Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெஸா: ஆட்டிசம் குறைபாடு உடையவர்களுக்கான சிறப்பு சுற்றுலா நகரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்கா, மெசா, சுற்றுலா, ஆட்டிஸம்

பட மூலாதாரம்,CITY OF MESA

18 ஜூன் 2023

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள ‘மெஸா’ என்ற சுற்றுலா தளம், ஆட்டிஸம் குறைபாடு உடையவர்கள் எந்தவொரு அசௌகரியமும் இன்றி சுற்றி பார்ப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. அதற்கு வழிகாட்டியாக இருந்தவர் ‘விசிட் மெஸா’ (visit mesa) சுற்றுலா பணியகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் கார்சியா.

கடந்த 2018ஆம் ஆண்டு, மார்க் காசியா, ஆட்டிஸம் குறைபாடுள்ள தனது மகனுடன் குடும்ப சுற்றுலாவிற்கு சென்றிருந்தார். ஆனால் அங்கே அவருக்கு கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டது.

ஆட்டிஸம் குறைபாடுள்ள தனது மகனை அங்கே அனைவரும் வினோதமாக பார்ப்பதும், சுற்றுலா வழிகாட்டியாக இருந்தவர் தனது மகனிடம் பொறுமையின்மையை கடைபிடித்ததும் அவருக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தின. அந்த சுற்றுலாவை முடித்து அவர் திரும்பும்போது, இனி நரம்பியல் பாதிப்புள்ள மனிதர்களும் சுற்றுலா தளங்களில் சிறந்த அனுபவத்தை பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என மனதிற்குள் உறுதி எடுத்துக்கொண்டார்.

 

அன்று அவருக்கு ஏற்பட்ட தாக்கம், இன்று ‘மெஸா’ சுற்றுலா தளத்தை ’நரம்பியல் குறைபாடுள்ள’ மனிதர்களும் சங்கடங்கள் இல்லாமல் புழங்குவதற்கான சுற்றுலா தளமாக மாற்றியுள்ளது.

 

நரம்பியல் பாதிப்புள்ள மனிதர்கள் சுற்றுலா செல்லும்போது, அதில் அவர்கள் மிகுந்த அழுத்தங்களை சந்திப்பதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே 87% சதவீத ஆட்டிஸம் குறைபாடுள்ள நபர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சுற்றுலாக்களுக்கு செல்வதில்லை என்பது தெரியவந்துள்ளது.

IBCCES-ன் (International Board for Continuing Education Credentials and Standards) ஒரு கிளை அமைப்பான ’ஆட்டிஸம் ட்ராவல்’ நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

அதிக சத்தம், உணவுமுறை மாற்றங்கள், வழக்கமான மற்ற இடையூறுகள் உட்பட பயணத்தில் ஏற்படும் உணர்ச்சி சுமை மற்றும் அனுதாபத்துடன் கவனிக்கப்படாவிட்டால் ஏற்படும் அசௌகரியங்கள் போன்றவை அவர்களுக்கு சந்திக்கும் முக்கிய பிரச்னையாக பார்க்கப்படுகின்றன.

ஆனால் ஒருவழியாக ‘மெஸா’ போன்ற சுற்றுலா தளங்கள், இன்று நரம்பியல் பிரச்னை இருப்பவர்கள் உட்பட அனைவரும் நிம்மதியுடன் வந்து அனுபவித்து செல்லும் சுற்றுலா தளமாக மாறியுள்ளது.

மனிதர்கள் அனுதாபத்துடன் நடந்துகொள்ள வேண்டும்

அமெரிக்கா, மெசா, சுற்றுலா, ஆட்டிஸம்

பட மூலாதாரம்,CITY OF MESA

மெஸா சுற்றுலா தளத்தில் உள்ள தங்கும் விடுதிகள், உணவகங்கள் மற்றும் பிற பொழுதுபோக்கு தளங்கள் என அனைத்து இடங்களிலும் உள்ள பணியாளர்களுக்கு ஆட்டிஸம் உள்ளிட்ட நரம்பியல் பிரச்னைகள் உடையவர்களிடம் எப்படி அணுக வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது.

ஆட்டிஸம் என்றால் என்ன, மன இறுக்கம் உடையவர்கள் இந்த உலகை எப்படி அனுபவிக்கிறார்கள் மற்றும் அவர்களை எப்படி திறம்பட தொடர்புகொள்ள வேண்டும் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவின் நோய் கட்டுபாட்டு மையம், கடந்த 2020ஆம் ஆண்டு மேற்கொண்ட ஆய்வில் அமெரிக்க மாகாணங்களில் 36 பேரில் ஒரு குழந்தை ஆட்டிஸம் குறைபாடு உடையதாக பிறக்கிறது என தெரியவந்துள்ளது.

அதேபோல உலக சுகாதார மையம் மேற்கொண்ட ஆய்வில், உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளில் 100 பேரில் ஒரு குழந்தை ஆட்டிஸம் பாதிக்கப்பட்ட குழந்தையாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கைகள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது எனவும் உலக சுகாதார மையம் குறிப்பிடுகிறது.

அமெரிக்கா, மெசா, சுற்றுலா, ஆட்டிஸம்

பட மூலாதாரம்,CITY OF MESA

ஆட்டிஸம் குறித்த புள்ளிவிவரங்கள் மற்றும் கற்பித்தல்களை மட்டும் வழங்காமல், நரம்பியல் பாதிப்புள்ள மனிதர்களிடம் இயல்பு வாழ்க்கையில் எப்படி எளிமையாக உரையாட வேண்டும், அவர்களை எப்படி கவனித்துகொள்ள வேண்டும் என்பது குறித்தும் IBCCES பயிற்சி அளிக்கிறது.

”உதாரணமாக சிலர் பார்வை மூலம் அதிகம் கற்றுகொள்பவர்களாக இருப்பார்கள். எனவே அவர்களை போன்றவர்களுக்கு துண்டு பிரசுரங்கள், வரைபடங்கள் ஆகியவற்றை வழங்கலாம்’ என்கிறார் ’விசிட் மெஸா’ சுற்றுலா பணியகத்தில் உள்ள சோவ் ஷிர்செல்.

இவர் ஆட்டிஸம் ட்ராவலில் பயிற்சி எடுத்து சான்றிதழ்கள் பெற்றுள்ளார். இந்த பயிற்சிகள் அவருக்கு மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதாக சோவ் ஷிர்செல் குறிப்பிடுகிறார்.

” நான் இந்த பயிற்சி பெறுவதற்கு முன்னால் நரம்பியல் பாதிப்புள்ள மனிதர்களை பற்றியோ, அவர்களை எப்படி கையாள வேண்டும் என்பது பற்றியோ எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் இப்போது அவர்களுடன் என்னால் எளிதாக தொடர்புகொள்ள முடிகிறது. அவர்களுக்கு என்னால் உதவ முடிகிறது.” என்று ஷிர்செல் கூறுகிறார்.

சூரியகாந்தி பூக்களும், ஆட்டிஸம் குறைபாடு குழந்தைகளும்

அமெரிக்காவில் இத்தகைய குழந்தைகளுக்காக ’சூரியகாந்தி திட்டத்தை’ (Sunflower Program) ஏற்றுகொண்ட முதல் நகரமாக மெசா இருக்கிறது.

இந்த திட்டம் உலகளவில் முதன்முதலாக பிரிட்டனில்தான் அறிமுகப்படுத்தப்படது.

இந்த திட்டத்தின்படி சுற்றுலா வாரியமும், பிற இடங்களில் உள்ள நிர்வாக குழுக்களும், சூரியகாந்தி தீம் கொண்ட கை காப்புகளையும், ஊதுகுழலுக்கான சிறு கயிறுகளையும், சுற்றுலா பார்வையாளர்களாக வரும் நரம்பியல் பிரச்னை கொண்ட நபர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இலவசமாக வழங்குகிறது.

இதனால் இவர்களுக்கு பிரத்யேக கவனிப்பும், உதவியும் தேவை என்பதை அந்த சுற்றுலா தளங்களில் உள்ள பிற நிர்வாக குழுக்களைச் சேர்ந்த நபர்களும் அறிந்துகொள்ள முடியும்.

இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட இடங்களிலெல்லாம் வெற்றி பெற்றிருக்கிறது. எனவே இந்த திட்டத்தை ‘மெசா’ சுற்றுலா நிர்வாகத்தினர் செயல்படுத்தியதோடு, தங்களின் 80 சதவீத பணியாளர்களுக்கு., நரம்பியல் குறைபாடு உள்ளவர்களை எப்படி கையாள வேண்டும் என்பதற்கு பயிற்சியும் அளித்திருக்கிறது.

இதனால் கடந்த 2019 ஆம் ஆண்டு ‘உலகின் முதல் ஆட்டிசம் சான்றளிக்கப்பட்ட நகரமாக ( ‘world's first Autism Certified City) மெசா அறிவிக்கப்பட்டது.

அமெரிக்கா, மெசா, சுற்றுலா, ஆட்டிஸம்

பட மூலாதாரம்,CITY OF MESA

இதில் ஊக்கமடைந்த அமெரிக்காவின் மற்ற சில சுற்றுலா தளங்களும், சான்றளிக்கப்பட்ட ஆட்டிஸம் மையங்களாக மாறுவதற்கு முயற்சி செய்து வருகின்றன.

மெசாவில் உள்ள 60க்கும் மேற்பட்ட நிறுவனங்களும், வணிக மையங்களும் ஆட்டிஸம் தொடர்பான பயிற்சிகளை முறையாக முடித்திருக்கின்றன.

தற்போது மெசாவிற்கு செல்லும், அனைத்து சுற்றுலா பயணிகளும் மிகவும் சிறந்த அனுபவங்களை பெற்று வருகின்றனர்.

ஆட்டிஸம் உள்ளிட்ட நரம்பியல் பாதிப்பு உள்ள நபர்கள், முறையாக வழிநடத்தப்படுகிறார்கள்.

ஜெனிஃபெர் ஹெட்ச்பெத் என்ற பெண்மணி ஆட்டிஸம் குறைபாடுள்ள தனது மகனுடன் மெசாவிற்கு சென்றார். அங்கே அவர்களுக்கு அனைத்து இடங்களிலும் சிறப்பான கவனிப்பு கிடைத்திருக்கிறது.

‘மெசாவில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும், ஆட்டிஸம் குறைபாடு உள்ளவர்களை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஆச்சரியத்தை அளிக்கிறது” என்று ஜெனிஃபெர் கூறுகிறார்.

மெசா ஆர்ட்ஸ் சென்டரில் நடத்தப்படும் சில நிகழ்ச்சிகள், ஆட்டிஸம் பாதிப்பு இருப்பவர்களுக்கு சில உணர்ச்சி தூண்டல்களை ஏற்படுத்தலாம் என்பதால், அங்கே அவர்களுக்கு கனமான போர்வைகளும், ஹெட் ஃபோன்களும் வழங்கப்படுகின்றன.

மெசாவிற்கு வரும் அனைத்து சுற்றுலா பயணிகளும் வசதியாகவும், பாதுகாப்பாகவும் உணர வேண்டும் என்பதே தற்போது ‘மெசா சுற்றுலா வாரியத்தின்’ ஒரே நோக்கமாக இருக்கிறது.

https://www.bbc.com/tamil/articles/cp0zee9pnmno

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.