Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தீவிரமடையும் யானை -மனித மோதல் ? உயிரிழப்புக்களை தடுக்க புதிய முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தீவிரமடையும் யானை -மனித மோதல் ? உயிரிழப்புக்களை தடுக்க புதிய முயற்சி

07 NOV, 2022 | 08:34 AM
image

 

ரொபட் அன்டனி

 

உலகில் யானை - மனித மோதலில் முதலிடத்தில் இலங்கை வருடம் ஒன்றுக்கு 400 யானைகளும் 100 பொதுமக்களும் உயிரிழப்பு

மக்களின் வாழ்விடங்களுக்கு வருகின்ற யானைகள் மக்களின் பயிர்கள், விளை நிலங்கள், வயல் வெளிகளை நாசமாக்குவதுடன் வீடுகள், சொத்துக்களையும் அழிக்கின்றன

இலங்கையில் மொத்தமாக 5800 யானைகள் பல தசாப்தங்களின் பின்னர் நிம்மதியாக உறங்கப்போகிறோம் - கிராமவாசி சுபசிங்க

யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் சகவாழ்வை ஏற்படுத்துவதே பிரச்சினைக்கு தீர்வாக அமையும் – யானைகள் குறித்த விஞ்ஞானி பிரிதிவிராஜ்

 

A35I1491__2_.JPG

இலங்கையில் யானை மனித மோதல் நிலைமைகள் மிக மோசமான நிலைமையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றன. உலகத்திலேயே மிக அதிகமான யானை மனித 2 மோதல் சம்பவங்கள் இடம்பெறுவது இலங்கையிலேயே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வருடம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட இலங்கையில் 400 யானைகள் உயிரிழக்கின்றன.

அதேபோன்று வடமொன்றுக்கு பொதுமக்களை பொறுத்தவரையில் 100 பேர் வரை சராசரியாக யானை மனித மோதலில் உயிரிழந்து கொண்டிருக்கின்றனர். 

கடந்த 2021 ஆம் ஆண்டில் 130 பேர் உயிரிழந்துள்ளனர். யானைகளை பொறுத்தவரையில் தினம் ஒரு யானை சராசரியாக எங்காவது ஒரு இடத்தில் மனித எதிர்ப்பு நடவடிக்கைகளினால் உயிரிழக்கின்றன. தினந்தோறும் ஊடகங்களில் யானை மனித மோதலில் யானை மற்றும் பொது மக்கள் உயிரிழக்கும் சம்பவங்களை பார்க்கின்றோம். கடந்த பல நூறு வருடங்களாகவே இந்த நிலைமை இலங்கையில் நீடிக்கின்றது. 

இந்நிலையில் 1960 ஆம் ஆண்டளவில் அரசினால் ஒரு குழு நியமிக்கப்பட்டு இந்த யானை மனித மோதல்களை தடுப்பது எப்படி என்பது தொடர்பாக ஆராயப்பட்டு அதன் பரிந்துரைகள் பெறப்பட்டன. அதனடிப்படையிலேயே யானைகள் மக்கள் வாழும் பிரதேசங்களுக்கு வருவதை தடுக்கும் நோக்கில் மின்சார வேலிகளை அமைப்பது தொடர்பாகவும் யானைகளை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்குள்ளையே முடக்கும் விதமாகவும் திட்டங்கள் முன்வைக்கப்பட்டன. அந்தத் பரிந்துரைகளே இன்றுவரை இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் அவை வெற்றிபெறவில்லை. தொடர்ந்தும் இந்த அசம்பாவிதங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன. அரசாங்கத்தை பொறுத்தவரையில் இலங்கை முழுவதுமாக யானைகள் கிராமங்களுக்குள் வருவதை தடுப்பதற்காக 4,200 கிலோமீற்றர் தூரம் வரை மின்சார வேலிகளை அமைத்திருக்கின்றது. ஆனால் யானைகள் மனிதர் வாழும் இடங்களுக்குள் வருவது குறையவில்லை.

இவ்வாறு மக்கள் வாழ்கின்ற பிரதேசங்களுக்கு வருகின்ற யானைகள் மக்களின் வீடுகள், அவர்களின் பயிர்கள், போன்றவற்றை அழித்துவிட்டே செல்கின்றன. முக்கியமாக ஒருவர் சுமார் 15 வருடங்களாக நூறு தென்னை மரங்களை தனது காணியில் நட்டு அதனை வளர்த்து வந்திருப்பார். ஆனால் ஒரே இரவில் பல யானைகள் வந்து அந்த அனைத்து தென்னை மரங்களையும் அழித்துவிட்டு செல்கின்ற சம்பவங்கள் பல இந்த பகுதிகளில் பதிவாகி இருக்கின்றன. மேலும் யானை தாக்கி மக்கள் உயிரிழத்தல், இரவு நேரங்களில் வெளியே செல்ல முடியாத நிலை 2 என பல இன்னல்களை பல கிராமங்களில் மக்கள் எதிர்கொண்டுவருகின்றனர்.

A35I0020_B.jpg

ஆனால் யானைகளுக்கும் இந்த நாட்டில் வாழ்வதற்கான உரிமை இருக்கின்றது என்பதனை யாரும் மறுக்க முடியாது. அதே நேரம் மக்களும்யானைகளிடமிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும். எனவே யானைகளுக்கும் மக்களுக்கும் இடையில் சகவாழ்வை நோக்கிய ஒரு செயற்பாட்டையே மேற்கொள்ள வேண்டும் என்பது ஆய்வாளர்கள் மற்றும் யானை ஆய்வுகள் தொடர்பான நிபுணர்களின் கருத்தாக அமைந்திருக்கிறது.

யானை மனித மோதலை தடுப்பதற்காக அரசாங்கம் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களினால் எடுக்கப்படுகின்ற சகல தடுப்பு நடவடிக்கைகளும் யானைகளுக்கு மிகப் பாதகமாகவே அமைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தடுப்பு நடவடிக்கைகள் இலங்கையில் யானையின் இருப்பையே கேள்வி குறியாக்கிவிடும் வகையில் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். 

 

முன்மாதிரி திட்டம்

 

இவ்வாறான பின்னணியில் இலங்கையில் வடமத்திய மாகாணத்தில் ஹபரண பகுதியில் பெந்திவெவ என்ற பிரதேசத்தில் ஒரு முன்மாதிரி யானை - மனித மோதலை தடுப்பதற்கான செயல்திட்டம் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. அது வெற்றியளித்த திட்டமாக கருதப்படுகிறது. அதாவது இந்த கிராமத்தில் யானை -மனித மோதலை தடுப்பதற்காக சமூகமட்டத்திலான மின்சார வேலி அமைக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. யானைகள் ஆய்வு தொடர்பான விஞ்ஞானி மற்றும் யானைகள் பாதுகாப்பு மற்றும் ஆய்வுக்கான நிலையத்தின் தலைவர் கலாநிதி பிரித்திவிராஜ் பெர்னாண்டோ கடந்த 30 வருடங்களாக மேற்கொண்ட ஆய்வின் விளைவாக இந்த புதிய திட்டம் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

 

அதாவது ஒரு கிராமத்தை எடுத்துக் கொண்டால் அங்கு அந்த கிராமத்தை சுற்றி ஒரு யானைகள் வராத முறையில் மின்சார வேலியை அமைக்காமல் அதற்கு மாறாக வீடுகளை சுற்றி மின்சார 3 வேலி அமைத்தல், மக்களின் பயிர் செய்கைகள் இருக்கின்ற இடங்களை சுற்றி மின்சார வேலிகளை அமைத்தல், மக்கள் அடிக்கடி நடமாடுகின்ற இடங்களை சுற்றி மின்சார வேலிகளை அமைத்தல் என்ற அடிப்படையில் சமூகமட்ட மின்சார வேலி அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

HEC_-_Fence.png

மேலும் மின்சார வேலி அமைக்கப்படாத பகுதிகளில் யானைகள் நடமாட முடியும். அதனால் மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறான ஒரு புதிய மின்சார வேலி அமைக்கும் முறையே விஞ்ஞானி பிரிவித்திராஜ் பெர்னாண்டோவின் பரிந்துரைக்கு அமைய இந்த கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அனுசரணையை ஜெர்மனியில் இயங்குகின்ற டி யூ ஐ என்ற நிறுவனமும் இலங்கையில் சின்னமன் ஹோட்டல் மற்றும் சினமன் நேச்சர் ட்லெய்ஸ் என்ற சுற்றுலாத்துறை நிறுவனமும் இணைந்து வழங்கியுள்ளன. 

இந்த நிறுவனங்களின் அனுசரணையுடன் கலாநிதி பிரித்திவிராஜ் தலைமையிலான பாதுகாப்பு மற்றும் ஆய்வுக்கான நிலையம் பெந்திவெவ என்ற பிரதேசத்தில் இந்த சமூக மட்ட மின்சார வேலியை அமைக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இந்த செயற்பாட்டுக்கு உதவிய ஜேர்மன் நிறுவனத்தை முன்னாள் சபாநாயகர் கருஜயசூரியவே ஒருங்கிணைத்துக் கொடுத்துள்ளார். அந்தவகையில் இந்த திட்டம் மிக சிறந்த முறையில் வெற்றியளித்திருப்பதாக பிரதேச மக்களினாலும் தெரிவிக்கப்படுகின்றது.

Image_1__4_.jpg

அதனடிப்படையில் இந்த திட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வு கடந்த 28 பிரதேசத்தில் நடைபெற்றது. இதில் குறித்த கிராம மக்கள் இந்த திட்டத்தின் வெற்றி குறித்து மிகவும் மகிழ்ச்சியுடன் கருத்து வெளியிட்டிருந்தனர். அதாவது பல தசாப்தங்களின் பின்னர் நாங்கள் இன்றிலிருந்து நிம்மதியாக உறங்க போகின்றோம். இதுவரை காலமும் மாலை 4 மணிக்கு பின்னர் எங்களால் வீடுகளின் வெளியே வர முடியாது. யானைகள் வந்துவிடும்.

அவ்வாறு நாங்கள் வீடுகளுக்குள் இருக்கின்ற சந்தர்ப்பங்களில் கூட யானைகள் வந்து எங்கள் உயிர்களுக்கும் எங்களது சொத்துக்களுக்கும் அச்சுறுத்தலாக செயல்பட்டன. தற்போது நாங்கள் எங்கள் வீடுகளுக்குரிய மின்சார வேலி மற்றும் எமது பயிர் நிலையங்கள், மக்கள் அடிக்கடி நடமாடும் இடங்களில் இவ்வாறு வேலி அமைக்கப்பட்டிருக்கின்றது. வேலி அமைக்கப்படாத ஏனைய பகுதிகளுக்கு யானைகள் வந்துசெல்ல முடியும். இவ்வாறான முன்மாதிரி மின்சார வேலி பாதுகாப்பு திட்டம் மிகவும் சிறப்பானது. இதனை இலங்கையில் இருக்கின்ற சகல பகுதிகளுக்கும் முன்னெடுக்க வேண்டும் என்று கிராம வாசிகள் தெரிவித்தனர். அதாவது சகல தரப்பினரும் இணைந்து மேற்கொண்ட ஒரு ஆய்வின் பலனாகவே இந்த திட்டம் தற்போது உருவாக்கப்பட்டிருக்கின்றது.

 

கிராமவாசியின் உருக்கம்

IMG_6901.JPG

இந்த புதிய மின்சார வேலி முறை தொடர்பாக பெந்திவெவ கிராமவாசியான சுபசிங்க என்பவர் கருத்து வெளியிடுகையில் மிகவும் ஒரு பெறுமதியான பாதுகாப்பு திட்டத்தை இந்த புதிய முறையின் ஊடாக உருவாக்கி தந்திருக்கின்றார்கள். இனிவரும் காலங்களில் மிகவும் நிம்மதியான ஒரு உறக்கத்தை பெற முடியும் என்று நம்புகிறோம். நான் 1966 ஆம் ஆண்டு பாடசாலை முடித்து வீட்டுக்கு வரும்போது எனது தந்தையின் 100 தென்னை மரங்களை யானைகள் அழித்து நாசமாக்கியதை நான் மறக்கமாட்டேன். அண்மையில் கூட நான் வீட்டில் இருந்தபோது சில யானைகள் வந்து எனது உயிருக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தும் நிலைமை காணப்பட்டது. அப்போது எமக்கு தெரிந்த சில பாதுகாப்பு வழிகளை மேற்கொண்டு உயிர்பிழைக்க முடிந்தது. இதுவரை காலமும் சுமார் 2000 தென்னை மரங்களை நான் நாட்டியிருக்கின்றேன். ஆனால் அவற்றில் ஒன்றுவிடாமல் அனைத்தையும் யானைகள் அழித்துவிட்டுள்ளன. இந்த மின்சார வேலிகளை நாங்கள் எமது கண்களைப் போன்று பாதுகாப்போம். என்றார்.

இந்த சமூகமட்ட மின்சார வேலியமைக்கும் செயற்பாடு கிராம மக்களின் பங்களிப்பையும் உள்ளடக்கியது. மின்சார வேலிகளை பராமரிக்கும் பொறுப்பு மக்களுக்கு வழங்கப்படுகிறது. அவற்றை மக்கள் பராமரிக்காவிடின் அவை மீண்டும் பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்றுவிடும்.

சித்ரால் ஜயதிலக்க

Chitral_Jayatilake__1_.jpg

இந்த திட்டத்தை முன்னெடுத்தமை தொடர்பாக சின்னமன் ஹோட்டல்ஸ் மற்றும் நேச்சர் ட்ரெயில்ஸ் நிறுவனத்தின் உப தலைவர் சித்ரால் ஜயதிலக்க குறிப்பிடுடிகயில் பிரிதிவிராஜ் பெர்னாண்டோவுடன் நாங்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வின் ஊடாக இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. பல கிராமங்களுக்கு சென்று இதனை விளக்கினோம். ஆனால் மக்கள் எங்களை சந்தேக கண்கொண்டு பார்த்தார்கள்ஆனால் பெந்திவெவ மக்கள் அதனை செய்ய விரும்பினர். காரணம் அந்தளவுக்கு இந்த மக்கள் யானை - மனித மோதலால் பாதிக்கப்பட்டிருந்தனர். இது வெற்றியளித்திருக்கிறது. சின்னமன் ஹோட்டல்ஸ் மற்றும் நேச்சர் ட்ரெயில்ஸ் நிறுவனத்தின் உப தலைவர் என்று வகையில் நான் இன்று மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன் என்றார். 

இலங்கையில் எத்தனை யானைகள் உள்ளன?

இலங்கையில் 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகளின் பிரகாரம் 5800 யானைகள் காணப்படுகின்றன. ஆனால் அந்த கணக்கெடுப்பில் வடக்கு கிழக்கு உட்படுத்தப்படவில்லை. வருடம் ஒன்றுக்கு 400 யானைகள் உயிரிழந்துகொண்டிருக்கின்றன. எனினும் வடக்கு கிழக்கிலும் இருக்கின்ற யானைகளின் எண்ணிக்கையையும் கணக்கெடுத்துதான் இலங்கையில் இருக்கின்ற யானைகளின் எண்ணிக்கையை சரியாக குறிப்பிட முடியும். யானைகளுக்கும் இந்த பூமியில் வாழ்வதற்கான உரிமை இருக்கின்றது. வனங்களில் யானைகள் இருக்கின்றமைமையை இலங்கை ஒரு சுற்றுலா தளமாக பயன்படுத்துகின்றது. மிக அதிகளவான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்த யானைகள் கூட்டமாக இருப்பதை பார்க்க விரும்புகின்றனர்.

எனவே இந்த பகுதிகளில் இருக்கின்ற மக்களுக்கு இது ஒரு மிக முக்கியமான வாழ்வாதார மூலமாக காணப்படுகிறது. அதனால் யானைகளுக்கும் மக்களுக்கும் இடையிலான சகவாழ்வை ஏற்படுத்தவேண்டியுள்ளது. அதாவது யானைகள் மக்களுக்கு எந்தவிதமான பாதிப்புமின்றி அந்த பிரதேசங்களில் உலா வருவதற்கான சூழலை உருவாக்கிக் கொடுப்பதே தீர்வாக இருக்கின்றது.

குழு அமைத்துள்ள ஜனாதிபதி ரணில்

ஜனாதிபதி ரணில் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக ஒரு குழுவை நியமித்திருக்கின்றார். இந்த குழுவில் முன்னாள் வனவிலங்கு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுமித் பிலப்பிட்டிய மற்றும் இந்த சமூகமட்ட மின்சார வேலி திட்டத்தை ஆய்வின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ள கலாநிதி பிரித்திவிராஜ் ஆகியோரும் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அவர்கள் சமூகமட்ட மின்சார வேலிஅமைக்கும் திட்டத்தை பரிந்துரையாக ஜனாதிபதிக்கு தமது அறிக்கையின் ஊடாக முன்வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

விஞ்ஞானியின் பரிந்துரை

Prithviraj_Fernando.jpg

இந்த யானை மனித மோதல் மற்றும் அதற்கான தீர்வுகள் தொடர்பாக பிரித்திவிராஜ் கருத்து பகிர்கையில் யானை- மனித மோதல் இலங்கையில் மிகப்பெரிய நெருக்கடியாக காணப்படுகிறது. இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகள் யானைகளுக்கு பாதிப்பை கொடுக்கின்றன. யானை மனிதன் வாழும் பிரதேசங்களுக்குள் வருவதாக நாங்கள் கூறுகின்றோம். ஆனால் அது உண்மை அல்ல. மாறாக மனிதர்களே யானைகள் வாழுகின்ற பிரதேசத்தில் சென்று குடியிருப்புகளை அமைத்துக் \கொண்டிருக்கின்றனர். எனவேதான் யானைகளுக்கு செல்வதற்கு இடமில்லாததால் இவ்வாறு மக்கள் வாழ்கின்ற இந்த பிரதேசங்களுக்குள் வருகின்றன. குறிப்பாக யானை மனித மோதலை தடுக்கும் விதமாக முன்னெடுக்கப்படுகின்ற வெடிப்பொருட்களை வைத்தல். மின்சார வேலி அமைத்தல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளால் யானைகளுக்கு பாரிய சேதங்கள் ஏற்படுகின்றன. அதேபோன்று ரயில் மோதுவது, துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் போன்வற்றினால் யானைகள் கொல்லப்படுகின்றன. எமது நாட்டுக்கு இருக்கின்ற இந்த மிகப்பெரிய சொத்தான யானைகள் இவ்வாறு உயிரிழப்பது வேதனையான விடயமாகும். எனவே அதனை தடுத்து நிறுத்த வேண்டும். அதேபோன்று வருடம் ஒன்றுக்கு 100 பொது மக்கள் உயிரிழக்கின்றனர். மக்களின் சொத்துக்கள், வீடுகள், பயிர் நிலங்கள் போன்றவற்றை யானைகள் ஒரே இரவில் அழித்துவிட்டுசெல்கின்றன. 

எனவே யானைகளுக்கு மக்களுக்கும் இடையில் ஒரு சகவாழ்வை கொண்டுவருவதே இங்கு மிக முக்கியமானதாக இருக்கின்றது. யானைகளுக்கு பாதிப்பு இல்லாமல் மக்களுக்கும் பாதிப்பில்லாமல் யானைகளும் மக்களும் நடமாடும் வகையில் சூழல் உருவாக்கப்பட வேண்டும். அந்த அடிப்படையிலேயே நாம் எமது இந்த சமூக மட்ட வேலியமைக்கும் திட்டத்தை முன்னெடுத்திருக்கின்றோம். அதுதற்போது வெற்றியடைந்திருக்கின்றது. இதனை நாடு முழுக்க இருக்கின்ற இடங்களில் உருவாக்கலாம். வடக்கு கிழக்கு நிலைமையையும் பார்க்கவேண்டும். அங்கு இருக்கின்ற விஞ்ஞானிகள் இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். யானைகளுக்கு என்று பாதுகாப்பான வனங்கள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அவற்றில் 82 வீதமான பகுதிகளில் மக்கள் தற்போது குடியிருப்புகளை அமைத்திருக்கின்றனர்.

எனவே யானைகள் எங்கே செல்வது? தற்போது இலங்கையில் 44 விதமான பகுதிகளில் மக்களும் யானைகளும் ஒரே நிலப்பகுதியில் வாழும் நிலையுள்ளது. அரசாங்கம் இலங்கை முழுவதும் 4200 கிலோமீட்டர் தூரம் வரை மின்சார வேலியை அமைத்திருக்கின்றது. அந்த வேலிகளை உடைப்பதற்கும் தற்போது யானைகள் கற்றுக்கொண்டுள்ளன. யானை மிகவும் ஒரு புத்திசாலியான மிருகம். எனவே இதனை நுட்பரீதியாகவே நாம் கையாள வேண்டும். எமது இந்த புதிய திட்டம் யதார்த்தமானதாக செயற்பாட்டு ரீதியாக காணப்படுகிறது. யானைகளை நம்பி சுற்றுலாத்துறையூடாக கிராமங்களில் பல குடும்பங்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றன என்றார். 

நிரந்தர தீர்வு அவசியம்

தற்போது  இந்த புதிய சமூகமட்ட வேலியமைக்கும் திட்டத்தின் பிரகாரம் ஒரு கிலோமீட்டர் மின்சார வேலி அமைப்பதற்கு 15 லட்சம் ரூபா செலவாகின்றது. இந்நிலையில் மனிதனுக்கும் அதேநேரம் யானைகளுக்கும் பாதிப்பில்லாமல் இந்தப் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காணப்பட வேண்டும். பெந்திவெவ பிரதேசத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய முறை வெற்றியளித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மக்கள் அது குறித்து திருப்தி வெளியிடுகின்றனர். பல தசாப்தங்களின் பின்னர் நிம்மதியாக உறங்கப்போவதாக கூறுகின்றனர். எனவே ஜனாதிபதி அமைத்துள்ள புதிய குழுவின் ஊடாக விடயங்கள் ஆராயப்பட்டு இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படவேண்டும். மேலும் வடக்கு கிழக்கிலும் இவ்வாறு பல பிரதேசங்கள் யானை-மனித மோதலினால் பாதிக்கப்படுகின்றன. விளை நிலங்கள், மக்களின் வீடுகள், சொத்துக்கள், என்பவற்றுக்கு அழிவு ஏற்படுகின்றன.

HEC_-Fence_2.png

இந்நிலையில் இந்த பிரதேசங்களிலும் இவ்வாறு செயல்பாட்டு ரீதியான மற்றும் நுட்ப ரீதியான பாதுகாப்பு ஏற்பாடுகள் இரண்டு தரப்புக்கும் பாதிப்பின்றி முன்னெடுக்கப்பட வேண்டும். கலாநிதி பிருத்திவிராஜின் கருத்தின் பிரகாரம் வடக்கு கிழக்கு பகுதிகளில் பாதிப்பு குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. எனவே வட கிழக்கு பகுதிகளில் இது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். வடக்கு கிழக்கிலும் இது தொடர்பான சம்பவங்களை ஊடகங்களில் பார்க்கின்றோம்.

 

எனவே அங்கும் மக்களையும் 9 அதேநேரம் யானைகளையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பு நடவடிக்கைகளால் யானைகள் பாதிக்கப்படாமல் இருப்பது முக்கியமாகும். எப்படியோ இலங்கையில் யானை – மனித மோதலை முடிவுக்கு கொண்டுவர காத்திரமான நடவடிக்கைகள் விரைவில் அவசியமாகின்றன.

https://www.virakesari.lk/article/139309

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் காட்டு யானை அச்சுறுத்தல் : அரச ஊழியர் வீட்டுத் திட்டத்தில் குடியிருக்க அஞ்சும் மக்கள்

By VISHNU

11 NOV, 2022 | 01:45 PM
image

வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத் திட்டம் பகுதிக்குள் புகுந்த காட்டு யானை அங்கு வசிக்கும் மக்களை அச்சுறுத்துவதால் அங்கு குடியேற மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். 

IMG_20221111_121658.jpg

அண்மைய சில தினங்களாக அரச ஊழியர் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த காட்டு யானை பயன் தரும் மரங்களை துவசம் செய்து அங்கு குடியிருக்கும் மக்களை அச்சுறுத்தி வருகின்றது. 

IMG_20221111_121715.jpg

இதனால் அப்பகுதியில் குடியேறுவதற்கு மக்கள் அச்சமடைந்து வருகின்றனர். சிலர் தமது குடியிருப்புக்களில் இரவில் தங்குவதற்கு அஞ்சி வேறு இடங்களில் இரவுப் பொழுதைக் கழித்து வருகின்றனர். 

காட்டு யானையின் அச்சுறுத்தல் குறித்து பொலிசார் மற்றும் கிராம அலுவலகருக்கு அறிவித்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். 

ஓமந்தை அரச ஊழியர் குடியிருப்புக்குள் தற்போது காட்டு யானையின் அச்சுறுத்தல் அதிகளவில் இடம்பெற்று வருகின்றது.

இதனைக்கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அங்கு குடியிருக்கும் மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/139736

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.