Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

தேசிய திரைப்பட விருதுகள்: சூர்யா, அபர்ணா, ஜி.வி. பிரகாஷ், சூரரைப் போற்று, மண்டேலா படங்கள் தேர்வு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தேசிய திரைப்பட விருதுகள்: சூர்யா, அபர்ணா, ஜி.வி. பிரகாஷ், சூரரைப் போற்று, மண்டேலா படங்கள் தேர்வு

22 ஜூலை 2022
புதுப்பிக்கப்பட்டது 23 ஜூலை 2022
 

தேசிய திரைப்பட விருது

68-வது தேசிய திரைப்பட விருதுகளுக்கு தேர்வான படங்கள் மற்றும் கலைஞர்களின் பட்டியலை இந்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இதில் சிறந்த நடிகர்களாக பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், நடிகர் சூர்யா ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.நடிகர் சூர்யா நடித்த சூரரைப் போற்று படத்துக்கு ஐந்து விருதுகள், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற படத்துக்காக மூன்று விருதுகள் மற்றும் மண்டேலா படத்துக்கு 2 விருதுகள் கிடைத்துள்ளன.

'ஃபீச்சர் படம்' என்ற சிறந்த திரைக்கதை பிரிவிற்கான நடுவர் குழுவின் தலைவரான திரைப்படத் தயாரிப்பாளர் விபுல் ஷா, இது குறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், "எங்களுக்கு கிடைத்த விண்ணப்பங்கள் மற்றும் நாங்கள் பார்த்த படங்களின் எண்ணிக்கையை நினைத்துப்பார்க்கும்போது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும், மிக கடினமான கொரோனா காலங்களில் இந்த படங்கள் தயாரிக்கப்பட்டன," என்று கூறினார்.

ஃபீச்சர் திரைப்படம் அல்லாத பிரிவுக்கான நடுவர் குழுவுக்கு சித்தார்த்த சிங் தலைமை தாங்கினார். சினிமா குறித்த சிறந்த எழுத்தாளர் என்ற பிரிவுக்கு பத்திரிகையாளர் ஆனந்த் விஜய் தலைமை தாங்கினார்.

விருதுக்கு தேர்வான படங்கள் மற்றும் அவை தேர்வான பிரிவுகளின் விவரம் கீழே;

சிறந்த நடிகர்சூர்யா (சூரரைப் போற்று - தமிழ்);அஜய் தேவ்கன் (தன்ஹாஜி :தி அன்சாங் வாரியர் - இந்தி)

சிறந்த நடிகைஅபர்ணா பாலமுரளி (சூரரைப் போற்று - தமிழ்)

சிறந்த திரைக்கதைஷாலினி உஷா நாயர் & சுதா கொங்கரா (சூரரைப் போற்று - தமிழ்) மடோன் அஷ்வின் (மண்டேலா - தமிழ்

சிறந்த துணை நடிகைலட்சுமி பிரியா சந்திரமௌலி (சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் - தமிழ்);

சிறந்த இயக்குநர்இயக்குநர் ஆர்.வி. ரமணி (ஓ தட்ஸ் பானு - ஆங்கிலம், தமிழ், மலையாளம், இந்தி படம்)

 

line

 

line

சிறந்த ஒளிப்பதிவு: சுப்ரதிம் போல் - அவிஜாத்ரிக் (தி வாண்டர்லஸ்ட் ஆஃப் அபு - பெங்காலி)

சிறந்த பின்னணி பாடகி: நஞ்சம்மா - (ஏ.கே. அய்யப்பனும் கோஷியும் - மலையாளம்);

சிறந்த பின்னணி பாடகர்: ராகுல் தேஷ்பாண்டே - (மி வசந்தராவ் நான் வசந்தராவ் - மராத்தி)

சிறந்த குழந்தை கலைஞர்: அனிஷ் மங்கேஷ் கோசாவி - (தக்-தக் - மராத்தி)அகன்ஷா பிங்கிள் & திவ்யேஷ் இந்துல்கர் - (சுமி - மராத்தி)

சிறந்த துணை நடிகர்பிஜு மேனன் - (ஏ.கே. அய்யப்பனும் கோஷியும் - மலையாளம்)

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Twitter பதிவின் முடிவு, 1

சிறந்த தெலுங்கு படம்: கலர் போட்டோ

சிறந்த தமிழ் படம்: சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

சிறந்த மலையாள படம்: திங்கலாச்ச நிச்சயம்

சிறந்த மராத்தி படம்: கோஸ்தா ஏகா பைதானிச்சி

சிறந்த கன்னட படம்: டோலு

சிறந்த இந்தி படம்: துளசிதாஸ் ஜூனியர்

சிறந்த பெங்காலி படம்: அவிஜாத்ரிக்

சிறந்த அசாமிய திரைப்படம்: பிரிட்ஜ்

சிறந்த அதிரடி இயக்கத்திற்கான விருது: ஏ.கே.அய்யப்பனும் கோஷியும்

சிறந்த நடன அமைப்பு: நாட்டியம் (தெலுங்கு)

சிறந்த பாடல் வரிகள்: சாய்னா (இந்தி)

Twitter பதிவை கடந்து செல்ல, 2

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த 10 தேசிய விருதுகள்.. pic.twitter.com/31VG1pLQMb

— BBC News Tamil (@bbctamil) July 22, 2022

Twitter பதிவின் முடிவு, 2

சிறந்த இசை இயக்கம்இசையமைப்பாளர் (பாடல்கள்): எஸ். தமன் (ஆலா வைகுந்தபுரமுலு - தெலுங்கு) இசையமைப்பாளர் (பின்னணி இசை): ஜிவி பிரகாஷ் குமார் (சூரரைப் போற்று - தமிழ்)

சிறந்த ஒப்பனை கலைஞர்: டி.வி.ராம்பாபு (நாட்டியம் தெலுங்கு படம்)

சிறந்த ஆடை வடிவமைப்பாளர்நச்சிகேத் பார்வே & மகேஷ் ஷெர்லா (தன்ஹாஜி: தி அன்சங் வாரியர் - இந்தி படம்)

சிறந்த தயாரிப்பு வடிவமைப்புஅனீஸ் நாடோடி (கப்பேலா (சேப்பல்) மலையாள படம்)

சிறந்த படத்தொகுப்பு: எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் (சிவரஞ்சனியும் இன்றும் சில பெண்களும் - தமிழ் படம்

சிறந்த ஒலிப்பதிவு: ஜோபின் ஜெயன் (டோலு (கன்னடம்); லொகேஷன் சவுண்ட் ரெக்கார்டிஸ்ட் (ஒத்திசைவு ஒலி படங்களுக்கு மட்டும்)அன்மோல் பாவே (மி வசந்தராவ் ஐ ஆம் வசந்தராவ் (மராத்தி படம்)விஷ்ணு கோவிந்த் & ஸ்ரீ சங்கர் (மாலிக் - மலையாள படம்; இறுதிக்கலவை டிராக்கின் மறுபதிவு)

Twitter பதிவை கடந்து செல்ல, 3

Twitter பதிவின் முடிவு, 3

நான்-ஃபீச்சர் படங்கள்

சிறந்த குரல் வளம்/ கதை: ஷோபா தரூர் ஸ்ரீனிவாசன், ராப்சோடி ஆஃப் ரெயின்ஸ் - மான்சூன்ஸ் ஆஃப் கேரளா (ஆங்கிலம்)

சிறந்த இசை இயக்கம்: விஷால் பரத்வாஜ் 1232 கிமீ: மாரெங்கே தோ வாஹின் ஜாகர்

சிறந்த படத்தொகுப்பு: பார்டர்லேண்ட்ஸ் படத்திற்காக அனாதி அத்தாலி

சிறந்த ஆன்-லொகேஷன் சவுண்ட் ரெக்கார்டிஸ்ட்: சந்தீப் பாடி & பிரதீப் லெக்வார், ஜாதுய் ஜங்கல் மேஜிக்கல் ஃபாரஸ்ட்

சிறந்த ஒலிப்பதிவு: அஜித் சிங் ரத்தோர், பாலைவனத்தின் முத்து (ராஜஸ்தானி)

சிறந்த ஒளிப்பதிவு: ஷப்திக்குன்னா கலப்பா படத்திற்காக நிகில் எஸ் பிரவீண்

சிறந்த இயக்கம்: ஓ தட்ஸ் பானு (ஆங்கிலம், தமிழ், மலையாளம் மற்றும் இந்தி)

குடும்ப மதிப்புகள் பற்றிய சிறந்த திரைப்படம்: கும்குமார்ச்சன் (வொர்ஷிப் ஆஃப் தி காடெஸ்) (மராத்தி)

சிறந்த குறும்படம்: கச்சிசினித்து

சிறப்பு ஜூரி விருது: அட்மிடெட் படம் (இந்தி மற்றும் ஆங்கிலம்) இயக்குநர்: ஓஜஸ்வீ ஷர்மா

சிறந்த புலனாய்வுத் திரைப்படம்: தி சேவியர்: பிரிக். பிரீதம் சிங் (பஞ்சாபி)

சிறந்த ஆய்வு/சாகசத் திரைப்படம்: வீலிங் தி பால் (ஆங்கிலம் மற்றும் இந்தி)

சிறந்த கல்வித் திரைப்படம்: ட்ரீமிங் ஆஃப் வேர்ட்ஸ் (மலையாளம்)

சமூக பிரச்னைகளுக்கான சிறந்த திரைப்படம்: மந்தீப் செளஹான், இயக்குநர் காமாக்யா நாராயண் சிங் (ஜஸ்டிஸ் டிலேட் பட் டெலிவர்ட் - இந்தி)தயாரிப்பாளர் ரத்னபோலி ராய், இயக்குநர்: புடுல் ராஃபே மஹ்மூத் (த்ரீ சிஸ்டர்ஸ் பெங்காலி படம்)

சிறந்த சுற்றுச்சூழல் படம்தயாரிப்பாளர் மனாஸ் தேசிய பூங்கா மற்றும் ஆரன்யக், இயக்குநர் திப் புயான் (மனா அரு மனு (மனாஸ் அண்ட் பீப்பிள் அசாமி படம்)

சிறந்த விளம்பர திரைப்படம்: சர்மவுண்டிங் சேலஞ்சஸ் (ஆங்கிலம்)

சிறந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திரைப்படங்கள்: ஆன் தி பிரிங்க் சீசன் 2- பேட்ஸ் (ஆங்கிலம்)

சிறந்த கலை மற்றும் கலாசார திரைப்படம்: நாடடா நவநீதா DR PT வெங்கடேஷ்குமார்

சிறந்த வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம்: பபுங் சியாம் (மணிப்பூரி)

சிறந்த இனவியல் திரைப்படம்: மண்டல் கே போல் (இந்தி)

ஒரு இயக்குரின் சிறந்த அறிமுக திரைப்படம்: பரியா (மராத்தி மற்றும் இந்தி)

சிறந்த நான் ஃபீச்சர் படம்: டெஸ்டிமொனி ஆஃப் அனா

https://www.bbc.com/tamil/arts-and-culture-62266824

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"சூரரைப் போற்று படத்திற்கு 5 தேசிய விருதுகள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை" - சுதா கொங்கரா பேட்டி

  • ஹேமா ராக்கேஷ்
  • பிபிசி தமிழுக்காக
21 நிமிடங்களுக்கு முன்னர்
 

சுதா கொங்கரா

2020 ஆம் வருடத்திற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த படம், சிறந்த இசையமைப்பாளர் என 5 தேசிய விருதுகளை வென்றுள்ளது சூரரை போற்று திரைப்படம்.

நெகிழ்ச்சியான இந்த தருணம் குறித்து இத்திரைப்படத்தின் இயக்குனர் திரு சுதா கொங்கரா பிபிசி தமிழுக்காக ஹேமாராக்கேஷிடம் பகிர்ந்து கொண்ட தகவல்களை பார்க்கலாம்.

5 தேசிய விருதுகள் "சூரரை போற்று " திரைப்படத்திற்கு கிடைத்திருக்கிறது? எப்படி இருக்கிறது இந்த தருணம்?

"சூரரை போற்று " திரைப்படத்தில் மாறா என்ன நினைத்தாரோ அதையே தான் இப்போது நான் நினைக்கிறேன். திரைப்படத்தில் அத்தனை கஷ்டங்களுக்கு பிறகு மாறாவின் முதல் பிளைட்டில் மக்கள் அனைவரும் வந்து இறங்கும் போது " ஜெயிச்சிட்டே மாறா " என்ற வார்த்தைகளின் பெருமிதம் இன்றைக்கு எனக்கும் ஏற்பட்டுள்ளது. அதேப் போல் 5 தேசிய விருதுகள் என்பதை இப்போது வரை என்னால் நம்ப முடியவில்லை. மிகவும் பெருமிதமாக இருக்கிறது.

இந்த படத்தை இயக்கும் போது தேசிய விருது பெறுவோம் என்று நினைத்தீர்களா?

நிச்சயமாக இல்லை. படம் இயக்குகிறோம். அது மக்களுக்கு போய் சேர வேண்டும். அது மக்களுக்கு பிடிக்க வேண்டும். அதை அவர்கள் உணர வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் படத்தொகுப்பின் போது பார்க்கையில் சூர்யா எத்தனை உழைப்பை கொடுத்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் எத்தனை அழகாய் இசையமைத்திருக்கிறார். இவர்களுக்கு விருது கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று மனதோரத்தில் ஒரு சிறிய ஆசை இருந்தது.

சூரரை போற்று படம் இயக்கும் போது, இந்த படம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டால் யாருக்கு முதலில் விருது கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள்?

நிச்சமாக சூர்யாவுக்கு தான். ஒரு நல்ல கதை நம்மிடம் இருக்கும் போது, முதலில் அதை ஸ்டார் நடிகர் நடிக்க ஒப்புக் கொள் வேண்டும். பின்னர் நல்ல தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும். இந்த இரண்டு விஷயங்களையுமே சூர்யா எனக்கு மிகச்சிறப்பாக கொடுத்தார். சூர்யா என் மீது நம்பிக்கை வைத்தார். என்னை எந்த கேள்வியும் கேட்கவில்லை. நான் 100 மடங்கு சூர்யாவிடம் உழைப்பை எதிர்ப்பார்த்தால் அவர் 1000 மடங்கு உழைப்பை கொடுப்பார். அதற்காக அங்கீகாரம் இன்று அவருக்கு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி.

YouTube பதிவை கடந்து செல்ல, 1
காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு, 1

இந்த படத்திற்காக கதை எழுத ஏன் 3 வருடங்கள் எடுத்துக்கொண்டீர்கள்?

ஏனென்றால் கேப்டன் கோபிநாத் அவர்களின் வாழ்க்கையில் பல சம்பவங்கள் இருந்தன. காந்திய வழியை பின்பற்றும் அவரின் குடும்பம், அவருடைய பள்ளி வாழ்க்கை , பர்சனல் வாழ்க்கை என பல சுவாரஸ்யமான சம்பவங்கள் இருந்தன. எதை சொல்ல வேண்டும், எதை சொல்லக்கூடாது? எவற்றை சுவாரஸ்யமாக சொல்ல வேண்டும் என பல கேள்விகள் எனக்கு இருந்தது. படத்தில் கூட ஒரு காட்சியில் பிளைட் லேண்ட் ஆக வேண்டும், அதே சமயத்தில் அதை தீப்பிடித்தது போல் காட்ட வேண்டும். அது அவருடைய வாழ்க்கையில் நிஜமாக நடந்தது. இதை எப்படி ஒரே சமயத்தில் காண்பிப்பது என பயங்கர குழப்பமாக இருந்தது. அதனால் திரைக்கதை வடிவமைப்பு மிகத்தெளிவாக இருக்க வேண்டும் என்பதால் இத்தனை காலம் எடுத்துக் கொண்டேன்.

கேப்டன் கோபிநாத் அவர்களின் கதையை திரைப்படமாக எடுக்க அவர் உடனடியாக ஒப்புக் கொண்டாரா அல்லது உங்களுக்கு அதிக நேரம் எடுத்ததா?

2010 ஆம் ஆண்டு தான் இவருடைய வாழ்க்கைய நாம் படமாக எடுக்க வேண்டும் என்று தோன்றியது. அப்போது என்னுடைய எந்த படமும் வெளிவரவில்லை. அடுத்து வந்த என்னுடைய முதல் படமும் சரியாக போகவில்லை. அதனால் கேப்டன் நிச்சயம் என்னுடைய கதையை ஒப்புக் கொள்ள மாட்டார் என்று தான் நினைத்தேன். 2016 ஜனவரி மாதம் இறுதி சுற்று படம் வெளியானது. பல தரப்பில் அது வரவேற்பை பெற்றதும் 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கேப்டன் கோபிநாத் அவர்களை சந்தித்து, உங்களுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க வேண்டும் என விரும்புகிறேன் என கூறி கதையை சொல்ல தொடங்கினேன். அடுத்த 5 வது நிமிடம், ஓகே சுதா, இதை படமாக பண்ணலாம் என ஒப்புக் கொண்டார். இது தான் நடந்தது.

 

சுதா கொங்கரா

பட மூலாதாரம்,SUDHA KONGARA/TWITTER

சிறந்த நடிகைக்கான விருது அபர்ணாவிற்கு கிடைத்த தருணம் எப்படி இருந்தது?

இந்த விருதுகளில் மிக பெரிய விருதாக நான் அதைத்தான் பார்க்கிறேன். ஒரு மிகப்பெரிய ஹீரோ உள்ள படத்தில், 150 படக்காட்சிகளில் வெறும் 25 காட்சிகளில் மட்டுமே வந்த அவரின் கதாபாத்திரம், அதற்காக அபர்ணவின் உழைப்பு இந்த விருதை பெற்றுத்தந்துள்ளது. அதேப்போல் நாங்கள் பெண்கள் 2 பேரும் இந்த கதாபாத்திரத்திற்கு கூடுதல் கவனம் எடுத்து திரைக்கதை எழுதினோம். எந்த இடத்திலும் பெண்களுக்குரிய கதாபாத்திரத்தை தவறாக திசைதிருப்பி விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம்.

அதேப்போல் கேப்டன் கோபிநாத்தின் மனைவி பார்கவி, அவர்களின் நிஜவாழ்க்கையில்,10 வருடங்கள் அவருக்கு எந்த வருமானமும் இல்லாத போது, அவருடைய பேக்கரியில் இருந்து வந்த வருமானத்தில் தான் குடும்பத்தை நடத்தியிருக்கிறார். அதனால் வரலாற்றில் என்ன நடந்ததோ அதை காட்சியாக வைத்தேன். அபர்ணாவும் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார்.

சூரரைப்போற்று படத்தில் கணவன் மனைவி இருவருமே ஜெயிப்பது போன்ற காட்சிகள் வரும் ? இதற்கு தூண்டுகோலாக இருந்தது எது?

நிச்சயமாக பார்கவி தான். அவரிடம் பலமுறை பேசிய போது ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது. கேப்டன் கோபிநாத்தின் வெற்றிக்கு பின்னால் முதுகெலும்பாக இருந்தது அவரின் மனைவி பார்கவி தான். அதைத்தான் படத்தில் வைத்தேன்.

 

சூரரைப் போற்று திரைப்படத்திற்கு விருது கிடைத்ததை கொண்டாடிய சுதா கொங்கரா

பட மூலாதாரம்,SUDHA KONGARA/TWITTER

 

படக்குறிப்பு,

சூரரைப் போற்று திரைப்படத்திற்கு விருது கிடைத்ததை கொண்டாடிய சுதா கொங்கரா

மாறா பொம்மியிடம் கடன் கேட்கும் காட்சி பலதரப்பை ஈர்த்தது? இதை எப்படி தேர்வு செய்தீர்கள்?

இந்த காட்சியை முதலில் வைக்கும் போது ஆண் ஸ்கிரிப்ட் ரைட்டர்கள் பதறினார்கள். ஒரு பெரிய ஹீரோ இதை எப்படி செய்வார் ? இதை மாற்றிவிடலாம் என்று சொன்னார்கள். நிறைய குடும்பங்களில் ஆண்கள் மனைவியிடம் கடன் வாங்குவது நடந்து கொண்டு தானே இருக்கிறது ? அதை ஏன் காட்டக்கூடாது என்று சொன்னேன். சூர்யா ஒரு உண்மையான பெண்ணியவாதி. கதைக்கு தேவை என்றால் எந்த காட்சியிலும் நடிக்க தயார் என்று சொன்னதால் இயல்பாக நடக்கும் எந்த விஷயத்தையும் நான் அகற்றவில்லை.

ஆரம்ப காலகட்டத்தில் நீங்கள் சினிமாவில் நுழையும் போது என்ன தடைகளை எதிர்கொண்டீர்கள்?

நான் சினிமா துறைக்கு செல்வதில் முதல் எதிர்ப்பை தெரிவித்தது என் குடும்பத்தினர்.எனக்கு 20 வயதில் திருமணம் ஆனது. திருமணத்திற்கு பிறகு கணவரிடம் என்னுடைய ஆசையை சொன்ன போது அவர், உனக்கு என்ன விருப்பமோ அதைச் செய் என்று ஊக்கப்படுத்தினார்.

 

சுதா கொங்கரா

நான் முதன்முதலில் நடிகை ரேவதி அவர்களிடம் பணிபுரிந்தேன். எனக்கு 2 சிறிய குழந்தைகள் உள்ளனர் அதனால் இத்தனை மணி நேரம் தான் என்னால் வரமுடியும் என்று தயக்கத்துடன் கூறியதற்கு Quantity of Time ஐ விட Quality of Time மிகவும் முக்கியம் என்று சொன்னார். நான் அவரிடம் வேலைபார்த்த வரை பெண் என்பதில் எந்த சலுகையையும் அவரிடம் நான் பெறவில்லை. பிறகு மணிரத்தினம் அவர்களிடம் பணிபுரிந்தது எனக்கு வேறொரு அனுபவமாக இருந்தது. பல கடினமான கட்டங்களை தாண்டி தான் இன்றைய நிலைக்கு வந்திருக்கிறேன்.

உங்கள் முதல் படம் சரியாக வெற்றியடைவில்லை என்ற போதிலும் முதல் வெற்றிக்காக நீங்கள் 6 வருடங்கள் காத்திருந்தீர்கள். அந்த தருணங்களை எப்படி எதிர்கொண்டீர்கள்?

இறுதிச்சுற்று படத்தின் போது முதலில் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. முதன்முதலில் நடிகர் மாதவன் அவர்களிடம் தான் கதை சொன்னேன். கதை அவருக்கு பிடித்து போகவும் தான் அதில் நடிப்பதாக சொன்னார். அது மட்டும் தான் எனக்கு எளிதாக நடந்தது. மற்றது அனைத்தும் எனக்கு சிரமமாக தான் நடந்தது.

நீங்கள் கடந்து வந்த பாதை மூலமாக பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?

பெண்களாகிய நாம் இன்னும் ஆணாதிக்க சமுதாயத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.பெண்கள் தங்கள் வேலை மற்றும் தொழிலுக்குள் வரும் போதே தங்களுக்கான தடைகளை உடைத்து பணிபுரிந்தால் வெற்றி நிச்சயம். ஆண்கள் தங்களுடைய வேலையை நிருபிக்க 50 சதவீத உழைப்பை கொடுக்கும் ஒரு இடத்தில் பெண்கள் தங்களை நிருபிக்க 100 சதவீதத்தை உழைப்பை கொடுத்தால் மட்டுமே வெற்றி சாத்தியமாகிறது. யார் என்ன சொன்னாலும் அது மறுக்க முடியாத உண்மை.

https://www.bbc.com/tamil/arts-and-culture-62283481

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 70 வருடமாக ஒற்றைக்காலில் நின்ற ஈழத்தமிழர்கள்  இந்த முறை  வழி மாறி விட்டார்கள் என நான் நினைக்க மாட்டேன் சகோதரம். இது ஒரு தேசிய அரசியல்வாதிகளுக்கு மட்டுமான எச்சரிக்கை மட்டும்.
    • மீரா ப்ரோ … அது பகிடி ப்ரோ …. என்னை பொறுத்தவரை சும், ஶ்ரீ, இவர்கள் அனைவரும் பாவித்த டாய்லெட் டிசு போல பயனுள்ளோர்தான். அரசியலமைப்பு என்பது அனுரா இனவாத நிகழ்ச்சி நிரலில் தயாரித்து எல்லோருக்கும் தீத்த போகும் கிரிபத் என்றே நான் நினைக்கிறேன். இதில் சும், ஶ்ரீ யார் போனாலும் ஒரு ஹைகோர்ட்டையும் புடுங்க முடியாது.   உங்களுக்கு கேள்வி விளங்கி இருந்தால் என் பதிலும் விளங்கி இருக்கும். விளங்கியதா? அப்படியாயின் நான் சிறி விட்டு கொடுக்க வேணும் என்று சொன்னதன் அர்த்தம் விளங்கி இருக்கும்.
    • கோசான் எனது பதில் ஏற்கனவே தரப்பட்டுள்ளது. திரியை ஆரம்பத்திலிருந்து வாசியுங்கள்…
    • இன்றைய நேரத்தில் மைக் டைசனுக்கு 27 வயதாக இருந்திருந்தால் ஜேக் பாலின் நிலைமையை  நினைத்து பார்த்தேன்.மனதுக்குள் கெக்கட்டம் விட்டு சிரித்தேன். அரை நூற்றாண்டு வயதிலும் ஒருவன் குத்துசண்டைக்கு வருகின்றான் என்றால் அவன் மனத்தைரியத்தை பாராட்ட வேண்டும்.
    • 12 ) சசிகலா ரவிராஜ் வெற்றிபெற மாட்டார் என 23 பேர் சரியாக கணித்திருக்கிறார்கள் 1)பிரபா - 36 புள்ளிகள் 2)வீரப்பையன் - 31 புள்ளிகள் 3) வாதவூரான் - 31 புள்ளிகள் 4) வாலி - 31 புள்ளிகள் 5) கந்தையா 57 - 30 புள்ளிகள் 6) தமிழ்சிறி - 30 புள்ளிகள் 7) Alvayan - 30 புள்ளிகள் 😎 புரட்சிகர தமிழ் தேசியன் - 30 புள்ளிகள் 9) நிழலி - 29 புள்ளிகள் 10) சுவைபிரியன் - 28 புள்ளிகள் 11)ஈழப்பிரியன் - 28 புள்ளிகள் 12)ரசோதரன் - 28 புள்ளிகள் 13)நூணாவிலான் - 27 புள்ளிகள் 14)வில்லவன் - 27 புள்ளிகள் 15) நிலாமதி - 27 புள்ளிகள் 16)கிருபன் - 26 புள்ளிகள் 17)goshan_che - 26 புள்ளிகள் 18)சசிவர்ணம் - 25 புள்ளிகள் 19) புலவர் - 24 புள்ளிகள் 20) வாத்தியார் - 23 புள்ளிகள் 21)புத்தன் - 23 புள்ளிகள் 22)சுவி - 20 புள்ளிகள் 23) அகத்தியன் - 18 புள்ளிகள் 24) குமாரசாமி - 18 புள்ளிகள்  25) தமிழன்பன் - 13 புள்ளிகள் 26) வசி - 12 புள்ளிகள் இதுவரை 1, 2,4, 7, 8,10 - 13, 16 - 18, 22, 27 - 31, 33, 34, 38 - 42 , 48, 52 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 56)
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.