Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்+
பதியப்பட்டது (edited)

"தோற்றிடேல், மீறித் 

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

 

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!

 


s-g-santhan-music-group.webp

'ஓர் மேடைப் பாடல் நிகழ்ச்சியின் போது தேசியப்பாடகர் எஸ். ஜி. சாந்தனும் தமிழீழத்தின் போராளிகள் இசைக்குழுவினரும்'

 

தனது காந்தக்குரலால் தமிழீழ மக்களைக் கவர்ந்தவர்  தமிழீழத் தேசியப் பாடகர்களில் ஒருவரான அமரர் எஸ். ஜி. சாந்தன் அவர்கள் ஆவார். இவர் தமிழீழ விடுதலைப் போர்க்காலத்தில் 150இற்கும் மேற்பட்ட 'தமிழீழப் பாடல்'களைப் பாடியுள்ளார். நானறிந்த வரை விடுதலைப் போராட்டம் தொடர்பாக அதிகமான விடுதலைப் பாடல்களைப் பாடியவர் இவரே ஆவார். 

இவ்வாவணத்தினுள் எஸ். ஜி. சாந்தன் அவர்களின் 'எழுச்சிப் பாடல்'களை மூன்று பிரிவுகளாகத் தொகுத்து உரிய இறுவட்டுகளுடன் பதிவிட்டுள்ளேன். சில பாடல்கள் விடுபட்டிருக்கக் கூடும். விடுபட்டவற்றை அறிந்தவர்கள் தெரிவித்துதவுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

 

தனித்துப் பாடிய எழுச்சிப் பாடல்கள்

  1. வானம் பூமியானது - இவருடைய முதலாவது பாடல்... 1989 இல் வெளிவந்தது
  2. அடங்கிக் கிடந்த தமிழன் (இறுவெட்டு: வீரத்தின் விளைநிலம்)
  3. அடி அடி அடியென (இறுவெட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 03)
  4. ஆதியாய் அநாதியாய்
  5. அலையை அலையைப் (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 02)
  6. அலைகள் குமுறி (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 03)
  7. ஆழக் கடலெங்கும் (இறுவெட்டு: நெய்தல்)
  8. ஆனையிறவின் மேனி தடவி (இறுவெட்டு: அலையின் வரிகள்)
  9. இங்கு வந்து பிறந்தபின்பே (இறுவெட்டு: கரும்புலிகள்)
  10. இந்த மண் எங்களின் இது இவருடைய இரண்டாவது எழுச்சிப் பாடலும் தமிழீழத்திலிருந்து இசையமைக்கப்பட்டு வெளியான முதலாவது எழுச்சிப் பாடலுமாகும். இப்பாடலைத் தாங்கியபடி வெளியான இறுவெட்டே முதலாவது தமிழீழ இறுவெட்டாகும்... 1990 இல் வெளிவந்தது (இறுவெட்டு: இந்த மண் எங்களின் சொந்த மண்)
  11. இரவு பூத்து (அனுராதபுரம் தேடி/  எல்லாளன் நடவடிக்கை நாயகர்கள் நினைவில்)
  12. இனிவரும் இனிவரும் (இறுவெட்டு: ஆனையிறவு)
  13. ஈழத்திருமகள் (இறுவெட்டு: தாயகத்தாய்)
  14. ஊர் பெயரைச் சொல்லவா (இறுவெட்டு: தமிழீழ மொட்டுக்கள்)
  15. எங்களின் வாசலில் (இறுவெட்டு: வரும் பகை திரும்பும்)
  16. எத்தனை பேர்களை (இறுவெட்டு: வானம் தொடும் தூரம்)
  17. எந்தையர் ஆண்ட (இறுவெட்டு: புதியதோர் புறம்)
  18. எம்மண்ணில் எதிரிகள் (இறுவெட்டு: புதியதோர் புறம்)
  19. ஒரு கூட்டுக் கிளியாக (இறுவெட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 02)
  20. உள்ளுக்குள்ளே நெருப்பெரியும் (இறுவெட்டு: கரும்புலிகள் 2)
  21. கடலதை நாங்கள் (இறுவெட்டு: நெய்தல்)
  22. கடலலை எழுந்து (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 10)
  23. கடலின் மடியில் (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 07)
  24. கடலோரப் பூவாக ("உப்பில் உறைந்த உதிரங்கள்" திரைப்படத்திலிருந்து)
  25. கண்ணுக்குள்ளே வைத்து - இதுவே இவர் பாடிய கடைசி எழுச்சிப் பாடலாகும்
  26. கரும்புலிகள் என நாங்கள்
  27. கரும்புலி எழுதிடும் கடிதம் (இறுவெட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 04)
  28. களங்காண விரைகின்ற
  29. கல்லறை மேனியர்
  30. கல்லறைகள் விடை திறக்கும் (இறுவெட்டு: கல்லறை தழுவும் கானங்கள்)
  31. காற்றடிக்கும் திசைகள் (இறுவெட்டு: அலைபாடும் பரணி)
  32. கிழக்கு வானம் (இறுவெட்டு: பூநகரி நாயகன்)
  33. குயிலே பாடு (இறுவெட்டு: வேங்கைகளின் விடுதலை வேதங்கள்)
  34. கைகளில் விழுந்தது கிளிநொச்சி
  35. கோபுர தீபம் நீங்கள்
  36. கோணமலை எங்களது (இறுவெட்டு: இசைபாடும் திரிகோணம்)
  37. சண்டைகளின் நாயகனே (இறுவெட்டு: சமர்க்கள நாயகன்)
  38. சிங்களம் எங்களை கொன்று (இறுவெட்டு: புதியதோர் புறம்)
  39. சிட்டு சிட்டு சிட்டு  (இறுவெட்டு: வீரத்தின் விளைநிலம்)
  40. சீலன் புயலின் பாலன் (இறுவெட்டு: தீயில் எழும் தீரம்)
  41. சுற்றி வரக் கடலே (இறுவெட்டு: பசுந்தேசம்)
  42. தமிழீழத்தின் எல்லையை
  43. தாயவளே உன்னை (இறுவெட்டு: தாயகத்தாய்)
  44. திருமலையில் பகை (இறுவெட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 01)
  45. தூக்கம் ஏனடா (இறுவெட்டு: புதியதோர் புறம்)
  46. நித்திய புன்னகை (இறுவெட்டு: சிரிப்பின் சிறகு)
  47. நித்திய வாழ்வினில் (இறுவெட்டு: தேசத்தின் குரல்)
  48. நிலவே கண்ணுறங்க (இறுவெட்டு: வாகையின் வேர்கள்)
  49. நிலாக்கால நேரமிங்கே (இறுவெட்டு: ஊர் ஓசை)
  50. நீலக்கடலே பாடுமலையே (இறுவெட்டு: கடலிலே காவியம் படைப்போம்)
  51. நெஞ்சிலே இருந்த கோபம் (அனுராதபுரம் தேடி/ எல்லாளன் நடவடிக்கை நாயகர்கள் நினைவில்)
  52. பண்பாட்டுக்கு இசைவாக
  53. பாட்டுக்குள் கரும்புலி (இறுவெட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 01)
  54. பாயும் புலி அணி (இறுவெட்டு: விடியும் திசையில்)
  55. பிரபாகரன் எங்கள் தலைமை 
  56. புதிய சரிதம் எழுதிட 
  57. பெய்யுதே மழை (இறுவெட்டு: சிரிப்பின் சிறகு)
  58. பெருகும் கால நதியில் (இறுவெட்டு: போரிடும் வல்லமை சேர்ப்போம்)
  59. மாரி கால மேகம் தூவி (இறுவெட்டு: விளக்கேற்றும் நேரம்)
  60. மீண்டும் எனக்கொரு (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 09)
  61. விண்வரும் மேகங்கள் (இறுவெட்டு: வேங்கைகளின் விடுதலை வேதங்கள்)
  62. வேங்கை மாவீரரெல்லாம்
  63. மின்னல் சூழும் (லெப். கேணல் மதனாவின் நினைவாகப் பாடப்பட்ட இப்பாடலானது, 1999ம் ஆண்டு மார்ச் மாதம் வெளிவந்த நிதர்சனம் ஒளிவீச்சு 67வது இதழில் இடம்பெற்றுள்ளது.)

 

S-G-Santhan-Eelamsinger-1.jpeg 

பின்னணிப் பாடகர்களுடன் பாடிய எழுச்சிப் பாடல்கள்

  1. அன்னை தேசமே உடன் பின்னணிப் பாடகரான ?? (இறுவெட்டு: மண்ணுறங்கும் மாவீரம்)
  2. அழுது அழுது உடன் பின்னணிப் பாடகர்களான மணிமொழி & பாடகி (இறுவெட்டு: சிரிப்பின் சிறகு)
  3. இருளின் திசைகள் புலரும் உடன் ஜெயா. சுகுமார் மற்றும் பின்னணிப் பாடகர்களான பிறின்சி, மணிமொழி & தவமலர் (இறுவெட்டு: வெஞ்சமரின் வரிகள்)
  4. ஊருக்குப் போவோம் உடன் பின்னணிப் பாடகரான ?? (இறுவெட்டு: அலையின் வரிகள்)
  5. அஞ்சு வயதிலே அற்புதங்கள் (22:44) உடன் திருமலை சந்திரன் மற்றும் மணிமொழி மற்றும் பின்னணிப் பாடகர்களான பிறின்சி மற்றும் தவமலர் (1998ம் ஆண்டு மே மாதம் வெளிவந்த நிதர்சனம் ஒளிவீச்சு இதழுக்கான வாழ்த்துப் பாடல்)
  6. எதிரிகளின் பாசறையை மற்றும் அவரது குழுவினர் (இறுவெட்டு: இந்த மண் எங்களின் சொந்த மண்)
  7. கடலின் அலையில் உடன் பின்னணிப் பாடகரான ?? (இறுவெட்டு: புதிய காற்று)
  8. கரிகாலன் வாழ்ந்திடும் உடன் பின்னணிப் பாடகரான ?? (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 04)
  9. தாண்டிக்குளம் தாண்டி உடன் ஜெயா சுகுமார் மற்றும் பின்னணிப் பாடகர்களான ?? (இறுவெட்டு: விழித்திருப்போம்)
  10. பகை வாழ்ந்த குகை உடன் திருமலைச் சந்திரன் மற்றும் பின்னணிப் பாடகர்களான ???(இறுவெட்டு: முல்லைப் போர்)
  11. படைகொண்டு வந்த உடன் பின்னணிப் பாடகரான ?? (இறுவெட்டு: தீக்குளித்த நேரம்)
  12. வா பகையே உடன் பின்னணிப் பாடகரான ?? (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 13)
  13. வா வா என்றே உடன் வசீகரன் மற்றும் பின்னணிப் பாடகர்களான ?? ("கடலோரக்காற்று" திரைப்படத்திலிருந்து)
  14. வீரக் கடற்புலி உடன் பின்னணிப் பாடகரான மணிமொழி, பிறின்சி, மற்றும் திருமலைச் சந்திரன் (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 04)
  15. நீலக்கடலே அலை மோதும் உடன் ஜெயா. சுகுமார் மற்றும் பின்னணிப் பாடகர்களான ?? (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 08)
  16. நெஞ்சினிலே பஞ்சு வைத்து உடன் ?? மற்றும் பின்னணிப் பாடகர்களான ?? (இறுவெட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 05)
  17. புலிகளின் தாகம் மற்றும் பின்னணிப் பாடகர்களான ??
  18. பூங்கொடியாய் இருந்தாய் உடன் பின்னணிப் பாடகரான ?? (இறுவெட்டு: சூரியப் புதல்விகள்)
  19. வலையை ஏத்தடா அந்தோணி உடன் ?? (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 13)
  20. விடியும் திசையில் பயணம்  உடன் ஜெயா. சுகுமார் மற்றும் பின்னணிப் பாடகர்களாக மேஜர் சிட்டு மற்றும் தியாகராஜா ஆகியோர்
  21. விடியும் திசையில் ஒளிபரவிட உடன் நிரோஜன், திருமலை சந்திரன் மற்றும் பின்னணிப் பாடகரான மணிமொழி ("புயல் புகுந்த பூக்கள்" திரைப்படத்திலிருந்து)
  22. வில்லுப்பாட்டு உடன் ??? மற்றும் பின்னணிப் பாடகர்களான ?? (இறுவெட்டு: அனுராதபுரத்து அதிரடி)

 

 

shanthan.jpg

கூட்டாகப் பாடிய எழுச்சிப் பாடல்கள்

பெரும்பாலான பாடல்களில் தமிழீழப் பாடகர் சாந்தன் அவர்களுடன் கூடப் பாடியவர்கள் யாரென என்னால் பிரித்தறிய இயலாமலுள்ளதால் அவர்களைக் வினாக்குறியால் குறித்துள்ளேன். அறிந்தவர்கள் தெரிவித்துதவவும்.

  1. அடம்பன் கொடியும் மற்றும்???… (இறுவெட்டு: வானம் தொடும் தூரம்
  2. இன்னுமின்னும் கரும்புலி வெடிக்கும் உடன் ?? (இறுவெட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 03)
  3. எம் வேரினை அவனே உடன் மேரி (இறுவெட்டு: வரலாறு தந்த வல்லமை)
  4. உலகத் தமிழர் உடன் ஜெயா சுகுமார் மற்றும் ?? (இறுவெட்டு: ஊர் போகும் மேகங்கள்)
  5. கதியால் அரக்கும் மற்றும்???… (இறுவெட்டு: வானம் தொடும் தூரம்)
  6. கருவேங்கை புயலெனப் புகுந்தது உடன் ?? (இறுவெட்டு: தேசத்தின் புயல்கள் பாகம் 04)
  7. காலம் உன்னை களம் நோக்கி மற்றும்???… (இறுவெட்டு: வானம் தொடும் தூரம்)
  8. காலம் எழுதிய புதிய உடன் ??
  9. சுக்குநூறானது சிக்குறு உடன் ??
  10. தூரம் அதிகமில்லை மற்றும் அவரது குழுவினர் (இறுவெட்டு: வேங்கைகளின் விடுதலை வேதங்கள்)
  11. புதிய காற்று ஈழ மண்ணில் எழுந்தது (47:04 mins) உடன் திருமலைச் சந்திரன் மற்றும் மணிமொழி (கரும்புலி மேஜர் நிலவன் எழுதிய இப்பாடலானது 1997ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளிவந்த நிதர்சனம் ஒளிவீச்சு இதழில் இடம்பெற்றது)
  12. மனமே மனமே உடன் ?? (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 04)
  13. விடுதலை மகுடம் சூடிய உடன் நிரோஜன் மற்றும் ?? (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 08)
  14. விண்ணையாளும் சூரியனை உடன் கப்டன் இசையரசன் (இறுவெட்டு: தீயில் எழும் தீரம்)
  15. வீரப்படை வெகு வீரப்படை உடன் ?? (இறுவெட்டு: விடுதலை நெருப்புக்கள்)
  16. ஆனையிறவுக்கு சேலைகள்‌ உடன் திருமலைச் சந்திரன் (இறுவெட்டு: ஆனையிறவு)
  17. இடியா மழையா உடன் ஜெயா. சுகுமார் (இறுவெட்டு: தீயில் எழும் தீரம்)
  18. ஈடுவைத்து ஈடுவைத்து நந்தலாலா உடன் ஜெயா. சுகுமார் (இறுவெட்டு: ஆனையிறவு)
  19. ஈழமண் எரிகின்ற போதிலே உடன் ஜெயா. சுகுமார், மணிமொழி, தவமலர், நிரோஜன் & திருமலைச் சந்திரன் (இறுவெட்டு: கரும்புலிகள் 2)
  20. உறவுகள் வேரில் உடன் ஜெயா சுகுமார், பிறின்சி & மணிமொழி (2002ம் ஆண்டில் வெளிவந்த நிதர்சனம் ஒளிவீச்சு 100வது இதழுக்கான வாழ்த்துப் பாடல்)
  21. எதிரி வாய்கள் மௌனம் உடன் ஜெயா. சுகுமார்
  22. எம்மை நினைத்து யாரும் உடன் பார்வதி சிவபாதம் (இறுவெட்டு: கரும்புலிகள்)
  23. எரியும் நெருப்பில் உடன் தனுராஜ் (இறுவெட்டு: ஊர்க்குயில்)
  24. ஏறுது பார் கொடி உடன் சியாமளா (இறுவெட்டு: வேங்கைகளின் விடுதலை வேதங்கள்)
  25. ஒரு லட்சம் சூரியன் உடன் வசீகரன், பிறின்சி, மற்றும் மணிமொழி (இறுவெட்டு: விழி நிமிர்த்திய வீரம்)
  26. கண்ணீர் மழை மண்ணில் உடன் ஜெயா. சுகுமார், வசீகரன், பார்வதி சிவபாதம் & புவனா இரத்தினசிங்கம் (இறுவெட்டு: வரும் பகை திரும்பும்) -தலைவரின் பிறந்த நாளுக்காகப் பாடப்பட்ட இப்பாடலானது ஜனவரி-பெப்ரவரி 2004 அன்று வெளிவந்த நிதர்சனம் ஒளிவீச்சு 104வது இதழிலும் இடம்பெற்றுள்ளது
  27. கரிகாலன் படையிது உடன் மேஜர் சிட்டு
  28. கருவேங்கை ஆகிய காற்று உடன் திருமலைச் சந்திரன் மற்றும் சந்திரமோகன் (இறுவெட்டு: அனுராதபுரத்து அதிரடி)
  29. கல்லறையில் விளக்கேற்றி உடன் புவனா 
  30. காலை விடிகின்றதடா உடன் ஜெயா சுகுமார் மற்றும் திருமலைச் சந்திரன் (இறுவெட்டு: கரும்புலிகள் 2)
  31. காற்றில் கலந்த கடற்கரும்புலிகள் உடன் ஜெயா. சுகுமார், கௌசி மற்றும் பிறின்சி (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 02)
  32. குத்தாட்டம் போடடா உடன் சந்திரமோகன் மற்றும் கப்டன் இசையரசன்
  33. சங்கு முழங்கடா தமிழா உடன் மேஜர் சிட்டு (இறுவெட்டு: பூநகரி நாயகன்)
  34. சின்னஞ்சிறு ஊரு உடன் மணிமொழி (இறுவெட்டு: ஆனையிறவு)
  35. ‘சூரிய தேவனின்’ வேருகளே உடன் மணிமொழி மற்றும் தியாகராஜா (தனிப்பாடல்)
  36. தந்தனா பாடலாம் உடன் நிரோஜன் (இறுவெட்டு: அலைபாடும் பரணி)
  37. தமிழர் என்ற சொல்லிலே உடன் வசீகரன் (இறுவெட்டு: முடிசூடும் தலைவாசல்)
  38. தமிழர் தேசம் உடன் வசீகரன் மற்றும் சந்திரமோகன் (இறுவெட்டு: விழித்திருப்போம்)
  39. தலைநகர் மீட்க உடன் நிரோஜன் (இறுவெட்டு: இசைபாடும் திரிகோணம்)
  40. தாயக மண்ணின் காவலராகி உடன் ஜெயா. சுகுமார் மற்றும் ?? (இறுவெட்டு: கடற்கரும்புலிகள் பாகம் 08)
  41. தோளின் சுமைகளில் உடன் ஜெயா சுகுமார் (இறுவெட்டு: வெஞ்சமரின் வரிகள்)
  42. நிலவற்ற வானத்தில் உடன் ஜெயா. சுகுமார், மற்றும் நிரோஜன் (இறுவெட்டு: கடலிலே காவியம் படைப்போம்)
  43. நெருப்பாகி நெருப்பாகி உடன் வசீகரன் (இறுவெட்டு: கல்லறை தழுவும் கானங்கள்)
  44. நெருப்பில் விளைந்த உடன் பார்வதி சிவபாதம்
  45. பாரில் தமிழன் படும் உடன் ஜெயா. சுகுமார் மற்றும் நிரோஜன் (இறுவெட்டு: கடலிலே காவியம் படைப்போம்)
  46. புதிய உதயம் ஒன்றெதிரில் உடன் ஜெயா. சுகுமார், நிரோஜன் மற்றும் திருமலை சந்திரன்
  47. புதிய வருடமே உடன் திருமலைச் சந்திரன், சந்திரமோகன், சீலன், மணிமொழி & பிறின்சி
  48. பூ மலர்ந்தது கொடியினில் உடன் சியாமளா - 1990 (இறுவெட்டு: இந்த மண் எங்களின் எங்களின் சொந்த மண்)
  49. மல்லிகைப் பூக்களை உடன் சுகுமார் ("இன்னும் ஒரு நாடு" திரைப்படத்திலிருந்து)
  50. முல்லை மண் எங்களின் உடன் ஜெயா. சுகுமார் (இறுவெட்டு: முல்லைப் போர்)
  51. வட்டமதிமுகப் பெண்ணே உடன் பிறின்சி (இறுவெட்டு: வெல்லும் வரை செல்வோம்)
  52. வருக எங்கள் மக்களே உடன் மேஜர் சிட்டு ("காற்றுவெளி" திரைப்படத்திலிருந்து)
  53. வாசலில் வீசிடும் பூங்காற்று உடன் தியாகராஜா & மணிமொழி (1997ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதம் வெளிவந்த நிதர்சனம் ஒளிவீச்சு இதழுக்கான வாழ்த்துப் பாடல்)
  54. விடியும் விரைவில் உடன் தியாகராஜா
  55. வெள்ளிநிலா விளக்கேற்றும் உடன் மேஜர் சிட்டு (இறுவெட்டு: நெய்தல்)

 

உசாத்துணை:

 

சிறப்பு நன்றி:

இவ்வாவணத்தை செழுமைப்படுத்த உதவிய முகவரியற்ற யாழ் கள உறவிற்கு எனது மனமார்ந்த நன்றி.

  • முன்னர் என்னால் சேர்க்கப்பட்டிருந்தவற்றுள் அமரர் சாந்தனால் பாடப்படாதவற்றை அடையாளம் காண உதவினார்.
  • அமரர் சாந்தனால் பாடப்பட்ட 35 பாடல்களைக் கண்டுபிடிக்க உதவியதுடன் பல கூட்டு மற்றும் பின்னணிப் பாடகர்களை அடையாளம் கண்டும் தந்தார்.
  • மேலும், பாடல்களுக்கான பெரும்பாலான இறுவெட்டுக்களை அடையாளம் கண்டும் தந்தார்.

 

ஆக்கம் & வெளியீடு:
நன்னிச் சோழன்

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 2
  • நன்னிச் சோழன் changed the title to எஸ். ஜி. சாந்தன் அவர்களின் எழுச்சிப் பாடல்கள் தொகுப்பு - 87 பாடல்கள்
  • நன்னிச் சோழன் changed the title to எஸ். ஜி. சாந்தன் அவர்களின் எழுச்சிப் பாடல்கள் தொகுப்பு - 91 பாடல்கள்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

 தேசியப் பாடகர் எஸ் ஜி சாந்தனின் பக்திப்பாடல்கள் தொகுப்பு

 

 

 

Edited by நன்னிச் சோழன்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

தமிழீழ தேசப்பாடகர் எஸ்.ஜி. சாந்தன் ‘ஈழநாதம்’ நாளேட்டிற்கு வழங்கிய நேர்காணல்

 

மூலம்: ஈழநாதத்தின் ஆண்டுச் சிறப்பிதழ், 19|2|2003, பக்: 27 & 38
நேர்காணல்: சு. பாஸ்கரன், பூ. சுபாநந்
தட்டச்சு: கள உறுப்பினர் ஒருவர்

 

SG santhan.png

 

கலைகள் ஒவ்வொன்றும் தம்வடிவங்களில் நின்று உணர்த்தும் தத்துவங்களால் அது பல்வேறு பெயர்களைப் பெறுகின்றது. இன்றைய காலகட்டத்தில் நாட்டின் நெருக்கடியான சூழ்நிலையிலும் மனிதன் மனிதனாக வாழ முடியாத நிலையில் மனவிரக்தியடைந்து சீரழிந்த வாழ்வை எதிர்நோக்கிக் கொண்டு இருக்கும் வேளையில் அவனது துயரைப்போக்கும் ஒரு சாதனமாக இசைக்கலையுடன் இணைந்த பாடற்கலை உள்ளது.

ஆதிகால மனிதர்களும், யோகிகளும் தவஞ்செய்யும் முனிவர்களும் வேட்டையாடும் மக்களும், தாம் காதாற் கேட்ட ஒலிகளைக் கொண்டு இசைக்கருவிகளை தயாரித்து அவனது நாவினால் பிறக்கின்ற ஒலியையும் இணைத்து பாடும் மரபுவழி உருவாகியது. அந்த வகையில் தமிழீழத்தில் இன ஒடுக்குமுறை தலைவிரித்துத் தாண்டவமாடும் வேளை தனது கண்களால் கண்ட சம்பவங்களை கவி வடிவிலே, கவிஞர்கள் எழுதிய வரிகளுக்கு உயிர்வடிவம் கொடுத்தவர்கள் தமிழீழக் கலைஞர்கள். இவர்களின் பணி தமிழீழ போராட்ட வரலாற்றில் மிகவும் உன்னத பணியாக அமைகின்றது.

அந்தவகையில் தமிழீழ இசைக்கலைஞர்கள் இசையமைப்பு மூலம் 150இற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி தமிழீழத்திலும் வெளியுலக நாடுகளிலும் முதன்மையான இடத்தைப் பிடித்துக் கொண்ட பாடகர் எஸ்.ஜீ. சாந்தன் அவர்கள். அவர்களுடனான நேர்காணலை மேற்கொண்ட போது "கவிஞர்களின் கவி வரிகளுக்கு நாங்கள் உயிர் வடிவம் கொடுக்கின்றோம்," எனக்கூறிய அவர் தனது கலையுலக வரலாற்றை தொடர்கின்றார்.

 

  • கேள்வி: தங்களுக்கு இக்கலைத்துறையில் எவ்வாறு ஆர்வம் உருவாகியது?

கலைத்துறையில் எமது குடும்பத்தில் முன்னர் எவரும் ஈடுபாடு கொண்டிருக்கவில்லை. அனேகமாக எங்களுடைய ஊரில் எல்லோரும் பாடக்கூடியவர்களாகத்தான் காணப்படுகின்றனர். எங்களுடைய ஊர் புங்குடுதீவு. அனேகமாக பெண்களாக இருந்தால் என்ன, ஆண்களாக இருந்தால் என்ன. எல்லோரும் ஓரளவு பாடக்கூடியவர்கள்தான். கேட்பதற்கும் இனிமையாக இருக்கும். ஏதோ ஒரு சூழ்நிலையில் ஒரு ராகத்தை அறிந்து இருப்பார்கள். காலையில் தேவாரத்தைப் பாடினால் பூபாளம் - அதை அறியாமலே பூபாளத்தைப் பாட வேண்டும்.

சின்ன வயதில் எங்களுடைய ஊர்க் கோயில்களில் 'கண்ணன் கோஷ்டி', 'அருணா கோஷ்டிகள்' வரும்போது மிக ஆர்வமாக முன்னுக்கு இருந்து கேட்டுக் கொண்டிருப்பேன். அந்தக் காலத்தில் எங்கள் ஊரில் காரைக் காண்பதென்றால் பெரிய கஷ்ரம். சைக்கிள் காண்பதென்றல் கஷ்ரம். இந்தக் கோஷ்டிகள் வந்தால் எங்கு என்றாலும் நடந்தே போய்ப் பார்ப்போம்.

அந்தக் கோஷ்டிகள் போய் முடிய பூவரசம் மரங்களில் ஏறியிருந்து நாங்கள் பாடத்தொடங்குவோம். என்னுடைய பாட்டைக் கேட்டுக்கொண்டிருக்கும் எல்லாரும் "நல்லா பாடுகின்றாயடா தம்பி" என்று சொல்லுவார்கள். அதனால் எனக்கு கலைத்துறையில் ஒரு ஆர்வம் ஏற்பட்டது.

 

  • கேள்வி: நீங்கள் இசைத்துறையில் காலடி எடுத்து வைத்து முதன் முதல் பாடிய பாடல் எது?

கொழும்புக்கு சிவராத்திரி விழாவுக்கு நான் போயிருந்தேன். கொழும்பு கதிரேசன் கோயிலில் என்னைப் பாடவைத்தார்கள் அப்போது நான் 'மருதமலை மாமணியே முருகையா....' என்ற பாடலைப்பாடினேன். எனக்கு அப்போது தாளம், சுருதி ஒன்றும் தெரியாது என்னுடைய விருப்பப்படி ஏதோ பாடினேன். அப்போது எனக்கு வயது பன்னிரெண்டு. அது தான் நான் இசைத்துறையில் காலடி எடுத்து வைத்த முதற் பாடலாக அமைந்தது. அப்படித் தொடங்கிய எனது வாழ்க்கை இசைத்துறையோடு போய்விட்டது.

 

  • கேள்வி: நீங்கள் தமிழர்களின் போராட்டம் சம்பந்தமான ஏராளமான பாடல்களை பாடியுள்ளதாகத் தெரிகின்றது. ஏன் அவ்வாறான பாடல்களைப் பாடுவதற்கு முன்வந்தீர்கள்?

சினிமாப் பாடல்களில் வருகின்ற போராட்டம் சம்பந்தமாக வரும் பாடல்களையே முதலில் பாடி வந்தோம், இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக் காலங்களில் ஒரு மாவீரர் நாள், முதலாவது மாவீரர் நாள் நேரம்; கோணாவில் என்ற இடத்தில் நிகழ்வொன்று நடைபெற்றது. எனது நண்பர் கணேஸ் என்பவர் ஒரு பாடலை எழுதினார்.

'வானம் பூமியானது, பூமி வானமானது. இந்த புழுதியெல்லாம் குருதியானது......என்ற பாடலையே நான் மெட்டமைத்துப் பாடினேன். புதுவை அண்ணா மற்றவர்கள் அந்த வீடியோ ஒலிநாடாவைப் பார்த்துவிட்டு எனது வீட்டிற்கு வந்து, "இந்தியாவில் உள்ள இசையமைப்பாளர்களின் இசையில் இங்குள்ள பாடகர்கள் பாடவேண்டும்.” என்று சொன்னார்கள். 'இந்த மண் எங்களின் சொந்த மண்' என்ற ஒலிப்பதிவு நாடா இங்கு பரீட்சாத்தமாகவே தயாரிக்கப்பட்டது. ஆனால், அது வெற்றியளித்தது. இதனால் இங்குள்ள இசையமைப்பாளர்களின் இசையில் இங்கு பாடல்கள் பாடப்பட்டன.

போராட்டத்தில் இராணுவத்தினராலும் மாற்று இயக்கங்களினாலும் பெரியதுன்பங்களை அனுபவித்திருக்கிறோம். அத்தோடு எனது நெருங்கிய நண்பர்களெல்லாம் போராளிகளாக இருந்தார்கள். அந்த நேரம் இரகசியமாக வந்து சந்தித்து விட்டுப் போவார்கள். அவர்களுடன் பழகி உண்டு உறங்கி வாழ்ந்திருக்கின்றேன். சில வேளை அவரை அடுத்த நாள் வித்துடலாக கூடக்கண்ட அனுபவங்கள் நிறைய உண்டு. என்றுதான் சொல்லவேண்டும்.

 

  • கேள்வி: மக்களின் நேரடியான போராட்டப் பங்களிப்பு - எழுச்சி தொடர்பாக பாடல்கள் ஏதாவது பாடியிருக்கின்றீர்களா?

மக்களின் எழுச்சி சம்பந்தமாகவும் கூடுதலான பாடல்கள் பாடியுள்ளேன். எல்லைப் படைகளாக களமுனைகளில் காவலில் நின்ற எல்லைப்படை வீரர்களைப் பாடியிருக்கின்றேன். அதாவது 'தமிழீழத்தின் எல்லையை காத்திட நினைப்பவர் எல்லைப்படை...' என்ற பாடலைக்குறிப்பிடலாம். அது ஒலிப்பதிவு செய்யப்படவில்லை. மக்களோடு பழகியமையால் இவ்வாறு உண்மைச் சம்பவங்களை உணர முடிகின்றது.

மக்கள் பற்றிப் பாடுவது எங்களுடைய திறமையில்லை. அது கவிஞர்களுடைய திறமை. அவர்கள் அந்த வரிகளை எழுதுவார்கள், நாங்கள் அதற்கு உயிர் கொடுக்கின்றோம்.

அதுதான் எங்களுடைய வேலை. அந்த வரிகளினை உச்சரிக்கின்ற விதத்தை இசையமைப்பாளர்கள் சொல்லுவார்கள். அது கவிஞர்களுக்குரிய வெற்றிகள் என்று தான் சொல்ல வேண்டும்.

 

  • கேள்வி: நீங்கள் யாருடைய பாடல்களை கூடுதலாகப் பாடியிருக்கின்றீர்கள்?

கூடுதலாக புதுவை அண்ணாவின் பாடல்களைத்தான் பாடியிருக்கின்றேன். பண்டிதர் பரந்தாமன் அவர்கள் பண்டிதர் ச வே. பஞ்சாட்சரம் அவர்கள் ஆகியோரின் பாடல்களை குறிப்பிடலாம். இந்தப் பாடலை சாந்தன் தான் பாடவேண்டும் என்று சொல்லுவார்கள். என்னுடைய உச்சரிப்பு கவிஞர்கள் எதிர்பார்க்கின்றபடி இருப்பது - அவர்கள் நினைத்தவாறு பாடல்கள் வெளிவருவது என்பதால் அப்படிக் கேட்கிறார்கள்.

 

  • கேள்வி: உங்களுடைய குடும்ப நிலை பற்றியும் கலைத்துறை பற்றியும் கூறுவீர்களா?

எங்களுடைய அப்பா ஒரு முதலாளி. கொழும்பில் கடை வைத்திருந்தார். பதினேழு வருடங்கள் கொழும்பில் தான் இருந்தோம். அனேகமான எங்களுடைய தீவகப்பகுதி மக்கள் வியாபாரிகளாகத்தான் இருந்தார்கள். அந்த நேரத்தில் ஒரு உன்னதமான நிலையில் எங்களுடைய அப்பா இருந்தார்.

ஆரம்பத்தில் ஒரு கல்வீட்டில் இருந்தோம். எங்களுடைய ஊரில் ஐந்து கல்வீடுகளில் ஒன்று எங்களுடையது. பிறகு, வியாபாரம் அடிபட்டுப் போகக் கொழும்பில் இருந்து கிளிநொச்சிக்கு வந்தோம்.

இங்கு மிகவும் கஷ்ரமான நிலையில் நீச்சலடிப்பு. அதாவது இசையை மட்டும் நம்பியிருக்கமுடியாது. இந்தியாவிற்கு என்றால் இது பொருந்தும். ஆனால் தமிழீழத்தைப் பொறுத்தளவில் கலையால் உயர்ந்தவர்கள் என்றால் - பொருளாதார ரீதியாக எவருமே உயரவில்லை என்றே சொல்லவேண்டும். அப்படி கேள்விப்பட்டதும் இல்லை. ஏதாவது ஒரு உத்தியோகத்தை செய்து கொண்டு இதை ஒரு பக்கத் தொழிலாகச் செய்யலாமே தவிர இதை நிரந்தரமாகச் செய்ய இயலாது.

நானும் அப்படித்தான் எதிர்நீச்சல் போட்டு மிகவும் சிரமப்பட்டிருக்கிறேன். வன்னியில் ஒரு நிகழ்ச்சி என்றால் கால்நடையாக நடந்து போய் பாடியிருக்கின்றோம். என்னுடைய ஆர்வம்தான் என்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தது.

நான் என்னுடைய கல்வியை சிறிசண்முகானந்தா வித்தியாசாலையில் எட்டாம் வகுப்புடன் நிறுத்திவிட்டேன். நான் பாட்டுகளைப் பாடினால் எனது தந்தையார் ஏசுவார்."இந்தச் சினிமாத் தொழில் எல்லாம் வேண்டாம் கடையில் போய்நில்." என்று சொந்தக்காரன் கடையில் விடுவார். நான் பதினைந்து நாட்களுக்குள் ஓடி வந்துவிடுவேன். கலைத்துறையில் எனது வழிகாட்டிகள் எனப்பலரைச் சொல்லலாம். ஆர்மோனியத்துடன் பாடும்போது ராமநாதன் என்பவர் தான் ஆர்மோனியம் வாசித்தவர். அவர் தனக்கு தெரிந்ததை எனக்குச் சொல்லித் தருவார். இதுதான் சுருதி, இதுதான் தாளம், என்று சொல்லுவார்.

ஒவ்வொரு, ஒவ்வொரு காலங்களில் ஒவ்வொருதரரைச் சந்தித்து அவர்களிடம் இருந்து நல்ல நல்ல விடயங்களை கற்றுக்கொண்டேன். இப்பொழுது ஒலிப்பதிவு என்றால் கண்ணன் மாஸ்ரர், சிறீகுகன், இசைப்பிரியன், செயல்வீரன், தமிழீழ இசைக்குழு எஸ்.பி.அண்ணர் அவர்களிடம் இருந்து ஒவ்வொன்றையும் கற்றுக்கொண்டேன். படிப்படியான வளர்ச்சி இது. அரை இடம், இது முழு இடம் என்று சொல்லுவார்கள். நாங்கள் அதைக் கேட்டு கிளிப்பிள்ளை மாதிரி செய்வோம். எல்லோருமே வளர்த்து விட்டவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நான் கல்வி கற்ற காலத்தில் சங்கீதம் படிக்கவில்லை. அப்போது சங்கீத ஆசிரியரும் இல்லை.

 

  • கேள்வி: உங்களுடைய பாடல்கள் தமிழீழத்திலும் சர்வதேச ரீதியில் பெற்றுள்ள செல்வாக்கு பற்றி கூறுவீர்களா?

முன்னைய கலைஞர்களினுடைய நிலைமை வேறு. இப்போது இயக்கம் எங்களை நல்ல முறையில் பார்க்கின்றது. ஒருதலை நிமிர்வொன்று இருக்கின்றது. நாங்கள் முன்னர் பாடும்போது 'ஈழத்துச் சீர்காழி', 'ஈழத்து சௌந்தரராஜன்' என்று இந்தியாவிலுள்ள ஒருவருடைய பெயரைச்சேர்த்து வைத்து பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தோம்.

ஆனால் இப்போது தலைவர் பிரபாகரன் காலத்தில் தலைநிமிர்ந்து நிற்கின்றோம். எப்படியென்றால் எங்களுடைய பெயரை வைத்து வெளிநாடுகளில் பாடுகின்றார்கள். தமிழீழத்திலுள்ள மக்கள் என்னை "எங்கடசாந்தன்” என்று அழைக்கிறார்கள். வெளிநாடுகளில் வேறுபாடகர்கள் 'ஜேர்மன் சாந்தன்', 'கனடா சாந்தன்' என்று என்னுடைய பெயரை வைத்துப்பாடுகின்றார்கள்.

நாங்கள் போராட்டத்துக்குத்தான் பாடல்களைப் பாடியிருக்கின்றோம். சினிமாவுக்கு அல்லது தரக்குறைவான வேலைக்கு நாங்கள் பாடவில்லை. தலைவரைப் பாடியிருக்கின்றோம். போராளிகளைப் பாடியிருக்கின்றோம். மாவீரர்களைப் பாடியிருக்கின்றோம். அதுதான் எங்களுக்குச் சந்தோசம்.

எங்களைக் கொழும்பிலோ, வவுனியாவிலோ யாழ்ப்பாணத்திலோ எங்கு என்றாலும் சரி, பெரிதாக மதிக்கின்றார்கள். மக்களின் துன்பதுயரங்களை பாடல்கள் மூலம் எடுத்துக்காட்டி விளங்காத மக்களுக்கும் விளங்கும் தன்மையை ஏற்படுத்துகின்றோம். நான் கிட்டத்தட்ட 150 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கின்றேன். எங்களுடைய கலையுலகிலேயே பெரிய ஒரு இழப்பு என்னவென்றால் சிட்டுவின் இழப்புத்தான்.

 

  • கேள்வி: தென்னிந்திய பாடல்களுக்கும் தமிழீழப் பாடல்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

ஐம்பது, அறுபது வருடங்களாக எங்கள் மக்கள் சினிமாப்பாடலைத்தான் கேட்டுக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் இப்பொழுது சினிமாப் பாடல்களைக் கேட்க பெரிய வெட்கமாக இருக்கின்றது. தமிழ்நாடு எங்கள் தாய் நாடு என்று சொல்லுவோம். இப்பொழுது பிறமொழிப் பாடகர்களை கொண்டுவந்து பாடுவிக்கின்றார்கள். "மூளைக்குள்ளே” என்பதை "மூலைக்குள்ளே” என்றும் பாடுகின்றார்கள். "தோட்டம்" என்பதை "தொட்டம்" என்று பாடுகின்றார்கள். பரீட்சைக்கு ஒரு பிள்ளை இப்படி எழுதினால் புள்ளியே போடமாட்டார்கள்.

பிரபல அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் ஒரு பேட்டியில் கூறியிருக்கின்றார் "தமிழ்நாட்டுக்காரர்களுக்கு இடமில்லை, தமிழ்ப் பாட்டை ஆங்கிலத்தில் எழுதிப் பாட வேண்டும் என்று இப்பொழுது அவர்களைத்தான் பாட வைக்கின்றார்கள். அவர்கள் தான் இப்பொழுது பாடுகின்றார்கள். உதித் நாராயணன், சாதனா சர்க்கம் போன்றோரை வைத்துத்தான் இப்பொழுது பாடுவிக்கின்றார்கள். அவர்கள் பெரும் தமிழ்ப் பிழைகளுடன் பாடுகிறார்கள்.

ஆனால் இங்கு அப்படியில்லை. தமிழ் மொழியைக் காக்கின்ற இடமென்றால் தமிழீழம் தான். எவ்வளவோ நாடுகளுக்கு போகின்ற பாடல்களை இப்படிக் கொச்சையாகப் பாடுகின்றார்கள். அதற்குக் கண்டனம் கூட இல்லை. ஆனால் இங்கு அப்படியில்லை. இந்தத் தமிழறிவை ஊட்டியது புதுவை அண்ணா என்றுதான் சொல்ல வேண்டும். மிகத்துல்லியமாகக் கவனித்துக் கொண்டிருப்பார். சினிமாப்பாடல் மாதிரி இவை அழிந்துபோகும் பாடல்கள் அல்ல. போராட்டங்கள் நடந்த சம்பவங்களை வெளிக்காட்ட மிகத் தெளிவாகத் தமிழை உச்சரிக்க வேண்டும். காசியண்ணாவின் பாடல்களைப் பாடுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அவரை இன்னமும் கூட நான் காணவில்லை. இது எனக்கு ஒரு தாக்கம். அந்தப் பாக்கியம் எப்போது கிடைக்குமோ தெரியாது. காசி ஆனந்தன் அண்ணாவின் பாடல்கள் பழைய வரலாறுகளை எடுத்துக்காட்டுகின்றன. வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற பாணியில் தான் இருக்கும். 'முல்லைத்தீவுகள் தொடரும் பகைவன் முண்டமும் தலையும் சிதறும்....' மேலும் பழைய வரலாறுகள், நில வளங்கள் என்று பாடியிருக்கின்றார்.

 

  • கேள்வி: நாடகத்துறையில் தங்களுடைய பங்களிப்பு எந்த அளவிற்கு உள்ளது?

இசைத்துறையில் இருந்தது போல இத்துறையிலும் ஆர்வம் இருந்தது. அதுவும் ஆரம்பத்திலேதான். பாடசாலையில் படிக்கின்ற காலத்தில் சாம்ராட் அசோகன் என்ற நாடகத்தில் முதன்முதல் புத்தபிக்குவாகப் பாத்திரமேற்று நடித்தேன். பின்னர் கிளிநொச்சியில் கங்கேஸ்வரா மன்றம் என ஒரு மன்றத்தை உருவாக்கியிருந்தோம். அதில் அருணகிரிநாதர்", "அல்லோலகல்லோலம்”, “கேட்காத காதுகள்" என்று பத்து நாடகங்களுக்கு மேல் நடித்தேன். "அரிச்சந்திர மயான காண்டம்" என்ற நாடகத்தில் நடித்திருக்கின்றேன். அதில் அரியாலை செல்வமும் நடித்திருக்கின்றார். இந்த நாடகம் மிக வெற்றிகரமாக மேடையேற்றப்பட்டிருக்கிறது.

இது தமிழீழப் போராட்டத்திற்கு பெருமளவு நிதியைப் பெற்றுக்கொடுத்த நாடகம். இது யாழ்ப்பாணத்தில் பெருமளவு நிதியைப் பெற்றுக்கொடுத்தது.

SG santhan.jpg

 

  • கேள்வி: தமிழீழத்தில் பல கலைகள் அழியும் வாய்ப்பு உள்ளது. அதுபற்றி?

பல பாரம்பரியக் கலைகள் அழிவதற்கு முக்கிய காரணம், சிலர் அந்தக் கலைகளை தங்களுக்குள் வைத்திருப்பதும் மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்க விரும்பாததும். அந்த வகையில் நாட்டுக் கூத்துக்கள், வடமோடி, தென்மோடி இசைநாடகங்கள் எல்லாம் ஒரு வட்டத்திற்குள் தான் நின்றன. அவை தான் எங்களுடைய பாரம்பரிய கலைகள். சினிமாப் பாடல்கள் பாடலாம். வேறு பாடல்களைப் பாடலாம். பாரம்பரியக் கலைகளைக் காக்க வேண்டும். இப்பொழுதும் இளம் சந்ததியை வளர்க்கவேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருக்கின்றது. இல்லை என்றால் இப்படியான கலைகள் அழிந்து போய்விடும்.

 

  • கேள்வி: தமிழீழத் தேசியத் தலைவரின் பாராட்டுப் பற்றி?

நான் 1991ஆம் ஆண்டே தலைவரைச் சந்தித்தேன். 'இந்த மண் எங்களின் சொந்தமண்' என்ற ஒலிநாடா வெளியிடும் போது புதுவை அண்ணா ஏற்பாடு செய்து தந்தார். அப்போது தலைவர் கூறினார். "சாந்தனுடைய பாடல் எல்லாம் மிகவும் நன்றாக இருக்கின்றன. சாந்தனின் பாடல் தான் எனக்கு கேட்க இனிமையாக இருக்கின்றது." என்று பாடல்கள் ஒலிப்பதிவு செய்யும் போது தலைவரின் கையினால் சிறப்புப் பரிசில்கள் பெற்றிருக்கின்றேன். அண்மையில் கரும்புலிகள் ஒலிநாடாவிற்கு பரிசில் தந்தார். மாலதி படையணியின் 'வெஞ்சமரின் வரிகள்' என்ற பாடல்களிற்கும் தலைவர் பரிசில் தந்துள்ளார். எந்தப் பெரிய அரசினது விருது கிடைத்தாலும், மன நிறைவடைய மாட்டோம். தலைவரின் கையினால் பரிசு வாங்கினால் எமக்குப் பெரிய சந்தோசம்.

 

  • கேள்வி: உங்களுடைய பிள்ளைகளிடம் இக்கலைத்துறை வளர வாய்ப்பு இருக்கின்றதா?

நிறைய இருக்கின்றது. எனது மூத்த மகன் நல்ல பாடகராக வருவார் என்றுதான் நினைத்தேன். இப்போது மாவீரராகிவிட்டார். அடுத்தவரும் போராளி. அவரும் பாடுகின்றார். அவரைத் தீர்மானிப்பது மக்கள் தான்; ரசிகர்கள் தான். மற்றது கோகுலன் என்று இருக்கின்றார், அவரும் பாடுவார். படிப்பில் அக்கறை இருப்பதால், இத்துறையில் இன்னும் முழுமையாக ஈடுபடவில்லை.

 

 

******

 

Edited by நன்னிச் சோழன்
  • Thanks 1
  • நன்னிச் சோழன் changed the title to எஸ். ஜி. சாந்தன் அவர்களின் எழுச்சிப் பாடல்கள் தொகுப்பு - 91 பாடல்கள் | ஆவணம்
  • நன்னிச் சோழன் changed the title to எஸ். ஜி. சாந்தன் அவர்களின் எழுச்சிப் பாடல்கள் தொகுப்பு - 94 பாடல்கள் | ஆவணம்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

அன்னார் பாடி ஊழியால் அழிந்த எழுச்சிப் பாடல்கள் தொடர்பான தகவல்

 

hqdefault (1).jpg

'ஐரோப்பிய நாடொன்றில் தமிழீழ இசைக்குழுவினருடன் தேசிய எழுச்சிப்பாடலைப் பாடியபோது'

 

1)எஸ்.ஜி. சாந்தனின் முதலாவது பாடல்

1989 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி, முதலாவது மாவீரர் நாளன்று, எஸ் ஜி சாந்தன் அவர்களின் நண்பனும் அஞ்சல்காரருமான பெருமாள் கணேசன் என்பவரால் மிக நல்ல பாடல் ஒன்று சாந்தன் அவர்களுக்காக எழுதப்பட்டது. எழுதப்பட்ட பாடலை எஸ். ஜி. சாந்தன் அவர்கள் கோணாவில் என்ற இடத்திலிருந்த அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் நடைபெற்ற மாவீரர் நிகழ்வொன்றில் மெட்டமைத்துப்பாடினார். அப்பாடலின் நிகழ்படப் பதிவு தேசியக்கவிஞர் புதுவை இரத்தினதுரை உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்ட போது அவர்களின் கவனத்தை ஈர்த்தது. அப்பாடலானது நன்கு பரவலறியாகி புகழ்பூத்த பாடலாகியது. இதுவே சாந்தன் அவர்களின் முதலாவது தமிழீழ விடுதலைப்போர்ப் பாடலாகும். அதன் தொடக்க வரிகள் பின்வருமாறு,

"வானம் பூமியானது
பூமி வானமானது - இங்கு
புழுதியெங்கும் குருதியாறு ஓடுகின்றது!
தேசம் நாசமானது..."

மாவீரர்களுக்காகப் பாடப்பட்ட முதலாவது தமிழீழப் போரிலக்கியப் பாடலாக இது விளங்குகிறது. ஆனால் இன்று இதன் பல்லவி மட்டுமே அறியக்கூடியதான ஊழியால் நாம் இழந்துவிட்ட பல்வேறு போரிலக்கியப் பாடல்களின் வரிசையில் இதுவும் ஒன்றாகிவிட்டது.

ஆதாரம்: "சாந்தன்: புரட்சிப்பாட்டு யாத்திரை", பி.பி.சி. ஆங்கில பொட்காஸ்ற்

 

2) விடியும் திசையில் பயணம் 

இதுவும் ஊழியால் அழிந்துபட்ட ஒரு போரிலக்கியப் பாடலாகும். இதை சாந்தனுடன் ஜெயா சுகுமார் மற்றும் பின்னணிப் பாடகர்களாக மேஜர் சிட்டு மற்றும் தியாகராஜா ஆகியோர் பாடியிருந்தனர். இதற்கான வரிகளை தேசியக் கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் எழுதியிருந்தார். இது இடம்பெற்ற இறுவெட்டை அறிய ஏலவில்லை. இப்பாடலில் இது வரை கிடைக்கப்பெற்ற பாடல்வரிகளாவன,

  • பல்லவியில்:

"விடியும் திசையில் பயணம் பயணம் விரைவில் முடியும் - ஜெயா சுகுமார்
அடியும் முடியும் தெரியும் எரியும்"
- எஸ்.ஜி. சாந்தன்  

  • சரணத்தில்

"...படைகள் நகரும்! ..." - மேஜர் சிட்டு மற்றும் தியாகராஜா 
"....திருமலை மட்டு நகரும் விடியும்! ..." - ஜெயா சுகுமார் 

ஆதாரம்"அவர முன்னால பாத்தா சூரியன பார்த்த போல " - தாயகப் பாடகர் ஜெயராஜா சுகுமாருடன் நக்கீரன் சபை | IBC Tamil TV நேர்காணல் | @4:30

 

3) எல்லைப்படைக்கான பாடல் 

இவ்வெழுச்சிப் பாடலானது மக்கள் படையின் எல்லைப்படை வீரர்களைப் பற்றிப் பாடப்பட்டதாகும். ஆனால் இதில் சோகமென்னவென்றால் இப்பாடலானது ஒலிப்பதிவு செய்யப்படவில்லை. இதில் அறியப்பட்ட வரிகள் பின்வருமாறு:

  • பல்லவியில்:

"தமிழீழத்தின் எல்லையை காத்திட நினைப்பவர் எல்லைப்படை"

இவ்வொரேயொரு வரி மட்டுமே இப்போது இப்பாடலில் எஞ்சியிருக்கிறது.

ஆதாரம்: ஈழநாதத்தின் ஆண்டுச் சிறப்பிதழ், 19|2|2003, பக்: 27 

 

4) புலிகளின் தன்மையையும் மனயுறுதியையும் எடுத்துச் சொன்ன பாடல்

1990/12/30 அன்று வெளியான 'புதியதோர் புறம்' என்ற இறுவெட்டில் இடம்பெற்று வெளியான இப்பாடலானது அன்னாருடன் பார்வதி சிவபாதம் அவர்கள் இணைந்து பாடிய ஓர் சோடிப்பாடலாகும். இப்பாடலில் இன்று எஞ்சியுள்ள வரிகளாவன, 

  • பல்லவியில்

"நெருப்பில் விளைந்த பொறிகள் - நாங்கள்
நஞ்சைத் தின்னும் புலிகள்,
இரும்பில் வார்த்த சிலைகள் - தலைவன்
இதயம் கவர்ந்த கணைகள்."

இதுவும் ஊழியால் நாம் இழந்துவிட்ட பாடல்களின் வரிசையில் அணிவகுத்து நிற்கின்றது.

ஆதாரம்: ஈழநாதம் - 1991.02.10, பக்கம் 3

 

5) ஓயாத அலைகள் 2 வெற்றிப் பாடல்

கிளிநொச்சி வெற்றியைக் குறித்து அன்னாரால் பாடப்பெற்று வெளிவந்த இப்பாடலை என்னால் கண்டுபிடிக்க இயலவில்லை. ஆகையால் நான் இதனையும் ஊழியால் அழிந்த பாடல்களின் வரிசையில் சேர்த்துக்கொள்கிறேன். இப்பாடலில் இன்று எஞ்சியுள்ள வரிகளாவன, 

  • பல்லவியில்

"கைகளில் விழுந்தது கிளிநொச்சி - புலி
வென்றதை பாடடி தங்கச்சி"

 

Edited by நன்னிச் சோழன்
  • நன்னிச் சோழன் changed the title to எஸ். ஜி. சாந்தன் அவர்களின் எழுச்சிப் பாடல்கள் தொகுப்பு - 100 பாடல்கள் | ஆவணம்
  • நன்னிச் சோழன் changed the title to எஸ். ஜி. சாந்தன் அவர்களின் எழுச்சிப் பாடல்கள் தொகுப்பு - 102 பாடல்கள் | ஆவணம்
  • கருத்துக்கள உறவுகள்+
Posted (edited)

அன்னார் பாடி ஊழியால் இசை அ இறுவெட்டு அழிந்துபட்ட எழுச்சிப் பாடல்கள் தொடர்பான தகவல்

 

large.412847908_232232646575881_57253315

 

1) தமிழர்களை எழுச்சிகொள்ளச் சொல்லும் பாடல்களில் ஒன்று.

பூ மலர்ந்தது கொடியினில் என்று தொடங்கும் 1990 இல் இந்த மண் எங்களின் சொந்த மண் இறுவெட்டில் வெளிவந்த இப்பாடலானது தமிழர்களை எழுச்சிகொள்ளச் செய்யும் விதமாக அக்காலத்தில் பாடப்பட்டிருந்தது ஆகும். இதன் மூல இசையை அறிய முடியவில்லை. பாடல் வரிகள் மட்டும் கிடைக்கப்பெற்றுள்ளன. அவை:

  • பல்லவி:

இரு:- பூ மலர்ந்தது கொடியினில் – ஒரு
புலி பிறந்தது மடியினில்

பெ:- ஊரழிந்தது இடையினில்

ஆ:- பெரும் போரெழுந்தது முடிவினில்

  • சரணம்:

பெ:- அடிபணிந்திடலாகுமோ – தமிழ்
அரசிழந்திடக்கூடுமோ

ஆ:- புலி இருந்திடும் குகையினில் – இனிப்
புயல் எழுந்திடக்கூடுமோ

பெ:- நாதியற்றவன் தமிழனா – தமிழ்
ஈழமண்ணிலே விழுவனா

ஆ:- பாதித்தூரங்கள் போனபின் – எம்
பயணம் நின்றிடல் நீதியா

பெ:- அச்சமென்பதும் இல்லையே – எமக்கு
ஆளும் எண்ணமும் இல்லையே

ஆ:- பிச்சை வாங்கியே தின்றுமே – புலி
பேடியாவதுமில்லையே

பெ:- தம்பியென்றொரு அண்ணனாம் – அவன்
தந்த பாலையே உண்டனாம்

ஆ:- தங்க நாட்டிலே பொங்கினோம் – தமிழ்
ஈழம் காணவே போகிறோம்

ஆதாரம்: தமிழீழ எழுச்சிப் பாடல்கள் நூல், ஆனி 1991

 

2) புலிகள் சேணேவிகளைக் கைப்பற்றியதைக் கூறும் பாடல்

எஸ்.ஜி. சாந்தன் அவர்களால் தனியாகப் பாடப் பட்ட இப்பாடலிற்கு தமிழீழ இசைக்குழுவினர் இசையமைத்துள்ளனர். இசையமைக்கப்பட்ட இடம் மல்லாவியில் உள்ள ஒட்டங்குளம் ஆகும். இதன் மூல இசையையோ இல்லை இது இடம்பெற்றுள்ள இறுவெட்டையோ அறிய முடியவில்லை. பாடல் வரிகள் மட்டும் கிடைக்கப்பெற்றுள்ளன. அவை:

புதிய சரிதம் எழுதிட எங்கள் புலிகள் பாய்ந்தனர் எல்லையில், 
காடு மலைகளைக் கடந்திட்டார், கரிகாலன் ஆணையைக் கேட்டதால். 
பாடடா வேங்கைக் காவியம் - கூறடா அவர் சாதனை ( 2) 

வாழை தென்னை கரும்புடன்- மக்கள் வாழ்ந்து மடிந்த மண்ணிலே 
தேனும் பாலும் தினையுடன் நிறை செல்வம் மிகுந்த ஊரிலே 
வாழ்வதா எதிரி ஆள்வதா? சாவதா வீரம் வீழ்வதா?

வீரத் தலைவன் படையணி - உடன் வெற்றி தரும் வீரர்கள் 
தேசம் மீட்க எங்களின் படை சிங்கக் குகையில் புகுந்தனர் 
ஆயுதம் உடன் ஆட்லறி அள்ளியே மகிழ்வெய்தினர். (2)

Edited by நன்னிச் சோழன்
  • நன்னிச் சோழன் changed the title to தேசியப் பாடகர்களில் ஒருவரான எஸ். ஜி. சாந்தனின் 131 எழுச்சிப் பாடல்கள் | திரட்டு
  • நன்னிச் சோழன் changed the title to தேசியப் பாடகர்களில் ஒருவரான எஸ். ஜி. சாந்தனின் 140 எழுச்சிப் பாடல்கள் | திரட்டு


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை, ஊழல் ஒழிப்பு, சட்டமா அதிபர் திணைக்களம்: சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதற்கு இம்மூன்றையும் மறுசீரமையுங்கள் - ஜனாதிபதியிடம் ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு வலியுறுத்தல்     (நா.தனுஜா) நாட்டில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேல்நீதிமன்ற வழக்கு விசாரணை செயன்முறையை சீரமைத்தல், ஊழல் மோசடிகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று பிரதான விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவேண்டும் என ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கொள்கை மற்றும் செயற்திட்டப் பணிப்பாளர் பாஸில் பெர்னாண்டோவினால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் சட்டத்தின் ஆட்சியையும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கப்படுவதையும் உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்புக்களில் பிரதானமாகக் கருத்திலெடுக்கப்படவேண்டிய மூன்று மறுசீரமைப்புக்களை உங்களது கவனத்துக்குக் கொண்டுவரவிரும்புகிறேன். நாம் கடந்த பல வருடகாலமாக இலங்கையில் சீர்குலைவடைந்திருக்கும் சட்டத்தின் ஆட்சி குறித்து தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்திருக்கிறோம். நீண்டகாலமாக நீங்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளிலும், கடந்த தேர்தலின்போது தேசிய மக்கள் சக்தியினால் மேற்கொள்ளப்பட்ட நிலைப்பாட்டிலும் இவ்விடயம் உள்வாங்கப்பட்டதுடன், சிறந்த ஆட்சியியல் நிர்வாகக்கட்டமைப்பை நிறுவுதல் எனும் பொது நோக்கத்தின் அடிப்படையில் பலர் ஒன்றிணைந்தனர். எனவே கடந்த 50 வருடங்களில் முதன்முறையாக வரலாற்று ரீதியில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதை முன்னிறுத்திய அரசியல் தன்முனைப்பு வெளிப்படுத்தப்பட்டிருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.  இவ்வாறானதொரு பின்னணியில் முதலாவதாக மிகமோசமான குற்றங்கள் தொடர்பில் தினந்தோறும் மேல்நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்கு விசாரணைகள் முறையான விதத்தில் மறுசீரமைக்கப்படவேண்டும். குறிப்பாக குற்றங்களுக்கு விதிக்கப்படவேண்டிய தண்டனைகள் தொடர்பில் நிச்சயமற்ற தன்மையொன்று நிலவும் பட்சத்தில், நாட்டின் ஒட்டுமொத்த குற்றவியல் சட்ட நடைமுறைகளும் சீர்குலைவடையும். இலங்கையில் தற்போது அவ்வாறானதொரு நிலையே காணப்படுகின்றது. மிகப்பாரதூரமான வழக்குகள் மேல்நீதிமன்றத்தில் தினந்தோறும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவது அவசியமாகும். குற்றவியல் வழக்குகள் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் இடமாற்றம் செய்யப்படுவதானது, அவ்வழக்கு விசாரணைகள் தாமதமடைவதற்கு வழிகோலியுள்ளன. நிர்வாக ரீதியான சிக்கல்கள் காரணமாக வழக்கு விசாரணைக்கான திகதிகள் அடிக்கடி மாற்றியமைக்கப்படுவதனால் வழக்குகள் பல வருடகாலமாக இழுத்தடிக்கப்படுகின்றன. எனவே அரசியல் தன்முனைப்பு மற்றும் தூரநோக்கு சிந்தனை என்பவற்றின் ஊடாக இச்செயன்முறையை ஆக்கபூர்வமான விதத்தில் மறுசீரமைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும். இரண்டாவதாக ஊழல் மோசடிகள் இடம்பெறுவதைக் கட்டுப்படுத்தக்கூடியவாறான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும். அதன்படி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கான குற்றவியல் விசாரணை அதிகாரிகளை பொலிஸ் சேவையிலிருந்து தெரிவு செய்யும் தற்போதைய நடைமுறையைக் கைவிடவேண்டும். மாறாக குறித்த ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகள் பொலிஸ் திணைக்களத்துக்கு வெளியிலிருந்து தெரிவு செய்யப்படுவதுடன், அவர்கள் பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய திணைக்களங்களுடன் தொடர்பற்ற முற்றிலும் சுயாதீனமானவர்களாக இருக்கவேண்டும்.  மூன்றாவதாக சட்டமா அதிபர் திணைக்களம் மறுசீரமைக்கப்படவேண்டும். 1978 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தின் ஊடாக நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்கு ஏற்புடையதும், தன்னிச்சையான செயற்பாடுகளுக்குப் பெரிதும் இடமளிக்கக்கூடியவகையிலும் ஸ்தாபிக்கப்பட்ட கட்டமைப்பான சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தமுடியாது. எனவே இக்கட்டமைப்பு அவசியமான மறுசீரமைப்புக்களுக்கு உட்படுத்தப்படவேண்டும் என அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.     
    • Dee Dee Simon Sings "And I'm Telling You I'm Not Going" | Auditions | AGT 2024    
    • யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு!     யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி குணரத்தினம் (வயது 67) என்ற 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரை ஞாயிற்றுக்கிழமை (22) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.  அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://jaffnazone.com/news/47018#:~:text=யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட,5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.&text=இவர் நான்கு தினங்களாக காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தார்.  
    • தனங்கிளப்பு பகுதியில் சட்டவிரோதமாக பனை மரங்கள் தறிப்பு!     தனக்கிளப்பு பகுதியில் 25க்கும் மேற்பட்ட அனுமதியற்ற சட்டவிரோத பனை மரங்கள் தொடர்ச்சியாக தறிக்கப்பட்டு வந்த நிலையில் பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து  பனை அபிவிருத்தி சபையால் சாவகச்சேரி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . குறித்த சம்பவம் தொடர்பில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவன் தெரிவிக்கையில், தனங்கிளப்புப் பகுதியில் தொடர்ச்சியாக சட்டவிரோத பனை மரங்கள் வெட்டப்படுவதாக பனை அபிவிருத்திச் சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது. முறைப்பாட்டின் அடிப்படையில் எமது உத்தியோத்தர்கள் குறித்த இடத்திற்கு விஜமம் மேற்கொண்ட நிலையில் அங்கு 25க்கும் மேற்பட்ட பனை மரங்கள் தறிக்கப்பட்டமை அவதானிக்கப்பட்டதுடன் கனகர இயந்திரங்கள் குறித்த பகுதியில் கொண்டுவரப்பட்டமையும் நேரடியாக அவதானிக்கப்பட்டது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் இள வயது பனைகள் பல தறிக்கப்பட்டும் அடிப்பாகங்கள் எயியூட்டப்பட்ட நிலையிலும் காணப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெல்லியடியைச் சேர்ந்த காணி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸ் நிலையம் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் வழக்கு தாக்கல் செய்வதாக உறுதியளித்தனர். பனை மரங்களை வெட்டுவதற்காக எடுத்துவரப்பட்ட கனகர இயந்திரங்களை முறைப்பாட்டில் பதிவு செய்யுமாறு எமது உத்தியோகத்தர்கள் வலியுறுத்திய நிலையில் சாவகச்சேரி பொலிசார் ஏற்க மறுத்துள்ளனர். இந்த சட்ட விரோத செயற்பாடுகளுடன் சாவகச்சேரி பொலிசாருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்த நிலையில் அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாகன இலக்கங்களை முறைப்பாட்டில் பதியாவிட்டால் மேலிடத்தில் முறைப்பாடு செய்ய வேண்டி வரும் எனக் கூறிய நிலையில் முறைப்பாட்டை ஏற்பதாக தெரிவித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.  சட்ட விரோத பனை மரங்கள் தறிக்கப்பட்டால்  0779273042 பண்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை தர முடியும் என பனை அபிவிருத்திச் சபை தலைவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/201922  
    • வவுனியாவில் முதலை தாக்கி முதியவர் பலி Published By: Vishnu 23 Dec, 2024 | 03:28 AM   வவுனியாவில் முதலை தாக்கியதில் சூடுவெந்தபுலவை சேர்ந்த பெண் ஒருவர் பலியாகியுள்ளதாக உலுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, நேற்றையதினம் மாடுகளை மேய்ப்பதற்காக பாவற்குளம் - சூடுவெந்தபுலவு பகுதிக்கு சென்ற வேளை அப்பகுதியில் காணப்பட்ட ஆற்றுப்பகுதியில் இறங்கிய போதே முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி பலியாகியுள்ளார். இச்சம்பவத்தில் சூடுவெந்தபுலவினை சேர்ந்தமூன்று பிள்ளைகளின்  தாயான 67 வயதுடைய ஆதம்பாவா முசிறியா என்பவரே பலியாகியுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உலுக்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.    
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.