Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரண்டாம் எலிசபெத் ராணியின் வாழ்க்கை: படங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாம் எலிசபெத் ராணியின் வாழ்க்கை: படங்கள்

2 மணி நேரங்களுக்கு முன்னர்
 

ராணி எலிசபெத் II, அன்னி லீபோவிட்ஸ், 2007

பட மூலாதாரம்,ANNIE LEIBOVITZ

ராணி இரண்டாம் எலிசபெத் தனது பொதுவாழ்க்கையை கவனத்தில் கொண்டு வாழ்ந்தார். பிரிட்டனின் நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரின் குழந்தையாகப் பிறந்தது முதல் அரியணை வாரிசானது வரை அவரது ஆட்சியை நாம் திரும்பிப் பார்ப்போம்.

 

1px transparent line

 

ராணியின் தாய் (அப்போது யார்க் டச்சஸ்) அவரது கணவர், கிங் ஆறாம் ஜார்ஜ் (அப்போது டியூக் ஆஃப் யார்க்) மற்றும் அவர்களது மகள் ராணி இரண்டாம் எலிசபெத் (அப்போது எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி வின்ட்சர்) மே 1926 இல் தனது கிறிஸ்டிங்கின் போது

பட மூலாதாரம்,PA MEDIA

 

படக்குறிப்பு,

21 ஏப்ரல் 1926 அன்று லண்டன் பெர்க்லி சதுக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் பிறந்தார் எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி விண்ட்சர். தமது தந்தை, அப்போதைய யார்க் கோமகன் ஆல்பர்ட், மற்றும் தாய் முன்னாள் லேடி எலிசபெத் போவ்ஸ்-லியான் ஆகியோர் அரவணைப்பில் எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி விண்ட்சர்.

 

1px transparent line

 

1929இல் சுமார் மூன்று வயதுடைய இளவரசி எலிசபெத். ஒளிப்படக் கலைஞர் மார்கஸ் ஆடம்ஸ்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

எலிசபெத்தின் இளமைக் காலத்தில், அரியணை அவருக்கு விதிக்கப்பட்டதாக இல்லை.

 

1px transparent line

 

இளவரசி எலிசபெத்தை வின்ட்சரில் அதிகாரி ஒருவரால் வரவேற்கப்பட்டபோது

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ஆனால், எலிசபெத் மிகச் சிறு வயதிலிருந்தே பொறுப்புணர்வுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.

 

1px transparent line

 

1930களில், அரச சகோதரிகளான இளவரசி மார்கரெட் மற்றும் இளவரசி எலிசபெத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

எலிசபெத், 1930இல் பிறந்த அவரது சகோதரி மார்கரெட் ரோஸ் இருவரும் வீட்டிலேயே கல்வி கற்றனர்.

 

1px transparent line

 

இங்கிலாந்தின் மன்னர் ஆறாம் ஜார்ஜ் முடிசூட்டப்பட்ட பிறகு பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் அரச குடும்பம். (இடமிருந்து வலமாக): ராணி எலிசபெத்; இளவரசி எலிசபெத்; ராணி மேரி; இளவரசி மார்கரெட்; மற்றும் அரசர் ஆறாம் ஜார்ஜ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

1936இல் அரசர் எட்டாம் எட்வர்ட் முடியைத் துறந்ததைத் தொடர்ந்து, எலிசபெத்தின் தந்தை அரசர் ஆறாம் ஜார்ஜ் ஆனார். எலிசபெத் அரியணைக்கான வாரிசானார்.

 

1px transparent line

 

இளவரசி எலிசபெத் (வலது) மற்றும் இளவரசி மார்கரெட் ஆகியோர் பிபிசியில் போர்க்கால ஒளிபரப்பின் போது.

பட மூலாதாரம்,TOPICAL PRESS AGENCY / GETTY IMAGES

 

படக்குறிப்பு,

இரண்டாம் உலக போரின் போது, எலிசபெத் மற்றும் அவரது சகோதரி மார்கரெட் விண்ட்சருக்கு அனுப்பப்பட்டனர். இந்தப் படம் பிபிசியில் சில்ட்ரன்ஸ் ஹவர் நிகழ்ச்சியை அவர்கள் நாட்டிற்கு ஒலிபரப்புவதைக் காட்டுகிறது.

 

1px transparent line

 

1940களில், இரண்டாம் உலகப் போரின் போது, தெரியாத இடத்தில், ராணுவ வாகனத்தின் சக்கரத்தை மாற்றும் இளவரசி எலிசபெத்.

பட மூலாதாரம்,AFP

 

படக்குறிப்பு,

இளம் இளவரசி, இரண்டாம் உலகப் போர் முடியும் தருவாயில் துணை பிராந்திய சேவையில் (ATS) சேர்ந்தார், லாரி ஓட்டவும், அதை சீர் செய்யவும் கற்றுக்கொண்டார்.

 

1px transparent line

 

இளவரசி எலிசபெத் (பின்னர் இரண்டாம் எலிசபெத் ராணி) மற்றும் பிலிப் மவுண்ட்பேட்டன் (பின்னர் இளவரசர் பிலிப்) ஆகியோர் தங்கள் திருமண நாளான நவம்பர் 20, 1947 அன்று லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயின் இடைகழியில் இறங்குகிறார்கள்.

பட மூலாதாரம்,BERT HARDY / GETTY IMAGES

 

படக்குறிப்பு,

1947இல் அவர் தமது தூரத்து உறவினரான ஃபிலிப் மவுன்ட்பேட்டனை மணந்தார். ஃபிலிப் மவுன்ட்பேட்டன் எடின்பரோ கோமகன் ஆனார்.

 

1px transparent line

 

1948இல் இளவரசி எலிசபெத் தனது மகன் இளவரசர் சார்ல்ஸின் கிறிஸ்டெனிங் விழாவிற்குப் பிறகு பக்கிங்ஹாம் அரண்மனையில் வைத்திருக்கிறார்

பட மூலாதாரம்,PA MEDIA

 

படக்குறிப்பு,

இவர்களுடைய முதல் குழந்தை சார்ல்ஸ் 1948ஆம் ஆண்டு பிறந்தார். அவரைத் தொடர்ந்து சார்ல்ஸின் சகோதரி ஆன் 1950ஆம் ஆண்டு பிறந்தார்.

 

1px transparent line

 

ராணி எலிசபெத் மற்றும் இளவரசி எலிசபெத் ஆகியோர் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் இயன் ஹெட்வொர்த் கில்மோருக்கு நடந்த திருமணத்தில் கலந்துகொள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு வரும்போது தொப்பிகளைப் பிடித்துக் கொண்டனர்.

பட மூலாதாரம்,PA MEDIA

 

படக்குறிப்பு,

எலிசபெத் தனது வாழ்நாள் முழுவதும் தனது தாயுடன் மிகவும் நெருக்கமாக இருந்தார். அவர்கள் 1951 இல் ஒரு திருமணத்தில் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட படம்

 

1px transparent line

 

இளவரசி எலிசபெத் மற்றும் எடின்பரோ கோமகன் ஆகியோர் கென்யா மக்களிடமிருந்து அவர்களின் திருமணப் பரிசாக, ராயல் லாட்ஜ், சகானா மைதானத்தில் உள்ள பழமையான பாலத்தில் இடைநிறுத்தப்பட்டனர்.

பட மூலாதாரம்,PA MEDIA

 

படக்குறிப்பு,

ஜனவரி 1952இல், எலிசபெத் உடல்நிலை சரியில்லாமல் இருந்த தமது தந்தைக்குப் பதிலாக ஒரு வெளிநாட்டுப் பயணத்தை ஃபிலிப்புடன் சேர்ந்து மேற்கொண்டார். சில நாட்களில் அரசர் தூக்கத்தில் உயிரிழந்தார்

 

1px transparent line

 

ராணி தனது தந்தை ஆறாம் ஜார்ஜின் மரணத்தைத் தொடர்ந்து நைரோபியிலிருந்து பிரிட்டனுக்குத் திரும்புகிறார். மேலும் அரசியல்வாதிகளால் (இரண்டாவது முதல் ஆர் வரை) லார்ட் வூல்டன், அந்தோனி ஈடன், கிளெமென்ட் அட்லீ மற்றும் வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோர் அவரைச் சந்திக்கின்றனர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

எலிசபெத் உடனடியாக நாடு திரும்பினார். புதிய ராணிக்கு அப்போது வயது 25.

 

1px transparent line

 

ராணி மேரி (நடுவில்) அவரது மகன் ஆறாம் ஜார்ஜின் உடல் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலுக்கு கொண்டு வரப்படுவதைப் பார்க்கிறார். அவர் பக்கத்தில், ராணியின் அம்மா, அவர் கண்கள் சோகத்தில் மூடின. ராணி இரண்டாம் எலிசபெத், முக்காடு போட்டு, பாட்டிக்குப் பின்னால் நிற்கிறார்.

பட மூலாதாரம்,PA MEDIA

 

படக்குறிப்பு,

முதலில் அரசரின் இறுதி ஊர்வலம் வந்தது. இங்கே ராணி மேரி, ஆறாம் ஜார்ஜின் உடல் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலய அரங்குக்கு கொண்டு வரப்படுவதைப் பார்க்கிறார். ராணி எலிசபெத் தனது பாட்டியின் பின்னால் நிற்கிறார். ராணியின் தாய் வலது புறத்தில் இருக்கிறார்

 

1px transparent line

 

1953ஆம் ஆண்டு, ராணி இரண்டாம் எலிசபெத் முடிசூட்டு விழாவின்போது.

பட மூலாதாரம்,UNIVERSAL HISTORY ARCHIVE

 

படக்குறிப்பு,

பின்னர், ஜூன் 1953இல், வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்தில் எலிசபெத் ராணி ஆக முடிசூட்டப்பட்டார்

 

1px transparent line

 

முடிசூட்டு விழாவைத் தொடர்ந்து, ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் எடின்பர்க் பிரபு ஆகியோர் பக்கிங்ஹாம் அரண்மனை பால்கனியில் தோன்றி, ஆரவாரம் செய்த கூட்டத்தினரை நோக்கி கை அசைத்தனர்.

பட மூலாதாரம்,PA MEDIA

 

படக்குறிப்பு,

முடிசூட்டு விழாவைத் தொடர்ந்து, ராணி இரண்டாம் எலிசபெத், எடின்பரோ கோமகன் பக்கிங்ஹாம் அரண்மனை பால்கனியில் தோன்றி, ஆரவாரம் செய்த கூட்டத்தினரை நோக்கி கை அசைத்தனர்.

 

1px transparent line

 

ராணி இரண்டாம் எலிசபெத், பிரெஞ்சு தலைநகரான பாரிஸில் 8 ஏப்ரல் 1957 அன்று ஓபராவில் உள்ள பெரிய படிக்கட்டுகளில் ஏறுகிறார். இந்த படம் 15 தனித்தனி படங்களின் தொகுப்பாகும்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

பிரிட்டன் போருக்குப் பிந்தைய சிக்கனத்தை இன்னும் தாங்கிக் கொண்டிருந்தாலும், சில வர்ணனையாளர்கள் முடிசூட்டு விழாவை ஒரு புதிய எலிசபெத் யுகத்தின் விடியல் என்று வர்ணித்தனர். இங்கே, ராணி இரண்டாம் எலிசபெத் பிரான்சின் பாரிஸில் உள்ள ஓபராவில் பெரிய படிக்கட்டுகளில் ஏறுகிறார்

 

1px transparent line

 

1957ஆம் ஆண்டில், ராணி தொலைக்காட்சியில் பல கிறிஸ்துமஸ் தின ஒளிபரப்புகளில் முதன்மையானவர்

பட மூலாதாரம்,PA MEDIA

 

படக்குறிப்பு,

1957ஆம் ஆண்டில், பல கிறிஸ்துமஸ் தின ஒளிபரப்புகளில் முதன்மையான உரையை ஆற்றினார் ராணி

 

1px transparent line

 

பிரிட்டிஷ் சமூகம் மற்றும் முடியாட்சிக்கான அணுகுமுறைகள் மாறிக்கொண்டே இருந்தன, மேலும் "முடியாட்சி" என்ற சொல் படிப்படியாக "அரச குடும்பம்" என்று மாற்றப்பட்டது. 1958இல் சசெக்ஸின் க்ராவ்லி நியூ டவுனில் உள்ள திரு மற்றும் திருமதி எடி ஹம்மண்ட் வீட்டிற்குச் சென்றபோது, ராணி அண்டை வீட்டாரின் பார்வைக்கு ஆளானார்.

பட மூலாதாரம்,PA MEDIA

 

படக்குறிப்பு,

பிரிட்டிஷ் சமூகம் மற்றும் முடியாட்சி தொடர்பான அணுகுமுறைகள் மாறிக்கொண்டே இருந்தன. "முடியாட்சி" என்ற சொல் படிப்படியாக "அரச குடும்பம்" என்று மாற்றப்பட்டது. 1958இல் சஸ்ஸெக்ஸின் க்ராவ்லி நியூ டவுனில் உள்ள எடி ஹம்மண்ட் தம்பதி வீட்டிற்குச் சென்றபோது, ராணி அண்டை வீட்டாரின் பார்வைக்கு ஆளானார்.

 

1px transparent line

 

உத்தியோகபூர்வ பணிகளுக்கு இடையில் எலிசபெத் தனது குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்டார் - இங்கே தனது மகள் இளவரசி அன்னேவுடன் ஃப்ராக்மோர், வின்ட்சர் கோட்டையில்

பட மூலாதாரம்,PA MEDIA

 

படக்குறிப்பு,

அலுவல்பூர்வ பணிகளுக்கு இடையில் எலிசபெத் தனது குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்டார் - இங்கே தனது மகள் இளவரசி ஆனுடன் ஃப்ராக்மோர், வின்ட்சர் கோட்டையில்

 

1px transparent line

 

1966ஆம் ஆண்டில், வெம்ப்லியில், தனது அணியை மேற்கு ஜெர்மனிக்கு எதிராக 4-2 உலகக் கோப்பை இறுதி வெற்றிக்கு அழைத்துச் சென்ற பிறகு, இங்கிலாந்து கேப்டன் பாபி மூருக்கு ஜூல்ஸ் ரிமெட் டிராபியை ராணி வழங்கினார்.

பட மூலாதாரம்,MIRRORPIX / GETTY IMAGES

 

படக்குறிப்பு,

1966ஆம் ஆண்டில், வெம்ப்லியில், தனது அணியை மேற்கு ஜெர்மனிக்கு எதிராக 4-2 என்ற கணக்கில் உலகக் கோப்பை இறுதி வெற்றிக்கு அழைத்துச் சென்ற பிறகு, இங்கிலாந்து கேப்டன் பாபி மூருக்கு ஜூல்ஸ் ரிமெட் டிராபியை ராணி வழங்கினார்.

 

1px transparent line

 

ராணியும் இளவரசர் பிலிப்பும் அபெர்ஃபானைப் பார்வையிடுகிறார்கள். 29 அக்டோபர் 1966.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

29 அக்டோபர் 1966 அன்று, நிலக்கரி முனை நிலச்சரிவுக்கு பாண்ட்கிளாஸ் ஜூனியர் பள்ளியில் 144 பேர் பலியான எட்டு நாட்களுக்குப் பிறகு, வெல்ஷ் கிராமமான அபெர்ஃபானுக்கு ராணி விஜயம் செய்தார். பலியானவர்களில் 116 குழந்தைகள். ராணி மிகவும் உணர்ச்சிவசப்பட்டார். அது அவரது ஆட்சியின் மிகவும் உணர்ச்சிகரமான தருணங்களில் ஒன்றாக இது அமைந்தது.

 

1px transparent line

 

1969ஆம் ஆண்டில், அரச குடும்பம் என்ற ஆவணப்படம் முதன்முதலில் ஒளிபரப்பப்பட்டது. ராணி மற்றும் அவரது குடும்பத்தினரின் தனிப்பட்ட மற்றும் பொது வாழ்க்கையில் ஒரு வருடத்தின் முன்னோடியில்லாத காட்சியை இது பார்வையாளர்களுக்கு வழங்கியது

பட மூலாதாரம்,MIRRORPIX / GETTY IMAGES

 

படக்குறிப்பு,

1969ஆம் ஆண்டில், அரச குடும்பம் என்ற ஆவணப்படம் முதன்முதலில் ஒளிபரப்பப்பட்டது. ராணி மற்றும் அவரது குடும்பத்தினரின் தனிப்பட்ட மற்றும் பொது வாழ்க்கையில் ஒரு வருடத்தின் முன்னோடியில்லாத காட்சியை இது பார்வையாளர்களுக்கு வழங்கியது

 

கேனர்ஃபோன் கோட்டையில் நடந்த ஒரு விழாவில் தனது மகன் இளவரசர் சார்ல்ஸுக்கு வேல்ஸ் இளவரசருக்கான மகுடத்தை சூட்டினார் ராணி. அவர் ஒன்பது வயதில் அப்பட்டத்தைப் பெற்றார், ஆனால் இந்தப் பட்டத்தின் முக்கியத்துவத்தை அவர் முழுமையாகப் புரிந்துகொண்ட பிறகே இளவரசருக்கான மகுடம் சூட்டும் விழா நடைபெறவேண்டும் என்று ராணி வலியுறுத்தியிருந்தார்.

பட மூலாதாரம்,PA MEDIA

 

படக்குறிப்பு,

கேனர்ஃபோன் கோட்டையில் நடந்த ஒரு விழாவில் தனது மகன் இளவரசர் சார்ல்ஸுக்கு வேல்ஸ் இளவரசருக்கான மகுடத்தை சூட்டினார் ராணி. அவர் ஒன்பது வயதில் அப்பட்டத்தைப் பெற்றார், ஆனால் இந்தப் பட்டத்தின் முக்கியத்துவத்தை அவர் முழுமையாகப் புரிந்துகொண்ட பிறகே இளவரசருக்கான மகுடம் சூட்டும் விழா நடைபெறவேண்டும் என்று ராணி வலியுறுத்தியிருந்தார்.

 

1px transparent line

 

ராணியின் திருமண வெள்ளிவிழா கொண்டாட்டங்களின் போது பயன்படுத்துவதற்காக பல புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக எச்.எம்.ஒய் பிரிட்டானியா கப்பலில் 1972ல் படம் பிடிக்கப்பட்ட ராணி.

பட மூலாதாரம்,LICHFIELD VIA GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ராணியின் திருமண வெள்ளிவிழா கொண்டாட்டங்களின் போது பயன்படுத்துவதற்காக பல புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக எச்.எம்.ஒய் பிரிட்டானியா கப்பலில் 1972ல் படம் பிடிக்கப்பட்ட ராணி.

 

அவரது ஆட்சி முழுவதும், ராணி தனது பக்கத்தில் கோர்கிஸுடன் சித்தரிக்கப்படுகிறார். வருங்கால ஆறாம் ஜார்ஜ் தனது மகள்களுக்காக 1933இல் டூக்கி என்ற கோர்கியை வாங்கியபோது இந்த இனத்துடனான அரச குடும்பத்தின் உறவு தொடங்கியது.

பட மூலாதாரம்,PA MEDIA

 

படக்குறிப்பு,

அவரது ஆட்சி முழுவதும், ராணி தனது பக்கத்தில் கோர்கி ரக செல்லப்பிராணிகளுடன் அதிகம் காணப்பட்டார். வருங்கால ஆறாம் ஜார்ஜ் தனது மகள்களுக்காக 1933இல் டூக்கி என்ற கோர்கியை வாங்கியபோது இந்த இனத்துடனான அரச குடும்பத்தின் உறவு தொடங்கியது.

 

1px transparent line

 

ராணி அரியணைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதை ஒட்டி 1977ல் நாடு வெள்ளி விழா கொண்டாட்டங்களில் ஈடுபட்டது. ராணி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது உற்சாகமான கூட்டத்தைச் சந்தித்தார்.

பட மூலாதாரம்,PA MEDIA

 

படக்குறிப்பு,

ராணி அரியணைக்கு வந்து 25 ஆண்டுகள் ஆனதை ஒட்டி 1977ல் நாடு வெள்ளி விழா கொண்டாட்டங்களில் ஈடுபட்டது. ராணி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது உற்சாகமான கூட்டத்தைச் சந்தித்தார்.

 

1px transparent line

 

மாட்சிமை பொருந்திய ராணி, 10 வாரங்களில் 36 மாவட்டங்களுக்குச் சென்றார் - அவான் உட்பட, அங்கு மக்கள் கோடைக்கலா நேரத்தை அதிகம் பயன்படுத்துவதை அவர் கவனித்தார். அந்தக் கொண்டாட்டத்தில் அவரும் உலகம் முழுவதும் 56,000 மைல்கள் பயணம் செய்தார்.

பட மூலாதாரம்,PA MEDIA

 

படக்குறிப்பு,

மாட்சிமை பொருந்திய ராணி, 10 வாரங்களில் அவான் உள்ளிட்ட 36 கவுன்டிகளுக்கு பயணித்தார். அங்கு மக்கள் கோடைக் காலத்தை கொண்டாடுவதை அவர் கவனித்தார். வெள்ளிவிழா கொண்டாட்டத்தை ஒட்டி ராணி உலகம் முழுவதும் 56,000 மைல்கள் பயணம் செய்தார்.

 

ராணியும் கோமகனும் பார்படோசை அடைந்தபோது, அவர்கள் சென்ற 'ராயல் யாக்ட் பிரிட்டானியா' சொகுசுக் கப்பல் அருகே கான்கார்ட் விமானம் தாழ்வாகப் பறந்தது. ராணியும் கோமகனும் அதைப் பார்த்து கையசைக்கின்றனர்.

பட மூலாதாரம்,PA MEDIA

 

படக்குறிப்பு,

ராணியும் கோமகனும் பார்படோசை அடைந்தபோது, அவர்கள் சென்ற 'ராயல் யாக்ட் பிரிட்டானியா' சொகுசுக் கப்பல் அருகே கான்கார்ட் விமானம் தாழ்வாகப் பறந்தது. ராணியும் கோமகனும் அதைப் பார்த்து கையசைக்கின்றனர்.

 

1px transparent line

 

ஆண்டுதோறும், ராணியின் பொதுப் பணிகள் தொடர்ந்தன. ராயல் நியூசிலாந்து பாலினேசியன் திருவிழாவின் தொடக்கத்தில் மாட்சிமை பொருந்திய ராணி மற்றும் எடின்பரோ கோமகன், நியூசிலாந்து மவோரி மக்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டனர்.

பட மூலாதாரம்,PA MEDIA

 

படக்குறிப்பு,

ஆண்டுதோறும், ராணியின் பொதுப் பணிகள் தொடர்ந்தன. ராயல் நியூசிலாந்து பாலினேசியன் திருவிழாவின் தொடக்கத்தில் மாட்சிமை பொருந்திய ராணி மற்றும் எடின்பரோ கோமகன், நியூசிலாந்து மவோரி மக்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டனர்.

 

1px transparent line

 

ஆகஸ்ட் 1979இல், இளவரசர் பிலிப்பின் மாமாவும் ராணியின் உறவினருமான லூயிஸ் மவுண்ட்பேட்டன், பர்மாவின் 1வது ஏர்ல் மவுண்ட்பேட்டன், அயர்லாந்தில் தனது படகில் இருந்தபோது ஐஆரே வெடிகுண்டினால் கொல்லப்பட்டார். நெருங்கிய குடும்ப உறுப்பினராக இருந்ததோடு, மவுண்ட்பேட்டன் பிரபு பல மூத்த இராணுவ பதவிகளை வகித்துள்ளார். மேலும் அவரது இறுதிச் சடங்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெற்றது.

பட மூலாதாரம்,PA MEDIA

 

படக்குறிப்பு,

ஆகஸ்ட் 1979இல், இளவரசர் ஃபிலிப்பின் மாமாவும் ராணியின் உறவினருமான லூயி மவுன்ட்பேட்டன், பர்மாவின் 1வது ஏர்ல் மவுன்ட்பேட்டன், அயர்லாந்தில் தனது படகில் சென்றபோது ஐ.ஆர்.ஏ. அமைப்பின் வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். நெருங்கிய குடும்ப உறுப்பினராக இருந்ததோடு, மவுன்ட்பேட்டன் பிரபு பல மூத்த ராணுவ பதவிகளை வகித்துள்ளார். அவரது இறுதிச் சடங்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடந்தது.

 

1px transparent line

 

1981இல், எலிசபெத்தின் மூத்த மகன் சார்ல்ஸ் டயானா ஸ்பென்சரை மணந்தார். சார்லஸ் மற்றும் டயானா விவாகரத்துக்கு முன் வில்லியம் மற்றும் ஹாரி என்ற இரு மகன்களைப் பெற்றனர். 1997 இல் பாரிஸில் நடந்த கார் விபத்தில் டயானா உயிரிழந்தார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

1981இல், எலிசபெத்தின் மூத்த மகன் சார்ல்ஸ், டயானா ஸ்பென்சரை மணந்தார். சார்லஸ் - டயானா தம்பதியர் தங்கள் விவாகரத்துக்கு முன் வில்லியம் மற்றும் ஹாரி என்ற இரு மகன்களைப் பெற்றனர். 1997 இல் பாரிஸில் நடந்த கார் விபத்தில் டயானா உயிரிழந்தார்

 

1px transparent line

 

ராணி தனது கிறிஸ்துமஸ் உரையின் போது 1992 ஆம் ஆண்டை தனது "ஆன்னஸ் ஹாரிபிலிஸ்" என்று விவரித்தார். ஓராண்டில் தனது மூன்று குழந்தைகளின் திருமணங்கள் முறிந்ததையும் வின்ட்சர் கோட்டையில் தீ விபத்து ஏற்பட்டதையும் கண்ட வருத்தத்தை வெளிப்படுத்தினார்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ராணி தனது கிறிஸ்துமஸ் உரையின் போது 1992 ஆம் ஆண்டை தனது "ஆன்னஸ் ஹாரிபிலிஸ்" என்று விவரித்தார். அந்த ஓராண்டில் தனது மூன்று குழந்தைகளின் திருமணங்கள் முறிந்ததையும் வின்ட்சர் கோட்டையில் தீ விபத்து ஏற்பட்டதையும் கண்ட வருத்தத்தை அவர் வெளிப்படுத்தினார்.

 

1px transparent line

 

அரண்மனையின் பழுதுபார்ப்புக்கு அரசாங்கம் பணம் செலுத்துவதற்கு எதிராக பொதுமக்களின் கருத்து இருந்தது. முடியாட்சி தற்காப்பு நிலையில் இருந்தது. நிதி திரட்டுவதற்காக பக்கிங்ஹாம் அரண்மனை பார்வையாளர்களுக்குத் திறக்கப்பட்டது. பிஸ்லியில் உள்ள ராணுவ துப்பாக்கி சங்கத்துடன் ராணி ஒரு நிலையான எஸ்ஏ80 ரக துப்பாக்கியில் கடைசியாகச் சுட்டார்.

பட மூலாதாரம்,DAVID COOPER/ALAMY

 

படக்குறிப்பு,

அரண்மனையின் பழுதுபார்ப்புக்கு அரசாங்கம் பணம் செலுத்துவதற்கு எதிராக பொதுமக்களின் கருத்து இருந்தது. முடியாட்சி தற்காப்பு நிலையில் இருந்தது. நிதி திரட்டுவதற்காக பக்கிங்ஹாம் அரண்மனை பார்வையாளர்களுக்குத் திறக்கப்பட்டது. பிஸ்லியில் உள்ள ராணுவ துப்பாக்கி சங்கத்தில் ராணி ஒரு நிலையான எஸ்ஏ80 ரக துப்பாக்கியில் கடைசியாகச் சுட்டார்.

 

1px transparent line

 

1997இல் வேல்ஸ் இளவரசி டயானாவின் மரணத்திற்குப் பிறகு, ராணி பொதுவில் தோன்றாததற்காக விமர்சனங்களை எதிர்கொண்டார். இறுதியில் அவர் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த அஞ்சலியைப் பார்த்தார். அதோடு தேசத்திற்கு நேரடி ஒளிபரப்பு செய்தார்

பட மூலாதாரம்,PA MEDIA

 

படக்குறிப்பு,

1997இல் வேல்ஸ் இளவரசி டயானாவின் மரணத்திற்குப் பிறகு, ராணி பொதுவில் தோன்றாததற்காக விமர்சனங்களை எதிர்கொண்டார். இறுதியில் அவர் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த அஞ்சலியைப் பார்த்தார். அதோடு தேசத்திற்கு நேரடி ஒளிபரப்பு செய்தார்

 

அரச குடும்பம் பொதுமக்களைச் சந்திப்பதற்கு மிகவும் நெருக்கமான, முறைசாரா அணுகுமுறையை முயன்று பார்த்த நேரத்தில், கிளாஸ்கோவில் உள்ள கேஸில்மில்க் பகுதியில் உள்ள தனது வீட்டில் ராணி திருமதி சூசன் மெக்கரோனுடன் தேநீர் அருந்தினார்.

பட மூலாதாரம்,PA MEDIA

 

படக்குறிப்பு,

அரச குடும்பம் பொதுமக்களைச் சந்திப்பதற்கு மிகவும் நெருக்கமான, முறைசாரா அணுகுமுறையை முயன்று பார்த்த நேரத்தில், கிளாஸ்கோவில் உள்ள கேஸில்மில்க் பகுதியில் உள்ள தனது வீட்டில் ராணி திருமதி சூசன் மெக்கரோனுடன் தேநீர் அருந்தினார்.

 

1px transparent line

 

2000ஆம் ஆண்டில், ராணியின் தாய் தனது 100 வது பிறந்தநாளைக் கொண்டாடினார் - இங்கே அவரது மகள்கள் இளவரசி மார்கரெட் மற்றும் ராணி எலிசபெத் ஆகியோருடன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

2000ஆம் ஆண்டில், ராணியின் தாய் தனது 100 வது பிறந்தநாளைக் கொண்டாடினார் - இங்கே அவரது மகள்கள் இளவரசி மார்கரெட் மற்றும் ராணி எலிசபெத் ஆகியோருடன்

 

2002ஆம் ஆண்டில், ராணி தனது சகோதரி இளவரசி மார்கரெட் மற்றும் அவரது தாயார் ஆகியோரின் மரணத்தை எதிர்கொண்டார்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

2002ஆம் ஆண்டில், ராணி தனது சகோதரி இளவரசி மார்கரெட் மற்றும் அவரது தாயார் ஆகியோரின் மரணத்தை எதிர்கொண்டார்.

 

1px transparent line

 

அந்த கோடையில் ராணி தனது பொன்விழாவைக் கொண்டாடியபோது பெரும் ஆதரவை அனுபவித்தார். ஜூன் 4 அன்று ஜூபிலி மாலையில் ஓர் அணிவகுப்புக்கு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வந்திருந்தனர். தி மாலில் 10 லட்சம் மக்கள் குவிந்தனர்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

அந்த கோடையில் ராணி தனது பொன்விழாவைக் கொண்டாடியபோது பெரும் ஆதரவை அனுபவித்தார். ஜூன் 4 அன்று ஜூபிலி மாலையில் ஓர் அணிவகுப்புக்கு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வந்திருந்தனர். தி மாலில் 10 லட்சம் மக்கள் குவிந்தனர்.

 

1px transparent line

 

இளவரசர் சார்ல்ஸ் மற்றும் கமிலா பார்க்கர் பவுல்ஸ் திருமணம், 2005

பட மூலாதாரம்,PA MEDIA

 

படக்குறிப்பு,

2005ஆம் ஆண்டில், ராணி எலிசபெத்தின் மூத்த மகன் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். இளவரசர் சார்ல்ஸ் மற்றும் கமிலா பார்க்கர் பவுல்ஸ் வின்ட்சர் கில்டாலில் ஒரு சிவில் விழாவில் திருமணம் செய்து கொண்டனர். அதைத் தொடர்ந்து விண்ட்சர் கோட்டையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் ஆசீர்வாதம் பெற்றனர்

 

1px transparent line

 

எலிசபெத், எடின்பர்க் டியூக், வேல்ஸ் இளவரசர் மற்றும் டச்சஸ் ஆஃப் கார்ன்வால் ஆகியோர் அபெர்டீன்ஷயரில் நடந்த பிரேமர் ஹைலேண்ட் கேம்ஸில் ஒரு தருணத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள்

பட மூலாதாரம்,PA MEDIA

 

படக்குறிப்பு,

எலிசபெத், எடின்பரோ கோமகன், வேல்ஸ் இளவரசர் மற்றும் டச்சஸ் ஆஃப் கார்ன்வால் ஆகியோர் அபெர்டீன்ஷயரில் நடந்த பிரேமர் ஹைலேண்ட் கேம்ஸில் ஒரு தருணத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள்

 

2007ஆம் ஆண்டில், ரோஹாம்டனில் லான் டென்னிஸ் சங்கத்தின் புதிய தலைமையகத்தைத் திறக்கும் போது, ராணி மழையில் இருந்து தஞ்சம் அடைவது படம் பிடிக்கப்பட்டது.

பட மூலாதாரம்,PA MEDIA

 

படக்குறிப்பு,

2007ஆம் ஆண்டில், ரோஹாம்டனில் லான் டென்னிஸ் சங்கத்தின் புதிய தலைமையகத்தைத் திறக்கும் போது, ராணி மழையில் இருந்து தஞ்சம் அடைவது படம் பிடிக்கப்பட்டது.

 

1px transparent line

 

ராணி தனது அதிகாரபூர்வ 80வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஓர் உரையில் முதுமை பற்றிய க்ரூச்சோ மார்க்ஸின் கட்டளையை மேற்கோள் காட்டினார்: "யாவரும் வயதாகலாம்; நீங்கள் செய்ய வேண்டியது நீண்ட காலம் வாழ வேண்டியது தான்"

பட மூலாதாரம்,PA MEDIA

 

படக்குறிப்பு,

ராணி தனது அதிகாரபூர்வ 80வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஓர் உரையில் முதுமை பற்றிய க்ரூச்சோ மார்க்ஸின் கட்டளையை மேற்கோள் காட்டினார்: "எல்லோருக்கும் வயதாகலாம்; நீங்கள் செய்ய வேண்டியது நீண்ட காலம் வாழ வேண்டியது தான்"

 

1px transparent line

 

2011ஆம் ஆண்டு அவரது பேரன் இளவரசர் வில்லியம் மற்றும் கேத்தரின் மிடில்டனுக்கு திருமணம் நடந்தது அவரது பிற்கால மகிழ்ச்சியான நிகழ்வுகளில் இது ஒன்று. இங்கே இளவரசர் வில்லியமும் அவரது புதிய மணமகளும் ராணியை வணங்குகிறார்கள்

பட மூலாதாரம்,PA MEDIA

 

படக்குறிப்பு,

2011ஆம் ஆண்டு அவரது பேரன் இளவரசர் வில்லியம் மற்றும் கேத்தரின் மிடில்டனுக்கு திருமணம் நடந்தது. அவரது பிற்கால மகிழ்ச்சியான நிகழ்வுகளில் இது ஒன்று. இங்கே இளவரசர் வில்லியமும் அவரது புதிய மணமகளும் ராணியை வணங்குகிறார்கள்

 

1px transparent line

 

ஆங்கிலேசியில் உள்ள ஒரு காற்று வீசும் ஆர்ஏஎஃப் பள்ளத்தாக்குக்கு வந்தவுடன் ராணி தனது தொப்பியை இழந்தார். அங்கு அவரும் இளவரசர் பிலிப்பும் இளவரசர் வில்லியமை சந்தித்தனர். அந்த நேரத்தில் அவர் தளத்திற்கு அனுப்பப்பட்டார்.

பட மூலாதாரம்,PA MEDIA

 

படக்குறிப்பு,

ஆங்கிலேசியில் உள்ள ஒரு காற்று வீசும் ஆர்ஏஎஃப் பள்ளத்தாக்குக்கு வந்தவுடன் ராணி தனது தொப்பியை இழந்தார். அங்கு அவரும் இளவரசர் பிலிப்பும் இளவரசர் வில்லியமை சந்தித்தனர். அந்த நேரத்தில் அவர் தளத்திற்கு அனுப்பப்பட்டார்.

 

லெய்செஸ்டர் விஜயம் 2012இல் இங்கிலாந்தின் 60வது ஆண்டு வைர விழா சுற்றுப்பயணத்தின் தொடக்கத்தைக் குறித்தது.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

லெய்செஸ்டர் விஜயம். 2012இல் இங்கிலாந்தின் 60வது ஆண்டு வைர விழா சுற்றுப்பயணத்தின் தொடக்கத்தைக் குறித்தது.

 

1px transparent line

 

இதைத் தொடர்ந்து லண்டன் ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் நடிகர் டேனியல் கிரெய்க் நடித்த மற்றொரு பிரிட்டிஷ் ஐகானான ஜேம்ஸ் பாண்டுடன் படமாக்கப்பட்ட காட்சியில் தோன்றினார்.

 

படக்குறிப்பு,

இதைத் தொடர்ந்து லண்டன் ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் நடிகர் டேனியல் கிரெய்க் நடித்த மற்றொரு பிரிட்டிஷ் நட்சத்திரமான ஜேம்ஸ் பாண்டுடன் படமாக்கப்பட்ட காட்சியில் தோன்றினார்.

 

1px transparent line

 

முதல் அரச அஸ்காட் வெற்றியாளரை உரிமையாளராக அனுபவித்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு, குயின்ஸ் ஹார்ஸ் எஸ்டிமேட் 207வது தங்கக் கோப்பையை வென்றது, அவருக்கும் அவரது பந்தய மேலாளர் ஜான் வாரனுக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

பட மூலாதாரம்,PA MEDIA

 

படக்குறிப்பு,

முதல் அரச அஸ்காட் குதிரை பந்தயத்தின் வெற்றியாளராகி 60 ஆண்டுகளுக்குப் பிறகு, குயின்ஸ் ஹார்ஸ் எஸ்டிமேட் 207வது தங்கக் கோப்பையை வென்றது, அவருக்கும் அவரது பந்தய மேலாளர் ஜான் வாரனுக்கும் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

 

1px transparent line

 

9 செப்டம்பர் 2015 அன்று 17:30 பிரிட்டன் நேரத்தில், எலிசபெத் 23,226 நாட்கள், 16 மணி நேரம் மற்றும் தோராயமாக 30 நிமிடங்கள் ஆட்சி செய்தார் - அவரது கொள்ளுப்பாட்டி மகாராணி விக்டோரியாவின் ஆட்சியை மிஞ்சினார். அவர் ஸ்காட்லாந்தில் ஒரு புதிய ரயில் பாதையைத் திறந்து வைத்தார்

பட மூலாதாரம்,PA MEDIA

 

படக்குறிப்பு,

9 செப்டம்பர் 2015 அன்று 17:30 பிரிட்டன் நேரத்தில், எலிசபெத் 23,226 நாட்கள், 16 மணி நேரம் மற்றும் தோராயமாக 30 நிமிடங்கள் ஆட்சி செய்தார் - அவரது கொள்ளுப்பாட்டி மகாராணி விக்டோரியாவின் ஆட்சியை மிஞ்சினார். அவர் ஸ்காட்லாந்தில் ஒரு புதிய ரயில் பாதையைத் திறந்து வைத்தார்

 

1px transparent line

 

ஜூன் 2016இல் ராணி தனது அதிகாரபூர்வ பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்காக அரச குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுடன் இணைந்தார். அந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் 90 வயதை எட்டினார்

பட மூலாதாரம்,PA MEDIA

 

படக்குறிப்பு,

ஜூன் 2016இல் ராணி தனது அதிகாரபூர்வ பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்காக அரச குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களுடன் இணைந்தார். அந்த ஆண்டின் தொடக்கத்தில் அவர் 90 வயதை எட்டினார்

 

1px transparent line

 

எடின்பர்க் டியூக் ஓய்வு பெற்ற பிறகு, ராணி தனது பொதுப் பணிகளைத் தொடர்ந்தார். ராணி தனது குதிரை ஸ்பார்க்லர் 2018இல் ராயல் வின்ட்சர் குதிரை கண்காட்சியில் போட்டியிட்டதைப் பார்த்தார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

எடின்பரோ கோமகன் ஓய்வுக்குப் பிறகு, ராணி தனது பொதுப் பணிகளைத் தொடர்ந்தார். ராணி தனது குதிரை 'ஸ்பார்க்லர்' 2018இல் ராயல் வின்ட்சர் குதிரை பந்தயத்தில் போட்டியிட்டதைப் பார்வையிட்டார்.

 

1px transparent line

 

அவரது குடும்பம் வளர்ந்தபோது மகிழ்ச்சி ஏற்பட்டது - இங்கே அவர் சசெக்ஸின் டியூக் மற்றும் டச்சஸ், அவர்களின் மகன் ஆர்ச்சி மற்றும் டச்சஸின் தாய் டோரியா ராக்லாண்ட் ஆகியோருடன் படம்பிடிக்கப்பட்டுள்ளார். ஆனால் குடும்பத்தில் தொடர்ந்து அழுத்தங்கள் இருந்தன - இளவரசர் ஆண்ட்ரூவின் அமெரிக்க நிதியாளர் மற்றும் தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான நட்பு மற்றும் அரச குடும்பத்தில் இளவரசர் ஹாரியின் வளர்ந்து வரும் ஏமாற்றம் ஆகியவை அடங்கும்.

பட மூலாதாரம்,CHRIS ALLERTON / SUSSEXROYAL

 

படக்குறிப்பு,

ராணியின் குடும்பம் வளர்ந்தபோது மகிழ்ச்சி ஏற்பட்டது - இங்கே அவர் சஸ்ஸெக்ஸின் கோமகன் மற்றும் சீமாட்டி மேகனுக்குப் பிறந்த மகன் ஆர்ச்சி, மேகனின் தாய் டோரியா ராக்லாண்ட் ஆகியோருடன் படம்பிடிக்கப்பட்டுள்ளார். ஆனால் குடும்பத்தில் தொடர்ந்து அழுத்தங்கள் இருந்தன - இளவரசர் ஆண்ட்ரூவின் அமெரிக்க நிதியாளர் மற்றும் தண்டனை பெற்ற பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான நட்பு மற்றும் அரச குடும்பத்தில் இளவரசர் ஹாரியின் வளர்ந்து வரும் ஏமாற்றம் ஆகியவை அடங்கும்.

 

1px transparent line

 

ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் 9 ஏப்ரல் 2021 அன்று 99 வயதில் இறந்தார். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் பக்கத்தில் இருந்தார். கோவிட் தொற்றுநோய் பேரிடரின்போது இறுதிச் சடங்கில் ராணியின் உருவம் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் எதிரொலித்தது, அதே பாணியில் அன்புக்குரியவர்களைக் கௌரவிக்க வேண்டியிருந்தது.

பட மூலாதாரம்,PA MEDIA

 

படக்குறிப்பு,

ராணி இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் 9 ஏப்ரல் 2021 அன்று 99 வயதில் இறந்தார். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக அவர் பக்கத்தில் இருந்தார். கோவிட் தொற்றுநோய் பேரிடரின்போது இறுதிச் சடங்கில் ராணியின் உருவம் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் எதிரொலித்தது, அதே பாணியில் அன்புக்குரியவர்களைக் கௌரவிக்க வேண்டியிருந்தது.

 

1px transparent line

 

ராணிக்கு நான்கு குழந்தைகள், 8 பேரக்குழந்தைகள் மற்றும் 12 கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர்

பட மூலாதாரம்,DUCHESS OF CAMBRIDGE

 

படக்குறிப்பு,

ராணிக்கு நான்கு குழந்தைகள், 8 பேரக்குழந்தைகள் மற்றும் 12 கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர்.

அனைத்து புகைப்படங்களும் காப்புரிமைக்கு உட்பட்டவை. https://www.bbc.com/tamil/global-62843760

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராணி இரண்டாம் எலிசபெத்தின் விளையாட்டுத் துறை ஆர்வம்: புகைப்படங்கள்

2 மணி நேரங்களுக்கு முன்னர்

ராணி தனது வாழ்வில் விளையாட்டு மீது காட்டிய ஆர்வத்தை நினைவுகூரும் படங்கள்.

 

குதிரையின்மீது ராணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ராணிக்கு முதல் குதிரை, பெக்கி என்று பெயரிடப்பட்ட ஷெட்லாண்ட் மட்டக்குதிரை, நான்கு வயதில் வழங்கப்பட்டது. அவர் ஆறு வயதிற்குள் சவாரி செய்யத் தொடங்கினார். அவரது பதின்ம வயதுக்குள் ஒரு திறமையான குதிரையேற்றம் செய்பவராக இருந்தார். மேலும் 1952ல் ட்ரூப்பிங் தி கலரில் அரசியாக முதன்முறையாக இங்கு சவாரி செய்த காட்சி இந்தப் படம்.

 

ராணியும் இளவரசி மார்கரெட்டும்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ராணியின் குதிரைகள் மீதான காதல் அவரது வாழ்நாள் முழுவதும் நீடித்தது. அவர் தொடர்ந்து குதிரைப் பந்தயங்களில் கலந்து கொண்டார். இங்கே அவர் இளைய சகோதரி இளவரசி மார்கரெட்டுடன் எப்ஸமியில் நடந்த 1950 டெர்பியில் கலந்து கொண்டார்.

 

ராணி மற்றும் அல்தியா கிப்சன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

1957இல், ராணி விம்பிள்டன் ஒற்றையர் SW19 விளையாட்டில் வென்ற முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கரான அல்தியா கிப்சனுக்கு பட்டத்தை வழங்கினார்.

 

ராணி எஃப்ஏ கோப்பையை நாட்டிங்ஹாம் ஃபாரெஸ்ட் கேப்டன் ஜேக் புர்கிட்டுக்கு 1959ஆம் ஆண்டு வழங்குகிறார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ராணி வெம்ப்லியில் கால்பந்து எஃப்ஏ கோப்பை இறுதிப் போட்டியில் கலந்துகொண்டார். நாட்டிங்ஹாம் ஃபாரெஸ்ட் 2-1 என்ற கோல் கணக்கில் லூட்டனை வீழ்த்தி, வெற்றி பெற்றபோது, அதன் கேப்டன் ஜேக் புர்கிட்டிடம் கோப்பையை வழங்கினார்.

 

ராணி 1966 உலகக் கோப்பையை பாபி மூருக்கு வழங்கினார்

 

படக்குறிப்பு,

வெம்ப்லியில் ராணியின் மிகச் சிறந்த தருணம், 1966ஆம் ஆண்டில், மேற்கு ஜெர்மனிக்கு எதிராக இங்கிலாந்து 4-2 கோல் கணக்கிலான உலகக் கோப்பை இறுதி வெற்றிக்குப் பிறகு, ஜூல்ஸ் ரிமெட் டிராஃபியை பாபி மூருக்கு வழங்கினார்.

 

ராணி மற்றும் விர்ஜினீயா வேட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

1977 ராணிக்கு ஒரு சிறப்புமிக்க ஆண்டு. அவர் தனது வெள்ளி விழாவைக் கொண்டாடினார். அதோடு விம்பிள்டனில் பெண்கள் ஒற்றையர் இறுதி நாளில் விர்ஜீனியா வேட் பட்டத்தை வென்றபோது அங்கிருந்தார்.

 

ராணி மற்றும் ஜர்கென் கிளின்ஸ்மேன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ஜெர்மனிக்கும் செக் குடியரசுக்கும் இடையே வெம்ப்லியில் நடந்த யூரோ 96 இறுதிப் போட்டியில் ராணி கலந்து கொண்டார். ஜர்கென் கிளின்ஸ்மேன் தலைமையிலான ஜெர்மனி அணி சாம்பியன் ஆனது

 

ராணியுடன், டேவிட் பெக்ஹாம் மற்றும் கிர்ஸ்டி ஹோவர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

மான்செஸ்டரில் 2002 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில் டேவிட் பெக்காம் மற்றும் நிதி திரட்டுபவர் கிர்ஸ்டி ஹோவர்ட் ஆகியோர் ராணிக்கு ஜூபிலி பேட்டன் வழங்கினர்.

 

ஸ்லோவாக்கியாவில் கில்ட்ஃபோர்ட் ஃபிளேம்ஸ், அக்வாசிட்டி போப்ராட் இடையேயான போட்டிக்கு முன் ராணி ஒரு ஐஸ் ஹாக்கி பக் போடுகிறார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

2008இல் ஸ்லோவேனியாவின் சுற்றுப்பயணத்தில், கில்ட்ஃபோர்ட் ஃபிளேம்ஸ், அக்வாசிட்டி போப்ராட் இடையேயான ஐஸ் ஹாக்கி போட்டியில் சம்பிரதாயமான பக் டிராப் செய்ய ராணி அழைக்கப்பட்டார்.

 

2012 ஒலிம்பிக்ஸில் ராணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

2012 ஒலிம்பிக் தொடக்க விழாவில் ராணி முக்கியப் பங்கு வகித்தார். ஜேம்ஸ் பாண்டுடன் (டேனியல் கிரெய்க்) ஒரு குறும்படத்தில் நடித்தார். பின்னர் அவர் முறைப்படி விளையாட்டுப் போட்டிகளைத் திறந்து வைத்தார்

 

ராணி டேன்னி கிரே-தாம்சனுடன்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ராணி அதிகாரபூர்வமாக 2012 பாராலிம்பிக்ஸை தொடக்கி வைத்தபோது 11 முறை பாராலிம்பிக் சாம்பியனான பரோனஸ் டேன்னி கிரே-தாம்சனை சந்தித்தார்.

 

ராணியுடன் பந்தயக் குதிரை ஓட்டும் ஜாக்கி ரையான் மூர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ராணியின் குதிரை எஸ்டிமேட் மற்றும் அதை ஓட்டிய பந்தயக் குதிரை ஓட்டுபவரான ஜாக்கி ரையான் மூர் 2013இல் ராயல் அஸ்காட்டில் தங்கக் கோப்பையை வென்றது. 207 ஆண்டுகளில் ஆட்சியில் இருந்தவர் வெற்றி பெற்ற குதிரையின் உரிமையாளராக இருந்தது அதுவே முதல் முறை.

 

2013ஆம் ஆண்டு தங்கக் கோப்பையை வென்ற எஸ்டிமேட் குதிரையை ராணி தடவிக் கொடுக்கிறார்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

அவரது வாழ்க்கையின் பிற்பகுதியில் ராணியின் மிகவும் வெற்றிகரமான குதிரைகளில் ஒன்று எஸ்டிமேட்

 

2015 ரக்பி உலகக் கோப்பைக்கு முன்பு, ராணியுடன் பிரையன் ஹபானாவும் ஹென்றி ஸ்பெய்ட்டும்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ராணி 2015 ரக்பி உலகக் கோப்பைக்கு முன் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் தென்னாப்பிரிக்காவின் பிரையன் ஹபானா மற்றும் ஆஸ்திரேலியாவின் ஹென்றி ஸ்பெய்ட்டை சந்தித்தார்.

 

ராணியுடன் ரையன் மூர்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

2016இல் ராயல் அஸ்காட்டில் டயமண்ட் ஜூபிலி பங்குகளை மவுண்ட் ட்வைலைட் சன் வென்ற பிறகு, சிறந்த ஜாக்கியான ரியான் மூர் ராணியுடன் உரையாடினார்.

 

ராணியுடன் இருமுறை ஒலிம்பிக் சாம்பியனான நிக்கோலா ஆடம்ஸ்

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

2016ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக்ஸில் குத்துச்சண்டை சாம்பியனான நிக்கோலா ஆடம்ஸ் உட்பட பதக்கம் வென்றவர்களுக்கு ராணி பக்கிங்ஹாம் மாளிகையில் அளித்த வரவேற்பு நிகழ்ச்சி.

 

2017 ராயல் அஸ்காட்டில் ராணி

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

2017ல், ராணி மீண்டும் ராயல் அஸ்காட்டில் கலந்து கொண்டார். அதோடு மரபுவழி கேரேஜ் வண்டி அணிவகுப்பு நிகழ்விலும் பங்கேற்றார்.

 

ராணி தொடர்ந்து ராயல் அஸ்காட்டில் கலந்து கொண்டார். ஜூன்2021 இல் பெர்க்ஷையர் குதிரைப்பந்தய மைதானத்தில் நடந்த போட்டியைக் கண்டு மகிழ்ந்தார்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

ராணி தொடர்ந்து ராயல் அஸ்காட்டில் கலந்து கொண்டார். ஜூன்2021 இல் பெர்க்ஷையர் குதிரைப்பந்தய மைதானத்தில் நடந்த போட்டியைக் கண்டு மகிழ்ந்தார்.

 

இந்த கோடையில் பர்மிங்ஹாமில் நடைபெறும் நிகழ்வுக்கு முன்னதாக, அக்டோபர் 2021இல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் உலகளாவிய ரிலேவை ராணி தொக்கி வைத்தார். பாராலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற கதீனா காக்ஸுக்கு அவர் அதைக் கொடுத்தார். அவர் தனது பயணத்தின் முதல் கட்டத்தில் அதை எடுத்துச் சென்றார்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

 

படக்குறிப்பு,

இந்த கோடையில் பர்மிங்ஹாமில் நடைபெறும் நிகழ்வுக்கு முன்னதாக, அக்டோபர் 2021இல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் உலகளாவிய ரிலேவை ராணி தொக்கி வைத்தார். பாராலிம்பிக் தங்கப் பதக்கம் வென்ற கதீனா காக்ஸுக்கு அவர் ரிலேவை கொடுத்தார். அவர் தனது பயணத்தின் முதல் கட்டத்தில் அதை எடுத்துச் சென்றார்.

https://www.bbc.com/tamil/global-62855918

  • கருத்துக்கள உறவுகள்

6slsnc3o

கமல்ஹாசனுடன் எம்ஜிஆர் பிலிம் சிட்டி ஸ்டுடியோவின் ஒரு பகுதியை ராணி சுற்றிப்பார்க்கிறார்.

 

Flash Back: பிரிட்டன் ராணி 2-ம் எலிசபெத் கலந்து கொண்ட கமல்ஹாசனின்  மருதநாயகம் படத் தொடக்க விழா! | Queen Elizabeth ll launched Kamal Haasan's  Marudhanayagam Film shoot in 1997 - Tamil ...

Kamal About Queen Elizabeth | எலிசபெத் குறித்து கமல்

1997 ஆம் ஆண்டில், நடிகர் கமல்ஹாசனின் லட்சியத் திரைப்படமான மருதநாயகத்தின் செட்டுகளுக்கும் குயின் வருகை தந்தார். அவர் சென்னையில் உள்ள எம்ஜிஆர் திரைப்பட நகரத்திற்குச் சென்றார், அங்கு அவர் கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் செலவிட்டார்.

 

85 கோடி பட்ஜெட்.. எலிசபெத் ராணிக்கு கருணாநிதி அளித்த திரை விருந்து.. ஒரு  ரீவைண்ட்! | 85 crore budget and Karunanidhi's screening party for Queen  Elizabeth - Tamil Oneindia

queen elizabeth, ராணி எலிசபெத் மறைவு: பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின்  இரங்கல்! - prime minister modi and chief minister mk stalin have condoled  the demise of queen elizabeth - Samayam Tamil

 

ராணி எலிசபெத்தின் இந்தியா வருகையிலிருந்து 10 வரையறுத்த புகைப்படங்கள் -  DigiPaperBoy

 

pia6k5e8

ராணி எலிசபெத், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுடன் 1961 இல் புது தில்லியில்.

 

nlgfgpng

1961 இல் தாஜ்மஹாலில் ராணி எலிசபெத்.

6t9qbb88

வருகையாளர் புத்தகத்தில் ராணி மற்றும் இளவரசர் பிலிப்பின் கையொப்பங்கள்.

d51n0468

1961 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி இந்திய சுற்றுப்பயணத்தின் போது வாரணாசியில் யானை மீது ராணி எலிசபெத் சவாரி செய்கிறார். 

n7av8q7

ராணி எலிசபெத் மற்றும் ஜெய்ப்பூர் மகாராஜா, சவாய் மான் சிங் II, பிப்ரவரி 6, 1961 அன்று யானை மீது சவாரி செய்தனர்.

gsbs55d

பிப்ரவரி 1961 இல் புலி வேட்டையின் போது ராணி எலிசபெத்.

 

letkap_queen-elizabeth-palki-650_625x300_08_September_22.jpg

 

fbglqph

ராணி எலிசபெத் 1983 இல் புது தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியை சந்தித்தார்.

kc0dk2b

ராணி எலிசபெத் 1983 ஆம் ஆண்டு தில்லியில் அன்னை தெரசாவுக்கு ஆர்டர் ஆஃப் மெரிட் வழங்கினார். 

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.