Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்பிக்கையின் சிறகுகள் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

IMG-4137.jpg

52 வருடங்களுக்கு முன்னர், 1971ம் ஆண்டில்   பேரு நாட்டு அடர்ந்த காட்டின் மத்தியில் நடந்த விமான விபத்தில்  17 வயதாக இருந்த ஜூலியானே டில்லர் (Juliane Diller)  என்பவர் உயிர் தப்பினார்.

ஜூலியானே அப்பொழுது லீமாவில் தனது பெற்றோருடன் வாழ்ந்து கொண்டிருந்தாள். அவளது தந்தை அங்குள்ள அடர்ந்த காட்டின் மத்தியில் ஒரு ஆராய்ச்சி நிலையத்தை நிறுவி  பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

தனது கல்லூரிப் படிப்பை டிசம்பர் 23இல் முடித்த ஜூலியானே அந்த வருடத்து கிறிஸ்மஸ் தினத்தையும் பிறக்கும் புத்தாண்டையும்  தந்தையுடன் கொண்டாடுவது என்று தீர்மானித்துக் கொண்டாள். அவளது தந்தை இருந்த இடம் புகால்பா நகரத்தை ஒட்டிய காட்டுப் பகுதியில் இருந்தது. பாடசாலை முடிந்த அடுத்த நாளே  புகால்பா நகரத்தை நோக்கிப் பறப்பதற்காக ஜூலியானேயும் அவளது தாயார் மரியாவும் லீமா(பேரு) விமான நிலையத்தில் இருந்து புறப்படும் நான்கு இயந்திரங்கள் கொண்ட  OB-R-941 விமானத்தில் ஏறினார்கள.

ஜூலியானே தனது தாயாருக்குப் பக்கத்தில் 19F இலக்க இருக்கையில் அமர்ந்திருந்தாள். தந்தையைக் காணப் போகும் சந்தோசம் மட்டுமல்ல, அடர்ந்த காடுகளில் இயற்கையோடு இருக்கப் போகும் விடுமுறையைப் பற்றிய கனவுகளும் அவளுடன் சேர்ந்திருந்தன.

விமானம் மணிக்கு 600 கிலோ மீற்றர் வேகத்தில் பறந்து கொண்டிருந்தது. புகால்பா விமான நிலைய இலக்குக்கான  பயணம் வெறும்  ஒரு மணித்தியாலம் மட்டுமேஆனால்  விமானம் 500 கிலோமீட்டர் பறந்த பின்னர், கடுமையான  புயல் வீச ஆரம்பித்ததுஉயிருள்ள விலங்குகள் போல் கருமேகங்கள் விமானத்தை சுற்றிச் சுற்றி வலம் வர ஆரம்பித்தன. புயற்காற்றின் மோதல்களில் விமானம் பயங்கரமாகக் குலுங்க ஆரம்பித்தது. அடிக்கடி வானத்தில் தோன்றும் மின்னல்கள் மேலும் அச்சத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தன. ஒரு மின்னல்  விமானத்தின் வலது பக்க  இயத்திரத்தை தாக்க உடனேயே விமானம் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இப்பொழுது விமானம் தனது கட்டுப் பாட்டை இழந்து தாறு மாறாகப் பறக்கத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் நெருப்புப் பந்தாக விமானம் தரையை நோக்கி வேகமாக கீழே விழ ஆரம்பித்தது.

“எல்லாமே முடிந்து போய் விட்டதுஎன்று ஜூலியானேயின் தாய் ஜூலியானேயைப் பார்த்து பயத்துடன் சொன்னாள். விமானம் எங்கும் பயங்கரமாக அலறல் சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன. தரையி்ல் இருந்து 3000 மீற்றர் உயரத்தில் விமானம் வெடித்துச் சிதறியது. தலை கவிழ்ந்த நிலையில் இருக்கையில் இணைக்கப்பட்டபடி ஜூலியானே வானத்தில்  வீசப்பட்டாள்அவளுக்கு மூச்சு முட்டியது. அவளின் கீழே காடு சுழன்று கொண்டிருந்தது. மெது மெதுவாக  ஜூலியானே சுய நினைவை இழக்கத் தொடங்கினாள்.

ஜூலியானே கண்களைத் திறந்து பார்த்த போது அவள் தனது இருக்கையில்  இணைக்கப்பட்ட நிலையில் தரையில் இருந்தாள். எவ்வளவு நேரம் அவள் மயக்கத்தில் இருந்தாள் என்பது அவளுக்குத் தெரியவில்லை. தூரத்தில்   ஏறக்குறைய முழுவதுமாக எரிந்த விமானத்தில் இன்னும் கொஞ்ச நெருப்புகளின் மிச்சம் தெரிந்தது. அவளைச் சுற்றிக் காடு விரிந்திருந்தது. ஜூலியானே எந்தக் காட்டில் தனது விடுமுறையைக் கழிக்க நினைத்தாளோ, அங்கேதான் இருந்தாள். ஆனால் தனியாக.

சுற்று முற்றும் பார்த்தாள். அந்த இடம் அமைதியாக இருந்ததுவிமானத்தில் இருந்த அவளின் தாய் உட்பட 91 பேரும் இறந்து விட அவள் மட்டும்  அந்த அடர்ந்த காட்டில் தனித்து நின்றாள்.

ஜூலியானேயின் தந்தை அவளிடம் எப்போதோ சொன்னது அவளது நினைவுக்கு வந்தது. “ காடு  ஒரு பசுமையான சொர்க்கம். அது வாழ்க்கைக்கு அழகான அற்புதமான ஒரு இருப்பிடம். ஒருவேளை நீ எப்போதாவது காட்டில் வழி தவறிப் போய்விட்டாய் என்றால், எங்கே தண்ணீர் ஓடும் சத்தம் கேட்கிறதோ அந்த இடத்துக்குப்போ. அந்தத் தண்ணீரின் நீரோட்டம் எந்தப் பக்கமாக இருக்கிறதோ அதே திசையிலேயே நடக்கத் தொடங்கு. அது உன்னை காட்டை விட்டு வெளியேற வழி சொல்லும்

ஜூலியானேயின் அதிர்ஸ்டம் அவள் ஒரு ஓடும் நதியைக் கண்டாள். தன் தந்தை சொன்னதை  நம்பியபடியே நதியின் நீரோட்டத்துடன் நடக்க ஆரம்பித்தாள். விமானத்தில் இருந்து தூக்கி எறியப் பட்டதால் உடலில் இருந்த வலிகள், தோள் பட்டையில் எலும்பு முறிவு, முதுகெலும்பில் தாளாத வலி, கழுத்தில் ஏற்பட்ட சுளுக்கு, தனிமை, மிருகங்களால் ஆபத்து ஏற்பட்டு விடுமா என்ற பயம், காய் கனிகளை மட்டுமே உண்டு தளர்ந்து போன நிலை என பல சிரமங்களை தாங்கிக் கொண்டு ஒன்று இரண்டு நாட்கள் அல்ல பதினொரு நாட்களாக அவள் தனியாக நடந்து கொண்டிருந்தாள்.

பதினோராம் நாள் மாலையில் ஆற்றின் கரையோரம் ஒரு படகினைக் கண்டாள். காட்டில் பலரது குரல்களையும் அவள் கேட்டாள். அந்தக் குரல்கள் அவளுக்கு எல்லையில்லா மகிழ்ச்சியைத் தந்தது. காட்டில் மரம் வெட்டுபவர்களே அந்தக் குரல்களுக்குச் சொந்தக்காரர்கள்அவளைக் காப்பாற்றும் தேவதைகள் போல அவளுக்கு அவர்கள் தெரிந்தார்கள். ஜூலியானேயை அவர்கள் மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

தனது தந்தையின் வேண்டுகோளின்படி ஜூலியானே யேர்மனிக்குத் திரும்பினாள் .அவளுக்கான மருத்துவங்கள் சீராக நடந்தது. யேர்மனியிலேயே தனது உயிரியல் துறையில் பட்டப் படிப்பை முடித்துக் கொண்டு பேரு நாட்டின் மழைக் காட்டுக்கு மீண்டும் போனாள். தான் படித்த உயிரியல் பற்றிய அறிவை அவள் அந்தக் காட்டுக்குள்ளேயே தனது தந்தையைப் போலவே செய்ய ஆரம்பித்தாள்.

இப்பொழுது முதிர்ச்சியில் இருந்தாலும் ஜூலியானே குறைந்தது வருடத்துக்கு ஒரு முறையாவது பேரு நாட்டுக் காடுகளுக்குச் செல்லத் தவறுவதில்லை.

யேர்மனியின் திரைப்படத் தயாரிப்பாளர் வேர்ணர் ஹேர்ஸொக் , ‘நம்பிக்கையின் சிறகுகள்’ (Schwingen der Hoffnung) என்ற பெயரில் 1998இல் ஜூலியானேயின் கதையை சம்பவம் நடந்த காட்டிலேயே உருவாக்கி அறுபது நிமிட ஆவணப் படமாக யேர்மன்,ஆங்கிலம்,ஸ்பெயின் மொழிகளில்  வெளியிட்டார். ஜூலியானேயும் தனது அனுபவத்தை  ‘நான் வானத்திலிருந்து விழுந்தபோது’ (Als ich vom Himmel fiel)  என்னும் தலைப்பில் புத்தகமாக எழுதி 2011இல் வெளியிட்டார். யேர்மன் குடியரசின் ஜனாதிபதி வே. ஸ்ரைன்மயரினால்  ஜூலியானே 2021 இல்வலிமையான பெண்என்று கொளரவிக்கப் பட்டார்.

காக்கியான்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

“ காடு  ஒரு பசுமையான சொர்க்கம்அது வாழ்க்கைக்கு அழகான அற்புதமான ஒரு இருப்பிடம்ஒருவேளை நீ எப்போதாவது காட்டில் வழி தவறிப் போய்விட்டாய் என்றால்எங்கே தண்ணீர் ஓடும் சத்தம் கேட்கிறதோ அந்த இடத்துக்குப்போஅந்தத் தண்ணீரின் நீரோட்டம் எந்தப் பக்கமாக இருக்கிறதோ அதே திசையிலேயே நடக்கத் தொடங்குஅது உன்னை காட்டை விட்டு வெளியேற வழி சொல்லும்

கவி அருணாசலம் ஐயா பகிர்விற்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.