Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சஜித் பயப்படுவதற்கான காரணம் எமக்கு தெரியும் - நேர்காணலில் அமைச்சர் மனுஷ தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சஜித் பயப்படுவதற்கான காரணம் எமக்கு தெரியும் - நேர்காணலில் அமைச்சர் மனுஷ தெரிவிப்பு

05 Sep, 2022 | 11:14 AM
image

நேர்கண்டவர் – ரொபட் அன்டனி 

புலம்பெயர் தமிழ் மக்கள் இலங்கையில் முதலீடு செய்யவேண்டும்

ரணில் ஜனாதிபதியானது நாட்டின் அதிஷ்டம் 

தமிழ் தெரியாததையிட்டு வெட்கமடைகிறேன் 

மாற்றந்தாய் மனப்பான்மையுடன் பார்க்கப்படும் தோட்டத் தொழிலாளர்கள் 

அடுத்த தேர்தலில் எந்தக் கட்சியில் போட்டியிடுவது என்று தெரியவில்லை 

டிசம்பர் மாதமாகும்போது நாட்டு நிலைமை சீரடைந்துவிடும் 

கோட்டா இலங்கை வரலாம் – ஆனால் நிர்வாகத்தில் தலையிட முடியாது 

சஜித் பிரதமராக விரும்புகிறார். ஜனாதிபதியாக விரும்புகிறார். ஆனால் பயப்படுகிறார்.   அரசில் இணைந்தால் பிரபலமற்ற தீர்மானங்களை தற்போது எடுக்க வேண்டியேற்படும்.  வட் வரியை அதிகரித்தால் சிக்கல் ஏற்படும் என்று தொழில் உறவுகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். 

வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே  அவர்  இந்த விடயங்களை குறிப்பிட்டார். செவ்வியின் விபரம் வருமாறு  

கேள்வி:தமிழ் மொழி ஓரளவு தெரியுமா?  

பதில் :பல்லின மொழிகள் பேசப்படும் இலங்கையில் இருந்துகொண்டு என்னால் சிங்களம் மட்டும் பேச முடியுமென்பதை நினைத்து கவலையடைகிறேன். ஆங்கிலம் பேச முடியாமல் இருந்தால் கவலை வேண்டாம். ஆனால்  நான் வாழ்கின்ற பிரதேசத்தில்   நான் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வசிக்கின்றனர்.  தமிழ்மொழி இலங்கையின் அரச கரும மொழியாக இருக்கிறது. ஆனால் என்னால்  ஒரு சில வார்த்தைகள் மட்டும் பேச முடியும்.  வணக்கம் நன்றி போன்ற வார்த்தைகளை குறிப்பிடலாம். 

கேள்வி  :அப்படியானால் சகலரும் தமிழ் மற்றும் சிங்கள மொழியை பேசக்கூடியவாறான ஒரு உயர்ந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் அல்லவா?  உங்களுக்கு அதில் ஒரு கடமை உள்ளதல்லவா?

பதில் : நிச்சயமாக அதனை நாங்கள் செய்ய வேண்டும்.  இந்த நாட்டில் ஒரு இனப் பிரச்சினை இருப்பதாக கூறப்படுகிறது.  நான் அதனை அவ்வாறு பார்க்கவில்லை. எம்மிடம் காணப்படுகின்ற தொடர்பாடல் பிரச்சினையே இதற்கு பிரதான காரணமாக இருக்கின்றது.  தொடர்பாடல் இடைவெளி இருந்ததால் நாம் நெருங்கிவரவில்லை.  எம்மால் தொடர்புகளை ஏற்படுத்தமுடியுமாக இருந்தால் அந்த பிரச்சினை வந்திருக்காது.     மொழி தொடர்பான தெளிவின்மை அறிவின்மை காரணமாகவே இந்த நெருக்கடிகள் உருவாகின.  தமிழ் மக்களின் பிரச்சினைகள் சிங்கள மக்களுக்கு விளங்கவில்லை. சிங்கள மக்களின் பிரச்சினைகள் தமிழ் மக்களுக்கு விளங்கவில்லை.   

கேள்வி  : 2020 ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் பணிபுரிந்தவர்கள் அனுப்பிய  அந்நிய செலாவணி ஏழு பில்லியனாக இருந்தது.  கடந்த வருடம் அது ஐந்தாக குறைவடைந்தது.  இந்த வருடம் என்ன நிலைமை? 

பதில்  :இந்த வருடம் அது மேலும் குறைவடையலாம்.   எனினும் அடுத்தடுத்த மாதங்களில் ஒரு முன்னேற்றம் ஏற்படும் என்று நம்புகிறோம்.  வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்களுக்கு பல வசதிகளை செய்து கொடுப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.  அதனால் அந்நிய செலாவணி   வருகை அதிகரிக்கும்.  இது கொரோனா காலத்தில் இருந்து தாக்கத்தை ஏற்படுத்தியது. கொரோனா காலத்தில் பலர் வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வந்துவிட்டனர்.  அவர்கள் அவ்வாறு வந்தபோது  இலங்கையில் மாற்றம் தாய் மனப்பான்மையுடனேயே  பார்க்கப்பட்டனர்.  மனித குண்டுகள் வருவதாகவே கூறப்பட்டது.  அடுத்ததாக மக்களை பொறுத்தவரையில் தமக்கு வீடு ஒன்றை நிர்மாணித்துக் கொள்ளவும் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்யவுமே அதிகளவில் வெளிநாடுகளுக்கு செல்கிறார்கள்.  ஆனால் தற்போது நாட்டில் நிர்மாணங்கள் இடம்பெறுவதில்லை.  எனவே மக்கள் டொலர்களை அனுப்பாமல் இருக்கின்றனர்.  அடுத்ததாக உண்டியல் முறையில் டொலர் அனுப்பியதாலும் எமக்கு வருகின்ற டொலர்களில் வீழ்ச்சி ஏற்பட்டது. 

கேள்வி  : இப்பொழுது வெளிநாடுகளில் பணிபுரிகின்ற மக்கள் மத்தியில் நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்துள்ளதா?

பதில்  :நான் மேற்கூறிய விடயங்கள் தாக்கம் செலுத்திய போது அதில் அரசியல் முகம் ஒன்று காணப்பட்டது.  கோட்டாபாய இருக்கும் வரைக்கும் டொலர் அனுப்பமாட்டோம் என்று கூறினார்கள்.  அப்படியானால் யார் ஆட்சிக்கு வந்தால் அவர்கள் பணம் அனுப்புவார்கள் என்பதை கூற வேண்டும்.  இதனால் யார் கஷ்டப்படுகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.  எமது நாட்டு மக்களே கஷ்டப்படுவர்.    மேலும் வங்கிகளைவிட உண்டியல் மூலம் அதிக பணம் கிடைத்ததால் அவ்வாறு அனுப்பினர். 

கேள்வி :புலம்பெயர் அமைப்புகளின் முதலீடுகள் தற்போது எதிர்பார்க்கப்படுகின்றன.  அவர்களிடமிருந்தும் டொலர்கள் எதிர்பார்க்கப்படுகின்றமை குறித்து? 

பதில் : இலங்கை தமிழ் மக்கள் புலம்பெயர் மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு ஆரம்பத்தில் இலங்கையுடன் ஒரு பிரச்சனை காணப்பட்டது. நம்பிக்கையின்மை காணப்பட்டது. அமைப்புக்கள் தடை, காணி பிரச்சினை அரசியல் கைதிகள் விவகாரம்,  என பல பிரச்சினைகள் தமிழ் புலம்பெயர் மக்களுக்கு காணப்பட்டன.  அந்தப் பிரச்சினைகளை நாங்கள் தீர்த்து வருகிறோம். தடை செய்யப்பட்ட அமைப்புகள் தற்போது தடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன.  புலம்பெயர் மக்கள்   இலங்கையில் எந்த பிரதேசத்திலும் முதலீடு செய்யலாம்.  அவர்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.  என்னடா நோர்வே பிரான்ஸ் அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழ்கின்ற இலங்கை தமிழ் மக்கள் தற்போது இலங்கையின் நிலைமையை கருத்தில் கொண்டு இலங்கையில் முதலீடு செய்ய வருவார்கள் என்று நம்புகிறோம். 

கேள்வி :நீங்கள் இந்த அமைச்சு  பொறுப்பை ஏற்றதன் பின்னர்  வெளிநாடுகளில் பணிபுரிகின்ற மக்கள் தொடர்லில் பல திட்டங்களை எடுத்திருக்கின்றீர்கள்.  எவ்வாறான வேலைத்திட்டங்கள் அந்த மக்களுக்காக முன்னெடுக்கப்பட்டுள்ளன?

பதில் : நான் பதவியேற்கும் போது மக்கள் வெளிநாடுகளுக்கு தொழிலுக்கு செல்வது குறைவடைந்திருந்து.  அதனை நான் வந்ததும் விரைவு படுத்தினேன்.  கொரியா ஜப்பான் இஸ்ரேலுக்க மக்கள் செல்வது வீழ்ச்சடைந்தது.  அதனை நாங்கள் அதிகரித்திருக்கிறோம்.  வெளிநாடுகளில் பணிபுரிகின்றவர்கள் இலங்கையில் இலத்திரனியல் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வதற்கான வசதிகள்,     வரி சலுகைகள்   வெளிநாடுகளில் பணிபுரிகின்றவர்கள் நாடு திரும்பும் போது அவர்களுக்கு விமான நிலையத்தில் ஹோப் கேட் என்று ஒரு மிக முக்கியத்துவமிக்கவர்களுக்கான வழித்தடம்,   ஓய்வூதிய சம்பளம் முறை,       குறைந்த வட்டியில் கடன்கள் போன்ற     ஏற்பாடுகளை செய்துள்ளோம்

கேள்வி : அரசியல் ரீதியில் கடந்த மே மாதம் நீங்கள் எடுத்த முடிவு சரியானதா? 

பதில் :அது ஒரு சரியான தீர்மானமாகும்.  நாட்டு மக்களுக்காக நாங்கள் அந்த தீர்மானத்தை எடுத்தோம்.  நான் எனது அரசியல் எதிர்காலம் குறித்து சிந்தித்திருந்தால் அந்த தீர்மானத்தை எடுத்திருக்கமாட்டேன்.  ரணில் பிரதமராக வந்தபோது அரசியல் எதிர்காலம் குறித்து சிந்திக்காமல் நாங்கள் அவருக்கு ஆதரவு வழங்கினோம்.  இன்று மாற்றம் ஏற்பட்டு இருக்கின்றது.  எரிவாயு கிடைக்கிறது. எரிபொருள் பிரச்சினை  ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது.  டிசம்பர் ஜனவரி மாதமாகும்போது நாட்டின் நிலைமை முழுமையாக மாற்றமடையும்.  நாம் ஒரு ஆபத்தான தீர்மானத்தை அன்று எடுத்தோம்.    நிறைவேற்று அதிகாரத்தை நீக்குதல், 19 ஐ மீண்டும் கொண்டு வருதல்,  ரஞ்சனின் விடுதலை அனைத்தும் இன்று நடந்து கொண்டிருக்கின்றன.  யாரும் எதிர்பார்க்காத பல மாற்றங்களை நாங்கள் செய்கிறோம். ஜனாதிபதி இன்று தனது அரசியல் எதிர்காலம் குறித்து சிந்திக்காமல் நாடு குறித்து சிந்தித்து தீர்மானங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார். பாரதூரமான தீர்மானங்கள் எடுக்கிறார்.  அவை பிரபலமான தீர்மானங்கள் அல்ல.  நானும் இந்த தொழில் துறையில் முக்கியமான தீர்மானங்களை எடுத்துக்கொண்டிருக்கிறேன். 

கேள்வி  :  நீங்கள் அடுத்த தேர்தலில் எந்த கட்சியில் போட்டியிடுவீர்கள்?

பதில் : அது பற்றி எனக்கு தெரியாது. அதை பற்றி நான் இன்னும் சிந்திக்கவில்லை.  மக்கள் கோரிய மாற்றத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து இப்போது நாம் சிந்திக்கிறோம்.  எமது நாட்டில் 129 அரசு விடுமுறை நாட்கள் காணப்படுகின்றன.  சம்பளத்துடன் கூடிய விடுமுறைகள் 40 வரையில் காணப்படுகின்றன.   ஆண்டில் அரைவாசி நாட்களே நாங்கள் வேலை செய்கிறோம்.  எப்படி நாடு முன்னேறும்? அவை குறித்து சிந்தித்து நாங்கள் செயற்படுகின்றோம். 

கேள்வி :ஏன் சர்வ கட்சி அரசாங்கத்தை அமைக்க முடியாமல் இருக்கிறது?  

பதில் : எம்மை போன்று அரசியல் எதிர்காலம் குறித்து சிந்திக்காமல் தீர்மானம் எடுப்பதற்கு இங்கு யாரும் இல்லை என்பதே அதற்கு காரணமாகும்.    நான் அடுத்தமுறை ஜனாதிபதியாக முடியுமா? பிரதமராக முடியுமா என்பது குறித்தே பலரும் சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.  அதனால் தான் சர்வகட்சி அரசாங்கத்துக்கு வராமல் இருக்கின்றனர்.  நாட்டை பற்றி சிந்திக்கின்றவர்கள் இருந்தால் சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்கலாம். 

கேள்வி : எதிர்க்கட்சி தலைவர் சஜித் ஏன் சர்வகட்சி அரசாங்கத்தில் இடம் பெறத் தயங்குகிறார்? 

பதில் : சஜித் பிரதமராக விரும்புகிறார். ஜனாதிபதியாக விரும்புகிறார். ஆனால் பயப்படுகிறார்.   அரசில் இணைந்தால் பிரபலமற்ற தீர்மானங்களை தற்போது எடுக்க வேண்டியேற்படும்.  வட் வரியை அதிகரித்தால் சிக்கல் ஏற்படும். அதனால் அவர் தயங்குகிறார்.     அது கஷ்டமான தீர்மானம்.  ஆனாலும் அதனை எடுக்க வேண்டியிருக்கிறது.  பிச்சைக்காரனுக்கு எப்போதும் தனது காயம் ஆறக்கூடாது என்பதே விருப்பமாக இருக்கும்.  நாங்கள் அந்த காயத்தை ஆற்ற விரும்புகிறோம். 

கேள்வி  : ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து  யாரும் விலகி அரசாங்கத்துடன் இணைந்து கொள்வார்களா ? 

பதில் : ஜனாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பின்போதும் ஐக்கிய மக்கள் சக்தியின் சிலர் எமக்கு ஆதரவாக வாக்களித்தனர்.  பெயர்களை குறிப்பிட முடியாது. இப்போதும் சிலர்   தயாராக இருக்கின்றனர்.  எம்முடன் பேசிக் கொண்டிருக்கின்றனர்.  ஆனால் நாம் கட்சியாக அவர்களை இணைத்துக் கொள்ளவே விரும்புகிறோம்.  ஆனால் ஒரு சிலர் தாம் தலைவர் பதவியை அடைய வேண்டும் என்பதற்காக தமது கட்சியில் உள்ளவர்களை அரசாங்கத்துடன் இணைய விடாமல் தடுக்கின்றனர்.  அவர்கள் சிறுவயதிலிருந்தே உயர் பதவிக்கான உடைகளை தைத்து வைத்துக் கொண்டிருக்கின்றனர்.  ஆனால் நேரடியாக தீர்மானங்களை எடுக்கின்றவர்களே வர தலைவர்களாக வர வேண்டும். 

கேள்வி  : நீங்களும் ஹரினும்  சஜித் பிரேமதாசவிடம் சென்று பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுங்கள், நாங்கள் உங்களுக்கு பக்க பலமாக இருக்கின்றோம் என்று கூறினீர்களா ? 

பதில்  : நாம் பல தடவை அதனை கூறினோம்.  அவர் அன்று  பிரதமர் பதவியை ஏற்று இருந்தால் இன்று   ஜனாதிபதியாக இருந்திருப்பார். ஆனால் அப்படி நடக்காததும் ஒரு வகையில் நல்லது. 

கேள்வி  : ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள் ? 

பதில் :அவர் ஜனாதிபதியாக வந்திருந்தால் இவ்வாறான கடினமான தீர்மானங்களை எடுத்திருக்கமாட்டார்.  நாம் அவரிடம் அப்படி ஒரு பண்பை காணவில்லை.    தமிழ் அமைப்புகளின் தடை நீக்கம் தொடர்பான தீர்மானங்களை அவரால் எடுக்க முடியாது.  தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க அவர் பயப்படுகிறார்.  கடினமான தீர்மானங்கள் எடுப்பதற்கு முன்வர வேண்டும்.  நாட்டின் அதிர்ஷ்டத்திற்கே ரணில்  ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். 

கேள்வி  : ரஞ்சனின் விடுதலை தொடர்பில் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள்.  அவர் என்ன செய்யப் போகிறார்?

பதில் : ரஞ்சனை வெளியே எடுப்பதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்தோம்.  ரஞ்சனுக்காக நாடு முழுவதும் போராட்டம் நடத்தினோம்.  எமது பணத்தை செலவழித்து ஜெனிவாவுக்கு சென்றோம்.  கோட்டபாயவிடம் கோரிக்கைவிடுத்தோம்.  இறுதியில் ரணில் விக்ரமசிங்கவிடமும் கோரிக்கை விடுத்தோம்.  நீதி அமைச்சர் விஜயதாச   முழுமையான உதவியை வழங்கினார்.  அவரை விடுவிக்கும்வரை நாம் அந்த நடவடிக்கைகளை மேற்கொண்டோம்.  ஆனால் ரஞ்சனை கூட்டிக்கொண்டு செய்தியாளர் மாநாட்டை நடத்த நாம் விரும்பவில்லை.  அவருடன் செல்பி புகைப்படம் எடுக்க நாம் விரும்பவில்லை.  ஆனால் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் அவருடன் சேர்ந்து இந்த வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். 

கேள்வி  : சஜித் பிரேமதாஸ இந்த நாட்டின் தலைவராகுவதற்கு தகுதியற்றவர் என்று கூறுகிறீர்களா?

பதில்  : அவர் செய்கின்ற  அரசியல் செயல்பாடுகளை பார்க்கும்போது எங்களுக்கு அவ்வாறு தோன்றுகிறது

கேள்வி  : அப்படியானால் 2019 ஆம் ஆண்டு அவரை ஆதரித்தீர்களே?

பதில்  : அன்று கட்சி எடுத்த தீர்மானத்துக்கு அமையவே அவருக்கு நாம் ஆதரவளித்தோம்.    ஆனால் சஜித் பிரேமதாச பொறுப்புகளை எடுக்க தயங்குகிறார்.    மக்கள் கஷ்டப்படும் போது முன் வருவதற்கு தயங்குகிறார். 

கேள்வி  : முன்னால் ஜனாதிபதி கோட்டா  மீண்டும் இலங்கை வருவதாக கூறப்படுகின்றது.  வந்தால் என்ன நடக்கும்? 

பதில்  : கோட்டாபய  இந்த நாட்டின் பிரஜை.    அவருக்கு இங்கு இருக்கலாம்.    வரலாம்.    வாழலாம். ஆனால் அவர் அரசியல் செயல்பாடுகளில் தலையிட முடியாது.  ஜனாதிபதியாக இருந்து விலகி விட்டார்.  நாம் தற்போது அரசாங்கத்தை அமைத்து நாட்டை நிர்வகித்துக் கொண்டிருக்கிறோம்.  அதில் வெளியார்கள் தலையிட முடியாது. 

கேள்வி  : கோட்டா  அரசியல் செய்ய முடியாது என்று கூறுகிறீர்களா?

பதில்  : அவருக்கு அரசியல் செய்ய வேண்டிய அவசியம் வராது.  அவர் அரசியல் வேண்டாம் என்பதற்காகதானே    நாட்டை விட்டே சென்றார். 

கேள்வி  : மலையக தோட்டத்  தொழிலாளர்களின் சம்பள விடயத்தில்  நீங்கள் எவ்வாறு தலையிடுவீர்கள்? 

பதில்  : மலையகத்தில் இருக்கின்ற தொழிற்சங்கங்கள் நடத்திய போராட்டங்களின்  விளைவாக கூட்டு ஒப்பந்தத்தை ஒரு பக்கம் வைத்துவிட்டு தற்போது சம்பளம் உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால் தற்போது ஆயிரம் ரூபா  சம்பளத்தை பெற்ற என்ன செய்ய முடியும்? அந்த ஆயிரம் ரூபாவை பெற்றுக் கொள்வதற்கும் இவ்வளவு கிலோ பறிக்க வேண்டும்  ஏற்பாடுகளும் இருக்கின்றன.  இலவசமாக சம்பளம் வழங்க வேண்டியதில்லை.  ஆனால் வாழ்வதற்கான சம்பளம் வழங்கப்பட வேண்டும்.  அந்த மக்கள் வாழ்வதற்கான சம்பளத்தை பெற்றுக் கொடுப்பதற்காக நான் தெளிவான முறையில் அவர்களுக்காக முன்னிற்பேன்.  நான்  தற்போது முதலாளிமார் சம்மேளனத்துடன்  பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். எதிர்காலத்தில் நிவாரணங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

கேள்வி : சம்பள விடயத்தில் நேரடியாக தலையிடுவீர்களா? 

பதில்  : இது எனது விடயதானத்துடன் சம்பந்தப்பட்ட விடயம்.   அதனால் நேரடியாக இதில் தலையிடுவேன்.  உலக வங்கியின் உதவியுடன் நாம மலையக  மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்வதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.  உலக உணவு திட்டத்தின் ஊடாக அந்த மக்களுக்கு உணவு உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம். 

கேள்வி  : அவர்கள் வாழ்வதற்கான சம்பளத்தை  பெற்றுக்கொடுக்க நீங்கள் தலையிடுவீர்களா? 

பதில்  : அதற்காக நான் தலையிடுவேன்.  சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்கும் செயல்பாடுகளுக்கு சில காலம் எடுக்கலாம்.  ஆனால் அதுவரை   நான்கு மாதங்களுக்காக உலக உணவுத்திட்டம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் உதவியுடன் நிவாரணங்களை வழங்க எதிர்பார்க்கிறோம். 

கேள்வி  இன்னும் மூன்று மாதங்களுக்கு பின்னர் நான் மற்றுமொரு நேர்காணலை உங்களுடன் செய்யும் போது நிச்சயமாக இது தொடர்பாக மீண்டும் உங்களிடம் கேள்வியெழுப்பவேவேன். 

பதில்  : நிச்சயமாக அந்த கேள்வியை நீங்கள் என்னிடம் கேளுங்கள்.  குறித்த மூன்று மாத காலத்தில் நாங்கள் ஏதாவது செய்வதற்கு முயற்சிக்கிறோம்.  சம்பள சபை ஊடாக உடனடியாக சம்பளத்தை அதிகரிக்க முடியும்.  ஆனால் கூட்டு ஒப்பந்தம் இருப்பது மக்களுக்கு நன்மைபயப்பதாக இருக்கிறது.  இப்போது கூட்டு  ஒப்பந்தம் அமுலில் இல்லை.  எனவே அதற்கு மீண்டும் நாம் வரவேண்டும்.   கூட்டு உடன்படிக்கையை கொண்டு வருவதற்கு தற்போது கொள்கை அளவில் முதலாளிமார் சம்மேளனம் விருப்பம் தெரிவித்திருக்கிறது. 

கேள்வி  : மலையக தோட்ட தொழிலாளர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்   பார்க்கப்படுகின்றனர் என்பதை  ஏற்றுக் கொள்கிறீர்களா?

பதில்  : மாற்றாந்தாய் மனப்பான்மையை விட மிகவும் குறைந்த மட்டத்திலே அவர்கள் பார்க்கப்படுகிறார்கள்.  இதுவொரு பாரதூரமான நிலையாக இருக்கிறது.  வேலை வாங்குகிறோம்.  ஆனால் அவர்களுக்கு வீடு இல்லை.  கல்வியில்லை.  சுகாதாரம் இல்லை.  வசதிகள் இல்லை.  தோட்டங்களுக்குள் தொழில்நுட்பம் செல்ல வேண்டும்.  கொழுந்து பறிப்பதற்கு தொழில்நுட்பம் தேவை.  உரம் போடுவதற்கு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட வேண்டும்.  எனக்கு இந்த விடயத்தில் பாரிய  பொறுப்பு இருக்கின்றது.  அவர்கள் வெளிநாட்டு அந்நிய செலவினையை கொண்டு வருகிறார்கள்.  அவர்கள் பாரியதொரு உழைப்பை வழங்குகின்றனர். 

 

 

https://www.virakesari.lk/article/135042

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.