Jump to content

விசேட பாதுகாப்புக்கு மத்தியில் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

May be an illustration

 

May be a cartoon

 

May be a cartoon

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of text
 
314735504_168399675797486_7911537874135759929_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=8bfeb9&_nc_ohc=egaXbdT0Tu0AX-kF-Rb&_nc_oc=AQnGc7tKjB9O0qm7XTFx631pyH3fPaQ7zfZ5AVYDRTlUDjS4sBxSOgQ8eBbf6CiEgnY&_nc_ht=scontent-frt3-1.xx&oh=00_AfAg8L-TkIg9n0F3-jJhAH6xa3I4MCsraWmD8Kf2_L_xeg&oe=637D1CE6
 
 
இலங்கையின் வரவு செலவு திட்டம் என்பது ஒரு சம்பிரதாய சடங்கு. அதன் மூலம் நாடும் மக்களும் எந்த முன்னேற்றத்தையும் எந்த காலத்திலும் கண்டதில்லை என்பது தான் வரலாறு.
 
இதுவரை இலங்கை 77 வரவு செலவு திட்டங்களை சமர்ப்பித்து விட்டது . அதில் எதுவும் வரவு திட்டம் அல்ல யாவும் செலவு திட்டம் தான். முதன் முதலாக 1949 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் துண்டுவிழும் தொகையை ஈடு செய்ய வெளிநாட்டில் 60 ஆயிரம் டொலரை இலங்கை கடன் வாங்கியது.
 
அன்றிலிருந்து இன்று வரை கடன் வாங்கியே தனது அரச செலவீன துண்டுவிழும் தொகையை ஈடு செய்து வருகின்றது. இப்போது 60 பில்லியன் டொலர் வரை நாடு கடன்.
 
76 முறை தோற்றுபோன ஒருவன் 77 ஆவது தடவை வெற்றி பெறுவான் என நம்புவதற்கு மக்கள் அடி முட்டாள்கள் அல்ல.
 
ஆம் கடந்த வருடம் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில்
மொத்த அரச செலவீனம் 5.2 ரில்லியன், உத்தேச வருமானம் 2.2 ரில்லியன். துண்டு விழும் தொகை 03 ரில்லியன்.
 
ஆம் இந்த 03 ரில்லியனும் கடன் தான் வாங்கவேண்டும். இதில் 05 பில்லியன் டொலர் வரை வெளிநாட்டு கடனுக்கான வட்டி வருகின்றது. 2022 இந்த வருடம் வெளிநாடுகளில் வாங்கிய கடன் 08 பில்லியன் டொலரை கடந்திருக்கும். இந்தியா மட்டும் இந்தவருடம் 04 பில்லியன் டொலரை கடனாக கொடுத்துள்ளது. சீனாவிடம் 03 பில்லியன் டொலரிற்கு மேல் இந்த வருடம் கடன் வாங்கப்பட்டுள்ளது.
 
இந்த வருடம் அச்சடித்த பணம் 02 ரில்லியனுக்கு அண்மையாக இருக்கும். திரு ரணில் விக்கிரமசிங்கா பிரதமராக இருக்கும் போது 01 ரில்லியன் அதாவது ஒரு இலட்சம் கோடி ரூபா அச்சிட்டார் என்பது குறிப்பிடதக்கது.
 
அடுத்த வருடம் 2023 இற்கான வரவு செலவு திட்டம் ஐனாதிபதி விக்கிரமசிங்காவால் 14.11.2022 அன்று சமர்ப்பிக்கப்பட்டது.
 
அதில் 2023 ஆம் ஆண்டிற்கான அரச செலவீனாம் 7.8 ரில்லியன். உத்தேச வருமானம் 3.4 ரில்லியன். துண்டு விழும் தொகை 4.4 ரில்லியன். 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டு 1.4 ரில்லியன் வரை அதிகமான செலவீனம் ஏற்படுகிறது.
 
இப்போது இந்த துண்டு விழும் தொகையை எப்பாடு பட்டாவது வெளிநாடுகளிடம் கடன் வாங்க வேண்டும். இல்லையேல் அரசிடம் பணம் இருக்காது. அப்படி ஆயின் அரச செலவீனங்களை செய்வதற்கு பணத்தை அச்சடிக்கவேண்டும். 4.9 ரில்லியன் ரூபா என்பது 4.9 இலட்சம் கோடி ரூபா.
 
ஒரு மாதம் நாற்பது ஆயிரத்து எண்நூற்று முப்பத்து மூன்று கோடி ( 40, 833 கோடி ) ரூபா பற்றாக்குறை. அடுத்த வருடம் 2023 ஒரு நாளிற்கான அரச செலவீன பற்றாக்குறை ஆயிரத்தி முன்நூற்று அறுபத்து ஒரு கோடி ( 1361 கோடி ) ரூபா.
 
இப்போது இரண்டு தெரிவுகள் தான் இருக்கிறது. ஒன்று வெளிநாடுகளிடம் கடன் வாங்குவது அல்லது பணத்தை அச்சிடுவது.
 
இவ்வளவு தொகை பணத்தை அச்சிட்டால் பணவீக்கம் அதிகரிக்கும் பொருட்கள் விலை பலமடங்கு உயரும். மக்கள் வாழ வழியின்றி போராட்டம் செய்வார்கள் இந்த வருடம் இப்படி தான் ராஐபக்சா சாம்ராட்சியம் கவிழ்ந்தது.
 
அடுத்த வருடம் இலங்கைக்கு கடன் கொடுக்க எந்த நாடும் இல்லை. 74 வருடங்களாக கடனில் மூழ்கி கொண்டிருக்கும் இலங்கை எனும் கப்பலை ஒரே நாளில் தூக்கி நிறுத்த கடவுளாலும் முடியாது.
 
இப்போது தந்தை செல்வா எமக்கு ஞாபகத்திற்கு வருகிறார்.அவர் அன்று தமிழர்களை இனி கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என்றார். இன்றோ இலங்கை முழுவதையும் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் எனும் நிலை வந்துள்ளது.
 
இங்கு இழப்பதற்கு தமிழ் மக்களிடம் எதுவும் இல்லை. தமிழ் மக்கள் இந்த நாட்டின் இறக்குமதியாளர்களோ , ஏற்றுமதியாளர்களோ அல்ல. சிங்கள மக்களே பெருமளவு இறக்குமதிகளையும் , ஏற்றுமதிகளையும் செய்கின்றனர். அன்று இலங்கைதீவில் ஒரு இனத்தை மோட்டுத்தனமாக பகைத்துக்கொண்டு அவர்களின் பொருளாதார கட்டமைப்புக்கள் மீது தொடர்ச்சியாக இனகலவரத்தை ( 1956, 1983 ) ஏவி விட்டு அவர்களின் பொருளாதாரத்தை அழித்ததன் பலனை இன்று சிங்கள தேசமே சுமக்கின்றது.
 
அதற்கு பின் தொடர்ச்சியாக 40 வருடங்களாக தமிழ் மக்களின் அரச செலவீனத்தையும் சிங்கள மக்களே சுமக்கின்றனர். இந்த சுமையை தாங்கும் தகுதி நிலையின் இறுதி இடத்தில் நிற்கும் சிங்கள மக்களும் சிங்கள தேசமும் ஒரு நாள் சினம் கொண்டு எழும் அந்த நாள் தொலைவில் இல்லை. அந்த சினம் இலங்கைதீவை இதுவரை ஆண்ட சிஸ்ரத்தின் மீது சீறி பாயும் என்பது திண்ணம்.
 
முன்னாள் இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுனர் கூறியது போல ரணில் விக்கிரமசிங்கா தோல்வியடைவாராக இருந்தால் அது இலங்கை தீவின் அடுத்த சில ஆண்டுகளிற்கான தோல்வி யாக இருக்காது. அது இலங்கை ஒரு தேசமாக இருத்தலின் தோல்வியாகவே அமையும்..
 
ஆம் அதை நாமும் ஏற்றுக்கொள்கிறோம் இலங்கைதீவின் இன முரண்பாடு தீர்க்கப்பட்டு தமிழ் மக்கள் சமமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அவர்களும் இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப சந்தர்ப்பம் வழங்கப்பவில்லையேல் இலங்கை தீவு இரு தேசங்களாகவோ ஏன் இரு நாடுகளாகவோ சிதறி போவதை யாராலும் தடுக்கமுடியாது.
 
இது 74 வருட வரலாற்றில் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் ஆகும். அதனால் தான் என்னவோ திருவாளர் விக்கிரமசிங்கா 75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன் தமிழ் மக்களின்
இன பிரச்சினைக்கு தீர்வை வழங்குவேன் என பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
 
திரு ரணில் விக்கிரமசிங்கா இலங்கை அரசியல் வாதிகளுடன் ஒப்பிடும்போது சிறந்த அரசியல் இராஐதந்திரி, சிறந்த பொருளாதார நிபுணர் என்பதில் எமக்கு சந்தேகம் இல்லை. ஆனாலும் அவர் பௌத்த சிங்கள பேரினவாத சகதிக்குள் இருந்து வெளியே எழுந்து வராதவரை இலங்கை தீவில் எந்த அதிசயமும் நிகழ்ந்து விடப் போவதில்லை.
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.