Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

அண்டார்டிகா இருட்டில் உடல்நலம் குறித்து அறிவியல் ஆய்வு - விண்வெளி பயணத்துக்கு உதவுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

அண்டார்டிகா இருட்டில் உடல்நலம் குறித்து அறிவியல் ஆய்வு - விண்வெளி பயணத்துக்கு உதவுமா?

7 மணி நேரங்களுக்கு முன்னர்
 

அண்டார்டிகாவில் ஒரு சூரிய அஸ்தமனம். (கோப்புப்படம்)

பட மூலாதாரம்,ALASDAIR TURNER / GETTY IMAGES

 

படக்குறிப்பு,

அண்டார்டிகாவில் ஒரு சூரிய அஸ்தமனம். (கோப்புப்படம்)

பூமியிலிருந்து விண்வெளிக்குச் செல்பவர்கள் பல மாத காலம் தங்கி இருப்பதால், அவர்கள் தங்கியிருக்கும் காலத்துக்கு தேவையான உணவுப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட அனைத்தையும் கொண்டு செல்வது வழக்கம்.

ஆனால், பூமியிலேயே ஓர் இடத்துக்குச் செல்ல வேண்டியவர்கள் அவ்வாறான முன்னேற்பாடுகளுடன் செல்ல வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா?

பூமியில் இருக்கும் கண்டங்களிலேயே பனியும் குளிரும் அதீதமாக இருக்கும் அண்டார்டிகாவில் உள்ள ஆய்வாளர்களுக்கு அடுத்த சில மாதங்களுக்கு இந்த நிலைதான்.

நான்கு மாத காலம் நீடிக்கும் மிகவும் நீண்ட இரவு அண்டார்டிகாவில் தொடங்கியுள்ளதன் காரணமாக நான்கு மாத காலத்துக்கு தேவையான உணவு, குடிநீர், மருந்துகள் மற்றும் பிற அடிப்படை தேவைகளுக்கான பொருட்கள் அனைத்தும் அந்த பனி கண்டத்தில் பணி செய்பவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் தகவலின்படி பூமியின் தென் துருவத்தில் சூரியன் தினந்தோறும் உதித்து மறையாது. ஒரு முறை உதித்தால், அடுத்த சில மாதங்களுக்குப் பிறகுதான் மறையும்.

ஆகஸ்டு மாதம் உதிக்கத் தொடங்கினால் அக்டோபர் வரை சூரிய உதயம் நிகழும். பின்னர் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரை சூரிய ஒளி இருக்கும். பின்னர் மார்ச் முதல் மே மாதம் வரை சூரிய அஸ்தமனம் நிகழும் என்கிறது நாசா.

மே மாதம் முதல் அண்டார்டிகாவின் தொடுவானத்துக்கு கீழே சூரியன் சென்றுவிடும். மே மாதம் தொடங்கும் இருட்டு, தொடர்ந்து நான்கு மாத காலத்துக்கு நீடிக்கும். மீண்டும் சூரியன் உதிக்க ஆகஸ்டு மாதம் வரை காத்திருக்க வேண்டும்.

பூமியின் மீது சூரிய ஒளி விழும் பகுதிக்கு எதிர்ப்புறமாக அண்டார்டிகா அமைந்துள்ளதால் இவ்வாறு நடக்கிறது.

இதன்படி மே 4ஆம் தேதி சூரியன் மறைந்த பிறகு, அண்டார்டிகா கண்டத்தில் மிகவும் நீண்ட இரவு தொடங்கியுள்ளது என்று மே 12ஆம் தேதியன்று ஐரோப்பிய விண்வெளி முகமை தெரிவித்துள்ளது.

 

அண்டார்டிகாவில் கோடைக் காலம், குளிர் காலம் என்று இரு பருவகாலங்கள் மட்டுமே உள்ளன.

பட மூலாதாரம்,DAVID MERRON PHOTOGRAPHY / GETTY IMAGES

 

படக்குறிப்பு,

அண்டார்டிகாவில் கோடைக் காலம், குளிர் காலம் என்று இரு பருவகாலங்கள் மட்டுமே உள்ளன.

இந்த பனி காலத்தில் அந்த கண்டம் முழுவதும் இருள் சூழ்ந்திருக்கும். இந்த நான்கு மாதங்களுக்கு அங்கு விமானங்கள் பறக்க முடியாது என்பதால், அங்கு பொருட்களைக் கொண்டு செல்லவோ, மனிதர்களை அழைத்துச் செல்லவோ முடியாது என்கிறது ஐரோப்பிய விண்வெளி முகமை.

தங்கள் உடலில் தாங்களே சோதனை செய்யும் ஆய்வுக்குழு

அண்டார்டிகாவில் கடல் மட்டத்தில் இருந்து 3233 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது இத்தாலி - பிரான்ஸ் கூட்டு ஆய்வு மையமான கான்கார்டியா. இவ்வளவு உயரத்தில் குளிர் -80 டிகிரி செல்சியஸ் வரை செல்லும் என்பதால் இந்தக் காலகட்டத்தில் பனி உறைந்து, இருள் சூழ்ந்திருக்கும் என்று கூறும் அந்த முகமை, இதனால் அங்கு தங்கி இருப்பவர்களுக்கு மூளையில் ஆக்சிஜன் குறையும் (chronic hypobaric hypoxia) என்று கூறுகிறது.

உறைய வைக்கும் குளிரும், இருளும் நிறைந்த இத்தகைய புறச்சூழலில் இருப்பது கிட்டத்தட்ட வேற்றுகிரகம் ஒன்றில் வாழ்வதைப் போன்றது.

இந்த காலகட்டத்தில் ஐரோப்பிய விண்வெளி முகமையின் உதவியுடன் கான்கார்டியா மையத்தில் ஹான்னஸ் ஹேக்சன் எனும் மருத்துவரும் அவரது குழுவினரும் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

இவ்வாறான அதீத தனிமைப்படுத்தலில் மனிதர்கள் எவ்வாறு தாக்குப்பிடிக்கிறார்கள், அப்படி இருப்பவர்களின் தூங்கும் வழக்கங்கள், குடல்நாளம் எவ்வாறு இயங்குகிறது, மனநிலை உள்ளிட்டவை குறித்து, உயிரி-மருத்துவ உபகரணங்களைக் கொண்டு, தங்கள் உடல்களிலேயே ஹேக்சன் மற்றும் அவரது குழுவினர் ஆய்வு செய்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு விண்வெளிக்குப் பயணம் செய்பவர்கள், வரும் காலங்களில் அண்டார்டிகா சென்று ஆய்வு செய்பவர்கள் ஆகியோருக்கு உதவியாக இருக்கும்.

அண்டார்டிகா செல்பவர்களைப் போலவே விண்ணுக்குப் பயணம் மேற்கொள்வோருக்கும் சூரிய ஒளி மூலம் கிடைக்கும் விட்டமின் - டி போன்ற ஊட்டச்சத்துகள் கிடைக்காது என்கிறது நாசா.

https://www.bbc.com/tamil/global-61476285

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் தேசிய உணர்வை அழித்து.. தமிழ் மக்களின் சுயநிர்ணய.. தாயக் கோட்பாட்டை சிதைத்து.. தமிழ் மக்களை சிங்கள பெளத்த பெருந்தேசியத்துக்குள் சிங்கள பெளத்த பேரினவாதம் மூலம் விழுங்குவதன் ஊடாக... தமிழ் மக்களை எல்லா வழியிலும் பலவீனப்படுத்தி.. அதில் தமக்கான சுயலாபத்தையும்.. பிராந்திய சர்வதேச சக்திகளுக்கு தேவையான வசதிகளையும் செய்து அவர்களின் அனுசரனையை தக்க வைத்து தாம் மட்டும் வாழ நினைத்த அமிர்தலிங்கம்.. சம்பந்தன் வகையாறாக்களின்  வந்த சுமந்திரன்... இந்தத் தோல்வியோடு... தான் முன்னர் சொன்னது போல் அரசியலை விட்டு விலகி அப்புக்காத்து வேலையை மட்டும் பார்ப்பதே சிறப்பு. தமிழ் மக்களுக்காக சிங்களப் பெருந்தேசிய பேரினவாத அரசின் கட்டமைப்பில் சுமந்திரானால்... தமிழ் மக்களுக்கான தீர்வை பெறத்தக்க எந்த சட்ட யாப்பு இயற்றலும் செய்ய முடியாது. அதற்கு அவர் தகுதி வாய்ந்தவரும் அல்ல. நம்பிக்ககைக்குரியவரும் அல்ல. அப்படி ஒரு சட்டவாக்க நிலை வந்தால்... உள்நாட்டு வெளிநாட்டு தமிழக தமிழ் மக்கள் சட்டப்புலமை பெற்றோரின் தமிழ் தேசிய உணர்வை மதிப்போரின் கருத்துக்களே முன் வைக்கப்பட வேண்டும். சிங்களப் பேரினவாத்தின் விருப்புக்கு தமிழ் மக்களின் விருப்பை அடகு வைப்பவர்களை அதில் அனுமதிக்கக் கூடாது. அது இலங்கை தீவில் தூய தமிழின சுத்திகரிப்பில் போய் முடியும். 
    • கிறிஸ்தவத்தை தமது சுயலாபத்திற்காக பாவிப்பவர்களே இந்த தத்துவத்தை பேசுவார்கள். இது போலிகிறிஸ்தவர்களின் வாதம். ஆனால் உண்மையான கிறிஸ்தவம் அதுவல்ல, எங்கு பிழை உள்ளதோ அதை கண்டித்து திருத்தும். இல்லையேல் அவரை அந்நியர் போல் விட்டுவிடும்.   இவர்களின் வாதம் உண்மையென்றால்; இவர் எவ்வாறு இரண்டுதடவை தேர்தலில் நின்று வெற்றி பெற்றேன்  என்கிறார். தனது தவறை ஏற்றுக்கொள்ளாதவர், மதத்தின்மேல் தன் தவறை  திணிக்கிறார். கிறிஸ்தவர்கள் வாக்களித்தாலே இவர் வெற்றி பெற வாய்ப்புண்டு. சரி கிறிஸ்தவரை ஒதுக்கினர் என்றே வைத்துக்கொள்வோம். அப்போ, அனுரா கட்சி எப்படி வென்றது? சாதாரணம். இவரின் அடாவடியின் உச்சக்கட்டம், கடைசி நிமிடத்தில் இவர் கட்சிக்குள் செலுத்திய சர்வாதிகாரம். இவர் இந்த முறை வென்றிருந்தால் கூட எதுவும் சாதிக்க முடியாது. ரொம்ப அவமானப்படுத்தப்பட்டிருப்பார். அவர் போவது, தான்தான் எல்லாம் தெரிந்த சட்டத்தரணி என்று காட்டுவதற்கு, அந்த திமிர் ஒட்ட நறுக்கப்பட்டிருக்கும்.    சரியாக சொன்னீர்கள் மீரா! அனுரா கட்சி பெரியளவில் யாழ்ப்பாணத்தில் பிரச்சாரம் செய்யவில்லை, வாக்குறுதிகள் அளிக்கவில்லை, யாரையும் விமர்சிக்கவில்லை, யாரும் கேள்வி, சந்தேகம் என்று கூட கேட்கவில்லை. அப்படியிருந்தும் மக்கள் அமோகமாக வாக்களித்துள்ளார்கள். காரணம்; இவர்கள் மேலிருந்த வெறுப்பு, தங்கள் தேசிய உணர்வை வைத்து இவர்கள் தங்களை ஏமாற்றுகிறார்கள், தாங்கள் இந்த உணர்வோடு இருக்குமட்டும் இந்த போலிதேசிய வாதிகள் தம்மை ஏமாற்றி தம்மிடம் உள்ளவற்றையும் பறிக்கும் என்பதை உணர்ந்தே, அனுரா மேல் நம்பிக்கை வைத்து தெரிந்தெடுத்துள்ளார்கள். இவர்களை வெறுத்து இன்னொரு சிங்கள கட்சியை அவர்கள் ஆதரிக்கவில்லை. குறிப்பாக அனுராவை தேர்ந்தெடுத்துள்ளார்கள். எல்லோரும் அதன் விளைவை எச்சரித்தும் வாக்களித்தார்கள்.  மக்களின் நம்பிக்கை, அந்த இரும்பு மனங்களை கவரும், உடைக்கும். கட்டாயம் மற்ற சிங்கள கட்சிகளை போலல்லாது ஏதாவது செய்வார்கள். அது இருக்க, சிறிதரன் ஒத்துக்கொள்கிறார். மக்கள் நம்மீது வெறுப்பு கொண்டு எங்களை அகற்றியிருக்கிறார்கள், நாங்கள் அதற்கு மதிப்பளிக்கிறோம், திருந்துவோம். ஆனால் சுமந்திரனோ, நாங்கள் வென்று விட்டோம், பிரிந்து சென்ற கட்சிகள் தோற்றுவிட்டார்கள், நாங்கள் இத்தனை ஆசனங்களை பெற்றோம் என்று வரிசைப்படுத்துகிறார். இதிலிருந்து அவர் மனநிலையை பாருங்கள். எதுவுமே தெரியாதவர் போல் சிரித்துக்கொண்டு பேட்டியளிக்கிறார். இதுதான் வெட்கங்கெட்ட தன்மை. தனது தோல்வியை மறைத்து, மற்றவர்களை விமர்சிக்கிறார். இவர் ஒரு உளறுவாயன். தன்னைத்தானே உயர்த்துவதற்காக எதையும் செய்ய தயங்காதவர். இந்த முறை தேர்தலில் ஏமாற்றுக்காரருக்கு நல்ல பாடம் படிப்பித்திருக்கிறார்கள் மக்கள். நீ உன் நண்பனைப்பற்றி  சொல்லு நான் உன்னைப்பற்றி சொல்கிறேன் எனும் பழமொழி உண்டு. கபித்தான் நேரடியாகவே தன் குணாதிசயங்களை காட்டுகிறார், ஆனால் இன்னும் சிலர் அங்கு பாதி இங்கு பாதி என தளம்பி தம்மை மறைக்க முயற்சிக்கின்றனர். ஒரு தடவை தமிழரசுக்கட்சி எல்லா ஆசனங்களையும் வென்றிருந்தது, எந்த தேர்தல் என்பது நினைவில்லிலை. அப்போ மக்கள், சம்பந்தரை ஆரத்தி எடுத்து, பொட்டு வைத்து, மாலை போட்டு, மேளம் கொட்டி ஊர்வலமாக அழைத்துச்சென்றனர். இவர்கள் மனம் இளகவில்லை, இந்த மக்களுக்கா நாம் துரோகம் செய்கிறோம், ஏமாற்றுகிறோமென்று. எத்தனை கயவர்கள் இவர்கள்? இதிலை தாங்கள் வெற்றியாமென ஆர்ப்பரிக்கிறார் சுமந்திரன். வெட்கம் கெட்டவனுக்கு சூடென்ன, சுரணையென்ன என்று கூறுவார்கள். அநாகரிக வார்த்தை பிரயோகம் மூலம் உண்மை பேசுபவர்களின் வாயை அடைப்பது. இதுவும் ஒரு யுக்தி. ஆனால் தாம் எப்படியும் யாரையும் விமர்சிக்கலாம். நேற்ரொரு காணொளி பாத்தேன். எல்லா தமிழ்தேசிய கட்சி  அரசியல் வாதிகளும் இருக்கிறார்கள். எல்லோர் முகங்களிலும் சந்தேகம், சோகம், அமைதியாக ஒருவரோடு ஒருவர் பேசவில்லை அமைதியாக  இருக்கிறார்கள். சுமந்திரன் மட்டும் தேவையற்ற ஒரு சிரிப்பு, கரட்டி ஓணான் மாதிரி தலையை உயர்த்தி தாழ்த்தி, முன்னுக்கு பின்னுக்கு திரும்பி, பாவனை காட்டுகிறார். இவரை யாரும் விமர்சிக்க மாட்டார்கள் எனும் பாவனை. இந்த மனிதன் எப்படியானவர்?
    • ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு, கனேடிய தமிழ் காங்கிரஸ் (CTC) தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் காங்கிரஸ், உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியினர் பெற்ற மகத்தான மற்றும் வரலாற்று வெற்றிக்கு கனேடிய தமிழ் காங்கிரஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. மாற்றத்தக்க ஆட்சிக்கான தேசிய மக்கள் சக்தியின் பார்வையில் இலங்கை மக்களின் நம்பிக்கையின் பிரதிபலிப்பாக இந்த முக்கிய ஆணையை பார்ப்பதாக காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது. புதிய அரசியலமைப்பு இந்தநிலையில், வெளிப்படையான, பொறுப்புடைமையை உள்ளடக்கிய அரசாங்கத்தை நிறுவுவதற்கான தேசிய மக்கள் சக்தியின்; உறுதிமொழியையும் காங்கிரஸ் பாராட்டியுள்ளது. அத்துடன் புதிய அரசாங்க நிர்வாகம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையை காங்கிரஸ் தமது கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை அகற்றிவிட்டு, ஜனநாயகத்திற்கும் தமிழ் மக்கள் உட்பட அனைத்து சமூகத்தினரின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு முன்னுரிமையளிக்கும் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதற்கு, தேசிய மக்கள் சக்தியின் முன் இருக்கும் வரலாற்றுச் சந்தர்ப்பத்தை தமது கடிதத்தில் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.   தேர்தல் அறிக்கையின்படி, நீண்டகால குறைகளை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கைகளை எடுக்கும்போது, அனைவருக்கும் நீதி, உள்ளடக்கம் மற்றும் சமத்துவத்தை உறுதி செய்யுமாறு அரசாங்கத்தை காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதேவேளை நல்லிணக்கம் மற்றும் தேசிய ஐக்கியத்தை நோக்கிய ஒரு முக்கியமான படியாக எஞ்சியுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு அரசாங்கத்தை கனேடிய தமிழ் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துடன் தொடர்புடைய நீண்டகால அநீதிகளை வலியுறுத்தி, தேசிய மக்கள் சக்தியின், தமது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, அந்த சட்டத்தை ரத்து செய்வதன் முக்கியத்துவத்தை காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.   இராணுவ ஈடுபாடு தற்போது இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனியாருக்குச் சொந்தமான காணிகளை மீளப் பெற்றுக் கொடுக்கவேண்டும். அத்துடன் சட்டவிரோத காணி சுவீகரிப்புகளை நிறுத்துமாறும், நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்பவேண்டும் என்றும் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் சமூகத்தின் கலாசார மற்றும் மத பாரம்பரியத்தைப் பாதுகாக்க, தமிழ் வழிபாட்டுத் தலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்கவேண்டும். அத்துடன் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் புதிய பௌத்த கோயில்கள் கட்டப்படுவதை நிறுத்தவேண்டும் என்று கனேடிய காங்கிரஸ் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்கப்படும் வரை, 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதுடன், உள்ளூராட்சி பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும், பிராந்திய நிர்வாகத்தை வலுப்படுத்தவும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதன் முக்கியத்துவத்தையும் அந்த காங்கிரஸ் கோடிட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவப் பிரசன்னத்தை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் சீரமைக்க வேண்டும். அத்துடன், உள்ளூர் வர்த்தகங்கள் மற்றும் விவசாயிகளுக்கு இடையூறாக விவசாயம் மற்றும் விருந்தோம்பல் போன்ற வர்த்தக முயற்சிகளில் இராணுவ ஈடுபாட்டை நிறுத்த வேண்டியதன் அவசியத்தையும் கடிதம் வலியுறுத்தியுள்ளது. இந்தநிலையில், இலங்கையில் நீதி, நல்லிணக்கம் மற்றும் நிலையான அபிவிருத்தியை ஊக்குவிக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க தாம் தயாராக உள்ளதாக, கனேடிய தமிழ் காங்கிரஸ் உறுதியளித்துள்ளது.  https://tamilwin.com/article/ceylon-tamil-congress-congratulate-anura-1731803743   தொடங்கீட்டாங்கையா தொடங்கீட்டாங்க.  @Kapithan னை உடனடியாக மேடைக்கு அழைக்கிறோம்.
    • இப்போதும் கூறுகிறேன், தமிழ்த் தேசியத்தை வைத்து நீங்கள் மட்டும்தான் வியாபாரம் செய்யலாமா? சுமந்திரனும் கொஞ்சம் செய்யட்டுமே.  உங்கள் சாதி சமய வெறி எங்கே தமிழரை நிறுத்தி வைத்துள்ளது என்பதை உற்றுப் பாருங்கள். 😏
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.