Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கையாலாகாத வக்குரோத்து தமிழ் அரசியல் கட்சிகள்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கையாலாகாத வக்குரோத்து தமிழ் அரசியல் கட்சிகள்?
 
பகுதி - VIII
தமிழ்ச் சமூகத்தில் மலிந்திருக்கும் சமூக விரோதச் செயல்கள் மிகவும் கவலை கொள்ளச் செய்கின்றன. அண்மையில் கிழக்கு மாகாணம் மட்டக்களப்பில் போதைப்பொருள் சம்பந்தமாகக் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர் காவலர்களின் பாராமரிப்புக்குள் மரணமான செய்தியை நாம் வெகுசன ஊடகங்களில் பார்க்கிறோம். அது ஒரு விவாதப் பொருளாக, பல முகநூல் வாசிகளால் கருத்துகள் பல முன்வைக்கப்பட்டதைக் காணக்கூடியதாக இருக்கிறது. தீவகச் சூழலை பிறப்பிடமாகக் கொண்டவரும், இன்று பிரித்தானியாவில் வாழ்ந்து வருபவருமான அரசியல் செயல்பாட்டாளருடன் பேசும் பொழுது தீவகச் சூழலில் நடந்த சம்பவம் ஒன்றைப் பற்றிப் பேசினார்.
கடலோடியாக இருக்கிற இளைஞர், பொதி எடுத்துவர கூலிக்கு அமர்த்தப்படுகிறார். இரு தடவை வெற்றிகரமாகத் தனக்களிக்கப்பட்ட வேலையை முடித்துக் கொடுக்கிறார். மூன்றாம் தடவை அந்தக் கடலோடி பொதிகளை உரிய இடத்தில் ஒப்படைத்து விட்டார். ஆனால், பொதி இடையில் மாட்டிக் கொண்டது. அந்தக் கடலோடி கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக நீதிமன்றில் நிறுத்தப்படுகிறார். அந்தக் கடலோடி நீதிமன்றில், தான் கூலிக்கு அமர்த்தப்பட்டதாகவும், அந்த வேலையை ஏன் ஒப்புக் கொண்டதற்கான காரணமாக, கடலில் தொழில் வருமானமற்றதாக இருப்பதாகக் கூறுகிறார். பொதியோடு கைது செய்யப்படதாததால் அந்தக் கடலோடி பதினைந்தாயிரம் தண்டனைப் பணத்தோடு வெளியே வருகிறார். பிடிப்பட்ட பத்துப் பொதிக்குள் நான்கு கஞ்சாப் பொதி இருந்தது. அந்தக் கடலோடி புதிதாக வாங்கிய பிளாஸ்ரிக் கடல் கலத்தின் கடன் தொகைக்காக மூன்று தடவை பொதிக்கு போய் வந்துவிட்டால் அந்த கடன் பிரச்சினை முடிந்துவிடுமென கதையை, தன் நியாயத்தை அந்தக் கடலோடி முன்வைக்கிறார்.
இலக்கற்ற பயணங்களாக மாறிவிட்ட தமிழ் மக்களின் அரசியல் எவ்வாறு தமிழ் மக்களின் வாழ்க்கையின் வாழ்வியல் அறத்திலும், நடைமுறையிலும் சமூக நீதியைப் புறந்தள்ளிய சூழலை கட்டமைக்கிறதென்பதைக் கடந்த தமிழ் மக்களின் அரசியல் கட்சிகள், ஆயுதப் போராட்ட அமைப்புகள் மற்றும் பொதுசன, வெகுசன அமைப்புகள், படைப்பிலக்கியங்களுக்குடாக படைப்பாளர்களாக தங்களை முன்னிறுத்தியவர்கள், அரசியல் விமர்சகர்கள், மத அமைப்புகள் மற்றும் தலைமைகள், இதனைத் தாண்டி அரசும், அதன் நிர்வாகமும் என்பன பற்றிப் பேச வேண்டியிருக்கிறது. இதில் எந்தவொரு பகுதியினரும் தமிழ்ச் சமூகம் சார்ந்த தங்கள் பொறுப்புகளில் இருந்து விடுபட்டுக் கொள்ள முடியாது.
ஓர் மனிதன் அதுவும் இளைஞன் வாழ்க்கையில் வாழ எத்தனிக்கும் அவன் ஒரு குழந்தைக்கு ஒப்பானவன். சமூகம்தான் அவனுக்காக வழிகாட்டியும், கற்பிக்கும் கற்றுக்கொள்ளும் இடமும்கூட. பெரும் காலமொன்றினை, அவன் பிறப்பின் நிகழும் சூழலும் கட்டமைப்பும் அவன் கனவும் உலகமும் கண் முன்னால் தகர்த்து போகும் தருணத்தில் பற்றிக் கொள்ள எந்த ஆதாரமுமின்றி வட்டு இழந்த பனைபோல் இருண்ட பக்கமாய் வாழ்வின் நெடு வழியும் அவன் முன் தோன்றும். சிறு எல்லைகளைக் கொண்ட அவன் கனவுகள்போலே அவன் நாடும் ஆகி, பெருத்த, விரிந்த நிலப்பகுதிக்குள் அவன் விடப்படுகிறான். புலம்பெயர்ச் சூழலின் திரும்புதலும், இறக்குமதியாகும் அறிவியலும் நவீனமும் அவனை மீண்டும் வாழ்க்கையில் போராட்டத்திற்குள் தள்ளுகிறது. களைத்து போய் இயலாதவனாய் இருந்ததெல்லாம் இல்லாமலாகி தொலைத்தாகி வெற்று மனிதனாக, மனம் நிறைய துயரங்களும் இழப்புகளுமாக சற்று அமர்ந்து இளப்பாறி எழுவதற்கு சற்று நேரம் வாய்ப்பின்றி காலம் அவனை வாழ்கையில் ஓடச் சொல்கிறது. அரசியலால் கைவிடப்பட்ட, வழி சொல்லப்படாத சூழ்நிலையில் வரும் சந்தர்ப்ப வாய்ப்புகளில் பணமே முன் நிலையாக வாழ்வுக்கு ஆதாரமாக வாழ்வியல் அறம் புரியாமல் சமூக நீதியை புறந்தள்ளியவனாய் சட்டத்திற்குள் சிக்கிய சமூகக் குற்றவாளியாய் அவன் நிற்பதற்கு காரணம் யார்?
போதைப்பொருள் சந்தேக நபராகக் கைது செய்யப்படும் நபர், காவல் பாராமரிப்புக்குள், காவல் பரப்புக்குள், காவல் நேரத்திற்குள் சந்தேக நபரின் மரணம் என்பது அந்த சூழ்நிலைக் காட்சியை தலைகீழ் மாற்றத்திற்குள் கொண்டு வந்து நிறுத்துகிறது. இந்தப் புள்ளியில் அந்த மரணம் வேறொரு திசையில் தனது பயணத்தை ஆரம்பிக்கத் தொடங்கிறது. அந்தப் போதைப்பொருள் சந்தேக நபர் மறைந்து பொலிஸ் காவலில் கைதி மரணமென கதையாகப் பார்க்கத் தோன்றுகிறது. இப்பொழுது இந்தக் கைதி மரணம் மொத்த இலங்கைப் பொதுப் பிரச்சினையாக உரு வெடுக்கிறது. நாளை, வருங்காலத்தில் பொலிஸ் காவலில் கைதி மரணம் நிகழாதென்பதற்கு என்ன நிச்சயம்? இந்த மரணம் என்பது பொலிஸ் நிர்வாகத்தின் மனநிலையை வெளிப்படுத்துவதாக அமைந்து விடுகிறது. இந்த நிலைதான் வருங்காலம் மீதான பயமொன்றினை தமிழ் மக்கள் மனங்களில் கேள்வியொன்றினை ஏற்படுத்திச் செல்கிறது.
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கான தீர்வுக்காக முன்னெடுத்த ஆயுதப் போராட்டம் முற்றுப்புள்ளிக்கு வந்த பிற்பாடு உருவாகும் சூழலை எதிர் கொள்ள எந்தவொரு வரைபுகளும் அற்ற போக்கோடு காணப்பட்ட தமிழ் அரசியல்க் கட்சிகள் அனைத்தும் தங்கள் இருப்புப் பற்றி சிந்தனையோடு பயணித்தவர்களால் இந்தக் கைதியின் காவல் பராமாரிம்புக்குள் மரணம் பற்றிப் பேச முடியாத மனநிலைக்குள் சூழ்நிலைக் கைதியாக, சிங்களத்தேசிய அய்யாக்களின் விசுவாச சிறைக்குடி நிலை தடுத்து நிற்கிறது. தமிழ் அரசியல்க்கட்சிகளின் அல்லது அக்கட்சித் தலைமைகளின் வீர விம்பங்கள் உதிர்ந்து, கையாலாகாத வக்குரோந்து, நம்பிக்கைத் துரோகக் காட்சிகளை வெளிச்சத்தில் மீண்டும் ஒரு தடவை தூக்கி வீசப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த வடக்கு கிழக்குத் தமிழ் அரசியல்க் கட்சித் தலைமைகளின் யாழ்மையவாத சித்தாந்த போக்கை துகிலுரிந்து காட்டியிருக்கிறது; இந்த கைதியின் காவல் பராமாரிப்புக்குள் நடந்த மரணம் சுட்டி நிற்கிறது.
மீண்டும் ஒரு முறை கடந்த காலத்தில் இலங்கையில் நடந்து முடிந்த தமிழ் மக்கள் மீதான பொது வன்முறை பற்றியும், சிறைச்சாலைத் தமிழ்க் கைதிகள் மீதான வன்முறை பற்றியும் அதனைத் தொடர்ந்து நடந்த இனவாத அரசியல் பற்றியும் நினைவேந்தலுக்குள் தமிழ் அரசியல்த் தலைமைகளை முக்கியெடுக்க வேண்டியிருக்கிறது. இந்தக் கைதியின் மரணம் பற்றிப் பேச வாய் திறக்காத, மெளனத் தியாகிகள் வருடம் முழுவதும் கண்ட மேனிக்கு நினைவேந்தலாக முகநூலில் வீரத் தாலாட்டுப் பாடுவதேன்? இன்று தமிழ் அரசியல்த் தலைமைகள் இருப்புக்கும் உயிர் வாழ்வதற்குமான அரசியலில் பயணிக்கத் தொடங்கி நீண்ட நாட்களாயிற்று. அவர்கள் திரும்பி வர மாட்டார்கள். தமிழ் மக்களின் அரசியல் புலியின் வாலைக் கைவிட்ட கதையாகிப் போனதோ?
June 06, 2021
May be an image of 1 person, beard and text that says 'கையாலாகாத வக்குரோத்து தமிழ் அரசியல்க் கட்சிகள்? uAnul 一 អ'
 
 
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.