Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருந்தா ஜென்மம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பால் வடியும் முகத்தினை பாருங்கள். வயது 29.

Milton Brown, 67, was jailed for a total of 21 years in 1999 for raping three women, including former girlfriend Susan McDonald who went on to kill herself, before he was released from prison 14 years later

 

கீழே உள்ள நபரின் முகத்தினை பாருங்கள் வயது 67.

Brown was convicted at Wood Green Crown Court on Monday of two counts of rape, assault by penetration and attempted rape of a woman over a four day period in early May 2020

இருவரும் ஒருவரே என்றால் நம்புவீர்களா? அதற்கும் மேலே, இவரால் ஒரு சட்டமும் பாராளுமன்றத்தால் மாற்றி எழுதப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா?

முதல் படத்தில் இருக்கும் தோற்றம் வயது 29..... மூன்று பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த இந்த நபர் சீரியல் பாலியல் பலாத்காரி (serial rapiest) என்ற நிலையில், பொறி வைத்து பிடிக்கப்பட்டார்.

தனது சட்டவாளர்கள் சரியான கேள்விகள் கேட்கவில்லை என்று, தானே, பாதிக்க பட்ட பெண்களை குறுக்கு விசாரணை செய்யப்போகிறேன் என்று, இவர் கேட்ட, எந்த பெண்ணுமே விடையளிக்க முடியாத, ஆபாசமான கேள்விகளால் நீதிமன்றமே ஆடிப்போனது. இவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதியான நிலையில், சிறைக்கு அனுப்பப்பட்டார்.

இவர் செய்த குறுக்கு விசாரணை அலம்பறை காரணமாக, நீதிபதியின் சிபாரிசின் காரணமாக, குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர், பாதிக்க பட்ட பெண்(னை)களை குறுக்கு விசாரணை செய்ய முடியாது என்று சட்டம்  மாற்றி எழுதப்பட்டது.

1999ம் ஆண்டு மொத்தம் 21 வருட சிறை தண்டனை பெற்று உள்ளே போனார். எனினும் 14 ஆண்டுகள் கழித்து விடுதலையானார்.

விடுதலையான நபர் ஒரு கவுன்சில் வீடமைப்பு திட்ட வீடு ஒன்றினை பெற்று இருந்து வந்தார்.

என்ன இருந்தாலும், புத்தி அப்படி இப்படி தானே. அதுதான், ரத்தத்திலை ஊறி இருக்குதே, வேலை வெட்டி இருந்தால் தானே. அரச மானியத்தில் இருந்தால், புத்தி அலைமோதும் தானே. உருப்படியா ஒரு வேலை செய்தால், வேறு எண்ணங்கள் மனதில் வருமா?

ஆகவே, 67 வயது அய்யா, ஒரு பெண்ணை மடக்கி, கதைத்து வீட்டுக்கு தள்ளிக் கொண்டு வந்து விட்டார்.

வந்தவர், பொல்லாத புலியாக பாய்ந்து பலாத்காரம் செய்து விட்டார். அட... இந்த வயதிலே இப்படியா என்று அரண்டு போன பெண், இரவு நேரத்தில் தப்பி ஓட, இவர் தனது சைக்கிளில் துரத்த.... நல்ல காலமாக, வீதியில், பின் இரவில், வீதியில் பீறிட்டு கிளம்பிய தண்ணீர் குழாயினை சரிசெய்ய வந்த இரு நபர்களிடம் அடைக்கலம் கேட்டு.... பின்னர் போலீசார் வந்து, வீட்டினுள் புகுந்து இவரை கைது செய்துள்ளனர்.

கடந்த திங்களன்று நீதிமன்றில் நிறுத்தப்பட்ட இவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

திரும்பவும் உள்ளே..... எங்கு இருந்தாலும் அரச செலவில் வாழ்க்கையினை ஓட்டுவதால், அவர்களுக்கு கவலை இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.