Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரமுகர்களின் விஜயங்கள் அவல வாழ்வை மாற்றுமா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரமுகர்களின் விஜயங்கள் அவல வாழ்வை மாற்றுமா?

-சி.இதயச்சந்திரன்-

மொஹமட் யூனூஸ் என்பவர் பங்களாதேஷைப் பிறப் பிடமாகக் கொண்ட சமூக மேம்பாட்டுவாதியாவார். 'நோபல்" என்ற உலகப் பரிசினை பெற்ற சாதனையாளர். நோபல் பரிசென்பது சினிமாவிற்கு வழங்கப்படும் ஆஸ்கார் விருது போன்று உலக அங்கீகாரம் பெற்றது.

சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் அடிப்படைப் பொருளாதார சீரழிவுகளை அடியோடு பெயர்த்தெடுத்து, புதிய சமுதாயம் காணப்போராடியவரல்ல இந்த மொஹமட் யூனூஸ்.

அவர் ஒரு சீர்திருத்தவாதி. மனித அவலங்களை கண்ணுற்று, தற்காலிகத் தீர்வினை தமது ஆளுமைக்கு உட்பட்டு முன்வைக்கக் கூடிய ஒரு மனிதாபிமானி. அவர் புரட்சிக்காரனாக மாறியிருந்தால் நோபல் பரிசு வழங்கும் கொம்பனிகளின் கண்ணில் தென்படும் சாத்தியப் பாடுகள் அரிதாகவே இருந்திருக்கும்.

பிற்போக்கான முதலாளித்துவ அரச முறைமைக்குள் எழும், பொருளாதார சமூக ஏற்றத் தாழ்வுகளை சீர்செய்து, ஒடுக்கப்படும் மக்கள் கூட்டத்தின் உடனடித் தேவைகளை நிறைவேற்றும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்கி யதே யூனூஸின் பங்களிப்பு.

மூன்றாம் உலக நாடுகளிற்கு கஞ்சி ஊற்றும், மேற்குலக கம்பனிகளின் திருப்பணியாளர்களே இவர்கள். அடிக்கட்டுமானத்தை மாற்றாமல் மேல் தட்டில் ஏற்பட்டி ருக்கும் விரிசல்களுக்கு ஒட்டுப்போடும் வேலையை தாராள வாத மனிதாபிமானிகள் செய்கிறார்கள்.

அடிப்படைப் பிரச்சினையை உணர்ந்து கொள்வதை தடுக்கும் அரண்களாகவே இவர்களைக் கருத வேண்டும். போரை நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் உலக மயமாதல் பொருளாதார வலைக்குள் மக்களை விழுத்தி விடலாமென்கிற ஏகாதிபத்தியங்களின் சதிகளுக்கு தூபமிட ஆட்கள் தேவைப்படுகின்றார்கள்.

நீண்டகால ஒடுக்குமுறைக்குள்ளாகி அழிந்து கொண்டிருக் கும் பூர்வீக தேசிய இனத்திற்கு, பிரிந்து போகும் சுயநிர்ணய உரிமை உண்டென்று உரத்துக்கூற இந்த நோபல் பரிசாளர்களால் இயலாது.

தாயக மண்ணிலிருந்து தமிழர்களை வெளியேற்றி, அகதி வாழ்வினை நிரந்தரமாக்கும் அரசினை நோக்கி, மனித உரி மைகளை காப்பாற்றும்படி ஈனக்குரலில் அறிவுரை வழங்கி யவாறு, நோபல் பரிசுகளும் மகா சக்திபடைத்த மனித உரிமைச் சங்கங்களும் வருகின்றன. வந்தவர்களை நோக்கி 'யக்கோ" என்று பேரினவாதம் வசை பாடுவதால் உலகம் வழங்கிய கௌரவப்பட்டங்க ளைக் காப்பாற்ற போதுமடாசாமி என்று ஒதுங்கிக் கொள்கிறார்கள்.

ஆயினும் சிரித்துக்கொண்டே அழும் வித்தை தெரிந்தவர்கள் ஐ.நா. மனித உரிமைச் சங்கங்களின் மூலவர்கள். இங்கு நீங்கள் தனித்துவிடப்படவில்லை. உங்கள் அவலங்களை உலகிற்குணர்த்த மனித உரிமைக்காவலர்கள், ஆற்றுப்படுத்தும் தொழில் புரிய வருகிறார்களென்று மாய் மாலங்கள் சோடிக்கப்படுகின்றன.

வருகை தந்தவர்கள் நொந்து நூலாகிப் போனதால், புதிதாக பெண்மணி ஒருவரும் ஐ.நா சபையில் இருந்து முருங்கை மரமேற வருகிறார்.

எப்படியாவது ஐ.நா சபை மனித உரிமை கண்காணிப்பாளர்களை இலங்கைக்கு அழைத்து, மனித உரிமை மாளிகை யில் குடியமர்த்தும் கைங்கரியத்தைச் செய்திடவே அப் பெண்மணி முயற்சி செய்யவுள்ளார்போல் தெரிகிறது.

வெட்டிற்குள்ளாகியிருக்கும் அமெரிக்க நிதி உதவியை மீளப்பெறவேண்டுமாயின் ஐ.நா. கண்காணிப்பாளர்களை உள்நுழைய அனுமதிக்க வேண்டுமென்கிற பண்டமாற்று உத்தியையும் ஐ.நா.வின் பிதாமகர் பிரயோகிக்கக்கூடும்.

நிதி தேவைப்படுவதால் கட்சிக்குள் போர்க் கொடி தூக் கும் சகாக்களுக்கு பல விளக்கங்களை ஜனாதிபதி மஹிந்த வழங்க இடமுண்டு.

சர்வகட்சி மாநாட்டில் அமைச்சர் விதாரண விற்கு நடந்த நிகழ்வொன்று நல்ல உதாரண மாக அமைகிறது.

மாவட்ட சபையென்று ஜனாதிபதி மஹிந்த சொல்ல, சமஷ்டி அதிகாரமே சரியென்றுஅமைச்சர் திஸ்ஸ விதாரண முன்மொழிய சர்ச்சை ஆரம்பமானது. இப்போது பிரதமர் தலைமையில் மற்றொரு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வருகை தரும் ஐ.நா. பெண்மணியின் வேண்டுதலுக்கு இணங்கி கண்காணிப்பாளர்களை உள்நுழைய விட்டால் ஆமை புகுந்த கதையாகிவிடலாமென்கிற அச்சமும் அரசாங்கத்திற்குண்டு.

நிதிபெற்று அவர்களை உள்நுழைய அனுமதித்தாலும், ஏற்கனவே சமாதான புரிந்துணர்வோடு ஒட்டியபடி உள் நுழைந்த போர்நிறுத்தக் கண்காணிப்பாளர்களின் தற்போதைய நிலை போன்று அவர்களை மாற்ற முடியுமாயின் சிக்கல் இல்லையென அரசாங்கம் சிந்திக்கலாம்.

போர்நிறுத்த கண்காணிப்பாளர்கள் கொழும்பில் முடக்கப்படும் நிலை உருவாகி ஒரே உறையில் செருகப்பட்ட இரண்டு வாட்கள் போன்ற நிலை ஏற்படும். உட்புகுந்த மறுகணமே, கிளிநொச்சியிலும் ஒரு கிளை அமைக்க முயற்சிப்பார்கள்.

ஏற்கனவே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை ஆக்கிரமித்த இராணுவத்தின் அத்துமீறல்களை, போர்நிறுத்த ஒப்பந்த மீறலெனக் கூற வக்கில்லாத போரைக் கண்காணிக்கும் குழு போன்று, ஐ.நா. கண்காணிப்பாளர்களும், கொலைப்பட்டியல் நீள்வதையிட்டு மௌனம் சாதித்தாலும் ஆச்சரியமில்லை.

'யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே" என்பது போன்று மனித உரிமை மீறல் கண்டன மணிச்சத் தங்கள் அதிர ஆரம்பித்துள்ளன.

படை வலுச்சமநிலை, அரசிற்குச் சார்பாக மாறியது போன்ற தோற்றப்பாடு உருவான நிலையிலேயே, இச்சத்தங்கள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.

யுத்தம் வடக்கு நோக்கி விரிவடைந்து, படைவலுச் சமநிலை என்கிற சொல்லாடலே அர்த்தமற்றுப் போகும் வரை யானைகளின் அசைவு மெதுவாகவே இருக்கும்.

சர்வதேச கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் வெளிப்படும் போது, யானைகளின் தரிசனம் கிடைக்க வாய்ப்புண்டு.

ஐ.நா. படை உருவிலும் வரலாம். இல்லையேல் மேற்குலக பிராந்திய கூட்டுப்படையாகவும் உள்நுழையலாம்.

ஆபிரிக்க தேசங்களில் இவ்வகையான கூட்டுச் சமாதானப் படைகள் பிரச்சினைக்குள்ளான நாடுகளின் அரச படைகளோடு இணைந்து செயற்படுவதைக் காணலாம்.

இந்திய அமைதிப்படை, தமிழர்களுக்கு விடுதலை பெற்றுத் தந்திட விடுதலைப் புலிகளுடன் மோதிய காலத்தில் கூட, அரச படைகள் இடம்பெயராமல் அப்படியேதான் இருந்தன.

அரசின் இராணுவத்தை வடக்கு கிழக்கிலிருந்து வெளியேற்றி, அவ்விடத்தில் அமைதிப்படை நிலைகொள்ளுமென்பது யதார்த்த பூர்வமானதல்ல. அப்படி அவர்கள் செய்யப் போவதுமில்லை. அரச பயங்கரவாதப் படைகளுடன் இணைந்து செயற்பட்டவாறே அமைதியை ஏற்படுத்த விரும்புகிறார்கள்.

தாய்லாந்தில் பிரிவினை கோரும் கெரில்லாக்கள் பாகுபாடின்றி, சகல சர்வதேச அமைப்புக்கள் மீதும் தாக்குதல் தொடுப்பதாக மனித உரிமை கண்காணிப்பக ஆசியப் பிரதிநிதி பிரட் அடம்ரஸ் கவலை தெரிவிக்கின்றார்.

பிரச்சினையின் வடிவத்தையும், அதன் உள்ளடக்கத்தையும் புரிந்து கொள்ளாமல் படை வந்தாலும், அப்படைக்கு இந்திய அமைதிப்படையின் நிலை ஏற்படுமென்பதே புரிந்து கொள்ளப்படவேண்டிய விடயம்.

இந்திய அமைதிப்படை காலத்தில் றோ வின் தலைவராக இருந்த ஏ.கே. வர்மா, பிரச்சினையின் ஆழ அகலத்தை உணராத இந்திய கொள்கை வகுப்பாளர்கள் விட்ட தவறு களை அண்மைய கருத்தரங்கொன்றில் ஏற்றுக்கொண்டுள்ளார்.

திருக்கோணமலையில் மீதமுள்ள இடங்களில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி மட்டக்களப்பில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடாத்தி தனது தீர்வுத்திட்டத்தினை செயற்படுத்திக்கொள்ள முனைகின்றார் ஜனாதிபதி.

மனித உரிமை மீறல் மணிச்சத்தங்கள் ஓங்கி ஒலித்தாலும், தனது நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்கிறது பேரினவாதம் தற்போது 'சூசைக்கு காலில் சுளுக்கு" 'பொட்டம்மானிற்கும் சூசைக்கும் லடாய்" 'புலிகளுக்குள் மோதல்" என்றவாறு தீவிர போலிப்பரப் புரைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

இந்திய அமைதிப்படை காலத்தில் பிரபாகரனை ஆயிரம் தடவைகள் 'கொன்றவர்களையும்" மறந்துவிட முடியாது. ஆனால் மக்கள் அதிரவுமில்லை மிரளவுமில்லை.

இப்போரில் பரப்புரைகளின் சூத்திரதாரிகள் சி.ஐ.ஏ. பாணியில் மேற்கொள்ளும் உளவியல் சமர்களை நீண்ட காலமாகவே தமிழ் மக்கள் எதிர் கொண்டுள்ளனர்.

அவலத்தின் விளிம்பில் நிற்கும் மக்களுக்கு இத்தகைய பரப்புரைகளும், மனித உரிமை சங்கங்களின் அதிர்வேட்டுக்களும் கனவு நிலையாகவே தென்படும்.

வந்துசெல்பவர்களை நினைவிற்கொள்ளும் திராணியும், மனவலிமையும் மக்களிடம் இல்லை. இவர்களின் அவல வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சக்தி எவையென்பதையும் அவர்கள் எப்போதோ உணர்ந்துகொண்டார்கள். ஏனெனில் மாறுதல்களை உரு வாக்குபவர்களும் மக்களே.

நன்றி - தமிழ்நாதம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.