Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

Picture1.png

குக்கிராமத்தில் பிறந்து, பெரிய நகரங்களின் முகமறியாது வளர்ந்து, பதின்ம வயதில் 70 களில் சென்னைக்கு முதன் முறையாக தனியாக சென்று ஓரிரு நாட்கள் தங்க நேரிட்டது.

சென்னையை பற்றி பலரும் சொன்னது, படங்களில், செய்திகளில் படித்தது என அனைத்தும் ஞாபகத்தில் வந்து மிகுந்த முன்னெச்சரிக்கையாக இருக்க மனம் தூண்டியது. ஆட்டோவில், மாநகரப் பேருந்துகளில் செல்லும்போது அடிக்கடி பர்ஸை தொட்டுப்பார்த்துக்கொள்வது வழக்கம்.. நகரப் பகுதிகளைப் பற்றி தெரியாததால் 6 மணிக்கெல்லாம் உறவினரின் வீட்டுக்கு திரும்பிவிடுவதும் வழக்கம்.

அதேமாதிரி இக்காணொளியில் வரும் பெண்ணின் சென்னையை பற்றிய மனநிலையை திரையில் பார்த்தவுடன், என் பழைய இளமைக்கால நினைவுகள்..புன்முறுவல்கள்..

ரொம்பவும் ரசிக்கும்படியாக திரைமயமாக்கியவரின் கைவண்ணம் இருந்தது.

 

 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.