Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருக்குறளின் படைமாட்சி அதிகாரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் '7 படையுறுப்புகள்'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

நாம் சிறுவயதில் திருக்குறள் படிக்கும் போது அதில் ஓரிடத்தில் பொருட்பால் பற்றி படித்திருப்போம். அந்த பொருட்பாலில் உள்ள படைமாட்சி அதிகாரத்தில் உள்ள 767 ஆவது குறள் இவ்வாறாக வரும்.

"தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த

போர்தாங்கும் தன்மை அறிந்து."

இதற்கு பரிமேலழகர் இவ்வாறாக ஓர் உரை எழுதியிருக்கின்றார்:-

தலை வந்த போர் தாங்கும் தன்மை அறிந்து - மாற்றாரால் வகுக்கப்பட்டுத் தன்மேல் வந்த படையின் போரைவிலக்கும் வகுப்பு அறிந்து வகுத்துக் கொண்டு; தார் தாங்கிச் செல்வது தானை - அவர் தூசியைத் தன்மேல் வாராமல் தடுத்துத்தான் அதன் மேற்செல்வதே படையாவது.

(படை வகுப்பாவது: வியூகம். அஃது எழுவகை உறுப்பிற்றாய், வகையான் நான்காய், விரியான் முப்பதாம். உறுப்பு ஏழாவன: உரம் முதல் கோடி ஈறாயின.வகை நான்காவன: தண்டம், மண்டலம், அசங்கதம், போகம் என இவை. விரி முப்பதாவன: தண்டவிரி பதினேழும், மண்டலவிரி இரண்டும், அசங்கத விரி ஆறும், போக விரி ஐந்தும் என இவை. இவற்றின் பெயர்களும் இலக்கணமும் ஈண்டு உரைப்பின் பெருகும், அவை எல்லாம் வடநூல்களுள் கண்டுகொள்க, இவை நான்கு பாட்டானும் படையினது இலக்கணம் கூறப்பட்டது.)

இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் ''உரம் முதல் கோடி ஈறாயின'' என்பதை அறிய பல வருடங்களாக நான் மிகவும் முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் என்னால் அறிய முடியவில்லை. பின்னர், கடந்த சில நாட்களிற்கு முன்னர்(கோராவில்தான் முதன்முதலில் எழுதினேன்) நான் செ.சொ.பே.மு. மற்றும் 'போரியல், அன்றும் இன்றும்' என்னும் நூல்களை வாசித்த போதுதான் இதற்கான விடையினை என்னால் முற்று முழுதாக அறிய முடிந்தது. நான் கண்டறிந்ததை உங்களோடு இங்கே பகிர்ந்துகொள்கிறேன். இவை பற்றி மேலும் அறிய:போரியல் அன்றும் இன்றும் என்னும் புத்தகத்தின் 5.2.6 ஐக் காணவும் .

இவை தான் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் 7 படையுறுப்புகள்.

  1. தூசி, உரம், ஆக்கம், தலைத்தார், தார் & கொடிப்படை - முன்னணி
    1. தூசி (Mobile troops) - இவர்கள் எல்லா உறுப்புகளிற்கும் முன்செல்வர். இவர் எதிரிப்படைகள் பற்றிய முக்கிய செய்திகளை அறிந்து அவர்தம் தந்திரவழிவகை இடங்களை, ஆநிரைகளைக் கைப்பற்றி பின்வரும் படைகளின் பாதுகாப்பை உறுதிசெய்வர். இவர் ஏனைய படைகளினின்று பல கல் முன்னிருப்பர்.
    2. உரம்/ ஆக்கம்(Point section) -
      1. உரம் - சமர்க்களத்தில் முதற்றாராய்(முதல்+தார்) நின்று ஆடி வீழ்ந்து வெற்றிக்கு உரமாவதால் வழங்கப்பட்ட பெயர் (முன்வரிசையில் நிற்பவர்கள் வீடு திரும்புதல் அரிது என்பது உலக வழக்கு)
      2. ஆக்கம் - போரை ஆக்கிவைப்பதால் எழுந்த பெயர்
    3. நெற்றி(Leading Platoon) - தார்ப்பகுதியின் முற்படையாம் தலைத் தாரின் முன்னுறுப்பு
    4. தலைத்தார்(Van guard) - தாரிற்கு முன்னே செல்வதும் தாரின் முற்பகுதியுமாகியது தலைத்தார் ஆகும்
    5. தார்(Advance guard) - தூசி முன்னே இருப்பினும் இல்லாதிருப்பினும் பேரணிக்கு முன்னே சென்று பெரும் காவலாக விளங்குபவை.
    6. கொடிப்படை(Main guard) - மேற்கண்ட அனைத்தையும் தன்னகத்தே கொண்டவை கொடிப்படை எனப்படும்
  2. நிரை(திவா.) - சமர்க்களத்தில் அடுத்தடுத்து வரிசையாக நிற்பவர்களைக் குறித்த சொல் .
  3. பேரணி (main body or centre of an army) - படையின் நடுவணி
    1. "பேரணியி னின்ற பெருங்களிறுகள் " (சீவக.277, உரை);
    2. அணி - பேரணி பலவாக பிரிக்கப்பட்டால் ஆகும் சிற்றணிகள்
  4. கை(Flank) - பேரணியின் இருபக்கவாட்டிலும் செல்லும் படைகள்.
  5. கோடி/ கூழை (Rearguard) - பின்னணி
    1. கோடி - இன்றளவும் ஈழத்தில் வீடுள்ள காணியின் கடைப்பகுதியை குறிக்கும் சொல்லாக வழங்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இது தனிச்சொல்லாக வழக்கில் இல்லை. கூட்டுச்சொல்லாகவே பயன்பாட்டில் உள்ளது. அதுவும் மிக அரிதாகவே. தமிழ்நாட்டில் எங்கேனும் சிற்றுர்களில் வழக்கில் இருக்கிறதா என்பது அறியில்லை(Unknown).
      1. த.நா. வழக்கில் உள்ள கூட்டுச்சொற்கள் - தெருக்கோடி, கோடி வீட்டுப் பெண் | புலன கிட்டிப்பு(credit): Devasena
  6. கடைக்கூழை - கூழையினும் கடைநிலை அணி
  7. சிறகு(Wing) - முழுப் படையினையும் கிட்டத்தட்ட ஒரு பின்னமாகப்(fraction) பிரிக்கப்பட்டதால் வரும் ஒரு வித மாச்சதளம்(Big squad) போன்றது.

 


இது தொடர்பாக நான் உருவாக்கிய ஒரு விளக்கப்படம்.

main-qimg-9bd13b7ae64e4e1bb84e75d3b86c3047.png

 

main-qimg-eb00b93751f870b890e87f74f80cbc72.png

 


உசாத்துணை:

  • குறள் 0767 - திறன்
  • Wing vs Flank - What's the difference?
  • செ.சொ.பே.மு.
  • சூடாமணி - 184 வது பாடல்
  • சூடாமணி நிகண்டு, சரஸ்வதி மகால், பக்கம் 590- 594
  • "தூசியுங் கூழையு நெற்றியுங் கையும் அணியு மென்ப தப்படைக் குறுப்பே. கூழை யென்பது பேரணி யாகும். தாரே முன்செல் கொடிப்படை யாகும்." (402-405) -பிங்கலம்
  • "போரியல் அன்றும் இன்றும்" நூல்

படிமப்புரவு:-

  • நானே கணினியில் உருவாக்கியது

தொகுப்பு & வெளியீடு

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

ஒன்றைக் கசடறக் கற்றலின் வெளிப்பாடு. கற்றது உணர விரித்துரைக்கும் இவ்வெளிப்பாடே ஏனையோர்க்கும் நன்மை பயப்பது. சிறப்பு. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
7 hours ago, சுப.சோமசுந்தரம் said:

ஒன்றைக் கசடறக் கற்றலின் வெளிப்பாடு. கற்றது உணர விரித்துரைக்கும் இவ்வெளிப்பாடே ஏனையோர்க்கும் நன்மை பயப்பது. சிறப்பு. 

நன்றி ஐயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.