Jump to content

800 கொவிட் 19 தொற்றாளர்களுடன் சிட்னிக்கு வந்த பாரிய உல்லாசக் கப்பல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

800 கொவிட் 19 தொற்றாளர்களுடன் சிட்னிக்கு வந்த பாரிய உல்லாசக் கப்பல்

By DIGITAL DESK 3

13 NOV, 2022 | 08:32 AM
image

சுமார் 800 கொவிட் 19 தொற்றாளர்களைக் கொண்ட உல்லாசப் பயணிகள் கப்பலொன்று அவுஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகத்தை நேற்று சென்றடைந்தது.

மெஜஸ்டிக் பிரின்சஸ் எனும் இக்கப்பலில் மொத்தமாக சுமார் 4,600 பயணிகளும் ஊழியர்களும் இருந்தனர். நியூஸிலாந்திலிருந்து இக்கப்பல்  பயணத்தை ஆரம்பித்திருந்தது.

12 நாள் பயணத்தின் இடையில், கப்பலிலிருந்த பெரும் எண்ணிக்கையானோருக்கு கொவிட்19 தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக இக்கப்பலை இயக்கும் கார்னிவேல் அவுஸ்திரேலியா நிறுவனத்தன் தலைவர் மார்கரிட் பிட்ஸ்ஜெரால்ட் தெரிவித்துள்ளார்.

 

The-Majestic-Princess-cruise-ship--AFP-P

The-Majestic-Princess-cruise-ship--AFP-Photo.-5.jpg

தொற்றுடைய அனைவருக்கும் அறிகுறிகள் இல்லை, அல்லது இலேசான அறிகுறிகளே இருந்தன எனஅவர் கூறியுள்ளார்.

தொற்றுடைய அனைவரும் தனிமைப்படுத்தப்படுத்தல் காலத்தை பூர்த்தி செய்வதற்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/139836

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.