Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தின் ஆக்கிரமிப்பு மற்றும் சமூக ஊடுருவலை முன்நிறுத்தி பேரம் பேச வேண்டும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 5 people, tree and grass
 
வட்டக்கச்சி விவசாய பண்ணையில் 394 ஏக்கர் நிலப்பரப்ப்பை இராணுவம் ஆக்கிரமித்து இருக்கின்றது
ஜெயபுரத்தில் 120 ஏக்கர் பண்ணை இராணுவம் வசம் இருக்கின்றது
கிளிநொச்சி மலையாளபுரத்தில் 798 ஏக்கர் பொதுப்பண்ணை இராணுவத்தின் வசம் இருக்கின்றது
கிளிநொச்சி சாந்தபுரத்தில் 680 ஏக்கர் பண்ணை இராணுவம் வசம் இருக்கின்றது
முழங்காவில் 1,800 ஏக்கர் மர முந்திரிகை தோட்டத்தின் பெரும்பகுதி இன்னும் இராணுவத்திடம் இருக்கின்றது
முக்குப்பம் பகுதியில் உள்ள 100 ஏக்கர் தென்னம் தோட்டத்தை இன்றும் ஆக்கிரமித்து நிற்கின்றார்கள்
முல்லைத்தீவு தேராவில் 1,200 ஏக்கர் விவசாய பண்ணை இன்றும் இராணுவத்தினர் வசம் இருக்கின்றது
முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு பகுதியில் பல நூறு ஏக்கர் காடுகள் முழுமையாக அழிக்கப்பட்டு இராணுவ பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.
துணுக்காய் தேறாங்கண்டல் பண்ணையும் இராணுவம் ஆக்கிரமித்து இருக்கின்றது
கொக்குத்தொடுவாயில் முந்திரிகை செய்கைக்கு என தலா 25 ஏக்கர் வீதம் வழங்கப்பட்டிருந்த பல நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளையும் இராணுவம் ஆக்கிரமித்து இருக்கின்றது
மன்னார் வெள்ளாங்குளத்தின் 500 ஏக்கர் விவசாய பண்ணையும் இராணுவத்தினர் வசம் இருக்கின்றது
இதே போல வவுனியா செட்டிகுளம் பகுதியில் தனியார் நிலத்தில் இராணுவத்தின் பெரும் பண்ணை உள்ளது.
வவுனியா தமிழர் நிலம் பகுதியிலும் 25 ஏக்கர் பரப்பளவில் இராணுவ பண்ணை இருக்கின்றது
இதில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மேற்குறித்த விவசாய பண்ணைகள் ஊடக மட்டும் ஆண்டு தோறும் 15 மில்லியன் வருமானத்தை இலங்கை இராணுவத்தினர் உழைத்து வருகின்றார்கள்
அதே போன்று கிளிநொச்சி மாவட்ட பண்ணைகள் ஊடக 13 மில்லியன் ரூபா வருமானத்தை இராணுவத்தினர் சம்பாதித்து வருகின்றார்கள்..
இது போதாதென்று பாதுகாப்பு சார் காரணங்களை நுண்ணிய வடிவில் வன்னியின் வாழ்வாதாரப் பிரச்சனை களோடு பிணைத்து விட்டிருக்கிறார்கள்
குறிப்பாக பொருளாதாரம் சார்ந்து மாற்றுத் தெரிவில்லாமல் பண்ணைகளில் கூலி வேலை செய்தால் தான் பிழைக்கலாம் என்ற சூழலை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
இந்த இராணுவ பண்ணைகளை மூடி விவசாய கூட்டுறவு அமைப்புக்களிடம் வழங்கி அபிவிருத்தி செய்தால் வன்னி மட்டுமின்றி வடக்கு மகாணமே இலங்கை தீவின் விவசாய பொருளாதாரத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திற்கு கணிசமாக பங்களிக்க முடியும்
குறிப்பாக இந்த பண்ணைகளில் சேமிப்பு தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி வடிகால் வெள்ளத்தடுப்பு அணைகளை மேம்படுத்தி உற்பத்தித்திறன் மேம்பாடு, பௌதிக வள மேம்பாடு, நிலத்தடி நீர் முகாமைத்துவம்,போன்ற அடிப்படை மாற்றங்களை செய்து விவசாய சமூகத்தை வலுவடைய செய்ய முடியும்
உள்ளூர் விதை உற்பத்தி , சேவைகால பயிற்சிகள் , விவசாய தொழில்நுட்ப விரிவாக்கம் போன்ற பல்வேறு விடயஙக்ளுக்கு மேற்படி பண்ணைகளை பயன்படுத்த முடியும்
அதே போன்று சரியான உள்ளூடுகள் , இயற்கை உரம் போன்ற அடிப்படை விடயங்களை விவசாயிகளுக்கு உரிய நேரங்களில் இந்த பண்ணைகளை மக்கள் மயப்படுத்துவதன் ஊடக பெற்று கொடுக்க முடியும்
ஆனால் இராணுவ நீக்க பிரச்சனை என்பதால் செய்ய மறுக்கின்றார்கள்
இது போதாதெதென்று வடக்கு மாகாணத்தில் பெருமளவு வளமான விவசாய நிலப்பரப்பு இன்றும் இராணுவ ஆக்கிரமிப்பில் தான் இருக்கிறது
யாழ்ப்பாணத்தில் ஏறத்தாழ 3,000 ஏக்கர் நிலப்பரப்பில் இராணுவம் நிலை கொண்டு இருக்கிறது . அதே போல மேலும் 68 இடங்களை நிரந்தரமாக ஆக்கிரமிக்க முயற்சி செய்து வருகின்றார்கள்
முல்லைத்தீவு வட்டுவாகலில் 680 நிலப்பரப்பில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டு இருக்கின்றது. அதே போல கேப்பாபுலவில் 3,000 ஏக்கர் நிலப்பரப்பில் விமானப்படை ஆக்கிரமித்து இருக்கிறது
மன்னார் சன்னர் பகுதியில் 1,00 ஏக்கர் நிலப்பரப்பை ஆக்கிரமித்து இராணுவ முகாம் அமைத்து இருக்கிறது அதே போல முள்ளிக்குளத்தில் 600 ஏக்கர் நிலப்பகுதியை ஆக்கிரமித்து இராணுவ முகாம் அமைக்கப்பட்டு இருக்கிறது
வவுனியா புளியங்குளம் பகுதியில் தனியார் காணிகளை அபகரித்து சிறப்பு அதிரடிப் படை முகாம் உள்ளது.
வவுனியா, மருதோடை சந்தியில் பல ஏக்கர் தனியார் நிலத்தில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு, ஒட்டிசுட்டான்பகுதியில் 15 ஏக்கர் தனியார் நிலத்தில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது .
ஒட்டுசுட்டான் சந்தியில் 50 ஏக்கர் அபகரிக்கப்பட்டு (சுடலை உட்பட) இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட செயலக 2019 ஆம் ஆண்டு புள்ளிவிபரங்களின்படி, முல்லைத்தீவு மாவட்டத்தில் 679 ஏக்கர் தனியார் காணிகளும் 3,178 ஏக்கர் அரச காணிகளும் படையினர் வசம் இருந்தன
ஆனால் மேலதிகமாக பல ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை இராணுவம் தனது முகாம்களுக்காகவும் குடியிருப்புக்களுக்காகவும் கைவசப்படுத்தி வைத்திருக்கிறது
உதாரணத்திற்கு திருமுருகண்டி கோவிலின் முன்னிருக்கும் யு9 வீதியின் அடுத்த பக்கத்தில் 1702 ஏக்கர் காணி இராணுவத்தினரிடம் இருந்து வருகின்றது. அது பற்றி கணக்கில்லை.
2017 ஆம் ஆண்டு “அடையாளம்”; ஆய்வு நிலையம் மேற்கொண்ட ஒரு ஆய்வில் 30,000 ஏக்கர் காணி மட்டில் இராணுவத்தினால் முல்லைத்தீவில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆக்கிரமிப்புக்குள் வடக்கின் பொருளாதாரம் முடங்கி கிடக்கின்றது . வடக்கு மாகாணம் பொருளாதார குறித்தும் அபிவிருத்தி குறித்தும் பேசும் எவரும் இந்த விடயங்களை பேசுவதில்லை
Foreign Remittance ஐ மட்டுமே நம்பி வடக்கு பொருளாதாரம் நீண்டகாலம் தாக்கு பிடிக்க முடியாது.
எமது மக்கள் பிரதிதிகள் இதை உறுதியாக கையில் எடுக்க வேண்டும். இராணுவத்தின் ஆக்கிரமிப்பு மற்றும் சமூக ஊடுருவலை முன்நிறுத்தி பேரம் பேச வேண்டும்.
பொருளாதார ஆக்ரமிப்புகளுக்கு எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடம் இல்லை என்பதை உறுதியாக சொல்ல வேண்டும்
 
https://www.facebook.com/photo/?fbid=588266679769615&set=a.350974220165530

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nunavilan said:

  · 
 
மேலே ... இராணுவம், கடற்படை, விமானப்படை பிடித்து வைத்துள்ள காணிகளின் 
மொத்த ஏக்கர் பரப்பளவை பார்க்க தலையை சுற்றுகின்றது.

இவை எதுவுமே... தமிழ் அரசியல் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாதா?
அல்லது தெரிந்தும் இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்காமல்... 
தமக்கு என்ன வந்தது என்று.. அசட்டையாக  இருக்கிறார்களா?

இதன் விளைவு... நாளை முழுத் தமிழினமும்  தமது நிலத்தை இழக்க வேண்டி வரும் 
என்ற எச்சரிக்கை உணர்வு கூட இல்லாத இவர்களுக்கு பாராளுமன்ற பதவி ஏன்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.