Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

எம்.கே.நாராயணனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: சென்னை ஆர்ப்பாட்டத்தில் சுப.வீ. வலியுறுத்தல்

Featured Replies

எம்.கே.நாராயணனை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: சென்னை ஆர்ப்பாட்டத்தில் சுப.வீ. வலியுறுத்தல்

ஈழத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இந்தியப் பிரதமரின் ஆலோசகர் எம்.கே.நாராயணனை பதவி நீக்கம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னையில் இன்று நடைபெற்ற ஈழத் தமிழர் பாதுகாப்பு ஆர்ப்பாட்டத்தில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை விக்டோரியா நினைவு அரங்கம் முன்பாக திராவிடர் கழகத்தின் சார்பில் இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11 மணியளவில் "ஈழத் தமிழர் பாதுகாப்பு ஆர்ப்பாட்டம்" நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார்.

நிகழ்வில் தலைமை உரையாற்றிய கி.வீரமணி, ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் மனித உரிமை மீறல்களைக் கண்டித்துள்ளன. ஒருபக்கம் பேச்சுவார்த்தை என்று கூறிக் கொண்டு மறுபுறம் ஈழத் தமிழர்களை திட்டமிட்டு சிறிலங்கா அரசாங்கம் படுகொலை செய்கிறது.

ஜப்பானுக்கும் நோர்வேக்கும் உள்ள அக்கறையும் உணர்வும் இந்தியாவுக்கும் சிறிதும் இல்லாமல் இருக்கிறது. சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை- இனப் படுகொலையை இந்திய அரசாங்கம் கண்டிக்க வேண்டும். சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து சுற்றுக்காவல் நடவடிக்கையை இந்தியா மேற்கொள்வதை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இந்தியா பாராமுகமாக இருக்காமல் ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க தலையிட வேண்டும் என்று கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சுப.வீரபாண்டியன், விடுதலைப் புலிகளுக்கு அமைதிப் பேச்சுகளில் விருப்பம் இல்லை என்று இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசகர் எம்.கே.நாராயணன் தவறான தகவலை பரப்பி வருகின்றார். அவரை பதவி நீக்கம் செய்ய வேஎண்டும். இதற்குரிய நடவடிக்கைகள தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும் என்றார்.

ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும்- சிங்கள அரசாங்கத்தை இந்திய அரசாங்கம் கண்டிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன.

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன், ஒவியர் மருது, பாவலர் அறிவுமதி உள்ளிட்ட தமிழ் உணர்வாளர்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் பெண்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஈழத் தமிழர் பாதுகாப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

.

http://www.eelampage.com/

Edited by Iraivan

ஈழத்தமிழருக்கு எதிராக இந்திய அரசை வழிநடத்தும் அறிவாளி :)

இவரைப்பற்றிய சிறிய தகவல் விக்கியிலிருந்து

--------------------------------------------------------------------------------------------------------------------------------

Mayankote Kelath Narayanan (1934 - ) is the National Security Advisor (NSA) to the Prime Minister of India. He was appointed to this post on January 25, 2005, three weeks after the former NSA, J N Dixit died on January 3, 2005.

Narayanan headed the Intelligence Bureau (IB) from 1987 to 1990, before heading the Joint Intelligence Committee. He became Chief of the IB again in 1991, before retiring in 1992. He was the Special Advisor for Internal Security to the Prime Minister of India since May 2004.

Narayanan is an expert in security matters and a specialist on Sri Lankan affairs.

--------------------------------------------------------------------------------------------------------------------------------

இவர் ஈழத்தமிழ் எதிர்ப்பாளரா? இல்லை தமிழ் எதிர்ப்பாளரா??

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக திணமனி பத்திரிகையில் வந்த செய்தி

ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுக்கும் உணர்வு செத்துப்போகவில்லை" - கி. வீரமணி

ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்ற உணர்வு செத்துப்போகவில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறினார்.

ஈழத் தமிழர்களுக்கு வாழ்வுரிமை கோரி திராவிடர் கழகம் சார்பில் சென்னை மெமோரியல் ஹால் அருகே வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் அவர் பேசியது:

"ராஜபட்சய தலைமையிலான சிங்கள அரசு ஒரு பக்கம் சமாதானத்துக்கு தயார் என்று அறிவித்தும், மறுபுறம் தமிழர்களைக் கொன்று குவித்தும் வருகிறது. இலங்கையின் இந்த இரட்டை வேடத்தை உலக நாடுகளும் புரிந்து செயல்படுகின்றன.

ஆனால், மத்திய அரசு இந்தப் பிரச்னையில் பாராமுகமாக உள்ளது. ஈழத் தமிழர்களை முற்றாக அழிப்பதற்கு முன்பு, தமிழர் படுகொலைகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.

அண்மையில் தில்லிக்கு வந்த அதிபர் ராஜபட்சயவின் தம்பியை சந்திப்பதற்கு மத்திய அரசு மறுத்தது. இதே நிலை தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

ஈழத் தமிழர்களை மட்டுமின்றி தமிழக மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் சுட்டுக் கொல்கின்றனர். இலங்கைக் கடற்படையுடன் கூட்டு ரோந்து என்ற திட்டத்தை செயல்படுத்தியிருந்தால் தமிழக மீனவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பார்கள். முதல்வர் கருணாநிதி தலையிட்டு அந்த திட்டத்தை கைவிடச் செய்தார்.

ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்ற உணர்வு இங்கு செத்துப்போகவில்லை. நமது உணர்வுகளைப் புரிந்துகொண்ட ஒரு ஆட்சி நடப்பதால் தெருவில் இறங்கிப் போராடாமல் இருக்கிறோம்'' என்றார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.