்குழுவினர் தற்போது புதிதாக களம் இறக்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. யாழ்.குடாநாட்டை படையினர் ஆக்கிரமித்த கையுடன் குடாநாட்டில் ஈ.பி.டி.பி, ஈ.பி.ஆர்.எல்.எப், வரதர் அணி, புளொட், ஈ.பி.டி.பி யில் இருந்து பிரிந்து இயங்கிய சனநாயகப் பேரவை ஆகிய ஆயுதம் தாங்கிய ஒட்டுக்குழுவினர் தங்களை அரசியல் கட்சிகள் எனப் பதிவு செய்து கொண்டு குடாநாட்டில் தமது தமிழர் விரோத நடவடிக்கைகளை விரிவு படுத்தி வந்தனர்.

இக்காலப்பகுதியில் குறிப்பாக 1996ம் ஆண்டு காலப்பகுதியில் தான் இந்த குழுவினரின் நடவடிக்கைகள் குடாநாட்டில் தீவிரமாக இருந்தன இக்குழுவினரை நேரடியாகப் படைப்புலனாய்வுத் துறையினரே கையாண்டு வந்தனர். எனினும் இக்குழுவினர்கள் இடையே நிலவிய உள்முரண்பாடுகள் காரணமாகவும், அக்குழுவினரின் தலைவர்கள் கொல்லப்பட்டதன் காரணமாகவும் அவர்களுடைய செயற்பாடுகள் மந்த நிலைக்கு வந்துள்ளன.

குடாநாட்டைப் பொறுத்தவரை இவ்வொட்டுக்குழுவினரின் செயற்பாடு உளவுத் தகவல்களை சேகரிப்பதும், மக்களின் உணர்வலைகளை அறிவதுமே ஆகும். அத்துடன் தேவை ஏற்படின் தலையாட்டிகளாக செயற்படுவது, படையினரால் நடத்தப்படும் சித்திரவதை கூடங்களிற்கு சென்று கைது செய்யப்பட்டு வதை செய்யப்படும் தமிழர்களை மேலும் வதைக்குட்படுத்துவது உட்பட பல்வேறு தேசவிரோத நடவடிக்கைகளிற்கு இவர்கள் படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் சிறிலங்காவின் அமைச்சராகவும், ஒட்டுக்குழுவின் தலைவராகவும் இருந்து வரும் டக்ளஸ் தேவானந்தாவைப் பற்றி அவருடன் கூட இருந்து செயற்பட்டு பிரிந்த சகோதரர்களான இராமமூர்த்தி, இராமேஸ்வரன் ஆகியோர் ஜனநாயகப் பேரவை என்ற கட்சியை இயக்கிக் கொண்டு எதிரான பிரச்சாரங்களை முடுக்கிவிட்டிருந்தனர்.

உண்மையில் சொல்லப்போனால் டக்ளஸ் தேவானந்தாவின் அந்தரங்க வாழ்க்கை பற்றியும் அவரின் ஊழல் மோசடிகள் பற்றியும் துண்டுப்பிரசுரங்கள் மூலம் மக்களிற்கு தெரியப்படுத்தி வந்தனர்.

இந்த பிரச்சார நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டவர் சிவா என்பவர் ஆகும். இவரது நடவடிக்கைகளை அவதானித்த டக்ளஸ் தேவானந்தா இவரிற்கு நேரடியாகவும் படைப்புலனாய்வுத்துறையினர் ஊடாகவும் கொலை அச்சுறுத்தல்களை விடுத்து வந்தார். இதனை அடுத்து அவர் தலைமறைவாகி வெளிநாடு ஒன்றிற்கு சென்றவிட்டார்.

இந்த நிலையில் இராமமூர்த்தி இராமேஸ்வரன் அகியோரால் மேற்கொண்டு செயற்படமுடியாத நிலை உருவாகியது. இதனை அடுத்து இவர்கள் வரதர் அணியுடன் கூட்டு வைத்தார்கள். அந்த கூட்டும் உடையவே இவர்கள் தங்களது கட்சியையும் கைவிட்டு தலைமறைவாகி வெளிநாட்டுக்கு செல்ல முடிவெடுத்தனர்.

இவர்களிற்கான வெளிநாட்டு பயண ஏற்படுகளை கடற்படையின் தீவகத் தளபதி முன்னாள் சனாதிபதி சந்திரிக்காவுடன் நேரடியாக தொடர்பு கொண்டு ஏற்படுத்திக் கொடுத்தார். ஏனென்றால் தீவகத்தை முன்னர் கடற்படையினர் ஆக்கிரமித்தபோது டக்ளஸ் தேவானந்தாவால் தீவகத்திற்கு அனுப்பப்பட்ட 11 ஈ.பி.டி.பி யினரில் இந்த மூன்று பேருமே பிரதானமானவர்களாகவும், கடற்படையினரது நடவடிக்கைளுக்கு பல்வேறு வகையில் உதவியவர்களாகவும் இருந்தனர். இந்த நன்றிக் கடனை, கடற்படையினர் மறக்காமல் செலுத்தினர். இதனுடன் அவர்களது கட்சியும் இல்லை. கதையும் இல்லை.

அடுத்து புளொட் ஆயுதக்கழுவின் செயற்பாட்டை யாழ்ப்பாணத்தில் பார்த்தால் யாழ்ப்பாண மாநகரசபை தேர்தலில் கள்ள ஓட்டின் மூலம் தெரிவு செய்யப்பட்ட மூன்று பேரை வைத்தே இவர்களின் அரசியல் ஒடியது. ஆனால் வடமாராட்சியில் செல்லக்கிளி மாஸ்டர் என அழைக்கப்பட்ட புளொட் ஆயுததாரி பருத்தித்துறை நகரசபை தலைவராக இருந்து கொண்டு காட்டிக் கொடுப்புகளிலும், கப்பம் பெறுவதிலும் படையினருடன் இணைந்து பொதுமக்களை கடத்துவதிலும் திவிரமாக ஈடுபட்டார். இதனால், இவரின் ஆட்டம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. இவரை இனம் தெரியாதவர்கள் சுட்டதாகவும், ஈ.பி.டி.பியின் வடமாராட்சிப் பொறுப்பாளராக இருந்த ஐயாத்துறை ரங்கன் என்பவர் சுட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன உண்மையில் யாழ்ப்பாணத்தில் ஈ.பி.டி.பியை விட வேறு ஒட்டுக் குழுவினர் தலையெடுக்க முற்படுவதை அவர்கள் ஒரு போதுமே விரும்பியதில்லை.

இவரின் இறப்பின் பின் யாழ்ப்பாணத்தில் மட்டும் இவர்களது நடவடிக்கைகள் படைப்பு லனாய்வத்துறையினரின் அனுசரனையுடன் முன்னெடுக்கப்பட்டு வந்தது. இந்த நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்பாளராக தவநாதன் என்ற புளொட் ஆயுததாரி செயற்பட்டு வந்தார். இந்த நிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டு விடுதலைப் புலிகள் குடாநாட்டிற்குள் வந்த கையுடன் இவர்களது நடவடிக்கைகள் முடிவிற்கு வந்ததுடன் கட்சி அலுவலகமும் மூடப்பட்டது. ஒரு சிலர் மறைமுகமாக படைப்புலனாய்வுத்துறை முகாம்களில் இருந்து இப்போதும் செயற்பட்டு வருகின்றனர்.

ஆனால் புளொட் என்ற அமைப்பாக இல்லாமலே இவர்களது அடுத்த செயற்பாடுகள் உள்ளது. ஈ.பி.ஆர்.எல்.எப் வரதர் அணியைப் பார்த்தால் வரதர் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், இந்தியாவில் இருக்கும் வரதராஜப் பெருமாளின் விசுவாசியாகவும் இலங்கையில் அதுவும் யாழ்ப்பாணத்தில் இருந்த செயற்பட்டவர் தம்பிராசா சுபத்திரன் ஆவார். இவர் அனைத்து மட்டங்களிலும் தொடர்புகளை வைத்திருந்தார்.

படை உயர்மட்டம் இந்திய புலனாய்வு அமைப்பான றோ மற்றும் அரச உயர்மட்டம் வெளிநாட்டு ராஜதந்திரிகள் உட்பட அனைத்து மட்டங்களிலும் தொடர்புகளை வைத்துக் கொண்டு விடுதலைப்புலிகளிற்கு எதிரான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வந்தார். இவர் உள்நாட்டில் குறிப்பாக கொழும்பில் சரி யாழ்பாணத்திலும் சரி ஊடகவியலாளர்களுடன் நல்ல தொடர்புகளை வைத்திருந்தார்.

உண்மையில் ஒரு நாட்டின் தலைவிதியை திர்மானிப்பதில் ஊடகங்கள் பிரதான பங்காற்றுகின்றன இதை தமிழினத்திற்கு எதிராக எமது விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக செயற்பட்ட ஒருவர் உணர்ந்து அந்த ஊடகங்களை வசீகரப்படுத்தி தனது இலக்கை அடைவதற்கு பரீட்சித்துப் பார்த்து தோற்றுப் போய்விட்டவர் தான் சுபத்திரன் என்று சொல்லலாம். ஏன் என்றால் இந்த வேளையில் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் உண்மைக்காகவும் எமது தேசியத்திற்காவும் உறுதியாக செயற்பட்டுள்ளார்கள். ஆனால் ஊடகவியலாளர்களை ''போட்டுத்தள்ளும்'' டக்ளஸ் தேவானந்தாவின் அணுகுமுறையைவிட இவரின் அணுகுமுறை தோல்வியைத் தழுவினாலும் பரவாயில்லை என்றே சொல்லலாம். இனி விடயத்திற்கு வருவோம்.

சுபத்திரன் மாநகரசபை உறுப்பினராக இருந்து செயற்பட்ட காலத்தில் ஈ.பி.டி.பிக்கும் இவருக்கும் இடையில் பல தடவைகள் முரன்பாடுகள் வந்துள்ளன. எனினும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்ட கையுடன் விடுதலைப் புலிகள் குடாநாட்டிற்குள் அரசியல் பணிக்காக வந்ததும் ஈ.பி.டி.பியும் வரதர் அணியினரும் மீளவும் ஐக்கியமாகி செயற்படத் தொடங்கினர். இந்த நிலையில் சுபத்திரன் சினைப்பர் தாக்குதலில் கொல்லப்பட்டவுடன் சுகு என்பவர் கட்சிப் பொறுப்பை எடுத்த போதிலும் இவரின் செயற்பாட்டில் திருப்தி காணாத படைத்தரப்பு இவர்களை செல்லாக்காசாகவே தற்போது கருதி வருகிறது. இந்த நிலையில் ஈ.பி.டி.பி யின் கைப்பொம்மையாக மட்டுமே இவர்களால் குடாநாட்டில் தற்போது செயற்பட முடிகிறது.

ஓட்டுமொத்தத்தில் குடாநாட்டில் ஈ.பி.டி.பி.யை முந்திக்கொண்டு போக எந்த ஒட்டுக்குழுவையும் டக்ளஸ் விடமாட்டார் என்பது மட்டும் உண்மையாகும். இந்த நிலையில் தான் கருணா குழுவினர் யாழ்ப்பாணத்தில் முகாம் அமைக்கப்போவதாக சிறிலங்கா இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவிடம் கேட்டபோது பொன்சேகா சொன்னாராம் டக்ளஸ் விரும்பினால் செல்லலாம் கேட்டு சொல்கிறேன் என்று. டக்ளஸ் இடம் கேட்ட போது அவர் சொன்னாராம் கருணா குழுவை யாழில் இயங்கவிட்டால் உங்களுக்கும் கூடாது எங்களுக்கும் கூடாது எனவே விடவேண்டாம் என்று. இதனை அடுத்து கருணா குழுவினர் குடாநாட்டில் படையினருடன் இணைந்து மறைமுகமாக செயற்படுகின்றனரே தவிர வெளிப்படையாக இவர்களின் செயற்பாடுகள் குடாநாட்டில் இல்லை. இதேவேளை சிறிலங்காத் தலைவர்கள் இந்தியாவிற்கு சென்ற போது றோ அமைப்பு ஈ.என்.டி.எல்.எப் குழுவை அறிமுகப்படுத்தி அதன் அலுவலகம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் திறந்து செயற்பட அனுமதிக்குமாறு கோரப்பட்டது. இதற்கு இலங்கையும் பச்சைக் கொடிகாட்டியது.

ஆனால் களநிலைமைகளை பார்வையிட ஈ.என்.டி.எல்.எப் ஆயுதாதரிகள் பலாலிப்படைத்தளத்தை வந்தடைந்தடைந்த வேளை டக்ளஸ் பதறி அடித்துக் கொண்டு சனாதிபதி மகிந்தவுடன் தொடர்பு கொண்டு ஈ.என்.டி.எல்.எப். யாழ்.குடாநாட்டில் இயங்குவதானால் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ்தான் செயற்பட வேண்டும். இல்லையேல் அவர்கள் அலுவலகம் திறந்த மறுநிமிடமே தங்கள் அலுவலகத்தை யாழ்ப்பாணத்தில் மூடிவிடுவோம் என்று கூறினாராம். இதற்கு பதில் அளித்த சனாதிபதி வந்தவர்களை உங்களுடன் பேசச் சொல்கிறோம் உங்களுடன் உடன்பட்டால் திறக்கட்டும் இல்லை என்றால் இந்தியாவிற்கே செல்லட்டும் என்று கூறினாராம். இதனை அடுத்து பலாலிப் படைத்தள கட்டுப்பாட்டு மையத்திற்கு சனாதிபதியிடம் இருந்து நேரடி அழைப்பு எடுக்கப்பட்டு சனாதிபதியின் முடிவு கூறப்பட்டது.

இதனை அடுத்து ஈ.என்.டி.எல்.எப் குழுவினர் டக்ளசை சந்திக்க மறுத்து விட்டனர். இதனால் அவர்கள் பலாலிப்படைத்தளத்தில் வைத்தே திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களிற்கு எதிராக செயற்படுவதில் தாங்களே முன்னணியில் இருப்பார்கள் என்பதை ஈ.பி.டி.பியினர் மீண்டும் ஒரு தடைவ நிரூபித்துள்ளனர்.

புங்குடுதீவில் கண்டெடுக்கப்பட்ட சடலம் ஜிம்பிறவுன் அடிகளாரின் உடலம் என மரபணுப் பரிசோதனையின் மூலம் கண்டபிடிக்கப்பட்டுள்ளது. ஜிம்பிறவுன் அடிகளது படுகொலை ஈ.பி.டி.பியினரால் மேற்கொள்ளப்பட்டதென்பது வெளிப்படையாகத் தெரிந்த விடயம். இத்தகைய படுகொலைகளையும் ஆட்கடத்தல்களையும் மேற்கொள்ளும் ஈ.பி.டி.பி உண்மைகள் அம்பலமாகின்றபோது அதை மூடிமறைப்பதில் பகீரதப்பிரயத்தனத்தில் ஈடுபட்டு வருகிறது. ஜிம்பிறவுன் அடிகளாரின் மரணத்தையும் மூடிமறைப்பதில் அவர்கள் தீவிரம் காட்டிய போதும் அது தோற்றுப்போய் விட்டது என்றே சொல்லலாம். ஒட்டுமொத்தத்தில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒட்டுக்குழுக்களில் ஈ.பி.டி.பியே தற்போது முன்னணியில் நின்று செயற்பட்டு வருகின்றதென்பது தான் உண்மை.

வே.தவச்செல்வன்

http://www.pathivu.com/

ஆமாம் ஆமாம் யாழில் இராணுவச்சீருடை அணிந்த ஒட்டுக்குழுவினரை சர்வசாதாரணமாகக் காணக்கூடியதாக உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.