Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடிப் பெண்ணுக்கு அமெரிக்காவில் ஹாக்கி பயிற்சி - யார் அந்த பெண்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடிப் பெண்ணுக்கு அமெரிக்காவில் ஹாக்கி பயிற்சி - யார் அந்த பெண்?

2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இந்தப் பழங்குடிப் பெண்ணுக்கு அமெரிக்காவில் ஹாக்கி பயிற்சி

பட மூலாதாரம்,SHAKTIVAHINI

ஜார்கண்டின் குந்தி மாவட்டத்தில் 70 வீடுகள் மட்டுமே கொண்ட ஹெசல் கிராமம் பற்றி தற்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு இந்த கிராமம் பற்றிய பேச்சு இப்போது மேலும் அதிகமாகியுள்ளது. இதற்குக் காரணம் 17 வயதான புண்டி சாரு.

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வளரும் ஹாக்கி வீரர்களில் புண்டி சாருவும் ஒருவர். இவர் தற்போது அமெரிக்காவில் உள்ள மிடில்பரி கல்லூரியில் கலாசார பரிமாற்றத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகிறார்.

புண்டி சாருவின் ஹெசெல் கிராமத்தில் உள்ள பெரும்பாலான வீடுகள் மண்ணால் ஆன சுவர்களோடும் ஓடுகள் வேயப்பட்ட கூரையோடும் உள்ளன. ஆனால், ஒலிம்பிக் போட்டியின் போது (2016) கூட இங்கு பத்திரிகையாளர்களின் கூட்டம் இருந்தது.

அப்போது இந்த கிராமத்தைச் சேர்ந்த நிக்கி பிரதான், ஒலிம்பிக்கில் விளையாடும் இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்குத் தேர்வானார்.

அதற்கு முன் இந்த கிராமத்தைச் சேர்ந்த புஷ்பா பிரதான், இந்திய மகளிர் ஹாக்கி அணியில் இடம் பெற்றிருந்தார். இப்போது இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் ஹாக்கி விளையாடுகிறார்கள். இந்திய மகளிர் ஹாக்கி அணியில் சேர வேண்டும் என்பதே அவர்களின் கனவு.

நிக்கி தற்போது இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.

 

ஹாக்கி வீரர்களின் கிராமம்

பட மூலாதாரம்,RAVI PRAKASH/BBC

 

படக்குறிப்பு,

புண்டி சாருவின் ஹெசெல் கிராமத்தில் உள்ள பெரும்பாலான வீடுகள் மண்ணால் ஆன சுவர்களோடும் ஓடுகள் வேயப்பட்ட கூரையோடும் உள்ளன

புண்டி சாருவின் கதை

புண்டியின் தந்தை எத்வா சாரு, சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட சாலை விபத்துக்குப் பிறகு முன்பு போல் வேலை செய்ய முடியாமல் உள்ளார். மெட்ரிகுலேஷன் (பத்தாம் வகுப்பு) தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் மூத்த சகோதரி மங்குரி தற்கொலை செய்து கொண்டார்.

இப்போது வீட்டை நடத்தும் பொறுப்பு புண்டியின் அண்ணன் சஹாரா சாரு, அம்மா சாந்து சாரு மற்றும் புண்டியின் மீதும் விழுந்துள்ளது. இதனால் பலமுறை இவர் ஹாக்கி பயிற்சியை விட்டுவிட்டு, வயல்வெளிகளிலும் வேலை செய்கிறார்.

 

2px presentational grey line

 

2px presentational grey line

2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் விளையாட தேர்வு பெற்ற நிக்கி பிரதானின் தாயார் ஜிதன் தேவியை ஹெசல் கிராமத்தில் நான் பிபிசிக்காக சந்திக்கச் சென்றபோது, சகோதரிகள் (புண்டி மற்றும் மங்குரி) ஒன்றாக ஹாக்கி விளையாடுவார்கள். அந்தப் படத்தை அப்போது பிபிசி வெளியிட்டது. ஆனால், இப்போது புண்டி சாரு தனியாக ஹாக்கி விளையாடுகிறார்.

"முன்பு நான் கால்பந்து விளையாடுவேன். அப்போது ஹாக்கி விளையாடினால் விரைவில் வேலை கிடைத்து விடும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதனால் ஹாக்கி விளையாட ஆரம்பித்தேன். குடும்பத்தை நல்லபடியாக நடத்துவதற்கு அரசு வேலை முக்கியம். இப்போது நான் இந்தியாவுக்காக ஹாக்கி விளையாட விரும்புகிறேன். இந்த வாய்ப்பு நிச்சயம் வரும் என்றும் இந்திய மகளிர் ஹாக்கி அணிக்காக செண்டர் ஹாஃபில் விளையாடுவேன் என்றும் நம்புகிறேன்," என்று புண்டி சாரு பிபிசியிடம் கூறினார்.

புண்டி சாரு ஒரு பழங்குடியினப் பெண். அவருடைய ஹாக்கி பயணம் மிகவும் எளிதானதாக இருக்கவில்லை. அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2020 இல் இந்த கலாசார பரிமாற்ற திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், கோவிட் தொற்றுநோய் பரவியதால் அவரால் அமெரிக்கா செல்ல முடியவில்லை.

 

புண்டி சாரு

பட மூலாதாரம்,SHAKTIVAHINI

இவருடன் குந்தி மாவட்டத்தைச் சேர்ந்த ஜூஹி குமாரி, சிம்டேகாவைச் சேர்ந்த ஹென்ரிட்டா டோப்போ, பூர்ணிமா நேட்டி, கும்லா மாவட்டத்தைச் சேர்ந்த பிரியங்கா குமாரி ஆகியோரும், ஜூன் 24 முதல் ஜூலை 13 வரை மிடில்பரியில் நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள ஜார்கண்டில் இருந்து அமெரிக்கா சென்றுள்ளனர்.

விமானங்களில் திறக்காத ஜன்னல்கள்

அமெரிக்கா செல்வதற்கு முன், புண்டி சாரு பிபிசியிடம், "அமெரிக்கா செல்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். முதல் முறையாக விமானத்தில் பயணம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக ரயிலில் ஏறினேன். பிறகு காரில் உட்காரும் வாய்ப்பு கிடைத்ததும் அதிக மகிழ்ச்சி அடைந்தேன். இப்போது விமானத்தில் ஏற வேண்டும். விமானத்தில் ஜன்னல் திறக்காது என்று சொல்கிறார்கள். அதில் ஏசி இயங்கும். அது நீண்ட நேரம் பறந்து பின்னர் அமெரிக்காவை அடையும் என்கிறார்கள். அங்கிருந்து இங்கு வந்திருந்த வெளிநாட்டுப் பெண்மணி, என்னை தன் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்னார்," என்று குறிப்பிட்டார்.

"அமெரிக்காவில் என் கிராமத்தைப் போல சுத்தமான காற்றும் திறந்தவெளியும் இருக்காது. அங்குள்ள மக்கள் சாதாரண உணவே சாப்பிடுகிறார்கள். எனக்கு பிடிக்குமா என்று தெரியவில்லை. பிடிக்கவில்லையென்றாலும் சாப்பிடுவேன். வயிற்றை நிரப்ப வேண்டும். நிறைய சுற்றிப் பார்ப்பேன். அங்குள்ள மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று பார்ப்பேன். ஹாக்கி கற்றுக்கொண்டு மீண்டும் இங்கு வந்து நிறைய விளையாடுவேன்," என்று அவர் மேலும் கூறினார்.

ஆங்கிலத்தை பார்த்து பயம்

ஆங்கிலத்தில் இருந்து ஹிந்திக்கு மொழிபெயர்ப்பு செய்பவர் உடன் இல்லையென்றால் பேசுவதில் சிரமம் ஏற்படும் என்று புண்டி சாரு பயப்படுகிறார். புண்டி சாரு, பேலோலில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். அங்கு இந்தி மீடியத்தில் படிப்பு சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அவர் முண்டாரியில் (பழங்குடியினரின் மொழி) புலமை பெற்றுள்ளார்.

 

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இந்தப் பழங்குடிப் பெண்ணுக்கு அமெரிக்காவில் ஹாக்கி பயிற்சி

பட மூலாதாரம்,RAVI PRAKASH/BBC

நான் அவரை ஆங்கிலத்தில் பேசச் சொன்னபோது புண்டி சாரு, "என் பெயர் புண்டி சாரு. நான் ஹெசெலில் வசிக்கிறேன். என் தந்தையின் பெயர் எத்வா சாரு. தாயார் பெயர் சாந்து சாரு. நான் ஹாக்கி விளையாடுகிறேன்," என்று ஆங்கிலத்தில் கூறினார்.

அமெரிக்கா எப்படி இருக்கிறது?

அமெரிக்காவிலிருந்து புண்டி சாரு மற்றும் அவரது குழுவினரின் சில படங்களை நாங்கள் கேட்டுப் பெற்றோம். இந்தப் பெண்களின் முகத்தில் புன்னகை ஒளிர்கிறது. அவர்கள் பிஸியாக இருக்கிறார்கள். ஹாக்கி பயிற்சியுடன் ஆங்கிலம் பேசவும் கற்றுக் கொள்கிறார்கள்.

இப்பொழுது எப்படி உணா்கிறீா்கள்?

"அமெரிக்கா மிகவும் அழகாக உள்ளது. இங்குள்ள மக்கள் நல்லவர்களாக உள்ளனர். இவர்கள் எங்களை விமான நிலையத்தில் இருந்து அழைத்துச் சென்றனர். இப்போது எந்த பிரச்னையும் இல்லை. விமான நிலையம் மற்றும் விமானப் பயணம் மிகவும் நன்றாக இருந்தது. மேகங்கள் எங்களுக்குக் கீழே இருந்தன, நாங்கள் மேலே இருந்தோம். இங்கே அமெரிக்காவில், கேத்ரின் மேம் நாங்கள் நன்கு சாப்பிடவேண்டும் என்பதற்காக எங்கள் உணவைக் கவனித்துக் கொள்கிறார். எங்கள் பயிற்சியாளரும் மிகவும் நல்லவர்," என்று புண்டி சாரு தெரிவித்தார்.

ஜார்கண்டில் இருந்து அவருடன் அமெரிக்கா சென்ற சக்தி வாஹினி அமைப்பைச் சேர்ந்த சுர்பி," புண்டி மட்டுமல்ல ஐந்து பெண்களுமே மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளனர். புதிய விஷயங்களை ஆராய்கின்றனர்," என்றார்.

"எல்லா சிறுமிகளும் விமானப் பயணத்திற்கு மிகவும் பயந்தனர். ஆனால், பின்னர் அவர்கள் அதை அனுபவிக்கத் தொடங்கினர். வானத்தில் உள்ள எல்லா நட்சத்திரங்களும் தங்களுக்காக தரையில் வந்தது போல் தெரிகிறது என்று ஹென்ரிட்டா என்னிடம் கூறினார். அமெரிக்க மக்கள் மிகவும் நல்லவர்கள், நட்புடன், எப்போதும் புன்னகையுடன் இருக்கிறார்கள். நாம் வேறு நாட்டில் இருப்பது போன்ற உணர்வு கூட இல்லை என்று மற்ற சிறுமிகள் என்னிடம் சொன்னார்கள்," என்று சுர்பி பிபிசியிடம் தெரிவித்தார்.

 

அமெரிக்காவில் ஜார்கண்ட் பழங்குடிப் பெண்

பட மூலாதாரம்,SHAKTIVAHINI

அமெரிக்கா செல்ல தேர்வு

பெண்கள் கடத்தலுக்கு எதிராகச் செயல்படும் சக்தி வாஹினி என்ற அமைப்பு, 2019-20 ஆம் ஆண்டில் அமெரிக்க தூதரகத்தை அணுகி பழங்குடியின பெண்களை ஊக்குவிக்கும் ஒரு திட்டத்தை அளித்தது.

பின்னர் அமெரிக்க கான்ஸலகத்தின் (கொல்கத்தா) சில அதிகாரிகள் ராஞ்சிக்கு வந்து மகளிர் ஹாக்கி வீராங்கனைகள் முகாமை ஏற்பாடு செய்தனர். இதையடுத்து ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து 5 சிறுமிகளை அமெரிக்கா அழைத்துச் சென்று பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது.

"கலாசார பரிமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அவர்கள் வெர்மான்ட்டில் உள்ள புகழ்பெற்ற மிடில்பரி கல்லூரியில் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்கான செலவை அமெரிக்க தூதரகம் ஏற்கிறது. இந்த வீராங்கனைகள் அனைவரும் ஏழை வீடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களின் தாய்மார்கள் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்துகிறார்கள். இவர்களுக்கு மிடில்பரி கல்லூரியில் ஆங்கிலம் பேசுதல் மற்றும் ஆளுமை மேம்பாடு ஆகியவற்றிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அங்குள்ள முக்கிய பிரமுகர்களையும் இவர்கள் சந்திப்பார்கள்," என்று சக்தி வாஹினியின் ரிஷிகாந்த் பிபிசியிடம் தெரிவித்தார்.

 

2px presentational grey line

 

2px presentational grey line

பயிற்சிக்காக சைக்கிள் பயணம்

புண்டி சாருவின் கிராமத்தில் மைதானம் இல்லை. இந்த காரணத்திற்காக அவர் தனது தோழி சிந்தாமணி முண்டுவுடன் தினமும் எட்டு கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டிச் சென்று குந்தியில் உள்ள பிர்சா கல்லூரி மைதானத்தில் ஹாக்கி பயிற்சி செய்வது வழக்கம். அங்கு மணல் தரையில் இவர்களின் பயிற்சி நடக்கும். சில சமயங்களில் அரசால் கட்டப்பட்ட ஆஸ்ட்ரோடர்ஃப் மைதானத்தில் விளையாடும் வாய்ப்பும் கிடைக்கும்.

அங்கு தஷ்ரத் மஹதோ மற்றும் சில பயிற்சியாளர்கள் அவருக்கு ஹாக்கி விளையாட பயிற்சி அளிக்கின்றனர். இந்திய மகளிர் ஹாக்கி அணியில் இடம்பெற்றுள்ள நிக்கி பிரதானின் ஆரம்ப பயிற்சியாளராகவும் தஷ்ரத் மஹதோ இருந்துள்ளார்.

 

அமெரிக்காவில் ஜார்கண்ட் பழங்குடிப் பெண்

பட மூலாதாரம்,SHAKTIVAHINI

"புண்டி உட்பட பல பெண்கள் மத்தியில் ஹாக்கி மோகம் உள்ளது. நன்றாக விளையாடுகிறார்கள். வரும் நாட்களில் இந்திய அணியில் இங்கிருந்து இன்னும் சில பெண்களை நீங்கள் பார்க்கக்கூடும். திறமை அழிந்துபோகாமல் இருக்க அரசு அவர்களுக்கு வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும். இங்குள்ள சிறுவர்களும் நன்றாக ஹாக்கி விளையாடுகிறார்கள்," என்று தஷ்ரத் மஹ்தோ பிபிசியிடம் தெரிவித்தார்.

கிராமத்திற்கு பெருமை

கிராம மக்கள் அனைவரும் தங்கள் மகள்களை நினைத்துப் பெருமைப்படுவதாக ஹெசெல் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா முண்டா கூறினார். இங்குள்ள மக்கள் தங்கள் மகள்களை, மடுவா (ஒரு வகை காட்டு தானியம்) ரொட்டி மற்றும் கீரைகளை ஊட்டி வளர்த்துள்ளனர். பணம் இல்லாததால் எல்லோருமே மூங்கில் குச்சிகளை வைத்து ஹாக்கி விளையாட ஆரம்பித்தனர். இப்போது சிலர் மரத்தாலான மற்றும் ஃபைபர் ஹாக்கி ஸ்டிக், டி-ஷர்ட்கள் போன்றவற்றை வழங்கியுள்ளதால் வசதி கிடைத்துள்ளது.

அமெரிக்கா செல்வதற்கு முன் இந்த ஐந்து வீராங்கணைகளும் ராஞ்சியில் முதல்வர் ஹேமந்த் சோரேனை சந்தித்துள்ளனர். அந்த சந்திப்பின் போது அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர், இது மாநிலத்திற்குப் பெருமை சேர்ப்பதாகக் கூறினார்.

"கிராமப்புறங்களில் இருந்து திறமையான விளையாட்டு வீரர்களைக் கண்டறிந்து அவர்களின் திறமையை மேம்படுத்த எங்கள் அரசு முயற்சி எடுத்து வருகிறது. நாங்கள் ஒரு விளையாட்டு சக்தியாக மாறுவதற்கான பாதையில் இருக்கிறோம். இந்தப் பெண்களுக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். அவர்களின் அனைத்து தேவைகளையும் நாங்கள் நிறைவேற்றுவோம். இந்தப் பெண்கள் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்ததும், நான் அவர்களை மீண்டும் சந்திப்பேன். அவர்களின் அனுபவங்களை அறிந்துகொள்வது எதிர்கால திட்டங்களை உருவாக்க உதவும்," என்று முதல்வர் ஹேமந்த் சோரேன் கூறினார்.

https://www.bbc.com/tamil/india-62042051

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.