Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

வாத்தி - சினிமா விமர்சனம்

5 மணி நேரங்களுக்கு முன்னர்
வாத்தி

பட மூலாதாரம்,VAATHI OFFICIAL TASER

 

பெண் விளையாட்டு வீரர்களின் சக்திவாய்ந்த கதைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

நடிகர்கள்: தனுஷ், சமுத்திரக்கனி, சம்யுக்தா. இயக்குனர்; வெங்கி அட்லுரி; படத்தொகுப்பு - நவீன் நூலி; இசை - ஜீ.வி.பிரகாஷ்

சிதாரா எண்டெர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்சூன் ஃபார் சினிமாஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து வாத்தி திரைப்படத்தை தயாரித்துள்ளன. தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூர் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரைப்படங்களை போலவே பிற மொழி படங்களிலும் நடிப்பதில், நடிகர் தனுஷ் ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே அவர் இரண்டு ஹிந்தி படங்களில் நடித்திருந்தாலும், சமீபத்தில் வெளியான ஹாலிவுட் திரைப்படம் 'தி கிரே மேன்', ஹிந்தியில் வெளியான 'ஆட்ராங்கி ரே' ஆகிய படங்கள் தமிழ் ரசிகர்களை தவிர்த்து, பல மொழிகளில் உள்ள சினிமா ரசிகர்களிடமும் நடிகர் தனுஷை கொண்டு சேர்த்தது. இந்த நிலையில் தற்போது நடிகர் தனுஷ் நேரடியாக தெலுங்கு திரையுலகில் நுழையும் வண்ணம் வெளியாகியிருக்கும் `வாத்தி` திரைப்படம் அவரது ரசிகர்களிடயே பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கல்வியை வியாபாரமாக பார்க்கும் முதலாளிக்கும், அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என நினைக்கும் நாயகனுக்கும் இடையிலான மோதல்தான் `வாத்தி` திரைப்படத்தின் மையக்கரு. பள்ளிக்கல்வியில் நடைபெறும் சில மோசடிகளை மையமாக வைத்து இந்த படத்தின் கதை நகர்கிறது. 90களின் இறுதி காலகட்டத்தில் கதை நடப்பது போல இந்த படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

 

கல்வித்துறையில் நடக்கும் மோசடிகளை பேசும் `வாத்தி`

90களின் இறுதிகாலகட்டத்தில் அரசுப்பள்ளிகளில் சரியான ஆசியர்கள் இல்லாததால், தனியார் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் சிலர் அரசு பள்ளிகளுக்கு ஆசிரியராக பணியாற்ற அனுப்பிவைக்கப்படுகின்றனர். அப்படி தமிழக -ஆந்திர எல்லையில் அமைந்திருக்கும் சோழபுரம் என்ற கிராமத்தில் இருக்கும் அரசுப்பள்ளிக்கு உதவி ஆசிரியராக செல்கிறார் பாலமுருகன் (தனுஷ்). அங்கே உள்ள மாணவர்களுக்கு சிறப்பான முறையில் கல்வியளிக்க வேண்டுமென நினைக்கிறார்.

வாத்தி

பட மூலாதாரம்,VAATHI OFFICIAL TEASER

ஆனால் அங்கே நடந்து வரும் சில மோசடிகள் அவரை அதிர்ச்சியடைய வைக்கிறது. கதையில் தனியார்ப் பள்ளி முதலாளியாக வருகிறார் சமுத்திரக்கனி. கல்வியை வியாபார கண்ணோட்டத்தில் பார்க்கும் திருப்பதி (சமுத்திரக்கனி), அரசுப்பள்ளிகள் தரம் உயர்ந்தால் தனியார் பள்ளிகளின் வளர்ச்சி பாதிக்கப்படும் என நினைத்து நாயகனுக்கு பல இடையூறுகளை ஏற்படுத்துகிறார். இவர்களுக்கு இடையில் நடக்கும் மோதலில் இறுதியில் யார் வெற்றி பெற்றார்கள் என்பதே வாத்தி திரைப்படத்தின் கதை. நாயகனின் சக ஆசிரியராக ஆங்காங்கே கதையில் வந்து போகிறார் நடிகை சம்யுக்தா. இந்த திரைப்படத்துக்கு சில முன்னணி ஊடகங்கள் அளித்துள்ள விமர்சனங்களைப் பார்ப்போம்.

இன்று வெளியாகியிருக்கும் இந்த திரைப்படத்திற்கு பெரும்பாலும் எதிர்மறையான விமர்சனங்களே வரத்தொடங்கியிருக்கின்றன. தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்கள் இந்த படம் குறித்து எழுதியிருக்கும் விமர்சனங்களை இனி பார்க்கலாம்.

துருத்தலாக இருக்கும் தனுஷின் மிகை நாயகத்தன்மை

'தனியார் மயத்துடன் வியாபாராகும் கல்வி, அரசுப் பள்ளிகள் மூடப்படுவதற்கான காரணங்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகள் மீதான அரசின் அலட்சியப்போக்கு, இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் தனியார் பள்ளிகள், அரசுப் பள்ளிகள் மூடப்படுவதால் எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகும் படிப்பு என கல்வியின் பல்வேறு பக்கங்களை வாத்தி திரைப்படம் புரட்டுவதாக` இந்து தமிழ் திசை கூறுகிறது.

வாத்தி

பட மூலாதாரம்,VAATHI OFFICIAL TEASER

ஆனால் அதேசமயம் 'படம் முழுக்க இழையோடும் தனுஷின் மிகை நாயகத்தன்மை துருத்தலாக இருக்கிறது எனவும், ஒற்றை ஆளாக தனுஷ் சொல்வதை ஊரே கேட்பதும், அவர்கள் அனைவரையும் ஒரே ஆளாக நின்று படிக்க வைப்பதும் என படத்தில் தனுஷ் இல்லை ; மொத்தப் படமுமே தனுஷாகத்தான் இருக்கிறது` எனவும் விமர்சித்திருக்கிறது.

`ஜீ.வி. பிரகாஷின் இசையில் 'வா வாத்தி', 'நாடோடி மன்னன்' ஆகிய பாடல்கள் முத்திரை பதித்திருப்பதாகவும், படத்தினுடைய ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் கச்சிதமாக அமைந்திருப்பதாகவும்` இந்து தமிழ் திசை கூறுகிறது.

ஆனால், `வெகுஜன சினிமாவுக்கான அம்சங்களுடன் படம் தொடங்கினாலும், தெலுங்கு படம் பார்க்கும் உணர்வை கொடுக்காமலில்லை என்றும், பொருந்தாத டப்பிங் அதற்கு உதாரணம்` என்றும் இந்து தமிழ் விமர்சித்திருக்கிறது. அதேப்போல் படத்தின் காதல் காட்சிகளும் படத்துடன் ஒட்டாத உணர்வை ஏற்படுத்துகிறது எனவும் தனது விமர்சனத்தில் இந்து தமிழ் திசை குறிப்பிட்டுள்ளது.

`வாத்தியை` தாங்கி பிடிக்கும் தனுஷின் நடிப்பு

`வழக்கமான கமர்சியல் திரைப்படத்திற்கான அம்சங்களுடன் வாத்தி படம் உருவாக்கப்பட்டிருந்தாலும், அவ்வபோது பார்வையாளர்களின் நாதுத்டிப்பை பிடிக்கும் வண்ணம் பல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கிறது` என்று கூறுகிறது டைம்ஸ் ஆஃப் இந்தியா.

வாத்தி

பட மூலாதாரம்,VAATHI OFFICIAL TEASER

படத்தின் மொத்த பலமும் தனுஷாகத்தான் இருக்கிறார் எனவும், கதையில் மாணவர்களை படிக்க வைப்பதற்கு புது விதமான யோசனைகளுடன் தனுஷ் வரும் காட்சிகள் ரசிக்க வைக்கிறது எனவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டுருக்கிறது. அதேப்போல் கல்வி குறித்தும், சமத்துவம் குறித்தும் படத்தில் வரும் வசனங்கள் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது எனவும், தனுஷ் மற்றும் சம்யுக்தா ஆகியோரின் ஜோடி நன்றாக அமைந்திருக்கிறது எனவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா கூறியுள்ளது.

ஆனால் படத்தில் சமுத்திரக்கனியின் கதாபாத்திரம் சரியாக வடிவமைக்கபடவில்லை எனவும், வழக்கமாக படங்களில் பார்க்கும் ஒரு சாதாரண வில்லன் தோரணையிலேயே அவர் வந்து போகிறார் எனவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.

காட்சிகளில் லாஜிக் இல்லை

`படத்தின் முழு கதையையும் தனுஷ் மட்டுமே தனது தோள்களில் தூக்கி சுமக்கிறார் என்றும், அவரது திறமை இந்த படத்தில் வீணடிக்கப்பட்டிருக்கிறது` எனவும் இந்தியா டுடே விமர்சித்துள்ளது.

வாத்தி

பட மூலாதாரம்,VAATHI OFFICIAL TEASER

அனைவருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டுமென்ற ஒரு நல்ல கதைக்கருவை இந்த படம் கொண்டிருந்தாலும், அதனை பார்வையாளர்களுக்கு சரியான முறையில் கடத்துவதற்கு தவறவிட்டுவிட்டது என்றும் இந்தியா டுடே கூறியுள்ளது.

நாயகனுக்கும் வில்லனுக்கும் இடையிலான மோதல் காட்சிகளும்,படத்தின் வில்லன் கதாப்பாத்திர வடிவமைப்பும் மிகுந்த சினிமாத்தனத்துடன் இருக்கிறது என இந்தியா டுடே விமர்சித்துள்ளது. அதேப்போல் ஏற்கனவே நாம் பார்த்த சாட்டை, ராட்சசி போன்ற திரைப்படங்களின் சாயலில்தான் இந்த படமும் நகர்கிறது எனவும் இந்தியா டுடே குறிப்பிட்டுள்ளது.

படத்தின் சில காட்சிகள் உணர்வுப்பூர்வமாக இருந்தாலும், பெரும்பாலான காட்சிகள் எந்த ஒரு லாஜிக்கும் இல்லாமல் இடம்பெறுகிறது எனவும், குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதி மிகவும் தொய்வடைந்து செல்வதாகவும் இந்தியா டுடே கூறுகிறது. படத்தில் தனுஷை தவிர மற்ற நடிகர்களுக்கு நடிப்பதற்கான வாய்ப்பே இல்லாத வகையில் கதாப்பாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என இந்தியா டுடே குறிப்பிட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/arts-and-culture-64676381



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 12 ) சசிகலா ரவிராஜ் வெற்றிபெற மாட்டார் என 23 பேர் சரியாக கணித்திருக்கிறார்கள் 1)பிரபா - 36 புள்ளிகள் 2)வீரப்பையன் - 31 புள்ளிகள் 3) வாதவூரான் - 31 புள்ளிகள் 4) வாலி - 31 புள்ளிகள் 5) கந்தையா 57 - 30 புள்ளிகள் 6) தமிழ்சிறி - 30 புள்ளிகள் 7) Alvayan - 30 புள்ளிகள் 😎 புரட்சிகர தமிழ் தேசியன் - 30 புள்ளிகள் 9) நிழலி - 29 புள்ளிகள் 10) சுவைபிரியன் - 28 புள்ளிகள் 11)ஈழப்பிரியன் - 28 புள்ளிகள் 12)ரசோதரன் - 28 புள்ளிகள் 13)நூணாவிலான் - 27 புள்ளிகள் 14)வில்லவன் - 27 புள்ளிகள் 15) நிலாமதி - 27 புள்ளிகள் 16)கிருபன் - 26 புள்ளிகள் 17)goshan_che - 26 புள்ளிகள் 18)சசிவர்ணம் - 25 புள்ளிகள் 19) புலவர் - 24 புள்ளிகள் 20) வாத்தியார் - 23 புள்ளிகள் 21)புத்தன் - 23 புள்ளிகள் 22)சுவி - 20 புள்ளிகள் 23) அகத்தியன் - 18 புள்ளிகள் 24) குமாரசாமி - 18 புள்ளிகள்  25) தமிழன்பன் - 13 புள்ளிகள் 26) வசி - 12 புள்ளிகள் இதுவரை 1, 2,4, 7, 8,10 - 13, 16 - 18, 22, 27 - 31, 33, 34, 38 - 42 , 48, 52 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 56)
    • இவர்கள் ஊரில் இருந்தால் பியதாசவுக்கு போட்டிருப்பார்கள் என நினைக்கிறேன்.
    • அது பகிடி. @vasee கேட்ட கேள்வி - திரு சுமந்திரன் தமிழரசு கட்சி சார்பில் தேசிய பட்டியலில் பாராளுமன்றம் செல்வாரா? என்பதுதான். இது ஒரு எதிர்வுகூறல். உங்கள் விருப்பம் அவர் போக வேண்டுமா இல்லையா? என்பதல்ல கேள்வி. நான் பரிட்சையில் கேட்ட கேள்விக்கு ஆம் என என் எதிர்வு கூறலை கூறி உள்ளேன். எனது விருப்பம்? அவர் அரசியலை விட்டு விலக வேண்டும். திரிசா கோசானை திருமணம் செய்வாரா என்பது கேள்வி. இவர்கள் திரிசா கோசானை கலியாணம் முடிப்பது சரியா பிழையா என தம் மனதில் எழுந்த கேள்விக்கு பதில் எழுதி விட்டு…. ஒழுங்கா கேள்வியை வாசித்து. கிரகித்து பதில் எழுதியனவை பிராண்டுகிறார்கள்.  
    • ரணிலுக்கு சுமன்… அனுரவுக்கு சாத்ஸ் என்பது தெரிந்த விடயம்தானே. புஞ்சி அம்மே நவே, தங் புஞ்சி அங்கிள்🤣
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.