Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவின் உதவியை திரும்ப செலுத்த வேண்டியதில்லை அமெரிக்கத் தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் உதவியை திரும்ப செலுத்த வேண்டியதில்லை அமெரிக்கத் தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸ்

 

 துறைமுக நகர விதிமுறைகளின் பிரகாரம் கறுப்பு  பணமோசடி, ஊழல் நடைமுறைகளுக்கு இடமளிக்கின்றமைதொடர்பாக கவனமாக  இருக்குமாறு அரசாங்கத்தைகேட்கவேண்டியுள்ளது


*இலங்கை மிகப்பாரிய வர்த்தக மற்றும் பொருளாதார ஆற்றலைக் கொண்ட நாடு
*ஆப்கானிஸ்தானில் மாற்றமடைந்து  வரும் சூழ்நிலைக்கு ஒரு கூட்டான  அணுகுமுறையை அமெரிக்கா விரும்புகிறது
,இலங்கையில்  முதலீடுகளை ஈர்ப்பதற்கான  வர்த்தகரீதியான  சூழலின் முன்னேற்றம்  குறித்து அமெரிக்க தூதர் அலைனா பி.டெப்ளிட்ஸ், டெய்லி மிரர் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில்கருத்து  தெரிவித்திருப்பதுடன் ஆப்கானிஸ்தான் மற்றும் குவாட்[குவாட் என்பது அமெரிக்கா, ஜப்பான், அவு ஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையேயான ஒரு மூலோபாய உரையாடலா கும்], ஆகியவற்றின்  நிலைமை தொடர்பான  கேள்விகளுக்கும் அவர் பதிலளித் திருக்கிறார்

.alaina-300x217-1.jpg

பேட்டி  வருமாறு .
கேள்வி  உங்கள் சமீபத்திய உரையாடலில்   துறைமுக நகர சட்டம் பற்றிய  தொரு விடயமொன்று  பற்றி நீங்கள் குறிப்பிட்டி ருந்தீர் கள். அதில்கறுப்பு   பணம் போன்ற நிதி மோசடிக்கு சில வழிகள்  இருப்பதாக கூறி னீர்கள். உண்மையில் நீங்கள் பார்க்கும் இந்த குறிப்பிட்ட [சட்டத்தின்] விடயங்கள்  என்ன?

பதில்;,துறைமுகநகர்  பற்றி  பத்திரிகையாளர்களுடன் நாங்கள் நடத்தியது விரிவானதொரு   கலந்துரையாடல் என்பதைநீங்கள் அறிவீர்கள்.,. நாங்கள் வெளிப்படையாக துறைமுக  நகரமும் வழங்கக்கூடிய   சாத்தியப்பாடானவற்றை ப்  பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.
துறைமுக நகர முதலீடுகளில் இலங்கை  அரசாங்கம் அதிகளவு வுக்கு இ லாபம் ஈட்ட விரும்புவதை நான் அங்கீகரிக்கிறேன், துறைமுக நகரத்திற்கு முதலீட்டை ஈர்க்க அரசாங்கம் சிறந்த வர்த்தக சூழலை உருவாக்க வேண்டும் என்றும்  அத்துடன்  அதிஉயர்ந்த அளவிற்குசர்வதேச தரத்தை  சட்டம் அல்லது அமு லாக்கல்  ஒழுங்குவிதிகள்  இல்லாவிடில் மோசமான நடைமுறைகளுக்கு அல்லது பணமோசடி, ஊழல் போன்ற சட்டவிரோத நிதிநடவடிக்கைகளுக்கு கூட வழிகள்  திறந்து விடப் படலாமென்ற கரிசனையை நான் தெரிவித்திருந்தேன்  .
வணிகங்கள் அந்த மாதிரியான  நடைமுறைகளுக்கு ஆளாகப் போவதில்லை என்று உறுதியளிக்க ப்படவேண்டுமென்று விரும்புகின்றன, மேலும் அமெரிக்க நிறுவனங்களுக்கு சட்டப்படி ஊழல் வழக்கங்களில் ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது, சுற்றுச்சூழல்தொடர்பாகமுடிந்தவரை தூய்மையாகஇருப்பதில்  அவை  மிகவும் கவனமாக இருகின்றன.. .
எனவே இவை அரசாங்கம் கவனிக்க வேண்டிய விட யங்கள் என்று நான் நினைக்கிறேன்,ஆயத்தமாகவிருத்தல் மிகவும் முக்கியமானது.சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள்  அந்த உயர் தரங்களை பூர்த்தி செய்கின்றன என்பதை உறுதி செய்தல்வேண்டும்.
கேள்வி;பிராந்தியத்தின்கேந்திர மாகவும் தெற்காசியாவின் நுழைவாயிலாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிப்பதாக இலங்கை  கூறுகிறது  இந்த விடயத்தில் பங்கேற்பதில்  அமெரிக்கா எவ்வளவு க்கு ஆர்வமாக உள்ளது.?
பதில் ; நான் முதலில் சொல்வது என்னவென்றால், இலங்கை மிகப்பெரிய வணிக மற்றும் பொருளாதார ஆற்றலைக் கொண்ட ஒரு இடம், துறைமுகங்களை இயக்கி, அமைவிட நடவடிக்கைகளில் ஈடுபட்டதில் நிறைய அனுபவம் உள்ளது.
எனவே, இந்த சாத்தியபாடுகளை  ஏற்படுத்துவதற்கு இன்னும் பாரிய  வெற்றியை அல்லது நிலையான வெற்றியை உருவாக்குவதற்கு  முக்கிய மான முதலீட்டை ஈர்க்கும் ஒரு வெளிப்படைத் தன்மையான  பொருளாதார சூழலைக் கொண்டிருக்க  வேண்டும்என்று  நான் நினைக்கிறேன்.
 பொருளாதார ரீதியாக வலிமையான இலங்கையே  இரு நாடுகளின் நலனுக்கும்  உகந்தது..அமெரிக்காவைப் பொறுத்தவரையில், இலங்கையில் நிலையான பொருளாதார வளர்ச்சியைமேம்படுத்துவதுதொடர்பாக  நீண்டகாலமாக உறுதியளித்துள்ளோம், மேலும் சிறந்தசர்வதேச நடைமுறைகளுக்கு  அமைவான  விதத்தில் நிதி நிறுவனங்கள் மற்றும் அதன் பொது நிதிகளை முகாமைத்துவப்படுத்த  அனுமதிக்கும் கொள்கைகளை உருவாக்குவதற்கு  அரசாங்கத்தை ஊக்குவித்துள்ளோம். நீங்கள் விரும்பினால் இந்த யோசனையின் அடிப்படையில்   முதலீட்டை ஈர்க்க இலங்கை ஒரு வகையான  சிறந்த நிலையில் இருப்பதுடன்கேந்திர  நுழைவாயிலாகவும்   இருக்கும்
port-city-300x200.jpg
 
கேள்வி ; மேலும் அமெரிக்கவர்த்தகங்கள்  ஊழல் நடைமுறைசூழலில்இடம் பெறாது  என்று கூறியிருந்தீர்கள் . புதிய சக்தி அரண்  தொடர்பாக முன்மொழியப்பட்ட முதலீடு பற்றிய கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக நீங்கள்அதனை  குறிப்பிட்டீர்கள். உங்கள் பார்வையில், , இலங்கையில் பிரச்சனை எவ்வளவுவுக்கு  தீவிரமானதாகவிருக்கிறது ?
பதில்; டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனலின்   2020 ஊழல் பற்றியசுட்டெண் பட்டியலில்  179 தரவரிசையில் 94 ஆவது இடத்தில்இலங்கைஉள்ளது.   மேம்படுத்துவதற்கு இடம் இருக்கிறதென்பதுமிகவும் தெளிவானதாகும். . இந்தியா 86ஆவது இடத்திலும் . ருவாண்டா 49.இலும்  சிங்கப்பூர்  3.இடத்திலும்  உள்ளது.இந்த ப் போட்டியாளர்கள் மற்றும்அயல்  நாடுகளைச்தாண்டிமேம்பட  இலங்கைக்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.
அரசாங்கம் ஒரு சூழலைப் பார்க்கும்போது அது வெளிப்படையாக ஊழல் அபாயத்தை அளிக்கிறது மற்றும் ஊழலுக்கான சாத்தியக்கூறுகள் அந்த இடர்தொடர்பான  மதிப்பீட்டின் ஒரு பகுதியாகும் என்று நான் நினைக்கிறேன். மேலும் பொருளாதாரத்தை வலுப்படுத்த செய்ய வேண்டிய அனைத்துநடவடிக்கைகள் மூலம்   ஊழலையும் குறைக்கலாம்.
அதனால் அந்த சட்டம் நுழைவது உயர் சர்வதேச தரங்களை கொண்டிருக்கிறது  அது , ஒப்பந்தங்கள் அமு ல்படுத்தப்படுவதை உறுதிசெய்து, நடைமுறைகள் முடிந்தவரை மென்மையாகவும் நெறிப்படுத்தப்பட்டதாகவும் இருக்கும், அதனால் இ லஞ்சம் கோருவதற்கு வாய்ப்பு இல்லை
இலங்கையில் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் வளர்ச்சியடையும் ஒரு சூழலை உருவாக்க  வணிக சட்டம் உதவும் என்று நான் நினைக்கிறேன். . இது வெளிநாட்டு முதலீடு மட்டுமல்லாமல் , இலங்கையில் சிறந்த வாய்ப்புகள் இருப்பதாக நான் நினைக்கும் நிறுவனங்கள் பற்றியது. ஊழலைத் தோற்கடிப்பதன் மூலம் சிலவற்றை அடைய முடியும்.
கேள் வி; அமெரிக்காவிலிருந்து முதலீடுகள் மற்றும் வர்த்தகநடவடி க்கைகளை   ஈர்த்துக்கொள்வதற்காக இலங்கையுடன் உள்ள வேறு எந்த குறிப்பிட்ட பகுதிகளை  மேம்படுத்த முடியும்?
பதில்வர்த்தக நட வடிக்கைகளை  இலகுபடுத்துவதுதொடர்பாக   இலங்கை அரசு வியக்கத்தக்க வகையில் உறுதியளித்துள்ளது. இது வணிகத்தின் இலகு சுட்டெண்  என்று அழைக்கப்படுகின்ற உலக வங்கியின்  வருடாந்திர சுட்டெண்ணா கும்.,  இப்போது இலங்கை 190 நாடுகளில் 99 வது இடத்தில் உள்ளது, எனவே மேம்படுத்துவதற்கு இடம் இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும், இல்லையா? இதை மேம்படுத்த நிறைய வாய்ப்புகள் உள்ளன. இந்த வழியில் வெற்றி கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்.
 முதலீட்டாளர்களுக்கு முன்மதிப்பீடு  தேவை என்று நான் நினைக்கிறேன். அவர்கள் கொள்கை ரீதியாக நிலைத்தன்மையை தேடுகிறார்கள், அவர்கள் முதலீட்டு சார்பு கொள்கைகளை தேடுகிறார்கள், இந்த கொள்கைகள் ஒரு அரசாங்கத்திற்கு அப்பால் நீடிக்கும். எனவே, அரசியல்வாதிகள், பிற அரசாங்கத் தலைவர்கள், தொழில்துறைத் தலைவர்கள், இலங்கையின் பொருளாதார மற்றும் அரசியல் எதிர்காலத்தைப் பற்றிய ஒருவித பகிர்ந்துகொள்ளப்பட்ட  பார்வையுடன்  ஒரு நிலையான மூலோபாயத்தை செயல்படுத்த வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன். அவ்வாறு செய்வது நிச்சயமாக முதலீட்டாளர்களை  உருவாக்கக்கூடிய ஆரோக்கியமான பொருளாதார அடித்தளத்தை உறுதி செய்யும்.
, துறைமுக நகர்  மற்றும் ஊழல் பற்றி முன்னைய கலந்துரையாடலில்   குறிப்பிட்டது போன்று  முதலீட்டாளர்கள் அபாயங்களைவிரும்பவில்லை. அடிமட்டத்தில்  அது அவர்களுக்கு    ஒரு பிரச்சனையாக இருப்பது மட்டுமல்லாமல், அவர்கள் தங்கள் பங்குதாரர்களின் ஒழுங்குமுறை அமைப்புகளுக்கும்   கடமைப்பட்டதாக காணப்படுகின்றனர். அவர்களின் இயக்குநர்கள் குழு சில அபாயங்களை ஏற்க விரும்பவில்லை. நிறுவனங்கள் தங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளைக் கொண்டிருக்கும் நிறுவனங்களுடன் தொடர்பு கொள்ளவில்லை அல்லது ஒத்துழைக்கவில்லை என்பதை அவர்கள் அறிய விரும்புகிறார்கள்.
அவர்கள் ஒரு முதலீட்டைத் தொடரும்போது அதை சரியான நேரத்தில் மற்றும் விரைவான வழியில் செய்ய முடியும் என்பதை  அறிய விரும்புவார்கள். இதைச் சுற்றியுள்ள சில குறிப்புகள் ஒப்பந்த அமு லாக்கமாக இருக்கும். நீங்கள் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் அதை செயல்படுத்தவும் நிர்வகிக்கவும் முடியும். அது உரிமம் மற்றும் நிர்வாக ஒப்புதல்களாக  உடனடியாக வரலாம் . அவர்கள் உற்பத்தி அல்லது தங்களுக்கு கிடைத்த எந்த வணிக நடவடிக்கையையும் அமைப்பதற்காக நிலம் அல்லது வசதிகளைப்எளிதாக  பெறுவதற்கு  விரும்புகிறார்கள். அவர்கள் கட்டணங்களை செலுத்தவோ அல்லது இ லாபத்தை கொண்டுசெல்லவோ   மூலதனக் கட்டுப்பாடுகள் இல்லையா  என்பதை அவர்கள் அறிந்துகொள்ள விரும்புகிறார்கள். இவைதான் அமெரிக்காவிலிருந்தும்  வேறு இடங்களிலிருந்தும் அதிக வெளிநாட்டு முதலீடுகளை வரவழைக்கும்.
கேள்வி ;குவாட் பற்றி ஒரு கேள்வி. இலங்கையும்கேந்திர அமைவிடத்தில்  உள்ளது, குவாட் அடிப்படையில் அமெரிக்கா இலங்கையிலிருந்து எஎதனை  எதிர்பார்க்கிறது?
பதில் ; இங்கு ஒரு படி பின்வாங்கி குவாட் என்றால் என்ன என்று பார்ப்பது உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன். குவாட்ரிலேட்டரல் என்பதற்கு குவாட் என்பது சுருக்கமானது. இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் அவு ஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகள்இதில் அங்கம்  வகிக்கின்றன .
குவாட் ஆரம்பத்தில் ஒன்றாக வந்தது, உண்மையில் 2004 சுனாமிதொடர்பாக  ஒரு சந்திப்பு இடம்பெற்றிருந்தது.. இது 2007 இல் ஒரு இராஜதந்திர உரையாடலாக மாறியது. பின்னர் அது 2017 இல் ஒரு விரிவான உரையாடலாக மீண்டும் இடம்பெற்ற து.ஆனால் பின்னர் இந்தோ-பசிபிக் பற்றிய பகிர்ந்துகொள்ளப்பட்ட  பார்வை கொண்ட நான்கு நாடுகளின் மாநாடு ஆகும் . நிச்சயமாக அந்த பார்வை அது ஒரு சுதந்திரமான , திறந்த, நெகிழ்ச்சியான மற்றும் உள்ளடக்கிய இடம். உலகின் இந்த பரந்த பகுதி அணுகக்கூடியது, அதுமாற்றமடையும் சர்வதேச சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது, மற்றும் சுதந்திரமான பயணம்  மற்றும் சர்ச்சைகளுக்கு அமைதியான தீர்வு போன்ற முக்கிய கொள்கைகள் இதனை  நிர்வகிக்கும் விதிகள் என்பதை நாங்கள் உறுதிப்படுத்த விரும்புகிறோம். நிச்சயமாக  கட்டாயப்படுத்தாமல் தங்கள் சொந்த கொள்கை ரீதியானதெரிவுகளை  நாடுகள் செய்ய முடியும் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
 அந்த சூழலைப் புரிந்துகொள்வதன் மூலம், ஜனநாயகம், மனித உரிமைகள், அடிப்படை சுதந்திரம் போன்ற  நல்ல பெறுமானங்கள்   மற்றும் நல்லாட்சியை எப்படிப் பெறுவது என்பதைப் பற்றி நாம் பகிர்ந்து கொள்ள முடியும் என்று அமெரிக்கா நிச்சயமாக  நம்புகிறது. . இது எங்கள் இருதரப்பு உறவில் நாங்கள் பணியாற்றியதை விட வேறுபட்டதல்ல என்று நான் நினைக்கிறேன். அமெரிக்கா இந்த நான்கு இலக்கு உரையாடலின் ஒரு பகுதி மட்டுமே, இந்த இலக்குகளை மேம்படுத்தமுடியும்   என்று நம்புகிறது.
இவை பொதுவாக இலங்கை பகிர்ந்து கொள்ள வேண்டிய இலக்குகளா கும்.. இது ஒரு ஜனநாயக ,கடல் வர்த்தக நாடு, எனவே அந்த இலக்குகளை ஊக்குவிக்க நாங்கள் ஒன்றாக பணியாற்ற  முடியும் என்று நம்புகிறோம்
கேள்வி ; நிதி உதவி மற்றும் ஒத்துழைப்புக்காக இலங்கை சீனாவை பெரிதும் சார்ந்துள்ளது என்று சிலர் கவலைகளை எழுப்புகின்றனர். நிதி நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கையின் தற்போதைய சூழலில் அமெரிக்கா எவ்வாறு இந்த நாட்டிற்கு உதவ முடியும்?
பதில்; அமெரிக்காவின் உதவியை திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை. நாங்கள் உண்மையில் கடன் கொடுக்கவில்லை.இலங்கையர்கள் தங்களுக்குதாங்களே  உதவுவதற்காகவும், பல துறைகளில் ஆற்ற லை உருவாக்கவும், இலங்கைக்கு மிகவும் தேவைப்படும் இடத்திலும் நாங்கள் இங்கு இருக்கிறோம். உண்மையான பெறுபேறுகளுடன் , கடந்த 70 ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதார ஆற்றலுக்கான   நீண்ட கால பற்றுதியுடன்நாங்கள்  இருந்தோம். பங்குச் சந்தை,பேரவை . இவை அமெரிக்காவால் வழங்கப்பட்ட வளர்ச்சி உதவி முயற்சிகளில் இருந்து வந்தவை. அதிக தொழில்  பயிற்சிவழங்கப்படுகிறது.. இப்போது நாம் இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறோம். இலங்கையின் பொருளாதாரத்தை மேலும் பாதிக்கக் க்கூடிய அவசரநிலைகளுக்கு நாங்கள் பதிலளித்து வருகிறோம்.
நீங்கள் முன்பு சுனாமி என்று குறிப்பிட்டுள்ளீர்கள், 2004. 2017 ல் வெள்ளம். நிச்சயமாக இப்போது தொற்றுநோய்.
எனவே நாங்கள் சமீபத்தில் 1.5 மில்லியன் மாடர்னா தடுப்பூசிகளை இலவசமாக இலங்கைக்கு வழங்கினோம். இது கோவக் ஸ் வசதி மூலம் வந்தது, ஆனால் அவை அமெரிக்காவின் தடுப்பூசி இருப்புக்களில் இருந்து வந்தன, அவை எங்கள் பகுதியாகும்
அதுமட்டுமல்லாமல், கோவிட் தொடர்பாக  நேரடியாக வோ  அல்லது பொருளாதாரம் முன்னோக்கி செல்வதற்கு  ஏற்படும் பாதிப்பை  குறைக்க வோ உதவவோ  8 மில்லியன் அமெரிக்க டொ லர்களை நாங்கள் வழங்கியுள்ளோம். எ200 சிறிய வென்டிலேட்டர்கள் மற்றும் 500,000 க்கும் மேற்பட்ட விரைவான கண்டறியும் சோதனைகளென எங்களிடம் சில மேலதிக நன்கொடைகள் உள்ளன.எனவே எங்கள் அணுகுமுறை இலங்கையர்களுக்கு முக்கியமானஎங்களிடம் சில மேலதிக நன்கொடைகள் உள்ளன பொருளாதாரத்தைமேம்படுத்தும்  திறனை உருவாக்க உதவுகிறது, ஆனால் சமீபத்தைய தொற்றுநோய் உட்படநெருக்கடிகளை சமாளிக்கவும்  பதிலளிக்கவும் உதவுகிறோம் .
கேள் வி; சமீபத்தில் நீங்கள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டீர்கள். கலந்துரையாடப்பட் டதன்   அடிப்படையில்அதன் பின்னர்  எந்த வகையான  முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது ?
பதில்; நாங்கள் நிதியமைச்சருடன் ஒரு நல்ல சந்திப்பைமேற்கொண்டோம் அ து மிகவும் சுமுகமானதாக இருந்தது. முதலீட்டைப் பற்றி பேசுவதற்கு எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது, அநேகமாக எங்கள் உரையாடலிலில் இடம்பெற்ற விடயம்இதுவாகும்.  . முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் சில சவால்கள், மட்டுப்பாடுகள் ,  வெளிப்படையான சூழலின் தேவைப்பாடு  , முதலீட்டாளர்களின் ஆபத்து மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்துதல் ஆகியவற்றைபற்றி  நாங்கள் பேசினோம், இலங்கை அதன் வர்த்தக சூழலில் சிறந்த நடைமுறைகள் மற்றும் சர்வதேச விதிமுறைகள்உயர்நிலைகளை கடைபிடிக்க முடியும்.
இலங்கை உயர்தர முதலீட்டாளர்களை ஈர்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், நிச்சயமாக அந்த கருத்து  நிதி அமைச்சரிடம்வெளிப்படுத்தப்பட்டது . இலங்கையின் பொருளாதாரம் பற்றிய கவலையைப் பற்றி நான் பகிரங்கமாக கூறியதை அவருடன் பகிர்ந்து கொண்டேன். இது தற்போது சிறந்த ஆரோக்கியநிலையில்  இல்லை. தொற்றுநோய் காரணமாக உலகளாவியரீதியில் இது மிகவும் கடினமான நேரமாகும் மற்றும் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய வளங்களை இலங்கைக்கு பயன்படுத்துவது தீர்வின் ஒரு பகுதி என்று நான் நம்புகிறேன்.
இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பு நாடு. இலங்கை மற்றும் 188 ஏனைய  நாடுகள் உறுப்பினர் களாகவுள்ளன நாணயநிதியம் வறுமையை எதிர்த்து அமைக்கப் பட்டது, அந்த நிறுவனம்  உலகளாவிய நிதி ஸ்திரத்தன்மையை உறுதிசெய்து உலகளாவிய வேலைவாய்ப்பு தேவைகளை நிவர்த்தி செய்ய உதவுகிறது. எனவே இந்த தருணத்தில் இலங்கைக்குத் தேவையான கருவி இதுதான். எனவே நாங்கள் அதைப் பற்றி உரையாடினோம்,முன்னேற்றத்தில் மிகவும் உறுதியான பொருளாதார அடித்தளத்தை உருவாக்கும் மாற்றங்களில் உறுப்பு நாடாக சர்வதேச நாணய நிதியத்தின்  வளங்களைப் பயன்படுத்தவும், இலங்கையின் பொருளாதார செயல்திறனை மதிப்பிடுவதற்கு வரக்கூடிய கருவிகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், நிச்சயமாக எப்படி ஈடுபடுவது என்பதைப் பார்க்கவும் நான் அரசாங்கத்தை தொடர்ந்து வலியுறுத்துகிறேன்.
கேள்வி ; இறுதியாக  ஆப்கானிஸ்தானின் நிலைவரம் ற்றி கேட்க விரும்புகிறேன். இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு அமெரிக்கா ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுகிறது. பிராந்திய சமாதானத்தைப் பொறுத்தவரை அமெரிக்காவின் அடுத்த வகிபாகம் என்ன?
taliban-18-300x157.jpg
 
பதில்; பலரைப் போலவே நானும் நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்என்று நான் கூறுவேன் . ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் பல பிரதிமைகள்  மிகவும் கவலை அளிக்கின்றன. இப்போது விமான நிலையத்தில் நிலைமை சீராகிவிட்டது மற்றும் வெளியேற்றங்கள் தொடர்கின்றன என்பதை நான் புரிந்துகொள்கிறேன் மற்றும் ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகளுடன் மற்றும் பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் நாங்கள் ஒருங்கிணைக்கிறோம்
மாற்ற்றமடைந்து  வரும் சூழ்நிலைக்கு ஒரு சீரமைக்கப்பட்ட அணுகுமுறை இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம், இந்த முயற்சியின் முடிவுகளை ஓரிரு நாட்களுக்கு முன்பு வெளியான அறிக்கையுடன் பார்க்கிறோம் என்று நினைக்கிறேன். இப்போது 106 நாடுகள் இணைந்துள்ளன, வெளிநாட்டுப் பிரஜைகள் மற்றும் வெளியேற விரும்பும் ஆப்கானியர்கள் பாதுகாப்பாகவும் ஒழுங்காகவும் புறப்படுவதற்கு  மதிப்பளிக்க வும் வசதி செய்யவும் அழைப்பு விடுத்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு சபை  ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது, அனைத்து விரோதங்களையும் நிறுத்தி, உள்ளீர்த்த  பேச்சுவார்த்தைகள் மூலம் ஒரு புதிய அரசாங்கத்தை நிறுவ வேண்டும். இவை உடனடியான  அடுத்த கட்டம் என்று நான் நினைக்கிறேன், இந்த நேரத்தில் மிகவும் கடினமான சூழ்நிலையில்  நாங்கள்  பிராந்தியத்திலும் பரந்தளவில்  சர்வதேச சமூகத்துடனும்  ஒத்துழைப்புடன் செய்ய வேண்டும்.
கேள்வி ; இது தொடர்பாக இலங்கை அரசாங்கத்திடம்  நீங்கள் தொடர்பு கொண்டீர்களா ?
பதில்; ஆம், எங்கள் கருத்துக்களையும் கவலைகளையும் இலங்கை அரசாங்கத்துடன் பகிர்ந்து கொள்ள நாங்கள் உரையாடல்களை மேற்கொண்டோம் , அவைஉலகளாவிய ரீதியில் இடம் பெற்று க்கொண்டிருக்கும் கலந்துரையாடல்களின்   ஒரு பகுதியாக இருக்கும்

 

https://thinakkural.lk/article/134360

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.