Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோத்தாவை போத்தாவாக மாற்றுதல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்


 

கோத்தாவை போத்தாவாக மாற்றுதல்

 
000000000
மறுசீரமைப்புத்   திட்டத்திற்கான கதவுகளைத் திறக்க முடிந்தால், அதைஅமுல்படுத்த தென்னாப்பிரிக்காவைப் போன்று  ஒருதுணைச்   சட்டத்தை உள்ளீர்த்துக் கொள்ள வேண்டும்.தற்போதைய  சமூக நெருக்கடிநிலைமையில்  கோத்தாவை போத் தாவாக மாற்றினால் மட்டுமே இவை அனைத்தும் சாத்தியமாகும்
0000000
”தென்னாபிரிக்காவில்இடம்பெற்றிருந்த  இந்த வரலாற்றுரீதியான  பரி சோதனையிலி ருந்து இலங்கையில் நாங்கள்  கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு முக்கியமான பாடம் உள்ளது. அரசியலமைப்பை உருவாக்கும் செயல்முறையில் எதிர்கொள்ளும் தடைகளை வழக்கமான மற்றும் பழக்கமான முறைகளால் கடக்க முடியாத தருணங்கள்  இருக்கலாம். தென்னாப்பிரிக்காவில்  மாற்றத்தை  தோற்றுவிக்கும் திட்டத்திற்காக முதலில் மண்டேலா மற்றும் ஜனாதிபதி  போத்தா பின்னர்ஜனாதிபதி டி கிளா ர்க் ஆகியோரால் தேர்ந்தெடுக்கப்பட்ட முறைமையானது  வழக்கத்திற்கு மாறானதாகவிருந்தாலும் ,  சட்டத்திற்கு அமைவாக இருந்தது.”
0000000
விக்டர் ஐவன்
Victor-Ivan-1.jpg
 
00000
இலங்கைக்கு மக்கள் அரசியலமைப்பு தேவைப்படுகிறது  என்ற கருத்தை கடுமையாக விமர்சித்து ‘மக்களின்  அரசியலமைப்பு,மாயையும்  உண்மையும் ’ என்ற தலைப்பில் கடந்த வாரம்  ‘அனித்தா’ நாளிதழ் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கு அறிவுறுத்தி, சட்டத்தரணியும் , சட்டத்துறை விரிவுரையாளருமான நாளிதழின் ஆசிரியரால் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. கடந்த நல்லாட்சி  அரசாங்கத்தின் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தினை   வலுவாக நியாயப்படுத்தியவராக  தென்பட்ட  ஒருவராகவும் அவரை  கருதமுடியும்.
அந்தக் கட்டுரையில், ‘மக்கள் அரசியலமைப்பு’ என்ற கருத்தீட்டுக்கு  எதிராக எட்டு முக்கிய கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார். அவைவருமாறு: (1) இவர்கள் யார்? கோத்தாபய ராஜபக்சவுக்கு வாக்களித்த 6.9 மில்லியன் மக்களும் அவர்களில் அடங்குவர்களா? (2) மக்கள் அரசியலமைப்பு என்று அழைக்கப்படுவது எங்கிருந்து தொடங்குகிறது? அதற்கான முன்முயற்சியை யார் எடுப்பார்கள், அதற்கான அதிகாரத்தை எங்கிருந்து பெறுகிறார்கள்? (3) கிராமங்கள் , நகரங்கள்  என அனைத்து மக்களும் அரசியலமைப்பில் சேர்க்கப்பட வேண்டிய விடயங்களை நேரடியாக அமர்ந்து பேச வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்களா? (4) அத்தகைய அரசியலமைப்பை உருவாக்குவதில் எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் என்ன? (5) இந்த முறையில் மக்களால் தொகுக்கப்பட்ட அரசியலமைப்பின் வரைவு சட்டப்பூர்வ செல்லுபடியை எங்கிருந்து பெறுகிறது? மக்களால் உருவாக்கப்பட்டதால் மட்டும் அது சட்டமாகிவிடுமா? (6) இந்த அரசியலமைப்பு 1978 அரசியலமைப்பின் விதிகளுக்கு உட்பட்டு இயற்றப்படுமா? (7) தற்போதுள்ள அரசியலமைப்பிற்குப் புறம்பாக அது இயற்றப்பட வேண்டுமானால், அதற்கான அதிகாரத்தை அவர்களுக்கு வழங்கும் வகையில் சமீப காலங்களில் நாட்டில் புரட்சிகரமான மாற்றம் ஏற்பட்டுள்ளதா? (சுதந்திரத்திற்குப் பின்னரான  இந்தியாவில் அல்லது சுதந்திரத்திற்குப் பின்னரான ஆபிரிக்காவில் கறுப்பின மக்கள் வெள்ளை மேலாதிக்கத்திலிருந்து மீண்டும் அதிகாரத்தைப் பெற்றனர்; அல்லது குறைந்த பட்சம், 1970 இல் இலங்கையில் இடம்பெற்றதுபோன்று   டொமினியன் அந்தஸ்தில் இருந்து நாட்டை விடுவித்து குடியரசாக மாறுவதற்கான ஆணை இருந்ததா? ) (8) மக்கள் அரசியலமைப்பின் வரைவுக்கு யாராவது திருத்தங்களை முன்மொழிய விரும்பினால், பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள்  என்ன? செயல்முறை சவால் செய்யப்பட வேண்டும் என்றால், அதை எவ்வாறு ஆரம்பிக்க்க  முடியும்?
9b3d3c0f-cc842846-872d59eb-efb34cf8-fa75
 
கோத்தாபய வுக்கு வாக்களித்த 6.9 மில்லியன் மக்களும் ‘மக்கள்’ வகையைச் சேர்ந்தவர்கள் என்பதே முதல் கேள்விக்கான பதில். 2016 ஆம் ஆண்டில், அவர்களில் பெரும்பாலோர் மகி ந்த ராஜபக்ச வுக்கு எதிராகவும், நல்லாட்சி முறைமைக்காக நிற்கும் வேட்பாளருக்கு ஆதரவாகவும் வாக்களித்ததாகத் தெரிகிறது. ‘மக்கள் அரசியலமைப்பு என்று அழைக்கப்படுவது எங்கிருந்து தொடங்குகிறது, அதற்கான முன்முயற்சியை யார் எடுப்பார்கள், அதற்கான அதிகாரத்தை எங்கிருந்து பெறுகிறார்கள்’ என்றஇரண்டாவது  கேள்வி க்கான  பதில் பின்வருமாறு.
புதிய அரசியலமைப்புக்கு நாடுகள் செல்ல வேண்டிய சூழ்நிலைகள் பல வடிவங்களில் உருவாகலாம். சர்வாதிகார அல்லது அடக்குமுறை ஆட்சியிலிருந்து விடுபட்ட அந்நிய ஆதிக்கத்திலிருந்து சுதந்திரம் பெற்ற அல்லது நீண்ட மற்றும் நீடித்த உள்நாட்டுப் பூசல்களுக்குப் பிறகுசமாதானத்தை  அடைந்த நாடுகளுக்கு புதிய அரசியலமைப்பு தேவைப்படலாம். அதுமட்டுமல்லாமல், வேறு இலகுவான  காரணங்களுக்காக புதிய அரசியலமைப்பை நாடுகள் ஏற்றுக்கொள்ளலாம். புதிய அரசியலமைப்பைக் கோரும்  மக்களின் பலமான அழுத்தங்களினாலும்  சில நாடுகள் புதிய அரசியலமைப்பை உருவாக்கியுள்ளன.
மேலும், நாட்டின் அரசு  தனது நடவடிக்கைகளைத் தக்க வைத்துக் கொள்ள முடியாத நெருக்கடியான சூழ்நிலைகளில் அல்லதுகடுமையாக  நலிவடைந்த நிலைக்கு அல்லது தோல்வியடைந்த அரசாக மாறிய நெருக்கடியான சூழ்நிலைகளில் புதிய அரசியலமைப்பை ஏற்றுக்கொள்வது சாத்தியமாகும். . 1990 அளவில் தென்னாப்பிரிக்கா இதே நிலையில் இருந்தது. அன்றைய தென்னாபிரிக்காவில் இருந்த நிலைமையைப் போன்றதொரு நிலைமையே இன்று இலங்கையிலும்  அதிகளவில் காணப்படுகின்றது. தற்போது கடுமையான  நெருக்கடியில் இருக்கும் இலங்கையில்உள்ளநாங்கள்  தென்னாபிரிக்காவிடமி ருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் உள்ளது. கேள்வி எழுப்பிய வரின் இரண்டாவது கேள்விக்கான பதிலையும் இது வழங்குகிறது.
தென்னாப்பிரிக்காவும்  இலங்கையும்
botha-300x194.jpg
தென்னாப்பிரிக்க அனுபவத்தை சுருக்கமாக பார்க்கலாம். சிறையில் இருந்த மண்டேலாவுக்கும் பிரதமர் போத்தாவுக்கும் இடையிலான முதல் சந்திப்பு 1989 இல் இடம்பெற்றிருந்தது .  1990 பெ ப்ரவரி 2 இல் , ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி மீது விதிக்கப்பட்டிருந்த தடையை அரசாங்கம் நீக்கியது. பத்து நாட்களுக்குப் பிறகு, மண்டேலா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். 1990 ஆகஸ்ட் 6, அன்று, அரசாங்கத்திற்கு எதிரான ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது முடிவை ஆப்பிரிக்க காங்கிரஸ் அறிவித்தது.

அதுவரைஇடம்பெற்ற  இரகசியப் பேச்சுகளுக்குப் பதிலாக உத்தியோக பூர்வமான பேச்சுவார்த்தைகள் 1990இல் ஆரம்பிக் கப்பட்டன. 1991 இல் நிறவெறி இல்லாத ஜனநாயக தென்னாபிரிக்காவைக் கட்டியெழுப்புவதற்கான  ஒரு புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான செயல்முறை பற்றியகலந்துரையாடல்கள் ஆரம்பமாகியது.. பிரதம ர்  போத்தாவின் அரசாங்கத்தால் தொடரப்பட்ட சமாதான முன்னெடுப்புகளுக்கு  தென்னாபிரிக்காவில் வெள்ளை சமூகத்தின் வலதுசாரி அரசியல் கட்சியான கன்சர்வேட் டிவ் கட்சியிடமிருந்து வலுவான எதிர்ப்புஏற்பட்டிருந்தது .

இத்தகைய சூழலில்,  ஆபிரிக்க தேசிய காங்கிரசுடன் பேச்சுவார்த்தைத் திட்டத்தைத் தொடர வெள்ளையர்களிடம் இருந்து ஆணையைப் பெறவில்லை என்று கன்சர்வேட் டிவ் கட்சித் தலைவர்தொடர்ந்து குற்றம் சாட்டி வந்ததால், வெள்ளையர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டசர்வஜன வாக்கெடுப்பை  நடத்த வேண்டிய கட்டாயம் பிரதமர் போத்தாவுக்கு ஏற்பட்டது. . இதன் விளைவாக, 1992மார்ச்சில்  ஒசர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது, மேலும்  வெள்ளையின  வாக்காளர்களில் பெரும்பான்மையினர் , 68.73% மானோர் நிறவெறிக் கொள்கையை  முடிவுக்கு கொண்டுவருவதை  அங்கீகரித்தனர்.

அதைத் தொடர்ந்து, 1993  ஏப்ரலில் , இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கும், புதிய அரசியலமைப்பை உருவாக்கும் செயல்முறைக்கு பொருந்தக்கூடிய 34 கொள்கைகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கும் அதிகாரம் அளிக்கும் ஒரு துணைச்  சட்டத்தை நிறைவேற்ற இரு தரப்பும் கருத்தொருமைபாட்டை ஏற்படுத்திக்கொண்டன . பாராளுமன்றத்திற்கு வெளியில் வரையப்பட்ட சட்டமூலம், 1993 ஆம் ஆண்டின் 200 ஆம் இலக்க சட்டமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு,1994ஏப்ரல் 24இல் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.

ஐந்தாண்டு காலத்திற்கு சர்வகட்சி  கட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும், புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் மற்றும் தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசியலமைப்பு இயற்றப்படும் வரை ஏனைய மறுசீரமைப்புகள் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று துணைச் சட்டம் கூறுகிறது. புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்படும் வரை அனைத்துக் கட்சி அரசாங்கம் இடைக்கால அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களின்படி செயற்படுவதாக அனுமானிக்கப் பட்டது.

தென்னாபிரிக்காவில் இடம்பெற்றிருந்த இந்த வரலாற்றுரீதியான பரி  சோதனையில் இருந்து இலங்கையில் உள்ளநாங்கள் கற்றுக்கொள்ளக்கூடிய ஒரு முக்கியமான பாடம் உள்ளது. அரசியலமைப்பை உருவாக்கும் செயல்முறையில் எதிர்கொள்ளும் தடைகளை வழக்கமான மற்றும் பழக்கமான முறைகளால் கடக்க முடியாததருணங்கள் இருக்கலாம். தென்னாபிரிக்காவில்   மாற்றத்தை ஏற்படுத்தும்  திட்டத்திற்காக முதலில் மண்டேலா மற்றும் பிரதம ர்  போத்தா மற்றும் பின்னர் பிரதமர் டி கிளா ர்க் ஆகியோரால் தேர்ந்தெடுக்கப்பட்ட முறைமை  வழக்கத்திற்கு மாறானது, ஆனால் சட்டத்தின்பிரகாரம் இருந்தது.

நிரந்தர புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படும் வரை நடைமுறையில் இருந்த இடைக்கால அரசியலமைப்பு, பாராளுமன்றத்தில் மன்றத்தில் அல்லாமல்  அதற்கு வெளியில் உருவாக்கப்பட்டது. அதை உருவாக்க உதவிய மண்டேலாவோ அல்லது அவரது குழுவில் உள்ள எவரும் பாரா ளுமன்ற உறுப்பினர்களாக இருக்கவில்லை. பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தாத ஒரு சக்திவாய்ந்த மற்றும் சுறுசுறுப்பாகச் செயற்படும்  மக்கள் குழு கூட, உண்மையான மாற்றத்திற்கான நிலை உருவாகும் நேரத்தில், அந்த இடத்தை நுட்பமாகவும், உகந்ததாகவும், சிலவேளை பாரிய  அளவிலும்பாரம்பரிய கட்டமைப்பிற்கு வெளியேயும் மாற்றத்திற்கான வழியை தயார் ப் படுத்தி  பயன்படுத்த முடியும் என்பதை இது காட்டுகிறது.
அன்றைய தென்னாபிரிக்காவில் நிலவியதைப் போன்றதொரு நிலைமையே தற்போது இலங்கையில் பெருமளவில் காணப்படுகிறது.. மிகப் பெரிய ஆணையைப்  பெற்று ஆட்சிக்கு வந்த போதிலும், மக்களிடையே கடும் எதிர்ப்பையும் கோபத்தையும் ஏற்படுத்திய நிலையில், அரசும் அதே அளவு மோசமான நிலையில் உள்ளது. நாடு எதிர்கொள்ளும் நெருக்கடி அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது. மக்கள் அரசாங்கத்தின் மீது மிகுந்த கோபத்தில் உள்ளனர், ஆனால் எதிர்க்கட்சிகளால் இந்த சூழலை பயன்படுத்தி தங்களை போதுமான அளவிற்கு வலுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

அதிகரித்துவரும்  நெருக்கடியை எதிர்கொண்டு, அரசாங்கமும், தனது உத்தியோகபூர்வ பதவிக்காலம் முடியும் வரை, அதிகாரத்தை தக்கவைக்க முடியாத பலவீனமான நிலையில் உள்ளது. இந்தப் பின்னணியில், புதிய அரசியலமைப்புச் சட்டத்துடன் கூடிய உண்மையான கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புத் திட்டத்தைக் கடைப்பிடிப்பதன் மூலம் மட்டுமே, ஓரளவு நம்பிக்கையுடன் எழுச்சி பெறவும், நாட்டில் ஏற்படக்கூடிய அழிவுகளின் சாத்தியக்கூறுகளைக் குறைக்கவும் முடியும். .

தென்னாபிரிக்காவைப் போன்று இந்த நாட்டிலும் உள்ள மக்கள் அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த நோக்கத்திற்காக தீவிரமாக  குரல் எழுப்பினால், மறுசீரமைப்புத்  திட்டத்திற்கு வழி வகுக்க முடியும். அத்தகைய வேலைத்திட்டத்திற்கு உகந்த தளத்தை உருவாக்குவதற்கான கதவுகள் திறக்கப்பட்டால், ஜனாதிபதி தனதுபிரதிமையை  மீட்டெடுக்க முடிவதுடன்   அவரது ஏற்றுக்கொள்ளலைப் பாதுகாக்க முடியும். அரசாங்கமும் எதிரணி  இயக்கங்களும் கூட, நாட்டின் போக்கை மாற்றியமைக்க உதவும் இத்தகைய செயல்திட்டத்தில் தீவிரமாக ஈடுபடுவதன் மூலம் ஒரு குறிப்பிட்ட அளவிலான அங்கீகாரத்தைப் பெற முடியும்.

இலங்கையால் இந்த இலக்கை அடைய முடிந்தால், தற்போது நம்பிக்கை இழந்துள்ள மக்களிடையே புதிய நம்பிக்கைக்கீற்றுக்களை ஏற்படுத்துவதுடன் ஒரு பெரிய பள்ளத்தை நோக்கி செல்லும்  இலங்கையின்தற்போதைய  பயணத்தை மாற்றியமைக்கவும் முடியும். அத்தகைய சீர்திருத்தத் திட்டத்திற்கான கதவுகளைத் திறக்க முடிந்தால், அதைச் செயற் படுத்த தென்னாபிரிக்காவைப் போன்றதொரு  துணைச் சட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும். நிலவும் சமூக நெருக்கடிநிலையில்  கோத்தாவை போத் தாவாக மாற்றினால் மட்டுமே இவை அனைத்தும் சாத்தியமாகும்.

சர்வதேச உதாரணங்கள்

தற்போதைய நெருக்கடியின் கீழ், மறுசீரமைப்பு  த் திட்டத்திற்கு வழி வகுக்கும் இந்த முயற்சி தோல்வியடைந்தாலும், அது வீண் போகாது. அதனை  அடைவதற்கான பொதுமக்களின் முயற்சி எவ்வளவுக்கு  வலுவாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு சீர்திருத்தங்கள் மக்களின் இதயங்களைத் தொடும். மேலும், அரசாங்கத்தின் அடுத்த மாற்றத்தைப் பாதிக்கும் முக்கிய காரணியாகவும், அதனுடன் தொடர்புடைய மறுசீரமைப்புத்  திட்டத்தின் முக்கியத்துவத்தை அதிகரிக்கவும் இது உதவும்.

கேள்வி எழுப்பியவரின்  மூன்றாம்  மற்றும் நான்காம் கேள்விகள் வருமாறு: “கிராமங்கள் , நகரங்களென அனைவரும் அமர்ந்து அரசியலமைப்பில் இடம்பெற வேண்டிய விடயங்களை நேரடியாகப் பேசுகிறார்களா? அத்தகைய அரசியலமைப்பை உருவாக்குவதில் எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் என்ன? இந்த இரண்டு கேள்விகளும் கேள்வி கேட்பவர் மக்கள் அரசியலமைப்பு அல்லது ‘பங்கேற்பு அரசியலமைப்பு’ பற்றி கேள்விப்பட்டதே இல்லை என்பதைப்  பிரதிபலிக்கிறது. இது முதன்முறையாக முயற்சிக்கப்பட்ட ஒரு முறை அல்ல, ஆனால் கடந்த 40 ஆண்டுகளில் பெரும்பாலான நாடுகளில் முயற்சி செய்து பரி சோதிக்கப்பட்டது.

இது ஐக்கிய நாடுகள் சபையாலும் அங்கீகரிக்கப்பட்ட முறைமையாகும்.  இது 21 ஆம் நூற்றாண்டின் அரசியலமைப்பு உருவாக்கத்தின் மாதிரியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு தயாரிப்பில் இந்த முறை மையை   நடைமுறைப்படுத்திய  சில நாடுகள் பின்வருமாறு. நேபாளம் (2015), கென்யா (2010), ருவாண்டா (2002), தாய்லாந்து (1997), எரித்திரியா மற்றும் வெனிசுலா (1999), தென்னாபிரிக்கா (1994), உகாண்டா மற்றும் பிரேசில் (1988), நிகரகுவா (1986) மற்றும் நமீபியா (1985) இந்த முறை. தற்போது சிலியில் குறிப்பிடத்தக்க பரிசோதனைகள் இடம்பெறு கின்றன

மேலே விப ரிக்கப்பட்ட நிகழ்வுகளின் தொடர், அனிட்டா பத்திரிகை  ஆசிரியர் எழுப்பிய பல வாதங்களுக்கு மறைமுகமான பதிலை வழங்குகிறது. இதிலிருந்து இலங்கையில் நாம் கற்றுக்கொள்ளக்கூடிய பல முக்கியமான பாடங்கள் உள்ளன. சிலியின் முதல் சோசலிச ஜனாதிபதி அலெண்டே மற்றும்1971 இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்ற சிலிக்  கவிஞரும் இராஜதந்திரியும்  அரசியல்வாதியுமான ஃப ப்லோ நெருடாவின் ஆளுமைகள் காரணமாக இலங்கை மக்களின் ஆர்வத்தை தூண்டிய நாடாக சிலி கருதப்படலாம். . சிலி 1980 இல் பினோசே யின் ஆட்சியின் கீழ் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பையும் கொண்டுள்ளது, இது ஜே.ஆர்.ஜெயவர்தனா வின் இலங்கையின் அரசியலமைப்பைப் போன்று 15 முறை திருத்தப்பட்டுள்ளது.

2019 அக்டோபர்25  அன்று, சிலி மக்கள் சந்தி யாகோ நகரில் அணிவகுத்து, நாட்டின் ஒட்டுமொத்த ஆட்சி முறைமையில் அடிப்படை மாற்றத்தைக் கொண்டுவரும் அரசியலமைப்பைக் கோரி கடுமையான போராட்டத்தைத் தொடங்கினர். இந்த நிகழ்வில் ஏறக்குறைய 1.2 மில்லியன் மக்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போதிருந்து, சிலி வீதி  ஆர்ப்பாட்டங்களின் நாடாக மாறியது. புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் மக்கள் முன்வைக்கும் மற்றுமொரு முக்கியமான கோரிக்கை, மக்கள் எத்தகைய மாற்றத்தை கோருகின்றார்கள் என்பதைக் கண்டறிய அரசாங்கம் சர்வஜன வாக்கெடுப்பை  நடத்த வேண்டும் என்பதேயாகும்.

அதைத் தொடர்ந்து, 2020 அக்டோபரில் சர்வஜன  வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. புதிய அரசியலமைப்பின் தேவைப் பாடு தொடர்பாக  78% பேர்அங்கீகாரம்  அளித்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதித்துவத்திற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு அரசியலமைப்பு பேரவைக்கு பதிலாக, மக்கள் பிரதிநிதிகளை மட்டுமே கொண்ட அரசியலமைப்பு நிர்ணயசபையை  அமைப்பதற்கு 79%பேர்  அளித்துள்ளனர். 2021ஆம் ஆண்டு மே 15, 16ஆம் திகதி களில் அரசியலமைப்புநிர்ணயசபை  மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட தேர்தல் முடிவுகள் குறிப்பிடத்தக்கவை. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளில் 49.5% பெண்கள் என்பது இந்தத் தேர்தலின் மிக முக்கியமான சிறப்பம்சமாகும்.

50% பெண் பிரதிநிதிகளைக் கொண்ட உலகின் முதல் அரசியலமைப்புநிர்ணயசபை   இதுவாகும். அடுத்ததொரு  முக்கியமான விடயம், தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளில் 66% பேர் சுயேச்சைப் பிரதிநிதிகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வெற்றி இல்லாவிட்டாலும் கூட ஒரு சக்திவாய்ந்த வெகுஜன பிரசாரத்தின் மூலம் அரசியலமைப்பின் உருவாக்கம் வெற்றிபெற முடியும் என்பதை சிலி அனுபவம் தெளிவாக பிரதிபலிக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பு இல்லாமலேயே அரசியலமைப்பை உருவாக்க முடியும் என்பதையும் இது காட்டுகிறது.
தற்போது அரசியலமைப்பை உருவாக்கும் நாடுகளில் ‘மக்கள்’ அல்லது ‘பங்கேற்பு’ அரசியலமைப்பு உருவாக்கம் மிகவும் பிரபலமான முன்மாதிரியாக  விளங்கினாலும் , அது புதிய பங்கேற்பு கட்டமைப்புகள் மற்றும் மாதிரிகள்தொடர்பாக  மேலும் பரி சோதிக்கப்படும் செயற் பாட்டில் உள்ளது. பேராசிரியர் விவியன் ஹார்ட் கூறியது போல், “பங்கேற்பு கட்டமைப்புகளை பரிசோதித்து, பிரஜைகள்  இந்த செயற் பாட்டில் முன்முயற்சி எடுப்பதற்கான வாய்ப்பை வழங்குவதன் மூலம், பங்கேற்பு அரசியலமைப்பை உருவாக்குவது குறித்த திறந்த உரையாடலை உருவாக்க முயற்சி செய்யப்படுகிறது, இதனால் நிகழ்ச்சி நிரல், உள்ளடக்கம் மற்றும் இறுதி அங்கீகாரம்  ஆகியவற்றை தொகுக்கும் அரங்குகளில்  பொதுமக்களின் பங்கேற்பு நீடிக்கப்படுகிறது

அரசியலமைப்பை உருவாக்கும் செயற் பாட்டில் பங்கேற்கும் மக்களின் உரிமையும் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த உரிமையைப் பயன்படுத்துவதற்கு பொதுமக்களுக்குக் கிடைக்கும் ஏற்பாடுகள், இன்றைய அரசியலமைப்பை உருவாக்கும் செயல்முறையின் நியாயத்தன்மையின் அளவை நிர்ணயிக்கும் ஒரு குறியீடாகச் செயற் படுகிறது. இறுதியாக, இந்த அணுகுமுறையானது, தொடர்ச்சியாகவும், வெளிப்படையாகவும், சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு பொது உரையாடலைப் பின்பற்றி, ஜனநாயக முறையில், அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கும் ஏற்றுக்கொள்வதற்கும், அவர்களின் மரியாதையைப்வென்றெடுப்பதற்கும்  நாடிநிற்கிறது .

பினான்சியல்  டைம்ஸ்
link-financial times
Transforming Gota to a Botha

 

https://thinakkural.lk/article/154285

 

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் FT லிங்கை காணவில்லை.... தேடி இணையுங்கோ.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Nathamuni said:

கிருபன் FT லிங்கை காணவில்லை.... தேடி இணையுங்கோ.....

தமிழில் வாசித்தால் போதும்தானே. FT link தேவையில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

தமிழில் வாசித்தால் போதும்தானே.  FT link தேவையில்லை.

FT லிங் எண்டு போட்டுவிட்டு மறந்திட்டியள் போல.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.