"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 94A
[This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.]
பகுதி: 94 A / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை
1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து, அடுத்தடுத்து வந்த புத்த மத ஆதிக்க அரசாங்கங்கள் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள் மற்றும் பிற திட்டங்கள் என்ற பெயரில் சிறுபான்மை தமிழர்கள் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளை ஆக்கிரமிக்க திட்டங்களைத் தொடங்ன. எடுத்துக்காட்டாக, தொல்பொருள் துறை இந்த பகுதிகளில் உள்ள பண்டைய பௌத்த குடியேற்றங்களுக்கான ஆதாரங்களைக் கண்டறியப் பயன்படுத்தப்பட்டு, அதன் மூலம் அகழ்வாராய்ச்சிக்கு நிலத்தை உரிமை கோரியது மட்டுமல்லாமல், பல இந்து கோயில்களின் இருப்பை அச்சுறுத்துவது நாளாந்த நிகழ்வாக மாறிவிட்டது. புகழ்பெற்ற வரலாற்றாசிரியரும் தொல்பொருள் ஆய்வாளருமான டாக்டர் எஸ். பத்மநாதன், 1948 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் வெளியேறியதிலிருந்து, இலங்கையில் தொல்பொருள் ஆராய்ச்சி தமிழர்களுக்கு எதிரான பாகுபாட்டால் மோசமாகி வருவதாக டெய்லி எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார். பேராதனை பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக இருந்தபோது, டாக்டர் பத்மநாதன் இலங்கையில் பண்டைய தமிழர் இருப்பைக் காட்டக்கூடிய தொல்பொருள் திட்டங்கள் அங்கீகரிக்கப்படவில்லை என்று புகார் கூறினார்.
"தமிழர்கள் வாழ்ந்த இடமெல்லாம் தமிழ் பிராமி எழுத்துக்களில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன," என்று அவர் குறிப்பிட்டார். தமிழர்கள் தங்கள் தாயகம் என்று கூறும் இடத்தில் ஆரம்பகால பௌத்த இருப்பைக் காட்டும் தொல்பொருள் தடயங்கள் கிடைக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை, ஏனென்றால், இன்று இலங்கையில் தமிழ் பௌத்தர்கள் இல்லை என்றாலும், இலங்கையின் பெரும்பாலான ஆரம்பகால தமிழர்கள் (10 ஆம் நூற்றாண்டு சோழ படையெடுப்பிற்கு முன்பு) பௌத்தர்கள் ஆகும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பண்டைய பௌத்த எச்சங்கள் சிங்களவர்களோ அல்லது வேறு யாரோ விட்டுச் சென்றவை அல்ல, தமிழ் பௌத்தர்களால் விடப்பட்ட எச்சங்கள் தான் அவை. அவை இலங்கைத் தமிழர்களின் பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும். வடக்கு மற்றும் கிழக்கில் சமீப காலத்திலும் தற்போதும் கட்டப்பட்ட பௌத்த கோயில்கள், சிலைகள் மற்றும் கட்டமைப்புகள் மட்டுமே சிங்கள - பௌத்தமாகக் கருதப்பட முடியும் என்பது வரலாற்று வெளிப்படையான உண்மை மற்றும் சான்றும் ஆகும். இது இலங்கை அரசுக்கும் அறஞர்களுக்கும் நன்றாகத் தெரியும். என்றாலும் இனத்துவேசமும் மகாநாமாவின் மகாவம்சமும் கண்ணை மறைத்து, புத்தரின் உண்மையான போதனைகளையும் வழிகாட்டளையும் பின்னுக்கு தள்ளிவிட்டன, ஏன் புத்தரையும் சேர்த்துதான், ஆனால் வெறும் சிலைகள் மட்டும் தான் ஆக்கிரமித்துக் கொண்டு இருக்கின்றன!
அத்தியாயம் 34: வட்டகாமினியின் மரணத்திற்குப் பிறகு, மகசுழி மகாதீசன் [Mahakuli Mahatissa, also known as Maha Cula Maha Tissa] பக்தியுடனும், நீதி வழுவாமலும் பதினன்கு வருட காலம் ஆட்சி செய்தான். உழைத்து ஒரு காரியத்தைச் செய்து முடிப்பது பெருமைக்குரியது என்பதைக் கேட்டறிந்த அவன் ஆட்சிக்கு வந்த முதல் ஆண்டிலேயே, யாருமறியாமல் மாறுவேட மணிந்து சென்று வயலில் வேலை செய்தான். அதற்குக் கூலியாகக் கொடுத்ததை தேரர் மகா சுமணவுக்குக் [Thera Mahasumma] கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. ஸ்வர்ண கிரியிலுள்ள சர்க்கரை ஆலை ஒன்றில் மூன்று வருட காலம் வேலை செய்து, அதற்குக் கூலியாக சர்க்கரை பெற்றான். சர்க்கரையை எடுத்துக் கொண்டு தலைநகருக்குத் திரும்பிய அரசன் பிக்குகளுக்கு நிறைய தானம் வழங்கினான். அதாவது மொத்தம் நான்கு ஆண்டுகளாக மன்னர் இல்லை என்பதை யாரும் கவனிக்கவில்லை என்பது விந்தையாக உள்ளது! மகசுழி மகாதீசன் கல்லாட நாகனின் [Khallatanaga] மகன், மற்றும் சோரநாகன் [Coranaga] வட்டகாமினியின் மகன். மகசுழி மகாதீசனின் ஆட்சிக் காலத்தில் சோரநாகன் ஒரு கிளர்ச்சியாளராக இருந்தான். மகசுழி மகாதீசனின் மரணத்திற்குப் பிறகு சோரநாகன் மன்னரானான், மேலும் தனது கிளர்ச்சி ஆண்டுகளில் அவனுக்கு அடைக்கலம் அளிக்கப்படாத பதினெட்டு விகாரைகளையும் அழித்தான். அவன் பன்னிரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். மேலும் அவனது துணைவியார் அனுலா [Anula] கொடுத்த விஷ உணவை சாப்பிட்டு இறந்தான். சோரநாகனின் மரணத்திற்குப் பிறகு, மகசுழி மகாதீசனின் மகன் குட்ட திச்சன் அல்லது குட திச்சன் [Kuda Tissa] மூன்று ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவனும் தனது சொந்த தாயாரான அனுலாவால் விஷம் வைத்து கொல்லப்பட்டார். இந்த இரண்டு கொலைகளையும் அனுலா, சிவா [Siva I, [முதலாம் சிவன்] who was then a royal palace guard] என்ற அரண்மனைக் காவலாளியின் மீது கொண்ட காதல் ஏக்கத்தால் செய்தாள் என்கிறது மகாவம்சம்.
சிவா அனுலாவை ராணியாக ஏற்றுக்கொண்டு ஒரு வருடம் இரண்டு மாதங்கள் ஆட்சி செய்தான். மீண்டும், வட்டுகா [வடுகன் / vatuka] என்ற தமிழன் மீது அவள் கொண்டிருந்த ஆசை காரணமாக, சிவாவும் அனுலாவால் விஷம் வைத்து கொல்லப்பட்டான். வடுகனும் அனுலாவை தனது ராணியாக ஏற்றுக்கொண்டான். என்றாலும் மீண்டும் தருபாதுக திச்சன் [Darubhatika Tissa, The wood carrier] என்ற விறகு சுமக்கும் மற்றொரு நபரைக் காதலித்ததால், ஒரு வருடம் இரண்டு மாதங்களில், முன்போலவே விஷம் வைத்து இவனைக் கொன்றாள். ஆட்சி ஏறிய தருபாதுக திச்சன் ஒரு வருடம் ஒரு மாதம் ஆட்சி செய்தான். இவனையும் அனுலா முன்போலவே, தனது அடுத்த காதலனும் அரண்மனை பூசாரியுமான தமிழ் பிராமணன் நிலியன் [Niliya, a Tamil Brahman] மேல் கொண்ட காதலால், விஷம் வைத்து கொன்றாள். அவன் ஆறு மாதங்கள் மட்டுமே ஆட்சி செய்தான். அரண்மனைக் காவலர்கள் முப்பத்திரண்டு பேர்களுடன் தன் இஷ்டம் போல் இன்பம் அனுபவித்துக் கொண்டிருந்த அனுலா அல்லது அனுலாதேவி பின்னர் நிலியனையும் விஷம் கொடுத்துக் கொன்று, தானே நான்கு மாதங்கள் ஆட்சி செய்தாள் என்று மகாவம்சம் கூறுகிறது.
ஆனால் இன்னும் ஒன்றையும் இங்கு கவனியுங்கள். பல தமிழர்கள் அனுராதபுர அரண்மனையில் வேலை செய்வதையும், மற்றும் அரண்மனை பூசாரியாக தமிழ் பிராமணன் இருந்ததையும், இவர்களில் சிலர் அடுத்தடுத்து மன்னர்களாக மாறுவதையும், அதை அங்கு இருந்த அரண்மனை நிர்வாகிகளோ, படை வீரர்களோ, இல்லை குடிமக்களோ எந்த எதிர்ப்பும் இன்றி, ஏற்றுக்கொள்வதையும், இது கிருஸ்துக்கு முன்பு என்பதையும் அறியும் பொழுது, உங்கள் மனதில் ஏற்படும் இலங்கை வரலாறும், ஆதி குடிமக்கள் பற்றிய கருத்தும் என்னவாக இருக்கிறது?
மகசுழி மகாதீசனின் இரண்டாவது மகன் குடகன்ன தீசன் [குடகன்ன திஸ்ஸன் / Kutakanna-Tissa] என்பவன் அனுலாவிடம் கொண்ட பயத்தால், ஓடிப்போய் தீட்சை பெற்று வசித்து வந்தவன் இப்போது தலைநகருக்குத் திரும்பி வந்து ஒரு படையைத் திரட்டினன். கொடியவளான அனுலாவைக் கொன்று விட்டு அவன் இருபத்திரண்டு வருட காலம் ஆட்சி செய்தான். அவனது மரணத்திற்குப் பிறகு, அவனது மகன் பட்டிகாபய அபயன் அல்லது பாதிகாபய அபயன் [Bhatikabhaya Abhaya] இருபத்தெட்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். அவனது மரணத்திற்குப் பிறகு, அவனது தம்பி மகாதாதிக மகாநாகன் [Mahadathika Mahanaga] பன்னிரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்தான். தாதிக [Dathika] என்பது ஒரு தமிழ்ப் பெயர் என்று ஏற்கனவே சுட்டிக்காட்டப்பட்டது; 33-78. எனவே, மகாதாதிக, அதாவது பெரிய தாதிக என்பதும் ஒரு தமிழ் பெயராகும். எனவே, மகாதாதிக மகாநாகா ஒரு தமிழ் மன்னர் பெயராகும். மேலும் நாகர்கள், இலங்கைத் தீவின் பூர்வீக குடியிருப்பாளர்களும் ஆகும்.
Part: 94 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37
Chapter 34: After the death of Vattagamani, Mahaculi Mahatissa ruled for fourteen years. It is claimed that this king laboured in the rice field for one year in disguise, and he gave his wages to the Thera Mahasumma. He also worked in a sugar mill for about three years and received lump of sugar as wages. He gave this as alms to the bikkhus. It is strange that no one noticed that the king was not around for four years! Mahaculi Mahatissa is the son of Khallatanaga, and Coranaga was the son of Vattagamani. Coranaga had been a rebel during the reign of Mahaculi Mahatissa. Coranaga became the king on the death of Mahaculi Mahatissa, and he destroyed eighteen Viharas where he was not given refuge during his rebel years. He ruled for twelve years, and died by eating poisoned food given by his consort Anula. After the death of Coranaga, Mahaculika’s son Tissa ruled for three years. Anula also poisoned him to death. Anula committed these two murders because of her cravings towards a palace guard by the name Siva. Siva took Anula as the queen and ruled for one year and two months. Anula also poisoned him to death because of her craving for another man by the name Vatuka who was a Damila. He too took Anula as his queen, and he was also poisoned to death by her in one year and two months as she fell in love with another person who was a wood carrier by the name Tissa. He ruled for one year and one month, and was poisoned by Anula as she was in love with Niliya, a Damila Brahman who was a palace priest. He ruled for six months. Anula again fell in love with thirty two of the palace guards, and poisoned Niliya to death, 34-27. Then she ruled for four months. Mahaculika had a second son by the Kutakanna-Tissa who fled for fear of Anula. He returned and put Anula to death and reigned for twenty-two years. After his death, his son Bhatikabhaya reigned twenty-eight years. After his death, his younger brother, Mahadathikamahanaga, ruled for twelve years. As it was already pointed out that Dathika was a Tamil name; 33-78. Then Mahadathika is also a Damila name. Naga was an original inhabitant of the island. Therefore, Mahadathika Mahanaga must be a Damila king.
நன்றி
Thanks
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
[Kandiah Thillaivinayagalingam,
Athiady, Jaffna]
பகுதி / Part: 94 B தொடரும் / Will follow
துளி/DROP: 2004 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 94A
https://www.facebook.com/groups/978753388866632/posts/33365731243075427/?
By
kandiah Thillaivinayagalingam ·
Archived
This topic is now archived and is closed to further replies.