Jump to content

ஸ்மார்ட் ஃபோன்கள் எதிர்காலத்தில் இல்லாமல் போகுமா? - பூமியின் உலோக இருப்பு சொல்வது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்மார்ட் ஃபோன்கள் எதிர்காலத்தில் இல்லாமல் போகுமா? - பூமியின் உலோக இருப்பு சொல்வது என்ன?

  • விக்டோரியா கில்
  • பிபிசி அறிவியல் செய்தியாளர்
13 மே 2022, 05:29 GMT
 

ஸ்மார்ட்ஃபோன்களில் 30 வகையான உலோகங்கள் இருக்கின்றன. அதில் சிலவற்றின் இருப்பு பூமியில் அருகி வருகிறது.

பட மூலாதாரம்,ROYAL SOCIETY OF CHEMISTRY

 

படக்குறிப்பு,

ஸ்மார்ட்ஃபோன்களில் 30 வகையான உலோகங்கள் இருக்கின்றன. அதில் சிலவற்றின் இருப்பு பூமியில் அருகி வருகிறது.

புதிய மின்னணு சாதனங்களை உருவாக்க விலைமதிப்பற்ற உலோகங்களை பூமியிலிருந்து புதிதாக வெட்டியெடுப்பதை நீடிக்க முடியாது என்பதால், மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்வதை உடனடியாக அதிகரிக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

2021-ஆம் ஆண்டில் மட்டும் உலகில் தூக்கி வீசப்பட்ட மின்னணு கழிவுகளின் எடை 57 மில்லியன் டன்கள் என்று ஓர் ஆய்வு மதிப்பிட்டுள்ளது.

ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி (RSC) கூறுகிறது. பூமியிலுள்ள சுரங்கங்களில் இருந்து வெட்டியெடுப்பதைவிட, அந்த மின்னணு கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கான உலகளாவிய முயற்சி இப்போது அவசியம்.

உலகளாவிய நெருக்கடிகள் விலைமதிப்பற்ற உலோகங்களுக்கான விநியோக சங்கிலிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. நுகர்வோர் தொழில்நுட்பங்களில் பயன்படுத்தப்படும் அனைத்து விலைமதிப்பற்ற உலோகங்களையும் மறுசுழற்சிக்கு உள்ளாக்குவது நிலைத்தன்மைக்கு வழிவகுக்கும் என்றும் அதுகுறித்த கவனத்தை ஈர்க்கவும் ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி ஒரு முன்முயற்சியை எடுத்து வருகிறது.

யுக்ரேன் போர் உட்பட புவிசார் அரசியலில் நிலவும் அமைதியின்மை, மின்சார வாகன பேட்டரிகளில் உள்ள நிக்கல் போன்ற முக்கிய உலோகப் பொருட்களின் விலையில் பெரும் ஏற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அது சுட்டிக்காட்டுகிறது.

தனிமங்களுக்கான சந்தையில் நிலவும் இந்த ஏற்ற இறக்கம், மின்னணு உற்பத்தியைச் செயல்படுத்தக்கூடிய "விநியோக சங்கிலிகளில் குழப்பத்தை" ஏற்படுத்தும். இது, தேவை அதிகரிப்பதுடன் இணைந்து, பேட்டரி தொழில்நுட்பத்தில் மற்றொரு முக்கிய அங்கமான லித்தியத்தின் விலையை 2021 மற்றும் 2022-க்கு இடையில் கிட்டத்தட்ட 500% அதிகரிக்கச் செய்துள்ளது.

"நம்முடைய தொழில்நுட்ப நுகர்வு பழக்கங்கள் மிகவும் நீடிக்க முடியாதவை. அந்த பழக்கங்கள் சுற்றுச்சூழல் சேதங்களைத் தொடர்ந்து அதிகரிக்கின்றன. அதோடு நமக்குத் தேவையான மூலப் பொருள்கள் தீர்ந்துவிடும் அபாயமும் உள்ளது," என்று ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரி தலைவர் பேராசிரியர் டாம் வெல்டன் கூறினார்.

ஸ்மார்ட்ஃபோனில் உள்ள உலோகங்களில், அடுத்த நூற்றாண்டில் தீர்ந்துபோகக் கூடியவை:

  • கேலியம்: மருத்துவ வெப்பமானிகள், எல்இடிகள், சோலார் பேனல்கள், தொலைநோக்கிகள் ஆகியவற்றில் பயன்படுத்துகிறது. புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
  • ஆர்சனிக்: பட்டாசுகளில், மரப் பாதுகாப்பாளராகப் பயன்படுத்தப்படுகிறது.
  • வெள்ளி: கண்ணாடிகள், சூரிய ஒளியில் கருமையாக்கும் எதிர்வினை லென்ஸ்கள், பாக்டீரியா எதிர்ப்பு ஆடைகள் மற்றும் தொடுதிரைகளில் பயன்படுத்தக்கூடிய கையுறைகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
  • இண்டியம்: டிரான்சிஸ்டர்கள், மைக்ரோசிப்கள், ஃபயர்-ஸ்பிரிங்க்லர் கட்டமைப்புகளில், ஃபார்முலா ஒன் கார்கள் மற்றும் சோலார் பேனல்களில் பயன்படுத்தப்படுகிறது.
  • யிட்ரியம்: வெள்ளை எல்இடி விளக்குகள், கேமரா லென்ஸ்கள் மற்றும் சில வகையான புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
  • டான்டலம்: அறுவை சிகிச்சை உள்வைப்புகள், நியான் விளக்குகளுக்கான மின் முனைகள், டர்பைன் ப்ளேடுகள், ராக்கெட் முனைகள் மற்றும் சூப்பர்சோனிக் விமானங்களுக்கான முனைத் தொப்பிகள், செவிப்புலன் கருவிகள் மற்று பேஸ்மேக்கர்களில் பயன்படுத்தப்படுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் உற்பத்தி செய்யப்படும் மின்னணு கழிவுகளின் அளவு சுமார் இரண்டு மில்லியன் டன்கள் அதிகரித்து வருகிறது. அதில், 20 சதவீதத்திற்கும் குறைவாகவே சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யப்படுகிறது.

"மேலும் நிலையான உற்பத்தியில் முதலீடு செய்ய மறுசுழற்சி உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப வணிகங்களை அரசுகள் மாற்றியமைக்க வேண்டிய தேவை உள்ளது," என்று பேராசிரியர் வெல்டன் கூறினார்.

 

லித்தியம் பேட்டரிகளுக்கான தேவை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

லித்தியம் பேட்டரிகளுக்கான தேவை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

ஆர்.எஸ்.சி-ன் புதிய ஆராய்ச்சி மேலும் நிலையான தொழில்நுட்பத்திற்கான தேவை நுகர்வோரிடம் வளர்ந்து வருவதை வெளிப்படுத்தியது.

10 நாடுகளில் 10,000 பேரிடம் நடத்திய இணைய கணக்கெடுப்பில், 60% பேர், மின்னணு சாதனம் நிலைத்தன்மை வாய்ந்த முறையில் தயாரிக்கப்பட்டது என்பதை அறிந்தால், தங்களுக்கு விருப்பமான தொழில்நுட்ப நிறுவனத்தின் போட்டியாளர் பக்கம் மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

தங்கள் சொந்த மின்னணு கழிவுகளை எவ்வாறு கையாள்வது என மக்களுக்குத் தெரியவில்லை என்றும் கணக்கெடுப்பு கூறுகிறது. பதில் அளித்தவர்களில் பலர், தங்க வீடுகளில் பயன்படுத்தப்படாத சாதனங்களின் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்துக் கவலைப்படுவதாகக் கூறினார்கள். ஆனால், அவர்கள் அவற்றை என்ன செய்வது எனத் தெரியவில்லை அல்லது மறுசுழற்சி திட்டங்களின் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள்.

ராயல் சொசைட்டி ஆஃப் கெமிஸ்ட்ரியைச் சேர்ந்த எலிசபெத் ரேட்க்ளிஃப், பிபிசி ரேடியோ 4-ன் இன்சைட் சயின்ஸில் பேசியபோது, "நமக்கே தெரியாமல் நமது வீடுகளில் பழைய கைபேசிகள் மற்றும் செயலிழந்த கணினிகளில் விலைமதிப்பற்ற உலோகங்களைச் சேமித்து வைக்கிறோம்," என்று கூறினார்.

"மக்கள் தங்கள் மின்னணு சாதனங்களை சில்லறை விற்பனையாளரிடம் திருப்பித் தரலாம் மற்றும் அவை பாதுகாப்பாக மறுசுழற்சி செய்யப்படும் என்று உறுதியளிக்கக்கூடிய "திரும்பப் பெற்றுக்கொள்ளுதல்" போன்ற திட்டங்கள் மூலம், உற்பத்தியாளர்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் அதிக பொறுப்பை ஏற்க வேண்டும்.

 

எதிர்காலத்தில் ஸ்மார்ட்ஃபோன்களே இல்லாமல் போகுமா?

பட மூலாதாரம்,BBC NEWS

விநியோகச் சங்கிலிகளில் உள்ள அனைத்து ஏற்ற இறக்கங்கள், இந்தப் பொருட்களுக்கான ஒரு வட்டப் பொருளாதாரம் தேவை என்ற உண்மையை வலுப்படுத்துகிறது. இந்த நேரத்தில், நாம் தொடர்ந்து அவற்றை நிலத்தடியில் இருந்து வெட்டியெடுத்துக் கொண்டிருக்கிறோம்," என்று ரேட்க்ளிஃப் கூறினார்.

பழைய மற்றும் தேவையற்ற சாதனங்களை அலமாறிகளில் அடைத்துவிட்டு மறந்துவிடாமல், அவற்றை மறுசுழற்சி மையங்களுக்கு எடுத்துச் செல்ல மக்களை ஊக்குவிக்க ராயல் சொசைட்டி முயல்கிறது.

கணினிகள், கைபேசிகள் மற்றும் பிற சாதனங்களைப் பாதுகாப்பாக மறுசுழற்சி செய்வதாக உறுதியளிக்கின்ற அருகிலுள்ள மையத்தைக் கண்டறியும் இணைய ஆதாரங்களை பிரிட்டனிலுள்ள நுகர்வோருக்கு இது சுட்டிக் காட்டுகிறது.

"நாங்கள் எப்போதும் சொல்வது, குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மறுசுழற்சி செய்தல் என்பது தான். எனவே ஒரு கைபேசியை அதிக காலத்திற்கு வைத்திருக்கலாம், பழைய கைபேசியை விற்கலாம் அல்லது உறவினரிடம் கொடுக்கலாம்," என்கிறார்.

மேலும், "இந்தச் செயல்முறைகளை அளவிடுவதற்கும் உள்கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கும் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எனவே நாம் அனைவரும் நம்முடைய சாதனங்களை மறுசுழற்சி செய்யலாம்," என்றும் ரேட்க்ளிஃப் கூறினார்.

https://www.bbc.com/tamil/global-61372024

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி ஏராளன் ...........!   😁

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓம்…டிரம்ப் வெல்ல உதவும் குணங்களில் இதுவும் ஒன்று. தனக்கு தேவை என்றால் பழசை மறந்து விடுவார். தற்போதைய பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் 2018 இல் டிரம்பை தூக்கி போட்டு மிதித்துள்ளார். ஆனால் அவர் பதவிக்கு வந்ததுமே, டிரம்ப் வெல்ல கூடும் என ஊகித்து, அமெரிக்கா போய், வான்சை சந்தித்து, அவர் மூலம் டிரம்பை ஷேப் பண்ணி விட்டார். ——— @குமாரசாமி @Kandiah57 @தமிழ் சிறி ஜேர்மன் நிதியமைச்சரை தூக்கி அடித்து கூட்டணியை உடைத்துள்ளார் சான்சிலர். தேர்தல் மேகம்கள் சூழுதோ? நேற்றுதான் குசா அண்ணை தேர்தல் வரும் எண்ட மாரி எழுதினவர்.
    • தடித்த குடியரசு பெண்மணி ஒருவர் கமலா ஜனாதிபதியானால் வெள்ளைமாளிகை முழுவதும் கறி மணமாகவே இருக்கும் என்றார். உஷாவின் மாளிகையில் எப்படி மணக்கும். இது சாதாரண வார்த்தைகள் இல்லை.   இதற்கு முன்னர் ரம்பை கிழிகிழி என்று கிழித்தார்.
    • சொத்து யாரது எண்டு சொல்லுங்கோ… கள்ள உறுதி முடிக்கிறம்… விக்கிறம்…🤣 இதென்ன என்ர உன்ர எண்டு பிரிச்சு பேசிகொண்டு. அப்படியா நாம் பழகிறோம்🤣
    • வேன்ஸ் இன் பின்புலம் மிக சுவாரசியமானது.  சிற்ரூரில் வாழ்க்கை, உழைக்கும் வர்க்க பின்புலம், இராணுவ உத்தியோகம், வெள்ளையினமல்லாத மனைவி என பல விடயங்களில் டிரம்புக்கு எதிரான வாழ்க்கை. மேலே பகிடி சொன்ன உழைக்கும், நடுத்தர மக்கள் ஏன், எப்படி வலது சிந்தனையால் ஈர்க்கப்படுகிறார்கள் என்பதற்கு ஒரு நல்ல உதாரணம். ஆனால் டிரம்ப்பை போலவே ஆளும் உளறுவாயன். டிரம்பை விட லூசுதனமாக மேடைகளில் பேசுவார். மைக் பென்ஸ் போல காலம்தாழ்த்தியாவது டிரம்பை எதிர்க்க கூட மாட்டார் என நினைக்கிறேன். டிரம்ப்பின் நாலு வருடத்தின் பின் டிரம்ப்பின் அரசியல் பிராண்டுக்கு வாரிசு இவரா இல்லை டிரம்பின் மகளா என்பதில் லடாய் ஆரம்பிக்கலாம்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.