Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

Ghost Town: இந்த நகரம் இப்போது உலக வரைப்படத்தில் இல்லை - ஏன் தெரியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Ghost Town: இந்த நகரம் இப்போது உலக வரைப்படத்தில் இல்லை - ஏன் தெரியுமா? | பகுதி 1

Ghost Town: இந்த நகரம் இப்போது உலக வரைப்படத்தில் இல்லை - ஏன் தெரியுமா? | பகுதி 1

Ghost Town: இந்த நகரம் இப்போது உலக வரைப்படத்தில் இல்லை - ஏன் தெரியுமா? | பகுதி 1
Ghost Town
Ghost Town

இரவு, பகலாக அணையாமல் எரிந்துக் கொண்டேயிருந்தது. மக்கள் பயந்தனர். தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர்.

ஒரு தொடக்கத்திற்கும், முடிவிற்குமான இடைவெளியில் ஒரு பெரும் பயணம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இயற்கையின் மற்றுமொரு பரிமாணத்திலிருந்து இதைப் பார்த்தோமேயானால், ஒரு முடிவு அல்லது அழிவிலிருந்து தான் புதிய தொடக்கம் தொடங்குகிறது. இதன் வழி வரும் செய்தி, முடிவும், தொடக்கமும் மிக மிக நெருக்கத்தில் இருக்கின்றன என்பதே.

ஒவ்வொரு நாளும் முன்னால் முன்னேறி செல்லும் நாம் கவனிக்க மறந்த மிக முக்கிய விஷயங்களில் ஒன்று “முடிவுகளின் கதை”. அனுதினமும் புதிய கண்டுபிடிப்புகள், புதிய தொடக்கங்களால் நிறைந்திருக்கும் இந்த தொழில்நுட்ப உலகத்தில் முடிவுகளின் கதைகளை அறிந்துகொள்ள வேண்டியது மிக மிக முக்கியமான விஷயமாக மாறியிருக்கிறது.

அப்படியாக, சில முடிவுகளின் கதைகளை இந்தத் தொடரில் காண இருக்கிறோம். பல காரணங்களால் அழிந்துப் போன, பல காரணிகளால் அழிக்கப்பட்ட நகரங்களின் கதைகளை வெளிச்சம் போட்டு காட்டவிருக்கிறது இந்த “ Ghost Town “ தொடர்…

அத்தியாயம் - 01

“ எந்த மனிதனும் வாழ்ந்திட முடியாத நிலையை எட்டியிருந்தது அந்த ஊர். அது புதன் (Mercury ) கிரகத்தைவிடவும் சூடாக இருந்தது. சனி ( Saturn ) கிரகத்தில் நிரம்பியிருக்கும் விஷவாயுக்கள் அத்தனையும் அதன் காற்றில் பரவியிருந்தன. அந்த மண்ணின் பல இடங்களில் வெப்பம் 1000 டிகிரி Fahrenheit-யை கடந்திருந்தது. நான் அங்கு சென்ற நாளை என் வாழ்வில் மறக்கவே முடியாது. “

- David Dekok - அமெரிக்காவின் பிரபல புலனாய்வு பத்திரிகையாளர்.

அமெரிக்க ஒன்றியத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களித்த பென்சில்வேனியா மாகாணத்தின் ஒரு சிறு நகரம் சென்ட்ராலியா. பென்சில்வேனியா மாகாணம் முழுக்கவே பல்வேறு தாதுவளங்களால் நிறைந்திருந்தது.

Ghost Town
 
Ghost Town

உலகின் மிக அரிதான, விலை அதிகமான ஒரு நிலக்கரி வகை 'ஆந்த்ரசிட் ' ( Anthracite Coal ). 1800 களின் தொடக்கத்தில் சென்ட்ராலியா நகரத்தில் இந்த வகை நிலக்கரிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, சுரங்கங்கள் அமைக்கப்பட்டன.

இன்னும் ஏராளமான நிலக்கரிச் சுரங்கங்கள் அமைப்பதற்கான இடங்கள் இருந்தாலும், அந்தக் கடினமான வேலைகளுக்கு அப்போது அமெரிக்காவில் ஆட்கள் இல்லை. அந்த சமயத்தில்தான், சென்ட்ராலியா நகருக்கு வந்து சேர்ந்தார்கள் ' Molly Maguires ' எனும் ரகசிய அமைப்பைச் சேர்ந்தவர்கள். இவர்களைப் பற்றி அறிந்துக்கொள்ள நாம் 1800களின் வட-மத்திய Ireland வரலாற்றினைத் தெரிந்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

1800களின் ஆரம்பத்தில் IRELAND நாட்டில் பரவிய ஒருவிதமான பூஞ்சை ( Fungus ) காரணமாக, அந்த நாட்டின் உருளைக்கிழங்கு விவசாயம் முழுக்க பாதிப்படைந்தது. இதை வரலாற்றில் ”The Great Potato Famine” என்று சொல்வார்கள்.

Ghost Town
 
Ghost Town

அங்கு ஏற்பட்ட பஞ்சத்தைத் தொடர்ந்து, பெரிய கிளர்ச்சிகள் உருவாயின. அங்கு நிறைய ரகசிய அமைப்புகளும் ( Secret Societies ) உருவாயின. அங்கிருந்த நிலக்கிழார்களுக்கு எதிராகப் பெரிய போராட்டங்கள் நிகழ்ந்தன.

அப்படியான ரகசிய அமைப்பில் ஒன்று தான் Molly Maguires. இந்த Mollies Ireland-லிருந்து, அகதிகளாக அமெரிக்காவின் Pennsylvania மாகாணத்திற்குள் வந்தார்கள். இவர்கள் பலவிதமான கொலைகள், கொள்ளைகள், திருட்டுகளுக்கு காரணமாக இருந்ததாக சொல்லப்படுகிறது. சிலர் அதை இன்றளவும், மறுக்கவும் செய்கிறார்கள்.

Ghost Town
 
Ghost Town

எதுவாக இருப்பினும், Mollies-யின் வருகை, சென்ட்ராலியாவில் பல புதிய நிலக்கரி சுரங்கங்கள் தொடங்க காரணமாக அமைந்தன. காலம் நகர, நகர சென்ட்ராலியாவின் நிலக்கரியில் பெரும்பாலானவை எடுக்கப்பட்டுவிட்டன. பல நிறுவனங்களும், சுரங்கங்களை மூடிவிட்டு நகரை காலி செய்து கிளம்பிவிட்டன. இருந்தும், “Strip Mining” என சொல்லப்படும் முறையில் நிலக்கரி எடுக்கப்பட்டதற்கான தடயங்கள் சின்ன, சின்னக் குழிகளாக நகரமெங்கும் இருந்தன. ஆனால், சென்ட்ராலியா மக்கள் அதை இயல்பாக எடுத்துக் கொண்டு வாழ்ந்து வந்தார்கள்.

மக்கள்
 
மக்கள்

1962ம் ஆண்டு, மே மாதம் 7ம் தேதி, எதிர்வர இருக்கும் 'தியாகிகள் தினத்திற்கான' ஏற்பாடுகள் குறித்து பேச ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. நகரின் முக்கிய பிரமுகர்கள் கலந்துக் கொண்ட அந்தக் கூட்டத்தில், நகரின் குப்பை பிரச்னை குறித்து விவாதிக்கப்பட்டது. சரியான குப்பைக் கிடங்கு இல்லாத காரணத்தால், நகரின் பல இடங்களிலும் குப்பைகள் கொட்டப்படுகின்றன என்ற பிரச்னை விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தின் முடிவில், நகரின் சுடுகாட்டிற்குப் பக்கத்திலிருக்கும் ஒரு “ Strip Mining” குழியில் குப்பைகளைக் கொட்டியபின் குழி நிறைந்ததும் நெருப்பு கொண்டு அதை அணைத்துவிடலாம் என்ற முடிவு எட்டப்பட்டது.

Ghost Town
 
Ghost Town

300 அடி அகலம், 75 அடி நீளம், 50 அடி ஆழம் கொண்டிருந்த அந்தக் குழியில் குப்பைகள் கொட்டப்பட்டன. 1962, மே 27ம் தேதி… அந்தக் குழிக்கு தீ வைகப்பட்டது. அது இரவு, பகலாக அணையாமல் எறிந்துக் கொண்டேயிருந்தது. மக்கள் பயந்தனர். தண்ணீர் ஊற்றி அணைக்க முயன்றனர். பல முயற்சிகளை, பல நாட்களாக எடுத்து வந்தாலும், ஒரு நிரந்தர தீர்வைக் காண முடியவில்லை.

அந்தக் குழியில் கடைசியாக நிலக்கரி எடுத்த Lehigh Valley Coal Company-யிற்கு நோட்டீஸ் அனுப்பினார்கள். அந்த நிறுவனமும், அதன் பிறகு வந்த பல நிறுவனங்களும் எவ்வளவு முயற்சித்தும் நெருப்பை அணைக்க முடியவில்லை.

1976ம் ஆண்டு இந்தப் பிரச்னை குறித்து முதல் தடவையாக David Dekok எனும் புலனாய்வு பத்திரிகையாளர் பத்திரிகையில் எழுத ஆரம்பித்தார்.

1979ல்… John Coddington எனும் பெட்ரோல் பங்க் முதலாளி தன்னுடைய பெட்ரோலின் இருப்பளவைக் கண்டறிய, ஒரு அளவுக் குச்சியை Underground Tank-யிற்குள் விட்டுப் பார்த்தார். அதை வெளியே எடுத்துப் பார்த்த போது, அதன் வெப்பம் மிக அதிகமாகத் தெரிந்தது. அதிர்ச்சியடைந்த ஜான், ஒரு தெர்மாமீட்டரை கயிற்றில் கட்டி டேங்கிற்குள் விட்டுப் பார்த்தார். 172 டிகிரி ஃபாரன்ஹிட் என அது காட்டியது. ஜான் அதிர்ந்துவிட்டார்.

Ghost Town
 
Ghost Town

1981ம் ஆண்டு, தன் வீட்டுற்குப் பின்னால் இருந்த காலியிடத்தில் விளையாடிக் கொண்டிருந்தான் Todd Domboski எனும் 12 வயது சிறுவன். அப்போது அங்கே திடீரென பூமி பிளந்து ஒரு குழி ஏற்பட்டது. 150 அடி ஆழமுள்ள அந்தக் குழிக்குள் அவன் விழுந்துவிட்டான். ஒரு மரத்தின் வேரைப் பிடித்து தொங்கிக் கொண்டிருந்தவனை ஊர் மக்கள் வந்து காப்பாற்றினர்.

Ghost Town
 
Ghost Town

இந்தக் காலகட்டங்களில் பத்திரிகையாளர் David Dekok ஐநூற்றுக்கும் அதிகமான கட்டுரைகளை எழுதுகிறார். அதன் காரணமாக, அரசாங்கத்தின் கவனத்திற்கு இது செல்கிறது. அரசாங்கம் உடனடியாக மக்களை ஊரைவிட்டு காலி செய்து கிளம்பச் சொல்கிறது. சிலர் வெளியேறுகிறார்கள், பலர் தங்குகிறார்கள். 1992ம் ஆண்டு கட்டாய வெளியேற்றத்திற்கான உத்தரவைப் போடுகிறது அரசாங்கம். வெளியேறி வேறு நகரில் குடியமர தேவையான பொருளாதார செலவுகளையும் அரசாங்கமே ஏற்கிறது. அனைவரும் வெளியேறிவிட இறுதியாக, 7 பேர் மட்டும் அங்கேயே வசிக்க உரிமைக் கோருகிறார்கள். அவர்கள் வாழ்நாள் வரை சென்ட்ராலியாவில் வாழ்ந்துக் கொள்ளலாம், ஆனால், சென்ட்ராலியாவில் உள்ள அவர்களின் சொத்துகள் அடுத்த தலைமுறைக்கு கொடுக்கப்படாது என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

Ghost Town
 
Ghost Town

2013ம் ஆண்டு நிலவரப்படி சென்ட்ராலியாவில் ஒருவர் மட்டும் தனியாக வாழ்ந்து வந்தார். அவரும் 2015-ல் வெளியேறிவிட்டார். பிளவுபட்ட சாலைகள், செடி, கொடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் ஆளரவமற்ற வீடுகள், எந்நேரமும் பூமிக்கடியில் கனன்று எரிந்துக் கொண்டிருக்கும் நெருப்பு, மேகங்களுக்குப் போட்டியாக உருவாகும் புகை மண்டலங்கள், ஒருவித சாம்பல் வாசம், இரவு நேரங்களில் மீத்தேன் எரிவாயுவினால் நீல நிறத்தில் தகதகக்கும் நிலம் என ஒரு பேய் நகரமா மாறி நிற்கிறது சென்ட்ராலியா. 1 7 9 2 7 என்ற பின்கோடு அமெரிக்க ஒன்றியத்தின் அனைத்து ஆவணங்களிலிருந்தும் நீக்கப்பட்டுவிட்டன. இதன் அர்த்தம், அந்தப் பின்கோடை தாங்கி நின்ற சென்ட்ராலியா, அமெரிக்க வரைபடத்திலிருந்து நிக்கப்பட்டுவிட்டது என்பது தான்.

தொடரும்....

 

https://www.vikatan.com/news/world/ghost-town-his-the-series-to-know-the-reason-for-this-city-thats-no-longer-in-the-world-map-now-part-1

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Ghost Town: Amazon காட்டில் Henry Ford உருவாக்கிய சபிக்கப்பட்ட நகரம்|பகுதி 2

Ghost Town: Amazon காட்டில் Henry Ford உருவாக்கிய சபிக்கப்பட்ட நகரம்|பகுதி 2ஃபோர்டுலேண்டியா (fordlandia)

 

ஃபோர்டுலேண்டியா (fordlandia)

ஃபோர்டுலேண்டியா (Fordlandia) ஒரு நகரின் கதை அல்ல… அது ஹென்றி ஃபோர்டின் (Henry Ford) என்ற மனிதனின் EGO-வின் கதை.

“ Selfishness is not living as one wishes to live, it is asking others to live as one wishes to live.” - Oscar Wilde.

1928… பிரேசில் நாட்டு நாளிதழ்கள் அத்தனையும் ஒரு பெயரை தினம் தினம் தலைப்புச் செய்தியில் குறிப்பிட்டுக் கொண்டிருந்தன. அவரின் வருகை தங்கள் நாட்டின் தலையெழுத்தை மாற்றப் போவதாக அவர்கள் கூக்குரலிட்டார்கள். கொக்கரித்தார்கள். அந்தப் பெயர் ஹென்றி ஃபோர்டு ( Henry Ford ).

ஃபோர்டு கார் நிறுவனத்தின் நிறுவனர் ஹென்றி ஃபோர்டு, பிரேசிலில் தன்னுடைய கனவு நகரத்தை நிர்மாணிக்க வேலைகளைத் தொடங்கியிருந்தார்.

அமேசான் காடு
 
அமேசான் காடு

அமேசான் நதியின் கிளை நதியான டாப்பேஜாஸ் ( Tapajos ) நதிக்கரையில் 5,625 சதுர மைல் நிலத்தை, 1, 25,000 அமெரிக்க டாலர்களுக்கு ஃபோர்டு( Ford) நிறுவனம் வாங்கியிருந்தது. அங்கு ஃபோர்டு லேண்டியா ( Fordlandia ) என்கிற தன் கனவு நகரத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டார் ஹென்றி ஃபோர்டு.

ஹென்றியின் இந்த முடிவிற்குள் இரண்டு விஷயங்கள் அடங்கியிருந்தன. முதலாவது அவரின் வியாபார குறிக்கோள் ( Business Motto ). அன்றைய காலகட்டங்களில், ரப்பருக்கான ( Rubber ) உலகின் ஒரே மிகப்பெரிய தயாரிபாளராக பிரிட்டன் தான் இருந்தது. அது தன் காலனியாதிக்க நாடுகளாக இருந்த இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில், பிரேசிலிலிருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட ரப்பர் விதைகளைக் கொண்டு ரப்பர் தோட்டங்களை உருவாக்கியது. ரப்பருக்கான சந்தையை தீர்மானிக்கும் சக்தியாக பிரிட்டன் இருந்தது. இதை உடைக்க நினைத்தார் ஹென்றி.

ஹென்றி ஃபோர்டு (henry ford)
 
ஹென்றி ஃபோர்டு (henry ford)

பிரேசிலில் ரப்பர் தோட்டங்களை உருவாக்கி, ரப்பர் தொழிற்சாலையை ஆரம்பித்தால் பிரிட்டனின் சந்தை உடையும், கூடவே, தன் கார் தயாரிப்புக்கு தேவையான ரப்பர்களையும் தானே தயாரித்துக் கொள்ள முடியும் என்று நம்பினார். இதன் மூலம், பெரிய லாபத்தை ஈட்டிட முடியுமென்று அவர் நம்பினார்.

இரண்டாவதாக அவருக்கு ஒரு சமூக குறிக்கோள் இருந்தது. ஃபோர்டின் சமூக குறிக்கோளைப் புரிந்துக்கொள்ள முதலில் அவரின் சில இயல்புகளையும், நம்பிக்கைகளையும் புரிந்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. ஹென்றிஃபோர்டு ஆட்டோமொபைல் தொழில்துறையின் முன்னோடி. கார் தயாரிப்புகள் மட்டுமல்லாமல், ஒரு நிறுவனத்திற்கான செயல்பாட்டு நெறிமுறைகளை வகுத்ததில் அவர் ஒரு முன்னோடி.

Brazil - Fordlandia - Tapajos
 
Brazil - Fordlandia - Tapajos

இன்றும் பல தொழிற்சாலைகளில் பின்பற்றப்படும் அசெம்ப்ளி லைன் ( Assembly Line ) எனும் முறையைக் கொண்டு வந்தவர் அவர் தான். மேலும், ஒரு தொழிலாளி ஒரு நாளைக்கு 8 மணி நேர வீதம், வாரத்திற்கு 40 மணி நேரம் வேலை செய்தால் போதும் என்கிற நெறிமுறைகளைக் கொண்டு வந்தார். அன்றைய காலகட்டங்களில், தன்னிடம் பணிபுரியும் வேலையாட்களுக்கான அதிகபட்ச ஊதியத்தையும் அளித்தார். இப்படியாக மனிதர்களை கையாளும் விஷயங்களில் பல முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.

ஹென்றி ஃபோர்டு தான் ஒரு மேம்பட்ட வாழ்க்கையை வாழ்வதாகவும், தன்னுடைய கொள்கைகள், கருத்துக்கள், தத்துவங்கள் மனித சமூகத்தை மேம்படுத்தும் வகையில் இருப்பதாகவும் நம்பினார். அதனால், அவர் தன் கொள்கைகள், தத்துவங்களை உள்ளடக்கிய ஒரு கனவு நகரத்தை உருவாக்க வேண்டுமென்றும் விரும்பினார்.

ரப்பர் மரங்கள்
 
ரப்பர் மரங்கள்

எனவே, நான்காம் தர நாடாக இருக்கும் பிரேசிலை உயர்த்தவும், சுத்தம், சுகாதாரமற்று இருக்கும் பிரேசில் நாட்டு மக்களுக்கு மேம்பட்ட ஒரு வாழ்க்கை முறையை கற்பிக்க வேண்டுமென்கிற ஒரு சமூக குறிக்கோளையும் இதில் அவர் கொண்டிருந்தார்.

ஃபோர்டுலேண்டியா கட்டுமானப் பணிகள்
 
ஃபோர்டுலேண்டியா கட்டுமானப் பணிகள்

பிறருக்கு நல்லது செய்ய வேண்டுமென்று நினைப்பவர், உதவி கோருபவரின் சரியான தேவையை அறிந்து செய்வது தான் சிறந்த செயல். அதைவிடுத்து, தனக்கு என்ன செய்ய வேண்டுமென்று தோன்றுகிறதோ, அதைச் செய்வது ஒரு சரியான உதவியாக இருக்காது. அப்படியான ஒரு தவறான பார்வையில் அவர் பிரேசிலை அணுகியதும், பிரேசில் மக்களை எடைபோட்டதுமே அவரின் கனவு நகரத்திற்கான அழிவாக மாறியது. அது தொடக்க நாள் முதல், கடைசி நாள் வரை பல பெரும் பிரச்னைகளை சந்தித்துக் கொண்டேயிருந்தது.

1927ம் ஆண்டு பிரிட்டன் பிடியிலிருந்த சர்வதேச ரப்பர் சந்தை விடுபட்டு திறந்த சந்தை ( Open Market ) உருவாகிவிட்டிருந்தது. இந்தச் சமயத்தில் ரப்பர் தொழிற்சாலைக்கு இத்தனைப் பெரிய முதலீடு தேவையில்லை என்று பலர் சொல்லியும் ஹென்றி கேட்கவில்லை. பிடிவாதமாக தன் முடிவில் நின்றார்.

ரப்பர் தொழிற்சாலை
 
ரப்பர் தொழிற்சாலை

அடுத்ததாக கட்டுமானங்களைத் தொடங்கவே பல பிரச்னைகளை சந்தித்தது ஃபோர்டுலேண்டியா. டாப்பேஜாஸ் ( Tapajos ) நதியின் வெள்ள அபாயத்திலிருந்து தற்காத்துக் கொள்ள ஒரு உயரமான இடத்தை தேர்ந்தெடுத்திருந்தனர். ஆனால், சரியான சாலைகள் இல்லாத அந்தக் காட்டுப்பகுதியைத் தாண்டி கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்வது மிகவும் சிரமமாக இருந்தது. திட்டமிட்டதைவிடவும், ஒரு வருடம் கழித்தே கட்டுமானப் பணிகள் அங்குத் தொடங்கின.

நகரை இரண்டாக பிரித்துக் கட்டினர். ஒரு பக்கம் அமெரிக்கர்கள் வாழும் “ வில்லா அமெரிக்கானா “ ( Vila Americana ) பகுதி. இன்னொன்று, பிரேசில் மக்களுக்கான ஒரு காலனி. அமெரிக்கர்கள் வாழும் பகுதியானது தண்ணீர் பைப்லைன் முதற்கொண்ட பலவித வசதிகளை கொண்டிருந்தது. பிரேசில் காலனி குடிசைகள் நிறைந்து கிணற்று தண்ணீரைக் கொண்டிருந்தது. இப்படி, தொடக்கத்திலிருந்தே வேற்றுமை அங்கு வேறூன்றியிருந்தது. அது ஒவ்வொரு நாளும் ஆழப் படரத் தொடங்கின.

Fordlandia
 
Fordlandia

1930ம் ஆண்டு… டிசம்பர் மாதம் 20ம் தேதி ஃபோர்டுலேண்டியாவின் ( Fordlandia ) கேண்டினில் ஒரு மிகப்பெரிய வன்முறை வெடித்தது. டேபிளில் உணவு பரிமாறும் வழக்கத்தை மாற்றி, செல்ஃப் சர்வீஸ் ( Self Service ) வகையிலான Cafeteria-வாக அதை மாற்றியது. இதில், பிரேசில் மக்கள் சிலர் கீழ்மையாக நடத்தப்படுவதாகச் சொல்லி பிரச்னை செய்தார்கள். அது மிகப்பெரிய கலவரமாக உருமாறியது. தொழிற்சாலைகளிலிருந்த இயந்திரங்கள் உட்பட பலவும் தீக்கிரையாகின.

ஃபோர்டுலேண்டியாவில் ( Fordlandia ) அடிப்படையில் மும்முனைப் பிரச்னை இருந்தது.

முதலில், அங்கு குடி பெயர்ந்து வந்திருந்த அமெரிக்கர்கள். அவர்களுக்கு பிரேசில் மழைக்காடுகளின் சீதோஷ்ணம் ஒத்துக்கொள்ளவில்லை. மேலும், அவர்கள் பிரேசில் மக்களை ஒரு ஆதிக்க மனப்பான்மையோடே அணுகினார்கள்.

அடுத்ததாக , ஹென்றிஃபோர்டு அங்கு நிறுவ முயற்சித்த கருத்துகள், வாழ்க்கை முறை.

இறுதியாக, பிரேசில் நாட்டு தொழிலாளர்கள்.

இந்த மூன்றும் கடைசிவரை ஒரு நேர்கோட்டிற்கு வரவேயில்லை.

இது ஹென்றி ஃபோர்டுக்கான ஒரு சமூக தோல்வியாக ( Social Failure ) அமைந்தது.

அடுத்ததாக, பிரேசில் நாட்டு மக்களை ஒரு ஆதிக்க மனப்பான்மையோடு அணுகியதால், அவர்களின் காடுகள் குறித்த அபரிமிதமான அறிவாற்றலை தனக்கு சாதமாக பயன்படுத்திக்க முடியவில்லை. குறிப்பாக, ரப்பர் மரங்களை நெருக்கமாக நட வேண்டாம் என்று அவர்கள் சொன்னதை மறுதலித்து, நெருக்கமாக நட்டதால், ஒரு மரத்திற்கு வந்த நோய்த்தொற்று அடுத்தடுத்த மரங்களுக்கும் பரவி பெரிய அழிவும், பொருளாதார நஷ்டமும் ஏற்பட்டன.

இது ஹென்றி ஃபோர்டுக்கான ஒரு வன தோல்வியாக ( Jungle Failure ) அமைந்தது.

பிரேசில் மண்ணின் மக்கள்
 
பிரேசில் மண்ணின் மக்கள்

இறுதியாக, ஹென்றியினால் ஒரு துளி ரப்பரைக் கூட பிரேசிலிலிருந்து தயாரித்து தன் கார் உற்பத்திக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இது ஹென்றி ஃபோர்டுக்கான ஒரு தொழில் தோல்வியாக ( Business Failure ) அமைந்தது.

இப்படியாக அவருக்கு ஏற்பட்ட தோல்விகளே அந்த நகரத்திற்கான அழிவாக மாறியது.

இரண்டாம் உலகப் போர் முடிந்திருந்த சமயம் ஃபோர்டு கார் நிறுவனத்தின் நிர்வாகம், இரண்டாம் ஹென்றி ஃபோர்டு கைக்கு மாறியது. அவர் செய்த முதல் காரியம் ஃபோர்டுலேண்டியாவை ( Fordlandia ) சொற்ப விலைக்கு பிரேசில் அரசாங்கத்திற்கு விற்றது தான்.

பணமும், ஆதிக்க வெறியும் சொந்த நாட்டு மக்களை ஒடுக்கிய… அவமானப்படுத்திய ஃபோர்டுலேண்டியாவிற்குள் பிரேசில் மக்கள் நீண்டகாலம் போகவே இல்லை. இரண்டாயிரமாம் ஆண்டு வரையில் கூட 9 பேர் மட்டுமே அந்நகரில் வாழ்ந்து வந்தனர். 2000-த்திற்குப் பிறகு… அந்த நகரின் பல அடையாளங்கள் அழிந்ததால்… கொஞ்சம், கொஞ்சமாக மக்கள் வரத் தொடங்கியுள்ளனர். 2017 நிலவரப்படி… இரண்டாயிரம் பேர் அங்கு வசிக்கின்றனர்…

“ உலகின் மிக முக்கியமான, சிக்கலான உயிர்ச்சூழல் கொண்ட காடு அமேசான். அமேசானின் அடிப்படைகளையும், அந்த மக்களின் தேவைகளையும் சரியாகப் புரிந்துக் கொள்ளாமல்… அந்த காடுகளை அழித்து ஒரு மிகப்பெரிய தொழிற் புரட்சியை உருவாக்க முயற்சித்தார் ஹென்றி ஃபோர்டு.

அமேசான் பழங்குடிகள்
 
அமேசான் பழங்குடிகள்

ஃபோர்டுலேண்டியா (Fordlandia) ஒரு நகரின் கதை அல்ல… அது ஹென்றி ஃபோர்டின் EGO-வின் கதை. அதனால் தான் அவரும் கடைசி வரை ஃபோர்டுலேண்டியா-வை நேரில் பார்க்கவில்லை. ஃபோர்டுலேண்டியா-விலிருந்து ஒரு சொட்டு ரப்பர் துளி கூட ஃபோர்டு நிறுவனத்திற்கு சென்றடையவில்லை…" என்கிறார் கிரெக் கிராண்டின் (Greg Grandin), வரலாற்றுப் பேராசிரியர், யேல் பல்கலைக்கழகம் ( Yale University) - Fordlandia: The Rise and Fall of Henry Ford's Forgotten Jungle City என்ற புத்தகத்தின் எழுத்தாளர் )

ஆங்கிலத்தில் யூதர்களுக்கு எதிரான கருத்துகளைக் கொள்வதற்கு Anti-Semitism என்று சொல்வார்கள். அப்படியான கருத்து கொண்ட ஒருவராகத் தான் ஹென்றி ஃபோர்டு தன் வாழ்நாள் முழுக்கவே இருந்திருக்கிறார்.

தான் நடத்தி வந்த “DearBorn Independent “ எனும் வார செய்தித்தாளில் ( Weekly Newspaper ) தொடர்ந்து யூதர்களுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டார். இதனால், அந்த செய்தித்தாளே தடை செய்யப்பட்டது. ஆனாலும், அதற்கெல்லாம் ஹென்றி அஞ்சவில்லை.

ஃபோர்டுலேண்டியாவின் ( Fordlandia ) அழிவிற்குப் பின்னணியில் யூதர்களின் சதி இருப்பதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.

Ghost Town series பகுதி 1-க்கு செல்ல...

 

https://www.vikatan.com/news/world/fordlandia-a-city-created-and-destroyed-by-the-henry-ford-in-the-amazon-jungle

 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.