Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் யுத்தத்தை ஆரம்பிக்கப் போவது யார்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கில் யுத்தத்தை ஆரம்பிக்கப் போவது யார்? -விதுரன்-

வடக்கில் போர் முனை அமைதியாயிருக்கிறது. பாரிய மோதல்கள் எதுவும் இடம்பெறவில்லை. எவ்வேளையிலும் இங்கு பெரும் போர் வெடிக்கலாமென்ற எதிர்பார்ப்பு அனைத்துத் தரப்பிலுமிருந்த போதிலும், இங்கு எதிர்பார்க்கப்பட்ட பெரும் சமர் தாமதமடைகிறது.

கிழக்கை புலிகளிடமிருந்து முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாகக் கூறும் அரசு, வடக்கிலும் புலிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்த முயல்கிறது. கிழக்கை போன்று வடபகுதி களமுனையில்லையென்பது படையினருக்கு நன்கு தெரியும். இங்கு மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு நகர்வு முயற்சியும் பலத்த சேதங்களுடன் தோல்வியடைந்துள்ளன.

இதனால் வடக்கில் பாரிய தாக்குதல்களை ஆரம்பிப்பதற்கு படையினர் தயங்குகின்றனர். தெற்கில் நிலவும் அரசியல் காரணங்களுக்காக வடக்கில் பாரிய வெற்றிகளைப் பெறவேண்டிய தேவை அரசுக்குள்ள போதும் வடக்கில் பெருந் தோல்விகளெதுவும் ஏற்பட்டால் அது தெற்கில் அரசுக்கு மேலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடலாமென்ற அச்சமுள்ளது.

இதனால் வடக்கில் பெரும் தாக்குதலைத் தொடுக்க அரசு தயங்குகிறது. தற்காப்புச் சமருடன், வாய்ப்புக் கிடைக்கும் போது வடக்கில் தாக்குதல் சமரைத் தொடுக்கலாமெனவும் கருதுகிறது. இதற்கேற்ப வடக்கில் எல்லைப் புறப்பகுதிகளில் படையினரை முழுத் தயார் நிலையில் வைத்திருப்பதுடன் புலிகளின் பாரிய தாக்குதல்களை எதிர்கொள்ளும் விதத்தில் சில வியூகங்களையும் வகுத்து வருகிறது.

அண்மையில் வடக்கில் இராணுவக் கட்டளைத் தலைமைப்பீடங்களில் திடீர் மாற்றங்கள் செய்யப்பட்டன. வன்னியிலும் மணலாறிலும் இராணுவக் கட்டளைத் தளபதிகள் திடீரென மாற்றஞ் செய்யப்பட்டனர். இந்த மாற்றமானது வடக்கே மேற்கொள்ளப்படவுள்ள பாரிய தாக்குதலுக்கான முன்னோடி நடவடிக்கையா அல்லது வடக்கில் புலிகள் ஏதாவது பாரிய தாக்குதல்களைத் தொடுத்தால் தற்காப்புச் சமருக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கையா என்பது குறித்தும் கவனம் செலுத்தப்படுகிறது.

தெற்கில் தோன்றியுள்ள அரசியல் சூழ்நிலை அரசுக்கெதிராக மாறிவருகிறது. ஆட்சி மாற்றமொன்றுக்காக எதிரணிகள் அணிதிரள்வது போல் தென்படுகிறது. தொடரும் யுத்தத்தால் பொருளாதார நிலைமை மிகவும் பலவீனமடைந்துவிட்டது. உலக சந்தையில் எந்தப் பொருளின் விலையில் மாற்றமேற்பட்டாலும் அது இலங்ைகயை மோசமாகப் பாதிக்கின்றது.

எதற்குமே மானியங்களை வழங்கி வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் அரசுள்ளது. இதனால் மக்கள் போராட்டம் வெடிக்கும் சூழ்நிலை தோன்றியுள்ளது. அரசு, போர் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமெனத் தூண்டிவரும் ஜே.வி.பி. வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கெதிராக போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.

இது ஜே.வி.பி.யின் அரசியல் நாடகமென்றாலும், இந்த ஆட்சி கவிழக்கூடாதென்பதில் மிகவும் அக்கறை காட்டிவரும் ஜே.வி.பி., வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கெதிராக குரலெழுப்பாது மௌனம் சாதிப்பது நாட்டு மக்களுக்கு மட்டுமன்றி ஜே.வி.பி. ஆதரவாளர்கள் மத்தியிலும் கடும் சினத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் மக்கள் வாழ முடியாததொரு சூழ்நிலை தோன்றியுள்ளதாக எதிர்க்கட்சிகள் களமிறங்கிப் போராட்டம் நடத்துகையில் அவர்களுடன் மக்கள் சேர்ந்து வருவது ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்து விடலாமென அஞ்சும் ஜே.வி.பி., எதிரணிகளின் பக்கம் மக்கள் சாய்வதைத் தடுப்பதற்காகத் தானும் போராட்டங்களில் குதித்து மக்களை தன்வசப்படுத்த முனைகிறது.

தற்போதைய நிலையில் இந்த அரசை பதவியிலிருந்து இறக்கி புதிய அரசை அமைக்கும் பலம் எதிரணிகளிடமில்லாவிட்டாலும் வடக்கில் போர் முனையில் அரச படைகளுக்குப் பெரும் பின்னடைவுகள் ஏற்பட்டால் அது தெற்கில் ஆட்சி மாற்றத்துக்கு வழிகோலிவிடலாமென்ற அச்சமும் அரசுக்கும் ஜே.வி.பி. க்குமுள்ளது.

இதனால், வடக்கில் போரைத் தொடங்குவது குறித்து அரசு தீவிரமாகச் சிந்திப்பதுடன் கொழும்பின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டிய நிலையிலுள்ளது. வட போர் முனையில் பின்னடைவுகள் ஏதும் ஏற்படுவதுடன் தெற்கிலும் புலிகள் பாரிய தாக்குதலைத் தொடுத்து விட்டால் அரசின் நிலைமை கேள்விக் குறியாகிவிடும்.

இதனை நன்குணர்ந்துள்ள ஆட்சியாளர்கள், வடக்கில் வெற்றி கிட்டுமென நிச்சயம் தெரிந்த பகுதிகளில் மட்டுமே தாக்குதல் சமரை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். அதுவும், அது உடனடியாகச் சாத்தியப்படுமா என்பதும் தெளிவில்லாததொரு நிலையே காணப்படுகிறது.

கிழக்கை புலிகள் வசமிருந்து முழுமையாகக் கைப்பற்றி விட்டதாக அரசு அறிவித்த உடனேயே வடக்கிலும் பாரிய தாக்குதல்களைத் தொடுத்து புலிகளுக்கு பெரும் நெருக்கடிகளைக் கொடுக்கலாமென அரசு திட்டமிட்டது. கிழக்கில் ஏற்பட்டுள்ள தோல்விகளால் புலிகள் பெரிதும் தளர்ந்து, சோர்ந்து போயிருப்பரெனவும் அரசு கருதியதுடன் மடுத் திருவிழா தொடங்கும் முன்னர் மடுப் பிரதேசத்தை கைப்பற்றிவிடவும் பலத்த முயற்சிகளை மேற்கொண்டது.

எனினும், எல்லா முயற்சிகளையும் புலிகள் முறியடித்துவிட்டனர். இந்தப் படை நடவடிக்கைகளின்போது இராணுவத்தினர் பலத்த இழப்புகளையும் சந்தித்தனர். ஒவ்வொரு முன்னேற்ற முயற்சியின் போதும் புலிகள் ஒவ்வொரு தந்திரத்தைப் பயன்படுத்தியதால் படையினர் எதிர்பாராதளவில் பலத்த இழப்புகளைச் சந்திக்க நேரிட்டது.

வடக்கில் புலிகள் மிகவும் பலமாக இருப்பதை இது காட்டியது. மேலும் படை நடவடிக்கைகளைத் தொடர்ந்தால் மோசமான விளைவுகள் ஏற்படலாமெனவும் அரசு கருதுகிறது. அதேநேரம் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பானது, கிழக்கு வெற்றியை மக்களிடமிருந்து மறைத்துவிட்டது. ஒரு நேர உணவுக்காக அல்லாடும் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. பொருளாதார நிலைமை மிக மோசமடைகிறது.

இந்த நிலையில் வடக்கில் பெரும் வெற்றிகள் கிடைத்தாலும் தெற்கில் நிலைமைகளைச் சமாளிக்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது. இதனால், வடக்கில் உடனடியாகப் போரைத் தொடுக்கவோ அல்லது போரைத் தொடுக்காதிருக்கவோ முடியாத நிலை அரசுக்கேற்பட்டுள்ளது.

இதைவிட இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் உலகின் கவனத்தை முழு அளவில் ஈர்த்துள்ளது. படுகொலைகள், ஆட்கடத்தல்கள், ஆட்கள் காணாமல்போதல் உட்பட அனைத்து விதமான மனித உரிமை மீறல்களாலும் சர்வதேச அரங்கில் இலங்கையின் பெயருக்கு பெரும் களங்கமேற்பட்டுள்ளது.

இலங்கை வரும் ஒவ்வொரு சர்வதேசப் பிரதிநிதியும் இலங்கை பற்றித் தெரிவிக்கும் கருத்துகள் உலகரங்கில் இலங்கையை மேலும் மேலும் தனிமைப்படுத்தி வருகிறது. இதனால் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் இலங்கைக்கு வருவதை தடுத்து நிறுத்துமாறு இனவாதக் கட்சிகள் அவசர கோரிக்கைகளை விடுக்கின்றனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் இலங்கைக்கான சர்வதேச நிதி உதவிகளும் நிறுத்தப்பட்டு வருவதுடன் நிறுத்தப்படும் நிலையும் ஏற்பட்டு வருகிறது. இது நாட்டின் பொருளாதார நிலைமையை மேலும் மோசமடையச் செய்து வருகிறது. இதனால் வடக்கில் அரசு போரைத் தொடுத்து மோசமான விளைவுகள் ஏற்படுமானால் அது தெற்கில் அரசுக்கெதிரான உணர்வை மேலும் அதிகரித்து விடுமெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களாக வடக்கில் போர்முனை பெரிதும் அமைதியாகவேயுள்ளது. மடுத் திருவிழாவையொட்டி இருதரப்பும் அப்பிரதேசத்தில் மோதல் தவிர்ப்பை கடைப்பிடித்து வந்தாலும் மடு உற்சவம் முடிவடைந்ததும் நிலைமை எவ்வாறிருக்குமென எதிர்பார்க்க முடியாது. ஏதாவதொரு தரப்பு பாரிய தாக்குதலைத் தொடுக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் வடக்கில் போரைத் தொடுக்கப் போவது யாரென்ற கேள்வியெழுகிறது. வடக்கில் புலிகளை அடக்கி வைத்துக் கொண்டு கிழக்கில் தேர்தல்களை நடத்தவும் திட்டமிடப்படுகிறது. இது எந்தளவிற்கு சாத்தியப்படுமெனத் தெரியவில்லை. தற்போதைய நிலையில் புலிகள் தங்களது பலத்தை நிரூபிப்பதுடன் அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்துவதாயின் மணலாறு பகுதி மீதே பெரும் தாக்குதலைத் தொடுப்பரென படைத்தரப்பு கருதுகிறது.

மணலாறில் சிங்களக் குடியேற்றக் கிராமங்களை பாதுகாக்கும் நோக்கில் அங்கு 25 கிலோ மீற்றர் தூரத்திற்கு பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. புலிகளின் ஊடுருவலைத் தடுக்கும் நோக்கிலேயே இந்தப் பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. கொக்குத்தொடுவாய்க்கும் மண்கிண்டி மலைக்கும் இடையிலான ஐந்து கி.மீ. அகலமான யுத்த சூனியப் பிரதேசம் படையினருக்கு சாதகமற்றதாயுள்ள போதும் மண்கிண்டி மலையுடனான இணைப்பை பதுங்கு குழிகளைப் பலப்படுத்தி படையினர் இணைத்துள்ளனர்.

வடக்கு- கிழக்கில் தமிழர் தாயகத்தை பிரிக்கும் நோக்கில் மணலாறுப் பிரதேசம் முழுமையாக சிங்களமயப்படுத்தப்பட்டு அதன் நிர்வாகம் அநுராதபுரம் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இங்கு பாரிய படை முகாம்களுமுள்ளன. முன்னர், வன்னியையும் யாழ். குடாநாட்டையும் இணைக்கும் பகுதியில் ஆனையிறவு படைத்தளம் எப்படி முட்டுக்கட்டையாக இருந்ததோ அதே போல் பல கி.மீற்றர் விஸ்தீரணம் கொண்ட மணலாறை ஆக்கிரமித்து வடக்கு- கிழக்கு பிரதேச இணைப்புக்கு அரசு முட்டுக்கட்டை போட்டது.

இதனால் மணலாறைக் கைப்பற்ற வேண்டிய தேவை புலிகளுக்கு எப்போதுமேயுள்ளது. கிழக்கிற்கான மிகப்பெரும் காப்பரணாக மணலாறே உள்ளது. இதனால் மணலாறு புலிகளிடம் வீழ்ச்சியடையும் பட்சத்தில் திருகோணமலை மாவட்டத்தின் பாதுகாப்பு முற்று முழுதாகவே கேள்விக் குறியாகி விடுமென்பது அனைவரும் அறிந்ததே.

வடக்குப் போரில் புலிகளின் பிரதான இலக்கு மணலாறே என்பதை படையினர் நன்கறிவர். இதனால் இப்பிரதேசத்தின் பாதுகாப்பு மிகப் பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ளது. புலிகள் மணலாறுப் பகுதியில் பாரிய தாக்குதலைத் தொடுத்தால் வடக்கில் வேறெங்காவது பகுதியில் பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்டு புலிகளுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுக்கவும் படையினர் திட்டமிட்டுள்ளனர்.

வடக்கில் புலிகள் பாரிய தாக்குதலை நடத்தி படையினருக்கு பின்னடைவை ஏற்படுத்தினாலும் சரி படையினர் மேற்கொள்ளும் பாரிய நடவடிக்கையை முறியடித்து அவர்களுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தினாலும் சரி அது தெற்கில் அரசின் ஸ்திரத்தன்மையை பெரிதும் பாதிப்பதுடன் அரசியல் வீழ்ச்சியையும் ஏற்படுத்தலாமெனக் கருதப்படுகிறது.

வடக்கு - கிழக்கைப் பிரித்து கிழக்கை கைப்பற்றி அங்கு தேர்தலை நடத்துவதுடன் அபிவிருத்தியென்ற பெயரில் அங்கு சிங்களக் குடியேற்றத்திற்கான முஸ்தீபுகள் நடைபெறுகின்றன. திருகோணமலையை சிங்களப் பிரதேசமாக்கும் அனைத்து நடவடிக்கையிலும் அரசு இறங்கிவிட்டது. மட்டக்களப்பில் தமிழர் பிரதேசங்களிலும் குடியேற்றங்கள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கிழக்கை அரசு கைப்பற்றிவிட்டதாகக் கூறி அங்கு அனைத்தும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. அரசுடன் சேர்ந்தியங்கும் ஆயுதக் குழுக்களாலும் இதற்கெதிராக எதுவுமே செய்யமுடியாது. இதனால் அங்கு தேர்தலும் நடத்தப்பட்டு அதிகாரங்களும் கைபற்றப்பட்டு விட்டால் தமிழர் நிலையே கேள்விக் குறியாகிவிடும். இதனை அனுமதிக்கக் கூடாதென தமிழ்த் தரப்புகள் வலியுறுத்துகின்றன.

இவ்வாறானதொரு சூழ்நிலை பாரிய படை நடவடிக்கை மூலமே ஏற்படுத்தப்பட்டது. போர்நிறுத்த உடன்பாடு அமுலிலிருக்கையில் திருகோணமலையின் மாவிலாறில் தொடங்கி மட்டக்களப்பின் குடும்பிமலை வரையான பகுதிவரை பாரிய படையெடுப்பு நடைபெற்ற போது சர்வதேச சமூகம் கைகட்டிப் பார்த்திருந்தது. இதனால், இதற்கெதிராக இனிப் புலிகள் மேற்கொள்ளப் போகும் பாரிய தாக்குதல்களையும் சர்வதேச சமூகம் கைகட்டிப் பார்க்க வேண்டுமென்பதும் வலியுறுத்தப்படுகிறது.

வடக்கே இனி இடம்பெறப் போகும் ஒவ்வொரு சமரும் மிகவும் முக்கியமாயிருக்கப் போகிறது. வடக்கில் புலிகளுக்கு கிடைக்கப் போகும் வெற்றிகளே கிழக்கின் நிலையையும் தீர்மானிக்கப் போகிறது. சமாதானப் பேச்சுவார்த்தையென்பது இனி வடக்கு - கிழக்கு இணைந்த நிலையில் தான் நடைபெறுமென்பது உறுதியாகி விட்டதால் இனிமேல் நடை பெறப்போகும் சமர் வடக்கு -கிழக்கு இணைப்புக்குரியதாகவேயிருக்க வேண்டுமென தமிழ்த் தரப்புகள் வலியுறுத்துகின்றன.

சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் யாழ்.குடாவிற்கான தரைவழிப் பாதையை திறக்க யுத்தம் நடைபெற்றது. ஆனால் மகிந்தவின் ஆட்சிக் காலத்தில் யாழ். குடாவுக்கான தரை வழிப் பாதையை மூடுவதற்கான யுத்தம் நடைபெற்றது. அதேபோல் மகிந்தவின் ஆட்சியில் வடக்கு - கிழக்கை பிரிக்கும் யுத்தம் நடைபெற்றதால் அவரது ஆட்சியில் வடக்கு - கிழக்கை இணைக்கும் யுத்தமும் நடைபெற வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.

வடக்கில் அடுத்து நடக்கப் போகும் போர் தெற்குடனும் சம்பந்தப்பட்டதாகவேயிருக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.