Jump to content

சரிந்த சுரங்கம், காபி தூளை சாப்பிட்டு 9 நாட்களாக உயிரைப் பிடித்திருந்த தொழிலாளர்கள் - எங்கே?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சரிந்த சுரங்கம், காபி தூளை சாப்பிட்டு 9 நாட்களாக உயிரைப் பிடித்திருந்த தொழிலாளர்கள் - எங்கே?

  • பென் டொபையாஸ்
  • பிபிசி நியூஸ்
7 நவம்பர் 2022
 

தென் கொரியாவில் 9 நாட்களாக காபி பவுடரை சாப்பிட்டு பிழைத்திருந்த சுரங்கத் தொழிலாளர்கள்

பட மூலாதாரம்,NEWS1

தென் கொரியாவில் இடிந்து விழுந்த துத்தநாக சுரங்கத்தில் ஒன்பது நாட்களாகச் சிக்கி, காபி பவுடரைச் சாப்பிட்டு உயிர் பிழைத்துக் கொண்டிருந்த சுரங்கத் தொழிலாளர்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளனர்.

62, 56 வயதுடைய ஆண்கள், நெருப்பு மூட்டி, நெகிழியால் கூடாரம் அமைத்து வெப்பத்தைத் தக்க வைத்து இருந்ததாக நம்பப்படுகிறது.

அவர்களுடைய உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

கடந்த வாரம் தலைநகர் சியோலில் ஏற்பட்ட நெரிசலில் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதற்கு தென் கொரியா தேசிய துக்கம் கடைபிடித்து வரும் காலகட்டத்தில் இது நடந்துள்ளது.

 

நாட்டின் கிழக்கில் உள்ள போங்வாவில் அக்டோபர் 26ஆம் தேதியன்று அவர்கள் பணியாற்றிக் கொண்டிருந்த துத்தநாக சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் இரண்டு சுரங்கத் தொழிலாளர்கள் நிலத்தடியில் கிட்டத்தட்ட 200 மீட்டர் (650 அடி) ஆழத்தில் சிக்கித் தவித்தனர்.

அவர்கள் இறுதியாக நவம்பர் 4ஆம் தேதி இரவு மீட்கப்பட்டனர். அவர்களுக்கான தேடுதல் தொடங்கி ஒன்பது நாட்களுக்கும் மேலானது. இருவரும் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் பூரண குணமடைவார்கள் என்று மருத்துவர் கூறினார்.

அதிபர் யூன் சுக்-யோல் அவர்கள் மீட்கப்பட்டது "உண்மையில் அதிசயம் தான்" என்று கூறினார்.

 

சிவப்புக் கோடு

 

சிவப்புக் கோடு

"வாழ்க்கைக்கும் மரணத்திற்கு நடுவில் இருந்து பாதுகாப்பாக மீண்டு வந்ததற்கு உங்களுக்கு மிக்க நன்றி," என்று அவர் ஃபேஸ்புக்கில் எழுதினார்.

சுரங்கத் தொழிலாளர்கள் கூரையிலிருந்து விழுந்த தண்ணீரைக் குடித்தும் உடனடி காபி மிக்ஸ் பவுடரை உணவாகப் பயன்படுத்தியும் உயிர் பிழைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தென் கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனத்தின்படி, சுரங்கத் தொழிலாளர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அவசரக்கால பணியாளர்கள் வியாழக்கிழமையன்று நிலத்தடியில் துளையிட்டு சிறிய கேமராவை செருகியபோது மீட்பு நடவடிக்கை தொடங்கியது.

பல சுரங்கப் பாதைகள் சந்திக்கும் ஒரு விசாலமான அறையில், வெப்பநிலையைத் தக்க வைக்க தோளோடு தோளாக அவர்கள் அமர்ந்திருந்தது இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.

தப்பிப் பிழைத்தவர்களில் ஒருவரின் உறவினர், அவர் மீட்கப்பட்டு வெளியே வந்தபோது அடையாளம் காண முடியவில்லை என்று விவரித்தார். ஏனென்றால், அவர் இருட்டில் கிட்டத்தட்ட பத்து நாட்களாக இருந்ததால், வெளியே வரும்போது கண்களை மறைத்திருந்தார்.

ஏஎஃப்பி செய்தி முகமை, அந்த உறவினர் அவர் மீட்கப்பட்டதை "கனவில் நடப்பதைப் போன்ற விசித்திரமான நிகழ்வு" என்று விவரித்தார் எனத் தெரிவித்துள்ளது.

https://www.bbc.com/tamil/global-63539214

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் மிகவும் போராட்டமான உயிர் பிழைப்பு.......!  🤔

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.