Jump to content

அவுஸ்திரேலியாவில் கடும்மழை, வெள்ளம் : ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவில் கடும்மழை, வெள்ளம் : ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்!

By DIGITAL DESK 2

15 NOV, 2022 | 10:43 AM
image

 

அவுஸ்திரேலியாவில்  பெய்து வரும் கடும்மழையால் தெற்கு ஆஸ்திரேலியாவின் பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் நியு சௌத்வேல்ஸ், வடகிழக்கு விக்டோரியா மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் மழை கடும்மழை பெய்துள்ளது.

இதனால் பல நகரங்களில் வெள்ளம் சூழ்ந்தது. குடியிருப்புகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். 

தெற்கு அவுஸ்திரேலியாவின் புறநகர் பகுதிகளில் மழை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 

Australia-flash-flooding.jpg

இந்த கடும்மழை மேசமான வெள்ள சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என அவுஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேன்ஸ் கவலை தெரிவித்துள்ளார். மழை நீர் அகற்றும் பணியிலும், மிட்பு நடவடிக்கைகளிலும் அவுஸ்திரேலிய அரசு தீவிரமாக களமிறங்கியுள்ளது.

நியூ சௌத்வேல்ஸ் பகுதிகளில் வீதிகள், பாலங்கள் மற்றும் விவசாய நிலங்கள் என அனைத்தும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

சிட்னி நகரில் இருந்து 300 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் மொலோங் நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மொலோங் நகரில் வீதியில் தேங்கியிருக்கும் மழைநீரில் வீட்டு உபயோகப் பொருட்கள் தண்ணீரில் மிதந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதனால் அதிவிரைவு மீட்பு படையினர் மொலோங் நகரில் முகாமிட்டு மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதே போல் மழையால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஈகுவோரோ நகரில் இருக்கும் பொதுமக்கள் அனைவரும் நகரை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடலோர பகுதிகளில் புவி வெப்பமயமாதலால் ஒழுங்கற்ற கால நிலை ஏற்பட்டு மிக கடும்மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஒழுங்கற்ற காலைநிலையால் விக்டோரிய மாகாணத்தில் ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழைழ 24 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்துள்ளது.

https://www.virakesari.lk/article/140057

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.