Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனைத்துலகத்தின் அழுத்தங்கள் எதனையும் சாதிக்கவில்லை: "லொஸ் ஏஞ்சல்ஸ் ரைம்ஸ்"

Featured Replies

சனிக்கிழமை 18 ஓகஸ்ட் 2007 06:45 ஈழம் அ.அருணாசலம்

இரு தரப்பும் பேச்சுவார்த்தைக்கு திரும்பி ஒரு அரசியல் தீர்வை காணவேண்டும் என்ற அமெரிக்கா உள்ளிட்ட அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்கள் எதனையும் சாதிக்கவில்லை என்று "லொஸ் ஏஞ்சல்ஸ் ரைம்ஸ்" நாளேடு தெரிவித்துள்ளது.

அந்த நாளேட்டுக்காக கடந்த வியாழக்கிழமை (15.08.07) ஹென்றி சூ எழுதிய ஆய்வுக்கட்டுரையின் தமிழ் வடிவம் வருமாறு:

மிகச்சிறிய ஆனால் பல கருத்துக்களை உள்ளடக்கிய ஒரு சொல்லில் ஏன் நாகமுத்து நாகலிங்கம் (வயது 80) தனது வீட்டைவிட்டு வெளியேறினார். ஏன் அவர் அங்கு திரும்பிச் செல்ல விரும்பவில்லை என்பதற்கான விளக்கம் இருந்தது. அவர் கூறிய தயக்கமான வார்த்தை "அச்சம்" என்பது தான்.

மக்களுக்கு காரணம் தெரியாத காணாமல் போதல் நடவடிக்கைகளில் அவரது இளைய மகனும் காணாமல் பேய்விடலாம் என்ற அச்சமும் காரணம். கிழக்கை கைப்பற்றிய பின்னர் படையினர் வடக்கில் பெரும் தாக்குதலை நடத்தலாம் என்ற அச்சமும் நாகலிங்கத்திற்கு உண்டு. அங்கு தான் நாகலிங்கம் தனது எளிமையான விவசாய வாழ்க்கையை சில மாதங்களுக்கு முன்பு வரை ஓட்டி வந்தவர்.

அவர்கள் வடக்கை கைப்பற்றுகின்றார்களோ இல்லையோ துன்பத்தை அனுபவிப்பது நாங்கள் தான் என அந்த வெப்பமான மாலை வேளையில் மிகவும் மோசமான நிலையில் உள்ள தலைநகரத்து விடுதியின் புல்தரையில் அமர்ந்திருந்தவாறு நாகலிங்கம் தெரிவித்தார். என்ன நடக்கப்போகின்றது என்பது தொடர்பாக எமக்கு தெரியாது எனவும் அவர் கூறினார்.

அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரைச் சுற்றியுள்ள நெருங்கிய ஆலோசகர்களைத் தவிர ஏனையோருக்கு அது தொடர்பாக எதுவும் தெரியாது. எனவே இந்த மோசமான இனப்போரின் அடுத்த பகுதி என்ன என்பது தொடர்பாக சரியாக யாருக்கும் எதுவும் கூறத்தெரியாது. கண்ணீர்த்துளியை ஒத்த வடிவத்தை உடைய இந்த தீவை 24 வருடங்களாக இந்த போர் ஆட்டம்காண வைத்துள்ளது.

எனினும் இந்த 21 மாதங்களில் போர்நிறுத்தம் தூள்தூளாக சிதறிப்போயுள்ளது. 5இ000-க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்டுள்ள அரசையும்இ வடக்கு - கிழக்கு இணைந்த தாயகத்தை அமைப்பதை குறிக்கோளாக கொண்டுள்ள விடுதலைப் புலிகளையும் எந்தவொரு பட்டியல்படுத்தப்பட்ட தெரிவுகளின் அடிப்படையிலும் அமைதிக்கு கொண்டு வருவது மிகவும் கடினமானதொன்றாக உள்ளது.

தற்போது பேச்சுக்களை ஆரம்பிக்கும் அறிகுறிகள் மகிந்த அரசிற்கு இருப்பதாக தெரியவில்லை. இது கிழக்கை படை நடவடிக்கை மூலம் கைப்பற்றியதனால் ஏற்பட்ட அளவுகடந்த மகிழ்ச்சியினால் ஏற்பட்டது. பல மாதங்களாக நடைபெற்ற மோதல்களைத் தொடர்ந்து கிழக்கை கைப்பற்றியதாக அரசு வெளிப்படையாக அறிவித்திருந்தது. விடுதலைப் புலிகள் முறியடிக்கப்பட்டு வருவதாகவும் நாட்டில் அமைதியையும்இ ஜனநாயகத்தையும் நிலைநாட்டப் போவதாகவும் மகிந்த நம்பிக்கையுடன் அறைகூவல் விடுத்துள்ளார்.

இப்படியாக படை நடவடிக்கைகளை முன்நிறுத்திப் பேசுவது நாட்டில் இது முதற்தடவை அல்ல. இந்த நாட்டின் கடந்த கால்நூற்றாண்டில் பல தலைவர்கள் விடுதலைப் புலிகளை முறியடித்து நாட்டின் ஒருமைப்பாட்டை காப்பாற்றப்போவதாக கூறிவந்துள்ளனர். ஆனால் அதில் யாரும் வெற்றிபெறவில்லை.

அங்கு நீண்டகாலமாக மோதல்கள் நடைபெற்று வருகின்றன. அங்குள்ள மக்களின் வாழ்க்கை நிலை கடந்த ஒன்றரை வருடங்களாக மோசமான நிலையை அடைந்துள்ளது. அதிலும் குறிப்பாக அரச கட்டுப்பாட்டில் உள்ள யாழ். குடாநாட்டில் வாழும் மக்களின் நிலை மோசமடைந்துள்ளது. பீரங்கித் தாக்குதல் அச்சம்இ உணவுப் பற்றாக்குறை போன்ற நெருக்கடிகளுக்கு அவர்கள் முகம் கொடுத்து வருகின்றனர்.

வடக்கில் இருந்த பலர் விடுதலைப் புலிகள் நிர்மானிக்க விரும்பும் தாயகத்தின் இதயப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்துள்ளனர். அதனைச் சூழவுள்ள பகுதிகளில் எப்போது எங்கு சமர் ஆரம்பிக்கும் என்பது தெளிவில்லாமல் உள்ளது.

வடக்கிலேயே தாக்குதல் சமர் இடம்பெறலாம் என நான் எண்ணுகின்றேன். விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களின் மூலம் தீர்வை எட்டுவது சாத்தியமற்றது என அரசு நம்புகின்றது என சிறிலங்காவின் சமாதான சபையின் தலைவரான ஜெகான் பெரேரா தெரிவித்துள்ளார்.

மேலும் அரசின் நாடாளுமன்ற பலம் தேசியவாத கட்சிகளின் ஆதரவில் தங்கியுள்ளது. அவர்கள் இராணுவத் தீர்வுக்கு ஆதரவானவர்கள். ஆனால் தாக்குதல் உடனடியாக ஆரம்பிக்கப்பட மாட்டாதுஇ எனினும் அது மெதுவானதாக இருக்கலாம் என அவர் மேலும் தெரிவித்தார்.

வடக்கைக் கைப்பற்றுவது கிழக்கை கைப்பற்றுவதில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் என்பது அரசிற்கு தெரியும். கிழக்கு இலங்கையின் சனத்தொகை இந்துஇ பெளத்தம்இ இஸ்லாம் என தீவில் பெரும்பான்மையான இரு இனங்களான தமிழ்இ சிங்கள மக்களைக் கொண்டுள்ளதுடன் அது கலாச்சார ரீதியிலும் பெருமளவு வேறுபட்டது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் வலிமை குறைந்தது.

வடக்கில் பெரும்பான்மையான தமிழர்களை கொண்ட காட்டுப்புறங்களை சார்ந்த பகுதிகளில் விடுதலைப் புலிகள் தமது சிறிய அரசை நிர்வகித்து வருகின்றனர். கட்டுப்பாடுகள்இ கடுமையான நடைமுறைகள் என்பன அங்கு முக்கியமானவை. தாம் கைது செய்யப்படும் சந்தர்ப்பங்களில் இறப்பதற்காக பெரும்பாலான போராளிகள் சயனைட் வில்லைகளை கழுத்தில் அணிந்துள்ளதை இங்கு குறிப்பிடலாம். உலகில் தற்கொலைப் படையினரை பயன்படுத்தி வரும் முதலான குழுக்களில் இவர்களும் அடங்குவார்கள். எனினும் பயிற்சிகள் அளிப்பதுஇ சிறார் படைச்சேர்ப்பு போன்ற குற்றச்சாட்டுக்களும் அவர்களின் மேல் உண்டு.

வடக்கில் விடுதலைப் புலிகளுடன் மேற்கொள்ளப்படும் சமர் நீண்டதாகவும்இ கடுமையானதாகவும்இ செலவு மிக்கதாகவும் இருக்கும். வடக்கில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையானது அவர்களை சுவரை நோக்கி தள்ளுவது போன்றது என சிறிலங்காவின் இராணுவத்தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அவர்கள் எதிர்த்தாக்குதலை கடுமையாக நடத்துவார்கள் ஏனெனில் அவர்களுக்கு ஓடுவதற்கு இடமில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

சரத் பென்சேகாவிற்கு முன் பல பணிகள் உள்ளன. அவர் புதிதாக கைப்பற்றப்பட்ட கிழக்கை தக்கவைக்க முயன்று வருகின்றார். மற்றுமொரு சமருக்காக ஆயிரக்கணக்கான படையினரையும் சேர்த்து வருகின்றார். இராணுவத்தில் மேலதிகமாக 20இ000 இளைஞர்களையும்இ யுவதிகளையும் சேர்ப்பதன் மூலம் இராணுவப் பலத்தை 140இ000 ஆக உயர்த்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அரசின் செலவுகளில் ஐந்தில் ஒரு ரூபாய்களை பாதுகாப்பு செலவு விழுங்கி வருகின்றது. இது தேசிய வரவு-செலவுத் திட்டத்தில் பெரும் தொகை.

குறிப்பாக வறுமையான இந்த நாட்டில் இது பெரும் தொகையாகும். அரசு செலவீனங்களை மறந்து வடக்கு - கிழக்கில் தனது ஆதிக்கத்தை மேலும் மேலும் கொண்டு வருவதில் தான் குறியாக உள்ளது என்றே எண்ண தோன்றுகின்றது என முன்னாள் வான்படைத் தளபதி ஹரி குணதிலக்க தெரிவத்துள்ளார். ஆனால் அது மிகுந்த நெருக்கடிகளை ஏற்படுத்தும்இ நீங்கள் வடக்கை நோக்கி நகர்ந்தால் அது மக்களுக்கு மேலதிக அழுத்தங்களை ஏற்படுத்தும் என்பது தான் அதன் அர்த்தம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த வருட ஆரம்பத்தில் 20 விகித பணவீக்கத்தினால் மக்கள் நெருக்கடிகளை சந்தித்துள்ளனர். சிறிலங்காவின் 2007 ஆம் ஆண்டிற்கான எதிர்பார்க்கப்பட்ட பொருளாதார வளர்ச்சியான 6 விகிதம் என்றபோதும் இது தென் ஆசியாவில் நேபாளம் தவிர்ந்த ஏனைய நாடுகளை விட குறைவானது என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது.

நாடு பிளவுபடுவதை விட வறுமையில் நிலையை அடைவது மேலானது என சரத் பொன்சேகா இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற நேர்காணலில் தெரிவித்திருந்தார். எதிரியை நாம் முறியடிக்க வேண்டுமானால்இ நாட்டைப் பாதுகாக்க வேண்டுமானால் நீங்கள் சில தியாகங்களை செய்ய வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

கிழக்கில் அமைதியை நிலைநாட்ட 20இ000 படையினர் தேவை என பொன்சேகா தெரிவித்த போதும் அங்கு இதற்கான பணியை செய்ய 40இ000 படையினர் தேவை என ஏனையோர் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யும் ஒரு வலிமையான திட்டம் தம்மிடம் இருப்பதாகவும்இ இந்த வருட இறுதியில் அங்கு உள்ளுராட்சி சபைத் தேர்தல்களை நடத்தப்போவதாகவும் கடந்த மாதம் அரசு அறிவித்திருந்தது. ஆனால் அரசின் இந்த அழைப்பின் மீது முற்று முழுதான சந்தேகங்களை ஆய்வாளர்களும் அவதானிகளும் தெரிவித்திருந்தனர்.

இடம்பெயர்ந்த மக்களில் பலர் தமது இல்லத்திற்கு திரும்பியுள்ளனர். ஆனால் சில சந்தர்ப்பங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்களின் முகாமுக்கான சேவைகளில் பலவற்றை அதிகாரிகள் நிறுத்தியிருந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அங்குள்ள மக்களை மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளுடன் அவர்கள் விட்டிருந்தனர். சுயாதீனமான அவதானிகள் அங்கு செல்வதற்கு படையினர் தடை விதித்திருந்ததுடன்இ மட்டுப்படுத்தப்பட்ட அனுமதிகளையே வழங்கி வருகின்றனர்.

விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து சென்ற கருணா குழுவிற்கும் அரச படையினருக்கும் இடையில் உறவுகள் உள்ளதாக தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அவர்களுக்கு நேரடியற்ற அல்லது நேரடியான படையினரின் ஆதரவுகள் உள்ளதுடன்இ கடத்தல்கள்இ துன்புறுத்தல்கள் மற்றும் கிழக்கில் நடைபெறும் ஏனைய குற்றங்களிலும் அவர்கள் மீதான சந்தேகம் உண்டு.

விடுதலைப் புலிகள் தாம் கெரில்லா போர் முறைக்கு மாறியுள்ளதாகவும்இ இலகுவான இலக்குகள் மீதான தாக்குதல்கள் மூலம் பொருளாதாரத்தை சீர்குலைக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இருந்தபோதும் கிழக்கில் ஏற்பட்ட பின்னடைவை அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். சில அவதானிகள் அவர்களின் தொடர்ச்சியான வலிமையை குறைத்து மதிப்பிடுகின்றனர். இந்த வருடத்தில் குறைந்தது இரு தடவைகளாவது வான் தாக்குதல்கள் மூலம் அரச படையினரை விடுதலைப் புலிகள் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருந்தனர்.

அதற்குப் பகுதிகளாக எடுத்து வரப்பட்டு காடுகளில் வைத்து பொருத்தப்பட்ட இலகு ரக வானூர்திகளை அவர்கள் பயன்படுத்தியிருந்தனர். ஒரு கட்டத்தில் அவர்கள் கொழும்பிற்குள் ஊடுருவி அதன் வான்பரப்பு முழுவதிலும் பறந்ததுடன்இ இரு எரிபொருள் சேமிப்பு மையங்களையும் தாக்கியிருந்தனர். எனினும் சிறியளவான சேதங்கள் ஏற்பட்டன.

இரு தரப்பும் பேச்சுவார்த்தைக்கு திரும்பி ஒரு அரசியல் தீர்வை காண வேண்டும் என்ற அமெரிக்கா உள்ளிட்ட அனைத்துலக சமூகத்தின் அழுத்தங்கள் எதனையும் சாதிக்கவில்லை.

இந்த காரணங்களால் எப்போது மோதல்கள் ஆரம்பிக்கப் போகின்றன என்பது தொடர்பாக எல்லோரினது பார்வைகளும் வடக்கை நோக்கி திரும்பியுள்ளது. அது ஏற்கனவே ஆரம்பித்து விட்டதாக சிலர் கூறுகின்றனர். சிறு சிறு மோதல்களும்இ எறிகணை வீச்சுக்களும் அங்கு வழமையானவை.

கடந்த ஜூலை மாதம் நடுப்பகுதியில் அரசு கிழக்கில் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவித்த பின்னர் வடபகுதிக் காடுகளுக்குள் ஊடுருவ முனைந்த இராணுவத்தினர் கடுமையான இழப்புக்களை சந்தித்திருந்தனர். இதன் போது விடுதலைப் புலிகளும் இழப்புக்களை சந்தித்திருந்தனர். அதன் சில நாட்களின் பின்னர் விடுதலைப் புலிகள் மன்னார் மாவட்டத்தில் உள்ள இராணுவ நிலைகள் மீது கடும் தாக்குதலை நடத்தியிருந்தனர்.

இந்த போரின் கோர முகமும் வெளியில் தெரிய ஆரம்பித்துள்ளதுஇ அதில் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் காரணங்கள் அற்ற பொரும் தொகையான கடத்தல்களும் அடங்கும்.

ஆதலினால்தான் யாழ்ப்பாணத்தை வதிவிடமாகக் கொண்ட 21 வயதான காப்புறுதி நிறுவன பணியாளரான பிரதீப் அருளாநாதன் துபாய்க்கு செல்ல முயற்சித்து வருகின்றார்.

பல மாதங்களுக்கு முன்னர் அவர் வடக்கில் இருந்து கொழும்புக்கு வந்திருந்தார். பின்னர் நுழைவு அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பித்து அதனையும் பெற்றிருந்தார். அப்போது தான் சிங்கள மக்களை பெரும்பான்மையாக கொண்ட அரசு கடந்த ஜூன் மாதம் தலைநகரத்தில் இருந்த நூற்றுக்கணக்கான தமிழ் மக்களை வெளியேற்றியிருந்தது. அதற்கு பாதுகாப்பை அரசு காரணமாக கூறியிருந்தது.

சிறிலங்காவின் நீதிமன்றம் இதற்கான தடை உத்தரவை வழங்கிய போதும் அது பிரதீப்பை படையினர் தடுத்து வைத்து அவரது சொந்த இடத்திற்கு அனுப்பும் பொருட்டு பாதிவழியில் கொண்டு செல்லும் போதே நிகழ்ந்தது. இதனால் அவர் துபாய்க்கான தனது வானூர்தியை தவறவிட்டிருந்தார்.

தற்போது அவர் மீண்டும் நுளைவு அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளார். எனினும் நுழைவு அனுமதி கிடைக்குமா இல்லையா என்பது தொடர்பாக அவருக்கு எதுவும் தெரியாது.

ஆனால் ஒன்று மட்டும் உறுதியானது அதாவதுஇ தான் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு செல்ல முடியாது என அவர் தெரிவித்ததாக என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : புதினம்

இது நேற்று ஜனார்த்தனன் என்பவரால் பதியப்பட்டுவிட்டது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.